உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 28, 2010

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கருணாநிதிக்கு நல்லிணக்க விருது:

சிதம்பரம்:

           தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  சார்பில் சமூக நல்லிணக்க விருது வழங்கப்படும் அக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர்மொய்தீன் தெரிவித்தார்.
 
இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கட்சியின் மாநிலத் தலைவர் காதர்மொய்தீன் சிதம்பரத்தில் கூறியது: 
 
              வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிடும். மறைந்த தலைவர் அப்துல்சமதின் பிறந்தநாளான அக்டோபர் 4-ம் தேதி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் ஆகிய சமுதாயத்தினருக்கான சமூக நல்லிணக்க விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு 3 விருதுகளையும் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு வழங்க உள்ளோம். இந்த விருதின் பெயர் நாணயம் போற்றும் நல்லிணக்க விருது ஆகும்.
 
               வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து மாநிலங்களிலிருந்தும் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். தேசிய செயற்குழுவில், சாதிஒழிப்பு, ஏழ்மையை போக்குதல் போன்றவற்றில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.ரம்ஜான் நோன்பு அடுத்த வாரம் திறக்கப்படவுள்ளது. இந் நிகழ்ச்சியில் ஏழை. எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும் என காதர்மொய்தீன் தெரிவித்தார்.பேட்டியின் போது நகரச் செயலர் முகமதுபைசல், மாநில பொதுச் செயலர் அபுபக்கர், ஷபிக்கூர் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
                     முன்னதாக நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக அமானுல்லா, செயலராக கக்கூர், பொருளாளராக அப்துல்கப்பார் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Read more »

நெல்லிக்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தில் மாட்டுவண்டி சிக்கியதால் ரயில் தாமதம்

கடலூர்:

            நெல்லிக்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தில் கரும்பு ஏற்றிச் சென்ற மாட்டு வண்டி சிக்கிக் கொண்டதால், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் 20 நிமிடம் தாமதமாகச் சென்றது.
             
              சென்னையில் இருந்து நெல்லிக்குப்பம், கடலூர் வழியாக ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2-40 மணிக்கு நெல்லிக்குப்பம் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்தது. ரயில்வே கேட் மூடப்படுவதை அறிந்தும், அதைக் கடந்துவிடும் என்ற எண்ணத்தில், கரும்பு ஏற்றிய மாட்டு வண்டி ஒன்று ரயில்வே கேட்டைக் கடந்து செல்ல முயன்றது. அதற்குள் ரயில்வே கேட் மூடப்பட்டு விட்டது. 

                   இதனால் இரு ரயில்வே கேட்டுகளுக்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் மாட்டுவண்டி சிக்கிக் கொண்டது.எனவே ரயில் சற்று தொலைவில் நிறுத்தப்பட்டது. மாட்டு வண்டியை அங்கிருந்து அகற்ற முயன்றபோது, மாடு மிரண்டதால் ரயில்வே கேட் மீது மோதியதில், கேட் சேதம் அடைந்தது. இதனால் ரயிலுக்கு சிக்னல் கொடுப்பது 20 நிமிடம் தாமதம் ஆனது. அதன்பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.

Read more »

Official mechanism in place to check disbursement of pension

CUDDALORE: 

             Collector P. Seetharaman has put in place an official mechanism to verify and ensure that the pension schemes of the Union and State governments are properly implemented and benefits reached the target groups in time.

           Addressing a review meeting of the officials of the Revenue and Postal Departments here, Mr. Seetharaman said both the governments were implementing eight pension schemes for the elderly, differently abled, widows, farm labourers, destitutes and deserted women.

A total of 55,123 people benefited through these schemes as follows: 

         Cuddalore and Kurinjipadi blocks – 10,091; 
         Panruti – 9,304; 
         Chidambaram – 11,715; 
        Kattumannakoil – 9,873;
        Vriddhachalam – 7,510; 
        and Thittakudi – 5,820.

           Mr. Seetharaman said it is the responsibility of tahsildars to ensure that the monetary assistance reaches the beneficiaries by money order before fifth of every month. To verify this, each tashildar should depute 80 persons, at the rate of 10 for each scheme, to the designated places.

           Besides this, the District Revenue Officer would select 140 overseers in random to be deputed at the rate of 10 persons for two villages each in all the seven blocks of the district. Whenever the Revenue Divisional Officers and the tahisldars go for inspection, they should make it a point to carry out surprise checks of the beneficiaries. It is mandatory for every tahisldiar to conduct cent per cent audit in every village under his jurisdiction. Mr. Seetharaman said post offices ought to depute 25 field inspectors and 50 overseers every month to carry on the inspection. It was also proposed to introduce a toll free telephone number for the beneficiaries to lodge complaints against lapses, if any, to the Collectorate, he added.

Read more »

Sapling plantation drive begins in Cuddalore


CUDDALORE: 

          Collector P. Seetharaman has launched a drive to plant one lakh saplings across the district within 25 days. He planted a sapling at the Agricultural Science Centre at Vriddhachalam near here recently.

           He said all saplings would be planted before August 15. A simple technique has been evolved to water the plants. A bamboo cutting up to a height of two nodules would be planted alongside each plant. Two holes would be made in the bamboo and water filled in the hollow portion. The water would drip through the holes to moisturise the root. Another simple method of watering is to place a small pot in a pit close to the root.

            Mr. Seetharaman said the bamboo and pot should be periodically filled with water. To familiarise people with such a mechanism, demonstrations would be organised at select places and the information spread all over the district. In this endeavour, the district administration would involve social service organisations, non-governmental organisations, educational institutions, industries and traders. Mr. Seetharaman hoped that move would ameliorate the adverse effects of global warming, environmental pollution and unpredictable seasonal variations.

Read more »

Youth dies at Cuddalore Observation Home

CUDDALORE:

           A fourteen-year-old inmate of an observation home at Kondur, reportedly died of rabies at the Government Hospital here on Monday. Police sources said that on Saturday, he fell sick and was treated for fever. Later, it was learnt that he was bitten by a dog two years ago.

Read more »

சிதம்பரம் அருகே மாணவியரிடம் "சில்மிஷம்" தமிழாசிரியருக்கு "தர்ம அடி"


கிள்ளை : 

            பள்ளி மாணவியரிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட தமிழாசிரியரை பொதுமக்கள் ஓட, ஓட விரட்டி தாக்கிய சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

             திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த மருதநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (40). கடலூரில் தங்கியுள்ள இவர் சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு மேல்நிலைப்  பள்ளியில், 8 மற்றும் 9ம் வகுப்பு  தமிழாசிரியராக பணிபுரிந்து வருகிறார். பாட வேளையின் போது மாணவியரிடம் தவறாக பேசுவதும், சில்மிஷத்தில் ஈடுபடுவதாகவும் ஒரு சில மாணவியர் பெற்றோரிடம் தெரிவித்தனர்.  இதுதொடர்பாக, தலைமை ஆசிரியர் செங்குட்டுவனிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் 9ம் வகுப்பு மாணவி ஒருவரை "சில்மிஷம்' செய்துள்ளார். அவரின் அத்துமீறல் அதிகமானதால், மாணவி தனது பெற்றோரிடம் கூறினார்.

                 இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால், மற்ற மாணவியரும் தங்களது பெற்றோரிடம் ஆசிரியரின் சில்மிஷம் குறித்து தெரிவித்ததால், ஆவேசமடைந்த பெற்றோர் நேற்று காலை பள்ளி முன் திரண்டனர். பள்ளிக்கு வந்த ஆசிரியர் விஸ்வநாதனை மறித்து ஓட, ஓட விரட்டி தாக்கினர். தப்பியோடிய  ஆசிரியர் பள்ளியில் புகுந்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பள்ளியை  முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  போலீசார் பள்ளிக்குச் சென்று ஆசிரியர் விஸ்வநாதன் மற்றும் புகார் கூறிய மாணவியரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். 

                 கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி பள்ளிக்கு நேரில் சென்று  தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். இதனையடுத்து, ஆசிரியர் விஸ்வநாதன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

Read more »

ரூ.4.35 லட்சம் கோடி வரி வசூலிக்க இலக்கு


கடலூர் : 

              ""நாடு முழுவதும் நடப்பாண்டு 4 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூல் செய்ய வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது,'' என சென்னை தலைமை கமிஷனர் பத்தானியா கூறினார். கடலூரில் வருமான வரித்துறை அதிகாரிகள், ஆய்வாளர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம், சென்னை வருமான வரித்துறை தலைமை கமிஷனர் பத்தானியா தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு பின் அவர்  கூறியதாவது: 

               வருமான வரித்துறை கடந்த 1860ம் ஆண்டு துவங்கப்பட்டது. கடந்த 24ம் தேதி, 150ம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடினோம். இந்திய பொருளாதாரத்தில் வருமான வரித்துறை முதுகெலும்பாக உள்ளது. கடந்த ஆண்டு வருமான வரித்துறை மூலம் நாடு முழுவதும் நான்கு லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டது. இந்த தொகையில் தான் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த ஆண்டு 4 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்தில் கடந்த ஆண்டு 400 கோடி ரூபாய் வருமான வரி வசூல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 500 கோடி ரூபாயாக உயர்த்தி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் ஜூலை 31ம் தேதிக்குள் ரிட்டன்சை தாக்கல் செய்ய வேண்டும்.

               வரி செலுத்துவோருக்கு வசதியாக சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்படவுள்ளன. இன்டர்நெட் வைத்திருப்பவர்கள், "இ' பைலிங் மூலம் வரி செலுத்தலாம். புதுச்சேரியில் 1.50 லட்சம் பேர் வரி செலுத்துவோர் உள்ளனர். நிறைய பேர் வரி செலுத்தாமல் உள்ளனர்; அவர்களை சர்வே எடுத்து வருகிறோம். எனவே, அவர்களாகவே முன்வந்து ரிட்டன்சை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு சென்னை தலைமை கமிஷனர் பத்தானியா கூறினார்.

Read more »

பரங்கிப்பேட்டை அருகே அன்னங்கோவில் முகத்துவாரத்தை ஆழப்படுத்த ரூ.8.60 கோடி: 25 ஆண்டு கனவு நனவாகிறது

பரங்கிப்பேட்டை:

           பரங்கிப்பேட்டை அருகே 30 மீனவ கிராம மக்களின் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வகையில் அன்னங்கோவில் முகத்துவாரம் சுனாமி அவசரகால மறுகட்டமைப்பு திட்டத்தில் 8 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் நிரந்தரமாக ஆழப்படுத்தப்படுகிறது.

             பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் வெள்ளாற்று வழியாக கடலுக்குச் செல்ல முகத்துவாரம் உள்ளது. பரங்கிப்பேட்டை கடற்கரையொட்டிய சாமியார்பேட்டை, வேளங்கிராயன்பேட்டை, புதுக்குப்பம், கிள்ளை, முடசல் ஓடை, பரங்கிப்பேட்டை  உட்பட 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட படகுகள் கடலில் மீன் பிடிக்க இந்த முகத்துவாரம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.  இப்பகுதியில் வாங்கப் படும் மீன் வகைகள் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங் களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் வியாபாரம் நடக்க பேருதவியாக இருக்கும் .

                இந்த முகத்துவாரம் அடிக்கடி தூர்ந்து விடுவதால் கடலில் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.முகத்துவாரத்தை நிரந்தரமாக ஆழப்படுத்தித் தரக்கோரி 30 கிராம மீனவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் நிரந்தர தீர்வு எட்டப்படாமல் இருந்தது. மீனவ கிராம மக்களின் முக்கிய பிரச்னையாக இருந்து வந்த நிலையில் ஒவ்வொரு சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலின் போதும் அன்னங்கோவில் முகத்துவாரம் நிரந்தரமாக ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசியல் கட்சியினர் உறுதியளிப்பதோடு சரி. ஆனால், தேர்தல் முடிந் தால் அதுபற்றி யாரும் கண்டு கொள்வதில்லை.

                    முகத்துவாரம் தூர்ந்து போகும்போது படகுகள் கடலுக்குள் செல்ல முடியாததால் பரங்கிப் பேட்டை மற்றும் முடசல் ஓடை விசைப்படகு மீனவ சங்கத்தினர் படகு வைத் துள்ளவர்களிடம் பணம் வசூல் செய்து பொக் லைன் இயந்திரம் மூலம் தூர் வாரி வந்தனர். மேலோட்டமாக தூர் வாருவதால் நிரந்தர தீர்வு ஏற்படாமல் இருந்தது. இதன் காரணமாக பல நேரங்களில் அந்த வழியாகச் செல்லும் படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் இறந்து போன துயர சம்பவங்களும் நடந்ததுண்டு. ஒரு சில நேரங்களில் படகுகள் சிக்கி  சேதமடைவதும் உண்டு.30 மீனவ கிராம மக்களின் மீன் பிடி தொழிலுக்கு அன்னங்கோவில் முகத்துவாரம் முக்கியத் தடையாக இருந்து வந்தது. மீனவர்களின் இந்த பாதிப்பையும் அவர்கள்படும் துன்பங்களையும் தினமலரில் தொடர்ந்து சுட்டிக் காட்டப்பட்டது.

              இந்நிலையில் சுனாமி அவசரகால மறுகட்டமைப்பு திட்டத்தில் 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அன் னங்கோவில் முகத்துவாரம் நிரந்தரமாக ஆழப்படுத்த முடிவு செய்யப் பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கான டெண் டர் வரும் ஆகஸ்ட் மாதம் விடுவது குறித்து அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் அன்னங்கோயில் முகத்துவாரம் தூர்வாரும் பணி தொடங்கும் என்பதால் 30 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதிகாரிகள் பணியை கிடப்பில் போடாமல் விரைந்து முடிக்க வேண்டும்.

Read more »

கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலையற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது


கடலூர்:

              வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பங் கள் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு:

               வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களுக்கு உதவித் தொகை பெறுவதற்கு எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி., பிளஸ் 2, பட் டப்படிப்பு படித்து பதிவு செய்து 30-6-2009 அன்று ஐந்து வருடங்கள் கடந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 45 வயதும் மற்றவர்களுக்கு 40க்குள்ளும் இருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் பணியில் இருத்தல் கூடாது.அஞ்சல் வழிக் கல்வி அல்லது தொலைதூரக் கல்வி பயில்வோர் விண் ணப்பிக்கலாம். 

              குடும்ப ஆண்டு வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.தகுதியுள்ளவர்கள் கல்விச்சான் றுகளின் அசல் மற்றும் வேலைவாய்ப்பக அசல் அடை யாள அட்டை முதலியவற்றுடன் நேரில் வந்து விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. விண்ணப்பித்த அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் மூன்று வருடங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். விண்ணப்பம் 1-7-2010 முதல் தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை வழங்கப்படுகிறது.இந்த காலாண்டுக்குரிய விண்ணப்பம் திருப்பி ஒப்படைக்க கடைசி நாள் 31-8-2010 ஆகும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

சி.முட்லூர் புற வழிச்சாலையில் அறிவிப்புபலகை அமைக்க கோரிக்கை

கிள்ளை:

             சி.முட்லூர் புறவழிச் சாலையில் உள்ள கல்வி நிறுவனங்களில் அருகில் வேகத்தடை மற்றும்  அறிவிப்பு பலகை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

           சிதம்பரம் அடுத்த பி.முட்லூரில் இருந்து சிதம்பரம் வண்டிகேட் வரை புறவழிச்சாலை பணிமுடிந்துள்ளது. புதிய சாலை பயன்பாட்டிற்கு விடாத நிலையில் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் வருவதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. சி.முட்லூர் வெள்ளாற்றுப் பாலத்தில் இருந்து சிதம்பரம் சாலையில் 100 மீ., தொலையில் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் விடுதி, பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளன. அவ்வழியே வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.சாலை பணி முடிந்துள்ள நிலையில் 10க்கும் மேற்பட்ட உயிர் பலியும், 50க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

                  எனவே பள்ளிகள் அருகிலும், மக்கள் நடமாட்டம் மிகுந்த  பகுதிகளிலும் வேகத்தடை மற்றும் அறிவிப்பு பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் புதியதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கினார் கலெக்டர்

கடலூர்:

            புதியதாக விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டை கலெக்டர் வழங்கினார். 

              கடலூர் மாவட்டத்தில் புதியதாக விண்ணப்பித்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு கார்டு வழங்கும் பணி முன்னேற்றம் குறித்து கலெக்டர் ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது. கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி வட்டங்களிலிருந்து 3,643 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதில்  இதுவரை அச்சிடப்பட்ட 1,063  ரேஷன் கார்டுகளை கலெக்டர் வழங்கினார். மீதமுள்ள 2,580 ரேஷன் கார்டுகள் அச்சிட்டு உடனடியாக வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., நடராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன் உடன் இருந்தனர்.

Read more »

சிதம்பரம் அருகே "மனு கொடுத்து அலுத்துப் போச்சு: குடிநீர் கிடைத்த பாடில்லை"

சிதம்பரம்:

               சிதம்பரம் அருகே கூடுவெளிச்சாவடி கிராமத்தில் போர்வெல் பழுதாகி கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் முதல் தமிழக முதல்வர் வரை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அல்லாடி வருகின்றனர். 

            குமராட்சி அடுத்த கூடுவெளிச்சாவடி கிராமத்தில்  250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கும் இப்பகுதியில் குடிநீர் பிரச்னைக்காக கடந்த 2006ம் ஆண்டு முதல் போராடி வரும் நிலையில் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை. 

              இக் கிராமத்தில் மேல் நிலை நீர்தேக்கத் தொட்டி போர்வெல் கடந்த 2006ம் ஆண்டு பழுதாகியதால் குடிநீர் சப்ளை நிறுத்தப் பட்டது. நிலத்தடி நீர்மட் டம் குறைந்து விட்டதால் தண்ணீர் வரவில்லை என காரணம் கூறப்பட்டது. அன்று முதல் கிராம மக்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இது வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை.  அப்பகுதியில் படிக்கும் 300க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந் தைகள் தண்ணீருக்கு கடும் அவதிடைந்து வருகின்றனர். இதுகுறித்து கடந்த ஐந்து ஆண்டுகளாக வட் டார வளர்ச்சி அலுவலர் முதல் கலெக்டர், துணை முதல்வர், முதல்வர் வரை பல முறை மனு கொடுத்து அலுத்துப் போனதுதான் மிச்சம். பணிகள் துவங்கியபாடில்லை. 

                      620 அடி ஆழத்தில் போர்வெல் போட்டால் தண்ணீர் கிடைத்துவிடும். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என அவ்வப்போது சம்மந்தப் பட்ட அதிகாரிகள் கூறுவதோடு சரி. ஆனால் ஐந்து ஆண்டுகளாக கிராம மக்களின் அவதி தொடர்கிறது. குடிநீர் இல்லாத இக்கிராமத்தின் அருகே உள்ள வீராணத்தில் இருந்து சென்னை மக்களின் தாகத்தைத் தணிக்க தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால் இந்த கிராம மக்களின் தாகத்தை தீர்க்கத்தான் இதுவரை நடவடிக்கை இல்லை.

Read more »

அரசு உதவித் தொகை வழங்குவதில் முறைகேடு: இருந்தால் கடும் நடவடிக்கை; கடலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

கடலூர்:

             அரசால் அனுப்பப்படும் உதவித் தொகை பயனாளிகளுக்கு சென்றடைவதில் தவறுகள் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

              கடலூர் மாவட்டத்தில் அரசு உதவித் தொகை முறையாக பயனாளிகளுக்கு சென்றடைகிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம் கடலூரில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன், தனித்துணை ஆட்சியர் கந்தசாமி, அஞ்சல் கண்காணிப்பாளர் சிவப்பிரகாசம், பி.ஆர்.ஓ., முத்தையா பங்கேற்றனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:

            மத்திய, மாநில அரசுகளால் முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், ஆதரவற்ற விதவைகள், ஆதரவற்ற கூலிகள் ஓய்வூதியத் திட்டங்களின் மூலம் அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்த தொகை மாதம் தோறும் 5ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் உதவித் தொகை பயனாளிகளுக்கு கிடைக்கிறதா என்பதை தாசில்தார்கள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். இது தவிர ஆர்.டி.ஓ., க்கள், தாசில்தார்கள் கிராமங்களில் முகாம் செல்லும்போது அங்குள்ள பயனாளிகளை சந்தித்து திடீர் ஆய்வு செய்ய வேண்டும். அரசால் அனுப்பப்படும் உதவித் தொகைகள் பயனாளிகளுக்கு சென்றடைவதில் தவறுகள் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் பேசினார்.

Read more »

சிதம்பரம் அருகே சுகாதார சீர்கேட்டுடன் ஊர் பொதுக்குளம்


சிதம்பரம்:

               சிதம்பரம் அருகே பொதுமக்கள் பயன்படுத்தும் ஊர் பொதுக்குளம் தூர் வாரப்படாமல் ஆகாயத் தாமரைச் செடிகள் மண்டி சுகாதார சீர்கேட்டுடன் உள்ளதை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

            சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கொடியாளம் கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாய தொழிலாளர்கள் அதிகமாக உள்ள இப்பகுதி  மக்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும், கால்நடை கழுவுவதற்கும் பயன்படுத்தும் விதமாக மூன்றரை ஏக்கர் பரப்பளவில் ஊர் பொதுக்குளம் உள்ளது.

             இக்குளம் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் தூர்ந்தும், ஆகாயத் தாமரைச் செடிகள் மண்டியும் சுகாதார சீர்கேட்டுடன் அப்பகுதி முழுவதும் துர் நாற்றம் வீசி வருகிறது. இருந்தும் வேறு வழியின்றி அப்பகுதி மக்கள் குளத்து நீரை குடிப்பதற்கு பயன்படுத்துவதை தவிர்த்து பிற உபயோகங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். கிராம மக்களின் நலன் கருதி குளத்தை தூர்வார வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Read more »

விருத்தாசலம் அருகே கொலை முயற்சி வழக்கு: விவசாயிக்கு 7 ஆண்டு சிறை

விருத்தாசலம்:

            நிலத்தகராறில் கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயிக்கு விருத்தாசலம் கோர்ட்டில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

            விருத்தாசலம் அடுத்த சிறுவம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (40). அதே பகுதியைச் சேர்ந்தவர் அம்மாசி (50). இவர்கள் இருவருக்கும் நிலம் சம்பந்தமான வழக் கில் அம்மாசிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து பழனிவேல், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் விவசாயி அம்மாசி மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 2007ம் ஆண்டு பிரச்னைக் குரிய நிலத்தில் விவசாயம் செய்ய முயன்றனர்.இதனை பழனிவேல் மற்றும் அவரது தம்பிகள் வெங்கடேசன், ராஜேந்திரன், அய்யம்பெருமாள் ஆகியோர் தடுத்தனர்.

             இதில் ஏற்பட்ட தகராறில் அம்மாசி மற்றும் அவரது உறவினர்கள் பழனிவேல் தரப்பினரை ஆயுதங்க ளால் தாக்கினர். இதுகுறித்து மங்கலம் பேட்டை போலீசார் அம் மாசி உட்பட 9 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்தனர். வழக்கை விசாரித்த விருத் தாசலம் கூடுதல் உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி மறைமணி முடியரசன், அம்மாசிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும், அவரது மகன் சக்திவேல், மருமகன் குணசேகரனுக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறையும்,  தலா 1,000 ரூபாய் ஆயிரம் அபராதமும், பெரியசாமிக்கு 1,000 ரூபாய் அபராதம் மட்டும் விதித்து தீர்ப்பு வழங் கினார். மேலும் வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் விடுவிக்கப்பட்டனர்.

Read more »

கடலூர் நாய்க் கடிக்குசிகிச்சை பெறாததால் கூர்நோக்கு இல்ல சிறுவன் பலி

கடலூர்:

             கடலூர் கூர்நோக்கு இல்ல சிறுவனை நாய் கடித்ததால் சிகிச்சை பலனின்றி இறந்தான்.

                வேலூர் மாவட்டம் போளூர் அடுத்த காம்பூரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் பரணி (14). இவர் கடலூர் அடுத்த கோண்டூரில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தான். பரணியை கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு நாய் கடித்துள்ளது. இதற்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக சிறுவன் பரணி உடல் நலமின்றி காணப்பட்டான். பின்னர் கூர் நோக்கு இல்ல அலுவலர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு பரணி இறந்தான். இது குறித்து கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் தாஸ் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

வெளிமாநில ஆசாமிகள் நடமாட்டம்: திட்டக்குடியில் திருட்டு அபாயம்

திட்டக்குடி:

             திட்டக்குடி நகர்ப்புறத்தில் கணவன், மனைவி என குடும்பமாக பிச்சையெடுக்கும் வெளிமாநில ஆசாமிகளால் திருட்டு அபாயம் ஏற்பட்டுள்ளது. திட்டக்குடி, பெண்ணாடம், ஆவினங்குடி, சிறுபாக்கம், ராமநத்தம், வேப்பூர் பகுதிகளில் மின் கம்பி திருட்டு, இரவு நேரங்களில் வீட்டினுள் புகுந்து திருடுவது என குற்றங்கள் அதிகளவு நடந்து வந்தது. எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் தனிப்படை போலீசார் இரவு, பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

             இப்பகுதிகளில் சமீப காலமாக ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தாங்கள் வழி தவறி வந்து விட்டதாகவும், ஊருக்கு திரும்பிச் செல்ல பணம் வேண்டும் என கூறி பிச்சையெடுத்து வருகின்றனர். இதுபோன்ற ஆசாமிகள் பகலில் பிச்சையெடுப்பது போல் நோட்டமிட்டு இரவில் திருடவும், பகலில் தனியாக இருக் கும் பெண்களிடம் நகை, பொருட்களை அபகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. எஸ்.பி., தனிக்கவனம் செலுத்தி வெளி மாநிலங்களிலிருந்து மாவட்டத்திற்குள் வரும் ஆசாமிகளை விசாரணை மேற்கொண்டு அவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior