உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 10, 2010

தெரு வியாபாரிகளுக்கு தனி வாரியம்

பண்ருட்டி:
 
          பண்ருட்டி நகர எல்லைக்குள் சுற்றாடும் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் தங்கள் பெயர்களை மார்ச் 13-ம் தேதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என ஆணையர் கே.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
 
               பண்ருட்டி நகர எல்லைக்குள் சுற்றாடும் மற்றும் நடைபாதை தரைக்கடை வியாபாரிகளின் நலனை மேம்படுத்த அரசு தனி வாரியம் அமைத்துள்ளது. இதன் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளவும், அரசின் நலத்திட்ட உதவிகளை முழுமையாக பெறவும், வியாபாரிகளை கூட்டி குழு அமைத்து செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே பண்ருட்டி நகரில் உள்ள சுற்றாடும் மற்றும் நடைபாதை தரைக்கடை வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள சமுதாயப் பிரிவில் தங்களது பெயர், வயது, முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவற்றை கொடுத்து மார்ச் 13-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஆணையர் கே.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Read more »

சிதம்பரத்தில் கைத்தறி கண்காட்சி

சிதம்பரம்:

              சிதம்பரம் கீழவீதி கோதண்டராமன் திருமண மண்டபத்தில் இந்தியன் கல்சுரல் கிராஃப்ட் சார்பில் அகில இந்திய கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி மார்ச் 5-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சி வருகிற மார்ச் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியில் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஜெய்ப்பூர் பட்டியாலா, அனார்கலி சுடிதார்கள், மதுரை சுங்குடி புடவைகள், மங்கல்கிரி போச்சம்பள்ளி, ஒரிசா பெங்கால் காட்டன் புடவைகள் ஜெய்ப்பூர் மெத்தை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் ஹைதராபாத் முத்து, பவளம், ராசிகற்கள் உள்ளிட்ட கைவினைப் பொருள்கள் ஏராளமாக உள்ளன.கைத்தறி பொருள்களுக்கு 20 சதவீதமும், கைவினைப் பொருள்களுக்கு 10 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Read more »

மானியத்துடன் டிஏபி உரம் விற்பனை

சிதம்பரம்:

                பயறு வகைகளுக்கு டிஏபி உரம் தெளிக்க டிஏபி ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ வீதம் ரூ.200 மானியத்தில் தில்லைவிடங்கள், கிள்ளை, பிச்சாவரம், பு.முட்லூர், பூவாலை மற்றும் கீழமணக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது என பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் இ.தனசேகர் தெரிவித்துள்ளார். 

ரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் இ.தனசேகர் கூறியதாவது: 

                       பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நஞ்சை தரிசு உளுந்து மற்றும் பச்சைப்பயறு சில இடங்களில் பூக்கும் தருணத்தில் உள்ளது. பயறு வகைப் பயிர்கள் அதிக காய் பிடிப்பதற்கும், நல்ல திரட்டியான விதைகளைப் பெறவும், அதிக மகசூல் பெறவும் டிஏபி உரக் கரைசலை தெளிப்பது அவசியம். இந்த உரக் கரைசலை பயிர்களுக்கு பூக்கும் தருணத்தில் ஒருமுறையும், 15 நாள்கள் கழித்து 2-வது முறையும்  இலைவழி மூலமாக தெளிக்க வேண்டும்.  ஒரு ஏக்கருக்கு தெளிக்க 4 கிலோ டிஏபி தேவை. டிஏபி உரத்தை தெளிப்பதற்கு முதல் நாள் 10 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் தெளிந்த நீரை மட்டும் வடிகட்டி அதனுடன் 190 லிட்டர் நீர் கலந்து கை தெளிப்பான் மூலம் மாலை வேளையில் செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.

Read more »

குறைந்த விலையில் உளுந்து கொள்முதல்


சிதம்பரம்:
 
                 சிதம்பரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இருந்தும் செயல்பாடில்லை. மார்க்கெட்டிங் கமிட்டி அமைக்கப்படாததால் விவசாயிகளிடம் உளுந்து கொள்முதல் செய்ய இயலாமல் உள்ளது என வேளாண் உற்பத்தித் துறை ஆணையரிடம் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் உளுந்து பயிர் உற்பத்தியை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து சென்னை வேளாண் உற்பத்திதுறை ஆணையர் நந்தகிஷோர், வேளாண் இயக்குநர் கோசல்ராம் ஆகியோர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் வாழக்கொல்லை, துணிசிரமேடு, உத்தமசோழகன், சிவாயம் உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிர்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள விவசாயிகளிடம் உளுந்து பயிர் உற்பத்தி பெருக்குவது குறித்து என்ன செய்வது? என கலந்துரையாடினர். அப்போது விவசாய சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் அதிகாரிகளிடம் தெரிவித்தது: இந்த ஆண்டு நாங்கள் வீட்டில் வைத்திருந்த குறைந்த விதையை பயன்படுத்தினோம்.  எனவே அடுத்த ஆண்டு விவசாயிகளுக்கு வேளாண்துறை மூலம் கூடுதலாக விதைகளை வழங்க வேண்டும். விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் உளுந்து 100 கிலோ மூட்டை ரூ.4800-ம், பண்ருட்டியில் மூட்டை ரூ.4300-ம் வாங்குகின்றனர். ஆனால் மார்க்கெட்டிங் கமிட்டி இல்லாததால் சிதம்பரத்தில் தனியாரிடம் உளுந்தை மூட்டை ஒன்று ரூ.2800-க்கு விற்று வருகிறோம். சிதம்பரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இருந்தும் மார்க்கெட்டிங் கமிட்டி இல்லாததால் உளுந்து கொள்முதல் செய்யப்படவில்லை. மேலும் வேளாண்துறையினர் விவசாயிகளிடம் கிலோ ரூ.31.80-க்கு உளுந்தை கொள்முதல் செய்கின்றனர். ஆனால் உளுந்து விதை ரூ.55-க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்கின்றனர். விவசாயிகளிடம் குறைந்து விலைக்கு உளுந்து வாங்கப்பட்டு கூடுதல் விலைக்கு விதை விற்கப்படுகிறது. எனவே உளுந்து விதைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என வேளாண் இயக்குநரிடம் பி.ரவீந்திரன் கோரிக்கை வைத்தார். கோரிக்கைகளை ஏற்று வரும் ஆண்டிலிருந்து சிதம்பரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மார்க்கெட்டிங் கமிட்டி மூலம் உளுந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும் உளுந்து விலை நிர்ணயம் செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தனர். வேளாண் உற்பத்திதுறை ஆணையர் மற்றும் இயக்குநருடன் விவசாய சங்கத் தலைவர்கள் கார்மாங்குடி வெங்கடேசன், பட்டாம்பாக்கம் வேங்கடபதி, பண்ருட்டி நரசிம்மன், வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், உரக்கட்டு உதவி இயக்குநர் சுந்தரராஜன், விதை சான்று அதிகாரி கனகசபை உள்ளிட்டோர் உடன் சென்று உளுந்து பயிரிடப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

Read more »

காகிதப் பைகளுக்கு திடீர் "கிராக்கி


நெய்வேலி மளிகைக் கடையில் பேப்பர் பையில் மளிகை சாமான்களை பொட்டலம் கட்டும் வியாபாரி. (வலது படம்) குளிர்பான கடைகளில் பயன்படுத்தப்படும் பேப்பர் கப்.
 
நெய்வேலி:
 
              நெய்வேலி நகரியத்தில் பாலிதீன் பைகளை பயன்படுத்த என்எல்சி நகர நிர்வாகம் தடை விதித்ததைத் தொடர்ந்து, காகிதப் பைகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நெய்வேலி நகரியத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர்.அன்சாரியின் உத்தரவின் பேரில் நகர நிர்வாக முதன்மைப் பொது மேலாளர் சி.செந்தமிழ்செல்வன் பாலிதீன் பைகளுக்கு தடை விதித்தார்.இதோடு நில்லாமல் நெய்வேலி நகரில் கடை வைத்திருப்போர் யாரும் பாலிதீன் பைகளை பயன்படுத்தினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, கடை நடத்துவதற்கான உரிமமும் ரத்து செய்யப்படும் எனவும் என்.எல்.சி. நகர நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பெட்டிக் கடை முதற்கொண்டு, மளிகை, துணி, ஓட்டல் மற்றும் குறிப்பாக இறைச்சிக் கடை என அனைத்துக் கடை உரிமையாளர்களும் பாலிதீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்தனர். டீக் கடைகளில் பிளாஸ்டிக் டம்பளருக்கு பதில் தடிமனாக உள்ள பேப்பர் டம்பளர்களையே பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். நெய்வேலி நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் இதே நிலைதான்.இதனால் முதலில் நெய்வேலி நகர மக்களுக்கு சற்று அதிருப்தியுடன் தான் காணப்பட்டனர். இருப்பினும் நகர நிர்வாகம் விடா முயற்சியாக பாலிதீன் பயன்பாட்டை தீவிரமாக கண்காணித்து வந்ததால் கடைகளில் பாலிதீன் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டது.இதனால் மந்தாரக்குப்பத்தில் உள்ள முன்னணி பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பாலிதீன் பை விற்பனையாளர் ஆர்.பன்னீர்செல்வம் வியாபாரம் சற்று குறைந்திருப்பதாகவே தெரிவித்தார். 
 
                         இருப்பினும் நெய்வேலி நகர மக்கள் தற்போது சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு தங்களை தயார்படுத்திக் கொள்ள தயாராகி விட்டனர். ஓட்டலுக்குச் செல்வோர் கையில் டிபன் பாக்ûஸ எடுóத்துச் செல்கின்றனர், மாமிசக் கடைகளுக்குச் செல்வோரும் கையில் அதற்குத் தேவையான பாத்திரத்தை எடுத்துச் செல்ல ஆரம்பித்துள்ளனர். நெய்வேலி நகரின் சாலை ஓரத்திலும், விளையாட்டு மைதானங்களிலும் பரவிக்கிடந்த பாலிதீன் பைகளை தற்போது காணமுடியவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக பழைய பேப்பர் விலை நெய்வேலி நகரத்தைப் பொறுத்தமட்டில் சற்று அதிகரித்துள்ளது. மேலும் வீட்டிலுள்ள சில பெண்கள் பழைய பேப்பர்களைக் கொண்டு, கால். அரை, முக்கால் மற்றும் ஒரு கிலோ அளவுகளில் பைகளைத் தயாரித்து கடைக்கு விநியோகித்து வருகின்றனர். இதுபோன்று பைகள் ஒரு கிலோ ரூ.25 வரை விலை போகிறது. பல்வேறு தரப்பினும் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் பாலிதீன் பைகளுக்கு தடைவிதித்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு தடுக்கப்படுவதோடு, சிறுதொழிலுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் இது அமையும் என்கின்றனர் பொது நல ஆர்வலர்கள்.

Read more »

IRB personnel undergo training


Indian Reserve Battalion personnel at a training session in Cuddalore on Tuesday. 
 
CUDDALORE: 

            Personnel of the Indian Reserve Battalion (IRB), recently deployed in the Union Territory of Puducherry, are undergoing training in swimming at the Anna Stadium here.

           They are imparted training by Inspector Panchakcharam, a Sub-Inspector and two head constables from the Commando Training School, Adayar, Chennai. Mr. Panchakcharam told The Hindu that 70 IRB personnel would also undergo 40 days of rigorous training in various skills. They had to acquire mastery over 35 subjects, including bomb detection and disposal, fire fighting, rifle shooting, martial arts, weapon handling, sniper training, mob operation, night vision map reading, field craft training and survival tactics in jungles. The IRB personnel were taken to various facilities at Villupuram, Karur and Sathyamangalam for the drills. They would undergo elaborate training in the jungles of Sathyamangalam, Mr. Panchakcharam said. As the counter insurgency operation might require long stay in the jungles, the personnel were being taught how to survive on scanty food available in the jungles, tracking of animals and so on.

Read more »

Guest lecturers observe fast


CUDDALORE: 

            Guest lecturers of Periyar Government Arts College here observed a fast on the campus on Tuesday.

             Cuddalore chapter president of the Guest Lecturers' Association, P. Natesan, said that they were serving in the same capacity for the past six years. They were getting only a consolidated pay of Rs. 6,000 a month. From January 2010, they were not given any pay. Mr. Natesan said the Madras High Court had stated that the guest lecture concept should be dispensed with and only lecturers on a regular basis should be appointed. But, the services of the guest lecturers were not yet regularised. Rather, in the past three years, the Teachers' Recruitment Board had appointed 2,600 lectures to various government colleges. They were mostly drawn from private colleges whereas the guest lecturers already serving in the government colleges were ignored. At least 1,500 guest lecturers were thrown out of job so far. It was the plea of the Association that whenever vacancies in regular jobs arise, guest lecturers should be absorbed and their services regularised. On Monday, the guest lecturers of Kolanjiappar Government Arts College at Vriddhachalam and those at Sri Karumariamman Government Arts College at C.Mutlur, near Chidambaram, boycotted classe

Read more »

Pilferage attempt

CUDDALORE: 

                An innovative theft attempt was made to steal the offerings from one of the ‘‘hundials' installed in the Sabanayagar temple (Natarajar temple) at Chidambaram near here when officials opened for counting on Tuesday.

Read more »

சிதம்பரத்தில் வீடு வாடகை கிடு கிடு : நடுத்தர மக்கள் கடும் அவதி


சிதம்பரம் : 

                   சிதம்பரம் பகுதியில் வீடு வாடகை கட்டணம் உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மும்பை, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு இணையாக மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள சிதம்பரத்தில் நில மதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது.

             விளை நிலங்கள் மற்றும் மக்கள் செல்வதற்கே அஞ்சிய காடு, மேடாக இருந்த பகுதிகள் கூட நகர்களாக மாறிவிட்டன. இதனால் ரியல் எஸ்டேட் பிசினஸ் பிசியாக உள்ளது. அதே போன்று சென்னை, மும்பை போன்ற பெரு நகரங்களுக்கு இணையாக அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்துவிட்டது. பிரதான நான்கு வீதிகள் மட்டுமே உள்ள நகரில் 25க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு குடியிருப்புகள் 10 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் வரை விற்கப்படுகிறது.
                  பூலோக கைலாயமான சிதம்பரத்தில் ஆகாய ஸ்தலமாக நடராஜர் கோவில் உள்ளது. தரிசித்தால் முக்தி தரும் புண்ணிய ஸ்தலம் என்பதால் இங்கு பல் வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் விரும்பி வருகின்றனர். இங்கு ஏதாவது ஒரு பகுதியில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுவிட்டு சென்று விடுகின்றனர்.எத்தனை நகர்கள், எத்தனை அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்ததாலும் வீட்டு வாடகையோ நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அண்ணாமலை பல்கலை., இருப்பது இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறலாம். வெளி மாவட்டங்களில் இருந்து அதிகமானவர்கள் பல்கலையில் வேலை பார்ப்பதால் அவர்கள் தங் கியே ஆக வேண்டிய சூழ் நிலை. அதே போன்று பல் கலை.,யில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட வெளி மாநில மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் விடுதியில் தங்கி இருப்பதைவிட வெளியில் சுதந்திரமாக தங்கியிருக்கவே விரும்புகின்றனர்.

                   வெளி மாநில மாணவ, மாணவிகள் நான்கு, ஐந்து பேர் என கூட்டாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். குறிப்பாக அண் ணாமலைநகர் ஒட்டியுள்ள மாரியப்பா நகர், முத் தையா நகர், ஆட்டா நகர், கே.ஆர்.எம். நகர் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதி முழுவதுமாக பல் கலை., மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். சாதாரணமாக 1,500 முதல் 2000 வரை வாடகை வசூலித்து வந்த வீடுகளில் மாணவர்கள் 5000 வரை கொடுத்து தங்கியுள்ளனர். அதேபோன்று சிதம்பரம் நகர பகுதி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மாணவர்கள் கூட்டமாக அதிக வாடகை கொடுத்து தங்கிவிடுகின்றனர் வாடகை அதிகமாக கிடைப்பதால் மாணவர்களுக்கு வாடகை விடவே வீட்டு உரிமையாளர்கள் விரும்புகின்றனர். வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கூட சிதம்பரத்தில் வீடு கட்டுவதை ஒரு முதலீடாக செய்து மாதா, மாதம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
                        இப்படியாக சிதம்பரம் நகரில் வீடு வாடகை உயர்ந்துள்ளதால் தனியார் நிறுவனங்கள், வியாபார ஸ்தாபனங்களில் வேலை பார்க்கும் குறைந்த ஊதியம் பெறும் நடுத்தர வர்க் கத்தினர், அதிக வாடகை கொடுத்து தங்க முடியாமல் பாதிக்கப்பட் டுள்ளனர்.வாங்கும் ஊதியத்தில் வாடகை கொடுக்கவே போதாத நிலையில் நகருக்கு ஒதுக்குபுறமான நகர் பகுதிகளில் குடியேறி வருகின்றனர்.எனவே வீடுகளில் வாடகை இவ்வளவுதான் வசூலிக்க வேண்டும் என கட்டுப்பாடுகளை வகுக்க வேண்டும். நகராட்சியில் சொத்துவரி உயர்த்திவிட்டதால் எங்களால் என்ன செய்ய முடியும், வாடகையை உயர்த்த வேண் டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம் என வீட்டுனர்உரிமையாளர்கள் கூறுகின்றனர். பல்கலை மாணவர்கள் தங்கியிருக்கவும், அவர்களின் கலாசாரத்திற்கு ஏற்ப உணவு முறையோடு பல்கலையில் போதுமான அளவு விடுதி வசதியை ஏற்படுத்தினால் நகர பகுதிகளில் வாடகை உயர்வை நிச்சயமாக கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் பாதிக்கப்பட்டுவரும் நடுத்தர வர்க்கத்தினர்.

Read more »

அதிக மகசூல் தரும் காய்கறிகளை விளைவிக்க வேண்டும்: பேராசிரியர் வைத்தியநாதன் அறிவுரை


திட்டக்குடி : 

               விவசாயிகள் அதிக மகசூல் தரும் காய்கறி பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பேராசிரியர் வைத்தியநாதன் பேசினார். திட்டக்குடியில் வேளாண்மை பொறியியல் துறை பாசனப்பகுதி மேன்மை மற்றும் நீர் மேலாண்மை வெலிங்டன் நீர்த்தேக்க திட்ட பயிலரங்கம் நடந்தது. விழுப்புரம் செயற்பொறியாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். விருத்தாசலம் உதவி செயற்பொறியாளர் சுகுமார் முன்னிலை வகித்தார். உதவி செயற்பொறியாளர் நடேசன் வரவேற்றார்.தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் குறித்து உதவி செயற்பொறியாளர் பத்மநாபன், பாசனப்பகுதி மேன்மை திட் டம் குறித்து இளநிலை பொறியாளர் முருகேசன், மாற்றுப் பயிர்த்திட்டம் குறித்து வேளாண் உதவி அலுவலர் குணசேகரன், மண்ணில் மக்குச்சத்து அதிகரிக்கும் வழி, அறுவடைக்குப்பின் தொழில் நுட்பம் குறித்து விருத்தாசலம் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் செல்வராஜ், கண்ணன் பேசினர்.

பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் வைத்தியநாதன் பேசியதாவது:
 
                     உலகம் கணினி மயமாக மாறி வரும் நிலையில் விவசாயத்தை அழிய விடாமல், விவசாய வேலைகளுக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வீட்டிற்கு வீடு கிடைத்த மாட்டுச்சாணம் தற்போது கடன் வாங்கும் நிலைக்கு மாறியுள்ளது. ஒரே மரத்தில் நான்கு ரக பயிர்களை விளைவிக்கும் அளவிற்கு விஞ்ஞானம் முன்னேறியுள்ளது. அதிக மகசூல் மற்றும் லாபம் தரும் காய்கறி பயிர்களுக்கு விவசாயிகள் அதிகளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பண்ருட்டி- கடலூர் சாலையில் அமைந்துள்ள பாலூரில் தமிழக வேளாண் பல்கலைக் கழகத்தின் கீழ் காய்கறி ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு காய்கறி விதைகள், பழக் கன்றுகள், நெல்விதைகள் தரமாக உற்பத்தி செய்து மலிவான விலையில் வழங்கி வருகிறோம். பத்து விதமான காய்கறி விதைகள் அடங்கிய ஒரு பாக்கெட் 20 ரூபாய்க்கு கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு 94424-72103, 04142- 75222 எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவசாயிகள் பயனடையலாம். இவ்வாறு பேராசிரியர் வைத்தியநாதன் பேசினார்.விழாவில் தாஜூதீன், சிதம்பரம் ரவீந்திரன், உழவர்மன்ற தலைவர் வேணுகோபால், பாசன சங்கத் தலைவர்கள் சோமசுந்தரம், மருதாச்சலம், வடிவேல், பொன்னுசாமி, ராஜசேகர், ரங்கநாதன் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். உதவி பொறியாளர் செந் தில்குமார் நன்றி கூறினார்.

Read more »

அரசு மருத்துவமனை சீரமைப்பு பணி அவசர சிகிச்சை பிரிவு இடமாற்றம்


கடலூர் : 

                    சீரமைப்பு பணி காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் 3.25 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக் கும் பணி துவங்கியுள்ளது. அதனையொட்டி அங்கு இயங்கி வந்த விபத்து மற் றும் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவ பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் புறநோயாளிகள் பிரிவு பகுதி 5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பித்து, நோயாளிகள் அமர இரும்பு நாற்காலிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதனையொட்டி இப்பகுதியில் இயங்கி வந்த மருந்தகம் தோல் நோய் சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டது. புற நோயாளிகள் பிரிவு பழைய மகப்பேறு பிரிவிற்கு மாற்றப்பட்டுள் ளது. சீரமைப்பு பணிகள் ஒரு மாதத்தில் முடியும்.

Read more »

ஸ்ரீமுஷ்ணத்தில் தர்பூசணி விளைச்சல் அமோகம்: கூடுதல் விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி


ஸ்ரீமுஷ்ணம் : 

                     ஸ்ரீமுஷ்ணத்தில் தர்பூசணி விளைச்சல் அமோகமாக உள்ளதால் வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஸ்ரீமுஷ்ணத்தை சுற்றியுள்ள சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், நாச்சியார்பேட்டை, தேத்தாம்பட்டு உள்ளிட்ட 30க் கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தர்பூசணி பயிரிடப்படுகிறது. ஆரம்ப காலங்களில் கரும்பு பயிரிட்டு வந்த விவசாயிகள் கரும்பை பயிரிடுவது முதல் வெட்டுவது வரை லஞ்சம் வழங்குவது உள்பட பல்வேறு சிக்கல்களுக்கும், அலைக்கழிப்புகளுக்கும் உள்ளாகினர். 

                                மேலும் ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டு கரும்பு பயிர் செய்தாலும் போதிய விலை கிடைக்காத காரணத்தால் மாற்றுப்பயிர் பயிரிட முடிவு செய்து தர்பூசணி பயிர் செய்தனர். இப்பகுதியில் விளையும் தர்பூசணி மிகவும் சுவையாக இருப்பதால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் தேடிவந்து தர்பூசணியை கொள்முதல் செய்தனர். இதனால் நாளடைவில் பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலங்களில் தர்பூசணி பயிர் செய்ய துவங்கினர்.

                         தற்போது சோழத்தரத்தில் இருந்து பாளையங்கோட்டை வழியாக ஸ்ரீமுஷ்ணம் வரை உள்ள அனைத்து கிராமங்களிலும் தர்பூசணி பயிர் செய்துள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் இப்பகுதியில் விளைந்த தர்பூசணியை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயிற்கு கொள்முதல் செய்து கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக் கின்றனர். இது கரும்பை விட டன் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் கூடுதலாக உள்ளது. மேலும் ஒரு ஏக்கரில் கரும்பு பயிரிட்டு வெட்டி எடுப்பதற்கு ஆகும் செலவை விட, தர்பூசணிக்கு மிக குறைந்த அளவே செலவாகிறது. மேலும் பயிரிட்ட 75 நாளில் மகசூல் கிடைப்பதோடு, குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுகிறது. மேலும் ஊடுபயிராக ஆறுமாத பயிரான முருங்கை பயிரிடுவதாலும் கணிசமான வருவாய் கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் தர்பூசணி மற்றும் முருங்கை பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Read more »

பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் சாதனங்களை புறக்கணிக்க வேண்டும்: நீதிபதி ராமபத்திரன் பேச்சு

கடலூர் : 

                 பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் சினிமா, "டிவி' தொடர்கள் மற்றும் விளம்பரங்களை பெண்கள் புறக்கணிக்க வேண்டும் என மாவட்ட நீதிபதி பேசினார். கடலூரில் பவ்டா மகளிர் சுய உதவிக்குழு சார்பில் உலக மகளிர் தினம் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ஒன்று கூடல் விழா நடந்தது. பவ்டா இயக்குனர் ஜாஸ்மின் தம்பி தலைமை தாங்கினார். முதுநிலை மேலாளர் பிரேம்குமார் வரவேற்றார். உதவிப் பொதுமேலாளர் கோவிந்தராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ராமபத் திரன், மா, வட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜாகீர்உசேன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பவ்டா கிளை மேலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

விழாவில் நீதிபதி ராமபத்திரன் பேசியதாவது: 

                       சுய உதவிக்குழுக்களின் பெண்கள் ஒன்று கூடி நடத்தப்படும் விழாவில் பாட்டுப்போட்டி, அதிக சாப்பாடு சாப்பிடும் போட்டி என நடத்தப்படுகிறது. இது போன்று போட்டிகளை நடத்துவதை தவிர்த்து பெண்கள் சமூகத்தில் வளர்ச்சி அடையக்கூடிய வகையில் போட் டிகள் நடத்த வேண்டும். அதன் மூலம் பெண்களின் அணுகு முறையும், பார்வையும் மாற வேண்டும். கிராமத்தில் உள்ள ஒரு பெண் கல்வி கற்றால் ஊரே படித்தது போல் என்பார்கள். பெண்கள் ஒரு செய்தியை தெரிந்துக் கொண்டால் அதை மற்றவர்களுக்கு சொல்லாமல் அவர் களால் இருக்க முடியாது. எனவேதான் பெண்களின் கல்வி வலியுறுத்தப்படுகிறது. மேலும் இது போன்ற கூட்டங்களில் பங்கேற்கும் பெண்கள், தங்கள் உரிமைகளை பற்றி தெரிந்துக் கொண்டு மற்றவர்களுக்கு அதை தெரியப்படுத்த வேண்டும். தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்துள்ளது போல் லோக்சபா, சட்டசபையிலும் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும்.மேலும் சமூகத்தில் பெண்களுக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படும்போது உரிமைகளை கேட்டு பெறவேண்டும்.
                பெண்கள் தொட்டாச் சிணுங்கிகளாக இல்லாமல், தங்களது உரிமைகளை தெரிந்துக் கொள்ள வேண்டும். அடுத்த முறை விழாவிற்கு வரும் போது உங்களின் பார்வை மாறியிருக்க வேண்டும். நாட்டிற்காக போராடிய ஜான்சிராணி உள்ளிட்டவர்களை முன்மாதிரிகளாக எடுத்துக்கொண்டு போராடும் திறன் படைத்தவர்களாக திகழவேண்டும். பெண்களை முன்னிலைப்படுத்தி அவர்களை போகப் பொருட்களாக சித்தரிக்கப்படும் விளம்பரம், சினிமாக்கள், 'டிவி' தொடர்களை புறக்கணிக்க வேண்டும் எனப் பேசினார்.

Read more »

பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்: டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை

சிதம்பரம் :

              பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. காட்டுமன்னார்குடி டாஸ்மாக் ஊழியர் நலசங்க வட்டார செயற்குழு கூட்டம் சிவசண்முகம் தலைமையில் நடந்தது. சிதம்பரம் வரவேற்றார். தலைவர் கொளஞ்சியப்பன், செயலாளரர் சுரேஷ், சிறப்பு அழைப்பபாளர்களாக ரமேஷ், மயில்வாகனன், வீரசுந்தரபெருமாள், கலியபெருமாள் பங்கேற்றனர். கூட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி மற்றும் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பி.எட்., பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணியும், உடல் ஊனமுற்றேருக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் கம்ப்யூட்டர் மூலம் ரசீது வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப் பட்டன. சபாபதி நன்றி கூறினார்.

Read more »

.மாற்றுத் திறன் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

விருத்தாசலம் : 

                    விருத்தாசலத்தில் மாற்றுத்திறன் படைத்த பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. விருத்தாசலம் தென் கோட்டை வீதி நகராட்சி நடுநிலை பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறன் படைத்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் கதிர்வேல் மாற்றுத் திறன் படைத்தோருக்கு உபகரணங்களை வழங்கி பேசினார். 

                        மாவட்ட திட்ட துணை ஒருங்கிணைப்பாளர் செல்வம், ஏ.இ.இ.ஓ., பஞ்சநாதன், கூடுதல் ஏ.இ.இ.ஓ., ராஜேஸ்வரி, முருகானந்தம், தலைமை ஆசிரியர் அருள்மொழி, சாந்தி ஜெயின் சிறப்பு பள்ளி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சந்திரமவுலீஸ்வரன் நன்றி கூறினார்.

Read more »

கடலூர் நகரில் தரமில்லாமல் போடப்பட்ட சாலை உள்வாங்கியது


கடலூர் : 

             கடலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்ட பகுதியில் போடப்பட்ட தார் சாலைகள் தரமில்லாமல் உள் வாங்கியுள்ளது.

               கடலூர் நகரில் பாதாள சாக்கடைப்பணிகள் கடந்த 21.1.2007ம் தொடங்கப்பட்டது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செய்யப்படும் பணிகள் 31.12.2008ம் தேதி முடித்து நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் மேலும் ஒன்னரை ஆண்டுகள் கூடுதலாகியும் பணிகள் இதுவரை முடிவடையவில்லை. இதற்கிடையே நகர சாலைகள் சின்னபின்னமாகி கிடந்ததால் கடலூர் மக்கள் பட்ட அவஸ்த்தை சொல்லி மாளாது. தற்போது குடிநீர் வடிகால் வாரியம், பாதாள சாக்கடைத்திட்டம் முடிக்கப்பட்ட 170 சாலைகளை நகராட்சி வசம் ஒப்படைத்துள்ளது. அதில் ஒரு சில பகுதிகளில் சாலைகள் போடப்பட்டுள்ளன. ஆனால் தரமில்லாமல் போடப்பட்டுள்ளதால் ஆங்காங்கே சாலைகள் பெயர்ந்தும், பாதாள சாக்கடைத்திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத் தில் உள்வாங்கியும் உள்ளன.
                  குறிப்பாக லோகம் மாள் கோவில் தெருவில் போடப்பட்ட சாலை ஏற்கனவே தோண்டப்பட்ட பள்ளத்தில் மணல் போட்டு நிரப்பாமல் சாலை போட்டதால் சாலை நெடுகிலும் உள் வாங்கியுள்ளது. மஞ்சக்குப்பம் தெற்கு கவரத்தெருவில் போடப்பட்ட சாலை ஆங்காங்கே பெயர்ந்துள்ளது. மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளி அருகே மேடு பள்ளங் களாக தரமில்லாமல் சாலை போடப்பட்டுள்ளன. எனவே நகராட்சி நிர்வாகம் தரமான சாலை போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பயிர்களை நாசம் செய்யும் குரங்குகளை அப்புறப்படுத்த கலெக்டருக்கு மனு


திட்டக்குடி : 

               விவசாய பயிர்களை அழித்து வரும் குரங்குகளை அப்புறப்படுத்திட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் ராமலிங்கம், கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

               பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குரங்குகள் விவசாயிகள் பயிரிடும் வாழை, கரும்பு பயிர்களை முளையிலேயே பிடுங்கியும், கடித்தும் நாசம் செய்கின்றன. தவிர புளி, மா, பலா மரத்தில் பிஞ்சு விடும் கொட்டைகளை கடித்து குதறுவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இது குறித்து கடந்த மாதம் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் நேரடியாக முறையிட்டுள்ளேன். எனவே விவசாய பயிர்களை நாசம் செய்யும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

இடைநிலை ஆசிரியர் பணி முன்னுரிமை கோரி மனு

கடலூர் :

                     மறு பயிற்சி முடித்தவர்களுக்கு வயது மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் நலச்சங்கம் சார்பில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

                 கடந்த 1990-91ம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் இயங்கி வந்த தனியார் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றனர். இப் பள்ளிகளை அங்கீகாரம் இல்லாதவை எனக்கூறி அரசு மூடியதால் இங்கு படித்தவர்கள் பாதிக்கப்பட்டனர். இங்கு பயிற்சி பெற்றவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1993-94ம் ஆண்டு அரசு பள்ளிகளில் இரண்டு மாதம் புத்தொளி பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் அதுவும் ரத்து செய்யப்பட்டது. பின்னர் தமிழக அரசு சிறப்பு அனுமதி வழங்கி பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி முடித்தனர். இப்பயிற்சியை முடிக்க எங்களுக்கு 20 ஆண்டுகள் ஆனதால் பயிற்சி முடித்த அனைவரும் தற்போது 40, 50 வயதிற்குட்பட்டவர்கள். எனவே மறு பயிற்சி முடித்தவர்களுக்கு வயது மூப்பினை கணக்கில் கொண்டு இனி நடைபெறும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் புதுச்சேரி போலீசாருக்கு நீச்சல் பயிற்சி


கடலூர் : 

                   கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் புதுச்சேரி மாநில போலீசார் நீச்சல் பயிற்சி பெற்று வருகின்றனர். சென்னை அடையாறு மருதம் கமாண்டோ பயிற்சி பள்ளி போலீசார் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள போலீசாருக்கு (ரேஞ் சர் கமாண்டோ) அதிதீவிரப்படை பயிற்சி அளித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள ஐந்து போலீஸ் மண்டலங்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 40 நாட்கள் பயிற்சி அளிக் கப்படுகிறது. புதுச்சேரி மாநில இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் (ஐ.ஆர்.பி) போலீசார் நான்கு சப் இன்ஸ்பெக்டர் கள் உட்பட 70 பேருக்கு, சென்னை கமாண்டோ பயிற்சி பள்ளி இன்ஸ்பெக் டர் பஞ்சாட்சரம் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் கனகமணி, ரவிநாதன், ஏட்டுகள் பரமேஸ்வரன், ராஜப்பா, மணிகண்டன் ஆகியோர் கடந்த பிப். 1ம் தேதி முதல் பயிற்சி அளித்து வருகின்றனர்.உடற்திறன், ஓட்டம், அனைத்து வகை ஆயுதங்களையும் கையாள்வது, காட்டுக்குள் இருக்கும் எதிரிகளை மறைந்திருந்து தாக்குவது, மலை ஏறுதல், மறைந்திருந்து எதிரிகளை குறி தவறாமல் சுடுவது, பதுங்கி தாக்குவது, போர் தந்திர பயிற்சிகள், வெடிகுண்டு அகற்றுவது, செயலிழக்கச் செய்வது, விலங் குகளிடமிருந்து தற்காத்து கொள்வது, அவை இருக் கும் இடங்களை தெரிந்து கொள்வது, நீச்சல் பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.ரேஞ்சர் கமாண்டோ பயிற்சி பெற்று வரும் புதுச் சேரி மாநில போலீசார் நேற்று கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி பெற்றனர். இரண்டு நாள் நடக்கும் இப்பயிற்சியில் சென்னை கமாண்டோ பயிற்சி பள்ளி நீச்சல் பயிற்சி யாளர்கள் ஏட்டு காமராஜ் தலைமையில் ஆறுமுகம், கோவிந்த் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியின் போது கடலூர் நீச்சல் பயிற் சியாளர் அருணா உடனிருந்தார். பயிற்சி தொடர்ந்து இன்றும் நடக்கிறது.

Read more »

சிதம்பரம் கோவில் உண்டியலில் ரூ. 4.15 லட்சம் வசூல்

சிதம்பரம் : 

               சிதம்பரம் நடராஜர் கோவிலில், நேற்று ஆறாவது முறையாக உண்டியல் திறக்கப்பட்டது. நான்கு லட்சத்து 15 ஆயிரத்து 453 ரூபாய் 50 காசுகள் வசூலாகியிருந்தது.

                  சிதம்பரம் நடராஜர் கோவில் கடந்த 2009ம் ஆண்டு பிப். 2ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அடுத்த மூன்று நாளில் முதல் முறையாக பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டது.கோவில் வளாகத்தில் படிப்படியாக ஒன்பது இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. உதவி ஆணையர் ஜெகன்நாதன், நிர்வாக அதிகாரி சிவக்குமார் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் நேற்று ஆறாவது முறையாக திறக்கப்பட்டது. அறநிலையத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உட்பட 30 பேர் காணிக்கைகளை எண்ணினர். அதில் நான்கு லட்சத்து 15 ஆயிரத்து 453 ரூபாய் 50 காசுகள் காணிக்கை வசூலாகியிருந்தது. மேலும், ஏழு கிராம் தங்கம், 86 கிராம் வெள்ளி, அமெரிக்க டாலர் 18, சிங்கப்பூர் வெள்ளி 3, மலேசியா ரிங்கேட் 571, இலங்கை ரூபாய் 80 இருந்தன.கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வந்த ஓராண்டில் இதுவரை உண்டியல் காணிக்கையாக, 17 லட்சத்து 2,934 ரூபாய் வசூலாகியுள்ளது குறிப்பிடத் தக்கது
நூதன முறையில் திருட முயற்சி: 

               நடராஜர் கோவில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டது. ஏழாவது உண்டியலை திறந்து பணம் எடுத்தபோது, வேட்டி துணியில் கட்டப்பட்ட காந்தம் ஒன்று கிடந்தது. மர்ம நபர் எவரோ காந்தத்தை பயன்படுத்தி உண்டியலில் உள்ள பணத்தை திருட முயன்றுள்ளார். காந்தம் வெளியே வராமல் சிக்கிக் கொண்டதால் அதை விட்டு சென்றிருப்பது தெரிய வந்தது. காந்தத்தில் 56 ரூபாய்க்கு நாணயங்களும், 45 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் 101 ரூபாய் ஒட்டியிருந்தது. கோவில் நிர்வாக அதிகாரி சிவகுமார், சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்துள்ளார்.

Read more »

கவுரவ விரிவுரையாளர்கள் கடலூரில் உண்ணாவிரதம்


கடலூர் : 

            கடலூர் அரசு பெரியார் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மூன்று மாதமாக வழங்காமல் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

                   கடலூர் அரசு பெரியார் கல்லூரியில் சுயநிதி பாடப்பிரிவில் பணியாற்றும் கவுரவ விரிவுரையா ளர்கள் 9 பேர் நேற்று முன் தினம் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாம் நாளான நேற்று சங்க கிளை தலைவர் நடேசன் தலைமையில் கவுரவ விரிவுரையாளர்கள் கல்லூரி வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். இதனால் கல்லூரியில் செய்முறைத் தேர்வுகள் பாதிக்கப் பட்டன.

Read more »

மொபட்டில் சென்ற வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.ஒரு லட்சம் திருட்டு

சிதம்பரம் : 

                   மொபட்டில் சென்ற வியாபாரியிடம் இருந்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாயை நூதன முறையில் திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர். சிதம்பரம் அடத்த நாஞ்சலூரைச் சேர்ந்தவர் சேகர்(47). வியாபாரிபான இவர் நேற்று முன்தினம் காலை சிதம்பரத்தில் உள்ள வங்கியில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்தார். அதனை பையில் போட்டு தனது மொபட்டில் மாட்டிக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்.அப்போது சிதம்பரம் கொத்தவால் சாவடியில் மொபட்டை நிறுத்திவிட்டு அருகில் இருந்த பெட்டிகடையில் பொருட்களை வாங்கி கொண்டு வந்தபோது, மொபட்டில் மாட்டியிருந்த பணப்பையை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடிவருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior