உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 01, 2011

பாஸ்போர்ட் சேவை மையம் : ஜூலை முதல் சென்னை, கோவையில் தொடங்கத் திட்டம்

              சென்னை, கோவையில் ஜூலை மாதத்தில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பாஸ்போர்ட் சேவைத் திட்ட இயக்குநர் அனில் குமார் சோப்தி.

திருச்சியில் புதன்கிழமை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பாஸ்போர்ட் சேவைத் திட்ட இயக்குநர் அனில் குமார்  அளித்த பேட்டி: 

            "நாடு முழுவதும் 77 இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கத் திட்டமிடப்பட்டது. பெங்களூர், சண்டீகர் உள்பட 7 இடங்களில் கடந்த ஆண்டு இம் மையங்கள் தொடங்கப்பட்டன.இப்போது, புதன்கிழமை (ஜூன் 29) எட்டாவதாக திருச்சியிலும், ஒன்பதாவதாக தஞ்சாவூரிலும் இந்த மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

            ஜூலை மாதத்தில் சென்னையில் 3 இடங்களிலும், தில்லி, விசாகப்பட்டினம், கோவையில் தலா ஓர் இடத்திலும் என மொத்தம் 6 பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் 8 மாதங்களுக்குள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .தவிர, 14 இடங்களில் சிறிய அளவிலான பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கும் திட்டமும் உள்ளது. இவற்றில் 5 மையங்கள் வடகிழக்கு மாநிலங்களிலும், மற்றவை ஒரிசா, கர்நாடகம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும் அமைக்கப்படும். 

                இந்த மையங்கள் அனைத்தும் அரசு ஊழியர்களே இயக்கும் வகையில் அமையும். இப்போது, அமைக்கப்பட்டு வரும்   சேவை மையங்களில் விண்ணப்பங்கள் பெறுதல், புகைப்படம் எடுத்தல், விரல் ரேகைகள் பதிவு செய்தல் ஆகியவை மட்டுமே மேற்கொள்ளப்படும். மீதமுள்ள பணிகள் அனைத்தும் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில்தான் மேற்கொள்ளப்படும். எனவே, பாதுகாப்பு விஷயத்தில் எந்த வித பிரச்னையும் ஏற்படாது.திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஏற்கெனவே ஆண்டுக்கு ஏறத்தாழ 1.25 லட்சம் பாஸ்போர்ட்கள் விநியோகம் செய்யப்பட்டன. 

            இப்போது, பாஸ்போர்ட் சேவை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் பாஸ்போர்ட்கள் விநியோகம் செய்ய வாய்ப்பு உள்ளது. இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், மாவட்ட பாஸ்போர்ட் மையங்கள் படிப்படியாக மூடப்படும்' என்றார் அனில்குமார் சோப்தி.

பாஸ்போர்ட் சேவை மையம் இணையதள முகவரி 


 
 
 
 
 
 
 







Read more »

அண்ணாமலைப் பல்கலை ஆராய்ச்சி திட்டத்திற்கு அமெரிக்கக் குழுவினர் நிதியுதவி


துணை வேந்தர் எம்.ராமநாதனை (வலதுகோடி) சந்தித்த அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழக குழுவினர்.
 
சிதம்பரம்:
 
           பெண் சிசுக்கொலை தடுப்பு தொடர்பான ஆராய்ச்சி திட்டத்துக்கு நிதியுதவி அளிக்க அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழகக் குழுவினர் வியாழக்கிழமை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வந்தனர்.
 
             மெக்சிகன் பல்கலைக்கழக அயல்நாட்டு மாணவர்கள் மற்றும் தொழில்துறை தொடர்பு அதிகாரி டான் டட்கிவிக்ஸ் தலைமையிலான குழுவினர் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.ராமநாதன், பதிவாளர் எம்.ராமநாதன், வேளாண்புல முதல்வர் ஜே.வசந்தகுமார் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.இதற்கான ஏற்பாடுகளை அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத் துறை தலைவர் பேராசிரியர் கே.ஆர்.சுந்தரவரதராஜன் செய்திருந்தார்.
 
           கடந்த ஆண்டு மீனவர் பென்களுக்கான தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி திட்டத்தை செயல்படுத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு மெக்சிகன் பல்கலைக்கழகம் நிதியுதவி அளித்தது. இதில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர் பெண்கள் பங்கேற்று பயன்பெற்றனர். இதை பாராட்டிய மெக்சிகன் பல்கலைக்கழக குழுவினர், தற்போது இந்த ஆண்டு பெண் சிசுக்கொலை தடுப்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள நிதி வழங்க முன்வந்துள்ளது என பேராசிரியர் கே.ஆர்.சுந்தரவரதராஜன் தெரிவித்தார்.
 
 
 
 

Read more »

நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பண்ருட்டி நூலாசிரியர் ஆர்.பஞ்சவர்ணத்திற்கு விருது

பண்ருட்டி:
         
             நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் நடைபெறவுள்ள 14-வது புத்தக கண்காட்சியில், பண்ருட்டி முன்னாள் நகர மன்றத் தலைவர் ஆர்.பஞ்சவர்ணம் (படம்) சிறந்த நூலாசிரியருக்கான சான்றும், விருது பெறுகிறார்.

              அவர் தொகுத்து எழுதிய "பிரபஞ்சங்களும் தாவரங்களும்' என்ற நூல் கண்காட்சியில் வெளியிடப்படவுள்ளது.பண்ருட்டி காமராஜர் தெருவில் வசிப்பவர் ஆர்.பஞ்சவர்ணம். பி.யூ.சி. படித்து வேளாண் தொழிலை செய்து வந்தார். 1996 முதல் 2006 வரை 10 ஆண்டுகள் நகர்மன்றத் தலைவராக இருந்த காலத்தில் பண்ருட்டி நகராட்சி கணினிமயமாக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றதால். இதர நகராட்சிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தது பல பாராட்டுக்களையும், பரிசுகளையும் பெற்றது.

             இவர் தொடர்ந்து 2005-2006-ல் மாநில திட்டக்குழு (குடிநீர் வடிகால்) உறுப்பினர், 2007-2008-ல் கோவை பாரதியார் பல்கலைக் கழக பாடக்குழு உறுப்பினர் (எம்.பி.ஏ), நிறுவனர்-தலைவர் நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி. பாரி கரும்பு விவசாயிகள் நிவாரணக் குழு மற்றும் நிறுவனர் தாவரத் தகவல் மையம் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர்.தாவரங்கள் மீது அதிக பற்று கொண்டவர். தாவரங்கள் அழிக்கப்பட்டு வருவதால் ஏற்படும் தீமைகளின் நிலை உணர்ந்து மரம் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி நகர பகுதியில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். 

             மேலும் பொதுமக்கள் உணர வேண்டும் என்ற நோக்கில். முன்னோர்களின் சம்பிரதாயம், வழக்கம், மரபு படி திருவதிகை ஸ்ரீவீரட்டானேஸ்வரர் கோயில்களில் ராசி, நட்சத்திரங்களுக்கு ஏற்ற தலமரங்களை உருவாக்கி அதன் மருத்துவ குணத்துடன் கல்வெட்டில் பதித்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்து இயற்கை வழிபடும் முறையை ஏற்படுத்தியுள்ளார். இவர் எழுதிய நூலில் தாவரங்களை இனம் கண்டு பெயர், மருத்துவத் தன்மை, எளிதில் அடையாளம் காணவும், வழக்கத்தில் இருந்து மறைந்து வரும் தாவரங்களை பற்றிய பழமொழிகள், விடுகதைகள், மருத்துவத் தொகைப் பெயர்கள் என அனைத்தையும் தொகுத்து அளித்துள்ளார். 

            நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தலைவர் தலைமையில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் டி.மதிவாணன், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன இயக்குநர் (சுரங்கம்) ஆகியோர் பங்கேற்கும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பஞ்சவர்ணத்துக்கு சான்றும், பரிசும் அளிக்கப்படுகிறது.





Read more »

பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்களின் 30 ஆண்டு கோரிக்கையான அன்னங்கோயில் முகத்துவாரம் ஆழம் படுத்ததும் பணி தொடக்கம்

பரங்கிப்பேட்டை : 
 
        பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்களின் 30 ஆண்டு கோரிக்கையான அன்னங்கோயில் முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணி 10 கோடி ரூபாய் செலவில் மண்வெட்டி கப்பல் மூலம் நடந்து வருகிறது.
            கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை கடற்கரையொட்டி சாமியார்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சின்னூர், கிள்ளை உட்பட 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் அன்னங்கோயில் முகத்துவாரம் வழியாக கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்த முகத்துவாரம் அடிக்கடி தூர்ந்து விடுவதால் கடந்த 30 ஆண்டுகளாக கடலுக்குள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வந்தது. 

            முகத்துவாரத்தை நிரந்தரமாக ஆழப்படுத்த அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தனர். ஒவ்வொரு தேர்தலின் போதும் மீனவர்களிடம் அன்னங்கோயில் முகத்துவாரம் நிரந்தரமாக ஆழப்படுத்தப்படும் என வாக்குறுதி தருவதும், தேர்தல் முடிந்ததும் அன்னங்கோவில் எங்கே இருக்கிறது என்று கேட்கும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி மறுவாழ்வு திட்டத்தில் உலக வங்கி நிதி உதவியுடன் முத்துவாரத்தை நிரந்தரமாக ஆழப்படுத்த 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு சென்னையில் கடந்த ஆண்டு டெண்டர் விடப்பட்டது. ஆனால் பணி துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

           தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் பணி நடக்குமா என்ற கேள்வி மீனவர்களிடையே எழுந்தது. இதற்கிடையே கடந்த ஒரு மாதமாக முகத்துவாரம் பகுதியில் மண்மேடுகளை அகற்ற ஒரு கிலோ மீட்டர் தூரம் பெரிய அளவிலான குழாய் பதிக்கப்பட்டது. கடந்த வாரம் நாகப்பட்டினத்தில் இருந்து மண்வெட்டி கப்பல் கொண்டுவரப்பட்டு கடந்த 27ம் தேதி முதல் அன்னங்கோயில் முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி துவங்கியது.

            மண்வெட்டி கப்பல் மூலம் 1,350 மீட்டர் தூரம் மண்மேடுகள் வெட்டி எடுக்கப்பட்டு பைப்லைன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. முகத்துவாரம் ஆழப்படும் பணி முடிந்ததும், வெள்ளாற்றில் இருந்து கடல் பகுதிவரை மண் சரியாமல் தடுக்கவும், படகுகள் செல்வதற்கு ஏதுவாக பெரிய அளவில் கற்கள் கொண்டு வரப்பட்டு இருபுறமும் அடுக்கப்பட உள்ளது. முகத்துவாரம் ஆழப்படுத்துவது மற்றும் பாறாங்கற்கள் அடுக்குவது உள்ளிட்ட அனைத்து பணிகளும் ஒரு ஆண்டிற்குள் முடிந்துவிடும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

           மேலும் அன்னங்கோயிலில் மீன் இறங்கு தளம் அமைக்க 13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பணியும் முடியும் பட்சத்தில் கடலூர் துறைமுகத்திற்கு இணையாக பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் பகுதி வளர்ச்சியடைந்து விடும் என்பதில் ஐயமில்லை.





Read more »

ஜூன் 5ல் காஞ்சிபுரத்தில் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்

கடலூர் : 
      
            இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் காஞ்சிபுரம் விளையாட்டுத் திடலில் வரும் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடக்கிறது. 

முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

           டெக்னிக்கல் பதவிக்கு பிளஸ் 2வில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருந்தல் வேண்டும். சோல்ஜர் நர்சிங் அசிஸ்டெண்ட் பதவிக்கு கணிதத்திற்கு பதில் உயிரியல் பாடம் தேவை. மதிபெண்கள் குறைந்தது 40 சதவீதம் இருக்க வேண்டும். மொத்தத்தில் 50 சதவீதம் மதிப்பெண்கள். வயது 17 ஆண்டுகள் 6 மாதம் முதல் 23 வயது வரை. 165 செ.மீ., உயரமும் 50 கிலோ எடை. 77 - 82 செ.மீ., வரை மார்பளவு இருக்க வேண்டும். 

இப்பதவிகளுக்கு வேலூர், கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் வரும் 5ம் தேதி தேர்வு செய்யப்படுவார்கள். 

             சோல்ஜர் ஜெனரல் பள்ளியிறுதித் தேர்வில் 45 சதவீதம். அனைத்துப் பாடங்களிலும் குறைந்தது 35 சதவீத மதிப்பெண்கள். வயது 17 ஆண்டுகள் 6 மாதம் முதல் 21 வயது. 166 செ.மீ., உயரம். 50 கிலோ எடை. 77 - 82 செ.மீ., மார்பளவு இருத்தல் வேண்டும். 

இப்பதவிகளுக்கு வேலூர், கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் வரும் 7ம் தேதி தேர்வு செய்யப்படுவார்கள். 

           சோல்ஜர் கிளார்க், ஸ்டோர் கீப்பர் பதவிக்கு மேல்நிலைப்பள்ளி கல்வி கலை வணிகம் அறிவியல் மற்றும் ஆங்கிலம் ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீதம். மொத்த 50 சதவீத மதிப்பெண்கள். வயது 17 ஆண்டுகள் 6 மாதம் முதல் 23 வயது வரை. 162 செ.மீ., உயரம், 50 கிலோ எடை. 77 - 82 மார்பளவு இருத்தால் வேண்டும். 

இப்பணிகளுக்கு வேலூர், கடலூர், திருவள்ளுவர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் வரும் 8ம் தேதி தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கு காலை 5.30 மணிக்குள் ஆஜராக வேண்டும்.
 
            இவ்வாறு முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள் ளார்.



Read more »

கடலூர் மாவட்டத்தில் 2011ம் ஆண்டில் 1,047 பேர் ரத்ததானம் செய்துள்ளனர்: ஆட்சியர் அமுதவல்லி

கடலூர் : 

           கடலூர் மாவட்ட மக்கள் அதிக அளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என கலெக்டர் அமுதவல்லி கேட்டுக்கொண்டார். 

              கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் சார்பில் உலக ரத்ததான கொடையாளர்கள் தினத்தையொட்டி ரத்ததான முகாம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. 

கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கி நடமாடும் ரத்த சேமிப்பு வங்கி பஸ்சில் ரத்ததான முகாமை துவக்கி வைத்து பேசியது: 

              பொதுமக்களிடையே ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 16 மாவட்டங்களுக்கு ஒரு வாகனம் வீதம் 2 நடமாடும் ரத்த சேமிப்பு வங்கி பஸ்களில் ரத்ததானம் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 முதல் 60 பேர் ரத்ததானம் வழங்கியுள்ளனர். அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 172 பேர் ரத்ததானம் வழங்கியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களும், பொது மக்களும் அதிக அளவில் ரத்ததானம் வழங்க வேண்டும். மேலும் இம் மாவட்டத்தில் 2010ம் ஆண்டில் 2,359 பேரும், 2011ம் ஆண்டில் 1,047 பேரும் ரத்ததானம் வழங்கியுள்ளனர்.

            இன்று தொடங்கப்பட்டுள்ள நடமாடும் ரத்த சேமிப்பு வங்கி பஸ்சில் ஒரே நேரத்தில் 4 பேர் ரத்ததானம் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் அமுதவல்லி பேசினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவத் துறை இணை இயக்குனர் டாக்டர் கமலக்கண்ணன், துணை இயக்குனர் மீரா, காசநோய் பிரிவு துணை இயக்குனர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட மேற்பார்வையாளர் தங்க மணி நன்றி கூறினார்.





Read more »

பண்ருட்டி தே.மு.தி.க எம்.எல்.ஏ.சிவக்கொழுந்து மகன் மீது தாக்குதல்

 பண்ருட்டி : 

           பண்ருட்டி எம்.எல்.ஏ.,வின் மகனைத் தாக்கிய ஐந்து பேரை, போலீசார் தேடி வருகின்றனர். 

            கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த, தே.மு.தி.க., மாவட்ட செயலரான சிவக்கொழுந்து, பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவரது மகன் விஜி, 19. நேற்று முன்தினம் இரவு, 8.30 மணிக்கு, கடைவீதிக்கு சென்று, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவரது வீடு உள்ள ஜவகர் தெருவில், அ.தி.மு.க., பிரமுகர் சிவராமன் வீட்டின் அருகே, நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த, கம்பன் நகர் ரவி மகன் கோகுல் மீது, விஜியின் கைப்பட்டது. ஆத்திரமடைந்த கோகுல் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர், விஜியை வழிமறித்து, உரசியபடி ஏன் சென்றாய் என,கேட்டுத் தாக்கினர். காயமடைந்த விஜி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். விஜி கொடுத்த புகாரின் பேரில், கோகுல் உட்பட ஐந்து பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.




Read more »

14வது நெய்வேலி புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்

           நெய்வேலி என்எல்சி நிறுவனம் சார்பில் கடந்த 13 ஆண்டுகளாக புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. தேசிய அளவில் 3வது இடத்தையும், தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த இடத்திலும் உள்ளது.

          ஆண்டுதோறும் 150க்கும் மேற்பட்ட அரங்குகளில் பிரபல பதிப்பாளர்கள் பங்கேற்று வருகின்றனர். ஆன்மிகம், அறிவியல், கலை, வரலாறு, சமையல் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களும் இதில் இடம் பெறுகிறது. நெய்வேலி மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்களும், மாணவர்களும் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு, வாங்கிச்செல்கின்றனர்.

              தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் இந்த புத்தக கண்காட்சியில் மாணவர்கள், சிறுவர்களை கவரும் விதத்தில் விளையாட்டுகளும், அறிவியல் அரங்கங்களும் அமைக்கப்படும்.  இந்நிலையில் 14வது ஆண்டு புத்தக கண்காட்சி இன்று  ஜூலை 1 மாலை நெய்வேலி வட்டம் 11ல் உள்ள புத்தக கண்காட்சி திடலில் துவங்குகிறது. என்எல்சி நிறுவன தலைவர் அன்சாரி தலைமை தாங்குகிறார்.

           சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மதிவாணன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைக்கிறார். சுரங்கத்துறை இயக்குனர் சுரேந்தர்மோகன் வாழ்த்துரை வழங்குகிறார். பண்ருட்டி நகராட்சி முன்னாள் சேர்மன் பஞ்சவர்ணம் சிறந்த எழுத்தாளராக பாராட்டு பெறுகிறார். அவர் எழுதிய பிரபஞ்சங்களும் தாவரங்களும் என்ற புதிய நூல் வெளியிடப்படுகிறது.

            கண்காட்சியில் தினமும் ஒரு எழுத்தாளரும், பதிப்பாளரும் பாராட்டப்படுவார்கள். மேலும் புதிய நூல்களும் வெளியிடப்படுகிறது. நெய்வேலி எழுத்தாளர்களின் சிறுகதை, கவிதை தொகுப்புகள் வெளியிடப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்கு வினாடி, வினா, பார்வையாளர்களுக்கு உடனடி திறன்போட்டியும் நடத்தப்படுகிறது.

                ரூ. 95 ஆயிரம் அளவுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது. இதுதவிர குறும்படங்களும் திரையிடப்படுகின்றன. புகழ்பெற்ற கலைஞர்களின் நாடகம், பட்டிமன்றம், இலக்கிய பேருரைகள், இசை நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறுகின்றன. கண்காட்சி தினமும் காலை 11 மணிவரை இரவு 9 மணிவரை திறந்திருக்கும். கண்காட்சியை முன்னிட்டு உணவகங்கள், சிற்றுண்டி சாலைகள், குடிநீர், கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விழா ஏற்பாடுகளை என்எல்சி புத்தக கண்காட்சி குழுவினர் செய்து வருகின்றனர்.





 

Read more »

இலவச மடிக்கணினி வழங்க மாவட்ட வாரியாக பிளஸ் 2 மாணவர்கள் பட்டியல் தயாரிப்பு

              அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார்.

             இதை செயல்படுத்தும் விதமாக முதல்கட்டமாக 9 லட்சத்து 12 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு லேப்-டாப் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 15-ந் தேதி முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதற்காக லேப்-டாப் தயாரிக்கும் நிறுவனங்கள் மாதிரி லேப்-டாப் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் லேப்-டாப் வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு தயாரிக்கும் பணி தொடங்கிவிடும்.

             இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எவ்வளவு லேப்-டாப் தேவை என பட்டியல் தருமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக பிளஸ்-2 மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை, வகுப்பு வாரியாக பட்டியலிடப்பட்டு வருகிறது.

              இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் வழங்க எண்ணிக்கை சேகரிக்கப்படுகிறது.   பிளஸ்-1 வகுப்பில் மாணவ-மாணவிகள் இன்னும் சேர்ந்து வருவதால் முழுமையாக கணக்கெடுத்து முடியவில்லை. ஆனால் பிளஸ்-2 வகுப்புக்கு கணக்கெடுத்து முடிக்கப்பட்டு விட்டது. வகுப்பு வாரியாக பள்ளி கல்வித்துறை அதிகாரி களுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

Read more »

Sanmar Group may tap market for expansion in Cuddalore

            Sanmar Engineering, a Sanmar Group firm, said it is scouting for partners to diversify into high pressure engineering valves business and the  nuclear sector. "We would like to fill this gap with a couple of joint ventures," says Vijay Sankar, deputy chairman of The Sanmar Group.

            "We have catered to the requirements of this (nuclear) space in the past. With this sector opening up, it presents a huge opportunity," said Sankar, adding that the company is not averse to tapping the market to fund the expansion. "Till date, our expansion has largely been met through ploughing back profits, internal accruals and debt. While these sources are cheaper forms of finance, if the need arises, we are open to raising capital from outside," said Sankar.

              The engineering division clocked a turnover of Rs 1,225 crore last year, of which the foundry business accounted for Rs 750 crore. Sankar said the company is eyeing a 20% compounded annual growth rate for the next five years. The engineering company is looking to close its books with Rs 1,500 crore in turnover this year.  Sanmar Engineering, which has completed 35 years, has five joint ventures and 12 business units spread in five locations across the globe.

            On the Rs 254-crore debt restructuring of TCI Sanmar Chemicals, Sankar said the company is in talks with banks. A consortium of banks led by Bank of India had advanced around $565 million to fund an Egyptian acquisition. The group had acquired Trust Chemicals in Port Said in 2007 so that Sanmar could ship raw materials from Port Said to its plant in Cuddalore, Tamil Nadu. While banks have asked for a corporate guarantee, Sankar says this is a non-recourse loan with a small element of guarantee. "When it comes to repayments, we have a track record of zero defaults," he said. 



Read more »

India Business Going 'Gangbuster' says DBS CEO

      


  




Sha Ying | CNBC Piyush Gupta, CEO, DB


      Southeast Asia's largest lender, DBS Group Holdings, has been aggressively expanding its footprint in India and China as it faces margin pressures in Singapore and Hong Kong. The Singapore-listed company's CEO Piyush Gupta tells CNBC's Christine Tan that business is booming in India.



Q. India is big on your radar. How exactly are you positioning DBS in India? 

                Our business in India is actually going gangbuster. It's today the third largest business of our group, and somewhere between 7 percent and 8 percent of our total group profits, which is very good. The way the Indian regulations work is every time you open a branch in the metro, you are required to open a branch in a suburban area. And so we have opened half a dozen branches in places like Surat, Moradabad, Kolhapur and Cuddalore which are fairly small areas and we have a footprint over there. But it's not at this stage that we're going into rural and start doing agricultural banking. We are very encouraged by the new pending guidelines on wholly-owned subsidiaries which are hopefully around the corner some time. If those guidelines come through, then we will get the opportunity to start branching out in India exactly like any of the national banks. And if that happens then yes we will go back and reconsider the scale and size of the footprint that we would wish to create. 

Q. What sort of branch size in India do you want to have, to have a meaningful impact on the country? Are you talking about at least 100 branches?

Yeah, I can see us having a hundred branches. Yes, absolutely.

Q. You're eyeing bigger contributions coming from China. You've set a goal of 10 percent of group revenue coming from the Mainland in the next 10 years, from the current 4 percent. What specifically are you looking to ramp up your business there?

             Our biggest focus is the corporate market and it's really two sub-segments. One is an Asian company going into China and that includes our customers out of Korea, out of Taiwan, Hong Kong, Singapore and so on. The second is the Chinese companies, the red chips, who are seeking to come out of China and particular companies which have trade flow and trade flow patterns into Southeast Asia, which is a natural market for us. Both of the segments are large, the opportunity is big and we are extremely well-positioned to go into those segments. Secondly, we continue to try to go into the private (banking) and S.M.E space in China, again leveraging on the entire suite of products that we have. And lastly, affluent banking wealth management. We think there are opportunities in each of these three spaces.

Q. More than 80% of DBS's net profit comes from Singapore and Hong Kong because interest rates in these two markets follow the U.S. You are facing a margin squeeze when it comes to your lending activities. Do you see any end to this margin erosion?

            Our Singapore margins have held in the last couple of quarters, and they've held because we have been able to take some action: some balance sheet actions to do that. Very simply, we have increased the duration of our book and gone up the yield curve. We have the capacity to do that because we have such a large savings account deposit base in Singapore and it has given us the ability to manage that. In Hong Kong, margins have been more of a challenge and that continue to be the case. As you correctly surmised, Singapore and Hong Kong follow the U.S.. So really the question is when do rates start going up in the U.S.?

Q. When do you think that will be the case?

          I don't see that happening in a hurry. The data flow in the last few weeks from the U.S. has been weak. So given the soft patch, it is highly unlikely that Mr. Bernanke is going to run to an exit policy anytime soon. I think you are talking at least a year down the road. Perhaps even longer.


       This interview is an excerpt from CNBC’s longest-running feature program Managing Asia. Catch the full interview with Christine Tan over the weekend at these times: 1 July at 1730 (SIN/HK), 2 July at 1900, 3 July at 1930.



Read more »

Puducherry Killer admits he rigged the parcel bomb


        Jyothi, who died in a parcel bomb blast here, worked in a candle-making unit in Puducherry. She opened the parcel the factory owner Arunagiri had sent her in a fake name from Cuddalore in her house at Ariyankuppam on Tuesday and it exploded injuring her severely. She later succumbed to her injuries in the hospital.

          Senior superintendent of Police (Law and Order) V J Chandran said Arunagiri was present near the blast spot, watching Jyothi receive the parcel and after the explosion had even helped the victim’s mother Saroja to take her daughter to the hospital. Saying that the bomb was being used for the first time in the Union territory, Chandran said Arunagiri could have killed himself during the making of the bomb had he committed even a slight error.

         According to police, Arunagiri had worked in a welding shop and knew about electronics. He made a parcel bomb using cracker powder, procured from a shop in Nettapakkam, and ball bearings, purchased from the Nellithope area. After connecting the device, he packed and sent it through The Professional Couriers in the name of Anbu, who was engaged by Jyothi’s parents for identifying potential grooms for her. Arunagiri had a week ago sent a parcel containing a plastic item to Jyothi through the courier firm from Cuddalore in another fake name to check if it reaches her. Jyothi had received it.

        Arunagiri, who was produced before the media on Wednesday evening, also explained how he made the explosive device. Chandran said Arunagiri was arrested at 3 pm on Wednesday and would be remanded in judicial custody. Further investigations on







Read more »

MBA Airline and Airport Management

                          
                MBA - Airline and Airport Management


       Aviation Industry growth in India has seen a huge growth rise of 60% as privatization of Airline Sector show its Impact .Since Its Inception in 1970, We at Kasturi Corporate saw this potential and opted to become GROUND HANDLING AGENTS & GROUND SERVICE AGENTS to Private Fleet Such as VAYUDOOT, EAST WEST AIRLINE Etc at Coimbatore Airport.

            This gave Birth of a Subsidiary Kasturi Travels to handle various operations RAMP HANDLING, BAGGAGE HANDLING, CUSTOMER SERVICE, and LANDSIDE & AIRSIDE OPERATIONS to private airline operator's KINGFISHER, JETAIRWAYS, and On the Domestic Front. On the International Sector SILK AIR , AIR-ARABIA , FLY DUBAI In Coimbatore. With this Knowledge base we brought out a new breed of interested young generation of tomorrow who opted to be future Airline and Airport Mangers.

BBM -Aviation Management

         KIMS MBA (Airline and Airport Management) is already very popular among the Students population as well among the B-Schools of the South. On the heels of successful running of this exclusive MBA Airline and Airport Management. KIMS decided to start BBM Aviation Management .Hence the introduction of this specialization BBM Aviation Management Program for the first time in Bharathiar University.

Aviation Management Programme And Employment Opportunities:

           Airlines and Airport operations are the very dynamic Business fields in the fast moving World Today. Millions of passengers are travelling from one destination to the other, through Thousands of flights every day, touching Hundreds of Airports Worldwide. These Air Travel passages are arranged directly or through Travel Agencies, nearly one lakh numbers spread throughout the World.

      Thus the Aviation World offers thousands of Employment opportunities for the Young Managers. KIMS aims to train and prepare these Young managers through the Exclusive Management Programmes that are being offered today at KIMS.

Excellent employment opportunities in the fields of Aviation Management:

1.Airports under AAI as well as privately managed Airports.

2.AIR INDIA and other Major Airlines like Jet Airways, Kingfisher, Indigo, Spice Jet etc. .etc..

3.All International Airlines operating through India whose offices located in all major cities of the country.

4.All the IATA approved Travel Agencies offices located throughout the country.

5.All the IATA approved Cargo Agencies offices located throughout the country.

6.All Travel Desks operated in all the Star Hotels.

7.In all organizations associated with Travel and Tourism activities in India and Abroad.

8.Partner in Aviation Entrepreneurship.

9.Independent Entrepreneur in Travel and Tourism and Aviation field.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior