உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 05, 2010

30 லட்சம் கார்களை உற்பத்தி செய்து ஹுன்டாய் தொழிற்சாலை சாதனை


ஹுன்டாய் தொழிற்சாலை உற்பத்தி செய்த 30 லட்சமாவது காரை அறிமுகப்படுத்தும் தொழிற்சாலையின் முதல் நிர்வாக இயக்குநர் எச்.டபிள்யு. பார்க் (இடது), விற்பனைப் பிரிவு
 
              ஹுன்டாய் தொழிற்சாலை 12 ஆண்டுகளில் 30 லட்சம் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. 30 லட்சமாவது காரை அறிமுகப்படுத்தும் விழா ஆலை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.   
 
                ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் 1996ம் ஆண்டு ஹுன்டாய் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. 1998-ல் உற்பத்தியை தொடங்கியது. இத் தொழிற்சாலையில்  பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்க கூடிய சான்ட்ரோ, ஆக்ஸன்ட், வெர்ணா, வெர்ணா டிரான்ஸ்பார்மர், சோனாடா, ஐ 10, ஐ 20 கார்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தியை தொடங்கிய 12 ஆண்டுகளில் 30 லட்சம் கார்களை உற்பத்தி செய்து இந்நிறுவனம் சாதனை படைத்துள்ளது.  விழாவுக்கு ஹுன்டாய் தொழிற்சாலையின் விற்பனை பிரிவு துணைத் தலைவர் அரவிந்த் சக்சேனா தலைமை தாங்கினார். ஹுன்டாய் தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநர் எச்.டபிள்யு.பார்க் 30 லட்சமாவது காரை அறிமுகப்படுத்தி பேசினார். ஹுன்டாய் தொழிற்சாலை இந்தியாவில் கார் உற்பத்தியில் 2-வது இடத்தில் இருப்பதாகவும், இதில் 48 சதவீதம் கார்கள் 113 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், 52 சதவீத கார்கள் உள்நாட்டிலேயே விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். இவ் விழாவில் உற்பத்தி பிரிவு துணைத் தலைவர் சேதுராமன், உற்பத்தி பிரிவு உதவி துணைத் தலைவர் சாரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

தேர்வு தள்ளிவைப்பால் கடலூர் மாவட்ட ஐ.டி.ஐ. மாணவர்கள் பாதிப்பு

பண்ருட்டி:
 
               கேள்வித்தாள் வெளியான காரணத்தால் ஜூலை 28-ம் தேதி நடைபெற வேண்டிய கருத்தியல் தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஐ.டி.ஐ. மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
 
                தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.) நிலையத்தில் இரண்டாம் ஆண்டு பயிற்சி முடித்த மாணவர்களுக்கு ஜூலை 23-ம் தேதி முதல் தேர்வு நடைபெற்றது.இந்நிலையில் 28-ம் தேதி நடைபெற வேண்டிய கடைசித் தேர்வான கருத்தியல் தேர்வின் போது வினாத்தாள் வெளியானதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கருத்தியல் தேர்வு மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் தேர்வு எழுத தேர்வு மையத்துக்கு சென்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து இதுவரையில் அரசு தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை என தொழிற்பயிற்சி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். தள்ளி வைக்கப்பட்டுள்ள இந்த தேர்வு முடிந்தால், அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் படித்த மாணவர்களுக்கு பயிற்சி முடிந்ததற்கான சான்றிழ்களை வழங்கும். 
 
                         இதை வைத்துக்கொண்டுதான் பயிற்சி முடித்த மாணவர்கள் வேலை தேட முடியும். தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட இந்த தேர்வு புதுச்சேரியில் குறிப்பிட்ட தேதியில் நடந்துள்ளது. கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிறுவனத்தில் தள்ளி வைக்கப்பட்ட இத்தேர்வு, இம்மாவட்டத்தின் மிக அருகில் உள்ள புதுச்சேரியில் மட்டும் எப்படி நடத்தினர் என சம்மந்தப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் புதுச்சேரியில் இத்தேர்வு முடிந்துள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் போட்டியின்றி பணியில் சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறுகின்றனர்.
 
              ரத்து செய்யப்பட்ட தேர்வை நடத்தும் தேதியை அறிவித்தல், இத்தேர்வுக்கான வினாத்தாள்களை தயார் செய்து தேர்வை நடத்தும் அதிகாரம் ஆகியவை புதுதில்லியில் உள்ள மத்திய வேலை வாய்ப்பு தலைமை ஆணையரிடம் உள்ளது. அவரின் அனுமதி பெற்ற பின்னரே தேதி அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட வேண்டும்.இந்த நடைமுறைகள் கால தாமதமின்றி உடனடியாக நடைபெற்று முடிந்தால்தான் நடப்பாண்டில் பயிற்சி பெற்ற மாணவர்கள் தடையின்றி தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெறமுடியும். காலதாமதமாகும் ஒவ்வொரு நாளும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும்.
 
இது குறித்து முன்னாள் மேலவை உறுப்பினரும், சக்தி ஐ.டி.ஐ-ன் தலைவருமான அ.ப.சிவராமன் கூறியது: 
 
                 தள்ளி வைக்கப்பட்டுள்ள தேர்வு உடன் நடத்தப்பட வேண்டும். இடைவெளி அதிகமானால் மாணவர்களின் தேர்வு எழுதும் திறன் குறைந்துவிடும். புதுச்சேரியில் தேர்வு நடந்து முடிந்துவிட்டதால் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மானிய விலையில் நெல் விதை

கடலூர்:
             கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தித் திட்டத்தில் மானிய விலையில் விதைநெல் வழங்கப்படும் என்று வேளாண் இணை இயக்குநர் ச.இளங்கோவன் அறிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
              2010-11-ம் ஆண்டுக்கு விவசாயிகளுக்குச் சான்று பெற்ற விதைநெல், கிலோவுக்கு ரூ.5 மானியம் வழங்கப்படும். 10 ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடியைக் குழுக்களாகச் செய்யும் விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும். நெல்லில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள, உழவர் வயல்வெளிப் பயிற்சிப் பள்ளிகள் நடத்தி ஒரு உழவருக்கு மானியம் ரூ.17 ஆயிரம் வழங்கப்படும். 30 விவசாயிகளுக்கு வயல்வெளிகளில் பூச்சிநோய் கண்காணிப்பு முறைகள் மேற்கொள்ளவும், பூச்சி மற்றும் நோய்த் தன்மை அறிந்து இயற்கை எதிரிகளை வயல்வெளிகளில் அழிக்காமல் பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
                    இத்திட்டத்தின் மூலம் சிக்கனமான செம்மைநெல் சாகுபடி முறைகளை விவசாயிகள் கையாண்டு, அதிக மகசூல் பெறுவதே நோக்கம் ஆகும்.விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் அலுவலர்களை அணுகி அரசு வழங்கும் மானியங்களையும் பயிற்சிகளையும் பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

பண்ருட்டி வட்டாரத்தில் துவரை சாகுபடிக்கு மானியம்

பண்ருட்டி:

             பண்ருட்டி வட்டாரத்தில் துவரை சாகுபடியை ஊக்கப்படுத்த ஒரு ஹெக்டேர் துவரை சாகுபடிக்கு ரூ.5 ஆயிரம் மானியம் அளிக்கப்படுகிறது என வேளாண்மை உதவி இயக்குநர் பி.ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 

                தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தில் துவரை உற்பத்தியை அதிகப்படுத்த, ஒரு ஹெக்டேர் சாகுபடி செய்ய தேவையான விதை, விதை நேர்த்தி மருந்து, நுண்ணுயிரி பொட்டலம், நுண்ணுரம், ரசாயன உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் யாவும் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. சாலையோரங்களில் வடிகால் வசதியுள்ள இறுமண்பாடான நிலம் கொண்ட விவசாயிகள் உடன் வேளாண்மைத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம்.

Read more »

பரோலை ஒரு மாதம் நீடிக்க பிரேமானந்தா மனு

கடலூர்:

           தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வழங்கப்பட்டு இருக்கும் பரோலை மேலும் ஒரு மாதம் நீடிக்க வேண்டும் என்று பிரேமானந்தா மனு அளித்து உள்ளார்.

               திருச்சி மாவட்டம் விராலிமலையில் ஆசிரமம் நடத்தியபோது அங்கு கற்பழிப்பு மற்றும் கொலையில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்குகளில் அவருக்கு இரட்டை ஆயுள்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக பிரேமானந்தா கடலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கண் பார்வைக் கோளாறு, பித்தப் பையில் கற்கள், நுரையீரல் வீக்கம், மூச்சுத் திணறல், இதய பலவீனம் உள்ளிட்ட நோய்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

            எனவே அவருக்கு பரோல் வழங்கி, தனியார் மருத்துவமனையில் ஒருமாதம் தங்கி, சிகிச்சை பெற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனவே பிரேமானந்தா கடலூர் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அளித்த பரோல் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இன்னமும் நோய்கள் குணமாகாததாலும், மேலும் சிகிச்சை தேவைப்படுவதாலும்,  பரோலை மேலும் ஒரு மாதம் நீடிக்க வேண்டும் என்று கோரி, பிரேமானந்தா தனது வழக்கறிஞர் மூலம், கடலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளருக்கு மனு அளித்து உள்ளார்.

                      பிரேமானமந்தாவுக்கு உயர் நீதிமன்றம் அளித்துள்ள பரோல் உத்தரவு, தற்போது பிரேமானந்தா அளித்து இருக்கும் கோரிக்கை மனு ஆகியவற்றை, சிறைத் துறை மூலமாக  தமிழக அரசின் உள்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அரசு உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read more »

மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றும் பேர்வழிகளுக்கு எச்சரிக்கை! குற்றவியல் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

கடலூர்: 

              மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை பெற்றுத் தருவதாக கூறி செயல்படும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

               உடல் உறுப்புகளில் உள்ள குறைபாட்டினால் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத் திற்காக தமிழக அரசு பல் வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. 

                   இந்த நலத்திட்ட உதவிகள் பெற மாற்றுத் திறனாளிகள் தமிழக அரசால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகள் நல வாழ்வு வாரிய அட்டை நகல் மற்றும் உரிய ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்து மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மாவட்ட அலுவலரிடம் விண்ணப்பித்தால், பரிசீலிக்கப்பட்டு உதவிகள் வழங்கப்படுகிறது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான வழிமுறைகள் அறியாத மாற்றுத் திறனாளிகள் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனுக்களுடன் அங்கும் இங்குமாக அல்லாடி வருகின்றனர். இவ்வாறு மனுக்களுடன் அல்லாடும் மாற்றுத் திறனாளிகளிடம் இடைத் தரகர்கள் சிலர் அரசின் நலத்திட்ட உதவிகளை தான் பெற்றுத் தருவதாகக் கூறி அவர்களை ஏமாற்றி பணம் வசூலித்து வருகின்றனர். மேலும், அரசு அதிகாரிகளையும் மிரட்டத் துவங்கியுள்ளனர்.

                          இதுகுறித்து பல்வேறு தரப்புகளில் இருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் முறைகேடுகளை தவிர்க்கவும், தகுதி உள்ளவர்களுக்கு விரைவாக வழங்கவும், நலத்திட்ட உதவிகள் பெற வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு இடைத்தரகர்கள் இன்றி வழங்கவும் முறைகேடாக செயல்பட்டால் நடவடிக்கை மேற்கொள் ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு

                 மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 29 ஆயிரத்து 303 பேருக்கு தேசிய அடையாள அட்டையும், 10 ஆயிரத்து 473 பேருக்கு மாற்றுத் திறனாளிகள் மறு வாழ்வு நல வாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகள் பெற விரும்பும் மாற்று திறனாளிகள் விண்ணப்பத்தில் உரிய ஆவணங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டை நகலை இணைத்து கொடுத்தால் போதுமானது. இடைத்தரகர்களை நாடி ஏமாற வேண்டாம். மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றும் இடைத்தரகர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள் தங்களது ரேஷன் கார்டு மற்றும் மூன்று போட் டோவுடன் கடலூரில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல வாழ்வு மாவட்ட அலுவலரை சந்தித்து விண்ணப்பம் பெற வேண் டும். அதனை பூர்த்தி செய்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மருத் துவ குழுவினரிடம் பரிசோதிக்க வேண்டும். பின் னர் அதற்கான சான்று பெற்று மாவட்ட மறுவாழ்வு அலுவலகத்தில் பதிவு செய்தவுடன் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூரில் சுரங்கப்பாதை நிச்சயம்: கலெக்டர் சீத்தாராமன் வாக்குறுதி


கடலூர்:

             கடலூர் லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதை நிச்சயம் அமைக்கப்படும் என கலெக்டர் சீத்தாராமன் பேசினார். மாவட்ட அளவிலான குடும்ப நலம் உலக மக்கள் தொகை கருத்தரங்கம் கடலூரில் நடந்தது. எம். எல்.ஏ., அய்யப்பன், டி.ஆர்.ஓ., நடராஜன் முன்னிலை வகித்தனர். இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் வரவேற்றார்.

கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி கருத்தரங்கை துவக்கி வைத்து, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:

              கடலூர் மாவட்டத்தில் இறப்பு சதவீதம் அதிகளவில் கட்டுப்படுத் தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மக் கள் தொகை பெருக்கத்தை நாம் கட்டுப்படுத்த வேண்டும்.

                 கடலூர் லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதை நிச்சயம் வரும். தமிழக அரசு ஜூலை 31ம் தேதி இதற்கான ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் 7.3 கோடி ரூபாய் சுரங்கப் பாதைக்கு நிதி ஒதுக்கப் பட் டுள்ளது. சுரங்கப்பாதை 2.5 மீட்டர் உயரத்தில் 320 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட உள்ளது. ரயில்வேத் துறை செப்டம்பரில் டெண்டர் விடுவதற்கு உறுதியளித்துள்ளது. இதனால் நிச்சயம் இத்திட்டம் நிறைவேறும். மாவட்டத்தில் வறுமைக் கோட் டிற்கு கீழ் அதிகம் உள்ளனர். "கான்கிரீட்' வீட்டு வசதித் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 758 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, 1 லட்சத்து 36 ஆயிரத்து 414 வீடுகள் தகுதியுடையவைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் 20 ஆயிரத்து 501 வீடுகள் பரிசீலனையில் உள்ளன. இந்த புள்ளி விபரங்கள் கம்ப்யூட்டரில் பதியும் பணி துரிதமாக நடக்கிறது. இதுவரை 77 சதவீத பணிகள் முடிந்துள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

                   நிகழ்ச்சியில் சேர்மன் தங்கராசு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா, மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, திட்ட அலுவலர் ஹபிசா, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானஸ்கந்தன், நிலைய மருத்துவர் கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

பரங்கிப்பேட்டை- கிள்ளை பாலம் பணி முடிந்து சாலை அமைக்கும் பணி துரிதம்

பரங்கிப்பேட்டை:

             பரங்கிப்பேட்டையில் இருந்து கிள்ளையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றில் 20 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி முடிந்து பாலத்தை இணைக்கும் வகையில் இரண்டு பக்கமும் சாலை அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

                பரங்கிப்பேட்டையிலிருந்து கிள்ளைக்கு செல்வதற்கு பொதுமக்கள், வியாபாரிகள் பஸ்சில் புவனகிரி வழியாக சிதம்பரம் சென்று அங்கிருந்து கிள்ளைக்கு வரவேண்டும். இதனால் கால விரயம் ஏற்படுவதுடன், பொருட்செலவும் ஏற்பட்டது. மேலும் பரங்கிப்பேட்டையைச் சுற்றியுள்ள மாணவர்கள் கிள்ளை அரசு பள்ளிகளுக்குச் செல்ல வெள்ளாற்றில் படகு மூலம் சென்று வந்தனர். இதனால் பரங்கிப்பேட்டையைச் சுற்றியுள்ள மீனவர்கள், கிள்ளையை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பரங்கிப் பேட்டையில் இருந்து கிள்ளையை இணைக்கும் வகையில் வெள் ளாற்றில் பாலம் அமைக்க வேண்டும் என 50 ஆண்டு கால கனவாக இருந்தது.

                  அதன்பேரில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆசியா வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் 20 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்ட டெண்டர் விடப்பட்டு கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி பணி துவங்கப்பட்டது. 2008ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்ததாலும் மழை, வெள்ள காரணமாக இரண்டு ஆண்டுகளாக ஜவ்வாக இழுத்துச் சென்றது. தற்போது பாலம் கட்டும் பணி முழுவதும் முடிந்து பாலத்தினை இணைக்கும் வகையில் கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதிகளில் சாலை போடப்பட்டு வருகிறது.

                 கிள்ளை பகுதி முடிந்து கடந்த இரண்டு நாட்களாக பரங்கிப் பேட்டை பகுதியில் சாலை அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.மேலும் பாலத்தின் நான்கு பக்கங்களில் 3 லட்சம் மதிப்பில் 6 அடி உயரத்தில் திருவாரூர் தேர் அமைக்கும் பணி நடக்கிறது.இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்துவிடும் என அதிகாரிகள் கூறுகின்றனர். நேற்று முதல் பாலத்தின் வழியாக பைக், சைக்கிளில் செல்பவர்கள் சென்று வருகின்றனர். வெள்ளாற்றில் பாலம் கட்டப்பட்டு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள் ளதால் பரங்கிப்பேட்டை, கிள்ளை பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Read more »

சிறுபாக்கத்தில் வெங்காயம் பயிர் சாகுபடி: வேளாண்துறை ஊக்குவிக்குமா?

சிறுபாக்கம்:

                 சிறுபாக்கத்தில் வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க வேண்டும்.
  
                    சிறுபாக்கம் பகுதியைச் சேர்ந்த நீர்ப்பாசன சிறு, குறு விவசாயிகள் பருவமழை குறைவு மற்றும் காலம் தாழ்த்திய மழை, நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்ததால் காய்கறிகள் மற்றும் பூக்கள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வந்தனர். இதில் தோட்டக்கலை பயிரான கத்தரி, தக்காளி, வெங்காயம் ஆகிய பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.இவர்களுக்கு அரசு வேளாண் துறை தோட்டக்கலை பிரிவு மூலம் உயிர் உரங்கள், ரசாயன உரங்கள், வேளாண் கருவிகள் ஆகியவற்றினை மானிய விலையில் வழங்கி ஊக்குவித்தால் பெரும் ஒத்துழைப்பாக அமையும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Read more »

சிதம்பரம் மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா

சிதம்பரம்:

               சிதம்பரம் அரசு மருத்துவமனையில் டெம்பிள் சிட்டி லயன்ஸ் கிளப், காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் கிளப், மிட்டவுன் ரோட்டரி கிளப், அம்பேத்கர் உடல் நல சேவை இயக்கம் சார்பில் உலக தாய்பால் வார விழா நடந்தது. 

               டெம்பிள் சிட்டி லயன்ஸ் தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை மருத்துவ கண்காணிப்பாளர் சண்முகம், ஓய்வு பெற்ற இணை இயக்குநர் ஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தார். டாக்டர் நடராஜன் வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் முருகேசன் பேசினார். விழாவில் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் கிளப் தலைவர் முருகப்பன், டெம்பிள் சிட்டி லயன்ஸ் கிளப் தலைவர் சேதுமாதவன் உட்பட பலர் பங்கேற்றனர். 

                முன்னதாக சிதம்பரம் உழவர் சந்தை அருகே புதுச்சேரி உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் கள விளம்பரத் துறை, கடலூர் சத்துணவு மற்றும் சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பில் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதிபொறியியல் துறைத் தலைவர் விருத்தகிரி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கடலூர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் அன்பழகி, புதுச்சேரி உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரிய செயல் விளக்க அலுவலர் திருநாவுக்கரசு உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

தொடர் உண்ணாவிரதம்: இளநிலை உதவியாளர்கள் முடிவு

சிதம்பரம்:

               கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 4ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு அரசு தற்காலிக இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற சங்கம் முடிவு செய்துள்ளது.

               சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு தற்காலிக இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர் கள் முன்னேற்ற சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் அறிவொளி தலைமையில் நடந்தது. செல்வராஜ் வரவேற்றார். ராமலிங்கம், பாலசுந்தர், ராஜா, தேவநாதன், கிறிஸ்துதாஸ், செந்தில்துரை, செல்வம் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் மாரிமுத்து, பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் கணேஷ் பங்கேற்றனர். 

                தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் கடந்த 2008 டிசம் பர் 17ல் சிறப்புத் தேர்வில் பங்கேற்று 90 மதிப்பெண் களுக்கு மேல் பெற்ற 2,000க்கும் மேற்பட்டவர் களை நியமிக்க தேர்வாணைய தலைவரை கேட்டுக் கொள்வது. பணிக்காலங்களில் இறந்த தற்காலிக இளநிலை உதவியாளர்கள் மற்றும் ஒய்வு பெற்ற ஊழியர்கள் வாரிசுகளுக்கு அரசு வழங்கும் அனைத்து உதவியும் வழங்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி செப்டம் பர் 4ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

சிறுபாக்கம் பகுதியில் பருவமழை தாமதத்தால் பரிதவிக்கும் விவசாயிகள்


சிறுபாக்கம்:

              சிறுபாக்கம், வேப்பூர் மானாவாரி விவசாயிகள் நிலத்தினை உழுது, பருவமழையை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

             சிறுபாக்கம் மற்றும் வேப்பூர் பகுதிகளைச் சுற்றியுள்ள கழுதூர், அரியநாச்சி, சேப்பாக்கம், பெரியநெசலூர், மங்களூர், மலையனூர், அரசங்குடி, ஒரங்கூர் உள்ளிட்ட சுமார் 100 கிராமங்களைச் சேர்ந்த மானாவாரி விவசாயிகள் தொடக்க காலத்தில் ஆடிப்பட்டத்திற்கு ஏற்றவாறு, தங்களின் மானாவாரி நிலங்களில் வரகு, சோளம், மணிலா பயிர் கள் விளைவித்து வந்தனர்.

                   கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றத்தால் காலம் தவறிய மழை, கடுமையான வெயில் ஆகியவற்றால் பயிர்களை மாற்றி, பருத்தி, மக்காச்சோளம் பயிர்களை விளைவித்து வருகின்றனர். "ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழிக்கேற்ப முன்னதாக பயிரிட்ட நிலத்திலுள்ள கழிவுகள், களைகளை அகற்றி 4 முறை டிராக்டர் கொண்டு உழவு செய்து நிலத்தினை தயார் செய்தனர். ஆனால் இந்த ஆண்டும் பருவமழை பெய்யாமல் கடந்த ஒரு மாதங்களாக காலம் தாழ்த்தி வருவதால் மானாவாரி விவசாயிகள் பரிதவிப்புடன் பருவமழையை எதிர்பார்த்து காத்துள் ளனர்.

Read more »

தபால் அலுவலகத்தில் சேவை குறைபாடு: நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு


கடலூர்:

                 காப்பீடு திட்டத்திற்கு சரியான தொகை வசூலிக்காத தபால் அதிகாரிகள் நஷ்ட ஈடு தொகையாக 6,000 ரூபாய் வழங்க வேண்டுமென நுகர்வோர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

                 கடலூர் சிப்காட் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சவுரிராஜன். இவரது மகள் சுகுணா. இவர் தபால்துறை அறிமுகப்படுத்திய காப்பீடு திட்டத்தில் சேர முடிவு செய்தார். அதற்காக சிப்காட் தபால் நிலையத்தை அணுகி 50 ஆயிரம் ரூபாய் பாலிசி எடுக்க வேண்டுமென கோரினார்.தபால் அலுவலர் 146 ரூபாய் பிரிமியம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். அதன்படி சுகுணா விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கடந்த 2006ம் ஆண்டு பிப். 17ம் தேதி பணம் செலுத்தினார். பல நாட்கள் ஆகியும் பாலிசி பத்திரம் கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக விசாரித்ததில் பாலிசி பிரிமியம் 153 ரூபாய்க்கு பதில் 146 ரூபாய் செலுத்தப்பட்டது. வித்தியாச தொகை 7 ரூபாய் செலுத்த வேண்டும் என கூறினார். அதன் படி சுகுணா மீண்டும் அதே ஆண்டு ஜூலை 6ம் தேதி வித்தியாச தொகையை செலுத்தினார்.

                   அதன் பிறகும் பாலிசி பத்திரம் வரவில்லை. அதற்கு பதிலாக தபால் துறை தலைவரிடம் இருந்து அதே ஆண்டு ஆக.27ம் தேதி கடிதம் வந்தது. வித்தியாசத் தொகை 7 ரூபாயை 2006 ஜூன் 30ம் தேதிக்குள் செலுத்தாததால் காப்பீடு ரத்து செய்யப்பட்டுவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சுகுணா தபால்துறைக்கு 2006 ஜூன் 3ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என எந்த கடிதமும் வரவில்லை. பாலிசி எடுக்கும் போதே கேட்கப்பட்ட 146 ரூபாய் தான் செலுத்தப்பட்டுள்ளது என சுகுணா கடலூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந் தார்.

                   வழக்கை விசாரித்த நுகர்வோர் மன்ற நீதிபதி கணேசன், உறுப்பினர்கள் கலையரசி, பாண்டியன் ஆகியோர் தபால் துறை அலுவலர்கள் 2006 ஜூன் 30ம் தேதிக்குள் வித்தியாச தொகை செலுத்த வேண் டும் என அறிவிப்பு செய்யாதது சேவை குறைபாடாகும். இதனால் சுகுணாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக நஷ்ட ஈடாக 5,000 ரூபாயும், வழக்கு செலவுக்காக 1,000 ரூபாயும் 2 மாதத் திற்குள் அளிக்க வேண்டும். இந்தத் தொகையை சிப்காட் தபால் நிலைய அதிகாரியும், கடலூர் தபால் கண்காணிப்பாளரும் கூட்டாக அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

Read more »

ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் வாயிற் கூட்டம்

கடலூர்:

              விடைத்தாள் ஒன்றுக்கு உழைப்பூதியமாக 25 ரூபாய் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் நேற்று கடலூரில் கோரிக்கை முழக்க வாயிற் கூட்டம் நடத்தினர்.

                மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளி வாயிலில் நடந்த கூட்ட த்திற்கு தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். நல்லமுத்து முன்னிலை வகித்தார். காமராஜ், செல்வி, காண்டீபன் சிறப்புரையாற்றினர். தேர்வுப்பணிகள் அனைத்தும் டயட் கல்வியாளர்களுக்கே வழங்கப் பட வேண்டும். விடைத் தாள் ஒன்றுக்கு உழைப்பூதியமாக 25 ரூபாய் வழங்க வேண்டும். சிற்றுண்டிக்காக நாளொன்றுக்கு 50 ரூபாய் வழங்கிட வேண்டும். 

                     டயட் கல்வியாளர்களுக்கு எம்.பில்., பி.ஹெச் டி.,க்குண்டான ஊக்க ஊதியம் விரைந்து வழங்க வேண்டும். கல்வியாளர்களுக்கு பணி மூப்பு பட்டியல் விரைந்து வெளியிட வேண்டும். பணிச் சுமை, பயணக்களைப்பு போன்றவற்றை கவனத்தில் கொண்டு வேறுபட்ட மாற்றுப் பணிகளுக்கிடையே போதிய கால இடைவெளி வழங்க வேண்டும். தாள் திருத்தும் மையங்களில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கலியமூர்த்தி நன்றி கூறினார்.

Read more »

கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம் காலனியில் குடி தண்ணீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

கடலூர்:

                கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம் காலனியில் குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். 

                 கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம் காலனியில் 200க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக காலனியில் குடிநீர் தண்ணீர் வழங்காததால் பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். தொடர்ந்து இதே நிலை நீடித் ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 7.30 மணிக்கு தூக்கணாம்பாக்கம் கடை வீதியில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தூக்கணாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். அதில் உடன் நடவடிக்கை எடுத்து குடி தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து 8.30 மணிக்கு மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Read more »

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி முற்றுகை: பண்ருட்டியில் பரபரப்பு

பண்ருட்டி: 

               பண்ருட்டியில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியில் காப்பீடு பதியாததால் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பிற்பகலில் அலுவலகம் பூட்டப் பட்டது.

               மத்திய அரசின் ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் கார்பரேஷன் கீழ் இயங்கும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மைக்ரோ அலுவலகம் பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் உள்ளது.இங்கு 20 ஏஜன்டுகள் தினமும் காப்பீடு செலுத்தி வருகின்றனர். மேலும் 200 பேர் வாகனம் உள்ளிட்ட காப்பீடு செய்வது வழக்கம். ஆனால் நேற்று காலை முதல் மின் நிறுத் தம் காரணமாக கம்ப்யூட் டர் வேலை செய்யவில்லை என கூறி காப்பீடு செய்ய வந்தவர்களை திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

                இதனால் காப்பீட்டு அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு புரோபசல் விண் ணப்பம் உண்மை நகல் வழங்குவதில்லை, குறிப்பிட்ட சில ஏஜன்டுகள் அலுவலகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். ஜெனரேட்டர், இன் வெர்ட்டர் வசதிகள் ஏற்பாடு செய்யாமல் அதிகாரிகள் காலதாமதம் செய்து வருவதாக புகார் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதøனைத் தொடர்ந்து பிற்பகல் அலுவலகம் பூட்டப்பட்டது. 

இதுகுறித்து கிளை அலுவலர் அசோகன் கூறுகையில்,"

                            மின் நிறுத்தம் காரணமாக காப்பீடு பதிய முடியவில்லை. இன் வெர்ட்டர் சரியாக வேலை செய்யவில்லை. அதனால் எங்களது நெய்வேலி மண் டல மேலாளர் உத்தரவின் பேரில் அலுவலகத்தை பூட்டினோம்' என்றார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior