உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 20, 2010

ஆசிய செஸ்: நெய்வேலி ஸ்ரீஜா சேஷாத்ரி சாம்பியன்


நெய்வேலி:

         சீனாவில் நடைபெற்ற இளையோருக்கான ஆசிய செஸ் போட்டியில் நெய்வேலி ஜவஹர் சிபிஎஸ்இ பள்ளி மாணவி ஸ்ரீஜா சேஷாத்ரி தங்கம் வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
 
          ஆசிய இளையோருக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் இம்மாதம் 8-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 27 நாடுகளில் இருந்து 426 பேர் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து 52 பேர் பங்ககேற்றனர். அவர்களில் 15 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் 14 வயதுக்குட்பட்டோருக்கான செஸ் போட்டியில் 14 நாடுகளில் இருந்து 27 பேர் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் பங்கேற்ற நெய்வேலி ஜவஹர் சிபிஎஸ்இ பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி ஸ்ரீஜா சேஷாத்ரி, 7 புள்ளிகள் பெற்று ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
 
          இப்போட்டிகளில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. இதே போன்று ஆசிய இளையோருக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற போது, 12 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில்  ஸ்ரீஜா சேஷாத்ரி சாம்பியன் பட்டம் வென்றார். ஏற்கெனவே துருக்கியில் நடந்த உலக அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவர் பங்கேற்றுள்ளார். அதில் அவர் 20-வது இடத்தை பெற்றார். சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் செஸ் போட்டியில் 3-வது இடத்தை பிடித்தார். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் கிரீஸில் நடைபெறவுள்ள உலக இளையோருக்கான செஸ் போட்டியிலும் ஸ்ரீஜா சேஷாத்ரி பங்கேற்கவுள்ளார்.

Read more »

தாய்மொழியில் படிக்கும் நூல்களே நினைவில் நிற்கும்: உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன்

நெய்வேலி:

            புத்தகங்களை தனது தாய்மொழியில் படித்தால் அவை எளிதில் நினைவில் நிற்கும். எனவே இளைஞர்கள் தாய்மொழியில் படித்து பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த 13-வது புத்தகக் கண்காட்சியின் நிறைவுநாள் விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் கேட்டுக் கொண்டார்.

            நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் அரங்கில், இம்மாதம் 9 முதல் 18-ம் தேதி வரை, இப் புத்தகக் கண்காட்சி தொடர்ந்து நடைபெற்றது. இப்புத்தகக் கண்காட்சியின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு, என்எல்சி சுரங்கத்துறை இயக்குநர் பி.சுரேந்திரமோகன் தலைமை வகித்தார். நகர நிர்வாக முதன்மைப் பொது மேலாளரும், புத்தகக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளருமான செந்தமிழ்செல்வன் வரவேற்றார். 

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன், புத்தகக் கண்காட்சியின் சிறப்பு மலரை வெளியிட்டுப் பேசியது:

              இப் புத்தகக் கண்காட்சிக்கு நான் 2-ம் முறையாக வருகிறேன். இங்கு பார்க்கும் போது மக்களிடம் புத்தகம் வாங்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இளைஞர்களிடையே புத்தகம் படிக்கும் ஆர்வம் குறைந்துவருகிறது. ஒருவர் தனது பாடப்புத்தகங்களை மட்டுமே படித்தால் வாழ்க்கையில் வெற்றிப் பெற முடியாது. பிற புத்தகங்களையும் படித்து, அதில் கிடைக்கும் அறிய பல விஷயங்களைத் தெரிந்து கொண்டால்தான் பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். கூடுமான வரையில், அவரவர் தாய்மொழியில் படித்தால் அவை நினைவில் நிற்கும். தமிழக முதல்வர் பல்வேறு புத்தகங்களை படித்து தனது அறிவை வளர்த்துக் கொண்டதால்தான் இன்றும் அவரால் பல விஷயங்களை நினைவுக் கூற முடிகிறது என்றார் வெங்கட்ராமன்.

          நிகழ்ச்சியில், என்எல்சி நிதித்துறை இயக்குநர் சேகர் வாழ்த்துரை வழங்கினார்.விழாவின் போது புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் ராஜாவும், சாகித்ய அகாதெமி பதிப்பகத்தாரும்  கௌரவிக்கப்பட்டனர். 

10 தினங்களில் 2.5 லட்சம் வாசகர்கள்... 

            இன்றைய இளைஞர்கள், தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், டிவிடி, சிடி, இன்டர்நெட், பென் டிரைவ் என நவீன தொழில்நுட்ப உலகத்துக்கு சென்றுவிட்ட நிலையில் அவர்களை புத்தகம் பக்கம் திருப்புகிற பணியை கடந்த 13 ஆண்டுகளாக செய்து வருகிறது என்எல்சி நிறுவனம். இந்திய அளவில் சென்னை, கொல்கத்தா, புதுதில்லி புத்தகக் கண்காட்சிகளுக்கு அடுத்தபடியாக திகழும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியைக் காண ஏராளமான வாசகர்கள் கண்காட்சி அரங்கை நோக்கி சாரைச் சாரையாக அணிவகுத்த போதிலும்,பெண்களும், அவர்தம் பிள்ளைகளும் கூட்டம் கூட்டமாக வந்து புத்தகங்களை பார்வையிட்டு தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

          கூட்டம் கூட்டமாக வருவதைக் காணும் போது, புத்தகப் பதிப்பாளர்களின் எதிர்காலம் வலுவான நிலையில் உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. கடந்த 10 தினங்களில் புத்தகக் கண்காட்சியைக் காண வந்திருந்தோரின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டி நிற்கிறது.÷புத்தகக் கண்காட்சியை வெறும் காட்சியாக மட்டும் பார்க்காமல், தங்களுக்குத் தேவையான புத்தகம் எது என்பதை ஆராய்ந்து அதை வாங்கிச் செல்லும் வாசகர்கள் அதிகம். இருப்பினும் பள்ளிப் பாடப் புத்தகங்களும், சமையற்கலை, விடுகதை, ஓவியம் தொடர்பான புத்தகங்களே அதிக அளவில் விற்பனையாவதாகவும், இலக்கியம், நாவல் போன்றவற்றின் விற்பனை மிக அரிதாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.

           மேலும் இப்புத்தகக் கண்காட்சிக்கு மேலும் மெருகூட்டக் கூடிய அம்சங்களாக இருப்பவை, அங்காடிகள் அமைக்கப்பட்டிருக்கும் விதமும், பதிப்பாளர்களுக்கு என்எல்சி நிறுவனம் செய்துதருகிற வசதிகளும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளதால் பதிப்பாளர்கள் ஆர்வமுடன் இப்புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கின்றனர். இதுதவிர புத்தகக் கண்காட்சி அரங்கில் புழுதி ஏற்படாத வண்ணம் தரைகளும் சிமென்டினால் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் களைப்படையாமல் இருக்க தேநீர் அங்காடிகள், சிறுவர், சிறுமியரை மகிழ்விக்கக் கூடிய பொழுதுப்போக்கு அம்சங்கள், சுகாதாரத்தை பேணிக்காக்கிற வகையில் நடமாடும் கழிவறை, அங்காடிகளுக்கு நடுவே இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம், செவிக்குத் தேவையானவற்றை வாங்கிய பிறகு, வயிற்றுக்கும் தேவையானவற்றை வாங்கி உண்பதற்கு ஏதுவாக உணவகப் பிரிவு என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.

             எது எப்படியானாலும், இன்றைய இளைய சமுதாயத்துக்கு புத்தகம் ஒன்று இருக்கிறது. அதில் ஏராளமான விஷயங்கள் உள்ளன. அவற்றை வாங்கிப் படியுங்கள் என்று சொல்லாமல் சொல்லும் பணியை அமைதியுடன் செய்து வருகிறது என்எல்சி நிறுவனம்.

Read more »

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை தேவை: தமிழக உழவர் முன்னணி

சிதம்பரம்:

           காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு குறித்து விளக்கமளித்த தமிழக முதல்வர் மு.கருணாநிதி, 1991-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நடுவர் மன்றத் தீர்ப்பு நடைமுறையில் உள்ளதை முதல்முதலாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இதை நடைமுறைப்படுத்த எவ்வித நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை என தமிழக உழவர் முன்னணி செயல் தலைவர் மா.கோ.தேவராசன் தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூரில் மத்தி மீன்கள் விலை வீழ்ச்சி

கடலூர்:

            கடலூரில் மத்தி மீன்களின் விலைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.  இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, கிடைக்கும் மீன்களை கருவாடாக்கி விற்றால் கூடுதல் விலை கிடைக்கும் என்ற நிலையில் உள்ளனர்.

             கடலூரில் வஞ்சரம், பாறை, சங்கரா, கொடுவா, கெழுத்தி, கிளங்கான் போன்ற பல்வகை மீன்கள் பிடிபட்டாலும், மீனவர்களின் வருவாயை அதிகப்படுத்துவது அபரிமிதமாகப் பிடிபடும் மத்தி மீன்கள்தான். மத்தி மீன்கள் நாகை, தூத்துக்குடி போன்ற சேறும், சகதியும் நிறைந்த கடல் பகுதியில் உற்பத்தியாகி, நீரோட்டத்தில் கடலூர் கடல் பகுதிக்குக் கூட்டம் கூட்டமாக வருகின்றன. கடலூர் கரையில் இருந்து 20 மைல் தொலைவில் உள்ள கடல் பகுதிகளில் மத்தி மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. மத்தி மீன்கள் மக்களின் உணவுக்காக அதிக அளவில் கேரளத்துக்கும், மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மத்தி மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. நாளொன்றுக்கு 500 டன்கள் வரை பல நேரங்களில் மத்தி மீன்கள் கடலூரில் கிடைப்பது உண்டு. இவைகள் மொத்த வியாபாரிகளால் வாங்கப்பட்டு,100 லாரிகளில் நாள்தோறும் கடலூரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கொண்டு போகப்படுகின்றன.

            கடந்த 4 நாள்களாக மத்தி மீன்கள் கணிசமாகக் கிடைத்தாலும் நியாயமான விலை கிடைக்கவில்லை என்கிறார்கள் கடலூர் மீனவர்கள்.÷மத்தி மீன் 60 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ. 2 ஆயிரம் வரை விலை போகும்  நேரங்களும் உண்டு. கடந்த வாரம் ஒருபெட்டி மத்தி மீன் ரூ. ஆயிரம் மட்டுமே விலை போனது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை அது ரூ. 300 ஆகக் குறைந்து விட்டது. அவ்வளவு குறைந்த விலைக்கு மீன்களை விற்பனை செய்ய மீனவர்கள் விரும்பவில்லை. கேரளத்துக்கு மீன்களை வாங்கிச் செல்ல வியாபாரிகளும் முன்வரவில்லை. கேரளக் கடற்பகுதியில் தற்போது வழக்கத்துக்கு மாறாக மத்தி மீன்கள் அதிகம் கிடைப்பதே, கடலூரில் விலை வீழ்ச்சிக்குக் காரணம் என்று கூறுகிறார், கடலூர் மாவட்ட மீனவர் பேரவைத் சுப்புராயன். இதனால் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய விரும்பாத மீனவர்கள் பிடித்து வரும் மத்தி மீன்களை, கருவாட்டுக்காக பதப்படுத்தத் தொடங்கி இருப்பதாவும், கருவாடாக விற்பனை செய்தால் கூடுதலாக ஒருபெட்டிக்கு ரூ. 150 கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Read more »

கடலூரில் மீனவ கிராமங்களிடையே மோதல்: வீடுகள் சேதம், போலீஸ் தடியடி

கடலூர்:

             கடலூரில் இரு மீனவ கிராமங்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில், வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. 

            மோதலிலும் போலீஸ் தடியடியிலும் பலர் காயம் அடைந்தனர். கடலூர் சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு ஆகிய இரு மீனவ கிராமங்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இதனால் அவர்களுக்குள் சிறுசிறுத் தகராறுகள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை இரவு, சோனங்குப்பம் மீனவர்கள் சிலர் சிங்காரத்தோப்பு வழியாகச் சென்றபோது, இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலில் முடிந்தது. பயங்கர ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில், சிங்காரத்தோப்பைச் சேர்ந்த காத்தவராயன் (28), ராணி (46), சோனங்குப்பம் சத்தியன் (28), கவியரசன் (28) ஆகியோர் காயம் அடைந்தனர். 2 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.

               தகவல் அறிந்ததும் கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் போலீஸôர் விரைந்தனர். மேற்கொண்டு மோதலைத் தவிர்க்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் இரு கிராமங்களுக்கும் இடையே சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த சோனங்குப்பம் தங்கமணி (52), சிங்காரத்தோப்பு நித்தியானந்தம் (50), கிராமத் தலைவர் அசோகன் (55) உள்ளிட்ட பலர் காயம் அடைந்தனர்.மோதல் தொடர்பாக விஜயேந்திரன் (44) கொடுத்த புகாரில், சிங்காரத்தோப்பைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, சிவா, சுப்பிரமணியன், காத்தவராயன் உள்ளிட்டோர் மீதும், தமிழரசி (45) கொடுத்த புகாரில் சோனங்குப்பம் கவியரசன், பாபு, கபிலன் நாகப்பன் உள்ளிட்டோர் மீதும் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். காயம் அடைந்த சத்தியன், காத்தவராயன், மாரிமுத்து மனைவி ராணி ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

             இந்நிலையில் இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மேலும் மோசம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக, இரு கிராமங்களின் ஊர்ப்பஞ்சாயத்தாரும் திங்கள்கிழமை காலை ஒன்றுக் கூடிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இனி இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்றும், மோதலில் ஈடுபட்டவர்களை மட்டும் காவல் நிலையத்தில் ஒப்படைப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.  மோதலில் சம்பந்தம் இல்லாதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கூடாது என்றும் அவர்கள், போலீஸ் துணைக் கண்காணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

Read more »

அண்ணாமலைப் பல்கலையில் ரூ.2 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

சிதம்பரம்:
   
              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரூ. 2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். துணைவேந்தருடன் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, வேளாண்புல முதல்வர் ஜே.வசந்தகுமார் உள்ளிட்டோர் உடன் சென்று பார்வையிட்டனர்.

இது குறித்து துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தது: 

              அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடலூர் மாவட்டத்திலேயே முதல்முதலாக ரூ. 2 கோடி செலவில் கழிவுநீரை சுத்தப்படுத்தும் இரண்டு சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துள்ளது. மருத்துவமனைõலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மாணவர்கள் விடுதி, அலுவலர்கள் குடியிருப்பிலிருந்து வெளியேறும் கழிவுநீர், நவீனமுறையில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு தூயநீராக மாற்றம் செய்யப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் கல்விக்கடன், சிறுதொழில் கடன்கள் பெற விண்ணப்பிக்கலாம்

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் கல்விக் கடன், சிறுதொழில் கடன் மற்றும் தனிநபர் கடன்களைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை அறிவித்தார்.

ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

           கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு (முஸ்லிம், மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவர்கள் நீங்கலாக மற்ற கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், பார்சியர்கள்) 2010- 11-ம் ஆண்டுக்கு சிறுதொழில் கடன்கள் வழங்க ரூ. 150 லட்சம், தனிநபர் கடன் வழங்க ரூ. 150 லட்சம், கல்விக் கடன் வழங்க ரூ. 10 லட்சம் அரசு ஒதுக்கி உள்ளது. 

                 மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தொழிற்கல்வி மற்றும் பட்டயப் படிப்பு பயிலும், மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இக்கடன்கள் மத்தியக் கூட்டுறவு வங்கிகள், அவற்றின் கிளைகள், நகரக் கூட்டுறவு வங்கிகள், சிறப்பாகச் செயல்படும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும். தனிநபர் கடனுக்கு 6 சதவீதம், சிறுதொழில் கடனுக்கு 4 சதவீதமும், கல்விக் கடனுக்கு 3 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படும்.

          கிராமப் பகுதியாக இருந்தால் ஆண்டு வருமானம் ரூ. 39,500-க்கு மிகாமலும், நகரப் பகுதியாக இருந்தால் ரூ. 54,500-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். பள்ளிச் சான்று, சாதிச்சான்று, வருமானச சான்று, இருப்பிடச் சான்று, திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலே குறிப்பிட்ட வங்கிகள், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் ஆகியவற்றில் சமர்ப்பிக்கலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

இடிந்து விழும் ஆபத்தான நிலையில் விருத்தாசலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் கட்டடம்

விருத்தாசலம் : 

          விருத்தாசலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அலுவலக கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
 
              விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் செல்லும் சாலையின் அருகே விருத்தாசலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இங்கு கடலூர்- திருச்சி, விழுப்புரம் - திருச்சி பாசஞ்சர் ரயில்கள் நின்று போகும். இந்த ஸ்டேஷனில் இருந்து நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர்.
இந்த டவுன் ஸ்டேஷனுக்கான அலுவலகக் கட்டடம் 1994ம் ஆண்டு கட்டப்பட்டது.  இதில் டிக்கெட் கவுன்டர், அலுவலக அறை, பயணிகள் ஓய்வு அறை உள்ளது. இந்த கட்டடம் தற்போது பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. 

           கட்டடத்தின் மேலே ஆலமரம் வளர்ந்து அதன் வேர்கள் கட்டட சுவற்றுக்குள் சென்றதால் ஆங்காங்கே சுவரில் விரிசல் காணப்படுகிறது. இதனால் எப்போது இடிந்து விழும் என தெரியாத அபாய நிலை உள்ளது. மக்கள் தினமும் அலுவலக அறைக்குச் சென்று டிக்கட் எடுக்க பயன்படுத்தும் இந்தக் கட்டடம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் கட்டடத்தின் மேல் உள்ள மரத்தினை அகற்றி, கட்டடத்தை முறையாக பராமரிக்க ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூர் மைதானத்தில் இரவு நேரத்தில் மினி "பார்' போலீசார் நடவடிக்கை; முதியவர்கள் கவலை

கடலூர் : 

        கடலூர் மைதானத்தில் கூடுபவர்களை போலீசார் விரட்டியடிப்பதால் முதியவர்கள் கவலையடைந்துள்ளனர்.
 
            கடலூர் நகரத்தின் மையத்தில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந் துள் ளது தங்கராஜ் முதலியார் மைதானத்தில் மாலை நேரங்களில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலர் "ரிலாக்சாக' காற்று வாங்குவதற்காக உட் கார்ந்து பேசுவது வழக்கம். அதேப்போல் வேலை முடித்து விட்டு வருபவர்கள் மறைவில் நின்று  பேசுவதும், இரவு நேரங்களில் இளைஞர்கள் உற்சாக பானம் அருந்துவதும் அதிகரித்து வருகிறது.
 
              இது குறித்து போலீசாருக்கு பல புகார்கள் வந்தன. அதையொட்டி புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக் கியராஜ் தலைமையில் போலீசார் மைதானத்தில் பேசிக்கொண்டிருந்தவர்களை விரட்டியடித்து வருகின்றனர். மேலும் மைதானத்தில் இரவு 7.30 மணிக்குமேல் யாரும் உட்காரக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமூக விரோதிகளுக்காக போலீசார் எடுத்த நடவடிக்கையில் ஓய்வு பெற்ற முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  மாலை நேரத்தில் காற்று வாங்கிக் கொண்டு பேசி மகிழ வருகிறோம். அதற்காகத்தான் இந்த மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.  போலீசாரின் இத்தகைய நடவடிக்கை எங்களை புண்பட செய்துள்ளது என கவலை தெரிவித்துள்ளனர். 

Read more »

கடலூர் மாவட்டத்தில் சிலிண்டர் வினியோகத்தில் ஸ்டிக்கர் முறை அறிமுகம்! முறைகேடுகளை தவிர்க்க நடவடிக்கை


கடலூர் : 

             வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் வினியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க மாவட்டத்தில் முதல் முறையாக இன்டேன் நிறுவனம் "ஸ்டிக்கர்' முறையை அமல்படுத்தியுள்ளது.

               கடலூர் மாவட்டத்தில் மூன்று லட்சம் வீட்டு உபயோக காஸ் இணைப்புகள் உள்ளன. இதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் கடலூர், நெய்வேலியில் தலா மூன்றும், விருத்தாசலத்தில் ஒரு ஏஜென்சியும், இந்துஸ் தான் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் சிதம்பரம், கடலூர் மற்றும் பரங்கிப் பேட்டையில் தலா ஒரு ஏஜென்சியும், பாரத் பெட் ரோலிய நிறுவனம் சார்பில் பண்ருட்டியில் இரண்டு, நெய்வேலி மற் றும் காட்டுமன்னார்கோவிலில் தலா ஒரு ஏஜென்சி என மொத்தம் 15 காஸ் ஏஜென்சிகள் இயங்கி வருகின்றன.  இருப்பினும் அனைத்து பகுதிகளிலும் காஸ் சிலிண்டர் தட்டுப் பாடு நிலவி வருகிறது.
 
                 வீட்டு உபயோக காஸ் இணைப்புகளுக்கு 21 நாட் களுக்கு ( தமிழக அரசின் இலவச காஸ் இணைப்பு திட்டத்தில் இணைப்பு பெற்றவர்களுக்கு 60 நாட்களுக்கு)  ஒரு சிலிண்டர் வழங்க வேண்டும் என விதி இருந்தாலும் இதனை பெரும்பாலான ஏஜன்சிகள் பின்பற்றுவதில்லை. நிறுவனங்கள் நிர்ணயித்த காலக்கெடு முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகே சிலிண்டர்கள் வழங்குகின்றனர். இலவச காஸ் இணைப் புதாரர்களுக்கு மூன்று மாதத்திற்கு பிறகே மறு சிலிண்டருக்கு பதிவு செய் யப்படுகிறது.
 
               காஸ் சிலிண்டர் வினியோகத்தில் பெரும்பாலான ஏஜென்சிகள் முறைகேடு செய்வதாகவும், அதன் காரணமாக சிலிண் டர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு  அதிகரித்து வருகிறது. குறிப்பாக வீட்டு உபயோக சிலிண்டர்களை கூடுதல் விலைக்கு ஓட்டல்கள் மற்றும் கார்களுக்கு விற்பனை செய்வதால் தான் தட்டுப் பாடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
            பொதுமக்களின் தொடர் புகார்களைத் தொடர்ந்து "இன்டேன் காஸ்' நிறுவனம் ( இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்) சிலிண்டர் வினியோகத் தில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்த்திட முன் மாதிரியாக "ஸ்டிக்கர்' முறையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி ஒவ்வொரு இணைப்பிற் கும் தனித் தனி நான்கு இலக்க எண் மற்றும் ஏஜென்சியின் பெயர் அடங்கிய "ஸ்டிக் கர்' வழங்கும் முறையை அமல்படுத்தியுள்ளது.
 
            இன்டேன் நிறுவனத்தில் காஸ் இணைப்பு பெற்றவர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள ஏஜென் சிகளில் ரேஷன் கார்டு மற் றும் காஸ் இணைப் பிற் கான "பாஸ் புக்'கை காண் பித்து பதிவு செய்து கொண்டு நான்கு இலக்க எண் கொண்ட 32 ஸ்டிக்கர் பெற்றுக் கொள்ள வேண் டும். அனைத்து ஸ்டிக்கர்களிலும் ஒரே எண் இருக் கும். ஒவ்வொரு இணைப் பிற்கும் வழங்கிய குறியீட்டு எண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு விடும். அதன்பிறகு சிலிண்டர் பதிவு செய்ய வேண்டும். வீட்டிற்கு சிலிண்டர் கொண்டு வருபவரிடம் சிலிண்டரை பெற்றுக் கொண்டு அதற்கான ரசீதில் கையெழுத்து போட்டு, நிறுவனம் கொடுத்த ஸ்டிக்கரில் ஒன்றை அந்த ரசீதியில் ஒட்டி ஒப்படைக்க வேண் டும்.
 
                இதன் மூலம் தினசரி குடோனில் எடுத்துச் செல் லப்படும் சிலிண்டர்கள் ஏற்கனவே பதிவு செய்து காத்திருக்கும் நபர்களுக்கு மட்டுமே வழங்க ஏற்பாடு செய்துள்ளது. மாவட்டத்தில் இன் டேன் நிறுவனம் சார்பில் உள்ள ஏழு ஏஜன்சிகளிலும் இந்த ஸ்டிக்கர் முறை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நுகர்வோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதே முறையை மாவட்டத்தில் உள்ள இந்துஸ் தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவனங்களின் காஸ் ஏஜென்சிகளிலும் அமல்படுத்தினால் சிலிண்டர் வினியோகத்தில் நடைபெறும் முறைகேடுகள் முற்றிலுமாக தடுக்க முடியும். இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பண்ருட்டி கோவில் சீர்கேட்டை கண்டித்து போராட்டம்: இன்று பேச்சுவார்த்தை

பண்ருட்டி : 

           பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் அதிகாரிகள் சீர் கேட்டை கண்டித்து நடைபெறும் போராட்டம் குறித்த பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.
 
           பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் அதிகாரிகளின் நிர்வாக சீர்கேட்டை கண் டித்து இறைபணி மன்றம் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் இன்று (20ம் தேதி)  நடைபெறுவதாக இருந்தது.  இது குறித்து சமாதான பேச்சுவார்த்தை பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று தாசில் தார் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.
 
             இதில் அறநிலையத் துறை சார்பில் கோவில் நிர்வாக அதிகாரி சிவஞானம், கோவில் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட தொழில் வர்த்தக சங்கத் தலைவர் சண்முகம், செயலாளர் வீரப்பன், இந்திய கம்யூ.,  மாவட்ட துணை செயலாளர் சேகர், கோவில் இறை வழிபாடு பணி மன்றத் தலைவர் ராமநாதன், ஆறுமுகம், ஜெயஸ்ரீதர், திருநாவுக்கரசர் உட் பட பலர் பங்கேற்றனர்.
 
              கூட்டத்தில் கோவில் சீர்கேடுகள் குறித்து அறநிலைய உதவி ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றால் மட்டுமே  தீர்வு ஏற்பட முடியும் என தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து மீண்டும் இன்று (20ம் தேதி) மதியம் 12 மணிக்கு உதவி ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Read more »

நெய்வேலி பள்ளி நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்

நெய்வேலி : 

            நெய்வேலி செயின்ட் பால் பள்ளி ஆசிரியருக்கு சார்ஜ் மெமோ வழங்கி பள்ளி முதல்வர் நடவடிக்கை எடுத்ததால் சக ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.
           நெய்வேலி டவுன்ஷிப் பிளாக் 4ல் உள்ள செயின்ட்பால் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசின் 6வது ஊதியக் குழுவின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண் டும் என்பதை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இதன் எதிரொலியாக, ஒரு ஒப் பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதன் அடிப்படையில் புதிய ஊதியம் 6வது ஊதியக் குழுவின் பரிந் துரையின் படி வழங்கப்பட்டது. ஆனால் அகவிலைப் படியில் 7 சதவீதம் குறைத்து வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதத் தில்  அரசு வழங்கிய 8 சதவீத அகவிலைப்படி மற்றும் ஏற்கனவே வழங்கப்பட வேண்டிய 7 சதவீத அகவிலைப் படியையும் சேர்த்து 15 சதவீத அகவிலைப் படியையும் உடனே வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத் தனர்.
             ஆசிரியர்களின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டதால் ஜூலை 22ம் தேதி முதல் தொடர் போராட்ட நடவடிக்கையில் ஈடுபடபோவதாக அறிவித்தனர். இந்நிலையில் சங்க செயலர் வைத்தியலிங்கத்திற்கு பள்ளி முதல்வர் அருள்நாதன் சார்ஜ் மெமோ வழங் கினார்.இதனால் அதிருப்தியடைந்த ஆசிரியர்கள் பள்ளி முதல்வரை கண்டித்து நேற்று காலை முதல் திடீர் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டது.
               இதனால் எல்.கே.ஜி., யு.கே.ஜி., முதல் வகுப்பு போன்ற வகுப்புகளில் படிக்கும் விவரம் தெரியாத வடலூர், விருத்தாசலம், பண்ருட்டி போன்ற வெளியூரை சேர்ந்த குழந்தைகள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். இந்நிலையில் முதல் வகுப்பு மாணவர் கோகுலகிருஷ்ணன் காணாமல் போனதால் ஆத்திரமடைந்த ஒரு சிலர் ஆசிரியைகளை ஆபாசமாக பேசி தாக்க முற்பட்டனர். இதனால், அந்தப் பகுதியில் திடீர் பதட்டம் ஏற்பட்டது.
              இதுகுறித்து, தகவல் அறிந்த டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சேகர், சப் இன்ஸ்பெக்டர் ரேவதி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத் திற்குச் சென்று பள்ளி முதல்வர் அருள்நாதன் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மாணவர் கோகுலகிருஷ்ணன் பள்ளி வளாகத்திற்குள் தனியாக அமர்ந் திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Read more »

காட்டுமன்னார்கோவில் அடுத்த மேலவன்னியூர் பள்ளிக்கு ஒரு லட்சம் வளர்ச்சி நிதி

சிதம்பரம் : 

            காட்டுமன்னார்கோவில் அடுத்த மேலவன்னியூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்காக புதுச்சேரி நவ சக்தி பில்டர்ஸ் உரிமையாளர் ஒரு லட்சம் நிதி வழங்கினார். காட்டுமன்னார்கோவில் அடுத்த மேலவன்னியூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி கட்டடங்கள் பழுதடைந்திருந்தது. பள்ளியை சீரமைக்க கிராமத் தினர் கேட்டுக் கொண்டதன் பேரில் புதுச்சேரி நவ சக்தி பில்டர்ஸ் உரிமையாளர் மணிரத்தினம், அவரது மனைவி உஷா முதல் தவணையாக ஒரு லட்சம் ரூபாய் நிதியை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினர்.

Read more »

போலீஸ் மாநில விளையாட்டுப் போட்டி திருச்சியில் வரும் 26ம் தேதி துவங்குகிறது

கடலூர் : 

              போலீசாருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி வரும் 26ம் தேதி திருச்சியில் துவங்குகிறது.
 
            தமிழக போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களிடையே உள்ள விளையாட்டுத் திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஆண் போலீசாருக்கு  ஹாக்கி, கால்பந்து, ஜிம்னாஸ்டிக், அப்ஸ்டல் (ஓடிச் சென்று சுவர் ஏறுதல்) போட்டிகளும், ஆண் மற்றும் பெண் போலீசார்களுக்கு வாலிபால், கூடைப்பந்து, கைப் பந்து, பூப்பந்து மற்றும் கபடி போட்டிகள் மண்டல அணிகளுக்கு இடையே நடக்கிறது.
 
             இந்தாண்டிற்கான விளையாட்டு போட்டி வரும் 26ம் தேதி முதல் 29ம் தேதிவரை மத்திய மண்டலத்தின் தலைமையிடமான திருச்சியில் நடக்கிறது. இந்த போட்டிகள் மேற்கு, தெற்கு, வடக்கு மற்றும் மத்திய மண்டலங்கள், சென்னை மாநகரம், சென்னை புறநகர், ஆயுதப் படை மற்றும் கமண்டோ ஆகிய அணிகளுக்கு இடையே நடக்கிறது.
 
               இதில் பங்கேற்பதற்காக வடக்கு மண்டலத்தில் உள்ள போலீசார்கள்  பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அதில் ஹாக்கி அணியினர் கடலூரிலும், வாலிபால் அணியினர் திருவண்ணாமலையிலும், கால்பந்து அணியினர் விழுப்புரத்திலும், கூடைப்பந்து, ஜிம்னாஸ் டிக், அப்ஸ்டல் (ஓடிச் சென்று சுவர் ஏறுதல்) வீரர்கள் வேலூரிலும், கைப் பந்து, பூப்பந்து அணியினர் காஞ்சிபுரத்திலும், கபடி அணியினர் திருவள்ளூரிலும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Read more »

சிதம்பரத்தில் பாதாள சாக்கடை குழாய்கள் அடைப்பு சீரமைப்பு

சிதம்பரம் : 

            சிதம்பரத்தில் பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நகராட்சி சார்பில் சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    
               சுற்றுலாத் தலமான சிதம்பரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பே பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப திட்டம் செயல்படுத்தப்பட்டு சுகாதாரம் பேணி காக்கப் பட்டது. ஆனால் மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் முறையான பராமரிப் பின்றி பாதாள சாக்கடைத் திட்டம் முற்றிலுமாக செயலிழந்து விட்டது. நகர வீதிகளில் பாதாள சாக்கடை குழாய்கள் அடைத்துக் கொண்டு "மேன்ஹோல்' வழியாக கழிவுநீர் வெளியேறி சாலைகளில் வழிந்தோடும் நிலை தொடர்கிறது.

             இந்த அடைப்புகளை எடுக்க நகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து "கம்ப்ரஷருடன்' கூடிய வாகனம் வாங்கியும் கூட சமாளிக்க முடியவில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் புதிய பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய் யப் பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மழைக்காலம் நெருங்கி விட்ட நிலையில் நகரம் முழுவதும் கழிவுநீர் ஓடும் நிலை ஏற்பட்டுவிடும் என்பதால் பாதாள சாக்கடை அடைப்புகள் "கம்ப்ரஷர்' வாகனம் மூலம் சரி செய்யப்பட்டுவருகிறது.

Read more »

சிதம்பரம் அடுத்த கிள்ளையில் போலீசார் பற்றாக்குறை: பணிகள் பாதிப்பு

கிள்ளை : 

               சிதம்பரம் அடுத்த கிள்ளை போலீஸ் ஸ்டேஷனில்  போதிய போலீசார் இல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
 
             சிதம்பரம் அடுத்த கிள்ளை போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடற்கரையோரம் இப்பகுதி இருப்பதால்  இயற்கை இடர்பாடு உள்ளிட்ட அவசர பணிகளுக்கு விரைந்து செல்ல முடியாமல் போலீசார் திணறினர்.
 
             இதனால் கடந்த 2008ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது மாவட்ட நிர்வாகத்தால் ஜீப் வழங்கப்பட்டது. தற்போது கிள்ளை போலீஸ் ஸ்டேஷனில் போதிய போலீசார் இல்லாமல் புகார் மனுக்களை பெற முடியாமலும், அவசர காலத்திற்கு ஜீப்பில் செல்ல டிரைவர் இல்லாததால் போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்தவர்களைக் கொண்டு இயக்கும் நிலை உள்ளது. அத்துடன் அடிக்கடி ஜீப் பழுதடைந்து விடுவதால் இரவு நேரத்தில் வெளியில் எடுத்து செல்ல முடியாமல் பணியில் இருக்கும் சொற்ப அளவிலான போலீசாரும் தவித்து வருகின்றனர்.

Read more »

கடலூரில் நூலகர் இல்லாததால் பூட்டிக் கிடக்குது நூலகம்

கடலூர் : 

          கடலூரில் நூலகர் மருத்துவ விடுப்பில் சென்று விட்டதால் கடந்த 6 நாட்ளாக பூட்டிக் கிடப்பதால் வாசகர்கள் கவலையடைந்துள்ளனர்.
 
           கடலூர் புதுப்பாளையத்தில் தங்கராஜ் நூற்றாண்டு நினைவு நூலகம் இயங்கி வருகிறது. கடலூர் நகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த நூலகத்திற்கு தினசரி 200க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்கின்றனர். புதன் கிழமை வார விடுமுறையாகும். இங்கு பணியாற்றிய வந்த நூலகர் சேகர் உடல் நிலைக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக கடந்த 14ம் தேதி முதல் மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். அவருக்கு பதிலாக நகராட்சி நிர்வாகம் வேறு நூலகர்களை இங்கு நியமிக்காததால் கடந்த 14ம் தேதி முதல் நூலகம் பூட்டியே கிடக்கிறது.
 
                இதனால் நூலகத்திற்கு அன்றாடம் வரும் வாசகர்கள் பெருத்த ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர். மருத்துவ விடுப்பில் சென்றுள்ள நூலகர் மீண்டும் பணிக்கு வரும் வரை தற்காலிகமாக வேறு நூலகர்களை நியமித்து, நூலகத்தை திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

அண்ணாகிராமம் ஒன்றியத்திற்கு வறட்சி நிதி கிடைக்கவில்லை : ஒன்றிய கூட்டத்தில் வருத்தம்

பண்ருட்டி : 

          அண்ணாகிராமத்திற்கு மட்டும் வறட்சி நிதி கிடைக்கவில்லை என ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் துணை சேர்மன் பேசினார்.
 
              அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் இயல்புகூட்டம்  நடந்தது. சேர்மன் கவுரி தலைமை தாங்கினார்.  பி.டி.ஓ.,க்கள் தமிழரசி, மனோகரன், ஒன்றிய துணை சேர்மன் சம்மந்தம் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

அன்பழகன் (அ.தி.மு.க.,): 

             ஒவ்வொரு ஊராட்சிக்கும் அமரர் ஊர்தி வண்டி வழங்குவது கிடப்பில் உள்ளது.
 
பி.டி.ஓ., மனோகரன்: 

             42 ஊராட்சிக்கும் வண்டி வாங்குவதற்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. முடிந்தவுடன் அனுமதி பெற்று வாங் கப்படும்.
 
வீரமணி (அ.தி.மு.க.,): 

            பூண்டி ஏரிப் பகுதியில் இருந்து கள்ளிப் பட்டு குச்சிப்பாளையம் வரையிலான சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை சீரமைக்கப்படாமல் அப்படியே உள்ளது.
 
துணை சேர்மன் சம்மந்தம்: 

              மாவட்டத்தில் எல்லா ஒன்றியத்திற்கும் வறட்சி நிதி உள்ளது. ஆனால் அண்ணாகிராம ஒன்றியத்திற்கு மட்டும்  நிதி கிடைக்கவில்லை. கூட்ட அரங்கில் மைக் வசதி ஏற்படுத்தித்  தரவேண்டும்.
 
சிவகாமி (அ.தி.மு.க.,): 

            ஏ.பி.குப்பம் பகுதியில் குடிநீர் போர் வெல் இல்லாமல் குடிநீருக்கு பொதுமக்கள் அல்லாடி வருகின்றனர்.
 
பி.டி.ஓ., தமிழரசி: 

                 போர்வெல் போட பணிகள் துவங்கப்பட உள்ளது. இவ்வாறு கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம் நடந்தது. கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் சந்திராசு, தோட்டக்கலை உதவி அலுவலர் ராமசந்திரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Read more »

பண்ருட்டி அருகே கோஷ்டி மோதல்: 19 பேர் மீது வழக்கு

பண்ருட்டி : 

             கோஷ்டி மோதலில் 19 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்தனர்.
 
                  பண்ருட்டி அடுத்த ப.புதூர் பகுதியைச் சேர்ந் தவர் செல்வம். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய்காந்தி கடந்த 10 நாட் களுக்கு முன் மினி வேன் வாடகைக்கு எடுத்துச் சென்றார். அதற்கான பணத்தை நேற்று முன்தினம் செல்வத்திடம் கொடுக்கும் போது வாடகை அதிகமாக இருப்பதாக கூறினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த லட்சுமணன், செல்வத் திற்கு  ஆதரவாக பேசியதால்  இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில் லட்சுமணன், சிவபெருமான் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். குறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் 19 பேர் மீது வழக்குப் பதிந்து சஞ்சய்காந்தி (33) தவபாலன் (33) ஆகியோரை கைது செய்தனர்.

Read more »

கடலூர் மத்திய சிறையில் கைதியிடம் சிம் கார்டு பறிமுதல்

கடலூர் : 
 
           கடலூர் மத்திய சிறையில், நெய்வேலி கோர்ட்டிற்கு சென்று திரும்பிய கைதியிடமிருந்து இரண்டு சிம் கார்டுகளை, சிறை போலீசார் கைப்பற்றினர்.

              நெய்வேலி அடுத்த தென்புதூர் வானதிராயபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஆனந் தன்(28). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்காக ஆனந்தனை, கடலூர் மத்திய சிறையிலிருந்து போலீசார் நெய்வேலி கோர்ட்டிற்கு அழைத்துச் சென்றனர். விசாரணை முடித்து ஆனந்தனை இரவு மீண்டும் சிறையில் ஒப்படைத்தனர்.
 
              அப்போது, சிறை நுழைவாயிலிலிருந்த சிறைத் துறை போலீசார், ஆனந்தனை சோதனை செய்தபோது அவர் மறைத்து வைத்திருந்த இரண்டு சிம் கார்டுகளை கைப்பற்றினர். இது குறித்து கடலூர் மத்திய சிறை அலுவலர் வேணுகோபால் (பொறுப்பு) கொடுத்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior