டிச 02 , விருத்தாசலம்,:
புழுதி நகரமாக மாறி வரும் விருத்தாசலத்தில் சீரமைப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளவேண்டும் என நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலத்தில் புகழ் பெற்ற விருத்தகிரீஸ்வரர், கொளஞ்சியப்பர் ஆகிய கோயில் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என எப் பொதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நகரமாக விருத்தாசலம் உள்ளது.
இந்த நகரில் உள்ள 33 வார்டுகளில் சுமார் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகரில் உள்ள அனைத்து சாலைகளின் ஓரங்களில் மண் மேடுகள் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்லும் போது புழுதி பறந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது.
தற்போது சமீபத்தில் பெய்த கடும் மழை காரணமாக சாலை கள் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இந்த சாலையில் நெடுஞ்சாலை துறையினர் செம்மண் அடித்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாகவும் வெயில் காலங்களில் புழுதி ஏற் பட்டு, புழுதி நகரமாகவே விருத்தாசலம் மாறிவிட்டது.
இருசக்கர வாகனத்தில் செல்வோர், நடந்து செல்வோர் நிலை மிகவும் பரிதாபமாக உள் ளது. புழுதியால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. நகரில் கழிவு நீர் கால்வாய்கள் சரி வர பராமரிக்கப்படாததால், முக்கிய இடங்களில் சாலையில் கழிவு நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடி குடிநீரில் கலந்து வாந்தி பேதி, மலேரியா, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களை ஏற்படுத்தி வருகிறது.
கழிவுநீரால் கொசு உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது. நகரின் அனைத்து பகுதிகளிலும் நகராட்சி குப்பைகள் அகற்றப்படாததால் குப்பைகள் குவியல், குவியலாக உள்ளது. இதில் பன்றிகள் குடித்தனம் நடத்தி நோயை பரப்பிவருகிறது.
நகரின் முக்கிய இடமான பேருந்து நிலையம், பாலக்கரை, கடை வீதி, ஜங்ஷன் ரோடு, கடலூர் ரோடு, சிதம்பரம் ரோடு, பெண்ணாடம் ரோடு, சேலம் ரோடு ஆகிய இடங்களில் மின் விளக்குகள் சரி வர எரியாமல் இருண்டு உள்ளதால் பொது மக்கள் நடமாடவே பயப்படும் நிலை உள்ளது. முக்கிய இடங்களே இப்படி என்றால் புறநகர் பகுதிகள் சொல்லவே வேண்டாம். மின் விளக்குகள் சரி வர எரியாததால் நகரில் திருட்டு, சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளது. இது குறித்து ஐந்தாம் தூண் அமைப்பின் மாவட்ட செயலாளர் சந்தானமூர்த்தி கூறுகையில், நகராட்சி நிர்வாகம் போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுத்து அழகான சுகாதாரமான நகராக மாற்றவேண்டும் .
அடிப்படை வசதிகளை நிறைவேற்றகோரி இன்னும் சில தினங்களில் நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
Read more »