உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 29, 2011

கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் வாக்காளர் சீட்டு

கடலூர்:

               ஏப்ரல் 1-ம் தேதி முதல் வாக்காளர் சீட்டு வழங்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.சீதாராமன் தெரிவித்தார். 

 ஞாயிற்றுக்கிழமை ஆட்சியர் கூறியது:  

                அனைத்து வாக்குச் சாவடிகளுக்கு முன்பும் சிறிய பந்தல் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. வெயிலில் மக்கள் களைத்துப் போகாமல் இருக்க ஓரல் டிஹைட்ரேஷன் பவுடர் கலக்கிக் கொடுப்பதற்கு வசதியாக, அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், ஓரல் டிஹைட்ரேஷன் பவுடர் பொட்டலங்கள் வழங்கப்படும்.  வாக்குச் சாவடிகளில் உள்ள கேமரா, மின்இணைப்பு போன்றவற்றில் ஏற்படும் பழுதுகளை நீக்க ஊராட்சி ஒன்றிய வாரிய  தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. 

                    தேர்தல் அலுவலர் 17 ஏ பதிவுப் புத்தகத்தை பராமரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்ய 49ஓ வசதி இருக்கும்.  வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் சீட்டு வைத்து இருப்போர் மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்காளர் சீட்டு 1-4-2011 முதல் வழங்கப்படும்.  ஞாயிற்றுக்கிழமை பயிற்சிக்கு வரும் தேர்தல் பணியாளர்களைத் தெரிந்து கொண்டு, 28-3-2011 அன்று, கணினிக் குலுக்கல் மூலம் தேர்தல் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். வாக்குச் சாவடிகளில் 1000க்கு மேல் வாக்காளர்கள் கூடாது என்பதற்காக, தேர்தல் ஆணையத்திடம் கூடுதலாக 50 வாக்குச்சாவடிகள் கேட்டுப் பெற்றுள்ளோம் என்றார் ஆட்சியர்.  

Read more »

பரங்கிப்பேட்டை அருகே மகளிர் தின விழாவில் பணம் பட்டுவாடா அதிகாரிகள் விசாரணையால் பரபரப்பு






பரங்கிப்பேட்டை : 

           பரங்கிப்பேட்டை அருகே, மகளிர் தின விழாவில் பணம் மற்றும் பொருட்கள் பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

                 கடலூர் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு மற்றும் புதுச்சேரி பலநோக்கு சமூக சேவா சங்கம் சார்பில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கடலூர், பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, கம்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 250க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்படுவதாக, சிதம்பரம் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அதிகாரிகள் திருநாவுக்கரசு, துரைசாமி, சந்திரகாசன், ரோசாரி ஆகியோர் விழா நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். 

                 மேலும் ஒவ்வொரு அறைக்கும் சென்று சோதனை செய்தனர். பணம் மற்றும் பொருள் பட்டுவாடா எதுவும் நடக்காததால் புரளி என்பது தெரியவந்தது. இந்த திடீர் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வேட்பாளர்களின் மனு பரிசீலனை 27 பேரின் மனுக்கள் தள்ளுபடி

கடலூர் : 

               கடலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த வேட்பாளர்களின் மனு பரிசீலனையில் 27 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தல் வரும் 13ம் தேதி நடக்கிறது. இதற்காக கடந்த 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடந்த மனுத் தாக்கலில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 117 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நேற்று அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்கள், பார்வையாளர்கள் முன்னிலையில் பரிசீலனை நடந்தது.

                  இதில் கடலூரில் அ.தி.முக., மாற்று குமரன், குறிஞ்சிப்பாடியில் தி.மு.க., மாற்று ராமலிங்கம், அ.தி.மு.க., மாற்று பழனிசாமி, லோக் ஜனசக்தி ராதாகிருஷ்ணன், பண்ருட்டியில் தி.மு.க., மாற்று அங்கயற்கண்ணி, தே.மு.தி.க., மாற்று அறிவொளி, திட்டக்குடி(தனி) யில் ஜார்கண்ட்முக்தி மோட்சா இளங்கோவன், சுயேட்சை செல்வம் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

                  காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் நளினி, புவனகிரியில் பா.ம.க., மாற்று ராஜேந்திரன், அ.தி.மு.க., மாற்று இளஞ்செழியன், சுயேச்சைகள் அன்பழகன், ஆளவந்தார், விருத்தாசலம் தொகுதியில் காங்., மாற்று இளையராஜா, தே.மு.தி.க., மாற்று நித்யா, ராஷ்டீரிய ஜனதாளம் சக்திவேல், சுயேச்சைகள் தாராசிங், கலைமன்னன், பெரியசாமி, சிதம்பரம் தொகுதியில் ஜார்கண்ட் முக்திமோட்சா கோவிந்தசாமி, ராஷ்டீரிய ஜனதாதளம் சண்முகம், சுயேச்சைகள் ஜெயக்குமார், கவிதா, சண்முகம், நெய்வேலி தொகுதியில் பா.ம.க., மாற்று காயத்ரி, அ.தி.மு.க., மாற்று சுமதி ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. \ நெய்வேலி சுயேச்சை பாண்டியனின் மனு மீண்டும் இன்று பரிசீலனை செய்யப்படுகிறது.

கடலூரில் 7, 
பண்ருட்டி 11, 
குறிஞ்சிப்பாடி 5, 
நெய்வேலி 8, 
விருத்தாசலம் 9,
திட்டக்குடி 11, 
புவனகிரி 17, 
சிதம்பரம் 12, 
காட்டுமன்னார்கோவில் (தனி) 9 

என மொத்தம் 89 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு துவங்கியது 33,669 பேர் பங்கேற்பு

கடலூர் :

             நேற்று துவங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 669 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று (28ம் தேதி) முதல் துவங்கி வரும் ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்கிறது.

           கடலூர் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 669 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். அதன்படி கடலூர் கல்வி மாவட்டத்தில் 63 மையங்களில் 9,829 மாணவர்களும், 10 ஆயிரத்து 838 மாணவிகளும் மொத்தம் 20 ஆயிரத்து 667 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதில் 1,009 மாணவிகள் மாணவர்களை விட கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர்.

             விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 34 மையங்களில் 5,654 மாணவர்களும், 5,058 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். மேலும் 2,290 பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதுகின்றனர்.கடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்ட அதிகாரிகள் தலைமையிலும், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் தலைமையிலும் தலா மூன்று பேர் கொண்ட 20 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளை கண்காணித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior