உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 22, 2010

சிதம்பரத்தில் குருப்பெயர்ச்சி மகா யாகம்


வீரபத்திரசாமி கோயில் தெரு ஆரோக்கிய வித்தியாலயாவில் நடைபெற்ற பொதுதீட்சிதர்கள் பங்கேற்ற குருப்பெயர்ச்சி யாகம்.
 
சிதம்பரம்:

            சிதம்பரம் வீரபத்திரசாமி கோயில் தெருவில் உள்ள ஆரோக்கிய வித்தியாலயா வளாகத்தில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு மகா யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

              ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15 மணிக்கு குருபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு செல்கிறார். இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ஸ்ரீசுபஜாதகாலயா சார்பில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மகாயாகம் நடைபெற்றது. உ.வே.வெங்கடேச தீட்சிதர் தலைமையில் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் பங்கேற்று யாகத்தை நடத்தினர்.

                 இந்நிகழ்ச்சியில் மௌன மடாதிபதி சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஜோதிடர் எஸ்.மோகன்பிள்ளை, அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லுரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.விஸ்வநாதன், டி.கே.விஜய்காந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். யாகம் முடிந்த பின்னர் நடைபெற்ற கூட்டுப் பிராத்தனை நிகழ்ச்சியில் பாதிப்படையும் ராசி மற்றும் நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று சங்கல்பம் செய்து கொண்டனர்.

Read more »

நெய்வேலியில் இருந்து புதுச்சேரிக்கு கடத்திய 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கடத்தப்பட்ட அரிசி மூட்டைகளை பார்வையிடும் வருவாய் துறையினர் மற்றும் போலீஸார்.
 
பண்ருட்டி:

                நெய்வேலியில் இருந்து புதுச்சேரிக்கு கடத்தப்பட்ட 12 டன் ரேஷன் அரிசி ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

              நெய்வேலியில் இருந்து லாரியில் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீத்தாராமன், வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் அளித்த தகவலின் பேரில் பண்ருட்டி டி.எஸ்.பி. ஆர்.பிரசன்னகுமார், வட்டாட்சியர் பி.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பண்ருட்டி லட்சுமி விலாஸ் வங்கி அருகே வந்த லாரியை ஆய்வு செய்ததில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரிய வந்தது. 

                   இதனைத் தொடர்ந்து செஞ்சி வட்டம் ஏகாநெமிலி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தியதில் நெய்வேலியில் இருந்து புதுச்சேரிக்கு செல்வதாக கூறியுள்ளார்.பறிமுதல் செய்யப்பட்ட லாரி மற்றும் அரிசியை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Read more »

கடலூர் வடிகால்களில் அடைப்பு: 30 நகர்களுக்கு வெள்ளப் பாதிப்பு


மழைநீருடன் சாக்கடை நீரும் வழிந்தோட வாய்ப்பு இல்லாதவாறு அடைபட்டுக் கிடக்கும், கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் உள்ள வடிகால் வாய்க்கால் பாலம்.
 
கடலூர் : 

                 கடலூரில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அடைபட்டுக் கிடப்பதால், 30-க்கும் மேற்பட்ட நகர்களுக்கு மழையினால் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

                   கடலூர் அருகே திருவந்திபுரம் அணையில் இருந்து சின்ன வாய்க்கால், பெரிய வாய்க்கால் என்று இரு வாய்க்கால்கள் உள்ளன. இவை கடலூர் நகராட்சி வழியாக ஓடி, கெடிலம் ஆற்றில் கலக்கின்றன. நகரின் பிரதான வடிகால் வாய்க்கால்களாகவும் இவை உள்ளன.40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த வாய்க்கால்கள் இரண்டும், 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்குப் பாசன வாய்க்கால்களாக இருந்தன. காலப்போக்கில் இந்த விளை நிலங்கள் எல்லாம், லே-அவுட்களாக மாறி, ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுவிட்டன.

                 நிலங்கள் வீடுகளாக மாறினாலும் வாய்க்கால்கள் அடைபடாமலும் ஆக்கிரமிக்கப்படாமலும் இருந்தால், செüடாம்பிகை நகர், எஸ்.எஸ்.ஆர். நகர், சரவணன் நகர், பி.டி.கார்டன் நகர், தானம் நகர், ராமநாதன் நகர் உள்ளிட்ட  30க்கும் மேற்பட்ட நகர்களுக்கு வடிகால்களாக பயன்பட்டு இருக்கும். ஆனால் இந்த இரு வாய்க்கால்களும் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டும், பராமரிப்பு இன்றி அடைபட்டு குறுகலாகவும் மாறிவிட்டன.

                 5 ஆண்டுகளுக்கு முன், மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து | 20 லட்சம் ஒதுக்கியும், பணிகள் முழுமை அடையவில்லை. மேலும் சின்ன வாய்க்கால் செல்லும் பகுதிகளில் வாய்க்கால் பாலங்கள் பலவற்றை, நகராட்சி முறையாக பராமரிக்காததால் அடைபட்டுக் கிடக்கின்றன. வண்டிப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள பிரதான பாலம், அண்மையில் பாதாளச் சாக்கடைக்காக தோண்டப்பட்டபோது சிதைந்து விட்டது. ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதை சீரமைக்காமல் அப்படியேமூடி, சாலையைப் போட்டுவிட்டது. 

                  இதனால் அதன் வழியாக வெள்ளம் வடிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.வண்டிப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள பாலம் பராமரிப்பு இன்றி தூர்ந்து, வெள்ளம் வடிவது தடைபட்டுக் கிடக்கிறது. இதே சாலையில் உள்ள மேலும் பல சிறிய பாலங்கள் அடைபட்டு வெள்ள நீர் வடியமுடியாத நிலை உருவாகி இருக்கிறது. இதனால் வண்டிப்பாளையம் சாலைக்கு மேற்கில் உள்ள, 30-க்கும் மேற்பட்ட நகர்களில் மழை வெள்ளம் வடியாமல் தேங்கத் தொடங்கி உள்ளது. ஏற்கெனவே 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

                தொடர்ந்து மழை பெய்தால், இந்த நகர்களில் வசிப்போர், வீடுகளைவிட்டு  வெளியே வரமுடியாத நிலை ஏற்படும் என்று, கடலூர் அனைத்து நகர குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன் அச்சம் தெரிவித்தார்.

துகுறித்து நகராட்சித் தலைவர் து.தங்கராசு கூறியது

                      பாலங்கள், வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Read more »

கடலூர் அருகே வாலிபர் சங்கத்தினர் நடத்திய சாலையில் நாற்று நடும் போராட்டம்


சுத்துக்குளம் கிராமத்தில் சீரமைக்கப்படாத சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாய் கிடப்பதைக் கண்டித்து நாற்று நடும் போராட்டம் நடத்தும், இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தினர்
 
கடலூர்:
 
           இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கடலூர் அருகே பாலம் கட்டாததால், சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நீரில் மீன் பிடித்தும், சீரமைக்காததால் சேறும் சகதியுமாக மாறிய சாலையில் நாற்று நட்டும் போராட்டங்கள் நடத்தி தங்களின் எதிர்ப்பை ஞாயிற்றுக்கிழமை வெளிப்படுத்தினர்.
 
                 கடலூரை அடுத்த சுத்துக்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட மேட்டுத்தெரு, புதுத்தெரு பிரதானச் சாலையை சீரமைக்க வேண்டும். நாரை குளத்தில் இருந்து வெளியேறும் நீரால் போக்கு வரத்து பாதிப்பைத் தடுக்க, தரைப்பாலம் கட்ட வேண்டும். முதுநகர் ரயில்வே கேட் அருகே பெரியார் நகரில் தரைப்பாலம் கட்ட வேண்டும். சான்றோர் பாளையம் பகுதியில் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளங்களைச் சரி செய்ய வேண்டும். 
 
               பீமாராவ் நகர் பகுதியில் தெருக்களைச் சீரமைக்க வேண்டும். மணக்குப்பத்தில் சிமெண்ட் சாலைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவர்கள் பழுதடைந்து சேறும் சகதியுமாக உள்ள சுத்துக்குளம் சாலையில் நாற்று நட்டும், மணக்குப்பம் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நீரில் மீன் பிடித்தும் போராட்டம் நடத்தினர்.
 
                     போராட்டங்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் ஏ.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சி.மணிவண்ணன், சுரேஷ், ஜீவரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன் சிறப்புரை நிகழ்த்தினார். நிர்வாகிகள் நேதாஜி, சிவானந்தம், வேல்முருகன், பி.தனுசு, காமராஜ், சந்திரசேகர், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

கலைஞர் காப்பீடுத் திட்டத்தில் கடலூர் அரசு மருத்துவமையில் அறுவை சிகிச்சை

கடலூர்:

              கலைஞர் காப்பீடுத் திட்டத்தில் கடலூர் அரசு மருத்துவமனையிலும் அண்மைக்காலமாக அறுவை சிகிச்சை நடந்து வருவதாக, மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் பா.கமலக்கண்ணன் தெரிவித்தார்.

              லைஞர் காப்பீடுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில்தான் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் தனியார் மருத்துவமனைகளையே நாடிச் செல்கின்றனர். இந்நிலையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் கடலூர் அரசு மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன.

இது குறித்து மருத்துவத் துறை இணை இயக்குநர் பா.கமலக்கண்ணன் சனிக்கிழமை கூறியது:

                 கலைஞர் காப்பீடுத் திட்டத்தில் கடந்த 14-ம் தேதி விழுப்புரத்தைச் சேர்ந்த குருபாகரனுக்கு (38), இணை இயக்குநர் டாக்டர் கமலக்கண்ணன் தலைமையில், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் விஜய்ஆனந்த் தம்பையா அறுவை சிகிச்சை செய்தார். கடலூர் அரசு மருத்துவமனையில் கலைஞர் காப்பீடுத் திட்டத்தில் எலும்பு முறிவு சிகிச்சை மட்டுமன்றி, கருப்பை அகற்றுதல், கண்ணில் உயர் நீரழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

Read more »

விருத்தாசலம் மணிமுத்தாறு ஆற்றில் வெள்ளம் கரையோரத்தில் வசிப்போர் அச்சம்



விருத்தாசலம் : 

                விருத்தாசலம் மணிமுத்தாறு ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளதால் வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பருவ மழையால் கடந்த இரு தினங்களாக விருத்தாசலம் பகுதியில் இரவு, பகல் என தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களின் மழைநீர் மணிமுக்தா ஆற்றில் ஓடத் துவங்கியது.

                 இந்நிலையில், கோமுகி அணையில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்படுவதால், விருத்தாசலம் மணிமுத்தாறு ஆற்றில் நேற்று காலை முதல், படிப்படியாக வெள்ளம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. தொடர்ந்து வெள்ளம் அதிகரித்து பாலத்தை தொடும் அளவிற்கு ஓடினால் ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளில் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Read more »

குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள செங்கால் ஓடையில் உடைப்பு : 350 ஏக்கர் பயிர்கள் மூழ்கின




குறிஞ்சிப்பாடி : 

             கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள செங்கால் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு, அயன்குறிஞ்சிப்பாடி, ரெட்டிபாளையம் பகுதியில் 350 ஏக்கர் நெல் மற்றும் கரும்பு பயிர்கள் நீரில் மூழ்கின. தமிழகத்தில் பருவ மழையால் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

              இதனால், இப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. நெய்வேலி சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மற்றும் மழை நீர் கன்னியாகோவில் ஓடை மற்றும் செங்கால் ஓடை வழியாக பரவனாற்றில் கலக்கிறது. ரெட்டிபாளையம் பகுதியில் செங்கால் ஓடையின் அணை பகுதி தாழ்வாகவும், பலவீனமாகவும் இருந்ததால், நேற்று முன்தினம் இரவு உடைப்பு ஏற்பட்டது. இதனால், அயன்குறிஞ்சிப்பாடி, ரெட்டிபாளையம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள 300 ஏக்கர் நெற்பயிர் மற்றும் 50 ஏக்கர் கரும்பு பயிர் முழுவதையும் தண்ணீர் சூழ்ந்தது.

                        மேலும், வயல்வெளி வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மண் அரிப்பு ஏற்பட்டு, 350 ஏக்கரில் இனி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Read more »

சிதம்பரம் பகுதியில் 10 ஏக்கர் பூச்செடிகள் அழுகும் அபாயம் : முன்பணம் பெற்ற விவசாயிகள் கவலை

கிள்ளை : 

               சிதம்பரம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், 10 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டுள்ள பூச்செடிகள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.முட்லூர், மண்டபம், அம்புபூட்டியப்பாளையம், கீழ்அனுவம்பட்டு, மேல்அனுவம்பட்டு, சாலக்கரை, ரயிலடி சுற்றுப்பகுதியில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தங்கள் வயல்களில் பூந்தோட்டம் அமைத்துள்ளனர். இதில் கனகாம்பரம், குண்டுமல்லி, அரும்பு, சாமந்தி, காக்கட்டான் உள்ளிட்ட மலர் வகைகளை சாகுபடி செய்கின்றனர்.

                  இப்பகுதியில் உற்பத்தியாகும் பூக்களை கடலூர், புதுச்சேரி, நெய்வேலி, வடலூர், விழுப்புரம் பகுதியில் உள்ள வியாபாரிகள் பதியம் போடும் முன்னரே முன்பணம் செலுத்தி, சீசன் நேரத்தில் பூக்களை கொள்முதல் செய்து கொள்வது வழக்கம். இதனால், விவசாயிகள் ஆர்வத்துடன் மலர் உற்பத்தி செய்து வருகின்றனர். வியாபாரிகளும் போட்டி போட்டு முன்பணம் கொடுத்தனர். தற்போது சி.முட்லூர் சுற்றுப்பகுதி கிராமங்களில், 10 ஏக்கருக்கும் மேல் மலர் உற்பத்தி செய்துள்ள நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் மழையால் பூந்தோட்டங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன. இதனால், செடிகள் அழுகும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Read more »

பெண்ணையாற்றில் மணல் குவாரி பள்ளத்தில் மூழ்கி இரண்டு சிறுமியர் பலி

நெல்லிக்குப்பம் : 

            மேல்பட்டாம்பாக்கம் பெண்ணையாற்றில், மணல் எடுத்த பள்ளத்தில் சிக்கி இரண்டு சிறுமியர் பரிதாபமாக இறந்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் ரெட்டியார் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஜூனைத். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஷரிஜ் பாத்திமா (14). அதே தெருவைச் சேர்ந்த ஜாகீர் உசேன் மகள் ஜீனத் பசிரியா (14).

                 இருவரும், கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று விடுமுறை என்பதால், இருவரது குடும்பத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் மதிய உணவு எடுத்துக் கொண்டு மேல்பட்டாம்பாக்கம் பெண்ணையாற்றுக்குச் சென்று குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஷரிஜ் பாத்திமா, ஜீனத் பசிரியா இருவரும் மணல் எடுத்த பள்ளத்தில் சிக்கினர். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காப்பாற்றுவதற்குள் சிறுமியர் இருவரும் இறந்தனர். இறந்த சிறுமியரின் பெற்றோர் வழக்கு வேண்டாமெனக் கூறி உடல்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். ஒரே தெருவில் இரண்டு சிறுமியர் இறந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

                 கடந்த வாரம் ஆற்றின் தென்கரையில் ஒருவர், வடகரையில் இரண்டு பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். நேற்று இறந்த இரண்டு மாணவியரைச் சேர்த்து ஒரே வாரத்தில் அதே இடத்தில் ஐந்து பேர் ஆற்றில் மணல் எடுத்த பள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்.

Read more »

கடலூர் மாவட்ட ஏரிகளில் உபரி நீர் வெளியேற்றம்

சிதம்பரம் : 

              பருவமழை தீவிரமடைந்து வருவதால் வீராணம் உட்பட கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. 

               கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகள், குளங்கள், ஏரிகள் மழை நீரால் நிரம்பி வருகிறது. வீராணம் ஏரியில் மழை துவங்கியதையடுத்து ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில் 978.20 மில்லியன் கன அடி தொடர்ந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. செங்கால் ஓடை, பாப்பாக்குடி, கருணாகரநல்லூர் வாய்க்கால்கள் மூலம் ஏரிக்கு வரும் 500 கன அடி தண்ணீர் அதே அளவில் வெளியேற்றப்படுகிறது.

                  மேலும் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்  வாலாஜா ஏரியில் இருந்து பரவனாறு வழியாக 3,600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருமாள் ஏரியில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து வெள்ளாற்றில் 4,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு 74 கன அடியும், சேத்தியாத்தோப்பு வெள்ளாற்று வடி கால் மூலம் 350 கன அடியும் வெளியேற்றப்படுகிறது.

Read more »

வடலூர் எஸ்.டி. ஈடன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

குறிஞ்சிப்பாடி : 

               வடலூர் எஸ்.டி. ஈடன் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. எஸ்.டி. ஈடன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த  அறிவியல் கண்காட்சியை பெத்தநாயக்கன்குப்பம் எஸ்.ஐ.எல். நிறுவன மேலாளர் ரவிக்குமார் திறந்து வைத்தார். 

                பள்ளியில் 5 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பல்வேறு அரங்கங் கள் அமைத்து இருந்தனர். இதில் பறக்கும் வானூர்தி, தொலைத் தொடர்பு சாதன மாதிரிகள், சோப்பால் செய்யப்பட்ட புத்தர், பிள்ளையார், ரோஜாப்பூக்கள், இடம் பெற்றிருந்தது. மேலும் சொட்டு நீர் பாசனம், ஓசோன் எவ் வாறு மாசுபடுதல், அனல் மின் நிலைய மாதிரி, வெடிக்கும் எரிமலை என மாணவர்களின் அறிவியல் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. 

                கண்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடந்தப்பட்ட ஓவியப் போட்டி, கையெழுத்து போட்டி, கட்டுரை போட்டி, புதுக்கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாண விகளுக்கு பள்ளி முதல்வர் தாமஸ் பரிசுகளை வழங்கி பாராட் டினார்.

Read more »

கடலூர் வழியாக இன்று முதல்18 சிறப்பு ரயில்கள்

கடலூர் : 

                சென்னையில் இருந்து கடலூர் வழியாக ராமேஸ்வரம், திருநெல்வேலி, செங்கோட்டைக்கு இன்று முதல் மழைக்கால சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. 

              சென்னை எழும்பூரில் இருந்து கடலூர் வழியாக தற்போது திருச்சி, வாரணாசி - ராமேஸ்வரம்,  புவனேஸ்வர் - ராமேஸ்வரம், எழும்பூர் - ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. தற்போது கடலூர் வழியாக இன்று முதல் 18 புதிய மழைக்கால சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. இன்று காலை 6.30 மணிக்கு எழும்பூரில் (எண் 6011)  புறப்பட்டு, திருப்பாதிரிப்புலியூரில் 10.10க்கு வந்து சேரும். 23ம் தேதி காலை 8 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். 23ம் தேதி மாலை 6.15 மணிக்கு ராமேஸ்வரத்தில் (6012) புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு 24ம் தேதி காலை 4.10 மணிக்கும், எழும்பூருக்கு 8.50 மணிக்கு சேரும்.

                  எழும்பூரில் (6009) 24ம் தேதி மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு 6.35 மணிக்கும், ராமேஸ்வரத்திற்கு மறுநாள் காலை 5 மணிக்கு சேரும். ராமேஸ்வரத்திலிருந்து 25ம் தேதி (6010) மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் திருப்பாதிரிப்புலியூருக்கு காலை 4.10க்கும், எழும்பூருக்கு 8.50க்கு சேரும். சென்னை எழும்பூரில் (6101) 29ம் தேதி மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு, திருப்பாதிரிப்புலியூருக்கு இரவு 10.05 மணிக்கும், மறுநாள் காலை 8 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். 

                  ராமேஸ்வரத்திலிருந்து (6102) 30ம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு காலை 4.10மணிக்கும், சென்னை எழும்பூருக்கு 8.30  சென்றடையும். சென்னையில் இருந்து  (6103) 1.12.2010 ம் தேதி மாலை 3.10க்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு மாலை 6.35 மணிக்கும், மறுநாள் காலை 5.20 மணிக்கு ரமேஸ்வரம் சென்றடையும்.

                    ராமேஸ்வரத்தில் (6104) 2ம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, திருப்பாதிரிப்புலியூருக்கு காலை 4.10 மணிக்கும், எழும்பூருக்கு 8.50மணிக்கும் சென்றடையும். மறுநாள் 3ம் தேதி (6105) அங்கிருந்து இரவு 11.30மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு 3.55 மணிக்கும், ராமேஸ்வரத்திற்கு இரவு 2 மணிக்கும் போய்ச்சேரும். ராமேஸ்வரத்திலிருந்து 4ம் தேதி இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் திருப்பாதிரிப்புலியூருக்கு 4.45 மணிக்கும் சென்னைக்கு காலை 10 மணிக்கும் சேரும். மறுநாள் 5ம் தேதி அங்கிருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு இரவு 11.40 மணிக்கும், மறுநாள் காலை 9.05 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

                   ராமேஸ்வரத்தில் இருந்து 6ம் தேதி (6108) இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு மறுநாள் காலை 4.45 மணிக்கும், சென்னைக்கு 10 மணிக்கும் சேரும். 

செங்கோட்டை விரைவு ரயில்: 

                 வரும் 29ம் தேதி முதல் எழும்பூரிலிருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு 6.35 மணிக்கும், செங்கோட்டைக்கு மறுநாள் காலை 6.15 மணிக்கு சேரும். அங்கிருந்து 30ம் தேதி செங்கோட்டையில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூரில் மறுநாள் காலை 3.55 மணிக்கும், சென்னைக்கு 8.50மணிக்கும் சேரும்.

                    31ம் தேதி எழும்பூரில்(6117) இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு 3.55 மணிக்கும், செங்கோட்டைக்கு 2.30 மணிக்கு சேரும். திருநெல்வேலி விரைவு ரயில்: 17.11.2010 முதல் 15.12.2010ம் தேதி வரை புதன் கிழமைகளில் எழும்பூரில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு 1.55 மணிக்கும், திருநெல்வேலிக்கு மறுநாள் 12.15 மணிக்கு சேரும். 18.11.2010 முதல் 16.12.2010 வரை வியாழக் கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து (6014) மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு இரவு 1.55 மணிக்கும், எழும்பூருக்கு காலை 6 மணிக்கு சேரும்.

Read more »

A competition to hone skills


Engrossed:Children immersed in painting in the competition conducted by the Manjakuppam branch of Tamil Nadu Brahmin association in Cuddalore on Sunday 
 
CUDDALORE:

             The Manjakuppam branch of the Tamil Nadu Brahmins' Association conducted a painting competition as part of the Children's Day celebrations here on Sunday.

         The enthusiastic participants—right from lower kindergarten to class X—tried their hand at various topics. Termed as a freewheeling competition, the participants chose their topics for the painting and some of them excelled in their performance.

Nature, preferred topic

             Most of the children chose nature as the theme and some of them recapitulated the school atmosphere. Those interested in conservation of ecology focussed on the wild life. Cartoon characters fascinated some of them.

Avenue for creativity

               Association president K. Thirumalai said that the painting competition provided an avenue to the children to exhibit their creative ability. More of such competitions would hone their skills and motivate them to participate in bigger competitions. A series of competitions for children would follow soon, he said. All the participants were given certificates and crayons as mementos. The parents who gathered on the occasion said that the competition gave a respite to their wards from the grinding route of school work and also kept them away from television and computers, at least for a couple of hours.

Read more »

Coastal community hit by sea erosion


ASSESSMENT: Probir Banerjee of the Pondicherry Citizens' Action Network apprising environmentalists, social activists and fishermen on the problem of sea erosion on Saturday. 
 
CUDDALORE: 

             A significant part of the coastal area at Chinnamudaliarchavadi in Villupuram has been lost to the sea. According to a conservative estimate, at least 200 acres of land along the 10-km coastal stretch, off East Coast Road, has been gobbled up owing to sea incursion or sea erosion.

            According to a study by Pondicherry Citizens Action Network (PCAC) in coordination with Federation for People's Rights, the 80-m-wide beach at Chinnamudaliarchavadi and two rows of fishermen tenements have vanished.

President of the PCAC Probir Banerjee told The Hindu that the study attributed this factor to two reasons: 

           inconsistent dredging at the Puducherry harbour and construction of groynes. These structures had caused devastations along the Puducherry and Villupuram coast.

            Sea incursion had become almost a common phenomenon, uprooting trees and pulling down the habitations of the fishermen, particularly on the Villupuram side.

            The water aquifer had become saline thus spoiling the groundwater for a stretch of four km inland.

           Mr. Banerjee said that the territorial government had spent Rs.20 crore on putting up these structures to safeguard the welfare of 150 fishermen. But wittingly or unwittingly it had caused permanent loss of livelihood to 7,000 other families.

Social, economic costs

             Had the harbour been properly dredged at an estimated cost of Rs.3 crore a year, things would not have come to such a pass. The environment, social and economic costs of this lapse were quite enormous and irreparable. Mr. Banerjee said that the natural resources were the assets of the country but the way these were plundered was a cause for concern. If the trend was not reversed, over a period, the GDP (gross domestic product) would register a negative growth.

             He noted that though the governments of Tamil Nadu and Puducherry were said to have reached an understanding to tackle the issue jointly, no progress was yet achieved on this front. Therefore, the PCAC and the Federation for People's Rights, had appealed to the Union Ministry for Environment to find a permanent solution to the issue in coordination with Tamil Nadu and Puducherry governments.

            They had also suggested the following measures: sand bypass system (a form of dredging) must be activated, capital dredging should be done and the harbour ought to be re-designed.

Fishermen apprised

              Mr. Banerjee on Saturday apprised the fishermen, social organisations and consumer activists on the impending threat posed by the proposal to set up a clutch of private ports along the Cuddalore coast. M. Nizamudeen of the Consumer Federation-Tamil Nadu said representatives of the SIPCOT Local Community Monitoring, Tamil Nadu Meenavar Peravai, Meenavar Viduthalai Vengaigal, Tamil Nadu Meenavar Padhukappu Iyakkam, Communist Party of India and Communist Party of India (Marxist) attended the session in which satellite pictures were presented to demonstrate the gravity of the problem.

Read more »

No Change In Protest Plan

CUDDALORE: 

              Opposition parties and trade unions have turned down the request of Collector P. Seetharaman to give up the proposed protest rally, scheduled for Tuesday, against the incomplete underground drainage project and the resultant damage caused to roads.

           In a meeting held here on Sunday, they decided to go ahead with their agitation and also boycott the peace talks convened by the Collector on Monday to discuss the issue. They said that instead of showing any tangible results on the project, officials had been buying time by convening meetings periodically for the past two years. The promises made by the officialdom and the Cuddalore Municipality, on and off, about the timeline fixed for completion of projects sounded hollow, they said.

           Central and State government employees had also expressed their solidarity with organisers of the rally. While a section of them would participate in the protest march, others would attend duty, wearing black badges. The organisers had also appealed to traders to put up their shutters on that day.

               Kumar of All India Anna Dravida Munnetra Kazhagam, Anandan and Chandrabose of Pattali Makkal Katchi, N. Ramalingam of Desiya Murpokku Dravida Kazhagam, Thirumarban of Viduthalai Chiruthaigal Katchi, Madhavan and Subbarayan of Communist Party of India (Marxist), M. Sekar of Communist Party of India, M. Nizamudeen and Balki of Consumer Federation-Tamil Nadu, M. Marudhavanan of the Federation of Resdients' Association, and members of autorikshaw and van operators associations participated in the meeting.

Read more »

Clinical diabetology programme launched by Annamalai University

CUDDALORE: 

             Tamil Nadu Governor and Chancellor Surjit Singh Barnala launched the prospectus of postgraduate diploma in clinical diabetology offered by Annamalai University through distance education mode, in Chennai recently.

               In a statement released here, Vice-Chancellor of the university M. Ramanathan said that the programme was framed in collaboration with the India Diabetes Research Foundation and the Diabetes Hospital, Chennai. The distance education programme gained special significance owing to increasing number of diabetics in the country.

WHO survey

            According to the World Health Organisation survey, the number of diabetics in India, which now stood at 50 million, would go up to 80 million by 2030. To tackle the condition, it was not only advisable to take preventive measures but also provide better understanding of the core of the condition with a seminal knowledge in combating strategies and nutritional science,the Vice-Chancellor added.

             S.B. Nageswara Rao, director, Directorate of Distance Education (Annamalai University), A.Ramachandran of Diabetes Hospital, N. Chidambaram, Dean, Faculty of Medicine, Sir Rajah Muthiah Medical College (of Annamalai University), and Raghavan of India Diabetes Research Foundation were present.

Read more »

Houses at Reddiarpettai damaged

CUDDALORE: 

            The walls of at least 15 houses located at Reddiarpettai, about 25 km from here, developed cracks after lightning stuck a cluster of dwelling units here in the early hours of Saturday. At least 50 families are living in the habitations at Reddiarpettai. Soon after the lightning struck, power supply was disrupted. Electronic devices such as a television sets, refrigerator and fan in a house were completely damaged. Several trees in the area were also struck by lightning.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior