கட லூர், நவ. 26:
50 ஆண்டுகளாக இருந்து வந்த பஸ் நிறுத்தம் அகற்றப் பட்டதால், அதை மீண்டும் பெறுவதற்காக நெல்லிக்குப்பம் மக்கள் நீண்ட போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
பண்ருட்டி-கடலூர் மார்க்கத்தில் நெல்லிக்குப்பத்தில் போலீஸ் லைன், பிள்ளையார் கோயில், அஞ்சல் நிலையம், ஜானகிராமன் நகர் ஆகிய பஸ் நிறுத்தங்களும், கடலூர்- பண்ருட்டி மார்க்கத்தில், ஜானகிராமன் நகர், அஞ்சல் நிலையம், கடைத்தெரு, காவல்நிலையம், போலீஸ் லைன் ஆகிய பஸ் நிறுத்தங்களும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்துள்ளன. ஓராண்டுக்கு முன் ரூ.1 கோடி செலவில் நெல்லிக்குப்பத்தில் பஸ் நிலையம் கட்டப்பட்டு, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனால் கடந்த ஓராண்டாக பஸ் நிலையத்துக்குள் எந்த பஸ்சும் வந்துபோவது இல்லை. இந்த நிலையில் செப்டம்பர் மாதக் கடைசியில், நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் பார்வையிட்டு பஸ் நிலையத்துக்குள் அனைத்து பஸ்களும் வந்து போக நடவடிக்கை மேற்கொண்டார். அக்டோபர் 1-ம் தேதி முதல் அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் வந்துபோகின்றன. பஸ் நிலையத்துக்கு உள்ளே செல்லும் வழியும், வெளியேறும் வழியும் ஒரே இடத்தில் இருப்பதாலும், பஸ் நிலைய வாயிலில் எப்போதும் பஸ்கள் நிற்கும் சூழ்நிலை ஏற்படுவதாலும் பண்ருட்டி- கடலூர் நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்படுகிறது. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் உள்ள அஞ்சல் நிலையம், கடைத் தெரு ஆகிய இரு பஸ் நிறுத்தங்களிலும் பஸ்கள் நிற்கக் கூடாது என்று போலீஸôர் அண்மையில் உத்தரவிட்டு உள்ளனர். அஞ்சல் நிலைய பஸ் நிறுத்தத்தில் இறங்கித்தான் 3 பள்ளிகள், வங்கிகள், எம்.எல்.ஏ. அலுவலகம் உள்ளிட்டவற்றுக்கு பொது மக்கள், மாணவ, மாணவியர் செல்ல வேண்டியது இருக்கிறது. பஸ் நிறுத்தத்தை எடுத்து விட்டதால் பொது மக்கள் பஸ் நிலையத்தில் இறங்கி நீண்டதூரம் நடந்தோ, ரூ.30க்கு மேல் செலவிட்டு ஆட்டோ ரிக்ஷாக்களிலோதான் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். பஸ் நிலையத்துக்குள் பஸ்களும் பொது மக்களும் செல்ல வேண்டும் என்ற கட்டாயத்துக்காக 50 ஆண்டுகளாக அனுபவித்த வந்த, மக்களுக்கு வசதியாக இருந்த பஸ் நிறுத்தங்களை ஏன் அகற்ற வேண்டும் என்று கேட்கிறார்கள் நெல்லிக்குப்பம் பொது மக்கள். மேலும் இரவு 10 மணிக்கு மேல் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் செல்வதில்லை. எனவே பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டு உள்ளது என்றும் பொது மக்கள் கூறுகின்றனர். பஸ் நிறுத்தங்கள் அகற்றப்பட்டதைக் கண்டித்து நெல்லிக்குப்பம் நகர மக்கள் இணைந்து உண்ணாவிரதம், 3 ஆயிரம் வீடுகளில் கருப்புக் கொடி என பல போராட்டங்களை நடத்தி உள்ளனர். மேலும் தொடர் போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர். மக்கள் பிரதிநிதிகளுடன் மாவட்ட நிர்வாகம் பேச்சு நடத்தி, பறிக்கப்பட்ட உரிமையை மீண்டும் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
உரிமை பறிப்பு
இதுகுறிதது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.உதயகுமார் கூறுகையில், "பஸ் நிலையம் செயல்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், போஸ்ட் ஆபீஸ் ஸ்டாப்பை எடுத்து விட்டதால் 6 நகராட்சி வார்டுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3 பள்ளிகள், பாரத ஸ்டேட் வங்கி, கோயில்கள் திருமண மண்டபங்கள், எம்.எல்.ஏ. அலுவலகம் ஆகியவற்றுக்குச் செல்வோர் பஸ் நிலையம் சென்று வர வேண்டிய நிலை இருப்பதால் பெரிதும் அவதிப்படுகிறார்கள். 1000 மக்கள் தொகை கொண்ட கிராமத்துக்கு பஸ் வசதி செய்து கொடுக்கும் அரசு, 20 ஆயிரம் மக்கள் வசிக்கும் பகுதிக்கு, 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பஸ் நிறுத்தத்தை அகற்ற வேண்டிய கட்டாயம் என்ன. போஸ்ட் ஆபீஸ் ஸ்டாப்பை எடுக்கப்பட்டதால், பஸ் நிலையத்துக்குள் வணிக வளர்ச்சி எதுவும் ஏற்படப் போவதில்லை. பஸ் நிறுத்தத்தை அகற்றியது மக்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்' என்றார் உதயகுமார்.