உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, செப்டம்பர் 17, 2011

திட்டக்குடியில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/3849d3e8-db76-492f-9082-ccd638d36695_S_secvpf.gif
 
திட்டக்குடி:
 
               திட்டக்குடியில் நடந்த போக்குவரத்து விழிப்புணர்வு முகாமில் துணை சூப்பிரண்டு பேசும் போது விபத்துகளே இல்லாமல் வாகனங்களை ஓட்டவேண்டும் எனற உறுதி மொழியை ஒவ்வொரு ஓட்டுனரும் எடுத்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
 
              திட்டக்குடியில் காவல் துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு திட்டக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வனிதா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். தாலுகா அலுவலகம் முன்பு மெயின் ரோட்டில் சென்ற இருசக்கர, நான்குசக்கர வாகனங்களில் மீது முன்புற விளக்குகளில் கருப்பு நிறஸ்டிக்கர்கள் ஒட்டபட்டன. அதேபோல் டியர் வண்டி, மாட்டுவண்டிகளில் சிவப்பு நிற ரிப்லக்டர்கள் பொறுத்தப்பட்டன. துணை சூப்பிரண்டு வனிதா தலைமையில் காவல் துறையினர் 400-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இந்தபணியை மேற்கொண்டனர். 
 
அப்போது துணை சூப்பிரண்டு வனிதா வாகன ஓட்டுனர்களிடம் பேசியது:-
 
         வாகன விபத்துகளில் வாகன சேதம் ஒருபக்கம் இருந்தாலும். இதில் ஏற்படும் உயிர் இழப்புகள் ஒரு குடும்பத்தையே பாதிப்பதுடன் அந்த குடும்பம் சரியான வழிகாட்டுதல் இன்றி பொருளாதார பின்னடைவு ஏற்படுத்துகின்றன. எனவே ஒவ்வொரு ஓட்டுனரும் புதிய வாகனங்கள் வாங்கும் போதும் ஓட்டும்போதும் விபத்துகளே இல்லாமல் வாகனங்களை ஓட்டவேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ளவேண்டும்.
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் என்ஜின் பழுது


என்ஜின் பழுது காரணமாக வெள்ளிக்கிழமை கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயில்.
கடலூர்:

            என்ஜின் பழுது காரணமாக விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் பொதுமக்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் அவதியுற்றனர்.

               விழுப்புரத்தில் இருந்து மாயவரம் செல்லும் பயணிகள் ரயில், வெள்ளிக்கிழமை காலை 6.40 மணிக்கு கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் வந்தது. அப்போது திடீரென ரயில் என்ஜினில் பழுது ஏற்பட்டது. ரயில்வே ஊழியர்கள் என்ஜினைப் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது. 

                இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக 7.45 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயிலில் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் தினமும் பயணம் செய்கிறார்கள். வெள்ளிக்கிழமை ரயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால், மாணவர்கள் உரிய நேரத்தில் வகுப்புகளுக்குச் செல்ல முடியவில்லை. மேலும் என்ஜின் பழுது காரணமாக, லாரன்ஸ் சாலையில் நீண்டநேரம் ரயில்வே கேட் மூடப்பட்டதால், அந்த வழியாகச் செல்வோர் பெரிதும் பாதிக்கப் பட்டனர். பொதுமக்கள் தகராறு செய்ததைத் தொடர்ந்து, ரயில்வே கேட்டை சிறிது நேரம் திறந்து பின்னர் மூடினர்.





Read more »

கடலூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மறியல் போராட்டம்

கடலூர்:'

             கடலூரில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 82 பெண்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். 

              விலைவாசி உயர்வைக் கண்டித்தும், சேமிப்புக் கிடங்குகளில் முடங்கிக் கிடக்கும் தானியங்களை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை 3 பிரிவாக பிரிக்கும் எண்ணத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். ரேஷன் பொருள்களுக்குப் பதில் பணமாகத் தரும் ஆலோசனையைக் கைவிட வேண்டும் என்று கோரியும் மறியல் போராட்டம், ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடந்தது. 

                 கடலூர் திருப்பாப்புலியூர் உழவர் சந்தை அருகில் நடந்த மறியல் போராட்டத்துக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவர் பி.ஜான்ஸி ராணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் எஸ்.லட்சுமி, என்.ஆனந்தி, ஏ.ரஜியாபேகம், கே.அன்புச்செல்வி உள்ளிடடோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் வி.மேரி, மாவட்டத் தலைவர் ஆர்.சிவகாமி, பொருளாளர் பி.தேன்மொழி, துணைச் செயலாளர் எம்.ஜெயசித்ரா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மறியலில் ஈடுபட்ட 82 பெண்களை போலீஸôர் கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 









Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல நிலை இசைப் படிப்புகள் தொடக்கம்

சிதம்பரம்:

              அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறை சார்பில் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல நிலை இசைப் படிப்புகள் (லெவல் கோர்ஸ் இன் மியூசிக்) தொடங்கப்பட்டுள்ளதாக அதந் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.

இதுகுறித்து துணைவேந்தர் ராமநாதன் தெரிவித்தது:

            கனடா நாட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் மூலம் நடத்தப்படும் இசைத்துறை படிப்புகளுக்கு அங்குள்ள மக்களிடம் நல்ல வரவேற்புள்ளது.

              நமது பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் சேர்ந்து பயில வேண்டுமென்றால் 8,10-ம் வகுப்பு, பிளஸ் 2, இளங்கலை பட்டம் என தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மிகப்பெரிய இசை, நாட்டிய மேதைகள் குறைந்த படிப்பு படித்துள்ளதால் தகுதி இருந்தும் பி.ஹெச்டி பயில இயலவில்லை. இதற்காக தற்போது பள்ளிகளில் பயிலும் 9 வயதிலிருந்து 18 வயது வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இசைத்துறையில் வாய்ப்பாடு, நாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய படிப்புகளை பயில 8 லெவல்களில் லெவல் கோர்ஸ் இன் மியூசிக் என்ற படிப்பு மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த ஆண்டுமுதல் தொடங்கப்பட்டுள்ளது. 

               விருப்பம் உள்ள பள்ளிகள் இந்த படிப்பை நடத்த விரும்பினால் நடத்தலாம். இதற்கான வகுப்புகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்படும். மேலும் தனியார் நாட்டியப் பள்ளிகள் மூலம் இந்த படிப்பை நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக இணைவேந்தர் எம்ஏஎம்.ராமசாமியின் 81-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 400 பக்கங்கள் கொண்ட சிறப்பு மலரை தயாரித்துள்ளது. அந்த மலர் விரைவில் வெளியிடப்படும் என ராமநாதன் தெரிவித்தார். பேட்டியின் போது மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் உடனிருந்தார்.











Read more »

என்எல்சியில் மண்வெட்டும் இயந்திரம் ரூ.3.35 கோடி செலவில் புதுப்பிப்பு

நெய்வேலி:

             என்எல்சி சுரங்கத்தில் தொடர்ந்து 8 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட மண்வெட்டும் இயந்திரம் ரூ.3.35 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் சுரங்கப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

                  என்எல்சி முதல் சுரங்கத்தில் மண் மற்றும் பழுப்பு நிலக்கரியை வெட்டியெடுக்க பக்கெட்வீல் எனும் சுரங்க இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.  சுரங்கப் பயன்பாட்டுக்காக கடந்த 2002-ம் ஆண்டு சுரங்கப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மண்வெட்டும் இயந்திரம் தொடர்ந்து இயங்கிவந்தது. இந்நிலையில் அதன் பாகங்கள் தேய்மானம் ஆனதை அடுத்து இயந்திரத்தை புதுப்பிக்கும் பணியை சுரங்க நிர்வாகம் மேற்கொண்டது.  அதனடிப்படையில் ரூ.3 கோடியே 35 செலவில் அதன் உதிரிபாகங்கள் மாற்றியமைக்கப்பட்டு, காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி மையத்தால் பரிந்துரைக்கப்பட்ட வர்ணம் பூசப்பட்டு, மீண்டும் சுரங்க செயல்பாட்டுக்காக தயார்படுத்தப்பட்டது. 

               இதைடுத்து புதுப்பிக்கப்பட்ட இயந்திரத்தை என்எல்சி சுரங்க இயக்குநர் பி.சுரேந்திரமோகன் வியாழக்கிழமை இயக்கிவைத்தார்.  மேலும் சுரங்கம் 1ஏ பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு, அது முறைப்படி வியாழக்கிழமை தொழிலாளர்களின் பயன்பாட்டுக்கு விரிவுப்படுத்தப்பட்டது. இதையும் சுரங்க இயக்குநர் பி.சுரேந்திரமோகன் தொடங்கிவைத்தார். 

                மேலும் சுரங்க 1ஏ-வின் அடித்தளத்துக்கு செல்ல சிறப்பு சரிவுப் பாதைகள் அமைக்கப்பட்டு, அவையும் சுரங்க இயக்குநரால் செயல்படுத்தப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் சுரங்க செயல் இயக்குநர்கள் ராமகிருஷ்ணன்,ராமலிங்கம், முதன்மைப் பொதுமேலாளர்கள் வீரபிரசாத், வைத்தீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.









Read more »

சிதம்பரத்தில் 100 பேருக்கு சுயஉதவிக் கடன்

சிதம்பரம்:

            சிதம்பரத்தை அடுத்த கீரப்பாளையம் மற்றும் அதைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த 100 பயனாளிகளுக்கு விஜயவாசம் பொது நல அறக்கட்டளை சார்பில் தேர்வு செய்யப்பட்டு சிண்டிகேட் வங்கி மூலமாக தொழில் தொடங்க தலா ரூ. 15 ஆயிரம் வீதம் சுயஉதவிக்கடன் வழங்கப்பட்டது. கீரப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை மேலாளர் திருப்பணிநத்தம் எஸ்.சகாதேவன் தலைமை வகித்தார்.  அறக்கட்டளைத் தலைவர் எஸ்.கவிதா நிகழ்ச்சியில் பங்கேற்று மகளிருக்கு சுயஉதவிக்கடன்களை வழங்கினார்.







Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior