உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 18, 2009

கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் குருபெயர்ச்சி மகா யாகம்


சிதம்பரம் :

              குருபெயர்ச்சியையொட்டி சிதம்பரம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மகா யாகம் நடந்தது.
 
                குருபெயர்ச்சியை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில், இளமையாக்கினார் கோவில், அனந்தீஸ்வரன் கோவில் களில் குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.சிதம்பரம் மேல வீதி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் வேத பாஸ்கர மகாயக்ஞ மண்டலி சார்பில் மகா யாகம் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி பகல் 10.30மணிக்கு மகா சங்கல்பம் நடந்தது. மாலை 6மணிக்கு தேவாரம் திருவாசகம், 7மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, நவக்கிரக குருமந்திர ஜபம், இரவு மகா நிவேதனம், தீபாராதனை நடந்தது.நேற்று காலை குருமந்திர ஜப பாராயணம், திருமுறை பாராயணம், குருமந்திர மகாயாகம், ருத்ர ஹோமம், வசோத் தாரா ஹோமம், மகா பூர்ணாஹீதியும் 12மணிக்கு தீபாராதனையும் நடந்தது. வேம்பு தீட்சிதர் தலைமையில் சம்பந்த தீட்சிதர் உள்ளிட்ட குழுவினர் யாகம் நடத்தினர்.

Read more »

ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும் திட்டக்குடியில் இணை ஆணையர் திருமகள் பேட்டி

திட்டக்குடி :

                         திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் திருக்குளத்தை போலீஸ் பாதுகாப்புடன் சுத்தம் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளதாக இணை ஆணையர் திருமகள் கூறினார்.கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம் கோவில்களை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் திருமகள் நேற்று ஆய்வு மேற் கொண்டார். திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணி, திருக்குளம் ஆக்கிரமிப்பு உட்பட கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டு,

பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

                      திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் திருக்குளத்தை சுத்தம் செய்யும் பணியின் போது, மோதல் ஏற்படுவதை போலீசார் தவிர்த்துள்ளனர். திருக் குளத்தை சுத்தம் செய்தது தவறில்லை. உரிய போலீஸ் பாதுகாப்புடன் சுத்தம் செய்ய கோவில் செயல் அலுவலரிடம் கூறியுள்ளேன். திருக்குளம் சம்பந்தமான வழக்குகள் கோர்ட்டில் நடந்து வருவதால் ஆக்கிரமிப்புகளை பொதுமக்களாக அகற்ற நினைப்பது தவறு. திட்டக்குடி நானூற்றொருவர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் முறையாக கணக்கெடுக்க செயல் அலுவலருக்கு பரிந் துரை செய்துள்ளேன்.

                      வழக்குகள் நிலுவையிலுள்ள பகுதி, கோவிலுக்கு சொந்தமான இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும் என கூறினார். தொடர்ந்து திருவட்டத்துறை திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் 10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தளம் அமைத்தல், சுற்றுச்சுவர் பணிகளை பார்வையிட்டார். மேலும் இறையூர் அன்னபூரணி உடனுறை தாகம்தீர்த்தபுரீஸ்வரர், பெண்ணாடம் அழகியகாதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உதவி ஆணையர் ஜெகநாதன், விருத்தாசலம் ஆய்வாளர் தேவராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Read more »

ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி

விருத்தாசலம் :

                 விருத்தாசலம் பாத்திமா பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி வகுப்பு நடந்தது.
               
              விருத்தாசலம் பாத்திமா மெட்ரிகுலேஷன் பள்ளியில் அனைவருக் கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி வகுப்பு நடந்தது. டி.இ.ஓ., குருநாதன் தலைமை தாங்கினார். கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப் பா ளர் இளங்கோவன் முன் னிலை வகித்தார். பயிற்சியில் 9, 10ம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்கள் 48 பேருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர் குமார் பயிற்சி அளித் தார்.

Read more »

போக்குவரத்து வாகனங்களுக்கு பிரதிபலிக்கும் நாடாக்கள் ஒட்ட மத்திய அரசு உத்தரவு

கடலூர் :

                             போக்குவரத்து வாகனங்களுக்கு பிரதிபலிக்கும் நாடாக்கள் ஒட்ட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு மோட்டார் வாகன சட்ட திருத்த உத்தரவின்படி போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய் யப்படும் வாகனங்கள் மற்றும் தகுதிச்சான்று பெற வரும் வாகனங்கள் அனைத்திற்கும் சிகப்பு, வெள்ளை, மஞ்சள் நிற பிரதிபலிக்கும் நாடாக் கள் ஒட்ட <உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே புதிய பதிவு மற்றும் தகுதிச்சான்று பணிகளுக்கு அலுவலகத் திற்கு எடுத்து வரும் பொழுது கீழ் கண்டவாறு பிரதிபலிக்கும் நாடாக் கள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். பத்து அல்லது அதற்கு மேல் இருக்கைகள் கொண்ட 5 டன் வரை எடை உள்ள பயணிகள் வாகனம் முன்புறம் வெள்ளை, பின்புறம் சிகப்பு நிறத்தில் 50 மி.மீ., அகலம் கொண்ட பிரதிபலிக்கும் நாடா ஒட்ட வேண்டும்.

                                பத்து அல்லது அதற்கு மேல் இருக்கைகள் கெண்ட 5 டன் எடை உள்ள பயணிகள் வாகனத்திற்கு முன்புறம் வெள்ளை, பின்புறம் சிகப்பு, பக்கவாட்டில் மஞ்சள் நிறமுள்ள பிரதிபலிக்கும் நாடா ஒட்ட வேண்டும். ஏழரை டன் எடையுள்ள இலகு ரக சரக்கு வாகனத்திற்கு முன்புறம் வெள்ளை, பின்புறம் சிகப்பு நிற நாடக்களை 20 மி.மீ., அகலத்திலும், ஏழரை டன் முதல் 12.5 டன் உள்ள வாகனங்களுக்கு முன்புறம் வெள்ளை, பின்புறம் சிகப்பு, பக்கவாட்டில் மஞ்சள் நிறமுள்ள 50 மி.மீ., அகலத்தில் பிரதிபலிப்பு நாடா ஒட்ட வேண்டும். ஒட்டப்படும் பிரதிபலிக்கும் நாடாக்கள் ஏ.ஐ.எஸ் 090-2005 ல் குறிப்பிட்டுள்ள தரமுடையவையாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

15 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு


காட்டுமன்னார்கோவில் :

                    கடலூர், பெரம்பலூர் மாவட் டங்களில் பெய்த கன மழையால் சிதம்பரம் அருகே 15 க்கும் மேற் பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
        
                             வார்டு புயல் காரணமாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற் றும் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது. இதனால் வீராணம் ஏரிக்கு செங் கால்ஓடை, கருவாட்டு ஓடை, பாளையங்கோட்டை ஓடை வழியாக 5,300 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. வீராணம் ஏரி 47.5 அடி உயரத்தில் தற்போது 46.7 அடி உயரம் தண்ணீர் நிரம்பியுள் ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் ஓடையில் 14 ஷட் டர்களில் 10 ஷட்டர்கள் திறக்கப் பட்டு 2,700 கன அடி தண்ணீரும், வெள்ளாற்றில் 2,410 கன அடியும், சென்னைக்கு 77 கன அடியும் மொத் தம் 5,187 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த ஷண்டன், தொரப்பு, ஈச்சம்பூண்டி, பால்வாய்கண்டன், ரெட்டியூர், ஆயங்குடி, முட்டம், குஞ்சமேடு, கருப்பேரி, எடையார், மேலராதாம் பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட மழை நீர் ஆகியவை சேர்ந்து மன வாய்க்காலில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. இந்த மன வாய்க்கால் குமராட்சி அடுத்த வீரநத்தம் கிராமம் அருகே வெள்ளியங்கால் ஓடையில் வந்து சேர்கிறது.

                              இதனால் வெள்ளியங்கால் ஓடையில் வீராணம் தண்ணீர் 2,700 கன அடியும், மன வாய்க்கால் தண்ணீர் 10 ஆயிரம் கன அடியும் மொத்தம் 12 ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் சென்று பழைய கொள்ளிடத்தில் கலக்கிறது. ஒரே நேரத்தில் செல் லும் அதிக அளவு தண்ணீரை பழைய கொள்ளிடம் உள் வாங்காததால், திருநாரையூர், வீரநத்தம், நடுத் திட்டு, செங்கேனி பள்ளம், எடையார், சிறகிழந்தநல்லூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்தது. பொதுமக்கள் ஊரை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.


குறிப்பாக பழைய கொள்ளிடக்கரை ஓரத்தில் உள்ள நந்திமங்கலம் கிராமம் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியது. இப்பகுதியில் பாதிக் கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப் பான பகுதியில் வெளியேறியுள்ளனர். ஒரு சில இடங்களில் படகு மூலமும் ஊருக்குள் மக்கள் சென்று வருகின்றனர். டி.ஆர்.ஓ., நடராஜன் வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார் வையிட்டார். மேலும் காட்டுமன் னார்கோவில் வேளாண்மை அதிகாரிகள் பயிர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுத்து வருகின்றனர்.

                                கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பரங்கிப் பேட்டையில் அதிகபட்சமாக 87 மி. மீட்டர் மழை பெய்தது. தொழுதூரில் 68 மி.மீ., வேப்பூரில் 54, கொத்தவாச்சேரியில் 48, காட்டுமயிலூரில் 47, மே.மாத்தூர் 45, புவனகிரி 40, கடலூர் 39.30, சிதம்பரம் 39, லால் பேட்டை 38, சேத்தியாதோப்பு 35, ஸ்ரீமுஷ்ணம் 35, லக்கூர் 33, பெலாந் துறை 32,கீழச்செறுவாய் 30, வானமாதேவி 23.40, விருத்தாசலம் 23.10, அண்ணாமலை நகர் 23, குப்பநத்தம் 22.20 பண்ருட்டி 20, காட்டுமன்னார் கோவில் 10 மி.மீட்டர் மழை பெய் துள்ளது.கடலூர் திருப்பாதிரிபுலியூர் நவநீதம் நகரில் சுவர் இடிந்து விழுந்ததில் ஜெயபால்(30), அவரது மனைவி ஜெயலட்சுமி(25), மகன் ஜெயகுமார்(9) காயமடைந்தனர். அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமாபுரம் பகுதியில் 2 வீடுகள் இடிந்து விழுந் துள்ளன.

                      ரோஜா செடிகள் பாதிப்பு:கடலூரை சுற்றியுள்ள தாழ்வான நகர் பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. கடலூர் அடுத்த ராமாபுரம், சாத்தங் குப்பம், எஸ்.புதூர், வழிசோதனைபாளையம், வெள்ளக்கரை பகுதிகளில் வேர்கடலை மற்றும் ரோஜா, காக் கட்டன் உள்ளிட்ட பயிர்கள் பாதிப்படைந்துள்ளன

Read more »

பண்ருட்டியில் தொடர்மழையினால் நெல் விளைச்சல் தண்ணீரில் மூழ்கியது


பண்ருட்டி :

                          பண்ருட்டி பகுதியில் தொடர் மழைக்கு இரண்டாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கி வீணாகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.பண்ருட்டி அடுத்த பைத்தாம்பாடி, எனதிரிமங்கலம், காவனூர், உளுத்தாம்பட்டு, அக்கடவல்லி, ஏ.பி.குப்பம், கரும்பூர், ஒறையூர், மேல்குமாரமங்கலம், தாழம்பட்டு ஆகிய கிராமங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் விளைந்திருந்தன. கடந்த 7 நாட்களாக பெய்து வரும் தொடர் மழைக் காரணமாக இப்பகுதியில் உள்ள 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கி வீணாகி வருகிறது.

                                 கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் பயிர்கள் தண்ணீரில் முழ்கி அழுகும் நிலையால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.அதுபோல் கத்திரி,வெண்டைக்காய் செடிகளில் பூக்கள் உதிர்ந்து விட்டதால் கத்திரிக்காய் உற்பத்தியும் கடுமையாக பாதித்துள்ளன. வரும் தை மாதம் முதல் விற்பனைக்கு வரவேண்டிய காலிபிளவர், முட்டை கோஸ் பயிர் நிலங்களிலும் மழைநீர் தேங்கி நிற்பதால் அழுகிவிடும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Read more »

கடலூர் ஒன்றிய அலுவலக கட்டடம் இடிந்து விழுந்தது


கடலூர் :

                     கடலூரில் தொடர்ந்து பெய்து வந்த கன மழையின் காரணமாக 150 ஆண்டுகள் பழமையான கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது.கடலூர் நெல்லிக்குப்பம் ரோட்டில் உள்ளது கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கட்டடம் 150 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டடத்தில் தரைத்தளமும், முதல் தளமும் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்ததால் மழைக்காலத்தில் கசிவு ஏற்பட்டது. இருந்தும் இதே இடத்தில் கடந்த சில ஆண்டுகளாக அலுவலகமும், கீழ் தளத்தில் ஒன்றிய கவுன்சில் கூட்ட அரங்கமும் இயங்கி வந்தது. கடந்த ஒரு வாரமாக கடலூரில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக கட்டடம் அதிக அளவில் ஒழுகியது. நேற்று இரவு 9 மணிக்கு திடீரென கட்டத்தின் மேற்கு பகுதி இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர்.

                    இரவு வாட்ச் மேன் அமாவாசைடீ குடிக்க அருகில் இருந்த கடைக்கு சென்றதால் உயிர் தப்பினார். மேலும் பகல் நேரத்தில் இடிந்திருந்தால் ஏராளமான உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும். இரவு நேரம் என்பதால் யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. தகவல் அறிந்த கலெக்டர் சீத்தாராமன், சம்பவ இடத்தை பார்வையிட்டு தகவல் தெரிவிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் கவுதமன், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன் ஆகியோர் இடிந்த கட்டடத்தை பார்வையிட்டு, அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை பத்திரமாக மீட்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

Read more »

பண்ருட்டி கடைகளில் கமிஷனர் திடீர் சோதனை

பண்ருட்டி :

                       பண்ருட்டி நகராட்சி கமிஷனர் தலைமையிலான குழுவினர் நேற்று மளிகைக் கடைகளில் திடீர் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பாலிதீன் பைகளை கைப்பற்றினர்.பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள ஐந்து மளிகை கடைகளில் நகராட்சி கமிஷனர் உமா மகேஸ்வரி தலைமையில் சுகாதார அதிகாரி பாலசந்திரன், ஆய்வாளர் சுதாகரன் உள்ளிட்ட அலுவலர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் காலாவதியான மசாலா பொடிகள், உற்பத்தி தேதியில்லாத பொருட் கள், காலாவதியான பாக்கெட்கள், அரசு அனுமதியில்லாத 20 மைக்ரான் குறைவான பாலிதீன் பைகள் 10 கிலோ ஆகியவற்றை நகராட்சி ஊழியர்கள் கைப்பற்றினர். தகவலறிந்த நகராட்சி சேர்மன் பச்சையப்பன், வியாபாரிகள் மோகனகிருஷ்ணன், தணிகாசலம் உள்ளிட்டோர் கமிஷனர் உமாமகேஸ்வரியிடம் "முறைப்படி பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கேரி பேக்குகள் விற்கக்கூடாது என அறிவிப்பு வெளியிட்ட பின் வியாபாரிகள் விற்றால் நடவடிக்கை எடுங்கள்' என கேட்டுக் கொண்டனர்.

Read more »

சவ ஊர்வலத்தில் தகராறு வாலிபர் கைது


கடலூர் :

           சவ ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் கணவன், மனைவியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் முதுநகர் அடுத்த சித்திரைப் பேட்டையைச் சேர்ந்த லிங்குசாமி(55) என்பவர் இறந்தார். இவரது சவ ஊர்வலம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. ஊர்வலம் அதே பகுதியில் உள்ள சுப்ராயன் வீட்டு மனை வழியாகச் சென் றது. சவ ஊர்வலம் என் வீட்டு வழியாகச் செல்லக் கூடாது என சுப்புராயன் தடுத்தார்.

                 இதனால் ஏற்பட்ட தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த முரளி, மணி ஆகியோர் தாக்கியதில் காயமடைந்த சுப்புராயன் மற் றும் அவரது மனைவி மச்சக்காந்தி, உறவினர் ஷர்மிளா கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து முரளி(28)யை கைது செய்தனர். மணியை தேடி வருகின்றனர்.

Read more »

தொடர் மழையினால் வையங்குடி ஏரி உடைப்பு


திட்டக்குடி :

              திட்டக்குடி அருகே தொடர் மழையினால் வையங்குடி ஏரி உடைப் பெடுத்து விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன.கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கீழ்ச் செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையால் 8.5 அடி வரை மழைநீர் தேங்கியது.
 
              நேற்று முன்தினம் 289 கன அடியும், நேற்று 302 கன அடி வீதமும் பாசன வாய்க் காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் திட்டக்குடி அடுத்த வையங்குடி கிராம ஏரி உடைப்பெடுத்து விளைநிலங்கள் உட்பட பழைய காலனி, புதுக்காலனி பகுதிகளிலுள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதில் பாலகிருஷ்ணன், காசிமணி, நள்ளான், மூக் கன், சங்கர் ஆகியோரது வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த வெலிங்டன் பாசன சங்க தலைவர் மருதாச்சலம், பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் செல்வக்குமார், வெலிங்டன் பாசன ஆய்வாளர் கலியமூர்த்தி ஆகியோர் கிராமத்தில் முகாமிட்டு மணல் மூட் டைகள் அடுக்கி தண்ணீர் செல்லாதவாறு தடுத்து நிறுத்தினர்.

Read more »

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தவர் பரிதாப சாவு

பரங்கிப்பேட்டை :

                     புதுச்சத்திரம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கூலி தொழிலாளி இறந்தார்.

                     புதுச்சத்திரம் மேட்டுப்பாளையம் வீரன்கோவில் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் (48). இவர் நேற்று தனது எருமை மாடுகளை மேய்ப்பதற்காக வயல்வெளிக்கு ஓட்டி சென்றார். ஓடை அருகே கீழே அறுந்து கிடந்த மின்சார கம்பியை கவனிக்காமல் கலியபெருமாள் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி கலியபெருமாள் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் ஓட்டிசென்ற எருமை மாடும் மின்சார கம்பியை மிதித்து இறந்தது.

                     இதுகுறித்து புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Read more »

மார்ச் 1ம் தேதி பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு 23ம் தேதி : பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

"பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், வரும் மார்ச் 1ல் துவங்கி, 22ம் தேதி வரை நடைபெறும்' என, அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. 10ம் வகுப்பு தேர்வு, மார்ச் 23ல் துவங்கி, ஏப்ரல் 7ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 2 தேர்வை, ஆறு லட்சத்து 89 ஆயிரத்து 937 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை, இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எனினும், பத்தரை லட்சம் மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளி பொதுத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், தேர்வு அட்டவணை வெளியாகும் தேதியை மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இம்முறை, தேர்வில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவது குறித்து, தேர்வுத்துறை பரிசீலனை செய்திருந்தது. பிளஸ் 2 தேர்வுடன் சேர்த்து பத்தாம் வகுப்பு தேர்வை நடத்துவது, செய்முறைத் தேர்வை, எழுத்துத் தேர்வுக்குப் பின் நடத்துவது போன்ற மாற்றங்கள் பரிசீலனையில் இருந்தன. ஆனால், மாற்றம் செய்வதாக இருந்தால், அது குறித்து முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும் என்பதாலும், கடைசி நேரத்தில் மாற்றங்களைச் செய்தால், மாணவர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என்பதாலும், தேர்வு முறையில் எந்தவித மாற்றங்களையும் செய்யாமல், வழக்கம் போல் நடத்துவதற்கு தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, பிளஸ் 2 தேர்வுகளும், பத்தாம் வகுப்பு தேர்வுகளும் தனித்தனியே நடக்கின்றன. பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 1ல் துவங்கி 22ம் தேதி வரை நடக்கின்றன. மூன்று லட்சத்து 22 ஆயிரத்து 484 மாணவர்கள், மூன்று லட்சத்து 67 ஆயிரத்து 453 மாணவியர் என, மொத்தம் ஆறு லட்சத்து 89 ஆயிரத்து 937 மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். கடந்த தேர்வை, ஆறு லட்சத்து 47 ஆயிரத்து 632 பேர் எழுதினர். இந்த ஆண்டு, 42 ஆயிரத்து 305 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., - மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி., ஆகிய நான்கு தேர்வுகளுமே, மார்ச் 23ல் துவங்குகின்றன. இதில், மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள், ஏப்ரல் 9ம் தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் ஓ.எஸ்.எல்.சி., தேர்வுகள், ஏப்ரல் 7ம் தேதி வரையும் நடக்கின்றன. இந்த தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தேர்வெழுதும் மாணவர்கள் விவரங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்ப்பதற்காக, பள்ளிகளுக்கு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் பட்டியல் ஓரிரு நாளில் கிடைத்ததும், சரியான புள்ளி விவரம் தெரியவரும். எனினும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை மட்டும் கடந்த முறை எட்டு லட்சத்து 42 ஆயிரத்து 350 பேர் எழுதினர். இது, ஒன்பது லட்சமாக உயரும் என கூறப்படுகிறது. இதர மூன்று போர்டுகளையும் சேர்த்தால், தேர்வெழுதக்கூடிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை பத்தரை லட்சத்தை தாண்டும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்வை நடத்துவதற்காக மற்ற ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும். குறிப்பாக, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மாணவர்கள் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை, பிப்ரவரி முதல் வாரத்தில் துவக்கி நடத்துவதற்கு தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அட்டவணை, இம்மாத இறுதிக்குள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி, மார்ச் 1ல் பிளஸ் 2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய பாடத் தேர்வுகளுக்கு மாணவர்கள் நன்றாக தயாராவதற்கு ஏற்ப, போதிய இடைவெளியும் தரப்பட்டுள்ளது. மொழிப்பாட தேர்வுகள் மார்ச் 5ம் தேதி வரை நடக்கின்றன. அதன்பின், இரு நாள் இடைவெளிக்குப் பின், 8ம் தேதி இயற்பியல் தேர்வு நடக்கிறது. மீண்டும் இரு நாள் இடைவெளிக்குப் பின், 11ம் தேதி வேதியியல் தேர்வு நடக்கிறது. 15ம் தேதி கணிதம், விலங்கியல் தேர்வுகளும், மூன்று நாள் இடைவெளிக்குப் பின் 19ம் தேதி உயிரியல், தாவரவியல் தேர்வுகளும் நடக்க உள்ளன.




தேர்வு நேரம் எப்போது?: தேர்வு அட்டவணையை வெளியிட்ட தேர்வுத்துறை, தேர்வு நேரத்தை அறிவிக்கவில்லை. வழக்கமான நேரத்தில் துவங்கி நடக்கும் என்றாலும், சில தேர்வுகள் பிற்பகலிலும் நடக்கும். எனவே, காலைத் தேர்வுகள், பிற்பகல் தேர்வுகள் என்று குறிப்பிட்டு, தேர்வு நேரமும் வழக்கமாக அறிவிக்கப்படும். இந்த முறை, இது எதுவுமே இடம்பெறவில்லை. எனினும், பிளஸ் 2 தேர்வுகள் காலை 10.15க்கு துவங்கி, பிற்பகல் 1.15 வரையும் (மூன்று மணி நேரம்), 10ம் வகுப்பு தேர்வுகள், 10.15க்கு துவங்கி, 12.45க்கும் (இரண்டரை மணி நேரம்) முடிவடையும். தேர்வுகள், 10.15க்கு துவங்கினாலும், மாணவர்கள் 10 மணிக்கு, தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும். முதல் 10 நிமிடம், வினாத்தாளை படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிடம், பதிவெண் உள்ளிட்ட விவரங்களை விடைத்தாளில் பூர்த்தி செய்யவும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. விடை எழுதுவதற்கான நேரம், 10.15 மணிக்கு துவங்கும்.

Read more »

தொடர்​மழை:​ அரை​யாண்​டுத் தேர்வு விடு​முறை ரத்தாகுமா?

நெய்வேலி,​​ டிச.17: 

                       அரை​யாண்​டுத் தேர்வு நடந்து வரும் இத்​த​ரு​ணத்​தில் கடந்த ஒரு​வா​ர​மாக பெய்து வரும் தொடர் கன​ம​ழை​யால் பள்​ளி​க​ளுக்கு கட்​டாய விடு​முறை அளிக்க வேண்​டிய சூழல் ஏற்​பட்டு,​​ தேர்​வு​க​ளும் தள்​ளி​வைக்​கப்​ப​டும் என தினம் ஒரு அறி​விப்பு வெளி​யாகி வரு​வ​தால் நடப்​புக் கல்​வி​யாண்​டில் அரை​யாண்​டுத் தேர்வு முடி​வ​டைந்​த​வு​டன் விடப்​ப​டும் விடு​முறை ரத்​தா​கும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது.​

                      ந​டப்​புக் கல்​வி​யாண்​டின் அரை​யாண்​டுத் தேர்​வு​கள் இம் மாதம் 10-ம் தேதி முதல் தொடங்​கி​விட்​டது.​÷இந் ​நி​லை​யில் கடந்த ஞாயிற்​றுக்​கி​ழமை துவங்​கிய மழை தொடர்ந்து பெய்து வரு​வ​தால்,​​ கட​லோர மாவட்​டங்​க​ளில் உள்ள பள்​ளி​க​ளுக்கு டிசம்​பர் 15 முதல் தொடர்ந்து விடு​முறை அளிக்​கப்​ப​டு​கி​றது.​ 

                            தி​னந்​தோ​றும் இர​வில் தங்​க​ளது மாவட்​டங்​க​ளுக்கு விடு​முறை குறித்த அறி​விப்பு வெளி​யா​குமா?​ என்ற ஆவ​லில் மாண​வர்​கள் டிவி பார்க்​கத் துவங்​கி​வி​டு​கின்​ற​னர்.​ அட்​ட​வணை முறைப்​படி நடை​பெற வேண்​டிய தேர்​வு​க​ளும் ரத்​தா​வ​தால்,​​ ரத்​தான தேர்​வு​கள் ஒத்​தி​வைக்​கப்​பட்டு,​​ அரை​யாண்​டுத் தேர்வு விடு​முறை நாளில் தேர்​வு​களை நடத்தி விடு​மு​றையை ரத்து செய்​து​வி​டு​வார்​களோ என்ற கவலை மாண​வர்​க​ளுக்கு எழுந்​துள்​ளது.​

                     இந்​நி​லை​யில் கட​லூர் மாவட்​டத்​தில் பணி​பு​ரி​யும் அரசு மற்​றும் அரசு உத​வி​பெ​றும் பள்​ளித் தலை​மை​யா​சி​ரி​யர்​களை அழைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர் தலை​மை​யில் புதன்​கி​ழமை ஆலோ​ச​னைக் கூட்​டம் நடை​பெற்​றது.​ 

                 இக்​கூட்​டத்​தின் போது தற்​போது ரத்​தா​கும் தேர்​வு​களை விடு​முறை நாளில் நடத்​து​வது குறித்து கேட்​ட​றி​யப்​பட்​டது.​ இ ​தற்கு சில தலை​மை​யா​சி​ரி​யர்​கள் ஜன​வரி மாத தொடக்​கத்​தில் நடத்​த​லாம் என்​றும்,​வேறு சிலரோ விடு​முறை நாளில் நடத்​த​லாம் என​வும் ஆலோ​ச​னைக் கூறி​ய​தா​க​வும் தெரி​கி​றது.​ இ​ருப்​பி​னும் இறுதி முடிவு எது​வும் எடுக்​க​வில்லை.​ கிறிஸ்​துவ கல்வி நிறு​வ​னங்​கள்,​​ எதிர்​வ​ரும் கிறிஸ்​து​மஸ் மற்​றும் ஆங்​கி​லப் புத்​தாண்டை சிறப்​பாக கொண்​டாடி வரு​பவை.​ எனவே அந்த கல்வி நிறு​வ​னங்​க​ளின் நிலை​யை​யும் கல்​வித்​துறை கேட்​ட​றிய வேண்​டிய சூழல் உள்​ளது.​

                 இது குறித்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர் அமிர்​த​வள்ளி கூறி​யது:​ 

              மார்ச் மாதம் ஆண்​டுத் தேர்வு நடை​பெ​ற​வி​ருப்​ப​தா​லும்,​​ தற்​போது விடுப்​பட்ட விடு​முறை தினங்​களை ஈடு செய்​யும் வித​மாக அரை​யாண்​டுத் தேர்வு விடு​மு​றை​களை ரத்து செய்ய உத்​தே​சித்​துள்​ளோம்.​ ரத்​தான தேர்​வு​களை எப்​போது நடத்​து​வது என்​பது குறித்து செய்ய கருத்​தை​யும் கேட்​ட​றிந்த பின்​னர்​தான் ரத்​தான தேர்​வு​களை எப்​போது நடத்​தப்​ப​டும் என்று தெரி​ய​வ​ரும் என்​றார் அமிர்​த​வள்ளி.

Read more »

நவீன தகன மேடையை பரா​ம​ரிக்க அறக்​கட்​டளை

பண்ருட்டி,​ டிச.17: ​
 
                    பண்​ருட்டி நக​ராட்சி நிர்​வா​கத்​தால் புதி​தாக கட்​டப்​பட்​டுள்ள நவீன எரி​வாயு தகன மேடையை பரா​ம​ரிப்​ப​தற்​காக ஆத்ம ஜோதி அறக்​கட்​டளை என்ற புதிய அறக்​கட்​டளை புதன்​கி​ழமை அமைக்​கப்​பட்​டது.​
 
                         பண்​ருட்டி நகர நிர்​வா​கத்​தின் சார்​பில் கும்​ப​கோ​ணம் சாலை கெடி​லம் நதிக் கரை​யில் சுமார் ரூ.43 லட்​சம் செல​வில் நவீன் எரி​வாயு தகன மேடை அமைக்​கப்​பட்​டுள்​ளது.​
 
                      மே​லும் ரூ.25 லட்​சம் செல​வில் சிமென்ட் சாலை,​​ சுற்​றுச் சுவர்,​​ குளி​ய​ல​றை​யு​டன் கூடிய கழிப்​பறை,​​ பூங்கா மற்​றம் நீர் ஊற்று அமைக்​கப்​ப​ட​வுள்​ளது.​ இந்த எரி​வாயு தகன மேடையை சிறப்​பான முறை​யில் அறக்​கட்​டளை மூலம் பரா​ம​ரிக்க,​​ அறக்​கட்​டளை அமைப்​ப​தற்​கான கூட்​டம் நக​ராட்சி அலு​வ​ல​கத்​தில் புதன்​கி​ழமை நடை​பெற்​றது.​ ந​கர்​மன்​றத் தலை​வர் எம்.பச்​சை​யப்​பன் தலை​மை​யில் நடை​பெற்ற இக் கூட்​டத்​தில் உள்​ளூர் பிர​மு​கர்​கள் மற்​றும் முக்​கி​யஸ்​தர்​கள் பலர் கலந்து கொண்டு    ஆத்ம ஜோதி அறக்​கட்​டளை  என பெய​ரிட்​ட​னர்.​ 
 
                       இந்த அறக்​கட்​ட​ளை​யின் தலை​வ​ராக எஸ்.வி.ஜூ​வல்​லரி உரி​மை​யா​ளர் எஸ்.வைரக்​கண்​ணு​வும்,​​ துணைத் தலை​வர்​க​ளாக கே.என்.சி.மோக​ன​கி​ருஷ்​ணன்,​​ சபா​பதி செட்​டி​யார்,​​ டி.சண்​மு​கம் செட்​டி​யா​ரும்,​​ செய​ல​ராக திரு​வள்​ளூ​வர் மெட்​ரிக் பள்ளி தாளா​ளர் ஆர்.சேர​னும்,​​ பொரு​ள​ராக நெய்வேலி கல்வி அறக்​கட்​டளை தலை​வர் ஆர்.சந்​தி​ர​சே​கர் உள்​ளிட்ட இணை செய​லர்​கள் மற்​றும் செயற்​குழு உறுப்​பி​னர்​கள் தேர்வு செய்​யப்​பட்​ட​னர்.​ கூட்​டத்​தில் ஆணை​யர் கே.உமா​ம​கேஸ்​வரி,​​ பொறி​யா​ளர் சக்​தி​வேல்,​​ நெய்வேலி கல்வி அறக்​கட்​ட​ளை​யின் கீழ் இயங்​கும் கல்​வி​யி​யல் கல்​லூ​ரி​யின் தாளா​ளர் எம்.நட​ரா​ஜன்,​​ கால்​நடை மருத்​து​வர் சண்​மு​கம் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.

Read more »

மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

கட​லூர்,​​ டிச.​ 17:​ 

                    மழை​யி​னால் தொழில் வாய்ப்பை இழந்து பாதிக்​கப்​பட்டு இருக்​கும் மீன​வர் குடும்​பங்​க​ளுக்​குத் தலா ரூ.​ 5 ஆயி​ரம் நிவா​ர​ணம் வழங்க வேண்​டும் என்று சிங்​கா​ர​வே​லர் முன்​னேற்​றக் கழ​கம் கோரிக்கை விடுத்​துள்​ளது.​

               பு​தன்​கி​ழமை நடந்த இக்​கட்​சி​யின் அவ​சர ஆலோ​ச​னைக் கூட்​டத்​தில் மேற்​கண்ட தீர்​மா​னம் நிறை​வேற்​றப்​பட்​டது.​ ​மழை​யி​னால் பாதிக்​கப்​பட்ட விவ​சா​யி​க​ளுக்​கு ரேஷன் கார்​டுக்கு ரூ.​ 2 ஆயி​ரம் வீதம் விவ​சா​யி​க​ளுக்கு நிவா​ர​ணம் வழங்க வேண்​டும்.​ கட​லூர் அருகே கட​லில் நிறுத்தி வைக்​கப்​பட்டு இருக்​கும் ரசா​ய​னப் பொருள்​கள் அடங்​கிய கப்​பலை அப்​பு​றப்​ப​டுத்த வேண்​டும் என்​றும் தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.

Read more »

சிதம்பரம், காட்டுமன்னார் கோவிலில் வெள்ள அபாயத்தை தவிர்க்க இரு திட்டங்கள்: ​ஆட்​சி​யர்

சிதம்​ப​ரம்,​​ ​ டிச.17:​ ​ 

                      கட​லூர் மாவட்​டத்​தில் குறிப்​பாக சிதம்​ப​ரம்,​​ காட்​டு​மன்​னார்​கோ​வில் தாலுக்​காக்​க​ளில் ஆண்டு தோறும் ஏற்​பட்டு வரும் வெள்ள அபா​யத்தை தடுக்க மாநில அரசு நிரந்​தர தீர்வு காண கோரி​ய​தன் பேரில் சென்னை சேப்​பாக்​கம் நீர் ஆதா​ரங்​கள் துறை முதன்மை பொறி​யா​ள​ருக்கு மாவட்ட நிர்​வா​கம் மூலம் இரு திட்​டங்​கள் செயல்​ப​டுத்த முன்​மொ​ழிவு கடி​தம் வியா​ழக்​கி​ழமை அனுப்​பப்​பட்​டுள்​ளது என கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் தெரி​வித்​தார்.​

                 சி​தம்​ப​ரம் கோட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் வியா​ழக்​கி​ழமை அவர் செய்​தி​யா​ளர்​க​ளுக்கு அளித்த பேட்டி:​ 

                             வெள்ள அபா​யத்தை தடுக்க நிரந்​தர தீர்வு என்ன என்​பதை சென்னை சேப்​பாக்​கத்​தில் உள்ள நீர் ஆதா​ரங்​கள் துறை முதன்மை பொறி​யா​ளரை தொடர்பு கொள்​ளு​மாறு மாநில அர​சால் வியா​ழக்​கி​ழமை கோரப்​பட்​டது.​÷அ​தன் பேரில் முதன்மை பொறி​யா​ளரை தொடர்பு கொண்டு இரு திட்​டங்​களை தெரி​வித்து முன்​மொ​ழிவு கடி​தம் அனுப்​பப்​பட்​டுள்​ளது.​ அதா​வது வடி​கால் பகு​தி​யான சிதம்​ப​ரம்,​​ காட்​டு​மன்​னார்​கோ​வில் தாலுக்​கா​க​ளுக்​கும் வரும் கரு​வாட்​டு​ஓடை,​​ செங்​கால்​ஓடை,​​ பாளை​யங்​கோட்டை ஓடை,​​ ஆண்​டிப்​பள்​ளம்​ஓடை ஆகி​ய​வற்​றின் உப​ரி​நீரை ஆங்​காங்கே தேக்கி வைக்​க​வும்,​​ வீரா​ணம் ஏரி​யில் உள்ள மணல்​மே​டு​கள் மற்​றும் காடு​களை அகற்றி,​​ கரை​களை பலப்​ப​டுத்தி ஏரி​யின் கொள்​ள​ளவை உயர்த்​து​வது என இரு திட்​டங்​களை செயல்​ப​டுத்த நீர் ஆதா​ரங்​கள் துறைக்கு முன்​மொ​ழிவு கடி​தம் அனுப்​பப்​பட்​டுள்​ளது.​வீரா​ணம் ஏரி​யின் 28 மத​கு​களை சீர​மைக்​க​வும்,​​ சேத்​தி​யாத்​தோப்பு பாழ்​வாய்க்​கா​லில் ரெகு​லேட்​டர் அமைக்​க​வும்,​​ ஆறு,​​ வாய்க்​கால்​களை பலப்​ப​டுத்த ரூ.23 கோடியே 68 லட்​சம் நிதி ஏற்​கெ​னவே ஒதுக்​கப்​பட்டு அதற்​கான பணி​கள் மழை நின்​ற​வு​டன் தொடங்​கப்​ப​டும்.​

                       க ​ட​லூர் மாவட்​டத்​தில் கடந்த ஆண்டு டிசம்​பர் வரை 125.47 மி.மீ.​ மழை பெய்​துள்​ளது.​ இந்த ஆண்டு வியா​ழக்​கி​ழமை ​(டிசம்​பர் 17) வரை 223.99 மி.மீ.​ மழை இரு மடங்​காக பெய்​துள்​ளது.​ இதில் டிசம்​பர் மாதம் அதிக மழை பெய்​துள்​ள​தா​லும்,​​ பெரம்​ப​லூர்,​​ அரி​ய​லூர் உள்​ளிட்ட அண்டை மாவட்​டங்​களி​லி​ருந்து வரும் உபரி நீரி​னால் தற்​போது வெள்​ளச் சேதத்தை ஏற்​ப​டுத்​தி​யுள்​ளது.​

                   மே​லும் வீரா​ணம் ஏரிக்கு கூடு​த​லாக வரும் உபரி நீரை வெளி​யேற்​றப்​ப​டு​வ​தால் குறிப்​பாக காட்​டு​மன்​னார்​கோ​வில் பகு​தி​யில் உள்ள விவ​சா​யி​க​ளுக்​கும்,​​ மக்​க​ளும் எதிர்​நோக்​கி​யுள்ள பிரச்​னை​யா​கும்.​

                      ஏ​ரி​யின் நீர்​மட்​டம் வியா​ழக்​கி​ழமை மாலை 46.4 அடியை எட்​டி​யுள்​ளது.​ ஏரியி​லி​ருந்து 5 ஆயி​ரம் கன​அடி நீர் வெள்​ளி​யங்​கால்​ஓ​டை​யி​லும்,​​ வி.என்.எஸ்.​ அணைக்​கட்​டி​லும் வெளி​யேற்​றப்​ப​டு​கி​றது.​ அண்டை மாவட்​டங்​களி​லி​ருந்து வரும் உபரி நீர் குறைந்து விட்​ட​தால் ஏரிக்கு நீர்​வ​ரத்து 3ஆயி​ரம் கன​அ​டி​யாக குறைந்​துள்​ளது.​

                    நீர்​மட்​டம் 46.2 அடி குறைந்​த​வு​டன் ஏரியி​லி​ருந்து நீர் வெளி​யேற்​று​வது நிறுத்​தப்​ப​டும்.​ காட் ​டு​மன்​னார்​கோ​வில் அருகே உள்ள திரு​நா​ரை​யூர்,​​ நடுத்​திட்டு,​​ வீர​நத்​தம்,​​ சர்​வ​ரா​ஜன்​பேட்டை,​​ நந்​தி​மங்​க​லம்,​​ வானா​தி​ரா​யன்​பேட்டை உள்​ளிட்ட கிரா​மங்​க​ளில் 1700 ஏக்​க​ரில் நெற்​ப​யிர்​கள் நீரில் மூழ்​கி​யுள்​ளது வியா​ழக்​கி​ழமை எடுக்​கப்​பட்ட கணக்​கெ​டுப்​பில் தெரிய வந்​துள்​ளது.​

                   வெள்​ளிக்​கி​ழமை மீண்​டும் முழு​மை​யாக கணக்​கெ​டுத்து பயிர்​சே​தம் குறித்​தும்,​​ நிவா​ர​ணம் எவ்​வ​ளவு வழங்​கு​வது குறித்​தும் அரசு பரிந்​து​ரைக்கு அனுப்​பப்​ப​டும்.​ க​ட​லூர் மாவட்​டத்​தில் இது​வரை மழை,​​ வெள்​ளத்​தில் பகு​தி​யாக 56 வீடு​க​ளும்,​​ முழு​மை​யாக 15 வீடு​க​ளும் சேத​ம​டைந்​துள்​ளது.​ கட​லூர் தாலுக்கா தானூ​ரில் ​ மனித இழப்பு ஒன்​றும் ஏற்​பட்​டுள்​ளது.​ 245 ஏரி,​​ குளங்​க​ளில் 145 முழு​மை​யா​க​வும்,​​ 105 ஏரி,​​ குளங்​கள் 75 சத​வீ​தம் நிரம்​பி​யுள்​ளது.​

                  மே​லும் காவிரி டெல்டா மாவட்​டங்​க​ளில் மழை பெய்​யும் என வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ள​தால் வெள்​ளி​யங்​கால்​ஓடை,​​ விஎன்​எஸ் அணைக்​கட்டு கரை ஒரம் வசிக்​கும் மக்​கள் பாது​காப்​பாக இருக்க அறி​வு​றுத்​தப்​ப​டு​கி​றது என ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் தெரி​வித்​தார்.​

               மா​வட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன்,​​ சிதம்​ப​ரம் கோட்​டாட்​சி​யர் ஜி.ராம​லிங்​கம் உள்​ளிட்​டோர் உட​னி​ருந்​த​னர்.​

Read more »

அண்​ணா​ம​லைப் பல்​கலை​ ஊழி​யர்கள் தொடர் உண்​ணா​வி​ர​தம்

சிதம்​ப​ரம்,​​ ​ டிச.17:​ ​ 

                           சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக ஊழி​யர் சங்​கத்​தி​னர் 6-வது ஊதி​யக்​குழு முதல் தவணை நிலு​வைத் தொகையை வழங்​கக்​கோரி மற்​றும் பல்​வேறு கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி அண்​ணா​ம​லை​ந​கர் பூமா கோயில் முன் புதன்​கி​ழமை முதல் தொடர் உண்​ணா​வி​ர​தம் மேற்​கொண்​டுள்​ள​னர்.​

                     2-வது நாளாக பூமா​கோ​யில் முன் நடை​பெற்ற உண்​ணா​வி​ர​தத்​துக்கு ஆசி​ரி​யர் -​ ஊழி​யர் கூட்​ட​மைப்பு தலை​வர் பி.இளங்கோ தலைமை வகித்​தார்.​ ஊழி​யர் சங்​கத் தலை​வர் மனோ​க​ரன்,​​ பொதுச் செய​லர் ரவி ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர்.​

                ஆ ​சி​ரி​யர்,​​ ஊழி​யர் நலச் சங்​கத் தலை​வர் ஆர்.உத​ய​சந்​தி​ரன்,​​ மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி மாநி​லக்​குழு உறுப்​பி​னர் மூசா,​​ பணி​நி​றைவு பெற்​றோர் சங்​கத் தலை​வர் கே.தட்​சி​ணா​மூர்த்தி,​​ ஜே.கண​பதி ​(சென்​னைப் பல்​கலை)​.​ பணி நிறைவு பெற்​றோர் சங்​கச் செய​லர் ஏ.சண்​மு​கம்,​​ ஆசி​ரி​யர் பணி​யா​ளர் பேரவை துரை.அசோ​கன் உள்​ளிட்​டோர் பேசி​னர்.

Read more »

சிதம்பரம் நட​ரா​ஜர் கோயில் செயல் அலு​வ​லர் அலு​வ​ல​கம் ரூ. 7.50 லட்சத்தில் புதுப்​பிப்பு

சிதம்​ப​ரம்,​​ ​ டிச.17:​ ​ 

                    சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயில் செயல் அலு​வ​லர் அலு​வ​ல​கம் ரூ.7.50 லட்​சம் செல​வில் புதுப்​பிக்​கும் பணி வியா​ழக்​கி​ழமை தொடங்​கி​யது.​

                   சி​தம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயிலை இந்து அற​நி​லை​யத் துறை கடந்த பிப்​ர​வரி 2-ம் தேதி கைய​கப்​ப​டுத்​தி​யது.​ பின்​னர் கோயில் வளா​கத்​தில் கிழக்கு கோபு​ரம் அருகே உள்ள கட்​ட​டத்​தில் செயல் அலு​வ​லர் அலு​வ​ல​கம் திறக்​கப்​பட்​டது.​அந்த கட்​ட​டம் மழை​யில் நீர் கசி​வ​தால் ரூ.7.50 லட்​சம் செல​வில் சீர​மைக்க இந்து அற​நி​லை​யத் துறை சார்​பில் நிதி ஒதுக்​கப்​பட்டு வியா​ழக்​கி​ழமை அதற்​கான பணி தொடங்​கப்​பட்​டது.​

                     கட்​ட​டத்​தின் மேல்​த​ளத்தை சீர​மைத்து உள்ளே டைல்ஸ் கற்​கள் பதிக்​க​வும்,​​ ஜன்​னல் கத​வு​கள் மாற்​ற​வும்,​​ முன்​பு​றம் உள்ள தக​ரக்​கூரை அகற்​றப்​பட்டு அதில் சிமென்ட் தளத்​தால் கூரை அமைக்​கப்​ப​ட​வுள்​ளது என அலு​வ​லக ஊழி​யர்​கள் தெரி​வித்​த​னர்.

Read more »

இன்று பள்​ளி​க​ளுக்கு விடு​முறை

சிதம்ப​ரம்,​​ ​ டிச.17: ​ ​ 
 
              சிதம்​ப​ரம்,​​ காட்​டு​மன்​னார்​கோ​வில் தாலுக்​காக்​க​ளில் உள்ள அனைத்து பள்​ளி​க​ளுக்​கும் வெள்​ளிக்​கி​ழமை விடு​முறை விடப்​பட்​டுள்​ளது.​
 
                    இது குறித்து கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் வெளி​யிட்ட செய்தி:​
 
              காவிரி டெல்டா பகு​தி​க​ளில் வெள்​ளிக்​கி​ழமை பலத்த மழை பெய்​யக்​கூ​டும் என வானிலை ஆய்வு மையம் அறி​வித்​துள்​ளது.​ இத​னால் வெள்​ளிக்​கி​ழமை ​(டிசம்​பர் 18 -​ இன்று)​ சிதம்​ப​ரம்,​​ காட்​டு​மன்​னார்​கோ​வில் தாலுக்​காக்​க​ளில் உள்ள அனைத்து பள்​ளி​க​ளுக்​கும் விடு​முறை விடப்​பட்​டுள்​ளது.​
 
               இந்த இரு தாலு​காக்​க​ளி​லும் உள்ள பள்​ளி​க​ளில் வெள்​ளிக்​கி​ழமை ​(இன்று)​ நடை​பெற இருந்த அரையாண்டுத் தேர்வு மற்​றொரு தேதிக்கு ஒத்தி வைக்​கப்​பட்​டுள்​ள​து.

Read more »

வெள்ளக்காடானது கடலூர் நகரம்

கடலூர்,​​ ​ டிச.​ 17:​ 
 
                    தொடர்ந்து பெய்​து​வ​ரும் மழை கார​ண​மாக கட​லூர் நக​ரில் தாழ்​வான பகு​தி​க​ளில் உள்ள பல நகர்​களை மழை​நீர் சூழ்ந்​துள்​ளது.​ ​​ வங்​கக் கட​லில் உரு​வான புயல் சின்​னம் கார​ண​மாக கட​லூர் மாவட்​டத்​தில் கடந்த 5 நாள்​க​ளாக கன மழை பெய்து வரு​கி​றது.​ இத​னால் தாழ்​வான பகு​தி​க​ளான கே.என்.பேட்டை தானம் நகர்,​​ திருப்​பாப்பு​லி​யூர் குப்​பங்​கு​ளம்,​​ குண்டு உப்​ப​ள​வாடி,​​ சுத்​துக்​கு​ளம்,​​ பெரி​யார் நகர்,​​ அழ​கப்பா நகர்,​​ ஆல்​பேட்டை,​​ புதுப்​பா​ளை​யம் மணலி எஸ்​டேட்,​​ ​ கே.கே.நகர் உள்​ளிட்ட பல பகு​தி​களை மழை வெள்​ளம் சூழ்ந்​துள்​ளது.​÷கே.கே.​ நக​ரில் 200-க்கும் மேற்​பட்ட வீடு​கள் மற்​றும் தனி​யார் பாலி​டெக்​னிக் கல்​லூ​ரி​யும் உள்​ளன.​    
 
                      இப்​ப​கு​தி​யில் ​ மழை​நீர் தேங்கி அப்​ப​குதி மக்​கள் பிர​தா​னச் சாலைக்கு வர​மு​டி​யா​மல் தவித்​த​னர்.​ நக​ராட்சி உறுப்​பி​னர் முத்து முயற்​சி​யால் வியா​ழக்​கி​ழமை பொக்​லைன் இயந்​தி​ரம் கொண்டு வரப்​பட்டு,​​ தேங்​கிய மழை​நீர் உப்​ப​னாற்​றில் வடிய ஏற்​பாடு செய​யப்​பட்​டது.​ அதைத் தொடர்ந்து மழை​நீர் வடிந்​தது.​
 
                          நக​ரில் ஏற்​கெ​னவே பெய்த மழை​யால் பாதிக்​கப்​பட்ட சாலை​களை சீர​மைக்​கும் முன்​ன​தாக,​​ தற்​போ​தைய மழை​யால் மீண்​டும் சாலை​கள் மிக​மோ​ச​மாக பழு​த​டைந்து விட்​டன.​ இத​னால் மக்​கள் போக்​கு​வ​ரத்து பெரும் சிர​மத்​துக்கு உள்​ளாகி இருக்​கி​றது.​ நெல்​லிக்​குப்​பம் சாலை,​​ வண்​டிப்​பா​ளை​யம சாலை மற்​றும் ​ பிர​தா​னச் சாலை​க​ளில் இருந்து பிரி​யும் நக​ராட்சி சாலை​கள் ​ பெரும்​பா​லா​னவை மிக மோச​மாக பழு​த​டைந்து கிடக்​கின்​றன.​ இத​னால் ஆட்டோ ரிக்ஷா,​​ வாடகை கார் ஓட்​டு​நர்​கள் அப் பகு​தி​க​ளுக்கு வர​ம​றுக்​கி​றார்​கள்.​ ​
 
                   கேப்பர் மலை​யில் உள்ள 20-க்கும் மேற்​பட்ட கிரா​மங்​களை இணைக்​கும் வண்​டிப்​பா​ளை​யம் சாலை பெரு​ம​ள​வுக்கு சேதம் அடைந்து கிடக்​கி​றது.​ இதில் சைக்​கிள்​கள் கூடச் செல்​ல​மு​டி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது.​ இச்​சா​லை​யில் உள்ள சிறிய பாலம் உடைந்து பெரிய பள்​ளம் ஏற்​பட்​ட​தால் அந்த வழி​யா​கச் செல்​லும் வாக​னங்​க​ளுக்கு அச்​சத்தை ஏற்​ப​டுத்தி உள்​ளது.​
 
                       மே​லும் சர​வ​ணன் நகர்,​​ நத்​த​வெளி சாலை​யோ​ரம் உள்ள நகர்​கள்,​​ அம்​பேத்​கார் நகர்,​​ பி.டி.ஜே.கார்​டன் உள்​ளிட்ட பல பகு​தி​க​ளில் இருந்து வரும் மழை​நீர்,​​ வாய்க்​கால்​கள் ஆக்​கி​ர​மிக்​கப்​பட்​ட​தால்,​​ மழை​நீர் வழிந்​தோட வழி​யின்றி வண்​டிப்​பா​ளை​யம் சாலை​யோ​ரம் உள்ள கோயில் விளை​நி​லத்​தில் பல நாள்​க​ளா​கத் தேங்​கிக் கிடக்​கி​றது.​ இத​னால் அப்​ப​குதி மக்​க​ளின் சுகா​தா​ரம் பெரி​தும் பாதிக்​கப்​பட்டு உள்​ளது.

Read more »

கட​லூர் மாவட்​டத்​தில் அதி​க​பட்​ச​ம் 87 மி.மீ.​ மழை

கடலூர்,​​ டிச.​ 17:​ 

                       கட​லூர் மாவட்​டத்​தில் வியா​ழக்​கி​ழமை 7-வது நாளாக மழை பெய்​தது,​​ கடந்த 24 மணி நேரத்​தில் அதி​க​பட்​ச​மாக பரங்​கிப்​பேட்​டை​யில் 87 மில்லி மீட்​டர் மழை பெய்​துள்​ளது.​

                வி​ யா​ழக்​கி​ழமை காலை 8-30 மணி​யு​டன் முடி​வ​டைந்த 24 மணி நேரத்​தில் கட​லூர் மாவட்​டத்​தில் முக்​கிய ஊர்​க​ளில் பெய்​துள்ள மழை​யின் அளவு மில்லி மீட்​ட​ரில் வரு​மாறு:​

                          ப​ரங்​கிப்​பேட்டை 87.​ தொழு​தூர் 68.​ வேப்​பூர் 54.​ கொத்​த​வாச்​சேரி 48.​ காட்​டு​ம​யி​லூர் 47.​ மேமாத்​தூர் 45.​ புவ​ன​கிரி 40,​ கட​லூர்,​​ சிதம்​ப​ரம் தலா 39.​ லால்​பேட்டை 38.​ சேத்​தி​யாத்​தோப்பு,​​ ஸ்ரீமுஷ்​ணம் தலா 35.​ லக்​கூர் 33.​ பெலாந்​துரை 32.​ கீழ்ச்​செ​று​வாய் 30.​ வான​மா​தேவி,​​ ​ விருத்​தா​ச​லம்,​​ அண​ணா​மலை நகர் தலா 23.​ குப்​ப​நத்​தம் 22.​ காட்​டு​மன்​னார்​கோ​யில் 10.​ 

                   ஏரி​க​ளில் நீர் மட்​டம்​ வியா​ழக்​கி​ழமை நில​வ​ரம் ​(மொத்த உய​ரம் அடைப்​புக் குறிக்​குள்)​:​÷வீ​ரா​ணம் ஏரி 46.90 ​ அடி ​(47.5 அடி)​.​ நீர் வரத்து வினா​டிக்கு 6 ஆயி​ரம் கன அடி.​ நீர் வெளி​யேற்​றம் விநா​டிக்கு 6,817 கன அடி.​ பெரு​மாள் ஏரி 6.5 அடி ​(6.5 அடி)​,​​ நீர் வெளி​யேற்​றம் விநா​டிக்கு 2,833 கன அடி.​ வாலாஜா ஏரி 4.2 அடி ​(5.5 அடி)​,​​ ​ ​ வெளி​யேற்​றம் வினா​டிக்கு 1,520 கன அடி.​ சேத்​தி​யாத்​தோப்பு அணைக்​கட்டு 5.5 அடி ​(7.5 அடி)​,​​ நீர் வெளி​யேற்​றம வினா​டிக்கு 20,909 கன அடி.​ வெலிங்​டன் ஏரி 8.5 அடி ​(27.7 அடி)​.​ நீர் வெளி​யேற்​றம் வினா​டிக்கு 302 கன அடி.​

Read more »

வீட​டுச் சுவர் இடிந்து தம்​பதி உள்​பட 3 பேர் காயம்

கட​லூர்,​​ டிச.​ 17: ​ 

                கட​லூ​ரில் வீட்​டுச் சுவர் இடிந்து விழுந்​த​தில் தம்​பதி உள்​ளிட்ட 3 பேர் காயம் அடைந்​த​னர்.​ தி​ருப்​பாப்பு​லி​யூர் நவ​நீ​தம்​ந​க​ரில் உள்ள ஜெய​பால் ​(31) என்​ப​வ​ரின் வீட்​டைச் சுற்றி மழை​நீர் தேங்கி நின்​றது.​ புதன்​கி​ழமை இரவு அவ​ரும்,​​ மனைவி ஜெய​லட்​சுமி ​(28),​ மகன் விஜ​ய​கு​மார் ​(9) ஆகி​யோ​ரும் வீட்​டில் அயர்ந்து தூங்​கிக்​கொண்​டி​ருந்​த​னர்.​  இந்​நி​லை​யில்,​வியா​ழக்​கி​ழமை அதி​காலை 4 மணிக்கு அவர்​க​ளது வீட்​டுச் சுவர் இடிந்து விழுந்​தது.​ இச் சம்​ப​வத்​தில் பலத்த காய​ம​டைந்த மூவ​ரும் கட​லூர் அரசு மருத்​துவ மனை​யில் சேர்க்​கப்​பட்​ட​னர்.​  இ​து​கு​றித்து திருப்​பாப்பு​லி​யூர் போலீ​ஸôர் வழக்​குப் பதிந்து விசா​ரணை நடத்​தி​னர்.​

Read more »

வாடகை செலுத்தாத கடைக்கு சீல்

சிதம்ப​ரம்,​​  டிச.​ 17: ​ ​ ​ 
 
                     சிதம்​ப​ரம் பஸ் நிலை​யத்​தில் நீண்​ட​கா​ல​மாக வாடகை பணம் கட்​டாத கடைக்கு வியா​ழக்​கி​ழமை சீல் வைக்​கப்​பட்​டது.​ இந்த பஸ் நிலை​யத்​தில் உள்ள குத்​த​கை​தா​ரர்​கள் நீண்ட கால​மாக வாடகை தொகை செலுத்​தா​மல் இருந்து வந்​த​னர்.​ இதை​ய​டுத்து,​​ வாடகை பணம் கட்​டாத கடை​க​ளுக்கு சீல் வைத்து வாடகை பாக்​கியை வசூ​லிக்க நக​ராட்சி ஆணை​யர் பி.​ ஜான்​சன் உத்​த​ர​விட்​டார்.​
 
                   அ​தன்​பே​ரில் நக​ராட்சி வரு​வாய் ஆய்​வா​ளர்​கள் காதர்​கான்,​​ கனி​மொழி மற்​றும் அலு​வ​லக ஊழி​யர்​கள் பஸ் நிலை​யத்​தில் அதி​க​ள​வில் பாக்கி வைத்​துள்ள கடையை வியா​ழக்​கி​ழமை சீல் வைத்​த​னர்.​ இந்த அதி​ரடி நட​வ​டிக்கை மூலம் வியா​ழக்​கி​ழமை ​ மட்​டும் ரூ.1.​ 65லட்​சம் வரு​வாய் ஆய்​வா​ளர்​க​ளால் வசூ​லிக்​கப்​பட்​டது.​  இ​த​னி​டையே வாடகை பாக்கி வைத்​துள்​ள​வர்​கள் கடை​க​ளுக்கு சீல் வைக்​கும் இந்த நட​வ​டிக்கை தொட​ரும் என ஆணை​யர் பி.​ ஜான்​சன் தெரி​வித்​துள்​ளார்.

Read more »

குளுக்​கோஸ் ஏற்​றும் போராட்​டம்

பண்ருட்டி,​ டிச.17: ​ 

                 பண்​ருட்டி பஸ் நிலை​யத்​தின் கட்​டண கழிப்​பறை கழி​வு​நீர் பொது சாக்​கடை கால்​வா​யில் கலப்​ப​தைத் தடுத்து நிறுத்​து​வது,​​ வார்​டு​க​ளில் உள்ள தொட்​டி​களை ​ சுத்​தப்​ப​டுத்தி மூடி அமைக்க வேண்​டு​வது,​​ குடி​நீ​ரில் சாக்​கடை நீர் கலந்து வரு​வதை தடுத்து நிறுத்​து​வது உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கை​களை முன் வைத்​தும்,​​ நக​ராட்​சி​யின் மெத்​தன போக்கை கண்​டித்​தும்,​​ செயல்​ப​டாத நக​ராட்​சியை செயல்​ப​டுத்த கோரி​யும் இந்​திய ஜன​நா​யக வாலி​பர் சங்​கம் சார்​பில் நகர நிர்​வா​கத்​துக்கு குளுக்​கோஸ் ஏற்​றும் போராட்​டம்  வியா​ழக்​கி​ழமை நடை​பெற்​றது.​

                 மா​வட்ட துணைத் தலை​வர் எம்.வெங்​க​டே​சன் தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில்,​​ நக​ரத் தலை​வர் இ.முக​ம​து​நா​சர்,​​ பொரு​ளர் ஜி.தினேஷ் முன்​னிலை வகித்​த​னர்.​மா ​வட்​டத் தலை​வர் என்.எஸ்​அ​சோ​கன்,​​ செய​லர் ஜெ.ராஜேஷ்​கண்​ணன் ஆகி​யோர் கண்​டன உரை நிகழ்த்​தி​னர்.​ இதில் மாவட்​டக் குழு ஆர்.தனம்,​​ நக​ரத் துணைச் செய​லர் ஆர்.ராஜேந்​தி​ரன்,​​ துணைத் தலை​வர் எஸ்.தணி​கா​ச​லம் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​ட​னர்.

Read more »

அனைத்​துக் கட்சி ​ ஆர்ப்​பாட்​டம்

விருத்தா​ச​லம்,​​ டிச.​ 17:​ 

                விருத்​தா​ச​லம் அரு​கே​யுள்ள முதனை கிரா​மத்​தில் ஆக்​கி​ர​மிப்​பு​களை அகற்​றக் கோரி அனைத்​துக் கட்​சி​யி​னர் புதன்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம்  நடத்​தி​னர்.​

                வி ​ருத்​தா​ச​லம் வட்​டம் முதனை கிரா​மத்​தில் வாரச் சந்தை அமைப்​ப​தற்கு இடை​யூ​றாக இருந்து வரும் ஆக்​கி​ர​மிப்​பு​களை அகற்ற நட​வ​டிக்கை எடுக்க கோரி​யும் ஆக்​கி​ர​மிப்​புக்கு துணை நிற்​போர் மீதும் நட​வ​டிக்கை எடுக்க வலி​யு​றுத்​தி​யும் விருத்​தா​ச​லம் வட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கம் முன் நடை​பெற்ற இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் பெண்​கள் உள்​பட 200-க்கும் மேற்​பட்​டோர் கலந்​து​கொண்​ட​னர்.​ ஆர்ப்​பாட்​டத்​துக்கு தி.மு.க.​ பிர​மு​கர் செம்பு​லிங்​கம் தலைமை வகித்​தார்.​ மதி​முக ஒன்​றிய அவைத் தலை​வர் சிவப்​பி​ர​கா​சம்,​​ தி.க ஒன்​றி​யச் செய​லர் பாஸ்​கர்,​​ பா.ஜ.க.​ பிர​மு​கர் வேல்​மு​ரு​கன்,​​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யைச் சேர்ந்த தாமோ​த​ரன்,​​ அதி​முக பிர​மு​கர் உத்​தண்டி ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர்.​ பா.ஜ.க.​ ஒன்​றி​யத் தலை​வர் கொளஞ்சி,​​ பா.ம.க.​ முன்​னாள் எம்.எல்.ஏ.​ கோவிந்​த​சாமி,​தி.க.​ மாநி​லப் பேச்​சா​ளர் கதி​ர​வன்,​பா.ம.க.​ மாவட்​ட​செ​ய​லா​ளர் செல்​வ​ராசு,​​ பா.ம.க.​ திரு​ஞா​னம்,​​ நகர் மன்ற தலை​வர் முரு​கன் ஆகி​யோர் பேசி​னர்.​ நேரு இளை​யோர் மைய நற்​பணி மன்​றச் செய​லர் தர்​மேந்​தி​ரன் நன்றி கூறி​னார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior