உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 21, 2010

வெற்றிகரமான நாட்டுக்கோழி வளர்ப்பு முறை


 
சிதம்பரம்: 
 
               தமிழக மக்களிடையே உணவுப் பழக்க வழக்கங்கள் மாறியதைத் தொடர்ந்து சந்தையில் அதிகளவு கோழிகள் தேவை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கறிக்கோழிகள், முட்டைகளின் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் உயர் ரக கோழிகளே அதிகளவு வளர்க்கப்பட்டு சந்தையின் தேவை நிறைவு செய்யப்பட்டு வருகிறது.
 
                  இந்த உயர் ரக கோழிகளின் உற்பத்திச் செலவுகள், பராமரிப்புச் செலவுகள் தொடர்ச்சியாக அதிகரித்து கோழி வளர்ப்பின் லாபம் வெகுவாக குறைந்து வந்தது. இத்தகைய நடைமுறைச் சூழலில் குறைந்த செலவு, பராமரிப்பில் வேளாண்மை கழிவுப் பொருள்களைக் கொண்டு வளர்க்கப்படும் பாரம்பரிய கோழி வளர்ப்பு விவசாயிகள், பண்ணை மகளிரிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. 
 
               குறிப்பாக பண்ணை மகளிரைக் கொண்ட சுயஉதவிக் குழுக்கள் வாயிலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஆந்திர மாநிலத்தில் பண்ணை மகளிர் மூலம் செயல்படுத்தப்பட்ட புதிய வாட்டா பகிர்வு முறை ஒரு பாரம்பரிய நாட்டுக் கோழி இனத்தை பாதுகாத்ததுடன் அதிகளவு வருமானம் பெற பெரிதும் உதவி புரிந்துள்ளது.
 
இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலை. வேளாண் விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது: 
 
                     ஆந்திர மாநிலத்தில் நாட்டுக் கோழிகள் வளர்ப்பு வெகுவாக குறைந்து அதிகளவு உயர் ரக கோழிகளே வளர்க்கப்பட்டு வந்தன. அத்தகைய கோழிகளை விட உற்பத்தி மற்றும் பாதுகாப்புச் செலவுகள் குறைந்த, பாரம்பரிய அசல் வகை நாட்டுக் கோழிகளை வாட்டா பகிர்வு முறையில் வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றி கண்டுள்ளனர்.ஆந்திர மாநிலம் நூமாமிடி என்ற கிராமத்தில் 10 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு ஜோடி அசல் கோழிகள் வழங்கப்பட்டன. மேலும் குழு உறுப்பினர்களுக்கு 2 அசல் சேவல்களும் வழங்கப்பட்டன. 
 
                       இவ்வாறு வளர்க்கப்பட்ட சமுதாய முயற்சியின் பயனாக 25 ஐந்து மாத குஞ்சுகள் உருவாக்கப்பட்டு இப்பெண்கள் குழு கிராமத்தில் கோழிகள் இல்லாத பெண்களுக்கு வழங்கியது. பின்னர் ஒரு வருட காலத்தில் 55 எண்ணிக்கையில் கோழி குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு வேளாண் சந்தையில் விற்பனை செய்யப்பட்டன. இவ்வாறு சமுதாய சூழல் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கோழிகள் 2890க்கும் விற்கப்பட்டது. இவ்வாறு குறைந்த செலவில் அதிக வருமானம் பெற்ற மகளிர் குழுவினர் 8 கோழிகளை அருகே உள்ள கிராமங்களில் உள்ள 8 பெண்களுக்கு வழங்கினர். 
 
                     தற்போது 8 ஆண்டுகள் கடந்து சுமார் 6 கிராமங்களில் சுமார் 74 பெண்கள் வாட்டா பகிர்வு முறையில் நாட்டுக்கோழிகளை வளர்த்து அதிக லாபம் பெற்றுள்ளனர். இவ்வாறு அசல் நாட்டுக் கோழி வளர்ப்பு ஆந்திர மாநில கிராமங்களில் சமுதாய அளவில் பெருகி ஒரு பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே தமிழக விவசாயிகள், பண்ணை மகளிர் ஆகியோர் இணைந்து நமது பாரம்பரிய நாட்டுக்கோழி ரகங்களை ஆந்திர மாநில வாட்டா பகிர்வு முறையை பின்பற்றி வளர்த்து அதிகளவு பொருளாதார பலன்களை பெறலாம்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் ஊதியமின்றி அவதிப்படும் டேங்க் ஆபரேட்டர்கள்

கடலூர் : 
                 கடலூர் மாவட்டத்தில் மாத ஊதியம் முறையாகக் கிடைக்காமல் குடிநீர் தொட்டி மோட்டார் இயக்குவோர் (டேங்க் ஆபரேட்டர்கள்) பலர் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் 621 ஊராட்சிகள் உள்ளன. 
                  இவற்றில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் மின்மோட்டார்களை இயக்கும் பணியில் சுமார் 4 ஆயிரம் ஆபரேட்டர்கள் ஈடுபடுகிறார்கள்.இவர்களுக்கு மாத ஊதியம் 6-வது ஊதியக்குழு பரிந்துரைக்கு முன்பு வரை  750 ஆக இருந்தது. தற்போது   1,120 வழங்கப்படுகிறது. இத்துடன் அகவிலைப் படியும் வழங்கப்படுகிறது.இந்நிலையில் குடிநீர் தொட்டி இயக்குவோரை நியமிக்கக் கூடாது என்று 1-1-2007-ல் அரசு உத்தரவிட்டது. எனினும் குடிநீர் தொட்டி இயக்குவோரை ஊராட்சி மன்றத் தலைவர்கள் தொடர்ந்து நியமித்து வருகிறார்கள்.
                  இதற்கிடையே ஊதியம் தொடர்பாக குடிநீர் தொட்டி இயக்குவோர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், அவர்களில் பலருக்கு நிலுவைத் தொகை  50 ஆயிரம் வரை வழங்கப்பட வேண்டியது இருக்கிறது.நிதிநிலை சரியாக இருக்கும் பட்சத்தில்  இந்தத் தொகையை வழங்குமாறு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு உத்தரவு அனுப்பியுள்ளனர்.ஆனால் பல ஊராட்சி நிர்வாகங்கள், இந்த நிலுவைத் தொகையையும் வழங்கவில்லை, மாதாந்திர ஊதியத்தையும் முறையாக வழங்குவதும் இல்லை என்று குடிநீர் மோட்டார் இயக்குவோர் புகார் தெரிவிக்கிறார்கள்.
                   பல ஊராட்சிகள் 4, 5 மாதங்களாக ஊதியம் வழங்காத நிலையும் இருக்கிறது.ஊராட்சி உதவியாளர்கள், குடிநீர்தொட்டி இயக்குவோருக்கு ஊதியம் முதலில் வழங்கப்பட வேண்டும், அடுத்து மற்ற செலவினங்களை மேற்கொள்ள வேண்டும்  என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருக்கிறார். எனினும் பல ஊராட்சி மன்றத் தலைவர்கள் இதைப் பின்பற்றுவது இல்லை. ஊராட்சியில் பணம் இல்லை. பணம் வரும்போது ஊதியம் வழங்குகிறோம் என்று ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூறுகிறார்களாம்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்பின், கடலூர் ஒன்றிய துணைத் தலைவர் (கங்கனாங்குப்பம் ஊராட்சித் தலைவர்) மாறன் கூறுகையில், 
                      ""குடிநீர் தொட்டி இயக்குவோரை நியமிக்க வேண்டாம் என்று அரசு தெரிவித்து விட்டது. இதனால் பல கிராமங்களுக்கு ஒருவர் பணிபுரிகிறார். பல ஊராட்சிகளில் பொதுநிதி மிகவும் குறைவாக உள்ளது. ஊராட்சி உதவியாளர்கள், குடிநீர் தொட்டி இயக்குவோருக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது.  இதனால் பலருக்கு பல மாதங்கள் ஊதியம் வழங்க முடியாத நிலையும், அரசு நிதி வரும்போது மொத்தமாக வழங்கும் நிலையும் ஏற்படுகிறது'' என்றார்.
உள்ளாட்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 
                  ""ஊராட்சிகளுக்கு குடிநீர் தொட்டி இயக்குவோரை நியமிக்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அதை மீறி பல ஊராட்சி மன்றத் தலைவர்கள் நியமித்து இருக்கிறார்கள். இதுவே பிரச்னைகளுக்குக் காரணம்.ஊராட்சிகளுக்கு மொத்தமாக நிதி வரும்போது, ஊழியர்களுக்கான ஊதியத் தொகையை நிறுத்தி வைத்து, மாதாமாதம் ஊதியம் வழங்க வேண்டும். ஆனால் பலர் நிதி வந்ததும், முழுவதையும் செலவிட்டு விட்டு, மீண்டும் எப்போது நிதி வரும் என்று காத்து இருக்கிறார்கள். இதனால்தான் பல மாதங்கள் ஊதியம்  வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. குடிநீர் தொட்டி இயக்குவோர் நியமனம் மற்றும் ஊதியம் குறித்து அரசுதான் நல்ல முடிவை எடுக்க வேண்டும்''  என்றார் அந்த அதிகாரி.

Read more »

தமிழக அரசின் ஆன்-லைன் சேவைகளுக்கு வரவேற்பு இல்லை

                   ஆன்-லைன் வழியே ஜாதிச் சான்றிதழ் வழங்குவது போன்ற அரசின் சேவைகள் மக்களிடம் சென்றடையவில்லை. இதனால், இந்தச் சேவை குறித்து விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் ஆளுமைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கல்வி உதவித்தொகை போன்றவற்றுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையும் முறை அமலில் உள்ளது. 

                    இந்த நிலையில், வருவாய்த் துறையைச் சார்ந்த பணிகளான ஜாதிச் சான்றிதழ், வருமான வரிச் சான்றிதழ், ஆதரவற்ற பெண்களுக்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் வழங்குதல், பட்டதாரியில்லா குடும்பம் எனும் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வர் கருணாநிதி கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.  இதனால், வட்டாட்சியர் அலுவலகங்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. திட்டம் தொடக்கப்பட்டு ஒரு வார காலம் ஆகவுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடம் அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. இதுவரை 15 பேர் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விழிப்புணர்வு பிரசாரம்:

                  "ஆன்-லைன் மூலம் அரசு சேவைகளைப் பெறலாம்' என்று பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு அதன் பிறகு திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தவும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.   இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது போன்று அரியலூர், பெரம்பலூர், கோவை, திருவாரூர், நீலகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் ஆன்-லைன் மூலம் அரசு சேவைகள் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.   இந்த மாவட்டங்களில் திட்டத்தை அமல்படுத்தப்படுவதற்கு முன்பு பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

Read more »

காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கணினி சிட்டா வழங்காமல் அலைக்கழிப்பு

சிதம்பரம்:

                காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கணினி சிட்டா விண்ணப்பத்தவர்களுக்கு சிட்டா வழங்கப்படாமல் அலைகழிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் உரம், விதை மற்றும் ஜிப்சம் உப்பு மற்றும் வங்கிகளில் பயிர்கடன், பயிர் காப்பீடு ஆகியவை பெற சிட்டா அடங்கல் விவசாயிகளுக்கு அவசியம் தேவை. தற்போது விவசாயிகளுக்கு  20 பணம் செலுத்தினால் கணினி சிட்டா வழங்க வருவாய்த்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

               காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கணினி சிட்டா கோரி பல மாதங்கள் ஆகியும் சிட்டா- அடங்கல் வழங்கப்படவில்லை. இதுகுறித்து வட்டாட்சியரை தொடர்பு கொண்டு கேட்ட போது கணினி பழுதடைந்துள்ளது என பலமாதங்களாக ஒரே பதிலையே தொடர்ந்து கூறி வருகிறார். காட்டுமன்னார்கோவில் வட்டம் பேரூர் கிராமத்தைச் சேர்ந்த கே. முத்துக்குமரன் என்ற விவசாயிக்கு குறைந்த விஸ்தீரணத்தில் சிட்டா அடங்கல் வழங்கியுள்ளனர். 

                     இவர் இதுகுறித்து சிதம்பரம் கோட்டாட்சியரிடம் மனு மூலம் முறையிட்டார். கோட்டாட்சியர் அ. ராமராஜூ விசாரணை மேற்கொண்டு அவரது உண்மையான நில விவரங்கள் குறித்து ஆய்வு செய்து விடுபட்ட விஸ்திரணத்தை சேர்த்து திருத்தி சிட்டா- அடங்கல் வழங்க 27-7-2010-ல் உத்தரவிட்டார். 2 மாதங்களுக்கு மேலாகியும் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் சிட்டா- அடங்கல் வழங்கவில்லை.

                              துகுறித்து அவர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினார். முதல்வர் தனிப்பிரிவிலிருந்து அவருக்கு உடனடியாக சிட்டா- அடங்கல் வழங்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு 3-9-2010-ல் கடிதம் அனுப்பியுள்ளது. இருந்தும் இதுவரை பலனும் இல்லை என்கிறார் விவசாயி முத்துக்குமரன்.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி எஸ். நடராஜன் கூறியது 

                   "கணினி சிட்டா வழங்குவது குறித்து நிறைய புகார்கள் வந்துள்ளது. விவசாயிகளுக்கு உடனடியாக கணினி சிட்டா வழங்க வருவாய்த்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கணினி சிட்டா வழங்கப்படாதது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்'' எனத் தெரிவித்தார்.

Read more »

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணிமூப்பு பட்டியல் நாளை வெளியீடு

நெய்வேலி:

                  என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணிமூப்பு பட்டியலை நிர்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட முடிவு செய்துள்ளது.சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நிர்வாகம் அக்டோபர் 10-ம் தேதி தொமுசவுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதையடுத்து தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் மட்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.

                   இந்நிலையில் 2008-ம் ஆண்டு மத்திய அமைச்சர் முன்னிலையில் புதுதில்லியில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், 2010 அக்டோபர் 10-ம் தேதி தொமுசவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி 5 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களை சொசைட்டியில் இணைப்பது மற்றும் தொழிலாளர்களின் பணிமூப்புப் பட்டியலை வெளியிடுதல் தொடர்பாக  நிர்வாகம், தொமுச நிர்வாகிகளுடன் புதன்கிழமை பேச்சு நடத்தியது. அப்போது உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படி அந்தந்த தொழிலகப் பகுதி நிர்வாகத் துறை அதிகாரிகள் மூலம், தற்போது பணிக்கு வந்துகொண்டிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பார்வைக்காக பணிமூப்புப் பட்டியலை வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

                          அதன் பின் பட்டியலின்படி பணிக்கு வந்துகொண்டிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் சொசைட்டியில் இணைப்பது தொடர்பான விண்ணப்பதையும் விநியோகித்து, அதை பூர்த்தி செய்து மீண்டும் அந்தந்தப் பகுதி நிர்வாகத் துறை தலைமை அதிகாரிகளிடம் ஒப்படைப்பது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

Read more »

மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை: கடலூர் சிப்காட் பொதுக் கழிவுநீர் அகற்று நிலைய மின்இணைப்பு துண்டிப்பு

கடலூர்:

                சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், கடலூர் சிப்காட் பொதுக் கழிவுநீர் அகற்று நிலையத்துக்கான மின் இணைப்புகள் அண்மையில் துண்டிக்கப்பட்டன.  

                 கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 30-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ரசாயனத் தொழிற்சாலைகள்.  இவற்றில் 19 ரசாயனத் தொழிற்சாலைகள் இணைந்து, ரூ.  4 கோடி முதலீட்டில் கியூசெக்ஸ் என்ற பொதுக் கழிவுநீரகற்று நிலையத்தை 2001-ல் உருவாக்கிச் செயல்படுத்தின. இதில் சிப்காட் நிறுவனம் 30 சதவீதம் முதலீடு செய்திருந்தது. இந்த நிறுவனம் தனது உறுப்பு தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைப் பெற்று, கடலுக்குள் செலுத்தும் பணியைச் செய்து வந்தது.  

                    தற்போது கியூசெக்ஸ் நிறுவனத்துடன் 8 தொழிற்சாலைகள் மட்டுமே இணக்கப்பட்டுள்ளன. மற்ற தொழிற்சாலைகள் சொந்தமாக கழிவு நீரகற்று நிலையங்களை உருவாக்கியதாலும், சில தொழிற்சாலைகள் கழிவுநீர் எதையும் வெளியேற்றாமல் 100 சதவீதம் மறுசுழற்சி செய்து, பயன்படுத்துவதாலும் கியூசெக்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகிக்கொண்டன. இந்த நிலையில் கியூசெக்ஸ் நிறுவனம் மீது பல புகார்கள் எழுந்தன. 

                   முறையாக சுத்திகரிக்கப்படாத கழிவுகள், ஆலைகளில் இருந்து கியூசெக்ஸ் நிறுவனத்துக்கு வருவதாகவும், கியூசெக்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரில் ரசாயனக் கழிவுகள் அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட அதிகம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மாசு அதிகம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.  

                 2000 ஆண்டு முதல் 5 முறை கியூசெக்ஸ் நிறுவனத்துக்கு, மாசுக் கட்டுப்பாடு வாரியம் இதுதொடர்பாக விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. 2004 முதல் குழாய்களில் ரசாயனக் கழிவுகள் கசிவு, உடைப்பு, நீர் நிலைகளில் கழிவுகள் கலத்தல் போன்ற 15 சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாகவும், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.  மேலும் கியூசெக்ஸ் நிறுவனம் இயங்குதற்கு, மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் தடையில்லாச் சான்று மட்டுமே பெறப்பட்டு இருப்பதாகவும், கட்டுமான இசைவாணை, செயல்படுவதற்கான இசைவாணை, கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தில் இருந்து அனுமதி பெறப்படவில்லையாம். 

                   ஆனால் மாசுக் கட்டுப்பாடு வாரியம் உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.  இந்நிலையில் 2004-ம் ஆண்டு சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு குறித்து, எம்.நிஜாமுதீன் தலைமையிலான மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு பேரவை, தி அதர் மீடியா, குளோபல் கம்யூனிட்டி மானிட்டரிங், சிப்காட் கம்யூனிட்டி மானிட்டர் ஆகிய அமைப்புகள் இணைந்து, கேஸ் ட்ரபிள் என்ற அறிக்கையை வெளியிட்டன.  இந்த அறிக்கை அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த இந்த வழக்கில், கியூசெக்ஸ் நிறுவனம், சில தொழிற்சாலைகள், சிப்காட் கம்யூனிட்டி மானிட்டர் ஆகியவை தங்களை இணைத்துக் கொண்டன.  

               வழக்கில் கடந்த 21-ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. 4 வாரத்துக்குள் கியூசெக்ஸ் நிறுவனத்தை முடிவிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில், மாசுக் கட்டுப்பாடு வாரியம் கேட்டுக்கொண்டபடி, கியூசெக்ஸ் நிறுவனத்துகான மின் இணைப்புகளை, மின்சார வாரியம் வியாழக்கிழமை துண்டித்தது.  

இதுகுறித்து சிப்காட் தொழிற்சாலைகளின் தலைவர் இந்தர்குமார் கூறுகையில், 

                      ""ரசாயனக் கழிவுகளை அகற்றுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும் என்று கூறித்தான், ஆலைகளுக்கான நிலங்களை சிப்காட் வழங்கியது. கியூசெக்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ள ரசாயனத் தொழிற்சாலைகள் இதனால் பெரும் பாதிப்பை சந்திக்கும். ஒரு சில நாள்கள் மட்டுமே அவை தமது கழிவுகளை ஆலை வளாகத்தில் சேமித்து வைக்க முடியும். அதன்பிறகு ஆலையின் உற்பத்தியை நிறுத்த வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழப்பார்கள்'' என்றார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் முதலாவது சுற்றுச்சூழல் மேம்பாட்டு கழிவறை

நெல்லிக்குப்பம் : 

                   வரக்கால்பட்டு பள்ளியில் சுற்றுச்சூழல் மேம் பாட்டு கழிவறையை எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் திறந்து வைத்தார். நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு அரசு உயர் நிலைப்பள்ளியில் வேர்எவர் இந்தியா சர்வீஸ் அமைப்பினர் சுற்றுச்சூழல் மேம்பாட்டு கழிவறை கட்டியுள்ளனர். இங்கு ஒரே அறையில் இரண்டு கழிவறைகள் இருக்கும். முதலில் ஒன்றை மட்டும் பயன்படுத்த வேண்டும். 

                     மலம் கழித்தவுடன் தண்ணீர் ஊற்றாமல் சாம்பல் போட வேண்டும். துர்நாற்றம் இருக்காது. அந்த டாங்க் நிரம்பியவுடன் காற்று புகாமல் மூடிவிட்டு அடுத்த கழிவறையை பயன்படுத்த வேண்டும். மூடி வைத்த டாங்கில் உள்ள மனித மலம் சில மாதங்களில் மக்கி தரமான விவசாய உரமாகிவிடும். மனித சிறுநீரையும் வீணாக்காமல் தொட்டியில் பிடித்து விவசாயத்துக்கு பயன்படுத்துகின்றனர்.

                     இதுபோன்ற கழிவறைக்கு தண்ணீர் தேவையும் குறையும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் இதுபோன்று இருபது பள்ளிகளில் கழிவறைகள் கட்டப்படுகிறது. மாவட்டத்திலேயே முதன் முதலாக வரக்கால்பட்டு பள்ளியில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. தலைமையாசிரியர் ஜெயா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். பிளஸ் தொண்டு நிறுவன தேசிய இயக்குனர் பரமசிவம், ஆறுமுகம், அனுகிரகா சேட்டிலைட் டவுன் நிர்வாக இயக்குனர் மணிரத்தினம், அந்தோணிசாமி, அங்கமுத்து, கவுன்சிலர்கள் விஜயகுமார், தமிழ்மாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில் சுற்றுச்சூழல் கழிவறையை திறந்து வைத்து எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பேசுகையில், 

                          "தமிழக முதல்வர் கருணாநிதி வழியில் தொடர்ந்து நாங்களும் பாடுபடுகிறோம். கழிவறை கட்டுவது முக்கியமல்ல. மாணவர்கள் முறையாக பயன்படுத்தினால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். மாணவர்கள் நன்றாக படித்து தனியார் பள்ளிகளை விட நன்கு மதிப் பெண் பெற வேண்டும்' என பேசினார்.

எம்.எல்.ஏ., வருத்தம் : தற்போது வரை வரக்கால்பட்டு பகுதி என் தொகுதியில் உள் ளது. தொகுதி மறு சீரமைப்புக்குப்பின் இந்த ஊர் குறிஞ்சிப்பாடியில் சேர்வது வருத்தமாக உள்ளது. என்னால் முடிந்தவரை பள்ளி வளர்ச்சிக்கு பாடுபட் டேன் என வருத்தத்துடன் பேசினார்.

Read more »

கடலூர் சாலைகளின் பரிதாப நிலை: சேற்றில் உருளும் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்டுகள்

கடலூர்:

                 கடலூர் நகரில் சாலைகளின் பரிதாப நிலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞர்கள் புதன்கிழமை சேற்றில் உருளும் போராட்டம் நடத்தினர்.

                      தரமற்ற சாலைகள், அங்கீகரிக்கப்படாத லே-அவுட்டுகளுக்குப் பேர்போன கடலூரில், பாதாளச் சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்ட பின், சாலைகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியதாக மாறிவிட்டது. சாலைகளால் கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வரும் சொல்லொண்ணா துயரங்களை மாற்ற, மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்த நடவடிக்கை எதையும் எடுத்துவிடவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு.  என்றாலும் மக்களின் சகிப்புத் தன்மை அவர்களுக்கு நல்லதொரு கேடயமாக அமைந்து விடுகிறது. எனவேதான் பொதுநல அமைப்புகளின் போராட்டங்கள் அலுவலர்களின் மனப்போக்கில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. 

                 கடலூரில் நள்ளிரவில் 30 நிமிடம் மழை பெய்தால்போதும், காலையில் கடலூரில் பல நகர்களில் வசிக்கும் மக்கள் வீட்டைவிட்டு வெளிவர முடியாது என்ற நிலை.  நடக்கவும் முடியாது, இருசக்கர வாகனங்களை இயக்கவும் முடியாது. ஆனால் 4 சக்கர குளிர்பதன வாகனங்களில் வரும் ஆட்சியாளர்களுக்கோ இதுவெல்லாம் ஒரு பிரச்னையாகவே தெரியவில்லை என்கிறார்கள் பொது  மக்கள். 

                         அண்மைக் காலமாக கடலூர் திருப்பாப்புலியூர் சங்கரநாயுடு வீதி, பாதிரிக்குப்பம் கூத்தப்பாக்கம் சாலை (மாநில நெடுஞ்சாலைகள்) ஸ்டேட் பாங்க் காலனி நகராட்சி சாலை ஆகியவை குண்டும் குழியுமாக மாறியதுடன், மழையால் சேறும் சகதியுமாக மாறிவிட்டன. சாலைகளை செப்பனிட துரித நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பாப்புலியூர் காவல் நிலையம் அருகே, புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. 

                   அதைத் தொடர்ந்து சாலைகளின் பரிதாப நிலையை கண்டித்து 4 இளைஞர்களும் ஒரு பெண்ணும் சேற்றில் உருண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்தப் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் நகரச் செயலாளர் வி.சுப்புராயன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஜி.மாதவன், மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேஷ்கண்ணன், நகரக்குழு உறுப்பினர் ரஜினிஆனந்த், தியாகராஜன், எஸ்.ராஜாத்தி, தனுசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

நெய்வேலி மாணவிகளுக்கு சூழலியல் கல்விப் பயிற்சி

நெய்வேலி:

                   நெய்வேலியில் உள்ள வனவியல் விரிவாக்க மையத்தில் மாணவர்களுக்கு அண்மையில் சூழலியல் கல்விப் பயிற்சி அளிக்கப்பட்டது.  

                  இப்பயிற்சி வகுப்பில் நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள என்எல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 32 மாணவிகள் ஆசிரியர் பாலகுருநாதன் தலைமையில் பங்கேற்றனர். மாவட்ட வனவியல் விரிவாக்க அலுவலர் குமாரவேலு  வரவேற்றார். பயிற்சி வகுப்பின் போது, வனங்களால் கிடைக்கும் நேரடி மற்றும் மறைமுகப் பயன்கள், வனம் அழிவதால் ஏற்படும் தீமைகள், வன உயிரினங்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உலக வெப்பமயமாதலால் ஏற்படும் தீமைகள், மரம் வளர்ப்பு குறித்து விழுப்புரம் மாவட்ட வனவியல் விரிவாக்க அலுவலர் ஏழுமலை மாணவிகளிடையே எடுத்துரைத்தார். வனவியல் விரிவாக்க விளம்பர அலுவலர் பாண்டியன் நன்றி கூறினார். 

Read more »

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

கடலூர்:

                  டலூர் பெரியார் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு, விளையாட்டு உபகரணங்களை, நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் கெய்க்வாட் பாபு புதன்கிழமை வழங்கினார்.  

                  பெரியார் கல்லூரி தாழ்த்தப்பட்ட மாணவர்கள் விடுதியில் 80 மாணவர்கள் தங்கிப் படிக்கிறார்கள். அவர்கள் மாலை நேரங்களில் விளையாட, விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து இருந்தனர்.மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கெய்க்வாட் பாபு, கிரிக்கெட் மட்டை, பந்து, வாலிபால் நெட், பந்து, கேரம் போர்டு, செஸ் இறகுப் பந்து, வலை உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை, விடுதிக்குச் சென்று வழங்கினார். நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

பேரவை மதிப்பீட்டுக் குழு 25-ல் கடலூர் வருகை

கடலூர்:

               குத்தாலம் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையிலான தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு 25-ம் தேதி கடலூர் வருகிறது.  

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

                           கடலூர் மாவட்டத்தில் பிற்பட்டோர், மிகப்பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றின் பணிகளை ஆய்வு செய்ய சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு 25-ம் தேதி கடலூர் வருகிறது.  இக்குழு நெய்வேலி, பண்ருட்டி, கடலூர் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து, பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய உள்ளது. அதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடத்த உள்ளது என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

சென்னை - திருச்சி விரைவு ரயில் திருப்பாதிரிப்புலியூரில் நின்று செல்லும்

கடலூர் : 

                     சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

                       சென்னை - மயிலாடுதுறை வழியாக கடந்த ஏப்., 23ம் தேதி முதல் ரயில் இயக்கப்படுகிறது. மே முதல் தேதி முதல் இயக்கப்படும் சென்னை - திருச்சி சோழன் விரைவு ரயில் திருப்பாதிரிப்புலியூரில் நிற்பதில்லை. இதனால் ரயில் பயணிகள், மக்கள் பிரதிநிதிகள் திருப்பாதிரிப்புலியூரில் நின்று செல்ல வலியுறுத்தி வந்தனர். நகர் நலச்சங்கங்கள் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தின. இதன் பயனாக தற்போது சோழன் விரைவு ரயில் திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்ல நிர்வாகம் இசைவு தெரிவித்துள்ளது.

இது பற்றி திருச்சி ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சிவராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

                        திருச்சி - சென்னை எழும்பூர் விரைவு ரயிலுக்கு சோதனை அடிப்படையில் 6 மாத காலத்திற்கு கீழ்கண்ட ஊர்களில் இருமார்க்கத்திலும் நின்று செல்லும் இந்த நிறுத்தங்கள் 1.11.2010 முதல் 30.04.2011 வரை அமலில் இருக்கும். திருச்சியில் இருந்து தினமும் காலை 9 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (எண் 6854) பூதலூருக்கு 9.41க்கு வரும். மீண்டும் 9.42க்கு புறப்படும்.

                        வைத்தீஸ்வரன் கோவிலுக்கு 11.16 - 11.17, திருப்பாதிரிப்புலியூருக்கு 12.43 வந்தடைந்து 12.45க்கு புறப்படும். பண்ருட்டியில் 1.08 - 1.09, தாம்பரம் 4.28 - 4.30 ஆகிய இடங்களில் நின்று செல்லும். எதிர்மார்க்கத்தில் சென்னை எழும்பூர் - திருச்சி விரைவு ரயில் (எண் 6853) எழும்பூரில் காலை 8 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்தில் காலை 8.43 - 8.45 மணிக்கும், பண்ருட்டியில் 11.39 -11.40 மணிக்கும், திருப்பாதிரிப்புலியூர் 12.15 - 12.17 மணிக்கும், வைத்தீஸ்வரன் கோவிலில் 1.21 - 1.22 மணிக்கும், பூதலூர் 3.08 - 3.09 மணிக்கும் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

பரங்கிப்பேட்டை புறவழிச்சாலையில் அடிக்கடி விபத்து "சென்டர் மீடியா' அமைக்கப்படுமா?

பரங்கிப்பேட்டை : 

                  பு.முட்லூர் புறவழிச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதைத் தவிர்க்க சாலையின் நடுவில் "சென்டர் மீடியா' அமைக்க வேண்டும். பு.முட்லூரில் இருந்து சிதம்பரத்திற்கு வெள்ளாற்று பாலம் வழியாக புறவழிச்சாலை செல்கிறது. 

                 இவ்வழியாக இதுவரை போக்குவரத்து துவங்கப்படாத நிலையில் பஸ்கள், கனரக வாகனங்கள் என தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. பு.முட்லூரில் புறவழிச்சாலை துவங்கும் இடத்தில் சாலையை பிரிக் கும் வகையில் "சென்டர் மீடியா' அமைக்காததால் கடலூர், புவனகிரி மற் றும் புறவழிச்சாலையில் வரும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. 

                     கடந்த நான்கு மாதங்களில் பு.முட்லூர் புறவழிச்சாலை பிரியும் இடத் தில் 10க்கும் மேற்பட்ட விபத்துகளில் பலர் படுகாயமடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் பு.முட்லூர் புறவழிச் சாலை சாலை துவங்கும் இடத்தில் ரவுண்டானாவுடன் கூடிய "சென்டர் மீடியா' அமைக்க வேண்டும்.

Read more »

காட்டுமன்னார்கோவிலில் முதல் முறையாக "ஸ்மார்ட் கிளாஸ்" வகுப்புகள் அறிமுகம்

காட்டுமன்னார்கோவில் : 

                   காட்டுமன்னார்கோவிலில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் பாடம் நடத்தும் விதமாக ஜி.கே. மெட்ரிக் பள்ளியில் "ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எல்.கே.ஜி., முதல் 12ம் வகுப்பு வரை உள்ள 19 வகுப்புகள் 80 லட்சம் ரூபாய் செலவில் ஸ்மாட் கிளாசாக மாற்றப் பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அருள் மொழிதேவி தலைமை தாங்கினார். 

                      பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் குமாரராஜா வரவேற்றார். செயலாளர் அருண் வகுப்புகளை அறிமுகப்படுத்தினார். சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வகுப்புகளை துவக்கி வைத்தார். பருவதராஜ குருகுல பள்ளி தலைமை ஆசிரியர் சின்னமணி, துணை தலைமை ஆசிரியர் பழனிசாமி, உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் பார்த்திபன் நன்றி கூறினார்.

Read more »

சேவை நோக்குடைய அரசு வங்கிகள் இல்லை குமராட்சி பகுதி விவசாயிகள் கடும் பாதிப்பு

காட்டுமன்னார்கோவில் : 

                   குமராட்சி பகுதியில் மக்களுக்கு சேவை நோக்குடன் செயல்படுவதற்கான அரசு வங்கிகள் இல்லாததால் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். குமராட்சி பகுதியில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் என சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வியாபாரிகள், விவசாயிகள்  அதிகளவில் உள்ளனர். இவர்களின் தேவையை போக்க சேவை நோக்குடைய அரசு வங்கிகள் குமராட்சியில் இல்லை. அதனால் பொதுமக்கள், வியாபாரிகள், அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் என அனைத்து தரப்பினரும் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வங்கிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. குமராட்சியில் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி அரசு வங்கிகளை திறக்க வேண்டும். 

இதுபற்றி வர்த்தக சங்கத் தலைவர் தமிழ்வாணன் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: 

                      குமராட்சி பகுதி மக்கள் விவசாயத்தையே நம்பியுள்ளனர். ஆனால் அதற் கேற்ப வங்கிகள் இல்லாததால் விவசாயிகள், பொதுமக் கள் பணத்தை சேமிக்க முடியாமலும், வங்கி மூலம் அரசு திட்டங்களை பெறுவதற்கும் வழியில்லாமல் தவித்து வருகின்றனர். குமராட்சி பகுதியைச் சுற்றி குமராட்சி, கீழக் கரை, நந்திமங்கலம், அத் திப்பட்டு உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

                        இப்பகுதி மக்கள் தொழில் துவங்கவும், விவசாயிகள் கடன் வாங்கி பயிர் செய்யவும், மாணவர்கள் கல்வி கடன் பெற முடியாமலும் தவிக்கின்றனர். தற்போது செயல்படும் தனியார் வங்கி நகை அடகு வைக்கும் வட் டிக்கடையாக மட்டுமே இருப்பதால் மக்களின் வாழ்க் கைத்தரம் முன் னேற்றம் அடையாமல் உள்ளது. அவ்வங்கியால் மக்களுக்கு சேவை கிடைக்கவில்லை. குமராட்சி மக்கள் தேவையை பூர்த்தி செய் யவும், வாழ்க்கை தரம் உயர்த்தவும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் திறக்கப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

Estimates panel to visit Cuddalore

CUDDALORE: 

              The Estimates Committee of the State Legislative Assembly led by Kuthalam K. Anbalagan, MLA, will visit Cuddalore district on October 25.

              A statement released by Collector P. Seetharaman on Wednesday said that the committee would review the performance of the Highways Department and the Backward Classes' Welfare Department. It would also verify the implementation of schemes by these departments at places such as Neyveli and Panruti, besides in Cuddalore.

Read more »

Insurance employees oppose new pension scheme

CUDDALORE: 

               The Class III and IV employees affiliated to the All India Insurance Employees' Association staged a one-hour walkout from the LIC of India office here on Wednesday.

              They were protesting against the new pension scheme of the Union government. R.Vetrivel and K.P. Sugumaran, president and secretary of the association, said that the new pension scheme was made applicable to new recruits who joined the LIC after April 1, 2010. However, the existing employees were already governed by the LIC of India (Employees) Pension Rules 1995.

            As such, there was no basis, either legal or otherwise, to alter the provisions of the pension rules for the new entrants. Joint Secretary (Vellore division) D. Manavalan said that the new pension scheme defined only the employee's contribution and not the benefits that would accrue to him and therefore, it was the apprehension of the employees that it would erode their savings.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior