உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

கடலூர் மாவட்டத்தில் 65வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

கடலூர் : 

              கடலூர், விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி பகுதிகளில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 

கடலூர் : 

                நகராட்சியில் சேர்மன் தங்கராசு கொடியேற்றினார். கமிஷனர் இளங்கோவன், துணைத் தலைவர் தாமரைச் செல்வன், காங்., பிரமுகர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் கந்தன், சர்தார் உட்பட பலர் பங்கேற்றனர். 

            ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் சாந்தி பஞ்சமூர்த்தி தலைமையில், பி.டி.ஓ., பத்மநாபன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். 

           கூத்தப்பாக்கம் குடியிருப்போர் நலச் சங்கத்தில் கவுரவ தலைவர் மாயவேல், 

           ஜெ.எஸ். ஜெ.வி., ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளர் கணேசன், 

           டாக்ரோஸ் கம்பெனியில் பொதுமேலாளர் (மனித வளம்) சந்தானமணி, கொடியேற்றினார். 

               சி.கே., பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் துறைத் தலைவர் சசிகுமார் கொடியேற்றினார். 

            சி.கே.பள்ளியில் முதல்வர் தார்ஷியஸ், ஆலோசகர் கல்யாணி உட்பட பலர் பங்கேற்றனர். 

           ஜே.எஸ்.ஜே.வி., கல்வியியல் கல்லூரியில் முதல்வர் ராஜசேகர், அரிஸ்டோ பள்ளியில் தாளாளர் சொக்கலிங்கம், 

          முதுநகர் சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் சேர்மன் சிவக்குமார் கொடியேற்றினார். 

சமபந்தி விருந்து : 

             கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் கலெக்டர் அமுதவல்லி பங்கேற்றார். 

           கடலூர் வீரஆஞ்சநேயர் கோவிலில் ஆர்.டி.ஓ., முருகேசனும், 

          திருவந்திரபுரம் தேவநாத சுவாமி கோவிலில் எஸ்.பி., பகலவன் பங்கேற்றார். 

விருத்தாசலம்
               
             நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் முருகன், அரசு கல்லூரியில் முதல்வர் செந்தமிழ்செல்வி தேசிய கொடி ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். 

                 எம்.எல்.ஏ., அலுவலகத்தில் முத்துகுமார் எம்.எல்,ஏ., பாத்திமா பள்ளியில் தொழிலதிபர் அகர்சந்த், 

              டேனிஷ் மிஷன் பள்ளியில் வழக்கறிஞர் மெய்கண்டநாதன், 

              இன்பேன்ட் பள்ளியில் தாளாளர் விஜயகுமாரி, 

             ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் முருகேசன், 

              பெண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் சித்தார்தன்,

              அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் தமிழரசி, 

             பூதாமூர் நகராட்சி நடுநிலை பள்ளியில் ஸ்ரீதர், 

               உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் ஏ.இ.ஓ., பஞ்சநாதன், 

            விருத்தாம்பிகை கல்வி நிறுவனத்தில் தாளாளர் சந்தரவடிவேல், 

            புதுக்கூரைப்பேட்டை விவசாய சுயஉதவி குழுக்கள் சார்பில் தலைமை ஆசிரியர் அறிவழகன், 

            விஜயமாநகரம் சரவணார் நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் வனஜாகுமாரி கொடியேற்றினர்.

திட்டக்குடி: 

              பேரூராட்சி அலுவலகத்தில் சேர்மன் மன்னன், 

              தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சையத்ஜாபர், 

            அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர்.பொன்னுச்சாமி, 

           பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டி.எஸ்.பி., வனிதா, 

          ஸ்ரீ ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நிர்வாக இயக்குனர் சிவகிருபா தேசியக் கொடியேற்றினார். 

 பெண்ணாடம்: 

             பேரூராட்சி அலுவலகத்தில் சேர்மன் அமுதலட்சுமி, 

           காங்., அலுவலகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., புரட்சிமணி, 

           பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர். மணிமேகலை,

           ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் தாளாளர் ஜெயந்தி, 

            அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் மாணிக்கம்,

             இறையூர் அருணா மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் வலம்புரிச் செல்வன், 

             பொன்னேரி புனித தோமையர் ஆலயத்தில் பங்குத் தந்தை ஜோசப் ராஜ், 

            நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் தாளாளர் கிருஷ்ணசாமி தேசியக் கொடியேற்றினார். 

பண்ருட்டி: 

             நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் அருணாசலம் தலைமையில் எம்.எல்.ஏ., சிவக்கொழுந்து முன்னிலையில் சேர்மன் பச்சையப்பன் தேசிய கொடியேற்றினார். 

              அரசு அண்ணா பொறியியில் கல்லூரியில் புல முதல்வர் செந்தில்குமார், 

            போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன், 

           கோழிப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஹரிமூர்த்தி, 

            நெய்வேலி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தாளாளர் நடராஜன், 

           டேனிஷ் மிஷின் உயர்நிலைப் பள்ளியில் வெங்கடேசன், 

           மணப்பாக்கம் நேரு இளைஞர் மன்ற செயலர் சத்தியசீலன், 

             காங்., சார்பில் காந்தி சிலைக்கு சபியுல்லா மாலை அணிவித்தார். 

             பனிக்கன்குப்பம் ஆர்.சி., நடுநிலைப் பள்ளியில் புதுவை மிஷன் அச்சக மேலாளர் மரிய ஜோசப், 

              ரத்தனா மெட்ரிக் பள்ளியில் நிர்வாகி மாயகிருஷ்ணன், 

             பாலவிகார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ஜெகன்நாதன், 

       அரிமா சங்கத் தலைவர் ராமதாஸ், 

               ராதிகா மெட்ரிக் பள்ளியில் ரோட்டரி சங்க தலைவர் மதன்சந்த் தேசிய கொடியேற்றினர்.
 


229 பேருக்கு ரூ.25 லட்சம் நலத்திட்ட உதவி


             நாட்டின் 65வது சுதந்திர தினவிழா கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. க

            லெக்டர் அமுதவல்லி தேசியக் கொடியேற்றி வைத்து 25 லட்ச ரூபாய் மதிப்பிலான நடத்திட்ட உதவிகளை வழங்கினார். 

               விழாவையொட்டி கலெக்டர் அமுதவல்லி 9.29 மணிக்கு விழா அரங்கத்திற்கு வருகை தந்தார். டி.ஆர்.ஓ., நடராஜன் கலெக்டருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்று கொடி மேடைக்கு அழைத்துச்சென்றார். எஸ்.பி., பகலவன் முன்னிலையில் சரியாக 9.30 மணிக்கு கலெக்டர் அமுதவல்லி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

               விழாவில் பங்கேற்ற தியாகிகளுக்கு கலெக்டர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். தொடர்ந்து பல்வேறு துறை சார்பில் நடத்திட்ட உதவிகளை வழங்கினார். 

முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 3 பேருக்கும் 

          வருவாய்த்துறை சார்பில் 8 பேருக்கு மனைப்பட்டாவும், 

            மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 3 பேருக்கும், 

             பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 11 பேருக்கும், 

              ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 49 பேருக்கும், 

            வேளாண் துறை சார்பில் 5 பேருக்கும், 

            சமூக நலத்துறை சார்பில் 42 பேருக்கும், 

          சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில் 50 பேருக்கும், 

           தாட்கோ மூலம் 25 பேருக்கும் 

              மொத்தம் 229 பேருக்கு 24 லட்சத்து 45 ஆயிரத்து 85 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

 பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள்
            
           பின்னர் கடலூர், பரங்கிப்பேட்டை பள்ளிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கலெக்டர் அமுதவல்லி பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

              நிகழ்ச்சியில் பி.ஆர்.ஓ., முத்தையா, ஊர்க்காவல்படை ஜெயந்தி ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். 







Read more »

தமிழகத்தில் 29 மாவட்டங்களில் 100பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக உயர்த்தப்படுகிறது

                  தமிழகத்தில் 29 மாவட்டங்களில் 100 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படுகின்றன. எந்தெந்தப் பள்ளிகள் என்பது குறித்தும், ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் பற்றியும் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார். 

                 அதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சொந்த மாவட்டமான விழுப்புரத்தில் மட்டும், அதிகபட்சமாக 12 பள்ளிகள் நிலை உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.  நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  

எந்தெந்த மாவட்டங்கள்: 

                தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையில் விழுப்புரம் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. 

               இந்த மாவட்டத்தில் 12 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படுகின்றன. 

            இதேபோன்று, காஞ்சிபுரத்தில் ஆறு பள்ளிகளும், 

             திருவள்ளூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூரில் தலா 2 பள்ளிகளும், 

          கடலூரில் நான்கு பள்ளிகளும், வேலூரில் ஏழு பள்ளிகளும் நிலை உயர்த்தப்படுகின்றன.  

              திருவண்ணாமலை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரையில் தலா நான்கும், 

தருமபுரியில் ஐந்து பள்ளிகளும், 

கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல்லில் தலா மூன்று பள்ளிகளும், 

சேலத்தில் ஐந்து பள்ளிகளும், 

நாமக்கல், திருப்பூரில் தலா ஒரு பள்ளியும், 

கோவையில் ஆறு பள்ளிகளும் நிலை உயர்த்தப்படுகின்றன. 

 தேனியில் நான்கு பள்ளிகளும், 

சிவகங்கையில் இரண்டு பள்ளிகளும், 

விருதுநகர், தூத்துக்குடியில் தலா ஒரு பள்ளியும்,

திருநெல்வேலியில் மூன்று பள்ளிகளும்,  

கன்னியாகுமரியில் ஒரு பள்ளியும் மேல்நிலைப் பள்ளியாக நிலை உயர்த்தப்படுகின்றன. 

 900 புதிய ஆசிரியர்கள் நியமனம்: 

            நிலை உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 

இந்தப் பள்ளிகளில் ரூ.9,300-ரூ.34,800 மற்றும் நிலை ஊதியம் ரூ.4,800 என்ற ஊதிய விகிதத்தில் 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

       அவை நிரப்பப்படும் நாளில் இருந்து ஓராண்டு காலத்துக்கு தாற்காலிகமாக அந்தப் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. 

 எந்தெந்தப் பாடங்களுக்கு நியமனம்: 

                 தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பாடப் பிரிவுகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பள்ளிகள் நிலை உயர்த்தப்பட்டு, ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதன் மூலம், புதிதாக படித்த பட்டதாரி மாணவ-மாணவிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. நிலை உயர்த்தப்படும் பள்ளிகளில் பெரும்பாலானவை கிராமப்புறங்களில் உள்ளவை என்பதால், அங்குள்ள மாணவர்களும் பயன்பெறுவர்.  








Read more »

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. பி.எட். சிறப்புக் கல்வி படிப்பிற்கு விண்ணப்பம்

             தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பி.எட். சிறப்புக் கல்வி படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

              பொதுப் பள்ளிகள் மற்றும் சிறப்புப் பள்ளிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளில் கல்வியில் ஆர்வமுள்ள பட்டதாரிகள், இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளியின் பெற்றோரும் விண்ணப்பிக்கலாம்.  இந்தப் படிப்பில் 500 மாணவர்கள், நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு சேர்த்துக்கொள்ளப்படுவர். 

              அக்டோபர் 9-ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.  இதற்கான விண்ணப்பம் பல்கலைக்கழக வளாகம் மற்றும் கல்வி மையங்களில் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் செப்டம்பர் 19-ம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது.

 இணையத்தள முகவரி 







Read more »

தமிழகக் கடலோர மீனவர்களுக்கு ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்

கடலூர்:

            தமிழகக் கடலோர மீனவர்களுக்கு உதவும் வகையில், ஹெல்ப்லைன் சேவை தொடங்கப்பட்டு இருப்பதாக, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்து உள்ளது.

இந்த நிறுவனம் சார்பில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 

              கடலோர மீனவர்களுக்கு ஒலி வடிவில் செல்போன் குறுஞ்செய்திகள், காலநிலை, முன் எச்சரிக்கை, மீன்களை சிறப்பாகக் கையாளுதல், மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மீனை மாற்றி வாழ்வாதாரத்தை உயர்த்துதல், கடல் வளங்களைப் பாதுகாத்தல், மீனவர் நண்பர் தொலைபேசிச் சேவை உள்ளிட்ட சேவைகளை கிராம வள மையங்கள், கிராம அறிவு மையங்கள் வாயிலாக, எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கி வருகிறது. தற்போது இந்தியாவில் முதல்முறையாக, இந்தியக் கடல் தகவல் சேவை மையத்துடன் இணைந்து, மீனவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஹெல்ப்லைன் சேவையை, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி இருக்கிறது.

                 இதன் மூலம் மீனவர்களுக்குத் தேவையான காலநிலைத் தகவல்களும், பயிற்சி மற்றும் மேம்பாடு சார்ந்த கேள்விகளுக்கும் தொலைபேசி வாயிலாக பதில் அளிக்கும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பல்வேறு நிபுணர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

             மீனவர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு 92824- 42312 மற்றும் 98424- 42311 என்ற ஹெல்ப்லைன் எண்களில் தொடர்பு கொண்டு, உரையாடலாம் தகவல்களைப் பெறலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.





Read more »

திருவள்ளுவர் பல்கலைக்கழக கோ-கோ போட்டியில் கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகள் இரண்டாம் இடம்

கடலூர்:

               கோ-கோ விளையாட்டுப் போட்டியில் வென்று வந்த மாணவிகளுக்கு கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் பாராட்டு தெரிவித்தார். 

                திருவள்ளுவர் பல்கலைக்கழக கடலூர் மண்டல கல்லூரி மாணவிகளுக்கு இடைஹேயயான விளையாட்டுப் போட்டி, விழுப்புரம் மாவட்டம் ஒரத்தூர் விவேகானந்தா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கடந்த 6,7 தேதிகளில் நடந்தது. இதில் கோகோ விளையாட்டில், கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி மாணவிகள் அணி 2-வது இடத்தைப் பெற்றது. வெற்றி பெற்ற அணித் தலைவி எஸ்.கீதா உள்ளிட்ட மாணவிகளுக்கு புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் பாராட்டு தெரிவித்தார். சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை மாணவிகளிடம் அவர் வழங்கினார். 



Read more »

சுதந்திர தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம்

விருத்தாசலம்:

            விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மற்றும் ஜனனம் தொண்டு மையம் சார்பில், 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் ரத்ததானம் செய்தனர். முகாமில், தொண்டு மைய நிறுவனர் அன்சாரி வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் த.செந்தமிழ்ச்செல்வி தலைமை ஏற்றார். தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில அமைப்புச் செயலர் ரங்கப்பிள்ளை, எழுத்தாளர் சி.சுந்தரபாண்டியன், வர்த்தக அணிச் செயலர் கார்த்திக், தொண்டு மைய துணைத் தலைவர் சீனிவாசன், பேராசிரியர்கள் சிவகுமார், பாலசங்கு, சாலமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




Read more »

"ஓய்வூதியர் களஞ்சியம்" நூல் வெளியீட்டு விழா

கடலூர்:

               "ஓய்வூதியர் களஞ்சியம்' என்ற நூல் வெளியீட்டு விழாவும், நூலாசிரியருக்குப் பாராட்டு விழாவும், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் முன்னேற்றச் சங்கம் சார்பில், கடலூரில் சனிக்கிழமை நடந்தது.

                நிகழ்ச்சிக்கு, மின்வாரிய ஓய்வூதியர் முன்னேற்றச் சங்க கடலூர் வட்டத் தலைவர் வை.இராசவேலு தலைமை வகித்தார். வட்டச் செயலர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பொறியாளர் சா.வேல்முருகன் எழுதிய, ஓய்வூதியர் களஞ்சியம் நூலை சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.வானசுந்தரம் வெளியிட, முதல் பிரதியை சக்தி ஐ.டி.ஐ. தாளாளர் ஆர்.சந்திரசேகர் பெற்றுக் கொண்டார். நூலைத் திறனாய்வு செய்து மாநிலப் பொதுச் செயலர் பெ.கருப்பையா பேசினார். பொறியாளர் வேல்முருகன் ஏற்புரை நிகழ்த்தினார்.

                பொறியாளர் செந்தமிழ்சேய் எழுதிய, தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற செம்பியன் தமிழவேள் வரலாற்று காவியத்தைத் திறனாய்வு செய்தும், நூலாசிரியரைப் பாராட்டியும் சங்கத்தின் உயர்நிலைக் குழுத் தலைவர் கோவிந்தசாமி பேசினார். நூலாசிரியர் பொறியாளர் சி.செந்தமிழ்சேய் ஏற்புரை நிகழ்த்தினார். வட்டப் பொருளர் சு.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.





Read more »

அமெரிக்கா- அல்கொய்தா இரு பயங்கரவாத வரலாறு நூல் வெளியீட்டு விழா

கடலூர்:

              அமெரிக்கா- அல்கொய்தா இரு பயங்கரவாத வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா கடலூரில் அண்மையில் நடந்தது. 

                    கடலூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. இணைச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு இந்த நூலை எழுதி இருக்கிறார்.  கடலூர் வாசிப்போர் இயக்கம் சார்பில் இந்த நூலின் வெளியீட்டு விழா கடலூரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வாசிப்போர் இயக்கத் தலைவர் ஆர்.நடராஜன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பால்கி வரவேற்றார்.  நூலை முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வன் வெளியிட முதல் பிரதியை சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன் பெற்றுக் கொண்டார்.  நூலைத் திறனாய்வு செய்து, ம.தி.மு.க. இலக்கிய அணிச் செயலாளர் வந்தியத்தேவன், மின்வாரிய மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் பொறியாளர் ஆர்.ஸ்ரீதர், புதுவை எழுத்தாளர் பிரகதீஸ்வரன் உள்ளிட்ட பலர் பேசினர்.






Read more »

தொலைதூரக் கல்வி முதுகலை பட்டம் ஆராய்ச்சிப் படிப்பிற்கு (Ph.d) செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு

            "தொலை தூரக் கல்வி மூலம் படித்த முதுகலை படிப்பை, பி.எச்.டி., படிப்புக்கு தகுதியாக அனுமதிக்க முடியாது என, அண்ணா பல்கலை பிறப்பித்த உத்தரவு செல்லும்' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை அண்ணா பல்கலையில், பி.எச்.டி., படிப்பில் சேர, நடராஜன் என்பவர் பி.எச்.டி., படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

             ஆனால், தொலைதூரக் கல்வி மூலம், முதுகலை பட்டம் பெற்றுள்ளதால், பி.எச்.டி., படிப்பில் சேர, நடராஜனுக்கு தகுதியில்லை என, ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்தார். இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் நடராஜன் மனுத் தாக்கல் செய்தார். பி.எச்.டி., படிப்பில் சேர அனுமதிக்க வேண்டும் எனக் கோரினார். 

மனுவை விசாரித்த நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு:

              கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஏ.ஐ.சி.டி.இ., பிறப்பித்த சுற்றறிக்கையில், தொலை தூரக் கல்வி மூலம் பெறப்படும் பட்டங்கள், முதுகலை பட்டங்கள், பட்டயங்களை அங்கீகரிக்கக் கூடாது என, கொள்கை முடிவெடுத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதே நிலையை உறுதி செய்து, மார்ச்சில் நோட்டீஸ் வெளியிட்டது. இந்த முடிவு, அண்ணா பல்கலையை கட்டுப்படுத்தும். மனுதாரரை பி.எச்.டி., படிப்புக்கு அவரை சேர்க்காதது நியாயமானது. எனவே, ஆய்வு மையத்தின் இயக்குனர் பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட முகாந்திரமில்லை. அந்த உத்தரவு செல்லும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.



Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி விடுதியை சீரமைக்க வேண்டுகோள்

விருத்தாசலம் : 

            விருத்தாசலம் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியை சீரமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து விருத்தாசலம் எம்.எல்.ஏ., முத்துகுமார் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருக்கு அனுப்பியுள்ள கடிதம்: 

               விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி மாணவர்கள் 150 பேர் பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் உள்ள 5 கழிவறைகளில் ஒன்று மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. குளியல் அறைகள் பழுதடைந்து பயனற்று உள்ளன. மின்சார சாதனங்கள் உடைந்து தொங்குவதால் மாணவர்களுக்கு ஆபத்து உண்டாகும் நிலை உள்ளது. குடிநீர் குழாய்கள் இரும்பில் உள்ளதால் துரு பிடித்து அதிலிருந்து வரும் தண்ணீரை குடிப்பதால் மாணவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத நிலை ஏற்படுகிறது. 

                விடுதியில் நிலவும் இதுபோன்ற குறைகளை நீக்கி சீரமைக்க வேண்டும் என்று எனக்கு மனுஅளித்துள்ளனர். மாணவர்களின் நலன் கருதி உடனடியாக விடுதியை சீரமைக்கவும், மாணவர்களின் மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முத்துகுமார் எம்.எல்.ஏ., தனது கடிதத்தில் தெரிவித்துள் ளார்.




Read more »

நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நெல்லிக்குப்பம் :

            நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் 31 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. 

               நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் 1980ம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகள் 50 பேர் 31 ஆண்டுகளுக்கு பிறகு அதே பள்ளியில் சந்திப்பு விழா நடத்தினர். இதற்கான அழைப்பை தங்களுடன் படித்தவர்களுக்கும், அப்போது வகுப்பு நடத்திய ஆசிரியர்களுக்கும் அனுப்பினர். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் இஸ்ரேல், டேனியல் ஜெயக்குமார், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பரமசிவம், பூபாலன், ஜெயகாந்தன், தாமஸ், ஜான்செல்வராஜ், ஜேக்கப், ஆலிவ் பெலிஷியா அன்னம்மாள் ஆகியேர் பங்கேற்றனர். பழைய மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அவர்களில் பலர் போலீஸ் அதிகாரிகள், டாக்டர், ஆசிரியர் பணியில் உள்ளனர். பள்ளிப்பருவத்தை நினைவு கூர்ந்து படித்த வகுப்பறைகளில் உட்கார்ந்து மகிழ்ந்தனர். மேலும், தங்கள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். சந்திப்பை நினைவு கூறும் வகையில் மரக்கன்றுகள் நட்டனர். 






Read more »

2011 தமிழக உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் தயார்

               உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி அக்டோபர் மாதம் நடைபெறும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

              மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. நகர்ப்புற பகுதிகளில் மின்னணு ஓட்டு எந்திரங்கள் மூலமும், கிராமப் பகுதிகளில் ஓட்டுச்சீட்டு மூலமும் வாக்குப்பதிவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மின்னணு எந்திரங்களை மத்திய தேர்தல் கமிஷன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.  ஓட்டுச்சீட்டுகள் அச்சடிப்பதற்கான முன் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான வாக்குச்சாவடிகளை உள்ளாட்சி தேர்தலிலும் பயன்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இதுதவிர வார்டு தேர்தலை கருத்தில் கொண்டு சிறிய கிராமங்களிலும் வாக்குச் சாவடி அமைக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

             2001-ம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலை கொண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பட்டியலை மத்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து மாநில தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. வார்டு தேர்தல் நடத்துவதற்கு ஏற்ப, உள்ளாட்சி தேர்தல் பட்டியல் தயாராகி உள்ளது.

                    மாநகராட்சி, நகர பஞ்சாயத்து தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்ந்து எடுக்கும் முறை தற்போது உள்ளது. மீண்டும் மேயர், நகராட்சி தலைவர், நகர பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் முறையை கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.இதற்கான சட்டதிருத்தம் நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் விரைவில் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. அதன்பிறகு உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

             அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, லேப்-டாப், கறவை மாடுகள் வழங்குவது போன்ற இலவச திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. அதன்பிறகு உள்ளாட்சி தேர்தலை நடத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் நடக்கும் என மாநில தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
 
 
 
 
 
 

Read more »

செல்போனில் இலவச போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்

சென்னை நகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா  கூறியது:-  

              சென்னை போக்குவரத்து போலீஸ் துறை வாகன ஒட்டிகளுக்காக அன்றாட போக்குவரத்து நிலைமை குறித்த இலவச எஸ்.எம்.எஸ். சேவையை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த சேவையை சென்னையை சேர்ந்த ஸ்டால் வார்ட் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனம் போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து செய்கிறது.

                இந்த சேவையில் சேரும் பொதுமக்களுக்கு தினமும் போக்குவரத்து தகவல் அனுப்பப்படும். இந்த சேவையை பெற விரும்புபவர்கள் JOIN CTP என டைப் செய்து 09219592195 என்ற எண் ணுக்கு ஒரு எஸ்,.எம்.எஸ். அனுப்ப வேண்டும். அதன் பிறகு இந்த சேவையில் பயன் பெறலாம்.  அன்றாட வாகன ஒட்டிகளுக்கு போக்குவரத்து நிலைமையினை அறிந்து கொள்வதற்கும் அதற்கேற்றவாறு அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற் கான பாதையை தெரிந்து கொள்வதற்கும் இந்த வசதி மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இந்த சேவை முழுவதும் இலவசமாகும். கட்டணம் எதுவும் கிடையாது.

              முதலில் அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்.க்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சேவையில் உள்ள பொதுமக்கள் இதில் இருந்து விடுபட வேண்டும் என்றால் அவர்களது செல்போனில் இருந்து LEAVE CTP என டைப்செய்து 09219592195 என்ற எண்ணுக்கு எஸ். எம்.எஸ். அனுப்ப வேண் டும். மேலும் இந்த சேவையை www.smsgupshup.com என்ற இணையத்திலும் தெரிந்து கொள்ளலாம்.  

              இரு சக்கர வாகனத்தில் உள்ள நம்பர் போர்டுகளில் அரசியல் தலைவர்கள் படம், எழுத்துக்களை பெரிதாகவும், சிறியதாகவும் எழுதி பயன்படுத்துவதாக ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 45 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  ஜூலை மாதத்தில் மட்டும் 16 ஆயிரம் வழக்குகள் போடப்பட்டுள்ளது. இ. செலான் மூலம் அபராதம் வசூலிக்கும் முறையில் ஒரு நாளைக்கு சராசரி 3800 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 42 ஆயிரம் பேர் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

              பைக் பந்தயத்தில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் 12 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 
 
 
 
 

Read more »

கடலூர் அ.தி.மு.க. சட்டமன்ற தொகுதியின் சார்பில் ட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/22c11abe-c80b-4827-be86-be822a8e8e35_S_secvpf.gif
 
கடலூர்:
 
              கடலூர் அ.தி.மு.க. சட்டமன்ற தொகுதியின் சார்பில் அ.தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் கடலூர் முதுநகர் சஞ்சீவிராயன் கோவில் தெருவில் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் குமார் தலைமை தாங்கினார்.
 
கூட்டத்தில் அ.தி.மு.க. கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பேசியது:-
 
              நடப்பாண்டு தமிழக பட்ஜெட்டில் 3445 கோடி நிதி பற்றாக்குறை உள்ளது. ஆனால் கடந்த 2000-ம் ஆண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியை விட்டு சென்றபோது கஜானாவில் இருப்பு வைத்து சென்றார். முந்தைய தி.மு.க. ஆட்சியில் கஜானா முழுவதும் காலி செய்ததோடு கடன் வாங்கி வைத்துள்ளார்கள். பட்ஜெட்டில் நாட்டின் முதுகெலும்பான விவசாய நலனுக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கும் திட்டம் உலக அரங்கில் பேசக்கூடிய திட்டமாகும். இந்த திட்டத்தால் மாணவர் வேலைவாய்ப்பு, பொது அறிவு தெரிவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிய திட்டமாகும்.
 
                 அடுத்த கட்டமாக இல்லத்தரசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டத்துக்காக ரூ.1250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் 1 லட்சத்து 83 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள். அதேபோல் பள்ளி குழந்தைகள் முதல் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்துக்காக தொலை நோக்கு பார்வையோடு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் திருமணத்துக்கு ரூ.50 ஆயிரத்துடன் தாலிக்கு 1/2 பவுன் தங்கம் வழங்கும் திட்டம், மகளிர் சுயஉதவிகுழுவுக்கு ரூ.25 லட்சம் சுழல் நிதி, திருநங்கைகளுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி திட்டம் என எண்ணற்ற திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தந்துள்ளார்.
 
           நடப்பு நிதியாண்டில் ரூ.36 கோடி செலவில் 12 ஆயிரம் பேருக்கு கரவை மாடுகளும், ரூ.134 கோடியில் ஒரு லட்சம் குடும்பத்துக்கு 4 ஆடுகள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் 30 சதவீத ஆதிதிராவிடர் மக்கள் பயனடைவார்கள். மேலும் தடையில்லா மின்சாரம் வழங்க சோலார் எனர்ஜி என்ற புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை முதன்மையான மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற பல திட்டங்களுடன் தலை சிறந்த பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொடுத்துள்ளார்.
 
                 அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர் முதல் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி வரை அனைத்தும் அ.தி.மு.க.வுக்கே சொந்தம் என்ற சபதத்தோடு வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் ஒப்படைக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior