உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

கடலூர் லாரன்ஸ் சாலையில் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லை: சாலையில் நிறுத்தப்படும் அவலம்

சைக்கிள் பராமரிப்பு நிலையமோ என்று வியக்கும் வண்ணம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த கடலூர் லாரன்ஸ் சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான  வாகனங்களை
கடலூர்:


          கடலூர் லாரன்ஸ் சாலையில் நிறுத்தப்படும் நுற்றுக்கணக்கான சைக்கிள்களை பார்க்கும்போது, இது நெடுஞ்சாலையா நகராட்சி சைக்கிள் நிறுத்தும் இடமா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுகிறது. 
                இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடலூர் லாரன்ஸ் சாலை மிகவும் பழைமையான சாலை. இச்சாலையில் இருபுறமும் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் நிறைய உள்ளன. மற்றும் ரயில்வே புறம்போக்கு நிலங்களும் அதிகம் உள்ளன. கோயில் நிலங்களை மிகக் குறைந்த வாடகைக்கும், ரயில்வே நிலங்களையும் நெடுஞ்சாலையையும் சட்ட விரோதமாக ஆக்கிரமித்தும், பெருவணிகர்கள் பலர், அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டிக் கொண்டு, கோடிக் கணக்கில் வணிகம் செய்து வருகிறார்கள். 
             எனினும் கோயில்களுக்கு வருவாய் பெரிதாக ஒன்றும் இல்லை. வாகன நெரிசலும், ஆட்டோக்களின் கட்டுப்பாடற்ற நிலையும், நடைபாதைக் கடைக்காரர்களின் தடையற்ற வியாபாரமும், லாரன்ஸ் சாலையில் செல்லும் பொதுமக்களை, தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாக்கி வருகின்றன. இங்கு சட்டத்தை மீறுவோர் அனைவரும், போலீஸ் நடவடிக்கைகளை எல்லாம் தூக்கி எறியும் சர்வ வல்லமை படைத்தவர்களாக இருக்கிறார்கள். அண்மைக் காலமாக லாரன்ஸ் சாலையின் இருபுறமும், சைக்கிள்களை நிறுத்திச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
            லாரன்ஸ் சாலையோரக் கடைகளில் பணிபுரிவோர், பொருள்களை வாங்க வரும் பொதுமக்கள்தான் இங்கு இருசக்கர வாகனங்களை நிறுத்துகிறார்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கக் கூடும். ஆனால் பஸ்களிலும், ரயில்களிலும் காலையில் வெளியூர் சென்று, இரவில் திரும்பும் நூற்றுக் கணக்கானோர், இங்கு இருசக்கர வாகனங்களை நிரந்தமாக நிறுத்தி விட்டுச் செல்வது வாடிக்கையாகிவிட்டது. மிக அருகில் ரயில்வே கட்டண இரு சக்கர வாகன பாதுகாப்பிடம் இருந்தும், சாலையோரம் நூற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்வது, போக்குவரத்துக்குப் பெரிதும் இடையூறாக உள்ளது. 

             அதையொட்டி ஆட்டோக்களும் நிறுத்திக் கொள்வது, எங்களை என்ன செய்துவிடமுடியும் என்று பொதுமக்களையும் போலீஸாரையும் பார்த்து ஏளனம் செய்வதாக அமைந்துள்ளது. நெரிசல் மிகுந்த சாலையை, சைக்கிள் நிறுத்தும் இடமாக மாற்ற அனுமமதி அளித்தது யார் இதைக் காவல்துறையும் கண்டு கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை. அருகில் உள்ள நகராட்சி வணிக வளாகம் இடிக்கப்பட்டு, காலியாக இருக்கும் இடத்தில், நகராட்சி கட்டண சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தை உருவாக்கினால், நகராட்சிக்கு நாளொன்றுக்கு ரூ. 1,000க்குக் குறைவின்றி வருவாய் கிடைக்கும். லாரன்ஸ் சாலை போக்குவரத்துப் பிரச்னைகளையும் ஓரளவு தீர்க்க முடியும் என்கிறார்கள் பொதுமக்கள். சம்மந்தப்பட்ட துறைகள் கவனிக்குமா?

Read more »

சிதம்பரம் மாரியம்மன் கோவில் விழாவில் பாடை கட்டி இழுத்து பிரார்த்தனை

 http://img.dinamalar.com/data/large/large_286828.jpg

சிதம்பரம்: 

           சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் விழாவில், அம்மனை வேண்டி, பாடை கட்டி இழுத்தும், வயிற்றில் மா விளக்கு போட்டும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

           கடலூர் மாவட்டம், சிதம்பரம் பஸ் நிலையம் அருகே, சிறப்பு வாய்ந்த கீழத்தெரு மாரியம்மன் கோவில் உள்ளது. நடராஜர் கோவில் பொதுதீட்சிதர்கள், குல தெய்வமாக வழிபடுகின்றனர். இக்கோவில் தீ மிதி விழாவில், முஸ்லிம்கள் முதல் தீட்சிதர்கள் வரை, சர்வ மதத்தினரும் வேண்டுதலின் பேரில், தீ மிதித்து வருகின்றனர். கடந்த மாதம் 22ம் தேதி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தீ மிதி திருவிழா, நேற்று 1ம் தேதி நடந்தது. அதிகாலை, 5 மணி முதல் அங்கப்பிரதட்சணம், அலகு போடுதல், பால்காவடி, பாடை பிரார்த்தனைகள் நடந்தது. 

               கை, கால் என, உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு குணமாகியதால் பொம்மையால் ஆன, உடல் உறுப்புகளை அம்மனுக்கு செலுத்தி, வேண்டுதல் நிறைவேற்றினர். தீராத வயிற்று வலி, பிரசவம் சுகமாக முடிய வேண்டிக் கொண்டவர்கள், கோவில் வெளி மண்டபத்தில், வரிசையாக வாழை இலை படுக்கையில் படுக்க வைத்து, அவர்கள் வயிற்றில் வாழை இலை போட்டு, மா விளக்கு படையல் செய்து, உறவினர்கள் வரிசையாக நின்று, அம்மனை வழிபடும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

               வேண்டுதலின் பேரில், பாடை பிரார்த்தனை நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டியில் பச்சை தென்னை ஓலையில், வேப்ப இலைகளை போட்டு அதில் வேண்டுதலுக்குரிய நபரை படுக்க வைத்து, கோவிலைச் சுற்றி இழுத்து வருகின்றனர். இந்த பாடை பிரார்த்தனையில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, படுக்க வைத்து இழுத்துச் சென்றனர். 

             தொடர்ந்து அங்கப்பிரதட்சணம், அலகு போடுதல், பால்காவடி, தீ மிதிப்பவர்களுக்கு காப்பு கட்டுதலும், மாலை சோதனை கரகம், அலகு தரிசனம், அக்னிசட்டி ஏந்தி வீதியுலா வருதல் ஆகியவை நடந்தன. அதனைத்தொடர்ந்து, மாரியம்மன் தீ குண்டத்திற்கு முன் எழுந்தருள செய்யப்பட்டு, ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.






Read more »

கடலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சை தேவையின்றி அழைத்தால் கடும் நடவடிக்கை

கடலூர்:

              அரசு ஆம்புலன்ஸ் 108 வாகனத்தை தேவையில்லாமல் அழைத்தாலோ, அதன் ஊழியர்களைத் தாக்கினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர்  மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி எச்சரித்தார். 

 ஆட்சியர் அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

               தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் இலவச சேவை திட்ட வாகனங்கள் 19 இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, மாவட்ட மக்களுக்கு பயன்படக் கூடிய அளவில் செயல்பட்டு வருகிறது. இதுவரை 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆம்புலன்சை பயன்படுத்தி உள்ளனர். மாதம் 2,500-க்கும் மேற்பட்டோர் பயனடைகிறார்கள்.  அதிகமான அழைப்புகள் வருவதால் 108 ஆம்புலன்ஸ் கிராமங்களுக்கு 15 முதல் 20 நிமிடங்களுக்குள்ளும், நகர்புறங்களில் 10 முதல் 15 நிமிடங்களிலும் சென்றடைகின்றன. 

             தேவையற்ற, தவறான, பொய்யான அழைப்புகளைத் தவிர்ப்பதன் மூலம், உண்மையான அவசரத் தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை விரைவில் கிடைக்கும். ஆம்புலன்ஸில் தேவையான மருந்துகள், எல்லா வசதிகளும் உள்ளன.  நோயாளிகளின் வசதி கருதி அவர்களுடன் ஆம்புலன்ஸில் ஒருவர் அல்லது இருவர் மட்டும் பயணிக்க வேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுகொண்டுள்ளார். 




Read more »

இலவச கறவை மாடு, ஆடுகள் யார், யாருக்கு கிடைக்கும்?

              அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டதன்படி, முதல்கட்டமாக இந்த ஆண்டு 1600 குடும்பங்களுக்கு கலப்பின கறவை மாடுகளும், 1600 குடும்பங்களுக்கு தலா 4 ஆடுகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள், அண்ணா பிறந்த நாளான அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.

இதுதொடர்பாக நேற்று  வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பது:-

              பயனாளியோ அல்லது அவரது குடும்பத்தினரில் ஒருவரும் மத்திய அரசு, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளில் பணியாற்றுபவராக இருக்கக்கூடாது. மேலும், உள்ளாட்சி அமைப்புகள் எதிலும் உறுப்பினராக இருக்கக்கூடாது. இலவச கறவை மாடு பெறும் பயனாளிக்கு, இலவச ஆடு வழங்கப்படமாட்டாது.

               பயனாளிக்கு கிராம பஞ்சாயத்தில் நிரந்தர வீடு இருக்க வேண்டும். பயனாளிகளில் 29 சதவீதம் ஆதிதிராவிடர் சமூககத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஒரு சதவீதம் பேர் பழங்குடியின மக்களாகவும் இருக்க வேண்டும்.
கறவை மாட்டை குறைந்தபட்சம் 4 ஆண்டுகளுக்கு விற்கமாட்டேன் என்று உறுதிமொழி பெறப்படும்.  இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.  
 
 
 
PIN குறிப்பு : கடந்த திமுக ஆட்சியின் இலவச வண்ணத் தொலைகாட்சி பெட்டியை 500க்கும், 1000க்கும் விற்றனர். அதேபோல் இந்த கறவை மாடுகளையும்  நம்ம தன்மான தமிழ் மக்கள் விற்று விடுவதை தடுப்பதற்காகத்தான் இந்த நான்கு ஆண்டு உறுதிமொழியாம்....................
 
 
 

Read more »

கடலூரில் துறைமுக மேம்பாட்டு பணி: நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/317b21c3-616e-4325-984d-0a64be69ceb9_S_secvpf.gif
 
கடலூர்:

           கடலூர் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல் முறையாக கடலூருக்கு வந்தார். அவருக்கு மாவட்ட செயலாளரும், தமிழக சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.   பின்னர் அமைச்சர் பழனிச்சாமி அங்கிருந்து காரில் புறப்பட்டு கடலூர் துறைமுகத்துக்கு வந்தார். அங்கு துறைமுக அதிகாரிகள், நாகர்ஜூனா ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குனர் மனோகரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

              பின்னர் துறைமுகத்தின் செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து அமைச்சர்கள் எம்.சி.சம்பத், செல்விராமஜெயம், கலெக்டர் அமுதவல்லி மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். 
 
பிறகு நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கூறியது:-

                   தமிழ்நாடு கடல்சார் வாரியத்தால் கடலூர் துறைமுகத்தை மேம்படுத்தும் கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. 5 ஆண்டு காலத்தில் இத்துறை முகத்தில் செய்ய வேண்டிய உத்தேச முதலீடு ரூ.150 கோடிகளாகும். அதன் அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.   கடலூர் அருகே உள்ள தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு தேவையான வினைல் குளோரைடு மோனோமார் என்ற மூலப்பொருள் 62 கப்பல்களில் கொண்டுவரப்பட்டு 3 லட்சத்து 93 ஆயிரத்து 738 மெட்ரிக் டன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

               திருச்சோபுரத்தில் தனியார் துறைமுகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   சிலம்பிமங்கலத்தில் குட் எர்த் ஷிப் பில்டிங் நிறுவனத்தின் மூலம் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு சிறுதுறை முகமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பரங்கிப் பேட்டையில் தனியார் நிறுவனத்துக்கு 4 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரி கையாளுவதற்காக தனியார் துறைமுகம் அமைப்பதற்காக இத்துறைமுகம் அறிவிக்கை வெளியிடப்பட்டள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

             பின்னர் அமைச்சர் பழனிச்சாமி கடலூர் லாரன்ஸ் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைய உள்ள இடத்தையும் நேரில் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சொரத்தூர் ராஜேந்திரன், சிவசுப்பிர மணியன், முருகுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

தமிழகத்தில் பி.எட். படிப்பில் சேர விண்ணப்பம்

             அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் பி.எட். படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் 4ந் தேதி முதல் 13ந் தேதி வரை வழங்கப்பட உள்ளன.

          சனி, ஞாயிறு உள்பட தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். ஒற்றைச்சாளர முறையிலான கவுன்சிலிங் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை ஜி.பரமேஸ்வரி தெரிவித்து உள்ளார்.பி.எட். மாணவர் சேர்க்கைக்காக 16 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

 MORE DETAILS




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior