உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 09, 2011

கடலூர் சிப்காட் சாஷன் கெமிக்கல்ஸ் ரசாயன தொழிற்சாலையில் விஷ வாயு கசிவு


கடலூரில் பரபரப்பு:ரசாயன ஆலையில் விஷ வாயு கசிவு; 66 பேர் வாந்தி-மயக்கம்;

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

 

கடலூர்:

               கடலூர் சிப்காட் பகுதியில்  சாஷன் கெமிக்கல்ஸ் ரசாயன தொழிற்சாலை உள்ளது. வழக்கம் போல் நேற்று முன்தினம்  நள்ளிரவில் இயங்கி கொண்டிருந்த இந்த ஆலையில் இருந்து திடீரென  ஹைட்ரோ புரோமின் காஸ் (விஷவாயு) இருந்த சிலிண்டரில் திடீர் கசிவு ஏற்பட்டது.  உடனே தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.

             காற்றில் விஷ வாயு பரவியதால் சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. விபரீதத்தை உணர்ந்த அந்த பகுதி பொதுமக்கள் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர்.எனினும் விஷவாயு தாக்கியதால் 66 பேருக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. இதனைக் கண்டு பதறிய குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அந்த ஆஸ்பத்திரிகளில் கூட்டம் ஆலைமோதியது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரசாயன ஆலையை முற்றுகையிட்டு சரமாரி கல்வீச்சு நடத்தினர்.

                   இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து அந்த பகுதிக்கு போலீசார் விரைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தி கலைய செய்தனர். விஷவாயு ஆலை உடனடியாக மூடப்பட்டது. கலெக்டர் சீத்தாராமன், ஆர்.டி.ஓ. முருகேசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஷ்வின் கோட்னிஷ் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சிப்காட் ரசாயன ஆலை பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிப்பதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விஷ வாயுவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

வழக்கு பதிவு :
             மேலாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கம்பெனிக்கு சீல் வைத்தனர்.   
 பதற்றம் :

             குடிகாடு மற்றும் ஈச்சங்காடு கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கம்பெனியை மூடக்கோரி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு கடலூர் - சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுட்டனர். இதனைத் தொடர்ந்து கடலூர் முதுநகர் போலீசார் சாஷன் கெமிக்கல்ஸ் முதன்மை மேலாளர் ஜெயமுருகப்பிரகாஷ் மீது 284 (அசாதாரணமாகவும், அஜாக்கிரதையாகவும்) பிரிவின் கீழ் வழக்குப் பதிந்தனர்.

கம்பெனிக்கு சீல்: 

              மாசுகட்டுப்பாட்டு அதிகாரி ராஜா சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து ஹைட்ரோ புரோமின் கெமிக்கலை பரிசோதனைக்காக மாதிரி எடுத்துச் சென்றார். அதனைத் தொடர்ந்து கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் தொழிற்சாலைகள் ஆய்வாளர் தங்கராஜ் சாஷன் கெமிக்கல் கம்பெனி சுற்றுச்சூழலுக்கும் அப்பகுதி மக்களுக்கும் ஆபத்து தரக்கூடிய கெமிக்கலை பயன்படுத்தியதால் மறு உத்தரவு வரும் வரை கம்பெனி மூடப்படுகிறது என நோட்டீஸ் ஒட்டி சீல் வைத்தார்.

அமைச்சர் ஆறுதல்: 

               தகவல் அறிந்த அமைச்சர் பன்னீர்செல்வம், அய்யப்பன் எம்.எல்.ஏ., சேர்மன் தங்கராசு உள்ளிட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

Read more »

மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர வேண்டும்: திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன்

கடலூர்:

             மாணவர்களின் திறமைகளை ஆசிரியர்கள் வெளிக் கொண்டு வர வேண்டும் என்று, திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கூறினார். கல்லூரிகளுக்கு இடையேயான கலைப் போட்டிகள், கடலூர் புனித வளனார் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடந்தது.

 வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி, திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் பேசியது:

             படைபாற்றல் மிக்க மாணவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களின் முழு திறமைகளையும் ஆசிரியர்கள் வெளிக் கொண்டு வர வேண்டும். மாணவர்கள் சினிமா உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நிறைய சாதிப்பார்கள். மாணவர்கள் தங்கள் குறிக்கோளைச் சரியாகத் தீர்மானித்து அதற்காக கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம். குறிக்கோள் சரியானதாக இருக்க வேண்டும்.

            பல்வேறு தடைகளைக் கடந்துதான் நான், திரைப்படத் துறைக்கு வந்தேன். சினிமாவில் சிறந்த இயக்குநராக வரவேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருந்தது என்றார். கலை விழாவில் சென்னை லயோலா கல்லூரி, திருச்சி புனித வளனார் கல்லூரி உள்ளிட்ட 14 கல்லூரிகளைச் சேர்ந்த, மாணவ, மாணவியர் 500 பேர் கலந்து கொண்டனர். படைப்பாற்றல் எழுத்து, ஓவியம், கலைப் பொருள்கள் தயாரித்தல், ரங்கோலி கோலம், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

             கலை விழாவுக்கு கடலூர் புனித வளனார் கல்லூரி முதல்வர் ஐ. ரட்சகர் அடிகள் தலைமை தாங்கி போட்டிகளைத் தொடங்கி வைத்தார். பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் வரவேற்று அறிமுக உரை நிகழ்த்தினார்.÷புனித வளனார் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆக்னல் அடிகள், பேராசிரியர் அருமைச்செல்வம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பேராசிரியர் ஆல்பர்ட் ரவி நன்றி கூறினார்.

Read more »

கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களின் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்

கடலூர்:

              கடலூர் புனித வளனார் கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்  நடத்தினர்.  

           சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதை முன்னிட்டு இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது. ஆட்சியர் அலுவலகம் அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு, திருப்பாப்புலியூர் உழவர் சந்தை அருகே முடிவடைந்தது. ஊர்லத்துக்கு புனித வளனார் கல்லூரி முதல்வர் ஐ.ரட்சகர் அடிகள் தலைமை தாங்கினார். கடலூர் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன் தொடங்கி வைத்தார்.  பேராசிரியர்கள் அருமைச் செல்வம், ஜெயந்தி ரவிச்சந்திரன், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.  

              ஊர்வலத்தில் சென்ற மாணவர்கள், வாக்காளர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். பணத்துக்காக வாக்குரிமையை விற்றுவிடக் கூடாது, சிறந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள்

கடலூர்:

            தேர்தல் விதிமுறை குறித்த புகார்களை தெரிவிக்க கட்டணமில்லாத தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

              சட்டசபை தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்தி முடிக்கும் பொருட்டு தேர்தல் ஆணைய அறிவுரையின்படி மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை கடந்த 1ம் தேதி செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறை தேர்தல் முடியும் வரை 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சுழற்சி முறையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
                  பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் விதி மீறல் தொடர்பான புகார்களை 1800 425 7019, 1800 425 1965 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலோ அல்லது 04142-230651, 04142-220029 ஆகிய தொலைபேசிகளில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்களை பதிவேட்டில் பதிவு செய்து, தகுதி அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

                தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களின் பேரில் நடவடிக்கை எடுப்பதற்காக ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு தாசில்தார், இரண்டு போலீசார் கொண்ட செலவின மேற்பார்வை பறக்கும் படை மற்றும் ஒரு துணை தாசில்தார் தலைமையில் மூன்று போலீசார் கொண்டு சோதனைச்சாவடி குழுவும், இவைத் தவிர ஒவ்வொரு தொகுதிக்கும் தனியாக தேர்தல் நன்னடத்தை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 
     
               அதில் தேர்தல் நன்னடத்தை கண்காணிப்பு குழுவினர் தொகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை மேற்கொள்வார்கள். எனவே பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பாகவும், தேர்தல் குறித்த தகவலை மேற்கண்ட தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Read more »

விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க - தே.மு.தி.க மோதல்

விருத்தாசலம்:

                 விருத்தாசலத்தில் தே.மு.தி.க., - பா.ம.க., நேரடி போட்டி ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. 

                    விருத்தாசலம் தொகுதியில் கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க., வேட்பா ளர் கோவிந்தசாமியைவிட 13,777 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அ.தி. மு.க., அணியில் சேர்ந்துள்ள தே.மு.தி.க., தனது கட்சிக்கு அரசியல் அங்கீகாரத்தை பெற்றுத் தந்த விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட முயன்று வருகிறது.இதே தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட முன்னாள் எம். எல்.ஏ., அரங்கநாதன் உட்பட பலர் கட்சி தலைமையிடம் விருப்ப மனு கொடுத்துள்ளனர். 

                 இப்பகுதி அ.தி.மு.க.,வில் உள்ள உட்கட்சி பூசல் காரணமாக தொகுதியை கூட்டணி கட்சியான தே.மு.தி.க.,விற்கு விட்டுக் கொடுக்கப்போவதாக கூறப்படுகிறது. இதனால் அ.தி.மு.க., கூட்டணியில் விருத்தாசலம் தொகுதியில் தே.மு.தி.க., போட்டியிடுவது பெரும்பாலும் உறுதியாகி விட்டது.தனது கோட்டையாக கருதப்பட்ட விருத்தாசலம் தொகுதியில் புதிய கட்சியான தே.மு.தி.க., வெற்றி பெற்றதால் பா.ம.க.,வினர் விரக்தியடைந்தனர். மேலும், இத்தொகுதியில் பா.ம.க.,விற்கு பெரும் ஆதரவு உள்ள கம்மாபுரம் ஒன்றிய கிராமங்கள், தொகுதி மறுசீரமைப்பில் புவனகிரி தொகுதியில் இணைக்கப்பட்டது.

                   இதனால் விருத்தாசலம் தொகுதி மீது ஆர்வமின்றி இருந்த பா.ம.க.,வினர் வரும் சட்டசபை தேர்தலில் எந்த கூட்டணியில் அங்கம் வகித்தாலும் மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளை பெற்றே ஆக வேண்டும் என நெய்வேலி, புவனகிரி தொகுதிகளை குறிவைத்து கடந்த ஆறு மாதமாக ஆயத்தப் பணிகளை செய்து வந்தது. அதன்படி தற்போது தி.மு.க., கூட்டணியில் உள்ள பா.ம.க., நெய்வேலி மற்றும் புவனகிரி தொகுதியை பெற்றிட முயற்சி மேற்கொண்டு வருகிறது.

               அதனை உறுதி செய்யும் வகையில், இத்தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் முயற்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பா.ம.க., வின் பார்வை விருத்தாசலம் தொகுதியிலும் விழ தொடங்கியிருக்கிறது. இதற்கு காரணம், கடந்த சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் பெற்ற ஓட்டுகளை அடுத்து வந்த லோக்சபா தேர்தலில் பெறவில்லை.சட்டசபை தேர்தலின் வெற்றி வித்தியாசத்தையே லோக்சபா தேர்தலில் ஓட்டாக அக்கட்சி பெற்றது. 

                  இதை கருத்தில் கொண்டே விஜயகாந்த் மாற்று தொகுதியை தேடும் முயற்சியில் உள்ளார். வரும் தேர்தலில் விஜயகாந்த் நிற்காத பட்சத்தில் கூட்டணி கட்சிகளான தி.மு.க., மற்றும் வி.சி., கட்சிகளின் பலத்தில் தே.மு.தி.க., வை எளிதில் வீழ்த்தி, தொகுதி பா.ம.க.,வின் கோட்டை என்பதை நிருபிக்க இதுவே சரியான தருணமாக பா.ம.க., கருதுகிறது.இதனால் இத்தொகுதியில் மீண்டும் பா.ம.க., மற்றும் தே.மு.தி.க.,விற்கு இடையே நேரடி போட்டி இருக்கும் எனத் தெரிகிறது.

Read more »

குறிஞ்சிப்பாடி கோட்டத்தில் ஏப்ரல் முதல் மின் கட்டணம் வசூல் முறையில் மாற்றம்

குறிஞ்சிப்பாடி : 

                  வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மின் கட்டணம் வசூல் செய்யும் முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. 

குறிஞ்சிப்பாடி கோட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயற் பொறியாளர் ஜெயராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                   குறிஞ்சிப்பாடி கோட்டத்தில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் குறைந்த மின்னழுத்த மின் இணைப்புக்கான மின்கட்டண கணக்கீடு மற்றும் வசூல் பணியை மாற்றம் செய்து மாதம் முழுவதும் வேலை நாட்களில் கணக்கீடு மற்றும் வசூல் பணியை புதிய செயல் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இத்திட்டம் வரும் 2011 ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. 

             தற்போது நடைமுறையில் உள்ள மின் கணக்கிடும் பணி பிரதி மாதம் 16ம் தேதி தொடங்கி கணக்கு எடுத்த பின் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் வசூல் பணி நடைபெறுகிறது. இம்முறையை மாற்றி, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மாத கடைசி வரை கணக்கீட்டு பணியும், மின் கணக்கு முடிந்த இரண்டாம் நாள் முதல் பணம் செலுத்தும் புதிய செயல் திட்டத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிமுகம் செய்துள்ளது. 

              மின் கணக்கீடு செய்த 20 நாட்களுக்குள் பணம் செலுத்த தவறினால் மின் துண்டிப்பு, அபராத தொகை வசூல் செய்யப்படும். மேலும், இணைய தளம் மூலம் பணம் செலுத்தும் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான www.tneb.in இணைய தளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு செயற் பொறியாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியில் திறனாய்வு விழா

கடலூர்:

           கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவில் கம்ப்யூட்டர் துறை மாணவர்களுக்கான திறனாய்வு விழா நடந்தது.

               கல்லூரி முதல்வர் குமார் தலைமை தாங்கினார். துறைத் தலைவர் ஷாஜகான் வரவேற்றார். கல்பாக்கம் மூத்த அணுமின் விஞ்ஞானி பாபு, ஐ.பி.எம்.மென்பொருள் நிறுவன திட்ட மேலாளர் அசோக் பெருமாள் பேசினர். கம்ப்யூட்டர் துறையின் சிறப்பு மலரை பேராசிரியர்கள் சிவக்குமார், பாலகிருஷ்ணன் வெளியிட்டனர். மாணவர்களின் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் ஷாகுல் அமீது, துணை பேராசிரியர்கள் ராஜேஷ், செந்தில்குமார் மற்றும் பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

Read more »

திட்டக்குடியிலிருந்து திருச்சி வழித்தடத்தில் புதிய பஸ் இயக்கம்

திட்டக்குடி:
 
            திட்டக்குடியிலிருந்து கிராமப்புறங்கள் வழியாக திருச்சி மார்க்கமாக புதிய பஸ் இயக்கப்பட்டது. திட்டக்குடி பணிமனையிலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர், வயலப்பாடி, வேப்பூர், செங்குணம் வழியாக பெரம்பலூர், திருச்சி மார்க்கமாக புதிய பஸ் இயக்க விழா நடந்தது.
 
               மு.க., நகர செயலர் பரமகுரு, தொ.மு.ச., நிர்வாகிகள் கண்ணுசாமி, ஜெயராமன், தங்கதுரை முன்னிலை வகித்தனர். பணிமனை செயலர் சேகர்ராஜா வரவேற்றார். பேரூராட்சி சேர்மன் மன்னன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பணிமனை காசாளர் சந்திரசேகர், பரிசோதகர் ஆறுமுகம் பங்கேற்றனர்.

Read more »

More women should study law course : I.Jayanthi



I.Jayanthi, Assistant Director, Tamil Nadu State Judicial Academy releasing the newsletter of Annamalai University on the occasion of international women's day in Chidambaram on Tuesday . Vice-Chancellor M.Ramanathan is in the picture.


CUDDALORE: 

          More number of women should come forward to study law courses so as to learn about their rights, duties and protective measures to be adopted, said I.Jayanthi, Assistant Director, Tamil Nadu Judicial Academy, Chennai.

         She was delivering the special address on the occasion of International Women's Day celebrations organised under the aegis of National Service Scheme of Annamalai University at Chidambaram on Tuesday. Ms. Jayanthi said that the government had passed several legislations for safeguarding the rights of women, such as the Commission (Prevention) of Sati Act, Dowry Harassment Act, Indecent Representation Act, Domestic Violence (Prevention) Act, National Commission for Women Act, Child Marriage (Abolition) Act and so on.

           However, there were lapses in the implementation of these Acts that had given place to perpetration of violence and atrocities against women, despite their socio-economic growth. To throw a protective cordon around them it had become imperative for women to study law courses. Ms Jayanthi said, adding that women should make it a point to study the Constitution that ensured equality and rights of women.

         Ms Jayanthi made an appeal to Vice-Chancellor of Annamalai University M.Ramanathan to start a law college so as to enable women in this region to study law courses. Dr Ramanathan said that access to education had elevated the status of woman in society. For instance, the number of girl students in the university almost equalled that of boys, and moreover in dentistry 55 per cent was girls. Dr Ramanathan stressed the importance of sex education for children. It was a matter of concern that 50 per cent of women were anaemic and so also 50 per cent of pregnant women who give birth to malnourished children.

            The problem was quite pronounced in below-the-poverty line group and this could combated only through joint efforts by men and women, he added. Registrar M.Rathinasabapathi said that it was tall leaders like Raja Ram Mohan Roy, Narayana Guru and Bharathiar who were in the forefront to uphold the rights of women. Sulochana Ramanathan, Vijayakumari Rathinasabapathi, Pl.Muthuveerappan, Dean, Faculty of Indian Languages, and T.R.Jeyaraaj, NSS programme coordinator, participated.

Read more »

Acid leak purely an accident, says TNPCB

CUDDALORE: 

        Top officials of the Tamil Nadu Pollution Control Board have said that the acid leak that created lot of fumes in the unit run by the Shasun Chemicals and Drugs Ltd in the SIPCOT Industrial Estate here on Monday night was an accident and it was not posing any life threatening situation.

         Additional Chief Environmental Engineer of the TNPCB (Chennai) S.Balaji told The Hindu that soon after information about the incident he went to the unit for spot inspection. He found that the bottles containing bromine stored in saw dust filled wooden boxes spilled due to mishandling and it reacted with the hydrochloric acid kept nearby. This had created dense fumes that spread over the nearby places.

         It was his immediate endeavour to control the fumes for which certain speedy measures were taken. To contain the fumes slaked lime was sprinkled over the chemicals and now the situation was well under control. Deputy Chief Scientific Officer (forensic wing of the TNPCB) R.Dhanasekaran said that it was a pure accident as the broken bottles containing bromine might have triggered the fumes. Now the fumes were brought under control and also the pungent odour.

        For every chemical spillage appropriate measures ought to be taken as stipulated and this was being done in a careful manner in this case. He underscored the point that public safety was well assured and there was no need for panic. Mr. Balaji further said that with the staff of the company the chemical substances were being removed in a safe manner. In this context, he said that awareness should be created among the local residents about the hazards of living close to chemical units.

        Conducting mock drills frequently on how to tackle such exigencies would keep the local community well informed, Mr Balaji said. When asked how long the unit should remain closed, Mr Balaji said that he would visit the company after some time to evaluate the situation and take a decision.

Read more »

Acid leak in the Shasun Chemicals and Drugs Ltd: CPI calls for insurance scheme to local residents

CUDDALORE: 

          Deriving a lesson from the acid-leak-induced fumes in the Shasun Chemicals and Drugs Ltd. on the SIPCOT Industrial Estate near here that harmed several local residents on Monday night, the authorities should take appropriate safety measures, according to M. Sekar, in-charge district secretary of the Communist Party of India.

          In a statement released here today, Mr. Sekar stated that it was ironical that though mock drills on disaster management measures were conducted on the industrial estate last year, with a view to improve the reaction time to exigencies, the official machinery took about three hours to bring a semblance of control in the unit. Mr. Sekar observed that due to mishandling of the bottles containing bromine, the acid leaked, spewing out dense fumes.

        Moreover, the official machinery did not seem to have the right technology to deal with such chemical hazards. The CPI leader appealed to the District Collector P. Seetharaman to launch the People's Liability Insurance Scheme, as was in vogue in certain States, so as to provide adequate relief to the affected people. He also called for stringent action against the unit whose alleged lapses in the handling of chemicals had caused a life threatening situation. General Secretary of the Consumer Federation-Tamil Nadu M. Nizamudeen also called for the implementation of the liability insurance scheme, besides taking appropriate safety measures. Quoting the local residents he said that the alarm meant for alerting the people during emergency was not sounded, and the officials took a long time to react.

            As in the case of the Shasun Chemicals and Drugs Ltd. that kept the idle storage of bromine, there were also stocks of chemical wastes on the campuses of other units in the industrial estate. These uncleared stocks would pose imminent threat to the safety and security of the people. Mr. Nizamudeen pointed out that there were occasions when the chemical wastes were transported and dumped near habitations in an unscientific manner. He called upon the Tamil Nadu Pollution Control Board officials to keep a tab on the unused and unnecessary stocks of chemicals in the industrial estate and make arrangement for their safe clearance.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior