உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 17, 2010

ஐரோப்பா முழுவதும் விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு; ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி


                               ஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து தீப் பிழம்புகளை கக்கி வருவதோடு, அதிலிருந்து பீச்சியடிக்கப்படும் சாம்பல் வான் மண்டலம் முழுவதும் பரவி உள்ளது. இதனால் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளிலிருந்து வந்து, செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு ஐரோப்பிய பகுதியில் விமானப் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து லண்டன் செல்லும் எல்லா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து புறப்படும் 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதுபோல் காட்விக் நகரிலிருந்து புறப்படும் 138 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மான்செஸ்டர், பர்மிங்ஹாம், அதுபோல் வட அயர்லாந்து பகுதியிலிந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. ஐரோப்பிய கண்டத்தின் பெரும்பாலான நாடுகளில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். புகை மண்டலத்துக்குள் விமானத்தைச் செலுத்தினால் பாதை சரியாகத் தெரியாமல் விபத்து நேரிட வாய்ப்புள்ளது. 
 
                    மேலும் புகை துகள்கள் விமானத்தின் என்ஜின் பகுதிக்குள் புகுந்துவிட்டால் பழுது ஏற்பட வாய்ப்புள்ளது என்று பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள விமான தரைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.1989-ம் ஆண்டு இதுபோன்று எரிமலை வெடித்தபோது அவ்வழியாக சென்ற விமானம் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக தப்பியது. சுருள் சுருளாய் திரண்டு வரும் புகை மண்டலம் பகலை இருளாக்குவது போன்று காட்சியளிக்கிறது. பிரிட்டன் மட்டுமின்றி, நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளின் வான் பகுதிகளிலும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. வெடித்துச் சிதறும் எரிமலையின் பெயர் இஜப்ஜாலாஜோகுல். இது பனிக்கட்டி மலையில் உள்ளது. எரிமலை வெடித்து நெருப்பை கக்குவதால் ஐஸ்லாந்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அலறி அடித்து ஓடி வருகின்றனர்.கடந்த ஒரு மாதத்தில் இந்த எரிமலை வெடிப்பது இது இரண்டாவது முறையாகும்.இந்த எரிமலையை சுற்றி 3 லட்சத்து 20 பேர் வசித்து வருகின்றனர். எரிமலை வெடித்ததை அடுத்து வேறு இடங்களுக்கு அவர்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.


downlaod this page as pdf

Read more »

இந்த ஆண்டில் 8,903 புதிய ஆசிரியர்கள் நியமனம்


 மிழகத்தில் 2010-2011 ஆம் கல்வியாண்டில், பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் புதியதாக மொத்தம் 8,903 ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். மேற்கண்ட பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதவிமூப்பின் அடிப்படையில் நிரப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  
 
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள்:
 
                   2010-2011 ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககத்தில் காலியாக உள்ள 8,903 ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும். 
 
புதிய மாவட்டக் கல்வி அலுவலகம் துவக்கம்: 
 
                    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டக் கல்வி அலுவலகம் புதிதாகத் துவக்கப்படும்.        புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் புதிதாக துவக்கப்படும்.  தற்போது அரியலூரில் இயங்கி வரும் பெரம்பலூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகமாகச் செயல்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம் தொடக்கப்படும். தமிழ்நாடு கல்வி மேலாண்மை மற்றும் பயிற்சிக் கட்டடத்தில் தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு கூடுதலாக ரூ.92 லட்சம் செலவில் இரண்டாவது தளம் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

downlaod this page as pdf

Read more »

தமிழக அரசு புதிய திட்டம்: விண்ணப்பித்த 15 நாளில் ரேஷன் அட்டை


                  எந்தப் பொருளும் கோராமல், ரேஷன் அட்டை மட்டும் கேட்டு விண்ணப்பிப்போருக்கு 15 நாளில் அட்டை வழங்கப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். இந்த அட்டைகள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
சட்டப் பேரவையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு, பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்: 
 
                    தமிழகத்தில் மக்கள் தெரிவிக்கும் விருப்பத்தின் அடிப்படையில் அரிசி பெறுவதற்கான ரேஷன் அட்டைகள், அரிசிக்குப் பதிலாக கூடுதல் சர்க்கரை பெறுவதற்கான அட்டைகள் போன்றவற்றுடன் எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டைகளும் வழங்கப்படுகின்றன. இந்த அட்டைகள் வழங்குவதற்கு நீக்கல் அல்லது அட்டையில்லாத சான்றிதழ் அளிக்க வேண்டும் என்ற வழிமுறை பின்பற்றப்படுகிறது. விண்ணப்பித்த 60 நாள்களுக்குள் ரேஷன் அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எந்தப் பொருளும் வேண்டாதவர்கள்: ரேஷன் கடைகளில் எந்தப் பொருளையும் விரும்பாமல் அட்டை மட்டுமே வேண்டுமெனக் கூறி சிலர் விண்ணப்பிக்கின்றனர். அவர்கள், தாங்கள் வசிக்கும் இருப்பிடத்துக்கான ஆதாரத்தை அளித்தால் அதன் அடிப்படையில் 15 நாளில் துரிதமாக விரைவு முறையில் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும். இதற்கென வடிவமைக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அவர்கள் வசிக்கும் இருப்பிட முகவரிக்கான ஆதார ஆவணங்களை இணைத்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் அல்லது உதவி ஆணையாளர் அலுவலகத்தில் மனுவினைக் கொடுக்க வேண்டும். அது, பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு ரேஷன் அட்டைகள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ரேஷன் அட்டைக்கான கணக்கெடுப்பு, ரேஷன் அட்டை அச்சடிப்பு, நியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் ஒதுக்கீடு செய்தல், கிடங்குகளில் இருந்து பொருள்களின் நகர்வு, ரேஷன் கடைகளில் இருப்பின் அளவு ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். இதற்கு வசதியாக, பொது விநியோகத் திட்டத்தின் கீழ், இணைக்கப்பட்டுள்ள அனைத்துத் துறைகள், நிறுவனங்கள் ஆகியவற்றை இணைத்து பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகளுக்கான ஒருங்கிணைந்த தீர்வு முறை நடப்பாண்டில் செயல்படுத்தப்படும்.இந்தத் திட்டத்தில் தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களின் அனைத்து குடும்ப நபர்களின் கைவிரல் ரேகை மற்றும் கண் விழித் திரை ஆகியவற்றை பதிவு செய்து அதன் அடிப்படையில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட உள்ளன என்று தனது அறிவிப்பில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

downlaod this page as pdf

Read more »

Oil firm launches mobile clinic

 

New facility: The mobile clinic being launched in Cuddalore on Friday.

CUDDALORE: 

                 The Nagarjuna Oil Corporation Ltd. launched a mobile clinic on its project site here on Friday. It is aimed at providing primary healthcare to people living in villages such as Kambalimedu, Periyakuppam, Pettodai, Aiyampettai, Puthiravalli, Poochimedu and Thiruchopuram. Managing Director of the company S. Rammohan flagged off the mobile clinic in the presence of Deputy Director (Health) R. Meera. A medical team from Krishna Hospital, Cuddalore, will be inducted for service. Speaking on the occasion, Mr. Rammohan said that Nagarjuna Oil Corporation Ltd., a subsidiary of the Nagarjuna Fertilizers and Chemicals Ltd., was focused on pursuing opportunities in oil and gas domain. It was committed to the development of communities in and around the project site. The corporate social responsibility of the company was inspired by the Nagarjuna Group's motto “serving society through industry.” To begin with, the company was working on community development with a focus on education and primary healthcare. The company had recently launched a merit awards programme, he added.

downlaod this page as pdf

Read more »

Differently Abled To Donate Organs

 
 
Expressing gratitude: Some members of the Cuddalore District Handicapped Persons' Progressive Association who have offered to donate their organs 
 
CUDDALORE: 

              Thanking the State government for age relaxation for assistance and for formation of a separate department for the differently abled persons, 17 members of the Cuddalore District Handicapped Persons' Progressive Association have given in writing their consent to donate organs. Association president P.K. Santhosh told The Hindu that he recently handed over a letter to Collector P. Seetharaman, which carried their signature and photographs, and expressed their willingness to donate organs.  Mr. Santhosh said that it was only a token gesture as about 200 of 1,500-member association were ready to follow suit. He said that not long ago, the differently abled were considered a liability on the family and society. But, with a plethora of schemes launched for their welfare and financial assistance extended, they could lead a decent and dignified life. Moreover, the formation of a separate department for their sake would go a long way in improving their life and providing uplift. Mr. Seetharaman said that he had instructed Joint Director of Health Services T. Jayaveerakumar to take follow-up action on the letter. Dr. Jayaveerakumar said that the formalities of filling in the prescribed forms had been initiated. They could donate organs in two ways: in case of brain death following accidents multiple organs could be harvested; and, even while alive they could donate organs such as kidneys, he said. Mr. Seetharaman further said that identity cards had been issued to all 27,163 differently abled persons in the district who were dominant in the Kattumannarkoil, Nallur, Vriddhachalam, Thittakudi and Mangalore blocks. In 2009, the district administration had identified 2,591 differently abled persons above 45 years of age and with 80 per cent disability for monthly maintenance allowance of Rs. 500 each. However, under the Indira Gandhi National Pension Scheme another 1,281 persons in the 18-64 age group were included for assistance. During 2009-10, financial assistance and aid implements worth over Rs. 2.71 crore was disbursed and for 2010-11 a sum of Rs. 2.08 crore would be released for their welfare. Mr. Seetharaman also saidthat the number of special self-help groups consisting only differently abled persons would be raised from 167 to 467 by next year.

downlaod this page as pdf

Read more »

திறந்தநிலைப் பல்கலை. பட்டம் பெற்றவர்களை வழக்கறிஞர்களாகப் பதிவு செய்ய ஆணை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு


 
 
                 சட்டக் கல்வி விதிமுறைகள் (2008) அமலுக்கு வருவதற்கு முன்பாக திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, பி.எல். முடித்தவர்களை வழக்கறிஞர்களாகப் பதிவு செய்யவேண்டும் என்று பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 12 ஆண்டுகள் பள்ளிப் படிப்பு, 3 ஆண்டுகள் இளங்கலைப் படிப்பை முடிக்காமல் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேரடியாக முதுகலைப் பட்டம் (எம்.ஏ.) பெறலாம். நேரடியாக எம்.ஏ. பட்டம் மற்றும் பி.எல். முடித்து வழக்கறிஞர்களாக உள்ளவர்களின் பதிவை நீக்க இந்திய பார் கவுன்சில் 2009-ம் ஆண்டு முடிவெடுத்தது. 
 
                 இதுதொடர்பாக, சட்டக் கல்வி விதிமுறைகள் 2008-ம் ஆண்டு இயற்றப்பட்டது.  இந்தப் புதிய விதிமுறைகளால், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் தங்களது பதிவை இழக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பட்டம் பெற்று, சட்டப் படிப்பு முடித்த சில வழக்கறிஞர்களின் பதிவை நீக்கி தமிழ்நாடு பார் கவுன்சில் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்தும், வழக்கறிஞராகப் பதிவு செய்யக் கோரி தாங்கள் அளித்த விண்ணப்பத்தை ஏற்கக் கோரியும் சக்தி ராணி உள்ளிட்ட 75 பேர் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். நீதிபதி ஆர்.பானுமதி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன.மனுவை விசாரித்த பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேரடியாக எம்.ஏ. பட்டம் பெற்றவர்கள் சட்டப் படிப்பில் (பி.எல்.) சேர அனுமதிக்கக் கூடாது என்று என்றும் சட்டக் கல்வி விதிமுறைகள் (2008) வகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு விதிமுறைகளை வகுக்க அகில இந்திய பார் கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது.அதுபோன்று பட்டம் பெற்றவர்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்ய முடியாது என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சட்டப்படி மறுக்கலாம். 
 
                       ஆனால்,  இந்த சட்டக் கல்வி விதிமுறைகள் 2009-ல் அமல்படுத்துவதற்கு முன்பாக,  திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேரடிப் பட்டம் மற்றும் பி.எல். பட்டம் முடித்தவர்களுக்கு இவை பொருந்தாது.எனவே, இதுபோன்ற வழக்கறிஞர்களின் பதிவை நீக்கி பார் கவுன்சில் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சட்டக் கல்வி விதிகள் அமலுக்கு வருவதற்கு இதே முறையில் பி.எல். முடித்தவர்களை, வழக்கறிஞர்களாகப் புதிதாகப் பதிவு செய்யலாம். 12 ஆண்டுகள் பள்ளிப் படிப்பு, 3 ஆண்டுகள் இளங்கலைப் பட்டப் படிப்பு முடிக்காமல் நேரடியாக எம்.ஏ. பட்டம் பெற்றவர்களை சட்டக் கல்வியில் சேர்க்கக் கூடாது. இதுதொடர்பாக, அனைத்து சட்டப் பல்கலைக்கழகங்களுக்கும்,  மாநில பார் கவுன்சில்களுக்கும் அகில இந்திய பார் கவுன்சில் தெரியப்படுத்த வேண்டும். இத் தீர்ப்பின் அடிப்படையிலேயே, திறந்தநிலைப் பல்கலைக்கழகப் பட்டத்துடன் பி.எல். முடித்தவர்களை வழக்கறிஞர்களாகப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.   

downlaod this page as pdf

Read more »

பள்ளிகளில் யோகா, தியான வகுப்புகளை தொடங்க வேண்டும்: பாமக கோரிக்கை





 
                பள்ளிகளில் நீதிபோதனை, யோகா, தியான வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று பாமக எம்.எல்.ஏ. ஜி.கே. மணி கோரிக்கை விடுத்தார். 
 
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியது:
 
                  கல்வி இப்போது வணிக மயமாகி வருகிறது. மாநில கல்வி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் ஆகிய நான்கு வாரியங்களை ஓருங்கிணைத்து பொதுக்கல்வி வாரியம் அமைப்பதால் மட்டுமே கல்வி முறையில் மாற்றம் வந்துவிடாது.தேர்வு முறை, கற்பிக்கும் முறை, மொழி ஆகியவை ஒன்றாக இருந்தால் மட்டுமே சமச்சீர் கல்வி சாத்தியமாகும். பயிற்றுமொழியை தேர்வு செய்யும் உரிமையை அந்தந்த பள்ளிகளுக்கு வழங்காமல் அரசே முடிவெடுக்க வேண்டும்.தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களும் ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் திறன் பெறும் வகையில் பயிற்சி கொடுக்க வேண்டும்.​ 53,000 மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதனை உடனே தொடங்க வேண்டும். பள்ளிகளில் நீதிபோதனை, யோகா, தியான வகுப்புகளைத் தொடங்க வேண்டும்.
 
                      உடற்கல்வியை அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமாக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும். அனைத்து நிலைகளிலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தனியார் பள்ளிகளிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். தொழிற்படிப்புகளில் கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும்.மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.400 நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை. அதனை உடனே நிரப்ப வேண்டும். கிராமங்கள் தோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும். செம்மொழியான தமிழின் பெருமைகளை மாணவர்கள் அறியும் வகையில் அனைத்து வகுப்புகளிலும் செம்மொழி தமிழ் என்ற பாடத்தை வைக்க வேண்டும்.மேட்டூரில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்றார் ஜி.கே. மணி.
 
மாரிமுத்து (மார்க்சிஸ்ட்): 
 
                   தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான செலவை அரசே ஏற்கலாம். தனியார் பள்ளிகளில் நடக்கும் முறைகேடுகளை குறிப்பாக பெற்றோர்களுக்கு தேர்வு நடத்துவது, அதிக கட்டணம் ஆகியவற்றை தடுக்க வேண்டும். சமச்சீர் கல்வி என்பது வரவேற்கக் கூடியது. ஆனால் அதற்கான நிதி ஆதாரம் குறித்து எதுவும் கூறப்படவில்லை. மாநிலக் கல்வி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் ஆகிய 4 வாரியங்களை இணைத்து பொதுக்கல்வி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கெனவே 4 வாரியங்களையும் மூடுவது குறித்து எதுவும் கூறப்படவில்லை. பள்ளிக் கல்வி முழுவதையும் ஒரே இயக்ககத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். மெட்ரிக் கல்வி வாரியம் தொடர அனுமதிக்கக் கூடாது. தமிழாசிரியர் இல்லாத பள்ளிகளில் தமிழாசிரியர்களை நியமிக்க வேண்டும். மழலையர் பள்ளிகளை உடனே தொடங்க வேண்டும் என்றார்.
 
குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்): 
 
              தாய்மொழிக் கல்வியை ஏளனமாக பார்க்கும் நிலை உள்ளது. அதனை மாற்ற வேண்டும். அதுபோல, ஆங்கிலம் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற மாயையை உடைத்தெறிய வேண்டும். தனியார் பள்ளிகளுக்கும் அரசுப் பள்ளிகளுக்கும் இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் களைய வேண்டும். மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா மற்றும் மாதிரிப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியைப் போல மாநில அரசின் பள்ளிகளுக்கும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.

downlaod this page as pdf

Read more »

ரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோ கோதுமை

கடலூர்:

            கடலூர் மாவட்டத்தில் ரேஷன்கார்டுகளுக்கு 10 கிலோ கோதுமை வழங்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                    நியாய விலைக் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு கிலோ ரூ. 11 வீதம், 2 கிலோ வழங்கப்படும். கோதுமை கிலோ ரூ. 7.50 விலையில் வழங்கப்படும். ரேஷன் கார்டுதாரர்கள் 10 கிலோ வரை, கோதுமை வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஆட்சியரின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

downlaod this page as pdf

Read more »

ஜெயலலிதா வருகை எதிரொலி நெய்வேலியில் விருந்தினர் இல்லங்கள், ஓட்டல்கள் ஹவுஸ்புல்

 நெய்வேலி:

               ஜெயலலிதா வருகையையொட்டி நெய்வேலியில் தனியார் ஓட்டல்கள் மற்றும் என்.எல்.சி.யின் விருந்தினர் இல்லங்கள் கட்சிக்காரர்களால் நிரப்பப்பட்டு விட்டதால் திருமண நிகழ்ச்சிக்காக நெய்வேலி வருவோர் தங்க இடமின்றி தனியார் விடுதிகளை நாடுகின்றனர். நெய்வேலி வாட்டர் டேங்க் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட எம்ஜிஆர் முழுவுருவ வெண்கலச் சிலையை திறந்து வைக்க அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல். 18) நெய்வேலி வருகிறார். இச் சிலையை திறந்துவைத்தப் பின் நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள அண்ணா திடலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார். தமிழகத்தில் நடைபெறும் மின்வெட்டை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

                  இவ்விரு நிகழ்ச்சிகளுக்காக நெய்வேலி வரும் ஜெயலலிதாவை வரவேற்க முன்னாள் அமைச்சர்கள் நெய்வேலியில் முகாமிட்டு  பணிகளை கவனித்து வருகின்றனர். அதிமுக கடலூர் மாவட்டச் செயலர் எம்.சி.சம்பத் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலர் சொரத்தூர் ராஜேந்திரன் ஆகிய இருவரும் போட்டிப் போட்டிக் கொண்டு ராட்சத வடிவில் கட்-அவுட் அமைத்து வருகின்றனர்.  இதனால் நெய்வேலி நகர் முழுவதும் கட்-அவுட்களால் நிரம்பி  நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் 9 மக்களவை உறுப்பினர்கள், 12 மாநிலங்களவை உறுப்பினர்கள், 50 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோருக்கு என்எல்சியின் விருந்தினர் இல்லங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.  இதுதவிர கட்சியின் அனைத்து மாவட்டச் செயலர்கள் நெய்வேலி வருகை தரவுள்ளனர். இவர்களுக்காக நெய்வேலி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் இருக்கும் லாட்ஜ்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினமே பாமகவைச் சேர்ந்த விருத்தாசலம் முன்னாள் எம்எல்ஏ ஆர்.கோவிந்தசாமியின் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெறவிருப்பதால், பாமக எம்.எல்.ஏ.க்கள் என்எல்சி விருந்தினர் மாளிகையில் அறை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதுதவிர ஜெயலலிதா பாதுகாப்புக்கு வரும் போலீஸ் அதிகாரிகளுக்கும் என்எல்சி விருந்தினர் மாளிகையில் அறை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதனால் என்எல்சி நிர்வாகம் யாருக்கு அறை கொடுப்பது எனத் தெரியாமல் திணறிவருகிறது. நெய்வேலி இந்திரா நகரில் உள்ள லாட்ஜ்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் முகூர்த்த நிகழ்ச்சிக்காக நெய்வேலி வருவோரும் தங்க இடமின்றி அல்லல்படுகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

பண்ருட்டியில் தொடரும் கொள்ளை சம்பவங்கள்

பண்ருட்டி:

                  பண்ருட்டி காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நகரப் பகுதியில் கொள்ளைச் சம்பவங்கள் தொடருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த 25 நாள்களில் 5 வீடுகளில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் உள்ளவர்களை ஆயுதங்களால் தாக்கி 34 சவரன் நகைகள், ரூ.16 ஆயிரம் ரொக்கம், இரு செல்போன்கள் உள்ளிட்ட பொருள்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டில் உள்ளவர்கள் விழித்திருக்கும்போதே கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து அங்கு இருப்பவர்களை ஆயுதங்களால் தாக்கி கொள்ளையடித்து செல்லும் அளவுக்கு தைரியம் பெற்றுள்ளனர். கடந்த மார்ச் 18-ம் தேதி விழமங்கலம் ராமன் தெருவில் வசித்து வரும் திமுக பிரமுகர் செüந்தரராஜன் (40) வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் 4 பேர், தூங்கிக் கொண்டிருந்த அவரது தாய் காசியம்மாளை தாக்கி 2 சவரன் செயினையும், மனைவி மகேஸ்வரியை தாக்கி 7 சவரன் தாலி மற்றும் செயின்களை பறித்துச் சென்றுள்ளனர். 

             இச் சம்பவத்தின் போது கொள்ளையர்கள் தாக்கியதில் செüந்தரராஜனுக்கும், அவரது மனைவி மகேஸ்வரிக்கும் கையில் எலும்பு முறிவு எற்பட்டது. அதேநாளில் சென்னை சாலை ரெட்டியார் காலனியில் வசிக்கும் பூச்சி மருந்து வியாபாரி பழனிச்சாமி வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள், பழனிச்சாமி அணிந்திருந்த 2 சவரன் செயினையும், அவரது மனைவி லதா அணிந்திருந்த 2 சவரன் தாலியையும் பறித்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து மார்ச் 29-ம் தேதி பங்களா தெருவில் வசிக்கும் தமிழரசி (55) தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்த போது வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து  4 சவரன் நகை, 200 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். அதே நாளில் சென்னை சாலையில் உள்ள முத்தையா நகரில் வசிக்கும் தலைமை ஆசிரியை பி.தேன்மொழி வெளியூர் சென்று வந்து பார்த்தபோது, வீட்டின் கதவும், பீரோவும் உடைக்கப்பட்டு, 4 சவரன் நகையும், ரூ. 15,000 ரொக்கமும் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

                   இந்நிலையில் ஏப்ரல் 13-ம் தேதி இரவு 8 மணி அளவில் பக்கிரிப்பாளையம் விவசாயி அப்துல்கரீம் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், அவரது மனைவி ரமீஜாபீவி, மருமகள் ரஜீயாபேகம் ஆகியோரை கத்தியால் தாக்கியும், கழுத்தை நெரித்தும், இஸ்மாயில் (7), பாத்திமாபீவி (10), பிதோஸ் (3) ஆகிய மூன்று குழந்தைகளை கட்டிப் போட்டுவிட்டு 16 சவரன் நகைகளையும், இரு செல்போன்களையும் கொள்ளையடித்துச் சென்றனர். மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக இதுநாள் வரை குற்றவாளிகளை கைது செய்யப்படவில்லை. கடந்த ஓரிரு மாதத்துக்கு முன் காவல் நிலையத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலரின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபரும் இதுநாள் வரை கைது செய்யப்படவில்லை. காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களின் பொருள்களுக்கே இந்நிலை என்றால் பொது மக்களின் உடைமைகளுக்கான பாதுகாப்பு குறித்து கேட்கவே வேண்டாம்.

downlaod this page as pdf

Read more »

பைக்கை பறிக்க முயன்ற முகமூடி கொள்ளையர்கள்

 கடலூர்:

                மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியை முகமூடிக் கொள்ளையர்கள் கல்லால் அடித்து, மோட்டார் சைக்கிளை பறிக்க முயன்ற சம்பவம் கடலூர் அருகே நடந்துள்ளது. கடலூர் அருகே மேலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன் (55). வியாழக்கிழமை இரவு அவர், மோட்டார் சைக்கிளில் மேலக்குப்பத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தார். மேலக்குப்பத்தை அடுத்து உள்ள ஆலமரம் அருகே சென்று கொண்டு இருந்தபோது, ஆலமரத்தின் பின்னால் இருந்து கண்ணன் மீது சரமாரியாகக் கற்கள் வீசப்பட்டன. பலத்தக் காயம் அடைந்து நிலைதடுமாறிய நிலையில், முகமூடி அணிந்து இருந்த கொள்ளையர்கள் ஓடிவந்து மோட்டார் சைக்கிளைப் பறிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட கண்ணன் அவர்களிடம் இருந்து தப்பி, மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச்சென்று தப்பினார்.இது பற்றி தூக்கணாம்பாக்கம் போலீஸôர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். காயம் அடைந்த கண்ணன் கடலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


downlaod this page as pdf

Read more »

என்எல்சி ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுவதில் தாமதம்?

 நெய்வேலி:

                 என்எல்சி தொழிலாளர்களுக்கான ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் இம்மாதம் 20-ம் தேதியும் நிறைவடைவதால், புதிய ஒப்பந்தம் ஏற்பட மேலும் தாமதமாகும் என்று தெரிகிறது. மத்திய பொதுத்துறை நிறுவனமான என்எல்சியில் 5 ஆயிரம் பொறியாளர்கள் உள்பட 19 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் பொறியாளர் போக எஞ்சிய 14 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாட்டாளித் தொழிற்சங்க நிர்வாகிகள் நிர்வாகத்துடன் கடந்த இரு மாதங்களாக பேச்சு நடத்தி வருகின்றனர். இப் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியிருந்த நிலையில், பேச்சு விவரங்களை அதில் ஈடுபட்டிருந்த தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் பெயரைக் குறிப்பிடாமல்  துண்டுப் பிரசுரம் ஒன்றை விநியோகித்துள்ளார். 

                      இதனால் தொழிலாளர்கள் மத்தியில் சலசலப்பு உருவானது. இந்நிலையில் தொமுச நிர்வாகக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. பேச்சு விவரங்களை கேட்டறிந்த சங்கத்தின் 2-ம் நிலை நிர்வாகிகள், என்எல்சி நிர்ணயித்த ஊதிய உயர்வு சதவீதத்தை ஏற்க மறுத்துனர். பின்னர் அடிப்படை சம்பளத்தில் 30 முதல் 35 சதவீத ஊதிய உயர்வு வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட தொமுச தலைமை நிர்வாகிகள், புதிய சதவீதத்தின் அடிப்படையில் பேச்சு நடத்துவது எனவும், நிர்வாகம் பணிய மறுத்தால் போராட்ட நடவடிக்கையில் இறங்குவது எனவும் முடிவு செய்துள்ளனர்.÷மற்றொரு சங்கமாக பாட்டாளித் தொழிற்சங்கம், தொமுச நிர்ணயித்த ஊதிய உயர்வு கோரிக்கையை காட்டிலும் கூடுதலாக 1 சதவீதம் கேட்டு அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என முடிவுசெய்யதுள்ளது. இந்நிலையில் தொமுச சட்டவிதிகளின்படி தற்போதய நிர்வாகிகளின் பதவிக்காலம் இம் மாதம் 20-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் இப்போதைய நிர்வாகிகள் நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர்கள் தொடர்ந்து பேச்சு நடத்தவேண்டுமெனில் தொமுச பேரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கு தொமுச பேரவை ஒப்புதல் அளிக்குமா அல்லது  ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்திய பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அனுப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் எப்போது தேர்தல் நடத்துவது, எங்களுக்கு எப்போது புதிய ஊதியம் கிடைப்பது என்று தொழிலாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

downlaod this page as pdf

Read more »

வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைப்பதில் கால தாமதம்

டலூர்:

               கடலூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைப்பதில், பெருத்த காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஏராளமானோர் ஒரு மாதத்துக்கும் மேலாக மின் இணைப்பு கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். வீடுகளுக்கு மின் இணைப்பு கேட்டு பணம் செலுத்திய அன்றே மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று மின் வாரிய விதிமுறைகள் உள்ளன. ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வீடுகளுக்கு மின் இணைப்பு கேட்டு பணம் செலுத்திவிட்டு இணைப்பு கிடைக்காமல், காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவ்வாறு காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 

                    மின்சார மீட்டர்கள் தட்டுப்பாடே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக மின்வாரியத் தலைமை அலுவலகம், மின்சார மீட்டர்கள் வழங்குவதில் பிரச்னை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. கடலூர் மாவட்டத்தின் தேவைக்கு ஏற்ப மின் வாரியம், மின்சார மீட்டர்களை வழங்கவில்லை என்று கடலூர் மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து கடலூர் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் ரவிராம் கூறியது:

              மின்சார மீட்டர் விநியோகத்தில் கடந்த ஒரு மாதமாகப் பிரச்னை உள்ளது. மீட்டர்கள் வரவர, 6 டிவிஷன்களுக்கும் பிரித்துக் கொடுத்து மின்இணைப்புகளை வழங்கி வருகிறோம். வாரியத்தால் வழங்கப்படும் மின்சார மீட்டரில் 60 சதவீதம் புதிய இணைப்புகளுக்கும், 40 சதவீதம் ஏற்கெனவே பொருத்தப்பட்டு பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவதற்கும் வழங்க வேண்டும் என்றும் மின்வாரியம் உத்தரவிட்டு இருக்கிறது. காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் விரைவில் இணைப்பு வழங்கி  விடுவோம் என்றார் ரவிராம்.

downlaod this page as pdf

Read more »

ஜெ., தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்: நெய்வேலியில் கட்சி நிர்வாகிகள் முகாம்


நெய்வேலி:

                        நெய்வேலியில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெ., தலைமையில் நாளை மாலை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தொண்டர்களைத் திரட்ட அ.தி.மு.க.,வினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.நெய்வேலி பிளாக் 9ல் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள எம்.ஜி.ஆர்., சிலையை, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ., நாளை மாலை திறந்து வைக்கிறார். தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டைக் கண்டித்து, நெய்வேலி அண்ணா திடலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பேசுகிறார்.

                    ஜெ., வருகையையொட்டி கட்சியின் முன்னணி நிர்வாகிகளான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்டோர் நெய்வேலியில் முகாமிட்டு, தொண்டர்கள் கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் செல்லும் மக்களுக்கு, நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்பட மாட்டாது என, அந்தந்த பகுதி உள்ளாட்சி நிர்வாகிகள் மிரட்டி வருவதாகத் தெரிகிறது. இதனால், ஜெ.,யைப் பார்ப்பதா, வேலையைப் பார்ப்பதா என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர்.

downlaod this page as pdf

Read more »

அதிக விலைக்கு உரம் விற்பனை: விவசாயிகள் குற்றச்சாட்டு


கடலூர் : 

                        நிர்ணயம் செய்த விலையை விட காம்பளக்ஸ் உரம் அதிக விலைக்கு விற்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடத்தில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மணி, வேளாண்மைத் துறை இணை இயக்குனர் இளங்கோவன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ராஜகோபால் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கடலூர் ஒன்றிய விவசாயிகள் சங்க செயலாளர் தட்சணாமூர்த்தி பேசுகையில் 

                     'கடலூரிலிருந்து திருவந்திபுரம், பாலூர், நடுவீரப்பட்டு, பத்திரக்கோட்டை, சிலம்பிநாதன் பேட்டை வழியாக புதுப்பாளையம் செல்லும் அரசு பஸ்சால் 20 கிராம மக்கள் பயனடைகின்றனர். பல ஆண்டுகளாக இயக்கப்படும் இந்த பஸ் பழுதடைந்துள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இங்கு புது பஸ் விட வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்றார். உடன் 'போக்குவரத்து கழக அதிகாரி உடனடியாக பஸ் சரி செய்யப்படும்' என்றார். 

கார்மாங்குடி வெங்கடேசன் பேசுகையில் 

                  'பெண்ணாடத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படுகிறது. இதற்காக மாற்று பாதை அமைத்து தர வேண்டும். மழை காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்த கம்மாபுரம், விருத்தாசலம் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வில்லை' என்றார்.

மணம் தவிழ்ந்தபுத்தூர் நரசிம்மன் 

                     'பண்ருட்டியில் 'காம் பளக்ஸ்' உரம் நிர்ணயிக்கப்பட்ட 330 ரூபாய்க்கு பதில் 100 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது என்றார். விவசாயி முத்துக்குமரன் 'சிறுகரபம்பலூர் பெருமாள் குட்டையை அகலப்படுத்தும் பணிக்காக ஆய்வு செய்த அதிகாரிகள் 6.71 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு அளித்தனர். ஆனால் இதுவரை பெருமாள் குட்டையை அகலப்படுத்தவில்லை. நாளுக்கு நாள் திட்ட மதிப்பீடுதான் அதிகரித்து வருகிறது என்றார்.  உடன் டி.ஆர்.ஓ., 'அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது' என்றார். 

பாசிமுத்தான் ஓடை விவசாய சங்க தலைவர் ரவீந்திரன் '

                 பருவம் தவறி மழை பெய்ததால் உளுந்து உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட உளுந்து பயிர் தற்போது 70 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே பயிர் செய்யப்பட் டுள்ளது. எனவே உளுந்து சாகுபடியை அரசு ஊக்குவிக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடம் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் ரவிச்சந்திரன் '

                   தொடர் மின் வெட்டு காரணமாக விவசாயம் பாதிக்கப்படுகிறது. மும் முனை மின்சாரம் வழங்கப்படும் நேரத்தை விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் கடலூர் மாவட்டத்திற்கு சிறப்பு அனுமதி பெற்று விவசாயத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்' என்றார். விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் முடிந்த பின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு மின் வெட்டை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

download this page as pdf

Read more »

மத்திய சுகாதாரக் குழுவினர் கடலூரில் சோதனை


கடலூர் : 

                     கொசு உற்பத்தியை தடுக்க மத்திய சுகாதாரக் குழுவினர் தயாரித்துள்ள மருந்தின் தன்மையை கடலூரில் ஆய்வு செய்தனர். நாட்டில் பரவி வரும் பல்வேறு நோய்களுக்கு காரணமான கொசுக்களை ஒழிக்க மத்திய சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக கொசு உற்பத்தியின் ஆரம்ப நிலையான லார்வா பருவத்திலேயே அழிக்க புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத் துறையினர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரிட்சார்த்தமான முறையில் பரிசோதித்து வருகின்றனர். அதன்படி மத்திய சுகாதார துறை அதிகாரிகள் குழு நேற்று கடலூர் வந்தனர். இவர்கள் கடலூர் வில்வ நகர் பகுதிக்கு சென்று அங்கு தேங்கியுள்ள கழிவு நீரில் உள்ள லார்வாவை பிரித்தெடுத்து அதன் தன்மைகளை ஆய்வு செய்தனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த புதிய மருந்தை தெளித்து மருந்தின் செயல்பாடு, லார்வா எத்தனை மணி நேரத்தில் இறக்கிறது என்பதை ஆய்வு செய்தனர்.

downlaod this page as pdf

Read more »

அரசு மருத்துவமனையில் நுகர்வோர் ஆலோசனைக் கூட்டம்

 கடலூர் : 

                     மாவட்ட மருத்துவத் துறை மற்றும் நுகர்வோர் குழுக்களுடன் இணைந்து காலாண்டு நுகர்வோர் ஆலோசனைக் கூட்டம் கடலூர் அரசு மருத்துவமனையில் நடந்தது. இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் பரஞ்ஜோதி, நிலைய மருத்துவ அதிகாரி கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நுகர்வோர் கூட்டமைப்பு மாநில இணைச் செயலாளர் அன்பழகன், பொதுச் செயலாளர் மெய் யழகன், பாசமணி, அரிகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பணியில் உள்ள டாக்டர்கள், நர்சுகள் 'பேட்ஜ்' அணிய வேண்டும். மருத் துவமனைக்கு வரும் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ள நோயாளிகளின் சிரமங்ளை சரி செய்ய வெண்டும். நோயாளிகளிடம் லஞ்சம் கேட்கும் பணியாளர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சேத்தியாதோப்பு, கிள்ளை, நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தப்பட வேண்டும். பகுதி நேரமாக உள்ள மருத்துவமனைகளை முழுநேர மருத்துவமனைகளாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

download this page as pdf

Read more »

நெய்வேலியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்: குடும்பத்துடன் பங்கேற்க வேண்டுகோள்


சிதம்பரம் : 

                      நெய்வேலியில் நாளை 18ம் தேதி ஜெயலலிதா தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க அ.தி.மு.க., வினருக்கு மேற்கு மாவட்ட செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து அருண் மொழித்தேவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்

                      'தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் மின் வெட்டை கண்டித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நாளை (18ம் தேதி) மாலை 3 மணிக்கு நெய்வேலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலையை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், இளைஞரணி, மாணவரணி , எம்.ஜி.ஆர்., மன்றம், ஜெ., பேரவை, மகளிரணி, அண்ணா தொழிற்சங்கம், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் கட்சி முன்னோடிகள், தொண்டர்கள் பொதுமக் கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்' என கேட்டுக் கொண்டுள்ளார். 

அண்ணா தொழிற் சங்கம்: 

                      நெய்வேலியில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. பேரவை மாநில செயலா ளர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு விழா மற்றும் ஆர்ப்பாட்டத்தில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரும் குடும்பத்துடன் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

download this page as pdf

Read more »

எஸ்.எஸ்.எல்.சி., விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது

 கடலூர் : 

                          எஸ்.எஸ்.எல்.சி., விடைத்தாள் திருத்தும் பணி கடலூர், விருத்தாசலம் மையத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பொது விடைத்தாள் திருத்தும் பணி கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மற்றும் விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக்குலேஷன் பள்ளியிலும் நேற்று முன்தினம் துவங்கியது. கடலூர் மாவட்டத்தில் இருமையங்களிலும் தமிழ், ஆங்கிலம் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தமிழ் மற்றும் ஆங்கில வழி விடைத் தாள்களும் வந்துள்ளன. விருத்தாசலம் மையத்தில் 89 ஆயிரத்து 560 விடைத் தாள்களும், கடலூரில் 96 ஆயிரத்து 936 விடைத் தாள்களும் வரும் 27ம் தேதி வரை திருத்தப்படுகிறது. கடலூரில் 43 முதன்மை தேர்வர்களும், 43 கூர்ந்தாய்வு அலுவலர்களும், 426 உதவி தேர்வர்களும் விருத்தாசலத்தில் 37 முதன்மை தேர்வாளர்கள், 37 கூர்ந்தாய்வு அலுவலர் கள், 370 உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். சி.இ.ஓ., அமுதவல்லி, டி.இ.ஓ.,க்கள் கிருஷ்ணமூர்த்தி, குருநாதன் ஆகியோர் மேற்பார்வையில் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப் பட்டது.

download this page as pdf

Read more »

காலாவதி மாத்திரை குவியலால் பரபரப்பு

 விருத்தாசலம் : 

                  கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை ஓட்டை பிள்ளையார் கோவில் அருகே உள்ள குளம் அருகே காலாவதியான மருந்துகள் கொட்டி கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த 10 நாட்களுக்கு முன் விருத்தாசலம்  மணிமுத்தாறு ஆற்றின் ஓரம் காலாவதியான மருந்துகள் கொட்டி கிடந்தது. இந்நிலையில் நேற்று மங்கலம் பேட்டை ஓட்டை பிள்ளை யார் கோவில் அருகே உள்ள குளத்தில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

downlaod this page as pdf

Read more »

திட்டக்குடி அருகே மணல் குவாரியில் கிராம மக்கள் முற்றுகையால் பரபரப்பு


திட்டக்குடி : 

                  திட்டக்குடி அருகே ஆழமாக மணல் எடுப்பதால் வெள்ள அபாயம் ஏற்படும் என மணல் குவாரியை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தின் வழியாக செல்லும் வெள்ளாற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 லாரிகளில் அள வுக்கு அதிகமாக மணல் எடுத்து செல்லப்படுகிறது. மேலும் ஒரே இடத்தில் ஆழமாக மணல் அள்ளப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்ட பாதிப்பு, வெள்ள காலங்களில் கிராமத்திற்குள் வெள்ள நீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் என கிராம மக்கள் குவாரிக்குள் நின்றிருந்த லாரிகளை மடக்கி நிறுத்தி முற்றுகையிட்டனர். தகவலறிந்த தாசில்தார் கண்ணன் நேரில் சென்று, குவாரி சூப்பர்வைசர் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினார். பின்னர் ஆழமாக மணல் எடுத்த பகுதிகளில் மீண்டும் மணல் நிரப்பி, மேடாக்க வேண்டும். அதுவரை மணல் எடுக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டார். தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளமான பகுதிகளில் மணல் நிரப்பும் பணி துவங்கியது. இதனையடுத்து லாரிகளை விடுவித்த கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

download this page as pdf

Read more »

சிதம்பரத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 சிதம்பரம் : 

                காஷ்மீரில் அரசு ஊழியர்கள் கோரிக்கையை ஏற்காமல் எஸ்மா திட்டத்தில் பழி வாங்கியதை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காஷ்மீர் அரசு ஊழியர்கள், 6வது ஊதியக் குழுவை அமல்படுத்தக் கோரியும், பிற கோரிக் கைகளை நிறைவேற்றக் கோரி பல கட்ட போராட்டம் நடத்தினர். காஷ்மீர் அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்காமல் எஸ்மா திட்டத்தின் கீழ் பழி வாங்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்க வட்டத் தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். மகாலிங்கம், பழனி, பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். வட்டத் துணைத் தலைவர் தயாளன் நன்றி கூறினார்.

downlaod this page as pdf

Read more »

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

 கடலூர் : 

                 தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவரை கைது செய்யக்கோரி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடலூர் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் நடந்தது. இந்த பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொருளாளர் நரசிம்மனை கடந்த 10ம் தேதி தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மணிவாசகம் தாக்கினார். இதுகுறித்து வடலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக் கண்டித்தும், மணிவாசகத்தை உடன் கைது செய்யக்கோரி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நேற்று மாலை கடலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப் பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேந்திரன், சண்முகம், காளமேகம் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் காசிநாதன் ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், வங்கி ஊழியர் சம்மேளன மருதவாணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்ட பொருளாளர் நரசிம்மன் நன்றி கூறினார்.

download this page as pdf

Read more »

மின் கம்பத்தில் டிப்பர் லாரி மோதல் கடலூர் 2 மணி நேரம் இருளில் மூழ்கியது

கடலூர் : 
                         டிப்பர் லாரி மோதி மின் கம்பம் முறிந்து விழுந்ததால் கடலூர் நகரின் ஒரு பகுதியில் 2 மணி நேரம் இருளில் மூழ்கியது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கான்வென்ட் தெருவில் பாதாள சாக்கடைக்காக 'மேன் ஹோல்' அமைக்க சாலை நடுவில் பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் வாகனங்கள் சாலையோரமாக சென்று வந்தன. அவ் வழியே நேற்று இரவு 7.30 மணிக்கு டிப்பர் லாரி வந்தது. பள்ளம் தோண் டிய பகுதியில் ஒதுங்கி செல்ல முயன்றபோது மின் கம்பத்தில் லாரியின் 'கேபின்' மோதியது. அதில் மின்கம்பம் முறிந்து அந்தரத்தில் தொங்கியது. அதிர்ஷ்டவசமாக மின் கம்பிகள் அறுந்து விழாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடன் திருப்பாதிரிப்புலியூர் மின்வாரிய இளமின் பொறியாளர் ஸ்ரீதர் தலைமையில் ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் கான்வென்ட் தெரு, நவநீதம் நகர், ரங்கநாதன் நகர், விஜயலட்சுமி நகர், அக்கிள் நாயுடு தெரு, சஞ்சீவி நாயுடு தெரு, போடி செட்டித் தெரு, கம்மியம் பேட்டை, தங்கராஜ் நகர், சன்னதி தெரு, லாரன்ஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கின. பின்னர் மின் கம்பத்திற்கு முட்டு கொடுத்து குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு பிற பகுதிகளுக்கு இரவு 9.30 மணிக்கு மின் இணைப்பு வழங்கினர்.

downlaod this page as pdf

Read more »

பொக்லைன் மீது மோட்டார் பைக் மோதல்: வாலிபர் பலி

கடலூர் : 

                     நின்றிருந்த பொக்லைனில் மோதி மோட்டார் பைக்கில் சென்ற வாலிபர் இறந்தார். பண்ருட்டி அடுத்த கீழூர் காலனியைச் சேர்ந் தவர்கள் ரமேஷ் (30). சத்தியசீலன் (30). இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் பைக்கில் நடுவீரப்பட்டிற்கு சென்று வீடு திரும்பினர். அப்போது சத்திரம் அருகே சாலையில் நின்றிருந்த பொக்லைன் மீது மோட்டார் பைக் மோதியது. இதில் ரமேஷ் இறந்தார். காயமடைந்த சத்திய சீலன் சிகிச்சை பெற்று வருகிறார்.

download this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior