உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 06, 2010

காடாம்புலியூர் ஊராட்சி எழுத்தர் கைது

பண்ருட்டி:

                     வீடு ஒதுக்கி கொடுத்ததற்கு பணம் தரவில்லை என சமத்துவபுரம் பயனாளி பழனிவேல்முருகனை தாக்கிய ஊராட்சி எழுத்தர் முருகனை காடாம்புலியூர் போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர். பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் அருகே பெரியார் சமத்துவபுரம் அண்மையில் திறக்கப்பட்டது.​  இதில் பயனாளியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பழனிவேல்முருகன் சமத்துவபுரத்தில் வசித்து வருகிறார்.  இவரிடம் ஊராட்சி எழுத்தர் முருகன் வீடு ஒதுக்கி கொடுத்ததற்காக லஞ்சமாக பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் பலமுறை கேட்டும் பணம் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி எழுத்தர் முருகன்,​​ சமத்துவபுரம் பயனாளி பழனிவேல்முருகனை தாக்கியுள்ளார்.இது தொடர்பான புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸôர் ஊராட்சி எழுத்தர் முருகனை கைது செய்தனர்.

Read more »

புவனகிரி பேரூராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம்

சிதம்பரம்:

           சிதம்பரத்தை அடுத்த புவனகிரி பேரூராட்சியில் புதிய அலுவலகக் ​ கட்டட பணிகளைத் தொடங்க அண்மையில் பூமிபூஜை போடப்பட்டது. புவனகிரி பேரூராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.​ 
  
                   இதற்கான பூமிபூஜை அண்மையில் நடைபெற்றது.பேரூராட்சி மன்றத் தலைவர் அஞ்சலைதேவி,​​ துணைத் தலைவர் என்.ராம்குமார்,​​ மன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.எஸ்.ரவி,​​ எஸ்.சிவா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Read more »

பிறப்பு,​​ இறப்பு சான்று கட்டணம் மாற்றியமைப்பு

பண்ருட்டி:

             பிறப்பு மறறும் இறப்பு சான்றுகள் பெறுவதற்காக செலுத்த வேண்டிய கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக பண்ருட்டி நகராட்சி ஆணையர் கே.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளது:​ 

                தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகள் 2000-ல் விதி 13 பிரிவு 17-ன் கீழ் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை தேடுவதற்காகவும்,​​ வழங்கப்படக் கூடிய எடு பகுதிகளுக்காகவும் செலுத்த வேண்டிய கட்டணங்கள் 1.2.2010 முதல் பிறப்பு மற்றும் இறப்பு சான்றுகள் ஒவ்வொன்றுக்கும் எடு பகுதி வழங்க ரூ.5,​ பதிவு இல்லை என சான்று வழங்க ரூ.2,​ கூடுதல் நகல் ஒன்றுக்கு ரூ.2 என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என ஆணையர் தெரிவித்துள்ளார்.

Read more »

சிதம்பரத்தில் உலக சைவப்பேரவை மாநாடு : பிரம்மாண்ட பேரணியுடன் துவங்கியது

சிதம்பரம் : 

                   சிதம்பரத்தில் 12வது உலக சைவப் பேரவை மாநாடு பிரம் மாண்ட பேரணியுடன் நேற்று துவங்கியது. ஆதினங்கள், சிவநெறியாளர்கள், அறிஞர்கள், சிவ தொண்டர்கள் என  2,000 பேர் பேரணியில் பங்கேற்றனர். தமிழர்கள் சிவ நெறியில் சிறக்க வேண்டும்; சைவ சமய பெருமைகள் அனைவரும் அறிய வேண்டும் என்ற நோக்கில் உலக சைவப்பேரவை அமைப்பு ஒவ்வொரு நாட்டிலும் மாநாடு நடத்தி வருகிறது.  12வது மாநாடு, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நே ற்று துவங்கியது.  டி.எஸ்.பி., மூவேந்தன் துவக்கி வைத்த மாநாடு, மூன்று நாட்கள் நடக்கிறது. சிதம்பரம் அடுத்த திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் கோவில் மற்றும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமஞ்சனம் மற்றும் வழிபாடு நடந்தது.  மாலை சிதம்பரம் கீழ வீதியில் இருந்து ஆதினங்கள், சிவநெறியாளர்கள், திருமுறை, சைவ சிந்தாந்த குழுக்கள், அறிஞர்கள், சிவ தொண்டர்கள், வெளி நாட்டு அறிஞர்கள் என 2000 பேர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி துவங்கியது. 

                          சிதம்பரம் மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள் தலைமை தாங்கினார். சுந்தரேசம்பிள்ளை திருமுறைகள் ஓதினார். அவரை தொடர்ந்து, 63 நாயன்மார்கள் உருவச் சிலைகள் மற்றும் நாயன்மார்கள் வேடமிட்ட சிறுவர்கள் பேரணியில் பங்கேற்றனர். இசை வாத்தியங்கள் முழங்க, மேள தாளத்துடன் பேரணி நடந்தது. பேரூர் இளைய மடாதிபதி மருதாச்சல அடிகள், ருப்பனந்தாள் ஆதினம் சுந்தரமூர்த்தி தம்பிரான்,கோவை சின்னவளம்பட்டி சிரவை ஆதினம் குமருகுரு, தருமை ஆதினம் திருநாவுக்கரசு தம்பிரான், பழனி சாது சண்முக அடிகளார், திருப்பனந்தாள் முத்துக்குமாரசாமி தம்பிரான், விழா ஒருங்கிணைப் பாளர் பத்மினி கபாலிமூர்த்தி பேரணியை வழிநடத்தி சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக, அண்ணாமலை பல்கலை மாநாட்டு திடலை அடைந்தது. பின்னர் சாஸ்திரி அரங் கில் மாநாடு துவங்கியது.

Read more »

பால்தாக்கரே உருவபொம்மை எரிப்பு கடலூரில் காங்கிரசார் 23 பேர் கைது

கடலூர் : 

                     கடலூரில் பால்தாக் கரே உருவபொம்மையை எரித்த காங்., கட்சியினர் 23 பேரை போலீசார் கைது செய்தனர். மும்பை யாருக்கு சொந் தம் என்ற விவகாரத்தில் கருத்து கூறிய அகில இந் திய காங்., பொதுச் செயலர் ராகுல் காந்தி பற்றி சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே விமர்சனம் செய்தார்.  ராகுல் காந்தி உருவ பொம்மையை சிவசேனா கட்சியினர் எரித்தனர். இதனைக் கண்டித்தும், பால்தாக்கரே குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி  இளைஞர் காங்., கட்சியினர் கிஷோர்குமார் தலைமையில் கடலூர் தபால் நிலையம் அருகே பால்தாக்கரே உருவ பொம் மையை நேற்று மதியம் எரித்தனர். கடலூர் புதுநகர் போலீசார் தீயை அணைத்து உருவ பொம்மையை கைப்பற்றினர். இளைஞர் காங்., பொதுச் செயலர் சரவணன், ராஜ்குமார், மாவட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி, எம்.பி.,யின் செய்திதொடர்பாளர் குமார், விவசாய பிரிவு செயலர் வேலுச் சாமி, பரமாத்மா, ராஜசேகர், ஊராட்சி தலைவர் மாறன் உள்ளிட்ட 23 பேரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட காங்., அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Read more »

அனல்மின் நிலைய கருத்துகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை

பரங்கிப்பேட்டை : 

                      அனல் மின்நிலையம் கட்டுவதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தர வேண்டும் என அனல்மின் நிலையம் கட்டுவதற்கான கருத்துகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.சிதம்பரம் அடுத்த புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் சென்னை ஐ.எல்.எப். எஸ்., என்ற தனியார் நிறுவனம் 780 கோடி ரூபாயில் 3,600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க உள் ளது. அதற்காக மாசுகட்டுப் பாடு வாரியம் சார் பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் த்துக்குப்பத்தில் நேற்று நடந்தது. மாவட்ட மாசுகட்டுபாடு வாரிய பொறியாளர் சேகர்,  உதவி பொறியாளர் சாமிவேல், தாசில்தார் காமராஜ், டி.எஸ்.பி., மூவேந் தன் உள்ளிட்ட அதிகாரிகளும், கடற்கரையோர கிராம மக் கள் பங்கேற்றனர். கூட்டத் தில், ஐ.எல்.எப். எஸ்., நிறுவன தலைவர் சீனிவாசன் பேசுகையில், "3,600 மெகாவாட் அனல் மின் நிலையம், சுயதேவைக்கான துறைமுகம், கடல்நீரை நல்ல நீராக்கும் நிலையம் கட்டப்பட உள் ளது. அதற் காக புதுக் குப்பம் சுற்றியுள்ள கிராமங்களில்  700 ஏக்கர் நிலம் வாங்கப் பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலும், ஒரு சொட்டு தண்ணீர் கூட எடுக்காமல் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். 300 ஏக்கரில் மரங்கள் நடப்படும். ஐந்தாயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும்.  இந்த அனல்மின் நிலையத்தால் விவசாயிகளுக்கோ, மீனவர்களுக்கோ எந்த பாதிப்பும் வராது' என்றார். பின்னர் கிராம மக்கள் கருத்து கூறினர். 

பஞ்சங்குப்பம் ராமலிங்கம்: 

           விவசாய நிலங் களை புரோக்கர்கள் ஏக்கர் நான்கு லட்சத்திற்கு வாங்கி அதிக விலைக்கு விற்று எங்களை மோசடி செய்துள் ளனர். அவர்கள் மீது கலெக் டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
கிள்ளை செழியன்: 

 அனல் மின் நிலையத்தால் மீனவர் கள், வி வசாயிகள் பாதிக்க வாய்ப்பு உள்ளது. சுற்றுசூழல் பாதித்து கேன்சர் நோயால் மக்கள் பாதிக்கப்படுவர். 

அன்னப்பன்பேட்டை ராமலிங்கம்: 

                 இப்பகுதி இளைஞர்கள் வேலை கிடைக்காமல் வெளிநாட் டில் கொத்தடிமைகளாக உள்ளனர். அவர் களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரவேண்டும்.  

சிலம்பிமங்களம் ஊராட்சி துணைத் தலைவர் சந்திர கலா: 

               இங்கு அனல்மின் நிலையம் வருவதை வரவேற்கிறோம். இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரவேண்டும். இவ்வாறு கிராம மக்கள் கருத்து தெரிவித்தனர்.

Read more »

காட்டுக்கூடலூர் ஐயனார் கோவில் 24 மணி நேரத்தில் திறக்க உத்தரவு

பண்ருட்டி : 

                    பண்ருட்டி அடுத்த காட்டுக்கூடலூரில் தனிநபர் பூட்டி வைத்துள்ள கோவிலை 24 மணி நேரத்தில் திறக்க நேற்று இரவு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.  கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காட்டுக்கூடலூரில்  ஐயனார், பிடாரி நொண்டிவீரன் கோவில் உள்ளது. கோவில் மற்றும் கோவிலுக்கு சொந்தமான இரண் டரை ஏக்கர் நிலத்தை அதேபகுதியை சேர்ந்த சக்கரபாணி நிர்வகித்து வந்தார். இந்நிலையில் அரசு பள்ளி கட்டடம் கட்ட கோவில் நிலத்தை ஒதுக் கித் தரும்படி ஊர் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு மறுத்த சக்கரபாணி, கடந்த ஒரு மாதமாக கோவிலை பூட்டி வைத்தார். இந்நிலையில் கோவில் அறங்காவலராக தன்னை நியமிக்க கோரி சக்கரபாணி இந்து சமய அறநிலையத்துறைக்கு மனு கொடுத்தார். இதனை விசாரித்த இணை ஆணையர் திருமகள், சக்கரபாணியின் மனுவை தள்ளுபடி செய்து, கோவில் பொறுப்புகளையும் அதிகாரிகளே ஏற்க உத்திரவிட்டார். அதன்படி கடந்த 3ம் தேதி கோவில் பொறுப்புகளை ஏற்க சென்ற நிர்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன், உதவியாளர் முத்து ஆகியோரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க சக்கரபாணி மறுத்தார். இதனை அறிந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் கோவிலை திறக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
                         இந்நிலையில் சக்கரபாணி, இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் மேல்முறையீடு செய்து வரும் மார்ச் 30ம் தேதிவரை கோவில் தர்மகர்த்தாவாக தொடர உத்தரவு பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகநாதன், தாசில்தார் பாபு, வருவாய் அதிகாரி சித்ரா மற்றும் அதிகாரிகள் கோவிலை அடுத்த 24 மணி நேரத்தில் திறக்க வேண்டும். இல்லை எனில் பூட்டை உடைத்து கோவில் திறக்கப்படும் என சக்கரபாணியிடம் தெரிவித்தனர். மேலும் இதற்கான அறிவிப்பு நோட்டீசை கோவில் மற்றும் சக்கரபாணியின் வீட்டில் ஒட்டினர். கோவிலை உடன் திறக்க வேண்டும் என 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டதால் பண்ருட்டி டி.எஸ்.பி., பிரசன்னகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read more »

ஜெ., பேரவை செயலாளர் தாக்கு : அ.தி.மு.க., வினர் மீது வழக்கு பதிவு

காட்டுமன்னார்கோவில் : 

                 காட்டுமன்னார்கோவில் ஜெ., பேரவை நகர செயலாளரை தாக்கிய அ.தி.மு.க., வினர் 10 பேரை போலீசார் தேடிவருகின்றனர். காட்டுமன்னார்கோவில் ஜெ.,பேரவை நகர செயலாளராக கோவிந்தன். இவர் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் மீது கட்சி தலைமையில் புகார் செய்தார். இந்நிலையில் 10 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கோவிந்தன் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியது. காயமடைந்த  கோவிந்தன் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.   இதுகுறித்து அவர், அ.தி.மு.க.,  நகர செயலாளர் எம்.ஜி.ஆர் தாசன் துண்டுதலின்பேரில் கோட்டைமேடு அ.தி.மு.க., நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர் வீடு புகுந்து என்னையும், எனது குடும்பத்தினரையும் தாக்கியதாக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு  பதிந்து விசாரித்து வருகின்றனர்.  இந்நிலையில், எம்.ஜி.ஆர். தாசனை கொலை செய்துவிடுவதாக கோவிந்தன் மிரட்டியதாக அவரது உறவினர் சுந்தர்ராஜன் காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய் துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அ.தி.மு.க.,வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more »

வெள்ளாற்றில் மணல் குவாரி: கிராம மக்கள் ஒப்புதல்

ஸ்ரீமுஷ்ணம் : 

                            தாசில்தார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கள்ளிப்பாடி ஆற்றில் மணல் குவாரி திறக்க கிராம மக்கள் ஒப்புக் கொண்டனர். ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கள்ளிப்பாடி வெள்ளாற்றில் மணல் குவாரி இயங்கி வந்தது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையால் மூடப்பட்டது. மீண்டும் கடந்த ஜனவரி 4ந் தேதி குவாரியை திறக்க  பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்ற போது, ஆற்றில் மணல் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது.இதுதொடர்பாக நேற்று ஸ்ரீமுஷ்ணம் சுற்றுலா மாளிகையில் காட்டுமன்னார்கோயில் தாசில்தார் வீரபாண்டியன், பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் ஊராட்சி தலைவர்கள் காவனூர் கங்காதரன், கள்ளிப்பாடி தங்கசாமி, தி.மு.க., கிளை செயலாளர் மணிகண்டாமணி, ஆளவந்தார், ராமஜெயம், தமிழ்மணி, கிராம முக்கியஸ்தர்கள் நாகேஸ்வரன், சண்முகம், ஜாபர், மாட்டு வண்டி சங்க தலைவர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில் கள்ளிப்பாடி- காவனூர் செல்லும் வழியில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், காவனூர் கிராம எல்லையில் மணல் அள்ளக்கூடாது. மாட்டு வண்டிகள் காவனூர் செல்லும் பாதையில் இருந்து 75 மீட்டர் தூரம் உள்ளே சென்று மணல் அள்ள வேண்டும். மணல் அள்ள செல்ல ஆற்றில் தற்காலிக சாலை அமைக்க வேண்டும். குவாரி அலுவலகத்தை வெள்ளாற்றின் கரையோரம் அமைத்து கண்காணிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனையேற்று குவாரியை செயல்படுத்த இரு கிராம மக்களும் ஒப்புக் கொண்டனர்.

Read more »

.ராணுவ போர்க்கால ஒத்திகை பயிற்சி என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்பு

சிதம்பரம் : 

                  சென்னையில் ராணுவ வீரர்கள் நடத்திய போர்க் கால ஒத்திகை பயிற்சியில் அண்ணாமலை நகர் 6வது என்.சி.சி., பிரிவு மாணவர்கள் பங்கேற்றனர். சென்னை அடுத்த அனந்தபுரம் ராணுவ மைதானத்தில் ராணுவ பிரிவு 5 ஜேக் ரைபில்ஸ் ராணுவ வீரர்கள் அதி நவீன துப்பாக்கிகள், பீரங்கி தாக்கும் ராக்கெட் லாஞ்சர்கள், கையெறி குண்டுகள் எம்.எம்.ஜி.,81 மீட்டர் மோட்டார்கள் போன்ற ஆயுதங்கள் உபயோகம் பற்றிய போர்க் கால ஒத்திகை பயிற்சி செய்து காட்டினர். ஜேக் ரைபில்ஸ் கமாண்டிங் அலுவலர் கர்னல் தீப் பகத் தலைமையில் சுமார் 60 ராணுவ வீரர்கள் போர்க்கால ஒத் திகை சண்டைப் பயிற் சியை செய்து காட்டினர்.  அண்ணாமலை நகர் 6வது என்.சி.சி., பிரிவு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர் கள் 150பேர் போர் ஆயுதங் கள் உபயோகிப்பது பற்றி தெரிந்துகொண்டனர். அண்ணாமலைநகர் 6வது என்.சி.சி., பிரிவு கமாண்டிங் அலுவலர் லெப்டினன்ட் கர்னல் அய்யப்பசாமி மாணவர்களுக்கு இந்திய ராணுவத்தின் அதிநவீன துப் பாக்கிகள், மார்ட்டர்கள் மெஷின் ன், ராக்கெட் லாஞ்சர், கையெறி குண்டுகள், மைன்கள் குறித்து விளக்கமளித்தார். மேஜர் அகோரம் சுபேதார் மேஜர் மனோகர், சுபேதார் ரெட்டி, ஹவில் தார் மேஷாக், கிருஷ்ணமூர்த்தி,  ரோக்கியசாமி உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வழிகாட்டினர்.

Read more »

அம்பு பூட்டியபாளையம் கோவில் கும்பாபிஷேகம்

கிள்ளை : 

              சிதம்பரம் அடுத்த சி.முட்லூர்- அம்புபூட்டியபாளையம் எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி கடந்த 3ம்தேதி வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷனம், கலசஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், முதல் கால யாக சாலை பூஜைகளும், இரவு முதல்கால பூர்ணாகுதி  தீபாராதனை, யந்திர ஸ்தாபனம்,மருந்து சாத்துதல் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று அதிகாலை கோபூஜை, இரண்டாம் கால பூஜையை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கீழ் அனுவம்பட்டு ஊராட்சி துணைத் தலைவர் சுப்ரமணியன் உள் ளிட்டோர் செய்திருந்தனர்.

Read more »

நவகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

கடலூர் : 

                 கடலூர் பாதிரிக்குப்பம் நவகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
 
             கடலூர் அடுத்த பாதிரிக்குப்பத்தில் உள்ள நவகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. தனையொட்டி கடந்த 3ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், அன்று மாலை 6 மணிக்கு நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் முதல் கால யாகபூஜை நடந்தது. நேற்று முன்தினம் (4ம் தேதி) காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, மஹா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.  மாலை 4 மணிக்கு கரிகோலம் வந்து, இரவு 7 மணிக்கு முன்றாம் கால ஹோமம், நவகாளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றல் நடந்தது. நேற்று காலை (5ம் தேதி) காலை 7 மணிக்கு பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம், பூர்ணாகுதி  யாத்ராதாணம், குடம் புறப்பாடு நடந்தது. காலை 10 மணிக்கு கோபுர கலசம் கும்பாபிஷேகமும், 10.15 மணிக்கு நவகாளியம்மனுக்கு மகாகும்பாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து  மகா தீபாராதனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

Read more »

கண் சிகிச்சை முகாம்

கடலூர் : 

              கடலூரில் கண் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடந்தது. மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், லயன்ஸ் கிளப் ஆப் கடலூர் ஏன்சியன்ட் சிட்டி, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் கடலூர் டவுன் ஹாலில் நடந்தது. முகாமிற்கு லயன்ஸ் கிளப் ஆப் கடலூர் ஏன்சியன்ட் சிட்டி தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்  கினார். மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க திட்ட ஒருங்கிணைப் பாளர் ஞானஸ்கந்தன், திட்ட மேலாளர் கேசவன் முன்னிலை வகித்தனர். ஏன்சியன்ட் சிட்டி செயலாளர் ஹாஷீம்பாபு வரவேற்றார். ரத்தினசபாபதி முகாமை துவக்கி வைத்தார். புதுச்சேரி அரவிந்த கண் மருத்துவமனை டாக்டர்கள் சுவாதி, பல்லவி தலைமையிலான குழுவினர் பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.

Read more »

குழந்தையின்மை நல சிகிச்சை : கடலூரில் நாளை இலவச முகாம்

 கடலூர்   : 

                 பில்ராத்  மருத்துவமனை, கருத்தரிப்பு ஆராய்ச்சி மையம் மற்றும் கடலூர்  ஜூனியர் சேம்பர் சார்பில்  குழுந்தையின்மை  நல சிகிச்சை முகாம் பாதிரிக்குப்பத் தில் நாளை  (7ம் தேதி) நடக்கிறது.
 
                       முகாமில்  குழுந்தை  இல்லாத  தம்பதியினருக்கு  இலவசமாக  பரிசோதனை செய்து மருத் துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.  முகாமில்  பங்கேற்க தம்பதியினராக வரவேண்டும்.   இதற்கு முன்பு  இது சம்பந்தமாக ஏதேனும்  மருத்துவ சிச்சை பெற்றிருந்தால்  அந்த விபரங் களை எடுத்து வர வேண்டும். மகப்பேறு  மருத்துவர்கள் தாட்சாயணி, சியாமளா சிவாஜி ஆகியோர் மருத்துவ ஆலோசனை  வழங்குகின்றனர்.  முகாமில் பங்கேற்க  முன்பதிவு  செய்திட 94450 76552, 94444 13854 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு   கொள்ளவும்.

Read more »

அறுவடை மிஷினின் டிரைவர்களை தாக்கிய மர்ம ஆசாமிகளுக்கு வலை

கிள்ளை : 

                  சிதம்பரம் அருகே நெல் அறுவடை செய்த மிஷினின் டிரைவர்களை தாக்கிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம் அடுத்த பின்னத்தூரில் ஆட்கள் கிடைக்காததால் நெல்லை இயந்திரம் மூலம் அறுவடை செய்தனர். இதனைக் கண்டித்து விவசாய சங்கத்தினர் நேற்று முன்தினம் கிள்ளை-சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் காமராஜ் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்படி நேற்று பின்னத்தூரை சேர்ந்த 45 பேர்  நெல் அறுவடை பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கதிர் முற்றிய சாய்ந்த நிலங்ளில் இயந்திரங்களை கொண்டு அறுவடை செய்யப்பட்டது. அப்போது 20 பேர் கொண்ட கும்பல் அறுவடை இயந்திரத்தின் டிரைவர் மயிலாடுதுறை அடுத்த பழைய கூடலூரை சேர்ந்த ராமதாஸ் (23) மற்றும் இருவரை தாக்கிவிட்டு தப்பி சென்றது. காயமடைந்த மூவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிதம்பரம் டி.எஸ்.பி., மூவேந்தன், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று விசா ரணை நடத்தினர். இது குறித்து கிள்ளை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Read more »

காதல் திருமணம் செய்த பெண் பெற்றோருடன் செல்ல மறுப்பு

காட்டுமன்னார்கோவில் :

                   காதல் திருமணம் செய்த பெண் பெற்றோருடன் செல்ல மறுத்ததால், காதலனுடன் அனுப்பி வைக்கப் பட்டார். காட்டுமன்னார்கோவில் அடுத்த விளாகத்தைச் சேர்ந்தவர்  அன்புமணி(25). மினி பஸ் கண்டக் டரான இவரும், டைலர் கடையில் வேலை செய்து வந்த சிறுகாட்டூர்  சாமிக் கண்ணு மகள் கண் ணகி(19)யும் ஓராண்டாக காதலித்து வந்தனர். கண்ணகிக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய அன்புமணியும், கண்ணகியும் கடந்த 2ம் தேதி சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு நேற்று காட் டுன்னார்கோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.  அங்கு நடந்த பேச்சு வார்த்தையில் கண்ணகி பெற்றோருடன் செல்ல மறுக்கவே அவரை அன்பு மணியுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

Read more »

லாட்டரி சீட்டு விற்ற பா.ம.க., பிரமுகர் கைது

சேத்தியாத்தோப்பு : 

                  லாட்டரி சீட்டு விற்ற பா.ம.க., மாநில தொழிற் சங்க துணை தலைவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்ட எஸ்.பி., அஷ்வின் கோட்னிசிற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி ரவுடிகள் ஒழிப்பு சப் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப் போது தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த பா.ம.க., மாநில தொழிற்சங்க சர்க்கரை பிரிவு துணைத்தலைவர் பஞ்சநாதன், அமர்ஜோதி, சுப்ரமணியன் ஆகியோரை கைது செய்து சேத்தியாத்தோப்பு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Read more »

தீ விபத்து

திட்டக்குடி :

             திடீர் தீ விபத்தில் 10 ஆயிரம் மதிப்பிலான மாட்டு கொட்டகை எரிந்து நாசமானது. திட்டக்குடி பெரியார் நகரை சேர்ந்தவர் அப்புசாமி. இவருக்கு சொந்தமான 20 அடி நீளமுடைய மாட்டு கொட்டகை நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தில் 10 ஆயிரம் மதிப்பிலான கூரை எரிந்து நாசமானது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior