உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 01, 2011

கடலூர் மாவட்ட வலைபூக்கள் - பகுதி 5

கடலூர் மாவட்ட நண்பர்களின் வலைபூக்கள் - பகுதி 5

  
http://yoga-articles-for-everyone.blogspot.com/ - YOGA ARTICLE FOR EVERYONE  


http://fntobea.blogspot.com/ - FNTO BSNL Employees Association -Reg No.2/2011-Kadal Alai
 

http://nftecdl.blogspot.com/   - NFTE CUDDALORE


http://karthikarj.blogspot.com/ - Chasing behind tech......

http://tradersharmony.blogspot.com/ - WELCOME TO THE WORLD OF TRADING ALIKE ALICE IN 

                                                           WONDERLAND - Mahindeesh (a) Sathish 



http://vinothkumarj.blogspot.com/VinothkumarJ's World
















Read more »

கடலூர் தேவனாம்பட்டினத்தில் வலையில் சிக்கிய பெண் மயில் சாவு





கடலூரில் காகங்களின் தாக்குதலில் இருந்து, மீட்கப்பட்ட பெண் மயில்.


கடலூர்: 

           கடலூர் தேவனாம்பட்டினத்தில், வயலில் போடப்பட்டிருந்த வலையில் சிக்கிய பெண் மயில், பரிதாபமாக இறந்தது. 

           கடலூர் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த பூபதி, தன் வயலில், வெங்காயம் பயிர் செய்திருந்தார். வயலில் கோழிகள் புகுந்து பயிரை அழிப்பதால், வயலைச் சுற்றி வலை கட்டியிருந்தார். நேற்று காலை அவ்வழியாகச் சென்ற வாலிபர், பாலாஜி வயலில் இருந்து வந்த வித்தியாசமான சத்தத்தைக் கேட்டு அருகில் சென்று பார்த்த போது, வலையில் மயில் சிக்கியிருந்தது தெரிந்தது. உடன் மயிலை மீட்டு, தேவனாம்பட்டினம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார், வனத்துறையிடம் மயிலை ஒப்படைத்தனர். மயிலுக்கு சிகிச்சை அளித்து காப்புக்காட்டில் விட முயற்சி மேற்கொண்டனர். இதற்கிடையே, மயில் பரிதாபமாக இறந்தது.



Read more »

காட்டுமன்னார்கோவில் அருகே நடுரோட்டில் பஸ் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு






காட்டுமன்னார்கோவில்: 

          கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே, தனியார் பஸ்சின் முன் சக்கரம் கழன்று ஓடியதால், பரபரப்பு ஏற்பட்டது.

            கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து, நேற்று மதியம், காட்டுமன்னார்கோவிலுக்கு, தனியார் பஸ், 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. குமராட்சி அருகே செல்லும்போது, பஸ்சின் முன் சக்கரத்தில் இருந்து, சத்தம் வந்ததால், டிரைவர் பஸ்சை நிறுத்தி சோதனை செய்ததில், பேரிங் உடைந்தது தெரிந்தது. காட்டுமன்னார்கோவில் வரை சென்று விடலாம் என, டிரைவர் மீண்டும் பஸ்சை இயக்கினார். 

              லால்பேட்டை நெருங்கிய போது, பஸ்சின் முன் சக்கரம் கழன்று ஓடியது. இதனால் பலத்த சத்தத்துடன் பஸ் நடுரோட்டில் முன் பக்கம் சாய்ந்தபடி நின்றது. பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடினர். கழன்ற சக்கரம், 300 மீட்டர் தூரம் ஓடி அருகில் உள்ள வயலில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்சை மிதமான வேகத்தில் ஓட்டியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நடுரோட்டில் பஸ் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வாகனங்கள் எள்ளேரி, லால்பேட்டை வழியாக திருப்பி விடப்பட்டன.



Read more »

கடலூரில் உலக புகையிலை ஒழிப்பு தின கண்காட்சி

கடலூர் : 

         கடலூரில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தையெட்டி கடலூரில் நேற்று பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. 

              உலகம் முழுவதும் மே மாதம் 31ம் தேதி புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையெட்டி கடலூர் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் சங்கம் சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே விழிப்புணர்வு பிரசார இயக்கம் நடந்தது. இதில் புகைப்பதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த குறிப்புகள் அடங்கிய விளக்கப் படங்கள் அடங்கிய கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இக் கண்காட்சியை மாவட்ட மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீரா திறந்து வைத்தார். 

          மேலும் சிகரெட் புகைப்பதன் மூலம் அதில் உள்ள 48 வகையான விஷ பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை. மற்றும் ஹைட்ரஜன் சயனைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு, நிக்கோடின், கார்ப்பன் மோனாக்ஸைடு, அம்மோனியம் பென்சின், நேப்தலீன், அமினோ பை பினைல் போன்ற கொடிய விஷங்கள் சிகரெட்டில் உள்ளது என எச்சரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை சங்கத்தின் தொண்டர்கள் வினியோகம் செய்தனர்.




Read more »

பிளஸ் 2 பொது கல்வி தேர்ச்சி பெற்றவர்களும் பாலிடெக்னிக் 2ம் ஆண்டில் நேரடியாக சேரலாம்

கடலூர் : 

             பிளஸ் 2 பொதுப்பாட பிரிவு தேர்ச்சி பெற்றவர்களும் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு சேரலாம் என கடலூர் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் ரவி தெரிவித்துள்ளார். 

இது குறித்து கடலூர் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரி விடுத்துள்ள அறிக்கை: 

           பிளஸ் 2வில் தொழிற்கல்வி மற்றும் ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக்கில் சேரலாம் என ஏ.ஐ.சி.டி.இ., ஆணை பிறப்பித்திருந்தது. இதனால் பிளஸ் 2 பொது பொதுக்கல்வி (இயற்பியல், வேதியியல், கணிதம்) தேர்ச்சி பெற்றவர்கள் சேர்க்கை பெற முடியாத நிலை இருந்தது. தமிழக அரசு தற்போது ஏ.ஐ.சி.டி.இ.,கேட்டுக் கொண்டதன் பேரில் தற்போது பிளஸ் 2 பொது கல்வி (இயற்பியல், வேதியியல், கணிதம்) தேர்ச்சி பெற்றவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம் என பரிந்துரை செய்து கடந்த 28-05-2011ம் தேதி அரசு உத்தரவிட்டுள்ளது. 

            அதன் படி பிளஸ் 2 பொதுக் கல்வி மற்றும் பிளஸ் 2வில் தொழிற்கல்வி மற்றும் ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவரும் நேரடியாக 2ம் ஆண்டு பாலிடெக்னிக்கில் சேரலாம். இவ்வாறு ஸ்ரீமகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் ரவி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



Read more »

Peahen found critical, dies at Cuddalore Semmandalam

CUDDALORE: 

        A peahen brought in a critical condition to the Thevanampattinam police station died after it was shifted to the Forest Department office at Semmandalam near here on Tuesday. Later, the carcass was sent to the Animal Husbandry Department for conducting post-mortem to ascertain the cause of the death. The two-year-old peahen strayed into a farmland where onion crop was raised near the Thevanampattinam coast.

           The peahen was said to have been chased by crows that pecked vigorously at its neck. Some residents brought the peahen to the Thevanampattinam police station. Then, it was handed over to the Forest Department personnel. Hearing this, J. Poonam Chand, an animal and bird lover, tried at all means of reviving the bird. He also tried to resuscitate the bird through artificial respiration. However, it could not respond. He cited three possible reasons for its death –excessive heat; badly injured by the chasing crows as claimed; or it could have eaten something that would have endangered its life. Forest Ranger V.Srinivasan told TheHindu that the reason could be known only after post-mortem.


Read more »

Anti-tobacco expo held at cuddalore Manjakuppam

CUDDALORE: 

          Health hazards of tobacco were highlighted at an exhibition organised by Prajapita Brahmakumaris Iswariya Viswa Vidyalayam at the Manjakuppam grounds here on Tuesday.

        The expo, organised to mark “World No-Tobacco Day” observed on May 31 every year, drove home the point that consumption of tobacco in any form was harmful. Quoting a World Health Organisation report, the exhibition stressed that tobacco use, in any form, claimed 5.4 million lives across the globe - in other words, one person died every six seconds.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior