உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 18, 2010

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் தனிக் கட்டணம் ரத்து: முதல்வர் கருணாநிதி


              மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் தனிக் கட்டணத்தை ரத்து செய்து முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.  
 
இதுகுறித்து அவரது உத்தரவு: 
 
                "மாற்றுத் திறனாளிகள் உயர்கல்வி பயிலுவதற்கு ஏதுவாக அவர்கள் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. வரும் கல்வி ஆண்டிலிருந்து தனிக் கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.  மேலும், மாநில அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை அவர்கள் பெற்றிட வருவாய் உச்சவரம்பு முற்றிலும் நீக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையிலான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்பு வகுப்புகளில் பயிலும் அனைத்து வகை மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தனிக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.   
 
                நலத் திட்ட உதவிகளைப் பெறும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வருவாய் உச்சவரம்பு முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. இந்த உத்தரவு காரணமாக, ஆண்டுக்கு ரூ.7.71 கோடி கூடுதல் செலவு ஏற்படும். மொத்தம் 22 ஆயிரத்து 685 மாற்றுத் திறனாளிகள் பயன் பெறுவர்' என்று முதல்வர் கருணாநிதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். எத்தனை வகையான சலுகைகள்? மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு 48 வகையான நலத் திட்ட உதவிகளை அளிக்கிறது. அவர்களுக்கு கல்வியில் 3 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் மரணம் அடைந்தால் ரூ. 1 லட்சம் வரை நிவாரண நிதி, அவர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை, வேலை தேடும் மாற்றுத் திறனாளிகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் அரசின் சார்பில் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  

Read more »

இன்று விக்ரம் நடித்த ராவணன் திரைப்படம் வெளியீடு


"விக்ரமின் ரசிகன் என்ற முறையில் ராவணன் திரைப்படம் வெள்ளி விழா காண  வாழ்த்துகிறேன்"
மஜா கார்த்தி

  ராவணன் – சிறப்பு திரைவிமர்சனம்
 

                     கம்ப ராமாயணத்தையும், வீரப்பன் கதையையும் சேர்த்து ராவணனை உருவாக்கியிருக்கிறார் மணிரத்தினம்.  வால்மீகி ராமாயணத்தில் ராமன் நல்லவராக இருப்பார்… ராவணன்  கெட்டவனாக காட்டி இருப்பார்கள். ஆனால் உண்மையில் ராவணன்  மாபெரும் வீரன்.  மணிரத்தினத்தின் படைப்பில் ராவணனாக காட்டப்படும் விக்ரம் தரப்பின் நியாயங்கள் காட்சிகளாக்கப் பட்டிருக்கின்றன. ராவணனை கிட்டதட்ட ஒரு ஹூரோவாகவே காட்டியிருக்கிறார் மணி! அந்த வகையில் இது ஒரு புதுமையே!

                    மேகமலைப் பகுதியில் வசிக்கும் மக்களால் கொண்டாடப்படும் வீரா என்கிற வீரய்யனாக விக்ரம். அவரை என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல வரும் போலீஸ் எஸ்.பி. தேவ்ஆனந்தாக பிரித்விராஜ். எஸ்.பி.யின் மனைவி ராகினியாக ஐஸ்வர்யாராய். வீராவின் அண்ணனாக பிரபுவும், தங்கை வெண்ணிலாவாக பிரியாமணியும் கதையோடு இணைந்து வருகிறார்கள். ஃபாரஸ்ட் கார்டாக கார்த்திக் ரீ எண்ட்ரியின் கவனத்தை ஈர்க்கிறார்.

                  வீராவைக் கண்டுபிடிக்க அவனுடைய  தங்கை வெண்ணிலாவை திருமணக் கோலத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் அழைத்துச் செல்கின்றனர். காதலித்து கைப்பிடித்த மேல்குடியைச் சேர்ந்த கணவன் போலீசைப் பார்த்து ஓடிவிட… ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த வெண்ணிலாவை காவலில் வைத்து ஒட்டுமொத்த போலீசும் பாலியல் பலாத்காரம் செய்துவிடுகின்றனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் தப்பிய வீராவுக்கு, தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லிவிட்டு கிணற்றில் விழுந்து உயிரை விடுகிறாள் வெண்ணிலா.

                 தன் தங்கையைப் பாழாக்கிய அதிரடிப்படை போலீஸ் கும்பலையும் அதன் தலைவரான எஸ்.பி. தேவ்ஆனந்தையும் பழிவாங்க கிளம்புகிறான் வீரா. எஸ்.பி.யின் மனைவி ராகினியை கடத்திச் செல்கிறான். மேகமலையில் உள்ள பழங்குடியினர் பகுதியில் ராகினியை சிறைபிடிக்கிறான் வீரா. மனைவியை மீட்க சிறப்பு அதிரடிப்படையோடு புறப்படுகிறார் தேவ் ஆனந்த். 14 நாட்கள் நீடிக்கும் இந்த சேசிங் படலத்திற்கு இடையே வீராவுக்கு எஸ்.பி.யின் மனைவி ராகினி மீது காதல் வருகிறது.  இறுதியில் தன்னைத்  தேடிக் கண்டுபிடித்த அதிரடிப்படையை மொத்தமாக அழித்த வீரா… எஸ்.பி. தேவ்ஆனந்தை மட்டும்  கொல்லாமல் விடுகிறான்.  என் கணவரின் உயிருக்கு உத்தரவாதம் கொடுத்தால் நான் இங்கேயே இருந்திடுவேன் என்று ஒரு கட்டத்தில் ராகினி சொல்ல… அதையே தனக்குக் கிடைத்த வெற்றியாக நினைத்து ராகினியை விட்டுவிடுகிறான் வீரா.

                  ரயிலில் ராகினியோடு ஊர் திரும்பும் எஸ்.பி. தேவ் ஆனந்த்… 14 நாளில் வீரா உன்னைத் தொடவே இல்லையா? என்று சந்தேகப்பட, ரயிலை  நிறுத்தி இறங்கிவிடுகிறாள் ராகினி.  மீண்டும் வீராவைத் தேடி, அவன் இடத்துக்கு வந்து அவனிடம்… என்னைப்பற்றி என் கணவரிடம் என்ன சொன்னாய் என்று கேட்கிறாள். கணவன் தன்னைச் சந்தேகப்பட்டதாக ராகினி சொன்னதும், எஸ்.பி.யின் திட்டத்தை புரிந்துகொள்கிறான் வீரா. ராகினியின் மூலம் தன்னைப் பிடிக்க திட்டமிட்டிருக்கிறார் எஸ்.பி. என்பதை உணர்ந்துகொள்கிறான் வீரா.  அதே நேரத்தில் சிறப்பு அதிரடிப்படையுடன் வந்த எஸ்.பி. தேவ் ஆனந்த் ராகினியின் எதிர்ப்பையும் மீறி வீராவைச் சுட்டுக் கொல்வதுடன் முடிகிறது ராவணன்.

               ராமனாக எஸ்.பி.கதாபாத்திரத்தையும், சீதையாக ராகினி கதாபாத்திரத்தையும், ராவணனாக வீரா கதாபாத்திரத்தையும், வெண்ணிலாவை சூர்ப்பநகையாகவும்,  ஃபாரஸ்ட் கார்டு கார்த்திக்கை ஆஞ்சநேயராகவும் நினைக்க வைக்கின்றன காட்சிகளும், வசனங்களும். சொந்தக் குரலில் பேசியிருக்கும் ஐஸ்வர்யாவின் முயற்சியைப் பாராட்டலாம்.  உலக அழகிக்கான தகுதி இப்போதும் இருக்கிறது என சொல்லாமல் சொல்கிறார் ஐஸ்வர்யா. பேசும் கண்களை அத்தனை அழகாய் கேமராவில் சிறை பிடித்திருக்கிறார் சந்தோஷ் சிவன். கணவன் மீதான அன்பை வெளிப்படுத்தும் போதும்… அவர் தப்பு செய்ய மாட்டார் என உறுதியாக சொல்லும் போதும் தேவ் மீதான காதலை அழகாக வெளிப்படுத்துகிறார்.  வீராவின் தங்கை வெண்ணிலாவுக்கு நேர்ந்த கொடுமையை அறியும்போது கண்களில் நீர்வழிய துக்கம் தொண்டை அடைக்க அழும்போது நம்மையும் சோகத்தில் ஆழ்த்துகிறார்.  படம் முழுக்க வந்து மொத்தமாக ஸ்கோர் செய்திருக்கிறார் ஐஸ்.

                     வீராவாக வந்து, வர்க்க ரீதியான இடைவெளிகளைப் பற்றி, கூர்மையான வசனங்களை பேசும் விக்ரமின் நடிப்பும் பிரமாதம். உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் விக்ரமுக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது.  உயிருக்குப் பயப்படாமல் அருவியில் விழுந்துகிடக்கும் ஐஸ்வர்யா மீது உருவாகும் காதலை அவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார். சஞ்சலப்பட்ட மனதோடு கஷ்டப்படுவதை வெளிப்படுத்தும் காட்சிகளில் பின்னியிருக்கிறார். எஸ்.பி. மேல எனக்கு பொறாமையா இருக்கு.  அவர் முந்திக்கிட்டாரே… என்று தன் விருப்பத்தை ராகினி ஐஸ்வர்யாவிடம் வெளிப்படுத்தும்போதும், இங்கேயே இருந்திடுறீங்களா? என்று கேட்கும் போதும் தன் இன்னொரு முகத்தை வெளிப்படுத்துகிறார்.  மேட்டுக்குடி மீதான தன் கோபத்தை வெளிப்படுத்தும் இடங்களில் உணர்ச்சிக் கொந்தளிப்பு. நரம்புகள் முறுக்கேறுகின்றன.

                     அறிமுகக் காட்சியிலேயே தன்னுடைய ஆஞ்சநேய சேஷ்டைகளைக் காட்டும் கார்த்திக்கும் ரசிக்க வைக்கிறார். கண்டேன் சீதையை என்கிற ரீதியில் எஸ்.பி.யிடம்… பார்த்துட்டேன்… பார்த்துட்டேன் சார் என்று உற்சாகப்படும் இடங்களில் அவரின் டச் தெரிகிறது.  சமாதானமாக போயிடு வீரா…இல்லைன்னா அழிவு வரும் என்று சமாதானம் பேசும்போதும் கார்த்திக் அழுத்தமாக தெரிகிறார்.  காட்சிகள் குறைவென்றாலும் மனதில் நிற்கிறார் பிரியாமணி. பிரபுவுக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிப்பதற்கான ஒரு கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது.  எந்தக் கடையில் அரிசி வாங்குகிறாரோ தெரியவில்லை! பெரிதும் பேசப்பட்ட ரஞ்சிதாவை படத்தில் தேடிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

                  மொத்த நட்சத்திரப் பட்டாளத்தையும் முந்தியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். உசிரே போகுதே, காட்டுச் சிறுக்கி என்று பாடல்கள் அத்தனையும் தாளம் போட வைக்கும். பின்னணி இசையில் காட்சிகளோடு ஒன்ற வைக்கிறார். கவிப்பேரரசுவின் கவிதை வரிகள் உள்ளத்தை அள்ளுகின்றன. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் அழகை மொத்தமாக காட்டியிருக்கிறார்கள். மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார் மணிரத்னம்.  ஓப்பனிங் சீனில் தொடங்கும் விறுவிறுப்பு கடைசி சீன் வரை தொடர்கிறது.  பல இடங்களில் வசனங்கள் ஈர்க்கின்றன.  படம் முழுக்க மணிரத்தினத்தின் ஈடுபாடும், உழைப்பும் வெளிப்படுகிறது. பழங்குடியினரிடம் அதிகார வர்க்கம் காட்டும் மூர்க்கத்தனத்தையும், வெறியையும் காட்சிகளாக்கியிருக்கும் விதத்தில் வீரப்பன் காடு நினைவுக்கு வந்துபோகிறது. படத்தில் குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் நிறைகளில் எல்லாம் மறந்துவிடுகின்றது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்


 காட்டுவாசி நடனத்தில் கலக்கிய விக்ரம்!

 
                  தமிழ் சினிமாவை இந்திய சினிமா அரங்கிற்குள் கொண்டு சேர்த்து தமிழனுக்குப் பெருமைத் தேடித் தந்த இயக்குநர்களில் மணிரத்னம் குறிப்பிடத்தகுந்தவர். பொதுவாக மணிரத்னம், தன் படங்கள் குறித்து அதிகம் பேசிக் கொள்வதில்லை. ஆனால் பெரும்பாலும் அவருடைய படைப்புகள் பேசப்படும் வகையில் இருக்கும். இந்திய அளவில் மட்டுமின்றி, உலகளவிலும் அவருடைய படம் வெளியாகும் தினத்தை ஆவலுடன் பல திரை ஆர்வலர்களும், ரசிகர்களும் எதிர்நோக்கி காத்திருப்பர். அந்த வகையில் மணிரத்னம், தற்போது "ராவணன்' படத்தை தமிழ் மற்றும் ஹிந்தியில் எடுத்து, அதை திரையிடும் வேலையில் மும்முரமாக இருக்கிறார்.தமிழ் "ராவணனி'ல் ஹீரோவாக, அதே நேரத்தில் எதிர்மறை கதாபாத்திரம் போன்ற வேடத்தில் விக்ரமும், அவருடைய தங்கையாக ப்ரியாமணியும், போலீஸ் அதிகாரியாக பிருத்திவிராஜும், அவருக்கு மனைவியாக ஐஸ்வர்யா ராயும், மற்றொரு முக்கிய பாத்திரத்தில் அபிஷேக் பச்சனும் நடித்திருக்கிறார்கள்.சமீபத்தில் "ராவணன்' தமிழ் படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா, சுட்டெரிக்கும் கத்திரி வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் சென்னையில் குளிர்ச்சியாக நடந்தேறியது.ஆடியோ வெளியீட்டு விழா மேடையை அடர்ந்த மரங்கள் அடங்கிய காடு போன்ற அரங்காக நிர்மாணித்திருந்தனர். 
 
                   அதில் ஆட்டமும், பாட்டமுமாய் நிகழ்ச்சிகள் நடந்தேறின. இதில், ""கோடு போட்டா கொண்ணு போடு...'' என்ற பாடலுக்கு விக்ரம், காட்டுவாசிப் போல் வேடமிட்டு நடனமாட, அரங்கத்தில் ரசிகர்களின் கைத்தட்டல் அடங்க வெகு நேரமானது. இப்படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் தோன்றி ஒரு பாடலை பாட, அவரைத் தொடர்ந்து ""உசுரு போகுதே உசுரு போகுதே...'' என்ற பாடலை கார்த்திக் பாடி, ரசிகர்களை மகிழ்வித்தார்.மேலும் இந்நிகழ்ச்சியில் விக்ரம் பேசும்போது,""ராவணன்' படம் ராமாயண கதை இல்லை. ராமாயணம், மகாபாரதம், பஞ்சதந்திரம் உட்பட எல்லா புராணக் கதைகளையும் உள்ளடக்கியது. காடுகள், மலைகள் என அலைந்து, திரிந்து இப்படத்தை எடுத்திருக்கிறோம். இந்தப் படத்தில் நடித்தது த்ரில்லிங்காக இருந்தது'' என்று உற்சாகத்துடன் கூறினார்.""இந்தப் படத்திற்காக ஒரே இடத்தில் அமர்ந்து ஆறு பாடல்களை எழுதினேன். மணிரத்னம் ஒரு தவம்போல இப்படத்தை எடுத்துள்ளார். "ராவணன்' படத்திற்காக மணிரத்னம், விக்ரம், ஐஸ்வர்யா ராய் ஆகிய மூவருக்கும் நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்'' என்று கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியை நடிகர் கார்த்திக், நடிகை ப்ரியாமணி ஆகியோர் மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள். இப்படத்தின் மூலமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக கார்த்திக் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

Read more »

எம்.பி.பி.எஸ். மாற்றுத் திறனாளிகளுக்கு ரேங்க் பட்டியல் வெளியீடு

                  எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான ரேங்க் பட்டியல் வியாழக்கிழமை (ஜூன் 17) வெளியிடப்பட்டது.  

                 எம்.பி.பி.எஸ். மொத்த இடங்களில் 3 சதவீத இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும். அதாவது, மொத்தம் 42 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கப்படும். ஒவ்வொரு அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள மொத்த இடத்தில் 3 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும்.  மாற்றுத் திறனாளிகள் பிரிவில் மொத்தம் 78 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 51 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கட்-ஆஃப் மதிப்பெண் 193.5-ல் தொடங்கி, 105.50 வரை பெற்றுள்ள மாணவர்கள் ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.  

                இவர்களில் 24 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 3 பேர் பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 12 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 9 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 3 பேர் தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பைச் சேர்ந்தவர்கள். எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய பிளஸ் 2 தேர்வு தகுதி மதிப்பெண் இல்லாததால், ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ள இரண்டு பேருக்கு "பி.டி.எஸ். ஒன்லி' (பல் மருத்துவப் படிப்பு மட்டும்) என்ற குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாணவர்களுக்கும் ஜூலை 3-வது வாரம் நடைபெறும் பி.டி.எஸ். கவுன்சலிங்கின்போது அழைப்பு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி.

               முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கு... எம்.பி.பி.எஸ். படிப்பில் முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. பி.டி.எஸ். படிப்பில் ஒரு இடம் ஒதுக்கப்படும். இரண்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு 238 மாணவர்கள் அடங்கிய ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கட்-ஆஃப் மதிப்பெண் 196.50-ல் தொடங்கி, 99.50 வரை உள்ள மாணவர்கள் ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 

இணையதளத்தில்...:  

                 மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான ரேங்க் பட்டியல் சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org மற்றும் தமிழக அரசின் இணையதளம் www.tn.gov.in ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது.

Read more »

இன்று பி.இ. ரேங்க் பட்டியல்

                பி.இ. படிப்புகளுக்கான ரேங்க் பட்டியலை உயர் கல்வி அமைச்சர் க. பொன்முடி வெள்ளிக்கிழமை (ஜூன் 18) வெளியிடுகிறார்.  

                   இதன் விவரம் www.annauniv.edu  என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும்.  அண்ணா பல்கலைக்கழகங்கள், அவற்றின் உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் (அரசு ஒதுக்கீடு) ஆகியவற்றில் 2010-11-ம் ஆண்டில் பி.இ. படிப்புகளில் சேருவதற்கு 1.67 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.  இவர்களுக்கான ரேங்க் பட்டியலை உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடுகிறார்.   உயர்கல்வி முதன்மைச் செயலர் க.கணேசன், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் உள்ளிட்டோர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.  இத் தகவலை பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரிரயாஜ் கூறினார்.  பி.இ. கலந்தாய்வு வரும் 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Read more »

Women panel chief holds discussions with officials


 
Chairperson of the Tamil Nadu State Commission for Women Sarguna Pandian interacting with a woman in Cuddalore on Thursday.

CUDDALORE: 

            Chairperson of the Tamil Nadu State Commission for Women Sarguna Pandian has embarked upon a State-wide tour to review the cases relating to violence against women. She spoke to presspersons after holding discussions with officials in connections with issues pertaining to women here on Thursday.

           Ms. Pandian said the Violence Against Women Act had come in handy to get justice to aggrieved women. However, cases were pending for over five years and, to render speedy justice to women, she had been directing the officials to dispose of the cases received by the Commission within 90 days. From 2007 to 2009, the Commission had received a total of 4,523 petitions highlighting atrocities against women. These included dowry harassment, non-payment of alimony, desertion, second marriage without getting the consent of first wife, etc, Ms. Pandian said. The year-wise details of pending cases are as follows: 2007 – 350, 2008 – 648 and in 2009 – 1,139.

              Some of these were pending in courts and others had gone in for appeal. Ms. Pandian said that when it came to safeguarding dignity and self-respect, women should not remain diffident but assert themselves to claim their societal and constitutional rights. As regards Cuddalore district, the Commission had received 23 petitions - eight through the Social Welfare Department, three through the Revenue Department and 12 through the police. Collector P. Seetharaman and Superintendent of Police Ashwin Kotnis were present.

Read more »

Cooperative bank begins evening services

CUDDALORE: 

           Health Minister M.R.K. Panneerselvam inaugurated evening services of the cooperative bank on the premises of the Cuddalore District Central Cooperative Bank here on Thursday.

            He said that this was the 26th branch of the Cooperative Bank to carry on banking transactions during evening hours. The bank would function from 2 p.m. to 6 p.m. He hoped that the timings would be suitable for petty shop-keepers and pavement vendors to operate their accounts conveniently. Members of self-help groups could also take care of household chores during the day and transact business in the evenings. Mr. Panneerselvam said that demand draft services would soon be started and locker facility provided at the bank. He gave away a loan of Rs. 25,000 to differently abled persons and Rs.10,000 each to six beneficiaries. Collector P. Seetharaman, Cuddalore MLA G. Aiyappan, municipal chairman T. Thangarasu, Joint Registrar of Cooperative Societies S.R. Venkatesan were present.

Read more »

வாடகைக்கு எடுத்து விற்கப்பட்ட கார்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

கடலூர் : 

                   கடலூரில் வாடகைக்கு எடுத் துச் சென்று விற்பனை செய்யப் பட்ட 14 கார்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் ஒப்படைத்தார்.

                    திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளாறு கிராமத்தைச் சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் ரவி. இவர் தனியார் மொபைல் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் மாத வாடகைக்கு கார் வேண்டுமென கடலூர் மாவட்ட கார் டிரைவர்களை அனுகினார். கடலூர் புதுநகர், திருப்பாதிரிபுலியூர், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் 17 கார்களை வாடகைக்கு ரவியிடம் விட்டிருந்தனர். ஆனால் ரவி கூறியபடி வாடகையும் தர வில்லை, கார்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவில்லை .இந்நிலையில் ரவி 31ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். கார்களை மீட்டுத்தரக்கோரி கார் உரிமையாளர்கள் எஸ்.பி., யிடம் கடந்த 1ம் தேதி புகார் மனு கொடுத்தனர்.

                     எஸ்.பி., உத்தரவின் பேரில் மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் மாயமான கார்கள் மாயிலாடுதுறை, திருநெல்வேலி, சென்னை உட்பட பல இடங்களில் இயங்குவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் 14 கார்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட வாகனங்களை நேற்று கடலூர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் பார்வையிட்டு கார் உரிமையாளர்களிடம் அதன் சாவியை வழங்கினார்.

பின்னர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறியதாவது:

                    கார் மாயமான சம்பவம் குறித்த புகாரின் பேரில் எடுக்கப்பட்ட நடடிக்கையில் 14 கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 கார்கள் விரைவில் பறிமுதல் செய்யப்படும். இது தொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த செல்வம் தேடப்பட்டு வருகிறார். மாவட்டத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது திருட்டு சம்பவம் குறைவாகத்தான் நடந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக நடக்கும் தொடர் திருட்டு சம்பவத்தை தடுக்க மாவட்டத்தில் 4 டி.எஸ்.பி.,கள் நைட் ரவுண்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருட்டை தடுக்க பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். நகைகடைகளில் கேமரா, அலாரம் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.இவ்வாறு எஸ்.பி., கூறினார்.

Read more »

செம்மொழி மாநாட்டிற்கு செல்லும் போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை

கடலூர் : 

                 கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள கடலூர் மாவட்ட போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

                    கோவையில் வரும் 23 முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. இதற்காக அனைத்து மாவட்டத்தில் உள்ள போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடலூர் மாவட்டத்திலிருந்து எஸ்.பி., தலைமையில், ஏ.டி.எஸ்.பி., டி.எஸ். பி.,க்கள், இன்ஸ்பெக்டர் கள், சப் இன்ஸ்பெக்டர் கள், போலீசார் உட்பட 770 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் வரும் 19ம் தேதி இரவு கடலூரிலிருந்து புறப்படுகின்றனர்.

                   கோவை மாநாட்டில் பல லட்சம் பேர் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளதால், மாநாட்டில் எந்தவித தொற்று நோய் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

                      கடலூர் மாவட்டத்திலிருந்து கோவைக்கு செல்லும் போலீசாரின் உடல் திறன் குறித்து மருத்துவப் பரிசோதனை செய்ய எஸ்.பி., உத்தரவிட்டார். கடலூர் அரசு மருத்துமனையில் டாக்டர் பாண்டியன் தலைமையிலான மருத்துவர்கள் நேற்று பரிசோதனை செய்தனர். பின்னர் நிலைய மருத்துவர் கோவிந் தராஜ் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினார்.

Read more »

குளவி கொட்டி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை

கடலூர் : 

                 கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ராட்சத குளவி கொட்டியதில் இரண்டு மாணவிகள் உள்பட 12 பேர் மயக்கமடைந்தனர்.

                கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை 11மணிக்கு விளையாட்டு வகுப் பில் மாணவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கிரிக்கெட் பந்து மைதானம் அருகே உள்ள பனைமரத்தில் உள்ள குளவிகூட்டில் பட்டுள்ளது. இதனால் அதிலிருந்து நூற்றுக்குமேற்பட்ட ராட்சத குளவிகள் மைதானத்தை சுற்றி அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்களை கொட்டியது. இதனால் பல மாணவர்கள் வலி தாங்க முடியாமல் துடித்தனர். சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

Read more »

பரங்கிப்பேட்டை மீராப் பள்ளியில் தமிழகம் தழுவிய "கிராஅத்' போட்டி

பரங்கிப்பேட்டை :

                    பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி வாசலில் தமிழகம் தழுவிய "கிராஅத்' (குர் ஆன் வசனம்) போட் டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

                     பரங்கிப்பேட்டை மீராப் பள்ளி வாசலில் ஹாபிள் பட்டமளிப்பு விழா, மாபெரும் அகில இந்திய "கிராஅத்' அரங்கம், தமிழக அரபி ஹிப்ளு மதரஸா மாணவர்களுக்கு மத்தியில் தமிழகம் தழுவிய "கிராஅத்' (குர் ஆன் வசனம்) போட்டி என முப்பெரும் விழா நடந்தது.மீராப்பள்ளி நிர்வாகி ஷேக் அப்துல் காதிர் மரைக்காயர் தலைமை தாங்கினார். தமிழகம் தழுவிய "கிராஅத்' போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் முகமது யூனுஸ் பரிசு வழங்கினார்.விழாவில் சல்மான் பலாஹி, முகம்மது நசிருத்தீன், அதீகுர் ரஹ்மான் ரஷாதீ, சித்திக் அலி பாகவீ, அப்துல் ரவூப் பங்கேற்றனர்.

Read more »

மாவட்ட இறகுப்பந்து போட்டி : கடலூர் பள்ளி மாணவி சாதனை

கடலூர் : 

                 மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத் தில் சிகப்பி ஆச்சி நினைவு மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது. அதில் மகளிர் பிரிவில் 13, 16 மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவிலும், 13 வயதிற்கு உட்பட்டோர் இரட்டையர் பிரிவிலும் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி மாணவி சோபிகா நான்கு சாம்பியன்ஷிப் பட்டங்களை பெற்றார். இதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் ராம்குமார் 16 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தார். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற இருவரையும் பள்ளி தாளாளர் ராஜேந்திரன், முதல்வர் நடராஜன் ஆகியோர் பாராட்டினர்.

Read more »

கல்வி என்பது எதிர்கால முதலீடு : துணைவேந்தர் பத்மநாபன் பேச்சு

சிதம்பரம் : 

                கல்வி என்பது மக்களின் நல் வாழ்க்கை மட்டுமல்லாமல் எதிர்கால முதலீடாக கருதப்படுகிறது என கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பத்மநாபன் பேசினார். 

                     சிதம்பரம் காமராஜ் கல்வியியல் கல்லூரியில் படித்த 95 மாணவிகள் உட்பட 187 மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. காமராஜ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமிகாந்தன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சாராசாந்தகுமாரி வில்லியம்ஸ் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் பத்மநாபன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்களையும், பரிசுகளையும் வழங்கினார். 

பின்னர் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் பத்மநாபன் பேசியதாவது:


                  கல்வி என்பது தற்போது மக்களின் நல்வாழ்க்கை மட்டுமல் லாமல் எதிர்கால மற்றும் நிகழ் காலத்திற்கான முதலீடாக கருதப்படுகிறது. கல்வி நிறுவனத் தின் சிறப்புகள், சுய மதிப்பீடுகள் மற்றும் சுய வளர்ச்சிக்கு வித்திடுவதாக தேசியக் கல்விக்குழு(1986) கூறுகிறது. ஆசிரியர் கல்வி உட்பட எல்லா கல்வி முறைகளும் முக்கியமாக கல்வியின் தரத்தையும், பலன்களையும் பொறுத்து வளர்ச்சி அடைகிறது.

                     உயர் கல்வியானது சமூகத் தில் உள்ளவர்களுக்கு அறிவுத் தேடல், சுயஆக்கத்திறன்,செய்திகளை மேம்படுத்துதல் போன்ற வாய்ப்புகளை வழங்குவதில் பொறுப்பேற்று செயல்பட வேண்டும். உயர்கல்வி என்பது ஒரு வளமிக்க நிலம்போல் தன்னை தயார்படுத்தி, புதிய வடிவிலான எண்ணங் களையும்,தொழில் நுட்பங்களையும் பெற்று சிறந்து விளங்க வேண் டும். உயர் கல்வியில் முதலீடு என்பது எதிர்காலத்தின் முதலீடாகும்.

                    நாம் எந்த தொழில் செய்தாலும் உலக தரத்திற்கேற்ற வகையில் நவீனப்படுத்த வேண்டும். இந்தியா பொருளாதார புரட் சிக்கு சான்றாக திகழ்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு விண் வெளியும், அதனை சார்ந்த துறையும் பெரும் பங்கு வகிக்கிறது. அதனால் தான் 2020ல் இந் தியா வல்லரசாகும் என முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் நினைவு கூர்ந்துள்ளார். நகர் புற மேம்பாட்டினை மையமாக கொண்ட சுகாதார மையங்கள் இயங்குகின்றன. இந்த நிலை மாறி கிராமப்புற மக்களையும் சென்றடைய வேண்டும். கல்வியியல் தேவைகளில் அதிக பரிமானங்களைப் புகுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. புத்தகத்தில் உள்ளதை படித்து அப்படியே அர்த்தம் கூறாமல் மாணவர்களின் உள் வளர்த்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பி.ஆர்.ஓ., செல்வம், தாளாளர் வீனஸ் குமார், காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் மீனாட்சி, சக்தி, நிர்வாக அலுவலர் சந்திரசேகரன்,பாலசுப்ரமணியன், பொறியாளர் குமரேசன் தலைமை ஆசிரியர் பிச்சமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Read more »

ரயில் மோதி முதியவர் சாவு

கடலூர் : 

                            கடலூரில் ரயில் மோதி முதியவர் இறந்தார்.கடலூர் தானம் நகரைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி(65). இவர் நேற்று மதியம் கம்மியம்பேட்டை அருகே தண்டவாளத்தை கடந்த போது அவ்வழியாக சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மண்ணாங்கட்டி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் அதே இடத்தில் இறந்தார். தகவலறிந்த முதுநகர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மண்ணாங்கட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிதம்பரம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

கொலை வழக்கில் தம்பதிக்கு ஆயுள்

கடலூர் : 

                     வடலூர் அருகே நடந்த கொலை வழக்கில் கணவன், மனைவிக்கு கடலூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

                  கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த அரங்கமங்கலம் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் தனபால்(37). இவரது மனைவி தனலட்சுமி(46). நாகை மாவட்டம் விழந்தன்மாவடி அடுத்த மணல்மேடு பகுதியைச் சேர்ந்த முருகையன்( 60) அடிக்கடி தனலட்சுமி வீட்டிற்கு வந்து சென்றதால் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் முருகையனை வீட்டுக்கு வருவதை தனலட்சுமி கண்டித்தார். அவர் அதை கேட்காமல் கடந்த 2008ம் ஆண்டு ஆக.7ம் தேதி தனலட்சுமியை பார்க்க வந்தார். அவருக்கு தனலட்சுமி, தனபால் இருவரும் பிராந்தியில் பூச்சி மருந்து ஊற்றிக்கொடுத்தனர். இதனை குடித்த முருகையன் மரணமடையாததால், சுத்தி மற்றும் சவுக்கு கட்டையால் அடித்து கொலை செய்தனர்.

                       அன்று இரவு தனபால் நண்பர் வீரபாண்டியன் உதவியுடன், பெரிய கண்ணாடியைச் சேர்ந்த டிரைவர் ராஜா(22) கார் மூலம் முருகையனின் உடலை வேளாங்கண்ணியில் வீசினர். அப்பகுதி வி.ஏ.ஓ., கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் விசாரித்தனர்.சம்பவம் வடலூரில் நடந்ததால் வழக்கு வடலூர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து வடலூர் போலீசார் தனலட்சுமி, தனபால், வீரபாண்டியன், ராஜா ஆகியோரை கைது செய்து கடலூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

                      வழக்கு விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரோஜினிதேவி, குற்றவாளிகள் தனலட்சுமி, தனபால் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், கொலையை மறைக்க உடந்தையாக இருந்த வீரபாண்டியன், ராஜா இருவருக்கும் மூன்று ஆண்டு சிறையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு வக்கீல் திருமூர்த்தி ஆஜரானார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior