உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, செப்டம்பர் 30, 2011

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை மையங்கள் : விபரம்

கடலூர் :

         கடலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை அந்தந்த பகுதிகளில் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
 

            கடலூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களான கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு அரசு பெரியார் கலைக் கல்லூரி, அண்ணாகிராமம் கோழிப்பாக்கம் அரசு பள்ளி, பண்ருட்டி அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக், குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளி, காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குமராட்சி, சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் பள்ளியிலும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். 

            கீரப்பாளையம், சிதம்பரம் ரயிலடி அரசு பெண்கள் பள்ளி, மேல்புவனகிரி சிதம்பரம் நந்தனார் அரசு பெண்கள் பள்ளி, விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கம்மாபுரம் என்.எல்.சி., ஆண்கள் பள்ளி, நல்லூர் பெண்ணாடம் அரசு ஆண்கள் பள்ளி, மங்களூர் திட்டக்குடி அரசு ஆண்கள் பள்ளி ஆகிய 13 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். கடலூர் நகராட்சிக்கு கடலூர் டவுன் ஹால், நெல்லிக்குப்பம் டேனிஷ் மேல்நிலைப்பள்ளி, பண்ருட்டி, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், விருத்தாசலம், கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 இடங்களில் நகராட்சிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். 

             பேரூராட்சிகளான அண்ணாமலைநகர் திருவேட்களம் ராணி சீதை ஆச்சி பள்ளி, புவனகிரி மற்றும் பரங்கிப்பேட்டைக்கு புவனகிரி அரசு ஆண்கள் பள்ளி, கெங்கைகொண்டான், மங்கலம்பேட்டைக்கு மங்கலம்பேட்டை பள்ளி, காட்டுமன்னார்கோவில், லால்பேட்டைக்கு காட்டுமன்னார்கோவில் பருவதராஜகுலம் குருகுல மேல்நிலைப் பள்ளி, கிள்ளைக்கு அரசு மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி, வடலூருக்கு வள்ளலார் குருகுல மேல்நிலைப் பள்ளி, மேல்பட்டாம்பாக்கம் மற்றும் தொரப்பாடிக்கு புதுப்பேட்டை தொரப்பாடி பேரூர் அரசு பள்ளி, பெண்ணாடம், திட்டக்குடிக்கு திட்டக்குடி அரசு பள்ளி, சேத்தியாதோப்பு, ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிகளுக்கு சேத்தியாதோப்பு டி.ஜி.எம்., மேல்நிலைபள்ளி ஆகிய 16 பேரூராட்சிகளுக்கு 9 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
 

                   இவ்வாறு கலெக்டர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.



















Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 6492 பதவிகளுக்கு 24799 பேர் வேட்பு மனு

கடலூர் : 

           கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பிற்கான 6492 பதவியிடங்களுக்கு 24799 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 

            தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் துவங்கி நடந்து வருகிறது. மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி சேர்மன், நகராட்சி உறுப்பினர், டவுன் பஞ்சாயத்து சேர்மன், டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஆகிய 6492 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதையொட்டி ஏற்கனவே பல்வேறு பதவியிடங்களுக்காக 12661 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 

மனு தாக்கல் கடைசி நாளான நேற்று 

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 199 பேரும், 
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 1370 பேரும், 
ஊராட்சி தலைவர் பதவிக்கு 1821 பேரும், 
ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 7118 பேரும், 
நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 783 பேரும், 
நகராட்சி தலைவர் பதவிக்கு 42 பேரும், 
டவுன் பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு 111 பேரும்,
டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 694 பேரும் 

             ஆக மொத்தம் ஒரே நாளில் 12138 பேர் மனுத்தாக்கல் செய்தனர். கடந்த 22ம் தேதி முதல் நேற்று வரை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6492 உள்ளாட்சி பதவிகளுக்கு மொத்தம் 24799 பேர் மனு தாக்கல் செய்தனர்.










Read more »

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சுற்றுலா மற்றும் மேலாண்மை பாடப்பிரிவுகளில் பட்டய வகுப்புகள்

காரைக்குடி : 

            காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் சுற்றுலா மற்றும் மேலாண்மை பாடப்பிரிவுகளில் சான்றிதழ் மற்றும் பட்டய வகுப்புகள் தொடங்கப்படும் என அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் சேது. சுடலைமுத்து பேசினார். உலக சுற்றுலா நாள் கருத்தரங்கு காரைக்குடி அழகப்பா பல்கலைகழக பன்னாட்டு வர்த்தகம் மற்றும் வணிகவியல் துறை சார்பாக உலக சுற்றுலா நாள் கருத்தரங்கு கொண்டாடப்பட்டது.

            காரைக்குடி ஹெரிடேஜ், ரோட்டரி சங்கம் மற்றும் கானாடுகாத்தான் விசாலம் ஹெரிடேஜ் ஆகியவை இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில் அழகப்பா பல்கலைகழக மேலாண்மை துறையின் முதன்மையர் பேராசிரியர் செல்வம் வரவேற்று பேசினார். காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் கானாடுகாத்தான் விசாலம் ஹெரிடேஜ் நிறுவன மேலாளர் ஜான்பீட்டர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் சேது.சுடலை முத்து கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியது: 
 
          பட்டய வகுப்புகள் தொடங்கப்படும் 2010ம் ஆண்டில் இந்தியாவிற்கு மொத்தம் 17.9 மில்லியன் வெளிநாட்டு பயணிகள் சுற்றுலா வந்தனர். அவர்களில் பெரும்பான்மையினர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா நாட்டு சுற்றுலா பயணிகள் ஆவர். நம் நாட்டில் ஆந்திரா, உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

              தமிழ்நாட்டில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 34 ஆயிரம் கோவில்கள் மற்றும் சுற்றுலா மையங்கள் அதிக அளவில் உள்ளன. வரும் கல்வியாண்டில் அழகப்பா பல்கலைகழகத்தில் சுற்றுலா மற்றும் மேலாண்மை பாடப்பிரிவுகளில் சான்றிதழ் மற்றும் பட்டய வகுப்புகள் தொடங்கப்படும். வேலைவாய்ப்பு இந்த பாடத்திட்டத்தில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பாராம்பரிய சுற்றுலா மையங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கும். இந்த பாடங்களினால் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் அழகப்பா கல்லூரி வளர்ச்சி குழுமத்தின் தலைவர் முதன்மையர் குருமூர்த்தி நன்றி கூறினார். கருத்தரங்கில் மேலாண்மைத்துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.    
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior