உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 20, 2010

Fishing Ban Sparks Dry Fish Trade Boom

 



Brisk sales: Dry fish market in Cuddalore.  
 
CUDDALORE: 

           The fishing holiday that came into force on April 15 — and the resulting drastic fall in the arrivals of fresh fish — has come given an impetus to the dry fish trade in Cuddalore district, with prices doubling in the past few days.

           The ban will be in effect till May 29, and the dry fish trade is all set to make a tidy profit during that time. The weekly market at Karamanikuppam near Nellikuppam on Mondays is now flooded with a wide variety of dry fish such as vanjiram, pulichan, ram parai, nethili, kaarai, prawns, vazhai, kola, sena, chennakuni, koduva and karapodi. Packed in raw jute, they lie in heaps in the market place awaiting buyers. P. Venkatesan, a dry fish trader, told The Hindu that the trade was doing exceptionally well in the summer months, particularly when the fishing holiday was enforced. In the absence of large arrivals by trawlers, small-time fishermen with manually operated boats provided the main supply to the trade. In the peak summer season, it takes three to four days to dry the fish and ready it for the market. Venkatesan said that the price of lower varieties of dry fish had gone up from Rs 20 to Rs 60 a kg and that of the higher varieties from Rs 65 to Rs 125 a kg. On an average 500 bags of dry fish, each weighing 80 kg, were being traded in a day, he said.Additional Director of Fisheries Department R. Ilamparithi said that during the regular season the dry fish trade provided a supplementary income to fishermen; during the fishing holiday it was the main source of income. The fishermen used traditional drying methods, with little idea about hygiene and contamination. Therefore, it was left to the consumers to properly preserve dry fish for the table.Though a solar drier had been put up by the department it was hardly used by the fishermen, because of its low and slow output, and the high cost of production).

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடும் வெயிலால் கருகும் பூக்கள்: முந்திரி விவசாயிகள் கவலை

 பண்ருட்டி:

              பருவ நிலை மாற்றத்தின் காரணமாக முந்திரி பூக்கும் தருணம் கால தாமதமானதாலும், தற்போது கடுமையான வெயில் காய்வதாலும் முந்திரி பூக்கள் கருகி வருவதால் வேதனை அடைந்துள்ள முந்திரி விவசாயிகள் வருண பகவானை எதிர் நோக்கியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பூ பூக்க தொடங்கும் முந்திரி மே மாதம் இறுதியில் முந்திரி கொட்டை அறுவடை முடிந்துவிடும்.பண்ருட்டி வட்டத்தில் உள்ள 16900 ஹெக்டர் நிலப்பரப்பில் உள்ள முந்திரிக் காடுகளில் இருந்து சுமார் 12 ஆயிரம் மெட்ரிக் டன் முந்திரி கொட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.

          கடந்த சில ஆண்டுகளாகவே பருவம் தவறிய மழை, புயல், கடும் பனிப்பொழிவு காரணங்களால் முந்திரி மகசூல் குறைந்ததால் விவசாயிகள் பாதிப்படைந்தனர்.டிசம்பர் 2009-ல் பெய்த கனமழை காரணமாக நிலத்தில் ஈரப்பதம் அதிகரித்து, பருவ நிலை மாற்றம் ஏற்பட்டதால் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பூ எடுக்க வேண்டிய முந்திரியில் பூக்கும் தருணம் கால தாமதமானது. இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் முந்திரி பூக்கள் கருகி வருவதால் முந்திரி மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முந்திரி விவசாயிகள் கானங்குப்பம் பலராமன், மருங்கூர் ராஜசேகர் ஆகியோர் கூறியது:
               
                   ஒரு ஏக்கர் முந்திரியில் சராசரியாக 8 மூட்டை கொட்டைகள் கிடைக்கும். காலதாமதமான பூக்கள், கடுமையான வெயிலால் பூக்கள் கருகி வருகிறது. ஏக்கருக்கு 2 மூட்டை கொட்டை கிடைப்பதே கடினம். செலவை கூட ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இருப்பினும் இச்சமயத்தில் நல்ல மழை பெய்தால் எஞ்சியுள்ள அரும்புகள் பூத்து பிஞ்சு எடுக்க வாய்ப்புள்ளது.  தொடர்ந்து சில ஆண்டுகளாக சோதனையை சந்தித்து வரும் முந்திரி விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க முன்வர வேண்டும் என கூறினர்.முந்திரி சார்ந்த தொழில்கள் பாதிப்பு: இந்த ஆண்டு முந்திரி மகசூல் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் முந்திரி பறுப்புகளை பதப்படுத்தும் தொழிற்சாலைகளும், ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும், முந்திரி தோலில் இருந்து எண்ணெய் எடுக்கும்  தொழிற்சாலைகளும் பாதிப்படையக் கூடும் என கருதப்படுகிறது. இதனால் கிராம பகுதியில் வேலை இழப்பு ஏற்படுவதுடன், முந்திரி பயிர் ஏற்றுமதி குறைவதால் அன்னிய செலாவணி ஈட்டும் திறன் குறைய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ராமலிங்கம் கூறியது: "

           எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் பூக்கள் கருகி வருகிறது. முந்திரி மரங்களை சுற்றியுள்ள புல், பூண்டுகளை விவசாயிகள் அகற்றி விடுவதால் காடுகளில் வெப்பத்தை சமநிலைப்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும் தோட்டக்கலை, விவசாய, விவசாய அறிவியல் துறையினர் கூறும் அறிவுரைகளை விவசாயிகள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்வதில்லை.  இவர்கள் தனியார் கடைகளில் கொடுக்கும் மருந்தை வாங்கி பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் அதிக வீரியம் உள்ள மருந்துகளை வாங்கி தெளிப்பதால் மரங்களுக்கு மலட்டுத் தன்மை, இது போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக' ராமலிங்கம் கூறினார். ஆண்டுக்கு ஒரு முறை விளையும் முந்திரிதான் எங்களின் வாழ்வாதார முக்கிய பணப் பயிர் என கூறும் விவசாயிகள் வாடியுள்ள தங்கள் வாழ்வில் ஒளியேற்ற வருண பகவான், காலத்தே நல்ல மழையை தர வேண்டும் என எதிர் நோக்கியுள்ளனர்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சிலம்பிமங்கலம் கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது அடக்குமுறை

 கடலூர்:

               கடலூரை அடுத்த சிலம்பிமங்கலம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு இருப்பதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலர் சு.திருமாறன் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தார். சிலம்பி மங்கலம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் 200 குடும்பத்தினர் உள்ளனர். பிற சமூகத்தினர் 1500 குடும்பங்கள் உள்ளன. 
 
தாழ்த்தப்பட்ட மக்கள், சு.திருமாறன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமனைச் சந்தித்து அளித்த மனு: 

               இக் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து அடக்குமுறைக்கும் வன்கொடுமைக்கும் ஆளாகி வருகிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் மிகவும் அவலமான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். இக்கிராமத்தில் இன்னமும் இரட்டைக் குவளை முறை நீடிக்கிறது. ரேஷன் கடை மற்றும் பள்ளிக்குச் செல்லும் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் கேலி செய்யப்பட்டும் சாதிய வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். பொதுப்பாதையில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கவும் அனுமதியில்லை. 

               இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் நிலத்தைப் பயன்படுத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நிலம், ஆறு, வாய்க்கால் மீன்பிடி உரிமை, மரங்கள் குத்தகை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு மறுக்கப்பட்டு வருகிறது. சிதம்பரம் வட்டம் தெற்குத் திட்டை கிராமத்தில் 200 குடும்பங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் உள்ளனர். இவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். வத்தராயன்தெத்து கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் 500 குடும்பங்களில் 300 குடும்பங்களுக்கு வீட்டுமனை இல்லை. ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி தரிசு நிலங்களைக் கைப்பற்றி, வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்றும் திருமாறன் கூறியுள்ளார்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சொத்து தகராறில் தந்தை கொலை :'பாசக்கார' மகன் போலீசில் சரண்

பரங்கிப்பேட்டை :  

                 சொத்து பிரித்து தராத ஆத்திரத்தில், தந்தையை மண் வெட்டியால் வெட்டி கொலை செய்த மகன், போலீசில் சரணடைந்தார்.

                கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த பெரியப்பட்டு காட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தம்புசாமி (60); விவசாயி. இவருக்கு சேகர், ரமேஷ் (29) இருமகன்கள் மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. சேகர் குடும்பத்துடன் பண்ருட்டியிலும், ரமேஷ் சென்னையிலும் வசித்து வந்தனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பெரியப்பட்டிற்கு வந்து ரமேஷ், தந்தை தம்புசாமியுடன் வசித்து வந்தார். குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதால், ரமேஷ் தனியாக வீடு கட்டிக் கொண்டு  வசித்து வருகிறார். புதிய வீட்டிற்கு மின் இணைப்பிற்காக, பரங்கிப்பேட்டை மின்சார அலுவலகத்தில் ரமேஷ் விண்ணப்பித்தார்.

                   இதையறிந்த, அவரது தந்தை தம்புசாமி மின்சார அலுவலகத்திற்கு சென்று, ரமேஷ் மின் இணைப்பு கேட்டுள்ள வீட்டின் மனை, எனது மகள் சாந்தி பெயரில் உள்ளது. அதனால் அவருக்கு புதிய மின் இணைப்பு தரக்கூடாது என கூறியுள்ளார். இதனால் மின் இணைப்பு கிடைக்கவில்லை.இந்நிலையில், நேற்று தம்புசாமி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு சென்ற ரமேஷ், தனக்கு தனியாக சொத்தை பிரித்து தர வேண்டும் என கேட்டார். அதற்கு மறுத்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த ரமேஷ், தனது தந்தை தம்புசாமியை மண்வெட்டியால் தலையில் வெட்டினார். நிலை தடுமாறி கீழே விழுந்த தம்புசாமியை தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலமாக வெட்டினார். இதில் தம்புசாமி துடிதுடித்து இறந்தார். ரமேஷ் புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். புதுச்சத்திரம் போலீசார் ரமேஷை (29) கைது செய்தனர்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் பதவி ஏற்பு

 கடலூர்:

              கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலராக கே.திருமுகம் (படம்) திங்கள்கிழமை பொறுப்பு ஏற்றார். கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலராக இருந்த ஆர்.பத்மநாபன் நாகை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.  அவருக்குப் பதிலாக நாகை மாவட்டத்தில் பணிபுரிந்த கே.திருமுகம் கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலராக திங்கள்கிழமை பொறுப்பு ஏற்றார். திருமுகம் 1991-ம் ஆண்டு பளுதூக்கும் விளையாட்டுப் பயிற்சியாளராக கடலூரில் பணியில் சேர்ந்தார். 2001 முதல் 2008 வரை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலராகப் பணிபுரிந்தார். பின்னர் நாகை மாவட்ட விளையாட்டு அலுவலராக மாற்றப்பட்டார்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ரேஷன் கடை முற்றுகை

 விருத்தாசலம்:

                   விருத்தாசலத்தை அடுத்த ஊ.மங்கலம் கிராமத்தில், ரேஷன் கடையை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். இக்கடை வாரத்தில் செவ்வாய், வியாழன் ஆகிய  இருநாள்களுக்கு மட்டும் செயல்படும் பகுதிநேரக்  கடையாக உள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை கடை  திறக்கப்பட்டபோது 100-க்கும் மேற்பட்டோர், ரேஷன் கடை சரிவர திறக்கப்படுவதில்லை என்று கூறி முற்றுகையிட்டனர். தகவலறிந்த ஊ.மங்கலம் காவல் துறையினர் பொதுமக்களை சமதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் ரேஷன் பொருள்களை வாங்கிச் சென்றனர்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கணக்கரப்பட்டு ஊராட்சிக்கு நிர்மல் கிராம் புரஷ்கார் விருது


கிள்ளை:

                     முழு சுகாதார திட்டத் தின் கீழ் நிர்மல் கிராம் புரஷ்கார் விருது பெற்ற  கணக்கரப்பட்டு ஊராட்சி தலைவர் வனிதாவுக்கு கலெக்டர் சீத்தாராமன் நினைவு பரிசு வழங்கினார். சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை ஒன்றியம் கணக்கரப்பட்டு ஊராட்சி முழு சுகாதாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிர்மல் கிராம் புரஷ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. அதற்கான விருது வழங்கும் விழாவில் கலெக்டர் சீத்தாராமன்,  ஊராட்சித் தலைவர் வனிதா அசோகனுக்கு நினைவு பரிசு வழங்கினார்.

downlaod this page as pdf

Read more »

அனுமதியின்றி தலைவர்கள் சிலை : கலெக்டர் சீத்தாராமன் எச்சரிக்கை

 கடலூர்: 

                  கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி தலைவர்களுக்கு சிலை வைக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தலைவர்களுக்கு சிலை, நினைவுத்தூண், நினைவு மண்டபம், நினைவு வளைவு அமைத்திட பொது மக்கள் அரசியல் கட்சி முயலுவதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்தது. அரசாணைபடி அரசின் ஒப்புதல் பெற வேண்டும். ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றை பொறுத்த மட்டில் அச்சிலைகளை நிறுவியவர்களே (சிலை வைத்த சங்கம், பிரிவு, தனிப்பட்டவர் போன்றவர்) பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்கனவே நிறுவப்பட்ட சிலைகள் சீர்குலையாமல் இருக்க அச்சிலைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று திரும்பவும் நிறுவுவதை தேவையெனக் கருதப்பட்டால் இது குறித்து அரசிடம் ஆணை பெற்றபின் சம்மந்தப்பட்ட தனி நபர், அமைப்பு போன்றவற்றால் மாற்றி அமைக்கப்படலாம். நிபந்தனைகளை கடைபிடிக்காமல் சிலை அமைக்க முயன்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

download this page as pdf

Read more »

செம்மொழி மாநாட்டுக்கான விழிப்புணர்வு : சிதம்பரத்தில் இன்று 'குறுமாரத்தான்' ஓட்டம்


சிதம்பரம்: 

                   உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த அண்ணாமலை பல்கலை மாணவ, மாணவிகளின் குறுமாரத்தான் ஓட்டம் இன்று (20ம் தேதி) நடக்கிறது. தமிழக அரசு சார்பில் கோவையில்  வரும் ஜூன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலக செம்மொழி மாநாடு நடக்கிறது. மாநாடு குறித்து மாணவ, மாணவியர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் குறுமாரத்தான் ஓட்டப் பந்தய போட்டி இன்று (20ம் தேதி) நடக்கிறது. மாலை 5மணிக்கு பல்கலைக்கழக வளாக அண்ணாமலை  செட்டியார் சிலை அருகில் இருந்து புறப்பட்டு ராஜேந்திரன் சிலை, சிதம்பரம் நகர வீதிகள் வழியாக சென்று பல்கலைக்கழக உடற் கல்வித்துறை மைதானத்தை அடைகிறது. பங்கேற்கும் அனைவருக்கும் சீருடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. போட்டியில் முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் பதிவாளர் ரத்தினசபாபதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

downlaod this page as pdf

Read more »

இடம் கையகப்படுத்தியதை கண்டித்து மறியல் : அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் உடன்பாடு


சிதம்பரம்: 

                             தனியார் மின் உற்பத்தி நிலையம் கட்ட கையகப்படுத்தப்பட்ட இடத்திற்கு கூடுதல் இழப்பீடு கோரி  மறியல் செய்ய முயன்றவர்களிடம் ஆர்.டிஓ., பேச்சுவார்த்தை நடத்தியதால் உடன்பாடு ஏற்பட்டது. சிதம்பரம் அருகே தனியார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க பரங்கிப்பேட்டை பகுதிக்குட்பட்ட கரிக்குப்பம், புதுக்குப்பம், புதுப்பேட்டை, தோப்பிருப்பு, பஞ்சங்குப்பம், புதுச்சத்திரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் இடம் கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும், தொடர்ந்து நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூ., மற்றும் விவசாயிகள் சார்பில் சிதம்பரம் ஆர்.டி. ஓ., அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடக்க இருந்தது. 

                      பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சண்முகம் தலைமையில் ஊர்வலமாக வந்தனர். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜ் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர்  மணிவாசகம், நகர செயலளர் சேகர், ஏ.ஐ.டி.யூ.சி., சேகர் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். மே 3ம்  தேதி நிலம் கையகப்படுத்திய கம்பெனி அதிகாரிகளை வரவழைத்து பேசி தீர்வு காண்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் மறியல் கைவிடப் பட்டது.

download this page as pdf

Read more »

அக்கடவல்லி பள்ளியை அரசு ஏற்காததால் ஆசிரியர்களை நியமிப்பதில் சிக்கல்


பண்ருட்டி: 

                  பண்ருட்டிஅடுத்த அக்கடவல்லியில் உதவி பெறும் பள்ளியை நடத்த முடியவில்லை என நிறுவனர் எழுதிக் கொடுத்தைத் தொடர்ந்து அரசு 7 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டடம் கட்டியும் இன்னும் அரசு பள்ளியாக மாற்றப்படாமல் உள்ளது. இதனால் ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றியம் அக்கடவல்லி ஊராட்சியில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. 

                   இப்பள்ளி கடந்த 1950ம் ஆண்டு ராஜவேல் என்பவரால் துவங் கப் பட்டது. கடந்த 2005ம் ஆண்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் போது இப்பள்ளியை ஆய்வு செய்த டி.ஈ.ஒ., பள்ளியின் கட்டடம் பாழடைந்து உள்ளதால் பள்ளி அனுமதியை ரத்து செய்தார். 2005ம் ஆண்டில் பள்ளி நிறுவனர் ராஜவேல் வயது முதிர்வு காரணமாக பள்ளியை நடத்த முடியவில்லை என அதற்காக 55 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு  அரசே பள்ளியை ஏற்று நடத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு எழுதிக் கொடுத்தார்.  இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் படிப்பு பாதிக்கும் என்பதால்  ஊராட்சி தலைவர்,  கல்விக் குழு, கிராம முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் திரவுபதி அம்மன் கோவிலில் வகுப்புகள் நடத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத் தனர். டி.இ.ஓ., அனுமதி அளித்ததன் பேரில் அப்பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் வகுப்புகள் நடந்தது.
 
                  இந்த பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், பள் ளிக்கு சொந்த இடம், கட்டடம், சுகாதார வசதி, சத்துணவு கூடம் இருந்தால் தான் அரசு ஏற்றுக்கொள்ளும் என கல்வித்துறை பதிலளித்தது.  இதனையடுத்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு எம்.பி., மேம் பாட்டு நிதியின் கீழ் கடந்த 2008-09ம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டடம் கட்டப் பட்டது.

                      மேலும் ஊராட்சி நிதி மூலம் சத்துணவு கூடம் 1.50 லட்சம் செலவிலும், சுகாதார வசதி 50 ஆயிரம் செலவிலும் கட்டப்பட்டு கடந்த ஓராண் டாக புதிய கட்டடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. தற் போது இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 127 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 5 ஆசிரியர்கள் தேவைப்படும் இப்பள்ளிக்கு தற் போது பள்ளி தலைமையாசிரியர் பாலு, உதவி ஆசிரியை சரஸ்வதி ஆகியோர் மட்டும் உள்ளனர். பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் இரண்டு ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். அரசு சார்பில் கேட்கப்பட்ட அனைத்தும் செய்து முடிக்கப்பட்ட நிலையில் இன்னமும் அரசுப் பள்ளியாக மாற் றப்படாமல் இன்னமும் பள்ளி தனியார் வசமே உள்ளது. கடந்த மாதம் வரை இப் பள்ளி ஆசிரியர்களுக்கு நிறுவனர் ராஜவேல் கல்வித் துறை மூலம் சம் பளம் பெற்று தருகிறார். அரசு பள்ளியாக மாற்றப் படாததால் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாமல் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கும் நிலை ஏற் பட்டுள்ளது.
 
இதுகுறித்து பள்ளி கல்விக் குழு உறுப்பினர் ஆறுமுகம் கூறியதாவது: 

                    இந்த பள்ளிக்கு கல் வித் துறை கூறிய அனைத்து வசதிகள் செய்து கொடுத் தும் அரசு பள்ளியாக அறிவிக் கப்படாமல் உள்ளது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. வரும் கல்வியாண்டிற்குள் அரசு பள்ளியை ஏற்க வேண்டும். இல்லையெனில் பொதுமக் களை திரட்டி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபடுவோம்' என தெரிவித்தார். 

இதுகுறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்  விஜயா கூறுகையில் 

                 'அக்கடவல்லி சண்முக ஆனந்த துவக் கப் பள்ளியை அரசு பள்ளியாக ஏற்பது குறித்து பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.கடந்த ஆகஸ்ட் மாதம் உதவி தொடக்கக் கல்வி அலுவலருக்கு அனுப்பிய நினைவூட்டல் கடிதத்திற்கு பதில் வரவில்லை. உடன் பதில் அளிக்க உத்திரவிட்டுள்ளேன். அதன்படி பள்ளி கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்படும்' என்றார்.

Read more »

மொரீஷியஸ் ஜனாதிபதி விருது


கடலூர்: 
 இம்
                     மொரீஷியஸ் நாட்டில் நடந்த அகில இந்திய அறிஞர்கள் மாநாட்டில் பல்லவன் கல்வி நிறுவனங்களின்  தலைவருக்கு மண்ணின் மாமனிதர் பட்டத்தை அந்நாட்டின்  ஜனாதிபதி வழங்கினார். கோபியோ சர்வதேச அமைப்பு சார்பில் அகில  இந்திய அறிஞர்கள் மாநாடு மொரீஷியஸ் நாட்டில்  கடந்த 4ம் தேதி நடந்தது.  இந்தியாவில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் நீதிபதிகள், தொழில் அதிபர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் கடலூரைச் சேர்ந்த பல்லவன் கல்வி நிறுவனங்களின்  தலைவர் டாக்டர் முத்துவின் கல்வி சேவையை பாராட்டி  மண்ணின் மாமனிதர் பட்டத்தை   மொரஷியஸ் நாட்டின்  ஜனாதிபதி அனிருத்த ஜெகநாத்  வழங்கினார். நிகழ்ச்சியில்  ஜனாதிபதி மனைவி  சரோஜினி ஜெகநாத்,  முன்னாள் தலைமை தேர்தல்  அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, இந்திய சைபர் குற்றவியல்  தலைமை நீதிபதி ராஜேஷ் டாண்டன், கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி  ஸ்ரீதர் ராவ் உட்பட பலர் பங்கேற்றனர்.

downlaod this page as pdf

Read more »

துணைப் பதிவாளர் சப் கலெக்டராக தேர்வு

 கடலூர்: 

              கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் துணை பதிவாளராக பணியாற்றிய சூரிய பிரகாஷ் குரூப் 1 தேர் வில் தேர்ச்சி பெற்று வருவாய் கோட்ட அதிகாரியாக நியமிக்கப்பட் டுள்ளார்.
 
               பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் மகன் சூரியப் பிரகாஷ். எம்.எஸ்.சி., எம்.பில்., பட்டம் பெற்ற இவர் இரு முறை ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, நேர் முகத் தேர்வில் தோல்வியடைந்தார். மனம் தளராமல் தமிழ் நாட்டில் நடந்து குருப் தேர்வில் தேர்ச்சி பெற்று கூட்டுறவு சங்கங் களின் துணைப்பதிவாளராக தேர்தெடுக்கப்பட்டு,  கடலூர் மாவட டத்தில் பணியாற்றி வந்தார்.  இவர் மீண்டும் தமிழ்நாடு அரசு தேர்வாணைய குரூப் 1 தேர்வில் மாநில அளவில் 6ம் இடத்தில் தேர்ச்சி  பெற்று வருவாய் கோட்ட அதிகாரி (பயிற்சி) கரூர் மாவட்டத்தில் நியமிக்கப்பட் டுள்ளார்.

download this page as pdf

Read more »

பெண்ணாடத்தில் போலி டாக்டர் கைது


கடலூர்: 

                பெண்ணாடத்தில் போலி டாக்டரை போலீ சார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பெண்ணாடம் எல்லையம்மன் கோவில் தெரு வள்ளியம்மை நகரைச் சேர்ந்தவர் குணசேகரன்(56). இவர் அதே பகுதியில் அரசு அங்கீகாரம் இல்லாமல் அலோபதி மருத்துவம் செய்து வந்தார். பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் வலம் புரி செல்வம் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து, குணசேகரனை கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் போலி டாக்டர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

download this page as pdf

Read more »

அரசு நலத்திட்டங்கள் யாவும் இலங்கை அகதிகளுக்கும் வழங்கப்படும்: கலெக்டர்

 கடலூர்: 

              அரசு நலத் திட்டங்கள் யாவும் இலங்கை அகதிகளுக்கும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் கூறினார். கலெக்டர் முகாம் அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்பு தினக் கூட்டம் கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நடந்தது. குடிநீர் வசதி, பட்டா வழங்குதல், சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 320 மனுக்கள் வரப்பெற்றது.  மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் திருமண உதவி திட்டத்தின் கீழ் 31 நபர்களுக்கு தலா 20 ரூபாய் வீதம் 6.20 லட்சம் காசோலையும், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 10 நபர்களுக்கு 27 ஆயிரத்து 290 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் எவிலின், சிவகாமிக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செயற்கை கால் உபகரணங்களையும் கலெக்டர் வழங்கினார். மேலும் கலெக்டர் தன் விருப்ப நிதியிலிருந்து சிறப்பு குழந்தைகள் காப்பக அரங்கிற்கு 24 ஆயிரத்து 355 மதிப்பிலான ஆம்பிலிபையர் மைக், ஸ்பீக்கர் மைக் ஸ்டாண்டு ஆகியவற்றை வழங்கினார். 

பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறுகையில் 

                  'அமைச்சர் குறிஞ்சிப்பாடி பகுதியில் மக்களை சந்தித்த போது இலங்கை வாழ் தமிழர்களுக்கு அரசு வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்க வேண் டும் என கோரிக்கை வைத்தனர். இது குறித்து முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அரசு வழங்குகிற நலத்திட்டங்கள் அனைத்தும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அகதி முகாமைச் சேர்ந்த செபஸ்டியானுக்கு திருமண உதவித்திட்டத்தில் 20 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

download this page as pdf

Read more »

காஸ் சிலிண்டர்களுக்கு கூடுதல் கட்டணம்... வசூல்! அதிகாரிகள் அலட்சியத்தால் தொடரும் அவலம்

 பண்ருட்டி: 

                    வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களுக்கு அரசு நிர்ணய விலையை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதால் நுகர்வோர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். 

                       ஒவ்வொரு குடும்பத்திறகும் சமையல் எரிவாயு இணைப்பு அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு சமையல் காஸ் சிலிண்டர் களை மானிய விலையில் வழங்கி வருகிறது. இதனை பெட்ரோலிய நிறுவனங்கள் நேரடியாக ஏஜென்சிகளை நியமித்து காஸ் இணைப்பு மற்றும் சிலிண்டர்களை வினியோகிக்கின்றனர். இதன்படி கடலூர் மாவட்டத்தில் 10 ஏஜென்சிகள் மூலம் சுமார் இரண்டு லட்சம் இணைப்புகள் உள்ளன. தற்போது தமிழக அரசு காஸ் இணைப்பு இல்லாதவர்களுக்கு இலவசமாக காஸ் இணைப்புகளை வழங்கி வருகிறது.  இதனால் காஸ் இணைப்புதாரர்களின் எண்ணிக்கை அதிகாரித் துள்ளதால் சிலிண்டர்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த தட் டுப்பாட்டை பல ஏஜென்சிகள் தங்களுக்கு  சாதகமாக்கிக் கொண்டு சிலிண்டர்களுக்கு அரசு நிர்ணய கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கின்றனர். 

                வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றுக்கு 320 ரூபாய் 25 பைசா என பில் வழங்கப்படுகிறது. ஆனால் நகர பகுதி நுகர் வோர்களிடம் 335 ரூபாயிலிருந்து 340 வரையிலும், கிராம பகுதிகளில் 350 ரூபாயும் வசூலிக்கின்றனர். கூடுதல் கட்டணம் குறித்து கேட்டால் 'டெலிவரி' சார்ஜ் எனக் கூறுகின்றனர். இவை அனைத் திற்கும் மேலாக 21 நாட்களுக்கு ஒரு சிலிண்டர் எனக் கூறப்பட்ட போதிலும், ஒரு சில ஏஜென்சிகளை தவிர பெரும்பாலான ஏஜென்சிகள் 30 நாள் முதல் 40 நாட்களுக்கு ஒரு சிலிண்டர் வழங்கி வருகின்றனர். 

                 குறிப்பாக கிராமப்பகுதி இணைப்புதாரர்களுக்கு பலமுறை  அலைக்கழிக்கப்பட்ட பிறகே சிலிண்டர் வழங்கப்படுகிறது. கிராம காஸ் இணைப்புதாரர்கள் சிலிண்டர் பதிவு  செய்வதற்காக அந்தந்த பகுதி ஏஜென்சிகள் கிளை அலுவலகங்களை திறந்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான  கிளை அலுவலகங்கள் திறப்பதில்லை.  பண்ருட்டியில் உள்ள ஒரு ஏஜென்சி புதிய இணைப்பு பெறும்போது இரு  சிலிண்டருக்கு 2,500 ரூபாய்,லோடு சிலிண்டர் 2க்கு 642, புத்தகத்திற்கு 100ம், ரெகுலேட்டர் 150ம், டியூப் 70ம்,   இணைப்பு கட்டணம் 200ம் என மொத்தம் 3,662 மட்டுமே பெற வேண்டும். ஆனால் சிலிண்டர் இணைப்பு கட்டணம் மொத்தம் 3,662ம் காஸ் அடுப்பு 2,800ம்,குக்கர் 1,050ம், ரீபைண்ட் ஆயில் 5 லிட்டர் 350ம்,  மைசூர் சாண்டல் சோப், டிபன் கேரியர் சேர்த்து 8,200 பெற்றுக் கொண்டு இணைப்பு வழங்குகின்றனர். வெளியூர் மற்றும் மற்ற ஏஜென்சியில் இருந்து மாற்றம் செய்பவர்களிடம் 450 ரூபாய் கட்டாய வசூல் செய்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டாலும் கண்டுக் கொள்வதில்லை. கடந்த இரண்டு மாதத்திற்கு முன் பண்ருட்டியில் காஸ் இணைப்புதாரர் கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட வழங்கல் அலுவலர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது சிலிண்டர் இணைப்பு புதிதாக பெறும் போது இணைப்பிற்கான தொகை மட்டுமே செலுத் தினால் போதும். வேறு எந்த பொருளையும் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது. அதேபோன்று சிலிண்டர் களுக்கு பில் தொகை மட் டுமே வசூலிக்க வேண்டும். கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். ஆனால் பண்ருட்டி பகுதியில்  தொடர்ந்து சிலிண்டர்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதே நிலைதான் மாவட்டத்தின் பிற  பகுதிகளிலும் நிலவி வருகிறது.  மத்திய அரசு கிராமப் புற மக்களை மேம்படுத்த 110 ரூபாய் சிலிண்டருக்கு  வழங்குகிறது. அதனை காஸ் நிறுவனங்கள் வெளி மார்க்கெட்டில் விற்று லாபம் ஈட்டி வருகின்றனர்.  

பொதுமக்களின புகார் குறித்து பாரத் பெட்ரோலிய காஸ் நிறுவன தஞ்சாவூர் மண்டல மேலாளர் ஜெயராமனிடம் கேட்டபோது, 

                   'சிலிண்டர் தேவையின் போது நுகர்வோர் கோரியபடி பதிவு செய்ய வேண்டும். சிலிண்டர் சப்ளையில் குறைபாடுகள் இருந்தால் நுகர்வோர் எங்களது தஞ்சாவூர் அலுவலக போன் 04362-221475, சேல்ஸ் ஆபிசர் மொபைல் எண். 94425-03567க்கு தொடர்பு கொண்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார்.

downlaod this page as pdf

Read more »

மாற்றுத் திறனாளிகள் தொழில் துவங்க வங்கிகள் மூலம் கடன் எம்.எல்.ஏ., அய்யப்பன் பேச்சு

 கடலூர்: 

                     மாற்றுத் திறனாளிகள் சுயமாக தொழில் துவங்க வங்கிகள் மூலம் கடன் பெற அரசு உதவி செய்து வருகிறது என எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார். கடலூர் புதுப்பாளையம் ஒயாசிஸ் மாற்றுத் திறனாளிகள் பள்ளி ஆண்டு விழா நடந்தது.  மாவட்ட மாற்றுத் திறனுடையோருக்கான நல அலுவலர் சீனுவாசன் தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியை ராதிகா வரவேற்றார். வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட திட்ட மேலாளர் நித்தியானந்தம் முன்னிலை வகித்தார். ஒயாசிஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர் குமுதம் ஆண்டறிக்கை படித்தார். விழாவில் ஸ்டார் மகாவீர் ஜூவல்லரி சுசில்குமார் மேத்தா, சங்கர், கடலூர் பார்வையற்றோர் பள்ளி தலைமை ஆசிரியர் சவுந்தர்ராஜன், பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்பு தலைவி ரேணுகா  உட்பட பலர்  பங்கேற்றனர்.  

விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி எம்.எல்.ஏ.,  அய்யப்பன் பேசியதாவது:  

                 தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு பல்  வேறு உதவிகளை செய்து வருகின்றது. அந்தத் துறை சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் கருணாநிதி நேரடி கட்டுப்பாட்டில் வைத்து உதவிகள் செய்து வருகிறார்.  இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உணவுக்காக ஆண்டுக்கு 2.50 லட்சம் ரூபாய் வழங்கி வருகிறது. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கி வந்த 400 உதவித் தொகையை உயர்த்தி 500  ரூபாயாக வழங்குகிறது. பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதி தாமதமாக வழங்கக் கூடாது என்பதற்காக முதலில் இது போன்ற பள்ளிகளுக்கு   வழங்கிவிட்டு பிறகுதான் மற்ற பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. சராசரி மனிதர்களை போல் இவர்களுக்கும் வாழ்க்கையில் விவசாயம், தொழில், கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்த அரசு பல்வேறு உதவிகள், சலுகைகளை வழங்குகிறது. மேலும், இவர்களுக்கு சுயமாக தொழில் துவங்க வங்கிகள் மூலம் கடன் பெற அரசு உதவி செய்து வருகிறது. இந்த பள்ளி சிறப்பாக பணியாற்றியதற்காக துணை முதல்வர் ஸ்டாலினிடம் பரிசுகள் பெற்றது பள்ளிக்கு மட்டும் பெருமை அல்ல கடலூர் நகருக்கும் பெருமை. மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் முன்னேற்றத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்யத் தயராக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

downlaod this page as pdf

Read more »

ஆசிரியர்கள் பொது மாறுதல் விண்ணப்பம் வரும் 24ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்

 கடலூர்: 

                 ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான விண்ணப்ப படிவம் வரும் 24ம் தேதிக்குள் அனுப்ப வேண் டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:   

                       பள்ளி கல்வித் துறையைச் சேர்ந்த அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் உட்பட சிறப்பாசிரியர்கள் 2010 -11ம் கல்வியாண் டிற்கு பொது மாறுதல் வழங்க விண்ணப்பப் படிவங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டில் வழங் ப்பட்ட விண்ணப்பப் படிவத்திலயே இந்த ஆண்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பபடிவ மாதிரியை அந்தந்த 'நோடல்' மைய தலைமை ஆசிரியர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். மாவட்டத்திற்குள்ளோ (அ) மாவட்டத்திற்கு வெளியோ மாறுதல் கோரும் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர் பரிந்துரையுடன் 29ம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலருக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். கலந்தாய்விற்கான நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும். முதுகலை ஆசிரியர் பதவியிலிருந்து வட்டார வளமைய மேற்பார்வையாளராக மாறுதல் கோரும் ஆசிரியர்கள் விண்ணப்பத்தினை தலைமை ஆசிரியர் வழியாக அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

downlaod this page as pdf

Read more »

மருத்துவ காப்பீட்டு திட்டம் : 20 பயனாளிகள் தேர்வு

 ஸ்ரீமுஷ்ணம்: 

                  ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த மாமங்கலம் கிராமத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் குலோத்துங்க சோழன் தலைமை தாங்கினார். ஒன்றிய கல்விக் குழு உறுப்பினர் முத்துசாமி முகாமை துவக்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் தனசேகரன் முன்னிலை வகித்தார். கும்பகோணம் சுகம் மருத்துவமனை டாக்டர் சக்தி அறிவாழி தலைமையில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மகரஜோதி, நித்யா, சந்திரசேகர், சித்ராதேவி, சிவப்பிரியா கொண்ட மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் 20 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.

download this page as pdf

Read more »

சிதம்பரம் அருகே சாலையில் 'ரோடு மார்க்கிங்' அமைக்கும் பணி

 கிள்ளை: 

                  சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட சாலையில் விபத்தை தடுக்கும் வகையில் 'ரோடு மார்க்கிங்' அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. சிதம்பரம் அருகே வண்டிகேட்டில் இருந்து சி.முட்லூர் வழியாக .முட்லூர் வரை 9 கி.மீ., தொலைவில் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சாலையை அகப்படுத்தி தார் சாலையாக அமைக்கப்பட்டது.  இந்த சாலையில் 'ரோடு மார்க்கிங்' அமைத்து, பள்ளிகள், விடுதி மற்றும் கல்லூரி அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும். என பொது நல அமைப்பு, சி.முட்லூர், அ.மண்டபம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது வண்டிக்கேட் சாலையில் இருந்து பி.முட்லூர் வரை சாலையில் 'ரோடு மார்க்கிங்' அமைக் கும் பணி நடக்கிறது.

downlaod this page as pdf

Read more »

வெள்ளாற்று மேம்பாலம் தடுப்பணை பணி தீவிரம்

 கிள்ளை: 

                                       சிதம்பரம் அடுத்த கிள்ளை - பரங்கிப்பேட்டையை இணைக்கும் மேம்பாலம் கட்டுமான பணி நிறைவடைந்த நிலையில் சாலையோர தடுப்பணை அமைக்கப்பட்டு வருகிறது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட  20க்கும்  மேற்பட்ட ஊராட்சியைச் சேர்ந்த கிராமத்தினர் சிதம்பரம் அடுத்த கிள்ளை - பரங்கிப்பேட்டை இடையே வெள்ளாற்றை  படகு மூலம் கடந்து வந்தனர். இதன் காரணமாக வெள்ளாற்றில் மேம்பாலம் கட்ட அப்பகுதியினர் பல முறை அரசுக்கு  கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.  

                இந்நிலையில் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்கள் பரங்கிப்பேட்டை-  கிள்ளையை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து  கடந்த 2006ம் ஆண்டு பாலம் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு, 2008ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் துவங்கியது. தற்போது பொன்னன்திட்டு கரையில் இருந்து பரங்கிப்பேட்டை கரை வரை சுமார் ஒரு கி.மீ., மேல் உயர் மட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்டு வரும் ஜூன் மாதத்தில் பாலம் திறப்பு விழாவிற்காக தடுப்பணை கட்டும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.

downlaod this page as pdf

Read more »

ஊராட்சி அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு

 கடலூர்: 

                       ஊராட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து 'செக் புக்' உள்ளிட்ட ஆவணங்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வடலூர் அடுத்த வடக்குத்து ஊராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்ய இருந்தனர். அதனையொட்டி ஊராட்சி உதவியாளர் ஜெய்சங்கர் கடந்த 16ம் தேதி இரவு ஆவணங்களை சரிபார்த்து வைத்து விட்டு நள்ளிரவிற்கு பிறகு அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் (17ம் தேதி) காலை வந்து பார்த்த போது பூட்டு உடைந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது  ஊராட்சி படிவங்கள், தீர்மான நோட், அஜென்டா, செக் புக், வங்கி பாஸ் புக் உள்ளிட்ட ஆவணங்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்து ஊராட்சி உதவியாளர் கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு  பதிந்து விசாரித்து வருகின்றனர்.  ஊராட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து ஆவணங்களை மட்டுமே திருடிச் சென்றிருப்பது அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

download this page as pdf

Read more »

தூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு : மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை

ஸ்ரீமுஷ்ணம்: 

                     வீட்டில் தூங்கிய பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகள் இருவரை போலீசார் தேடிவருகின்றனர். ஸ்ரீமுஷ்ணம் அடுத்த எம்.பி. அக்ரகாரத்தை சேர்ந்தவர் சரவணன். வெளிநாட்டில் உள்ளார். இவரது மனைவி ஞானம்மாள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் பின் கதவை திறந்துக் கொண்டு மர்ம ஆசாமிகள் இருவர் வீட்டினுள் நுழைந்தனர். இவர்களை கண்டு திடுக்கிட்ட ஞானாம்மாள் கூச்சலிட்டார். உடன் மர்ம ஆசாமிகள் இருவரும் ஞானாம்மாள் கழுத்தில் அணிந்திருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள எட்டரை சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினர். ஞானாம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மர்ம ஆசாமிகள் தலைமறைவாகிவிட்டனர். இந்த சம்பவத்திற்கு முன்பாக ஞானம்மாள் வீட் டிற்கு அருகில் உள்ள சின்னமனி என்பவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்து 'டிரங்' பெட்டியை தூக்கிச் சென்று அருகில் உள்ள கரும்பு வயலில் வைத்து உடைத்து ஏதேனும் நகைகள் உள்ளதா என தேடியுள்ளனர். பெட் டியில் துணிகள் மற்றும் முக்கிய பத்திரங்கள் மட் டும் இருந்ததால் பெட் டியை அப்படியே விட்டுச் சென்றனர். 

                       தகவல் அறிந்த ஸ்ரீமுஷ் ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப் பட்டு சின்னமணி வீட்டில் இருந்த டிரங் பெட்டில் இருந்து மோப்பம் பிடித்து கரும்பு வயல் வழியாக சரவணன் வீட்டிற்கு வந்து ஞானம்மாள் தூங்கி கொண்டிருந்த இடம் வரை சென் றது. பின்னர் வெளியே வந்து மெயின் ரோடு வழியாக சாத்தமங்கலம் கிராமத்திற்கு செல்லும் பெலாந்துறை வாய்க் கால் கரையில் சிறிது தூரம் சென்று நின்றது.  இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக் குப் பதிந்து மர்ம நபர் களை தேடிவருகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

இரு பிரிவினரிடையே மோதல்: ஆர்.டி.ஓ., விசாரணை

 நடுவீரப்பட்டு: 

                       நடுவீரப்பட்டு அருகே இரு பிரிவினரிடையே ஏற் பட்ட மோதல் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பண்ருட்டி அருகே பெத்தாங்குப்பத்திற்கும், வானமாதேவிக்குமிடையே உள்ள  சாலையில் பொது இடத்தில் கடந்த 16ம் தேதி குறிப்பிட்ட ஜாதியை குறித்து மர்ம ஆசாமிகள் சிலர் ஆபாசமாக திட்டி  எழுதியிருந்தனர். இதனால் பெத்தாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் வானமாதேவி காலனி தரப்பினரிடையே  மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
                      இந்நிலையில் நேற்று பெத்தாங்குப்பத்தை சேர்ந்த மலைவாசன் தனது வயலில் வேலை செய்வதற்காக வானமாதேவி காலனிக்கு ஆள் கூப்பிடுவதற்கு சென்றார். அவரை காலனியைச் சேர்ந்த சேட்டு, சுரேஷ், திருநாவுக்கரசு ஆகியோர் வழி மறித்து தாக்கினர். தகவல் அறிந்த பெத்தாங்குப்பம் கிராம மக்கள் வானமாதேவி காலனிக்கு சென்று தகராறு செய்தனர். இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வானமாதேவி காலனியை சேர்ந்த அய் யாவு, ஆறுமுகம், நாவப்பன் உள்ளிட்ட 10 பேர் மீதும், பெத்தாங்குப் பத்தை சேர்ந்த சின்னதுரை, கலியன், குணசேகரன் உள்ளிட்ட 10 பேர் மீதும் தனித்தனியே வழக்கு பதிந்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.

download this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior