உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

Calendar for September 1752

Have u ever seen the calendar for September 1752???

If you are working in Unix, try this out.
At $ prompt, type: cal 9 1752


Image Hosted by ImageShack.us





Surprised????
not only in unix, u can also search it in google

Explanation for what you see:
Isn't the output queer? A month with whole of eleven days missing. This was
the time England shifted from Roman Julian Calendar to the Gregorian
Calendar, and the king of England ordered those 11 days to be wiped off the
face of the month of September of 1752. (What couldn't a King do in those
days?!) And yes, the workers worked for 11 days less, but got paid for the
entire 30 days. And that's how "Paid Leave" was born.Hail the King!!!

Read more »

குடிசைகள் கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது: ஆட்சியர் அறிவிப்பு

கடலூர்:

            டலூர் மாவட்டத்தில், கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் குடிசைகள் கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

              கடலூர் மாவட்டத்தில் நிரந்தர வீடுகள் கட்டப்பட வேண்டிய மொத்த குடிசை வீடுகள் எண்ணிக்கைக்கான கணக்கெடுப்பு 29-3-2010 (திங்கள்கிழமை) அன்று தொடங்குகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள 681 ஊராட்சிகளிலும் கணக்கெடுப்பு நடைபெறும். ஒவ்வொரு ஊராட்சியிலும் கணக்கெடுப்பு, கிராம நிர்வாக அலுவலர், மக்கள் நலப் பணியாளர் மற்றும் ஊராட்சி உதவியாளர் அடங்கிய குழுவால் மேற்கொள்ளப்படும். கணக்கெடுப்புக் குழுவுக்கு 2 கட்டப் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. கணக்கெடுப்புப் பணியை 15-5-2010க்குள் இறுதி செய்திட திட்டமிடப்பட்டு உள்ளது. கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் 2010-11ம் ஆண்டில் 3 லட்சம் வீடுகள் கட்டப்படும். ஒவ்வொரு வீடும் 200 ச.அடி பரப்பளவு கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் அலகுத் தொகை ரூ. 60 ஆயிரம். இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தைப் போலவே இத்திட்டத்திலும் பயனாளிகள் தங்கள் வீடுகளைக் கட்டிக் கொள்வர். ஒப்பந்தப்புள்ளி ஏதும் கோரப்பட மாட்டாது. 2009 வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பில் உள்ள புதிய கதவு இலக்கமே, வீட்டின் அடையாள எண்ணாகக் கருதப்படும். கணக்கெடுப்பின்போது ரேஷன் கார்டு, மின்இணைப்பு, வீட்டுவரி விதிப்பு எண், நில உரிமைக்கான பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை கணக்கெடுப்புக் குழுவிடம் காண்பிக்கத் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். கணக்கெடுப்பின்போது குடும்பம் கண்டிப்பாக அவ்வீட்டில் குடியிருக்க வேண்டும்.  முதல் கட்டமாக இன்று 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 399 ஊராட்சிகளில் கணக்கெடுப்பு தொடங்குகிறது. கணக்கெடுப்புக் குழுவிடம் சரியான தகவல்களைத் தந்து, பணி சிறப்பாக அமைய பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுகொள்ளப் படுகிறார்கள் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

குடிநீரில் குளோரின் கலக்கும் நிலையம்

கடலூர்:

                 கடலூர் நகராட்சியால் ரூ.10 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட குடிநீருக்கு குளோரின் கலக்கும் நிலையம், 2 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. கடலூர் மஞ்சக்குப்பம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே, 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நகராட்சி குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. இங்கிருந்துதான் மஞ்சக்குப்பம் பகுதி முழுவதற்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. 

             குடிநீரை சுத்திகரித்து வழங்க அவ்வப்போது பிளீச்சிங் பவுடர் தொட்டியில் கலக்கப் படுகிறது. இதை எளிதாகவும் சரியான அளவிலும் செய்வதற்காக குடிநீரில் குளோரின் வாயு கலக்கும் இயந்திரம் 2 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. குளோரின் வாயு சிலிண்டர்களைக் கொண்டு வந்து பொருத்தி, அதில் இருந்து குளோரின் வாயு, குடிநீர் பகிர்மானக் குழாயுடன் இணைக்கப்பட்டு உள்ளது.  இந்த இயந்திரம் தற்போது செயலற்று மூடிக்கிடக்கிறது. இதற்கான அறை மூடப்பட்டு இருக்கிறது. இந்த இயந்திரம் பொருத்தப்பட்டு சில நாள்களே செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது நகராட்சி ஊழியர்கள் நேரடியாக பிளீச்சிங் பவுடரைக் கலக்கி வருகிறார்கள். இது குறிப்பிட்ட விகிதத்தில் இருப்பதில்லை. சில நேரங்களில் அதிக அளவில் பிளீச்சிங் பவுடர் கலந்து விடுவதால் நகராட்சிக் குடிநீரைக் குடிப்பதற்கு சிரமமாக இருக்கும்.

இதுகுறித்து நகராட்சிப் பொறியாளர் சந்திரமனோகரனிடம் கேட்டதற்கு

                      குளோரின் வாயு செலுத்தும் இயந்திரம் இயங்கவில்லை. மும்பையைச் சேர்ந்த நிறுவனம்தான் அதைச் சீரமைக்க முடியும். அரசுக்கு எழுதி இருக்கிறோம். சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது கையினால்தான் பிளீச்சிங் பவுடரைக் கலக்குகிறோம் என்றார்.

Read more »

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையை ஐ.நா. குழு 31-ல் பார்வையிடுகிறது

கடலூர்:
        கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையை ஐ.நா. சபையின் உணவு உரிமை பாதுகாப்புக் கண்காணிப்பாளர் குழு 31-ம் தேதி பார்வையிடுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கங்கள், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியற்றின் பிரதிநிதிகளையும் இக்குழு சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிகிறது. ஐ.நா. சபையின் உணவு உரிமை பாதுகாப்பு கண்காணிப்பாளர் ஆலிவர் ஷட்டர் மற்றும் அவரது குழுவினர் 31-ம் தேதி கடலூர் வருகிறார்கள். அவர்களது நிகழ்ச்சிகளை இந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் த.குருசாமி தலைமையிலான குழுவினர் ஒருங்கிணைத்து நடத்துகிறார்கள்.
              31-ம் தேதி காலை 8-30 மணி முதல் 9 மணி வரை கடலூர் டவுன்ஹாலில், ஐ.நா. சபைக் குழுவிடம் சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு, உணவு பாதுகாப்பில் ஏற்பட்டு உள்ள பின்னடைவு குறித்து இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு விளக்கம் அளிக்கிறது. பகல் 12 மணி வரை, சிப்காட் தொழிற்பேட்டைக்கு அருகிலிருக்கும்   குடிகாடு, ஈச்சங்காடு, காரைக்காடு, சங்கொலிக்குப்பம், செம்மங்குப்பம் கிராமங்களில் மக்களைச் சந்தித்து கருத்துக்களை கேட்டறிகிறது. பகல் 12-30 முதல் மாலை 4-30 வரை, கடலூர் டவுன்ஹாலில் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள், சிப்காட் முகவர்கள் ஒப்பந்ததாரர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், செய்தியாளர்கள் ஆகியோரை இக்குழு சந்திக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளாகிய உணவு, தண்ணீருக்கான உரிமை, உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட வாழ்வாதார உரிமைகள் தொழில்மயம் என்ற பெயரால் எவ்வாறெல்லாம் பறிக்கப்படுகிறது என்பதை களப்பார்வையிடல் மூலம் அறிந்து ஐ.நா.சபைக்கு தெரிவிக்கும் முயற்சி இதுவாகும்.

Read more »

வேலைவாய்ப்பு விழிப்புணர்வு விழா 86 பேருக்கு வேலைவாய்ப்பு உத்தரவாத சான்றிதழ்

சிதம்பரம்;
 
               வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழை மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு விழிப்புணர்வு விழா சிதம்பரத்தில் லக்கோட்டியா கம்ப்யூட்டர் நிறுவனம், சிதம்பரம் நகராட்சி மற்றும் ஏசிடி இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் அண்மையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் பா.ஜான்சன் தலைமை வகித்தார். லக்கோட்டியா கம்ப்யூட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர் க.தண்டபாணி முன்னிலை வகித்தார். அரிமா சங்கத் தலைவர் பெரி.முருகப்பன் வாழ்த்துரை வழங்கினார். செங்கல்பட்டு மண்டல  நகராட்சி நிர்வாக சமுதாய வளர்ச்சி அதிகாரி எம்.சண்முகப்பிரியா சிறப்புரையாற்றினார். மாணவர் எம்.நூருல்லா வரவேற்றார். 
 
                     விழாவில் இலவச கல்வி பெற்று வேலைக்கு தேர்வு பெற்ற 86 மாணவர்களுக்கு வேலை உத்தரவாத சான்றிதழ்களை பல பன்னாட்டு நிறுவனங்கள் சார்பாக சென்னை ஐஐடியின் துணை மையமான ஈஜிவிகா மையம் மூலம் வழங்கப்பட்டது. சிதம்பரம் நகராட்சி சார்பாக இலவச கல்வி பெறும் ஏழை மாணவர்களுக்காக சென்னை ஐஐடி நிறுவனம் நேரிடையாக நடத்தும் ஆன்லைன் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் தேர்வு மையத்தை ஐஐடியின் ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு துணை மையமான ஈஜிவிகா  ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுதாகர் துவக்கி வைத்தார். ஏசிடி இன்டர்நேஷனல் நிறுவனத்தில் இலவச கல்வி பெறும் 598 மாணவர்கள்  சென்னை மற்றும் பெரிய நகரங்களிலுள்ள பல பன்னாட்டு நிறுவனங்களில் சிதம்பரத்திலிருந்து கொண்டே ஆன்லைன் மூலம் வேலைக்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்று தேர்வு பெற்றார்கள். குறிப்பாக ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் அதிக மாணவர்களை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைன் வேலைவாய்ப்பு மூலம் பல பன்னாட்டு நிறுவனங்களில் பல மாணவர்கள் வேலைக்கான இன்பிளாண்ட் டிரெயினிங்குக்கான உத்தரவாதத்தை பெற்றுள்ளார்கள் என எல்சிசி நிர்வாக இயக்குநர் க.தண்டபாணி தெரிவித்தார். விழா நிறைவில் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற தலைப்பில் கணினி பொறியாளர் ராம்குமார் தலைமையில் விவாதமும், கருத்தரங்கும் நடைபெற்றது.

Read more »

தொலைதூரக்கல்வி மைய பாடங்கள் வானொலியில் ஒலிபரப்பு

சிதம்பரம்:
 
             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி இயக்ககத்தில் பயிலும் பல்வேறு துறை மாணவர்களுக்கான பாடங்கள் புதுச்சேரி,​​ சென்னை,​​ திருச்சிராப்பள்ளி,​​ கோயம்புத்தூர் ஆகிய அகில இந்திய வானொலி நிலையங்களில் முதல் அலைவரிசையில் ஒலிபரப்பப்படுகிறது. இவ்வாண்டுக்கான பாடங்கள் மே 9-ம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு ஒலிபரப்பாக உள்ளது.​ மே 8,9 தேதிகளில் மட்டும் மாலை 5 மணிக்கே இப்பாடங்கள் ஒலிபரப்பாகும். 30 நிமிட கால அளவிலான தமிழ்,​​ ஆங்கிலம்,​​ சமூகவியல்,​​ பொருளாதாரம்,​​ வணிகம்,​​ மக்கள் தொகையியல்,​​ அரசியல் பொது நிர்வாகம்,​​ காவல் நிர்வாகத்துறை மாணவர்களுக்கான இப்பாடங்களின் ஒலிபரப்பை கேட்டு பயன்பெறுங்கள் என புதுச்சேரி வானொலி நிலைய இயக்குநர் கல்யாணி ராமச்சந்திரன் பத்திரிகை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Read more »

நெடுஞ்சாலை, மின்வாரிய அதிகாரிகளிடையே போட்டா போட்டி! : சாலை விரிவாக்கம், மின்கம்ப பணிகள் பாதிப்பு


பண்ருட்டி : 

               பண்ருட்டி பகுதியில் சாலையோரம் உள்ள மின்கம்பங்கள் அகற்றுவதில் சிக்கல்  நீடித்து வருவதால் நெடுஞ்சாலைகள் விரிவாக்க பணி தேக்கமடைந்துள்ளது.
 
                பண்ருட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் பண் ருட்டி ஒன்றியம் அலுவலகம் - முத்துநாராயணபுரம் வரையிலான 5 கி.மீ., சாலையை 2.30 கோடி ரூபாய் செலவில் 7 மீட்டர் அகலத்திற்கு விரிவுப்படுத்தும் பணி துவங்கப்பட் டுள்ளது. அதேபோன்று வல்லம்-கீழிருப்பு 3 கி.மீ., சாலை 37 லட்சம் ரூபாய் செலவிலும், மேலிருப்பு-ஆத்திரிக் கப்பம்-பேர்பெரியான் குப்பம் 8 கி.மீ., சாலை ஒரு கோடி ரூபாய் மதிப்பிலும், காடாம்புலியூர்-சிலம்பிநாதன் பேட்டை 9.4 கி.மீ., சாலை ஒரு கோடியே 16 லட்சம் செலவிலும் அகலப்படுத்தும் பணி துவங்கப் பட்டுள்ளது.
 
                    இந்த சாலைகளில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் பல இடங்களில் உள்ள மின்கம்பங்களை அகற்ற பண்ருட்டி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மின்வாரிய செயற் பொறியாளருக்கு நடவடிக்கை எடுக்க கடந்த செப்டம்பர் மாதம் கடிதம் அனுப்பினார். விண்ணப்ப கட்டணம் செலுத்த மின் வாரியம் அறிவுறுத்தியது. அதன்படி விண்ணப்ப கட்டணம் செலுத்திய பின், மின்கம்பம் மாற்றுவதற்குரிய திட்டமதிப்பீடு வழங்காமல் மின் வாரியம் அலட்சியம் செய்து வருகிறது. இதனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்  மின்கம்பங்கள் உள்ளபகுதிகளை தவிர்த்து சாலை அகலப்படுத்தும் பணியை கடந்த ஒரு மாதமாக செய்து வருகின்றனர்.
 
                மேலும், இனி வரும் காலங்களில் நெடுஞ்சாலைத்துறையின்    அனுமதியின்றி மின் கம்பங்கள் நடக்கூடாது என கோட்ட பொறியாளர் வெங்கடேசன்  மின்வாரிய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினர். அதனைத் தொடர்ந்து செம்மேடு, வாணியம்பாளையம், பண்டரக் கோட்டை உள்ளிட்ட பகுதியில் டிரான்ஸ்பார்மர், மின்கம்பம் அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் தடுத்து நிறுத்தினர். வேறு வழியின்றி மாளிகம்பட்டு பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அனுமதியின்றி மின்வாரியத்தினர்  இரவோடு இரவாக செய்து முடித்தனர்.
 
இதுகுறித்து பண்ருட்டி மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகம் கூறுகையில், 

             இனி வரும் காலங்களில் நெடுஞ்சாலை துறை அனுமதியோடு மின் கம்பங்கள் நட  உதவி பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளேன். நெடுஞ்சாலையோரம் உள்ள மின்கம்பங்கள் மாற்றி அமைக்க சீனியர் பொறியாளர் அலுவலகத் தில் அனுமதி பெற்று ஒரு வாரத்தில் மின்கம்பங்கள் அகற்ற நடவடிக்கை எடுக் கப்படும் என்றார்.
 
நெடுஞ்சாலை துறை பண்ருட்டி உதவி கோட்ட பொறியாளர் சுந்தரி கூறுகையில், 
     
                    சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்றக்கோரி மின் வாரியத்திற்கு கடிதம் அனுப்பி ஐந்து மாதம் ஆகியும் நடவடிக்கை இல்லை. அதனால், சாலை விரிவாக்க பணி குறித்த நேரத்தில் முடிக்க முடியவில்லை. அதனால்,  நெடுஞ் சாலை துறை அனுமதியின்றி மின் கம்பம் அமைக்கக்கூடாது என கடிதம் அனுப்பினோம். இருப்பினும் மாளிகம் பட்டு சாலை ஓரத்தில் டிரான்ஸ்பார்மர் வைத்துள்ளனர் என்றார். 

Read more »

டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

கடலூர் :

               டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் கடலூரில் நடந் தது.

                   மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட  செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.  கடலூர் வட்ட தலைவர் காமராஜ் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் சரவணன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தஞ்சாவூரில் நடந்த மாநில செயற் குழு கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. சட்டசபையில் நமது துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாஸ்கரன், ஏகாம்பரம், செல்வம் உட் பட பலர் பங்கேற்றனர். மாவட்ட துணை தலைவர் பழனிவேல் நன்றி கூறினார்.

Read more »

எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிர்வாக தவறுகள் தடுக்கப்பட்டுள்ளது : ஆட்சியர் அசிமா மரியம் தகவல்


சேத்தியாத்தோப்பு : 

                  விவசாயிகளிடம் பணம் வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ள கரும்பு அதிகாரிகள் ஒரே அலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்றுவதை தடுக்க வேண் டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
 
                 சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஆட்சியர் அசிமா மரியம் தலைமை தாங்கினார். தலைமை கரும்பு அலுவலர் (பொறுப்பு) ராஜதுரை முன் னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கரும்பு விவசாயிகள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளான ராமானுஜம், வேல் முருகன், அப்பாதுரை, குஞ்சிதபாதம், இளவரசன், ஆதிமூலம், பன்னீர்செல்வம்,  குணசேகரன்,  ராமசாமி, பாபு, செந்தில் உட்பட பலர் பேசினர்.
 
                  அப்போது, விவசாயிகளிடம் பணம் வாங்கும் நோக்கத்தில் கரும்பு அலுவலர்கள் தொடர்ந்து ஒரே கோட்டத்தில் பணியாற்றி வருவதால், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு பயந்தே பல விவசாயிகள் கரும்பு பயிரிடுவதையே விட்டுவிட்டனர். இந்த நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விதைக் கரணையை சலுகை விலையில் வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு அரை கிலோ வீதம் சர்க்கரை வழங்க வேண்டும். கரும்பு வெட்டி அனுப்பிய ஒரு வாரத்திற்குள் பணத்தை வழங்க வேண் டும். சர்க்கரை கட்டுமானத்தை அதிகரிக்க ரசாயன துறையில் உரிய கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என பேசினர்.
 
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆட்சியர் ஆசியா மரியம் பதிலளிக்கையில், 

                   ஆலையில் இதுவரை நடந்த பல தவறுகள் தடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் கடந்த ஒரு மாதத்தில் உடனுக்குடன் தீர்வு காணப் பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் ஆலையின் நிர் வாக ரீதியிலான அனைத்து பிரச்னைகளையும் உடனுக்குடன் தீர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்க் கரை துறை ஆணையம் மற்றும் அரசு மூலம் தீர்வுகான வேண்டிய பிரச்னைகளை தனிக் கவனம் செலுத்தி அவற்றை விரைவாக முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரும்புத் துறை, கணக்குத்துறை, ரசாயன துறை, பொறியியல் துறை என தனித்து இயங்கியவர்களை ஒருங் கிணைத்து செயலாற்ற நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. கரும்பு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம், கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது என்றார். அலுவலக மேலாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.

Read more »

புதுவண்டிப்பாளையத்தில் தேர் திருவிழா : எம்.எல்.ஏ., அய்யப்பன் வடம் பிடித்தார்

கடலூர் : 

                 கடலூர் புதுவண்டிப் பாளையம் சிவ சுப்ரமணிய சாமி கோவில் பங் குனி உத்திரத்தையொட்டி நேற்று தேர் திருவிழா நடந்தது.
 
                  கடலூர் புதுவண்டிப் பாளையம் சிவ சுப்ரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், இரவில் உற்சவர் வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 25ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி, பெரியநாயகி சமேதராய் பாடலீஸ்வரர் புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணியசாமி கோவிலில் எழுந்தருளினார். அன்று இரவு பெரியநாயகி சமேதர் பாடலீஸ்வரர் முன்னிலையில் திருக்கல்யாண உற்சவமும், அதனைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேதராய் முருகர் வீதியுலா நடந்தது. நேற்று 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் அலங்கரித்து காலை 7.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தேரை எம்.எல்.ஏ. அய்யப்பன், சேர்மன் தங்கராசு, அருணகிரி மற்றும் முக்கியஸ்தர்கள் உட்பட பொதுமக்கள் வடம் பிடித்து  இழுத்தனர். மாலை தேர் கோவிலை வந்தடைந்தது. இன்று காலை 6 மணிக்கு 108 சங்காபிஷேகமும், 12 மணிக்கு யாகசாலை கலச பூஜை நடக்கிறது. மாலை அபிஷேகமும், தொடர்ந்து உற்சவர் வீதியுலா நடக்கிறது.

Read more »

விருத்தாசலம் நகரத்தில் மின்தடை நேரம் மாற்றம்

விருத்தாசலம் :

       விருத்தாசலம் நகர பகுதியில் மின் தடை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விருத்தாசலம் கோட்ட செயற் பொறியாளர் சிவராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


                    விருத்தாசலம் கோட்டம் பூதாமூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் நகர பகுதிகளான பூதாமூர், சிதம்பரம் ரோடு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கடலூர் ரோடு, பாலக்கரை, ஜங்ஷன் ரோடு, ஆயியார் மடம், பழமலை நாதர் நகர், பஸ் நிலையம், சரோஜினி நகர், புதுப்பேட்டை, திரு.வி.க., நகர், காட்டுக்கூடலூர் ரோடு, தாஷ்கண்ட் நகர், செல்வராஜ் நகர், பெரியார் நகர், பெரியகண்டியாங்குப்பம், அண்ணா நகர், சத்திநகர், எம்.ஆர்.கே., நகர், கம்பர் நகர், காந்தி நகர், அரசு மருத்துவமனை, மணலூர், சேலம் ரோடு, தென்கோட்டை வீதி, வடக்கு கோட்டை வீதி, கடை வீதி, பெரியார் டெப்போ, பி.எஸ்.என்.எல்., அலுவலகம், காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளுக்கு இன்று மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும், வயலூர், நாச்சியார்பேட்டை, வி.என்.ஆர்., நகர், முல்லை நகர், தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Read more »

ஆண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை தொரப்பாடியில் விழிப்புணர்வு கூட்டம்

பண்ருட்டி : 

            பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சியில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
 
               ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு தொரப்பாடி சேர்மன் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார்.  துணை சேர்மன் அருணாசலம் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி வரவேற்றார். மாவட்ட மக்கள் கல்வி அலுவலர் சதாசிவம், விரிவாக்க கல்வியாளர் கேத்தரின்,  சுகாதார ஆய்வாளர் ஜெயகுமார், வட்டார விரிவாக்க கல்வியாளர் விக்டோரியா, செவிலியர்கள் சாந்தி, சுகாதார மேற்பார்வையாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

கிள்ளையில் தென்னிந்திய மீனவர்கள் கூட்டமைப்பு சம்மேளன சங்கம் துவக்கம்

கிள்ளை :

                சிதம்பரம் அருகே கிள்ளை கலைஞர் நகர் இருளர் குடியிருப்பில் தென்னிந்திய மீனவர்கள் கூட்டமைப்பு சம்மேளன சங்க  துவக்க விழா நடந்தது.
பேரூராட்சி கவுன்சிலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் ரவி வரவேற்றார். மண்டல அலுவலர் பில்ஜின் மொரைஸ், ஊக்க அலுவலர் பட்சிராஜன், புதுச்சேரி கள அலுவலக பொறுப்பாளர் கார்த்திகேயன் முன் னிலை வகித்தனர். 'ஐபாடு' திட்டத்தின் மூலம் சுனாமியால் பாதித்த மீனவர்கள் மற்றும் இருளர்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் 'சிஸ்' அமைப்பில் துவக்கப்பட்ட தென்னிந்திய மீனவர்கள் கூட்டமைப்பின் சம்மேளன சங்கத்தை தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தயமூர்த்தி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கிள்ளை சென்ட்ரல் பாங்க் மேலாளர் லியாகத் அலி, திட்ட அலுவலர் பாஸ்கர் பேசினர். சங்க தலைவர் பாண்டியன் மற்றும் கிராம நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். சங்க செயலாளர் தங்கராசு நன்றி கூறினார்.

Read more »

கடலூரில் மகாவீர் ஜெயந்தி ஜெயினர்கள் சிறப்பு வழிபாடு

கடலூர் :

                    மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கடலூரில் ஜெயினர்கள் உலக அமைதி வேண்டி ஊர்வலம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

                  மகாவீர் 2609 ஆண்டு ஜெயந்தி விழாவை கடலூர் பகுதியில் உள்ள ஜெயினர்கள் சிறப்பாக கொண்டாடினர். அதனையொட்டி திருப்பாதிரிப்புலியூர் கோவில் தெருவில் உள்ள பாரஸ்வா நாத ஜெயின் கோவிலிலிருந்து காலை 9 மணிக்கு ஊர்வலம் துவங்கியது. இது தேரடி தெரு, சங்கர நாயுடு தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பாரஸ்வா மன்றத்தினர் இசையுடன் பக்தி பாடல் பாடினர். இதில் ஏராளமான ஜெயினர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். மதியம் உலக அமைதி வேண்டி  சென்னை டாபாலு மண்டல குழுவினரின் பஜனை நடந்தது.

Read more »

விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை

கடலூர் :

                  விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் கூடுதல் ரயில் இயக்க வேண்டுமென பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கடலூர் மாவட்ட பயணிகள் சங்க உறுப்பினர் சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கை: 

                      விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் புதிய கால அட்டவணையில் சோழன், கம்பன், சேது எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ராமேஸ்வரத்திலிருந்து புவனேஸ்வரத்திற்கும், வாரணாசிக்கும் புதிய ரயில் அறிமுகப்படுத்துவது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக் கும். தற்போது வாரம் ஒரு முறை இயக்கப்படும் என அறிவித்துள்ள இந்த ரயில்களை தினமும் இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த தடத்தில் திருச்சியிலிருந்து திருப்பதிக்கு கும்பகோணம்-மயிலாடுதுறை கடலூர் வழியாக விரைவு ரயிலும், கும்பகோணம்-சென்னை இடையே அதிவிரைவு சகாப்தி, ஜனசகாப்தி ரயில்களை இயக்க வேண்டும். கன்னியாகுமரி, நாகர் கோவில், திருநெல்வேலி, மதுரை பயணிகள் பயன் பெறும் வகையில் தஞ்சாவூர் மயிலாடுதுறை வழியாக கன் னியாகுமரி- எழும்பூர் இடையே புதிய ரயிலை இயக்க வேண்டும்.

                   அண்ணாமலைப்பல்கலைக்கழகம் மற்றும் விழுப்புரம் மயிலாடுதுறை இடையே இயங்கும் பொறியியல் கல்லூரி, பிற கல்லூரி மாணவ மாணவிகள், அலுவலர்கள் பயன் பெறும் வகையில் காலை மற்றும் மாலை வேளையில் பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Read more »

சத்துணவு ஊழியர்களுக்கு முட்டை உணவு தயாரிக்க பயிற்சி


பண்ருட்டி : 

                 பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு பொது சுகாதாரம், முட்டை உணவு தயாரித் தல் பயிற்சி முகாம் நடந்தது.
 
                பொது சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடந்த இரண்டு நாள் முகாமிற்கு பி.டி.ஓ.,க்கள் மனோகரன், தமிழரசி தலைமை தாங்கினார். துணை பி.டி.ஒ., சீனுவாசன் முன்னிலை வகித்தார். சேர் மன் கவுரி பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். முகாமில் பொது சுகாதாரம், நோய்தடுப்பு முறைகள், சுற்றுசுழல் குறித்து அரசு டாக்டர்கள் சங்கரி, கிருபானந்த், மேற் பார்வையாளர் கணேசன், சுகாதார ஆய்வாளர்கள் அரிகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார் வையாளர் பால்ஜெயல், உதவி தொடக்க கல்வி அலுவலர் பராங்குசம் மற்றும் சத்துணவு ஊழியர்கள் 200பேர் பங்கேற்றனர்.

Read more »

யானைக்கால் நோயாளிகளுக்கு மருந்து

நெல்லிக்குப்பம் :

                      நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் யானைக் கால் நோய் கண்டறியும் முகாம் நடந்தது.
 
                 இதில் 71 பேருக்கு யானைக்கால் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நோய் மூலம் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். யானைக்கால் நோய் உள்ளவர்களுக்கு மாத்திரைகள், சோப்பு மற்றும் உபயோக பொருட்களை பொது சுகாதார இணை இயக்குனர் சார்பில் சேர்மன் கெய்க் வாட்பாபு வழங்கினார்.  துப்புரவு அலுவலர் கிருஷ்ணகுமார், பிரசாத், புலிகொடியான், மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

இளைஞர் காங்., தேர்தல் வடலூரில் ஓட்டுப்பதிவு

குறிஞ்சிப்பாடி :
 
                 விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி சட்டசபை தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகளுக்கான தேர்தல் வடலூரில் நடந்தது.
 
                   தமிழக இளைஞர் காங்., நிர்வாகிகளுக் கான தேர்தல் நடந்து வருகிறது. அதில் கடலூர் மாவட்டத்தில் நகர, ஊராட்சி கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் சில தினங்களுக்கு முன் நடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது தொகுதி குழு நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று துவங்கியது. கடலூர் லோக்சபா தொகுதியில் உள்ள விருத்தாசலம், திட்டக்குடி மற்றும் நெய்வேலி சட்டசபை தொகுதி நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று வடலூரில் நடந்தது. இதில் நடந்து முடிந்து கிளை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஓட்டு போட்டனர். தேர்தøல் காசீம் அலையான் தலைமையிலான குழுவினர் நடத்தினர்.
 
                           மாலையில் தொகுதி வாரியாக ஓட்டுகள் எண்ணி  முடிவுகளை கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி சட்டசபை தொகுதி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடக்கிறது. இளைஞர் காங்., தேர்தலில் பிரச்னை ஏற்படாமல் இருக்கும் பொருட்டு ஓட்டுப் பதிவு நடந்த இடத்தில்  வடலூர் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Read more »

விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ., கையெழுத்து இயக்கம்


கடலூர் : 

                 விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த  தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட பா.ஜ., சார்பில் கடலூரில் கையெழுத்து இயக்கம் நடத்தப் பட்டது.

                 விவசாயி உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சரியான விலை இல்லாமல் விவசாயம் சீரழிந்து வருகிறது. ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனைக் கண்டித்தும், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத் தைக் கட்டுப்படுத்தாதது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்காததால் அவர்கள் திசை மாற காரணமாக உள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, கடலூர் மாவட்ட பா.ஜ., சார்பில்  பொதுமக்களிடம் கருத்தறியும் கையெழுத்து இயக்கம் நடத்தினர். கடலூர் பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகக்குழு குணா தலைமை தாங் கினார். ராஜா, அகஸ்தியபாரதி, வக்கீல் சுரேஷ், நகர அமைப்பாளர் வெங்கடேசன், துரைராஜ், தனக் கோடி, புருஷோத்தமன், வாணிதாசன், ஜான்சுந்தர் ராஜ், ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

புவனகிரி பேரூராட்சியில் ரூ.20 லட்சத்தில் புதிய கட்டடம்

புவனகிரி :

                   புவனகிரி பேரூராட்சியில் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலக கட்டடம் கட்டப் பட்டு வருகிறது.

                      புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கவும், குடிநீர் கட்டணம், வீட்டுவரி,தொழில் வரி, பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்ய இந்த அலுவலகத்திற்கு வருகின்றனர். பேரூராட்சி உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டமும் இந்த கட்டடத்தில்தான் நடந்து வருகிறது. இதுதவிர அலுவலக பணிகள் அனைத்தும் ஒரே கட்டடத்தில் இயங்கி வருவது சிரமமாக இருந்தது. இதனை தவிர்க்கும் பொருட்டு மன்றக் கூட்டத்தில் புதிய கட்டடம் கட்ட தீர்மானம் நிறைவேறியது. அதனையொட்டி  பேரூராட்சி அலுவலக வளாகத்தில் 2009-10ம் ஆண்டு பகுதி-2  திட்டத்தின்கீழ் 20லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அலுவலக கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. 

Read more »

சாலை விரிவாக்கம்: அதிகாரிகள் ஆய்வு

பரங்கிப்பேட்டை : 

                 பரங்கிப்பேட்டை அருகே சாலை விரிவாக்கப் பணியை நெடுஞ் சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார். பரங்கிப்பேட்டை - பு.முட்லூர் நெடுஞ்சாலையில் இரண்டு கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பாலம் மற்றும் சாலை விரிவாக்க பணி கடந்த வாரம் முடிந்தது. இந்நிலையில் நேற்று பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் ரயிலடி அருகே சாலை விரிவாக்க பணியை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Read more »

நுகர்வோர் சேவை மையத்தின் ஆலோசனை கேட்டு பயன்பெறுமாறு கலெக்டர் வேண்டுகோள்

கடலூர் :

                வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது பற்றி நுகர்வோர் சேவை மையத்தின் மூலம் ஆலோசனை கேட்டு பயன்பெறுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

               தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் செயல்பட்டு வரும் மாநில நுகர்வோர் சேவை மையத்தில் இணைய தளத்தின் சேவை வாயிலாக நுகர்வோருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கங்கள், நுகர்வோர்கள் அளிக்கும் புகார்களுக்கு ஆலோனைகள் வழங்கப்படுகிறது. நுகர்வோர் அமைப்புகளின் கோரிக்கையினை ஏற்று மாநில நுகர்வோர் சேவை மையம் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையைப் பெறும் முன்னர் நுகர்வோர்களுக்கு எழும் பிரச்னைகளுக்கு ஆலோசனை மற்றும் வழிமுறைகளை தொலைபேசி வாயிலாக அளித்து வருகிறது.

                         நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு நுகர்வோர் கல்விக்காக வங்கியிலிருந்து கடன் பெறும் முறை மற்றும் அதற்காக விண்ணப்பித்தல் தொடர்பான ஆலோசனைகள் கூறப்பட்டது. அப்போது வங்கியில் கல்விக்கடன் பெறும்போது நுகர்வோர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கான உரிய விளக்கங்களை நுகர்வோர்கள், மாநில நுகர்வோர் சேவை மையத்தின் தொலைபேசி எண் 044-28592828 மூலம் தொடர்பு கொள்ளும்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூத்த அலுவலர்களும், நுகர்வோர் அமைப்புகளின் ஆலோசகர்  விளக்கம் வழங்குவர். நுகர்வோர்கள் இம் மையத்தின் சேவையினை பயன்படுத்தி வங்கிகளில் கல்விக்கடன் பெறுவது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Read more »

செயின்ட் ஜோசப் கல்லூரி தின விழா

கடலூர் :

                             கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி தின விழா நடந்தது. கல்லூரி செயலாளர் ரட்சகர் தலைமை தாங்கினார். செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆக்னல் முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் சின்னப்பன், ரொசாரியோ ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். சிறப்பு விருந்தினர்கள் சிப்காட் ஆர்க்கிமா பெராக்சைடு கம்பெனி துணைத் தலைவர் ஆனந்தஜோதி மற்றும் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி முதல்வர் வள்ளி ஆகியோரை பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் அறிமுகப்படுத்தினார்.

                          மாணவர் கார்த்திகேயன், மாணவி ஹேமாஸ்ரீ  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியில் ஆர்க்கிமா பெராக்சைடு நிர்வாக அதிகாரி சாமிநாதன், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சிறந்த 3ம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப் பட்டது.

Read more »

ராணுவ மருத்துவக் கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் :

             ராணுவ மருத்துவ கல்லூரியில் சேர முன்னாள் படைவீரர்களின் சிறார்களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் ஜைத்தூன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 

                    ராணுவ மருத்துவக் கல்லூரி, புதுடில்லி 110, 010 பேஸ் மருத்துவமனை கேன்ட் என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது. இரண்டாவது அணியாக எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு 2.8.2010 முதல் நடைபெறவுள்ளது. விண்ணப்பம் கல்லூரிக்கு அனுப்பும் கடைசி நாள் 21.4.2010. மேலும் விபரங்களுக்கு இணையதளத்திலும், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரில் அணுகி விபரம் பெற்றுக்செல்ல உதவி இயக்குனர் கர்னல் ஜைத்தூன் தெரிவித்துள்ளார்.

Read more »

விவசாய தொழிலாளர் சங்கம் சூரக்குப்பத்தில் துவக்கம்

பண்ருட்டி :

                 பண்ருட்டி அடுத்த சூரக்குப்பத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க  கிளை துவக்க கூட்டம் நடந்தது.

                கணேசன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் உத்திராபதி, செயலாளர் ஏழுமலை முன் னிலை வகித்தனர்.  கூட்டத்தில் புதிய தலைவராக கணேசன், செயலாளராக ராஜேந்திரன், பொருளாளராக ஏழுமலை, துணை தலைவர்களாக பெருமாள், அண்ணாதுரை, துணை செயலா ளர்களாக வெங்கடேசன், சேகர் மற்றும் தர்மலிங்கம், தவிடன், சின்னதம்பி தேர்வு செய்யப்பட்டனர். நத்தம் புறம்போக்கு இடத்தில் குடியிருப்பவர் களுக்கு பட்டா வழங்க வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை ஆய்வு செய்து சேர்க்க வேண்டும், சூரக் குப்பம் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

எச்.ஐ.வி., அற்ற சமூகத்தை படைக்க சூளுரைக்க வேண்டும் : கலெக்டர் சீத்தாராமன் பேச்சு


விருத்தாசலம் : 

                     எச்.ஐ.வி., அற்ற சமூகத்தை படைக்க நாம் சூளுரைக்க வேண்டும் என கலெக்டர் சீத்தாராமன் பேசினார்.
 
                     விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில் செஞ்சுருள் விரைவு ரயில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் கண்காட்சி துவக்க விழா நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன், எய்ட்ஸ் கட்டுபாடு மாவட்ட திட்ட மேலாளர் கலைமதி முன்னிலை வகித்தனர். மருத்துவதுறை இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் வரவேற்றார்.
 
விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வைத்து கலெக்டர் சீத்தாராமன் பேசியதாவது: 

                செஞ்சுருள் விரைவு ரயில் எய்ட்ஸ் குறித்து மக்களுக்கு தேவையான தகவல், சேவை மற்றும் விழிப்புணர்வுகளை வழங் குவதற்கு வந்துள்ளது. மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 911 பேரை பரிசோதித்ததில் 67 கர்ப்பிணி பெண்கள் உட் பட 841 பேருக்கு எச்.ஐ. வி., தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
                  மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் இல்லை என் றாலும் நாம் விழிப்புணர் வுடன் இருக்க வேண்டும். விரைவு ரயிலில் எட்டு பெட்டிகள் இணைக்கப் பட்டுள்ளது. இதில் ஐந்தாவது பெட்டியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நர்சிங் மாணவர் கள், போலீஸ், என்.சி.சி., மற்றும் என். எஸ்.எஸ்., மாணவர்கள் 240 பேருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெறுகிறது. மேலும் பொதுமக்களுக்கு தகுந்த ஆலோசனைகளும் வழங் கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த கண்காட்சியை பார்க்கும் வகையில் களப் பணியாளர்கள் பணியாற்ற வேண்டும். எச்.ஐ.வி., அற்ற சமூகத்தை படைக்க நாம் சூளுரைக்க வேண் டும் என பேசினார்.
 
                  தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்க இணை இயக்குனர் அலெக்ஸ் பரிமளம், சுகாதார நலப்பணி துணை இயக்குனர் கிருஷ் ணராஜ், டி.எஸ்.பி., ராஜசேகரன், முதன்மை மருத்துவ அலுவலர் தமிழரசி, ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் ஜெகதீசன், நிலைய மேலாளர் அய்யாசாமி  கலந்து கொண்டனர்.

Read more »

மேய்ச்சலுக்கு வந்த கிளை மான் மர்மமான முறையில் இறந்தது

திட்டக்குடி : 
 
                 திட்டக்குடி அருகே மேய்ச்சலுக்கு வந்த கிளை மான் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
 
                      கடலூர் மாவட்டம், திட்டக்குடி சுற்றுப் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான காட்டில் உள்ள வன விலங்குகள் கோடை காலங்களில் உணவு மற் றும் தண்ணீரை தேடி நகர பகுதிகளுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் ஏரி பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த கிளை மான் ஒன்று நேற்று காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி விவசாயி மணி கொடுத்த தகவலின் பேரில், மாவட்ட வன அலுவலர் துரைசாமி உத்தரவின்படி, தொழுதூர் வனவர் ஏகாம்பரம், வனக்காவலர் தில்லைகோவிந்தன் ஆகியோர் விரைந்து வந்து, ஏரிக்கரையில் இறந்த கிடந்த மானை கால்நடை மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்து அதே பகுதியில் புதைத்தனர். மேலும், மான் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

திட்டக்குடி பஸ் நிலையத்தில் மீண்டும் கொட்டகை : ஆக்கிரமிப்புகளை அகற்ற நூதன போராட்டம்


திட்டக்குடி : 

                     திட்டக்குடி பேரூராட்சி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் மீண்டும் பஸ் நிலையத்தில் கொட்டகை கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
                    திட்டக்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றக்கோரி இளமங்கலம், வதிஷ்டபுரம், கோழியூர் காலனி மக்கள் இரண்டு நாட்களுக்கு முன் பஸ் நிலையத்தில் கொட்டகை கட்டினர். இதுகுறித்த பேரூராட்சி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் மறுநாள் தாசில்தார் கண்ணன் முன்னிலையில் கொட்டகை அகற்றப் பட் டது. அப் போது கொட்டகையில் மாட்டியிருந்த அம் பேத்கர் படத்தின் கண் ணாடி உடைந்ததால் பேரூராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் போலீசில் புகார் செய்தனர். இந்த சம்பவத்தால் பதட்டம் நிலவியதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
                        இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வி.சி., நிர்வாகிகள் ராஜா அலெக்சாண்டர், தமிழன்பன் உள்ளிட்டோர் பஸ் நிலைய வளாகத்தில் மேலும் இரண்டு கொட்டகைகளை கட்டினர். தகவலறிந்த டி.எஸ்.பி., இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து சென்று கொட்டகையை அகற்றினர். மேலும் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் சட்டம் ஒழுங்கும் பாதிக்கும் நிலை உள்ளதாக கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றிட பொது இடத்தில் ஆக்கிரமித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நூதன முறையை விடுதலை சிறுத்தை கட்சியினர் கையாண்டு வருவதால் திட்டக்குடியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior