உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 26, 2010

விபத்து: 2 பெண்கள் சாவு

கடலூர்:​ 
 
                            கடலூரில் திங்கள்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்து திரும்பிய மினி லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 2 பெண்கள் இறந்தனர்.​ 60 பேர் காயம் அடைந்தனர். தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ​(இந்தியக் கம்யூனிஸ்ட் ஆதரவு)​ கடலூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஸ்ரீ முஷ்ணத்தை அடுத்த வடக்குப் பாளையத்தில் இருந்து வந்திருந்தவர்கள்,​​ மினி லாரி ஒன்றில் ஊர் திரும்பினர்.​ மினி லாரி குள்ளஞ்சாவடியை ​ அடுத்த பெத்தநாயக்கன் குப்பம் அருகே சென்றுக் கொண்டு இருந்தபோது,​​ லாரியின் பின்பக்க டயர் வெடித்து விபத்துக்கு உள்ளானது. இதனால் அதில் பயணம் செய்த சின்னப்பனின் மனைவி அற்புதமேரி ​(40),​ ராயர்பிள்ளையின் மனைவி இருதயமேரி ​(49) ஆகியோர் பலத்தக் காயம் அடைந்தனர்.​ கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவரும் இறந்தனர்.÷காயமடைந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ​(பொறுப்பு)​ எஸ்.நடராஜன்,​​ அய்யப்பன் எம்எல்ஏ,​​ நகராட்சி துணைத் தலைவர் தாமரைச் செல்வன்,​​ இந்தியக் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் டி.மணிவாசகம்,​​ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட மாநிலக் குழு உறுப்பினர் செ.தனசேகரன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.

Read more »

மொழிப்போர் தியாகிகள் தினம்

சிதம்பரம்:​ 

                     சிதம்பரத்தில் மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் சார்பில் மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

                       திமுக:​​ நகர திமுக சார்​பில் காந்தி சிலையி​லிருந்து ஊர்வலமாகச் சென்று ​ அண்ணாமலை நகரில் உள்ள ராஜேந்திரன் சிலையை அடைந்தனர்.​ அங்கு நகரச் செயலர் கே.ஆர்.செந்தில்குமார் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். இந் நிகழ்ச்சியில் பொதுக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.திருநாவுக்கரசு,​​ மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் த.ஜேம்ஸ் விஜயராகவன்,​​ நகர இளைஞரணி அமைப்பாளர் அப்புசந்திரசேகரன்,​​ குமராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் இரா.மாமல்லன் மறறும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.÷அதிமுக:​​ நகர அதி​முக சார்​பில் கீழ​வீதி மாவட்ட கட்சி அலு​வ​லகத்திலிருந்து நகரச் செயலர் தோப்பு கே.சுந்தர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக அண்ணாமலை நகர் ராஜேந்திரன் சிலையை அடைந்தனர்.÷அங்கு ராஜேந்திரன் சிலைக்கு மாநில எம்ஜிஆர் இளைஞரணி செயலர் எம்.ஏ.கே.முகில்,​​ மாவட்டச் செயலர் ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ,​​ செல்விராமஜெயம் எம்எல்ஏ,​​ மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் சொ.ஜவகர்,​​ முன்னாள் நகர் மன்றத் தலைவர் எம்.எஸ்.என்.குமார்,​​ மாவட்ட ஜெ.​ பேரவை செயலர் வி.கே.மாரிமுத்து உள்ளிட்டோர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். மதிமுக:​​ மறு​ம​லர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நகர மதிமுக அலுவலத்திலிருந்து நகரச் செயலர் எல்.சீனுவாசன் ஊர்வலமாக புறப்பட்டு ராஜேந்திரன் சிலையை அடைந்தனர்.

                      மாவட்ட அவைத்தலைவர் கு.பெருமாள்,​​ குமராட்சி ஒன்றியச் செயலர் பா.ராசாராமன்.​ சிவ.திருநாவுக்கரசு,​​ சி.ராஜூ உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.​ மதிமுக மாணவரணி சார்பில் மாணவரணி செயலாளர் தி.லோகசுப்பிரமணியன் தலைமையில் ஊர்வலமாக சென்றனர்.÷மதிமுக மாநில ஆசிரியர் மன்றத் தலைவர் முனைவர் மு.பக்கிரிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

Read more »

பண்ருட்டி மோதல்​ போலீஸ் மீது விடு​த​லைச் சிறுத்தைகள் புகார்

கடலூர்:

                  பண்ருட்டி திருவதிகை செட்டிப்பட்டறை காலனியில் நடந்த மோதல் தொடர்பாக,​​ போலீஸôர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக,​​ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் தெரிவித்தனர். கடந்த 17-ம் தேதி ஒரு பெண்ணைக் கேலி செய்தது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.​ மோதலைத் தடுக்க போலீஸôர் வந்தனர். இதில் இரு போலீஸ் காவலர் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர்.​ இது தொடர்பாக பண்ருட்டி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து சிலரைக் கைது செய்து உள்ளனர்.இப்பிரச்னை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலர் சு.திருமாறன்,​​ நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் கெய்க்வாட் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் திங்கள்கிழமை கடலூரில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பது:÷செட்டிப்பட்டறைக் காலனியில் 17-ம் தேதி நடந்த மோதலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மிக அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.​ போலீஸôர் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்து,​​ சிலரைக் கைது செய்து உள்ளனர்.  

                                 எனினும் செட்டிப்பட்டறைக் காலனியில் மட்டும் போலீஸôர் இரவு பகலாக ரோந்து சுற்றி வந்து பலரைத் தேடுகிறார்கள்.​ இதில் போலீஸôர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார்கள்.​ 20-ம் தேதி காவல்துறைகண்காணிப்பாளரைச் சந்தித்து மோதல் தொடர்பாக மேல்நடவடிக்கை வேண்டாம்,​​ இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரினோம்.÷ஆனால் அதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.​ மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க ஆர்.டி.ஓ.​ தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Read more »

வரதராஜப் பெருமாள் கோயில் நிலம் மீட்பு

பண்ருட்டி:

                   ​ பண்ருட்டி வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்டு செயல் அலுவலர் சிவஞானத்திடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டது.பண்ருட்டி காந்தி சாலையில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது.​  இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான நிலம் எல்.என்.புரத்தில் 2.77 ஏக்கர் உள்ளது.இந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆறுமுகம் குத்தகைக்கு பயிர் செய்து வந்தார்.​ நீண்ட நாள்களாக குத்தகை பாக்கி செலுத்தாததால் கடலூர் வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வருவாய் நீதிமன்ற நீதிபதி,​​ குத்தகை பாக்கி செலுத்தாத வழக்கறிஞர் ஆறுமுகத்திடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து வருவாய் நீதிமன்ற செயலக ஆய்வாளர் நிலத்தை கையகப்படுத்தி,​​ ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில் செயல் அலுவலர் சிவஞானத்திடம் அண்மையில் ஒப்படைத்தார்.கையப்படுத்தப்பட்ட நிலத்தை வருவாய்த் துறை நில அளவர்கள் சனிக்கிழமை அளவீடு செய்தனர்.

Read more »

உயிர்காக்கும் உயர் சிகிச்சை புகைப்படம் எடுக்கும் பணி

விருத்தாசலம,:

                     விருத்தாசலம் வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்,​​ உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான நிழற்படம் எடுக்கும் பணி,​​ சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. விருத்தாசலம் வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்,​​ உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான இரண்டாம் கட்ட நிழற்படம் எடுக்கும் பணி அனைத்து கிராமங்களிலும் நடைபெற்றது. இதில் நிழற்படம் எடுக்க தவறியவர்களுக்கு,​​ ஜனவரி 20-ம் தேதி முதல் 3 மாதங்கள் வரை விருத்தாசலம் சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில் நிழற்படம் எடுக்கும் பணி நடைபெற உள்ளது. இத் திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் நிழற்படம் எடுக்க வரும்போது,​​ ரேஷன் கார்டு,​​ விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு அட்டை மற்றும் தொழிலாளர் நலவாரிய அட்டை எடுத்து வர வேண்டுமெனவும்,​​ மேற்கண்ட அடையாள அட்டை இல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து ரூ.72 ஆயிரத்துக்கும் குறைவான வருமானச் சான்றைப் பெற்று திட்டத்தில் பயன்பெறுமாறு சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் விஜயலட்சுமி கேட்டுக் ​கொண்டுள்ளார்.

Read more »

கன்னித் திருவிழா

சிதம்பரம்:​ 

                            சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் கிராமத்தில் இளம் பெண்கள் பங்கேற்ற புதுமையான கன்னித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. வயதிற்கு வந்த இளம்பெண்கள் தங்களுக்கு திருமணமாகவில்லை என வெளிப்படுத்த இந்த கன்னித் திருவிழா ஆண்டு தோறும் தைமாதம் நடத்தப்பட்டு வருகிறது.​  திங்கள்கிழமை நடைபெற்ற இத்திருவிழாவையொட்டி ஊரில் உள்ள 12 தெருக்களிலும் களிமண்ணால் ஆன சாமி சிலைகள் செய்யப்பட்டு வைக்கப்பட்டு அச்சிலைகளை இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் வழிபட்டனர்.

                                    மேலும் கோலாட்டம்,​​ கும்மியாட்டம்,​​ சிலம்பாட்டம்,​​ சுருள் கத்தி விளையாடுதல் உள்ளிட்ட விளையாட்டுகளை இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் விளையாடினர்.​  விழாவின் இறுதியாக களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை இளைஞர்களும்,​​ இளம்பெண்களும் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்து வழிபட்டனர்.​  இது போன்று வழிபட்டால் திருமணம் நடக்கும் என ஊர் ஐதீகமாக உள்ளது.

Read more »

அதிமுக,​​ மதிமுக​ வெளி​நடப்பு

கடலூர்:​ 

                   கடலூரில் திங்கள்கிழமை நடந்த மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க.​ மற்றும் ம.தி.மு.க.​ உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கடலூர் மாவட்ட ஊராட்சியின் மொத்த உறுப்பினர்கள் 29.​ இவர்களில் தி.மு.க.​ 12,​ அ.தி.மு.க.​ 11,​ பா.ம.க.​ 5,​ ம.தி.மு.க.​ 1.​ மாவட்ட ஊராட்சித் தலைவராக இரா.சிலம்புச் செல்வி ​(பா.ம.க.)​ இருந்து வருகிறார். மாவட்ட ஊராட்சியின் சாதாரணக் கூட்டம் திஙகள்கிழமை சிலம்புச் செல்வி தலைமையில் நடந்தது.​ இக்கூட்டத்துக்கு,​​ வந்திருந்த அ.தி.மு.க.​ உறுப்பினர்கள் 11 பேர் ம.தி.மு.க.​ உறுப்பினர் ஒருவர் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு குறித்து உறுப்பினர்கள் கந்தசாமி ​(ம.தி.மு.க.)​ கருப்பன் ​(அ.தி.மு.க.)​ உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியது: மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களிடையே பாரபட்சம் காட்டப்படுகிறது.​ தி.மு.க.,​​ மற்றும் பா.ம.க.​ உறுப்பினர்களின் வார்டுகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது.​ அ.தி.மு.க.,​​ ம.தி.மு.க.​ உறுப்பினர்களின் வார்டுகளுக்கு மிகக் குறைந்த நிதி ஒதுக்கப்படுகிறது.

         இதனால் எங்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.​ இந்த நிதி ஆண்டுக்கு பிற்பட்டப் பகுதிகள் முன்னேற்றத் திட்டத்துக்கு மத்திய அரசால் கடலூர் மாவட்ட ஊராட்சிக்கு ரூ.​ 2 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் அ.தி.மு.க.,​​ மற்றும் ம.தி.மு.க.​ உறுப்பினர்கள் 12 பேரின் வார்டுகளுக்கு ரூ.​ 36 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.​ தி.மு.க.​ மற்றும் பா.ம.க.​ உறுப்பினர்கள் 17 பேரின் வார்டுகளுக்கு ரூ.​ 1.64 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.÷இவ்வாறு பாரபட்சம் காட்டப்படுவதால் எங்கள் வார்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.​ கடந்த 12 ஆண்டுகளில் மாவட்ட ஊராட்சி மூலம் ரூ.​ 7 கோடிக்கு வேலைகள் நடந்துள்ளன. இதிலும் அ.தி.மு.க.,​​ ம.தி.மு.க.​ உறுப்பினர்களின் வார்டுகளுக்கு மிகக் குறைவான நிதிதான் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.​ இந்த பாரபட்சமான நிலையைக் கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்து இருக்கிறோம்.÷தொடர்ந்து இதே நிலை நீடித்தால் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.​ 

இது குறித்து மாவட்ட ஊராட்சித் தலைவர் சிலம்புச்செல்வி​ கூறியது:

                         அவர்கள் வெளிநடப்பு செய்தாலும்,​​ கூட்டம் கோரம் இருந்ததால் தொடர்ந்து நடைபெற்றது.​ மன்ற உறுப்பினர்களிடையே நான் பாரபட்சம் காட்டவில்லை.​ அ.தி.மு.க.,​​ ம.தி.மு.க.​ உறுப்பினர்கள் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. அனைவருக்கும் அவர்கள் அளிக்கும் பணிகளுக்கு ஏற்பதான் நிதி ஒதுக்கப்படுகிறது என்றார் சிலம்புச் செல்வி.

Read more »

நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

சிதம்பரம்,​:

                            ​ சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் மாணவர்களின் சிறப்பு முகாம் சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது. இம்முகாமில் கிராமத்தை சுத்தம் செய்தல்,​​ மரக்கன்று நடுதல்,​​ வேலி அமைத்தல்,​​ இளைஞர்களுக்கு குழாய் பம்பு பழுது நீக்கும் பயிற்சி,​​ யோகா மற்றும் தியானப்பயிற்சி,​​ பள்ளி செல்லாத சிறுவர்கள் மற்றும் இடைநின்ற குழந்தைகள் ஆகியோரை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் குறித்த ஆலோசனை,​​ நீர் ஆதாரங்கள் கண்டறிதல்,​​ மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு,​​ மழை சேகரிப்புத் தொட்டி அமைத்தல்,​​ சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணுவது,​​ பொதுமருத்துவ முகாம்,​​ ரத்ததானம் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளை திட்ட அலுவலர் ஏ.ஜெயக்குமார் தலைமையில் மாணவர்கள் மேற்கொண்டனர்.

Read more »

'கோம்பிங் ஆபரேஷன்' 326 வழக்குகள் பதிவு

கடலூர் :

                கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு போலீசார் நடத்திய "கோம்பிங் ஆபரேஷனில்' 326 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பழைய குற்றவாளிகளை கைது செய்யவும், குற்றங்களை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., அஷ் வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் அதிகாலை வரை "கோம்பிங் ஆபரேஷன்' நடந்தது. டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்  இச் சோதனையில் ஈடுபட்டனர். இதில் வாரண்ட் நிலுவையில் உள்ள குற்றவாளிகள் 18பேர் , சந்தேக நபர்கள் 19, உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 80, குடிபோதையில் வாகனம் ஓட் டிய 60 பேர் உட்பட 326 பேர் மீது பல்வேறு வழக்கு கள் பதிவு செய்யப்பட்டது.

Read more »

பேரூராட்சி எதிரில் கழிவு நீர் தேக்கம் ஆழ்துளை கிணறு மாசுபடும் அபாயம்

நெல்லிக்குப்பம் :

                  மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் எதிரிலேயே கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் எதிரே பழமையான கரையான் குட்டை உள்ளது. இக்குட்டையை பல ஆண்டுகளாக தூர்வாராததால் அருகில் வசிக்கும் மக்கள் ஆக்ரமிப்பு செய்தனர். பேரூராட்சி பகுதியில் வெளியேறும் கழிவுநீர் இக்குட்டையில் சேருகிறது. குட்டையில் இருந்து தண்ணீர் வெளியேற வழியில்லாததால் கழிவுநீர் அங்கேயே தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தியிடமாக மாறியுள்ளது. குளம் முழுவதும் ஆகாயத்தாமரை செடி படர்ந்து மூடியுள்ளது. கொசு உற்பத்தி அதிகமாக இருப்பதால் அருகில் வசிக்கும் மக்களை பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. அருகிலேயே பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறு உள் ளது. குளத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அருகிலுள்ள குடிநீர் ஆழ்துளை கிணறும் மாசுபடும் அபாயம் உள்ளது.பேரூராட்சி அலுவலகத்துக்கு எதிரிலேயே அவலமான நிலையில் குப்பையில் கழிவுநீர் தேங்கியுள்ளது.குளத்தை தூர்வாரி கழிவுநீர் கலக்காமல் மழைநீர் தேங்கி நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

மணல் லாரிகளால் விபத்து அபாயம்

ராமநத்தம் :

              விருத்தாசலம்-ராமநத்தம் நெடுஞ் சாலையில் லாரிகளில் பாதுகாப்பற்ற நிலையில் மணல் ஏற்றிச் செல்வதால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் சன்னாசி நல்லூர் குவாரியில் மணல் ஏற்றி வரும் லாரிகள் நெய்வாசல் கிராமம் வழியே சேலம், ஓமலூர், ஆத்தூர், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றன.மணல் ஏற்றி வரும் லாரிகள் மணலை மூடாமல் செல்வதால் காற்றில் மணல் பறக்கின்றது.  இதனால் மணல் லாரிகள் பின்னால் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள்  கண்களில் மணல் பட்டு நிலை தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர். நெய்வாசல் கிராமம் வழியே மணல் ஏற்றிக் கொண்டு முழுமையாக மூடாமல் வரும் லாரி டிரைவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

மருத்துவமனை ஊழியருக்கு டெங்கு காய்ச்சல் : பரங்கிப்பேட்டையில் கொசு மருந்து அடிக்கும் பணி

பரங்கிப்பேட்டை :

                        அரசு மருத்துவமனை ஊழியர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து பரங்கிப்பேட்டை முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை மருந்தாளுனர் அருள்பிரகாசம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அதையடுத்து பரங்கிப் பேட்டை பகுதியில் டெங்கு காய்ச்சல் மற்றும் கொசுவால் பரவும் காய்ச்சலை தடுப்பதற்காக பரங் கிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொசு மருந்து அடிக்க மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மீரா உத்தரவிட்டார். அதையடுத்து நேற்று முன்தினம் இரவு வாகனத்தில் பொருத்தப்பட்ட புகை தெளிப்பான் இயந்திரம் மூலம் புகை மருந்து அடிக்கப்பட்டது. இந்த பணியை பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் துவக்கி வைத்தார். மேலும் பரங்கிப் பேட்டை அரசு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் உள் நோயாளிகளுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளதா என பரிசோதிக்க அனைவருக்கும் ரத்தம் மாதிரி எடுத்து ஓசூர் ரத்த பரிசோதனை மையத் திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

Read more »

பஞ்சர் ஒட்டும் போராட்டம் இந்திய கம்யூ., முடிவு

திட்டக்குடி :

                      திட்டக்குடி தாலுகா சாலைகளை சீரமைக்க கோரி இந்திய கம்யூ., சார்பில் ஆடு, மாடு, கழுதையுடன் பஞ்சர் ஒட்டும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.  திட்டக்குடியில் இந் திய கம்யூ., வட்டக் குழு கிளை செயலாளர் கூட் டுக்கூட்டம் நடந்தது. காசிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி, சுப்ரமணியன், வட்ட செயலாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மணிவாசகம் விளக்கி பேசினார். கூட்டத்தில் தொடர்மழையால் திட்டக்குடி அனைத்து சாலைகளும் மிக மோசமான நிலையில் உள்ளது.  இதனை உடனடியாக சீரமைக்க கோரி வரும் 8ம் தேதி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பாக ஆடு, மாடு, கழுதையுடன் பஞ்சர் ஒட்டும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

Read more »

கொத்தமல்லி பயிர் விளைச்சல் அமோகம் : வேப்பூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி

சிறுபாக்கம் :

                       வேப்பூர் பகுதியில் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்ட மல்லி பயிர்கள் விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். வேப்பூர், பெரியநெசலூர், கண்டப்பங்குறிச்சி, ஆண்டிமரூர், கழுதூர், அரியநாச்சி, புலிகரம்பலூர், சிறுபாக்கம், மங்களூர், மலையனூர், சித் தேரி, வடபாதி, மாங் குளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களின் மானாவாரி நிலங்களில் மணிலா பயிரை அறுவடை செய்த பின் நிலத் தில் உள்ள ஈரப்பதம் மற் றும் பனிகாலத்தை கருத் தில் கொண்டு கொத்தமல்லி பயிரினை பயிர் செய்தனர். இதன் ஊடுபயிராகவும், மல்லி பயிரில் நோய் தாக்கத்தை கட்டுபடுத்தவும் நாட்டு துவரை விதைத்தனர். ஜனவரி முதல் வாரத் தில் பெய்த சாரல் மழையில் நல்ல விளைச்சல் கண்ட கொத்தமல்லி பயிர் தற்போது வெண்ணிற பூக்களுடன் காய்பிடிக்கும் தருணத்தில் அமோக விளைச்சல் கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஏக்கருக்கு 25 மூட்டைகள் அறுவடை செய்த விவசாயிகள், நாற் பது கிலோ கொண்ட ஒரு மூட்டையை இரண் டாயிரம் ரூபாயிற்கு விற்பனை செய்தனர்.

                     இந்தாண்டு ஏக்கருக்கு 30 மூட்டைகளுக்கு மேல் கிடைக்கும் எனவும், சென்ற ஆண்டை விட மல்லி காய்கள் திடமாக இருப்பதால் மூட்டை மல்லி மூவாயிரம் முதல் நான்காயிரம் வரை விலை போகும் என்கின்றனர்.

Read more »

வரிஞ்சிப்பாக்கம் மலட்டாறு பாலம் கட்டுமான பணி துவக்கம்

பண்ருட்டி :

                             பண்ருட்டி அடுத்த வரிஞ்சிப்பாக் கம் மலட்டாறு பாலம் கட்டும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

                               விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அணைக்கட்டில் இருந்து மலட்டாற்றை ஜீவநிதி மலட்டாறு நிலத்தடி நீர்மேம்பாட்டு எழுச்சிகூடல் அமைப்பு அரசின் ஒத்துழைப்பு  மற்றும் நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி., பாரி நிறுவனத்தின் பங்களிப்புடன்  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கட்டமுத்துப்பாளையம் வரை 43 .கி.மீ.,  வரை தூர்வாரினர். இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் ஆற்றில் செல்லும் போது ஆற்றை கடக்க முடியாமல் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதில் விழுப்புரம் மாவட்டம் தனியாலம்பட்டு, காரப்பட்டு, சேமங்களம் பகுதியில் இரண்டு ஆண்டிற்கு முன் பாலம் கட்டப்பட்டது.கடலூர் மாவட்டத்தில் ரெட்டிகுப்பம், திருத்துறையூர், கரும்பூர், வரிஞ்சிப்பாக்கம், கட்டமுத்துப்பாளையம்  ஆகிய பகுதியில் மலட்டாறு பாலம் கட்டப்படாமல்  ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்படும் போது  அதனை சுற்றியுள்ள 50 கிராமமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதற்கு தீர்வுகாண  நெல்லிக் குப்பம் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன், கலெக்டர், மத்திய, மாநில  அமைச்சர்களை நேரில் அழைத்து வந்து பாலம் கட்டுவதற்கு  கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து  மலட்டாற்றில் முதற்கட்டமாக வரிஞ்சிபாக்கம் ஊராட்சி பகுதியில் ஒப்படைக்கப்பட்ட ஒருங்கிணைந்த வருவாய் திட்டத்தில் 5 லட்சத்து 89ஆயிரம் செலவில் பாலம் கட்டும் பணி கடந்த மாதம் துவங்கியது. சில நாட்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால், பாலம் கட்டுமான நிறுத்தப்பட்டது. தற்போது மழை விட்டு வெயில் காய்ந்துவருவதாக கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பாலம் கட்டுவதற்காக பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

Read more »

நீச்சல்குள பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

கடலூர் :

                                    தமிழ்நாடு அரசு நீச்சல் குள பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் கடலூர் டவுன்ஹாலில் நடந்தது. மாநில தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ரமேஷ் வரவேற்றார். அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். சத்துணவு பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சீனுவாசன், ஜாஸ்மின் மாநில தலைவர் சிங்காரம், நீச்சல் குள பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் ராமகிருஷ்ணன்,  துணைத் தலைவர் குமரேசன், இணை செயலாளர் கலைவாணன், சரவணன், ராஜாமணி, நல்லதம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வரும் உயிர் காப்பாளர்கள், பம்பு ஆபரேட்டர், தோட்ட பராமரிப்பாளர் மற்றும் துப்புரவாளர் ஆகிய பணிகளில் ஈடுபடும் 150 நீச்சல் குள பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு மற்றும் குடும்ப நல திட்டத்திலும் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் ஊர்வலம்

சிதம்பரம் : 

            மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள தியாகி ராஜேந்திரன் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர்.

                        தி.மு.க.,: நகர செயலாளர் செந் தில்குமார் தலைமையில் பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று அண்ணாமலைநகர் ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. ஊர்வலத்தில் ஒன்றிய செயலாளர் மாமல்லன், பொதுக் குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஜேம்ஸ் விஜயராகவன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். அதேபோன்று தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன் தலைமையில் மற்றொரு தரப்பினர் ஊர்வலமாக சென்று ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தனர். பா.ம.க.,: அண்ணாமலைநகர் நகர செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிட்டிபாபு தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தார். சொத்து பாதுகாப்பு குழு தேவதாஸ் படையாண்டவர், கவுன்சிலர் ரமேஷ், நகர செயலாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

                                     ம.தி.மு.க.,: நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஊர்வலமாக சென்று ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. மாவட்ட தலைவர் பெருமாள், ஒன்றிய செயலா ளர்கள் ராஜாராமன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். ம.தி.மு.க., மாணவரணி: மாணவரணி செயலாளர் லோகசுப்ரமணியன் தலைமையில் மாநில ஆசிரியர் மன்றத் தலைவர் பக்கிரிசாமி, ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தார். பேரூராட்சி செயலாளர் சீனிவாசன், பத்மநாபன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். அண்ணாமலைநகர்: பேரூராட்சி சேர்மன் கீதா, ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தார். துணைத் தலைவர் குஞ்சுபாண்டியன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பரங்கிப்பேட்டை: நகர தி.மு.க., சார்பில் பரங்கிப் பேட்டை ரெங்கப் பிள்ளை மண்டபத்தில் உள்ள ராஜேந்திரன் சமாதியில் பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் மாலை அணிவித்தார். நகர செயலாளர் பாண்டியன், மாவட்ட பிரதிநிதி காண்டீபன், கவுன்சிலர் காஜா கமால் பங்கேற்றனர். மூ.மு.க.,: மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பேரவையும் இணைந்து மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் ஊர்வலம் நடந்தது. மூவேந்தர் முன் னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண் டையார் தலைமை தாங்கி தியாகி ராஜேந் திரன் சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் பேரவை பொதுச்செயலாளர் வீரவன்னிய ராஜா, மூ.மு.க., மாநில இணைத் தலை வர் நடராஜன், தலைமை செயலாளர் செல்வராசு, வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் பேரவை மாவட்ட தலைவர் தனசேகரன், இணை செயலாளர் பாஸ்கர், அமைப்பு செயலா ளர் ராஜேந்திரன், தொழிற்சங்க நிர்வாகிகள் இளங்கோவன், கிருஷ்ண மூர்த்தி, மூ.மு.க மாணவரணி காசி மகேஸ்வரன் பங்கேற்றனர்.

Read more »

சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளியில் வைர விழா

சிதம்பரம் :

                   சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளியில்  வைர விழா நடந்தது. சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளி ரத்தினசாமி அரங்கில் நடந்த  இவ்விழாவிற்கு  பள்ளியின் செயலாளர்   பாலலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். நிர்வாக குழு பொருளாளர் ராமநாதன் முன்னிலை வகித்தார். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அருட் பிரகாசம் வரவேற்றார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவிசங்கர் ஆண்டறிக்கை வாசித்தார். உதவி தலைமை ஆசிரியர் சுவாமிநாதன் வரலாற்று நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில்  ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் விஸ்வநாதன், அரிமா சங்க நிர்வாகிகள் சேதுமாதவன், முருகப்பன், அண் ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் தியாகராஜன், சந்திரசேகர், தனசேகர், நடராஜன் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

Read more »

போலீஸ் - கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்கள் கலந்தாய்வு கூட்டம்

திட்டக்குடி :

                          திட்டக்குடி, ஆவினங்குடி பகுதிகளில் உள்ள கேபிள் "டிவி' ஆப்பரேட்டர்களுடன் போலீசார் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. திட்டக்குடி மாரிமுத்து, ராமச்சந்திரன், கொளஞ்சி முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வரவேற்றார். கூட்டத்திற்கு தலைமை தாங்கிய டி.எஸ்.பி., இளங்கோ பேசுகையில், கேபிள் "டிவி' ஆப்பரேட்டர்கள் முறையான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். புதுப்படங்கள், நள்ளிரவில் ஆபாச படம், பேஷன் சேனல் ஆகியவற்றை இன்று முதல் தவிர்க்க வேண்டும். பணியாளர்கள் நன்னடத்தையுடன் வாடிக்கையாளர்களிடம் பழக வேண்டும். உலகில் நடைபெறும் சாகசங்கள், ஆராய்ச்சியாளர்களின் வரலாறுகள், உலக நடப்புகளை டிவி மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது. டிவி நல்ல சிந்தனைகளை வளர்க்கும் கருவியாகும். சமுதாய விழிப்புணர்வு, சாலை விதிமுறைகள், திருட்டுகளை குறைக்கும் வழிமுறைகள் அடங்கிய விளம்பரங்களை இடைவேளைகளில் திரையிட வேண்டும். சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் ஆபாச படங்களை திரையிட்டால் சம்பந்தப்பட்ட ஆப்பரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என் றார். கூட்டத்தில் சப்- இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், ஜோதி, ஏட்டுகள்  ராஜேந் திரன், நாகராஜ், ராஜவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

ஆவட்டி கிராமத்தில் 'டிவி' வழங்கும் விழா

ராமநத்தம் :

                           ராமநத்தம் அடுத்த ஆவட்டி ஊராட்சியில் 771 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி' வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆதிமூலம், ஒன்றிய கவுன்சிலர் சந்தோஷம், மண்டல துணை தாசில்தார் பாலு முன்னிலை வகித்தனர். வி.ஏ.ஓ., பிச்சமுத்து வரவேற்றார். திட்டக்குடி தாசில்தார் கண்ணன் 771 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி'க்களை வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பெரியசாமி, மூக்கன், கொளஞ்சி, ராமசாமி, முத்துசாமி, தங்கராசு, அய்யாசாமி, வெள்ளையன், இளைஞர் மன்ற நிர்வாகிகள் சம்பத், சுந்தரவேலு, ஊராட்சி உதவியாளர் இளங்கோவன் பங்கேற்றனர்.

 சிறுபாக்கம்: 

                   ம.புதூர் ஊராட்சியில் நடந்த விழாவிற்கு ஊராட்சி தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர்கள் புஷ்பராஜ், ஜெகநாதன், மண்டல துணை தாசில்தார் பாலு முன்னிலை வகித்தார். வி.ஏ.ஓ., சுப்ரமணியன் வரவேற்றார். பயனாளிகள் 458 பேருக்கு தாசில்தார் கண்ணன் "டிவி'க்களை வழங்கினார்.

Read more »

சி.முட்லூர் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர், ஆசிரியர்கள் கலந்தாய்வு

கிள்ளை :

                                         சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் "பிளஸ் 2' மாணவர்கள்,பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந் தாய்வுக் கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் செங்குட் டுவன் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் ஜீவானந்தம் வரவேற்றார்.  உதவி தலைமை ஆசிரியர்கள் நடராஜன், சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் தவமந்திரி வெங்கடேசன், மாணவர்களுக்கு முக்கிய வினாவிடை புத்தகங்களை வழங்கினார். தேர்வு நேரத்தில் மாணவர்கள்  கடை பிடிக்க வேண்டிய வழி முறைகள், உடல்நலம், மன நலம் குறித்து  ஆலோசனை வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் மோகன், விஜயலட்சுமி, சாந்தி, சுமதி, வேல்விழி, செல்வமாதவன் பாட வாரியாக ஆலோசனை வழங்கினர்.  மெல்ல கற்கும் மாணவர்கள் குறித்து  பெற்றோர் களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

Read more »

நேதாஜி பிறந்த நாள்

சிதம்பரம் :

                     சிதம்பரத்தில் தமிழ் தேசிய காங்., சார்பில் நேதாஜி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். இணை செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் காசிம்பாய் முன்னிலை வகித்தார். நேதாஜி படத்திற்கு கட்சி தலைவர் லோகநாதன் மாலை அணிவித்தார். மகளிரணி செயலாளர் ஷீலா, கண்ணன், வெங்கடேசன், ரவிரங்கன், மணிகண்டன் பங்கேற்றனர். நகர அமைப்பாளர் சங்கர் நன்றி கூறினார்.

Read more »

கவுன்சிலர்களுக்கு தெரியாமல் தீர்மானம் நிறைவேற்றம்

கடலூர் :

                          எங்களுக்கு தெரியாமல் தீர்மானங்கள் நிறைவேற் றப்படுவதாக கடலூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.கடலூர் ஒன்றியக் குழு கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் சாந்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் காசிராஜன், பி.டி.ஓ., க்கள் சீனிவாசன், பத்மநாபன் மற்றும் கவுன் சிலர்கள் பங்கேற்றனர். தே.மு.தி.க., குருநாதன் பேசுகையில், குமளங் குளம் ஊராட்சியில் போர் வெல்கள் அடிக்கடி பழுதாகிறது. மக்கள் குடிநீருக்கு அவதிபடுகின்றனர். சரிசெய்யவில்லை எனில் மக் களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனறார். இதற்கு, அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என சேர்மன் பதில் அளித்தார். மா.கம்யூ., தட்சணாமூர்த்தி பேசுகையில், கவுன்சிலர்களுக்கு தெரியாமலேயே தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. ஒன்றிய கட்டடம் கட்டும் பணி இதுவரை துவங்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை திறந்த வெளியில் நடத்த வேண்டும் என்றார். இதற்கு சேர்மன், புதிய கட் டடம் கட்ட ஊரக வளர்ச் சித்துறை சார்பில் ஒன் னரை கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளதால், மூன்று மாதங்களில் பணி துவங்கும் என்றார்.

                                தே.மு.தி.க.,  அய்யனார் பேசுகையில், திருவந்திபுரம்-ஓட்டேரி சாலையில் கல்வெர்ட்டுகள் அமைக்க இரண்டு பக்கமும் தோண்டப்பட்ட பள்ளங்கள் பணி முடிந்தும் மூடவில்லை. இதனால் அப்பகுதியில் ஆயிரம் ஏக்கரில் அறுவடை செய் யும் நெல்லை வெளியே கொண்டு வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர் என்றார். இதற்கு உடன் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். கூட்டத்தில் மழையில் இடிந்த ஒன்றிய அலுவலக கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டும் பணியை அரசு விரைவில் துவக்க வேண் டும். வெள்ளக்கரை குறவன்பாளையம் காலனியில் சிமென்ட் பைப் லைன், கல்வெர்ட் அமைக்க 40,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ராமாபுரம் ஊராட்சி வண்டிக் குப்பத்தில் சமத்துவபுரம் அமைய உள்ள இடத்தை சமப்படுத்தும் பணியை மேற்கொள்வது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

நேரடி நெல் கொள்முதல் நிலையம் சேத்தியாதோப்பில் திறக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு :

                   சேத்தியாதோப்பு பகுதியில் நேரடி நெல் கொள் முதல் நிலையங்களை விரைவாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

                        சிதம்பரம், காட்டுமன் னார்குடி தாலுகாவில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று கலெக்டர் அறிவித்தார். இப்பகுதியில் அறுவடை துவங்கி 15 நாட் களுக்கு மேலாகியும் பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. குறிப்பாக சேத்தியா தோப்பு குறுக்கு ரோடு, வீரமுடையாநத்தம் பகுதியில் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் அறுவடை நெல்லை தனியாரிடம் அவர்கள் நிர்ணயம் செய்யும் விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

                    மேலும் சேத்தியா தோப்பில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் பெயரளவிற்கு இயங்குவதாலும் மாவட்ட விற்பனை குழுவின் அலட்சியத்தாலும் விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பொருட்கள் கொண்டு வர அஞ்சுகின்றனர். இதனால் தனியார் நெல் மற்றும் தானிய விற்பனையாளர்களின் பிடியால் சிக்கி விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெ

Read more »

சொட்டு நீர் பாசன விவசாயிகள் அதிர்ச்சி! அரசின் தவறான தகவலால் வேதனை

நெல்லிக்குப்பம் :

                 தமிழக அரசின் தவறான தகவலால் சொட்டுநீர் பாசன விவசாயிகள் வேதனை அடைந்துள் ளனர். தமிழகம் முழுவதும் பல ஆண்டுகளுக்கு முன் பு ஏரி, குளங்கள் இல்லாத ஊர்களே இல்லை என்ற  நிலை இருந்தது. மழைக்காலங்களில் ஏரி, குளங்களில் சேரும் நீர் ஆண்டு முழுவதும் தேங்கி நிற்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். ஆழ் துளை கிணறுகளில் மின் மோட்டார் மூலம் விவசாயம் நல்ல முறையில் நடந்தது. நாளடைவில் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்வழிகளை விவசாயிகளும், மக்களும் ஆக்கிரமித்தனர். பல ஆயிரம் ஏரி, குளங்கள் காணாமல் போயின. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதித்தது. ஆற்றில் நடக் கும் மணல் கொள்ளையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. மின் பற்றாக்குறையால் விவசாயம் செய்வதை பலர் தவிர்த்து பிளாட் போட நிலங்களை விற்க துவங்கினர். மொத்த விவசாய நிலப்பரப்பில் 25 சதவீதம் மனைகளாகவும், தரிசு நிலங்களாகவும் மாறின. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், இலவசங்களால் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. கரும்பு போன்ற பயிர்களுக்கு நடவு முதல் அறுவடை வரை வேலை ஆட்கள் அதிகம் தேவை. தண்ணீர் பாய்ச்சுவது, உரம் வைப்பது போன்ற பணிகளும் மிகவும் சிரமம்.

                வழக்கமான இரண் டரை அடிக்கு பதிலாக ஐந்தடி இடைவெளியில் கரும்பு நட பரிந்துரை செய் தனர். அவ்வாறு நடவு செய்தால்  சிறிய டிராக்டர் மூலம் களை எடுத்தல், மண் அணைத்தல் பணிகளை செய்ய முடியும். இம்முறையையும் தண்ணீர் பாய்ச்சுவது, உரமிடுதல் சிரமமானது. இதை தவிர்க்க கரும்பு பயிரில் சொட்டுநீர் பாசனம் செய்ய பரிந்துரை செய்தனர். சொட்டுநீர் பாசன முறையில் கரும்பு நடவு செய்தால் இடைவெளியில் களை வளராது. உரமிடுதல் எளிது. தண்ணீர் பாய்ச்சுவதும் சுலபம். இயந்திரம் மூலம் அறுவடை செய்யலாம். இதன் நன்மைகள் கருதி சொட்டுநீர் அமைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டினர். ஒரு ஏக்கரில் சொட்டுநீர் முறை அமைக்க 43 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இதில் பில்டர் டேங்க், உர டாங்குகள் பொருத்தப்படும். கூடுதலான ஏக்கரில் அமைத்தால் இந்த டாங்குகள் செலவு குறையும். சொட்டுநீர் அமைக்க அதிகம் செலவாவதால் வேலை குறைவாக இருந் தாலும் அம்முறைக்கு செல்ல விவசாயிகள் தயங்கினர். அதனையொட்டி அரசு சொட்டுநீர் பாசனத்தை ஊக்குவித்திட ஐம்பதில் இருந்து 65 சதவீதமாக மானியத்தை உயர்த்தியது. விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சொட்டுநீர் கம்பெனிகளை அணுகியவுடன்தான் அதிர்ச்சியடைந்தனர்.

                    ஒரு ஏக்கரில் சொட்டுநீர் அமைக்கும் செலவில் 65 சதவீதம் அல்லது 14 ஆயிரத்து 500 ரூபாய் இதில் எது குறைவோ அத்தொகையே மானியமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அங்கீகரித்து சொட்டுநீர் கம்பெனி உதிரி பாகங்களுக்கு அரசே விலை நிர்ணயம் செய்கிறது. ஒரு ஏக்கருக்கு 43 ஆயிரம் செலவாகிறது. 65 சதவீதம் மானியம் என்றால் 28 ஆயிரம் ரூபாய் வருகிறது.

               அரசு தருவதோ 14 ஆயிரத்து 500 மட்டுமே. அரசு அறிவித்து 65 சதவீத மானியத்தை எந்த கட்டுபாடும் இல்லாமல் வழங்கினால் மட்டுமே விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க முடியும். தமிழக அரசு பரிசீலனை செய்து முறையாக 65 சதவீத மானியம் கிடைக்க வழி செய்தால் மட்டுமே அழிவின் விளிம்புக்கு சென்று கொண்டிருக்கும் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior