உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 28, 2012

என்.எல்.சி.க்கு தேசிய சுற்றுச்சூழல் விருது

நெய்வேலி:


      நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் சிறந்த சுற்றுச்சூழலைப் பராமரித்து மின்னுற்பத்தி செய்தமைக்காக மத்திய மின்சக்தி அமைச்சகம் தேசிய சுற்றுச்சூழல் விருது வழங்கி கௌரவித்துள்ளது.




   நெய்வேலியில் அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் மணிக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்சாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த அனல் மின் நிலைய வளாகத்தில் சுற்றுச்சூழலைப் பராமரிப்பதற்காக ஆயிரக்கணக்கில் மரங்களும், மலர்ச்செடிகளும் வளர்க்கப்பட்டு இயற்கை சூழலாக காட்சியளிக்கிறுது.


     மேலும் இந்த அனல்மின் நிலைய மின்னுற்பத்திக்கு தேவைப்படும் பழுப்பு நிலக்கரி எரிக்கப்பட்ட பின்னர், அதன் சாம்பலை மின்னணுக் கருவிகள் மூலம் சேகரித்து வெளியேற்றும் வசதி இந்த மின் நிலையத்தில் உள்ளது. இந்நிலையில் மத்திய மின்சக்தி ஆணைக் குழுவின் உயர் அதிகாரிகள் கடந்த மாதம் நெய்வேலி வந்து இந்த அனல்மின் நிலையத்தை மதிப்பீடு செய்தனர். தேசிய அளவில் சிறந்த சுற்றுச்சூழலைப் பராமரிக்கும் நிறுவனத்துக்கான வெள்ளிக் கேடய விருதுக்கு என்.எல்.சி. அனல்மின் நிலையத்தைப் பரிந்துரைத்தனர். இதைத் தொடர்ந்து இதற்கான விருது வழங்கும் விழா புதுதில்லியில் மார்ச் 22-ம் தேதி நடைபெற்றது. இதில் மத்திய மின்சக்தித் துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கலந்து கொண்டு சிறந்த சுற்றுச்சூழல் பராமரிப்புக்கான தேசிய விருதின் வெள்ளிக் கேடயத்தை என்.எல்.சி. ஏ.ஆர்.அன்சாரியிடம் வழங்கினார்.


Read more »

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனே தொடங்க கோரிக்கை

கடலூர்:

   அனைத்து பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், கடலூரில் தெருமுனைப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடந்தது.
 

    அடிக்கல் நாட்டப்பட்ட கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனே தொடங்க வேண்டும். நிதி ஒதுக்கப்பட்டும் தொடங்கப்படாமல் இருக்கும் கடலூர் புறவழிச் சாலை திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். 6 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கிடப்பில் போடப்பட்டு உள்ள சரவணன் நகர் இணைப்புச் சாலைத் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். 4 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நகர்வதால், மக்களுக்கு பல்வேறு இன்னல்களை தந்து வரும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை, விரைந்து முடிக்க வேண்டும். கடலூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க வேண்டும்.



       நெடிய போராட்டத்துக்குப் பின், தொடங்கப்பட்ட கடலூர் ரயில்வே சுரங்கப்பாதை பணி, புதிது புதிதாக காரணங்களைச் சொல்லி, தொடராமல் இருப்பதைக் கண்டித்தும் இந்த தெருமுனைப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. கடலூர் பஸ்நிலையம் அருகே தெருமுனைப் பிரசாரத்தை, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் எம்.சேகர் தொடங்கி வைத்தார். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன், இணை ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

     தெருமுனைப் பிரசாரம், திருப்பாப்புலியூர், கூத்தப்பாக்கம், போடிச் செட்டித் தெரு, முதுநகர், புதுப்பாளையம், மஞ்சக்குப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது. மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே பிரசாரத்தை, கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன் முடித்து வைத்துப் பேசினார்.
 

Read more »

கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையியல் கல்லூரியில் கல்லூரி தின விழா


கடலூர்:

         கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையியல் கல்லூரியில் கல்லூரி தின விழா நடந்தது.தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பேராசிரியை நிர்மலா வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரமாமணி ஆண்டறிக்கை வாசித்தார். முதன்மைச் செயல் அலுவலர் ஆனந்த், அறக்கட்டளை செயலர் விஜயகுமார் வாழ்த்திப் பேசினார்.சிறப்பு விருந்தினராக பார்த்தசாரதி, கல்லூரி அறங்காவலர் ஞானசவுந்திரி கல்வித்திறன், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு,சான்றிதழ் வழங்கினார். பேராசிரியை ரேணுகா நன்றி கூறினார்.





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior