உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 25, 2009

காங்​கி​ரஸ் தொழி​லா​ளர் சங்​கத் தலைவர் நிய​ம​னம்

சிதம் ​ப​ரம்,​ நவ.24: ​

கட​லூர் ​(தெற்கு)​ மாவட்ட காங்​கி​ரஸ் தொழி​லா​ளர் சங்​கத் தலை​வ​ராக சிதம்​ப​ரத்​தைச் சேர்ந்த எம்.ஜி.ராஜ​ரா​ஜன் நிய​மிக்​கப்​பட்​டுள்​ளார்.​ மத்​திய அமைச்​சர் ஜி.கே.வாசன் ஒப்​புத​லின் பேரில் ​ கட​லூர் மாவட்ட காங்​கி​ரஸ் முன்​னாள் தலை​வர் ஏ.ராதா​கி​ருஷ்​ணன் பரிந்​து​ரை​யின் பேரில் தமிழ்​நாடு காங்​கி​ரஸ் தொழி​லா​ளர் சங்க மாநி​லத் தலை​வர் என்.நஞ்​சப்​பன் நிய​ம​னம் செய்து உத்​த​ரவு பிறப்​பித்​துள்​ளார்.

Read more »

விதிமீறல் :​ 18 பள்ளி வாக​னங்​கள் சிக்​கின

கட ​லூர்,​ நவ.24: ​ ​ ​

கட​லூ​ரில் செவ்​வாய்க்கி​ழமை 2 மணி நேரம் அரசு அலு​வ​லர்​கள் மேற்​கொண்ட ஆய்​வில் வீதி​மீ​றல்​கள் காணப்​பட்ட 18 பள்ளி வாக​னங்​கள் சிக்​கின. அவற்​றுக்கு அப​ரா​தம் விதிக்​கப்​ப​டும் என்று அலு​வ​லர்​கள் தெரி​வித்​த​னர்.​ கட​லூர் அருகே திங்​கள்​கி​ழமை பள்ளி வேன் விபத்​தில் சிக்​கி​ய​தில் எல்.கே.ஜி. மாண​வர் ஒரு​வர் இறந்​தார். 47 மாணவ மாண​வி​யர் காயம் அடைந்​த​னர். இந்த வேனை போக்​கு​வ​ரத்து அலு​வ​லர்​கள் ஆய்வு செய்​த​தில்,​ 16 பேர் மட்​டும் பய​ணிக்க அனு​மதி உள்​ளது என்​றும் குழந்​தை​க​ளாக இருப்​ப​தால் 32 பேரை அனு​ம​திக்​க​லாம்,​ ஆனால் 48 பேர் பய​ணம் செய்​துள்​ள​னர். பளு தாங்​கா​ம​லேயே இந்த விபத்து ஏற்​பட்​டுள்​ளது ​ ​ என்று தெரி​ய​வந்​துள்​ளது. எனவே அனைத்​துப் பள்ளி,​ கல்​லூரி வாக​னங்​க​ளை​யும் ஆய்வு செய்​யு​மாறு மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் உத்​த​ர​விட்​டார். ​​

அதன்​படி கட​லூர் வட்​டா​ட​சி​யர் தட்​சி​ணா​மூர்த்தி,​ வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்து அலு​வ​லர் ஜெயக்​கு​மார்,​ போக்​கு​வ​ரத்து போலீஸ் ஆய்​வா​ளர் ராம​தாஸ் உள்​ளிட்ட அலு​வ​லர்​கள் இந்த ஆய்வை மேற்​கொண்​ட​னர். கட​லூர் டவுன்​ஹால் எதி​ரில் காலை 8 மணி முதல் 10 மணி வரை இந்த ஆய்வு மேற்​கொள்​ளப் பட்​டது. இதில் பள்ளி வாக​னங்​க​ளுக்​கான விதி​மு​றை​களை மீறிய 18 வாக​னங்​கள் சிக்​கின.​ அனைத்து வாக​னங்​க​ளி​லும் முதல் உத​விப்​பெட்டி இல்லை. 57 பேர் அம​ரும் வசதி கொண்ட பஸ்​ஸில் 100-க்கும் மேற்​பட்ட மாண​வர்​கள் ஏற்​றப்​பட்டு இருந்​த​னர்,​சில பஸ்​க​ளில் இரு​வர் அம​ரும் இருக்​கை​யில் 5 மாண​வர்​கள் பய​ணித்​த​னர். விதி​க​ளுக்கு மாறாக காற்று ஒலிப்​பான்​கள் பொருத்​தப்​பட்டு இருந்​தன.​ பிடி​பட்ட வாக​னங்​க​ளுக்கு நோட்​டீஸ் வழங்​கப்​பட்டு இருக்​கி​றது. விதி​மீ​றல்​க​ளுக்கு ஏற்ப பின்​னர் அப​ரா​தம் விதிக்​கப்​ப​டும் என்று அலு​வ​லர்​கள் தெரி​வித்​த​னர்.

Read more »

பொறுப்​பேற்பு

பண் ​ருட்டி,​ நவ. 24:

பண்​ருட்​டி​யின் புதிய போக்​கு​வ​ரத்து போலீஸ் சப்-​இன்ஸ்​பெக்​ட​ராக ஆர்.பச்​சை​யப்​பன் அண்​மை​யில் பொறுப்​பேற்​றுக் கொண்​டார்.​ ​ கட​லூர் ஆயு​தப்​படை பிரிவு சப்-​இன்ஸ்​பெக்​ட​ராக பணி​யாற்றி,​ தற்​போது போக்​கு​வ​ரத்து போலீஸ் சப்-​இன்ஸ்​பெக்​ட​ராக பதவி ஏற்​றுக்​கொண்ட அவர் நிரு​பர்​க​ளி​டம் கூறி​யது:​ பண்​ருட்டி நான்கு முனை சந்​திப்​பில் 24 மணி நேர​மும் போக்​கு​வ​ரத்து சரி செய்​யப்​ப​டும்.

பஸ்​கள் குறிப்​பிட்ட நிறுத்​தத்​தில் மட்​டும் தான் பய​ணி​களை ஏற்றி இறக்க வேண்​டும். கார்,​ ஆட்டோ உள்​ளிட்ட வாக​னங்​கள் அவர்​க​ளுக்​கென ஒதுக்​கப்​பட்ட இடத்​தில் நிறுத்த வேண்​டும். பஸ் நிலை​யத்​துக்​குள் பஸ்​ûஸத் தவிர வேறு எந்த வாக​ன​மும் உள்ளே செல்​லக் கூடாது மீறி​னால் தண்​டிக்​கப்​ப​டு​வர் என கூறி​னார்.

Read more »

நிர்​வா​கி​கள் தேர்வு

நெய்வேலி,​ நவ 24: ​

நெய்வேலி நாயு​டு​கள் மகா​ஜன சங்​கத்​துக்​குப் புதிய நிர்​வா​கி​கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ள​னர்.​ நெய்வேலி நாயுடு மகா​ஜன சங்க பொதுக் குழுக் கூட்​டம் அண்​மை​யில் நடை​பெற்​றது. கூட்​டத்​தில் சங்​கத்​தின் புதிய தலை​வ​ராக துரை.கம​லக்​கண்​ணன்,​ பொதுச் செய​ல​ராக வி.ஜீவன்​பாபு,​ பொரு​ளா​ள​ராக ராம​கி​ருஷ்​ணன் உள்​ளிட்​டோர் தேர்வு செய்​யப்​பட்​ட​னர்.​ துணைத் தலை​வர்​க​ளாக பி.ரவிக்​கு​மார்,​அழ​கர் நட​ரா​ஜன்,​ இணைச் செய​லர்​க​ளாக முத்​து​மணி,​ குரு​மூர்த்தி உள்​ளிட்​டோர் தேர்வு செய்​யப்​பட்​ட​னர்.​ கண்​ணன் வர​வேற்​றார். அழ​கர் நட​ரா​ஜன் ஆண்​ட​றிக்கை வாசித்​தார். பல்​வேறு தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.

Read more »

மார்க்​சிஸ்ட் ஆர்ப்​பாட்​டம்

சிதம் ​ப​ரம்,​ நவ.24:​

சிதம்​ப​ரத்தை அடுத்த கண்​ணங்​குடி ஊராட்சி,​ வேளப்​பாடி கிரா​மத்​தில் உள்ள ஆழ்​கு​ழாய் கிணறு வறண்டு போன​தால் புதிய ஆழ்​கு​ழாய் கிணறு அமைத்து குடி​நீர் வழங்​கக்​கோ​ரி​யும்,​ கண்​ணங்​குடி ஊராட்சி மன்​றத் தலை​வர் கே.ராஜ​சே​க​ரன் மீது போடப்​பட்​டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெறக்​கோ​ரி​யும் சிதம்​ப​ரத்​தில் மார்க்​சிஸ்ட் கட்சி சார்​பில் பேரணி,​ ஆர்ப்​பாட்​டம் செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்​றது.​ சிதம்​ப​ரம் கோட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கத்தி​லி​ருந்து பேரணி புறப்​பட்டு மேல​வீதி பெரி​யார்​சிலை அருகே முடி​வுற்​றது. பின்​னர் அங்கு ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. மார்க்​சிஸ்ட் ​ கட்சி மாவட்ட செயற்​குழு உறுப்​பி​னர் டி.ரவீந்​தி​ரன் தலைமை வகித்​தார். ஒன்​றி​யத் தலை​வர் பி.வாஞ்​சி​நா​தன் முன்​னிலை வகித்​தார்.

மாவட்​டச் செய​லா​ளர் டி.ஆறு​மு​கம்,​ சிதம்​ப​ரம் நக​ரச் செய​லா​ளர் ஆர்.ராமச்​சந்​தி​ரன்,​ ஒன்​றி​யச் செய​லா​ளர் டி.குண​சே​க​ரன்,​ பி.மாசி​லா​மணி உள்​ளிட்​டோர் உரை​யாற்​றி​னர். முன்​ன​தாக கோரிக்​கை​கள் அடங்​கிய மனுவை கோட்​டாட்​சி​யர் ஜி.ராம​லிங்​கத்​தி​டம் வழங்​கி​னர்.

Read more »

புற்​று​நோய் தடுப்பு நிதி திரட்​டிய மாண​வர்​கள்

சிதம் ​ப​ரம்,​ நவ. 24:

சிதம்​ப​ரம் தில்லை மெட்​ரிக் பள்ளி மாணவ,​ மாண​வி​யர்​கள் சக மாண​வர்​க​ளி​டம் நிதி வசூ​லித்து புற்​று​நோ​யால் பாதிக்​கப்​பட்​ட​வர்​க​ளுக்கு உதவ ரூ.16 ஆயி​ரம் தொகையை புற்​று​நோய் தடுப்பு அமைப்​புக்கு வழங்​கி​யுள்​ள​னர்.​ ​ அத்​தொ​கையை புற்​று​நோய் தடுப்பு அமைப்பு உத​வித் திட்ட அலு​வ​லர் சிவ​கா​ம​சுந்​த​ரி​யி​டம் பள்ளி மாண​வர்​கள் திங்​கள்​கி​ழமை நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் ஒப்​ப​டைத்​த​னர்,​ ​ நிகழ்ச்​சிக்கு ஆசி​ரி​யை​கள் கே.கிருஷ்​ண​வேணி,​ எம்.ரேவதி ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர். புற்​று​நோ​யால் பாதிக்​கப்​பட்​ட​வ​ருக்கு நன்​கொடை வசூல் செய்த பள்ளி மாணவ,​ மாண​வி​யர்​களை தாளா​ளர் இரா.செந்​தில்​கு​மார் பாராட்​டி​னார்.

Read more »

என்​எல்சி பள்​ளி​யில் தேசிய மாணவர் படை விழா

நெய்வேலி,​ நவ.24:

மந்​தா​ரக்​குப்​பம் என்​எல்சி மேநி​லைப்​பள்​ளி​யில் தேசிய மாண​வர் படை தின​விழா சனிக்​கி​ழமை கொண்​டா​டப்​பட்​டது.​ விழா​வுக்கு நெய்வேலி தன்​னார்​வத் தொண்டு நிறு​வ​னங்​கள் கூட்​ட​மைப்​பின் தலை​வர் ஆர்.பன்​னீர்​செல்​வம் தேசிய மாண​வர் படை​யின் சிறப்​பு​கள் குறித்து விளக்​கி​னார்.​ ​ நெய்வேலி நியூ​லைட் சாரி​ட​புள் அறக்​கட்​டளை நிர்​வாகி சாகா​ய​ராஜ் கலந்​து​கொண் டார். பள்​ளி​யின் என்​சிசி அலு​வ​லர் கே.என்.முரு​கப்​பன் என்​சிசி தின​வி​ழாவை முன்​னிட்டு,​ பெண் கொடு​மைக்கு எதி​ரான உறு​தி​மொ​ழியை வாசிக்க அனை​வ​ரும் உறு​தி​மொழி எடுத்​துக் கொண்​ட​னர்.​ ​ நிகழ்ச்​சிக்கு பள்ளி உடற்​கல்வி இயக்​கு​நர் அசோ​கன் மற்​றும் செஞ்​சி​லு​வைச் சங்க உறுப்​பி​னர் லட்​சு​மி​நா​ரா​ய​ணன் ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர்.

Read more »

நில அளவை முகாம் இன்று தொடக்கம்

பண்ருட்டி, நவ.24:

பண்ருட்டி குறு வட்டத்தில் நவம்பர் 24-ம் தேதி தொடங்கி டிசம்பர் 21-ம் தேதி வரை நில அளவை முகாம் நடைபெறுகிறது. பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை பிரிவில் பட்டா மாறுதல், புல எல்லை அளந்தல் போன்ற இனங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை விரைந்து தீர்வு செய்ய வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பண்ருட்டி குறு வட்டத்தை சேர்ந்த மருங்கூரில் நவம்பர் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையிலும், காடாம்புலியூரில் டிசம்பர் 1 முதல் 7-ம் தேதி வரையிலும், பண்ருட்டி.யில் 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையிலும், நெல்லிக்குப்பத்தில் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையிலும் தலா ஒரு வாரம் நில அளவை அலுவலர்கள் முகாமிட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விசாரணை செய்ய உள்ளனர். எனவே மேற்கண்ட குறுவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நில அளவை முகாமை பயன்படுத்திக் கொள்ளும்படி அறிவுருத்தப்படுகிறார்கள்.

Read more »

படகு கவிழ்ந்து மீனவர் சாவு

கடலூர், நவ.24:

கடலூர் அருகே செவ்வாய்க்கிழமை படகு கவிழ்ந்து மீனவர் நாகமுத்து (48) இறந்தார். தாழங்குடாவைச் சேர்ந்த நாகமுத்து சக மீனவர்கள் மணி, மகேந்திரன், லட்சுமணன், கோபால்சாமி ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு கடலில் மீன்பிடிக்கச் சென்றார். மீன் பிடித்துவிóட்டு கரை திரும்புகையில் அலைகளில் சிக்கினர். படகு கவிழ்ந்ததில் நாகமுத்து வலையில் சிக்கிக் கொண்டார். வெளியே வரமுடியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்தார். உடன் இருந்தவர்கள் அவரது உடலை கரைக்குக் கொண்டு வந்தனர். ரெட்டிச்சாவடி போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

பட்டா மாற்றம் சிறப்பு முகாம் தொடக்கம்

கடலூர், நவ.24:

கடலூர் தாலுகாவில் பட்டா மாறுதல் மற்றும் புலம் எல்லை அளத்தல் தொடர்பாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது, விரைவாகத் தீர்வு காண சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

டிசம்பர் 28-ம் தேதி வரை இந்த முகாம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கடலூர் வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் உத்தரவின் பேரில் இந்த சிறப்பு முகாம் தொடங்கப்பட்டு இருக்கிறது. கடலூர் வட்டாட்சியர் அலுவலக நில அளவைப் பிரிவில், நிலுவையில் உள்ள பட்டா மாற்றம் மற்றும் புலம் எல்லை அளக்கக் கோரிய மனுக்களை முடிக்க இந்தச் சிறப்பு முகாம் 28-12-2009 வரை நடைபெறும். வரும் 30-11-2009 வரை ரெட்டிச்சாவடி குறுவட்டத்தில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் நில அளவர்கள் முகாமிட்டு, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளார்கள். மேற்படி தினங்களில் ரெட்டிச்சாவடி குறுவட்டத்தைச் சேர்ந்த, ஏற்கனவே மனு அளித்து உள்ளவர்கள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் தகுந்த ஆவணங்களுடன் ஆஜராகி, தங்கள் மனுக்கள் மீது நடடிக்கை எடுக்க ஒத்துழைத்துப் பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

சிதம்பர கோயில் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 27-ம் தேதி விசாரணை

சிதம்பரம், நவ.24:

சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கையக்கப்படுத்தியது குறித்து பொது தீட்சிதர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை வருகிற 27-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

நடராஜர் கோயிலை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி இந்து அறநிலையத்துறை கையக்கப்படுத்தியது. அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது தீட்சிதர்களால் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த 2 பேர் கொண்ட பெஞ்ச் கோயிலை அரசு ஏற்றது செல்லும் என்றும் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் பொதுதீட்சிதர்கள் சார்பில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வருகிற 27-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Read more »

டிசம்பரில் பாம்பன் பாலத்தில் முற்றுகைப் போராட்டம்

கடலூர், நவ.24:

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் டிசம்பரில் நடைபெற உள்ள முற்றுகைப் போராட்டத்தில் கடலூர் மாவட்ட மீனவர்கள் 10 ஆயிரம் பேர் பங்கேற்பர் என தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் கிளையினர் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டக் கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மீனவர்களின் வாழ்வுரிமையைப் பாதிக்கும் வகையில் மீன்பிடித் தொழில் ஒழுங்குமுறைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வநதுள்ளது. இச்சட்டத்தை அமல்படுத்தினால், மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். மீனவர்கள் மாற்றுத் தொழில்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே மத்திய அரசு இச்சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும். இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்களைக் கண்டித்தும், ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் மறியல் போராட்டம் நடத்த அப்பேரவையின் தலைவர் அன்பழகனார் தலைமையில் தமிழ்நாடு மீனவர் பேரவை திட்டமிட்டு உள்ளது. இந்த மறியல் போராட்டத்தில் கடலூர் மாவட்ட மீனவர்கள் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டு உள்ளது. மீனவர்களின் வாழ்வுரிமைப் பாதிக்கும் இச்சட்டத்துக்கு, தமிழக அரசியல் தலைவர்களும் திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பைத் தெரிவித்தமைக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் கே.சுப்புராயன், இளைஞர் பேரவைத் தலைவர் எஸ்.கஜேந்திரன், மாணவர் பேரவைத் தலைவர் கலையழகன், செயலர் முருகன், பொருளாளர் ரவிசங்கர், நகரத் தலைவர் பி.கோகிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

கூடுதலாக 5 உண்டியல்கள்

சிதம்பரம், நவ.24:

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேலும் 5 உண்டியல்கள் இந்து அறநிலையத் துறையினரால் வருகிற 27-ம் தேதி வைக்கப்பட்ட உள்ளது.

நடராஜர் கோயிலை உயர்நீதிமன்ற ஆணைப்படி இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்திய பின்னர் முதன் முதலாக பிப்ரவரி 5-ம் தேதி சித்சபை எதிரே உண்டியல் வைக்கப்பட்டது. அதன்பின்னர் ஜூலை.9-ம் தேதி ஆதிமூநலநாதர் சன்னதி, சிவகாமி அம்மன் சன்னதி, கொடிமரம் ஆகிய இடங்களில் மேலும் 3 உண்டியல்கள் வைக்கப்பட்டன. இதுவரை 10 மாதங்களில் 4 முறை உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூ.8,51,996 கிடைத்துள்ளது. இந் நிலையில் நடராஜர் கோயிலில் மேலும் பல்வேறு இடங்களில் 5 உண்டியல்கள் வருகிற 27-ம் தேதி வைக்கப்பட்டவுள்ளது என அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.வரும் 26-ல் பிரசாதக்கடை ஏலம் 3-ம் பிரகாரத்தில் கிழக்கு நுழைவுவாயில் மற்றும் மேற்கு நுழைவு வாயில் அருகே பிரசாதக் கடைகள், கிழக்கு நுழைவு வாயில் அருகில் தேங்காய் -பழக்கடை, மேற்கு நுழைவு வாயில் அருகே தேங்காய்-பழக்கடை ஆகியவற்றை 1-12-2009 முதல் 30-6-2010 வரை நடத்துவதற்கான ஏலம் வரும் 26-ம் தேதி காலை 12 மணிக்கு ஆலயத்தில் உள்ள செயல் அலுவலர் அலுவலகத்தில் இணை ஆணையர் ந.திருமகள் முன்னிலையில் நடைபெறுகிறது. கடந்த மாதம் ஏலம் விடப்பட்ட போது ஏலத் தொகை கூடுதலாக இருந்ததால் யாரும் ஏலம் கேட்காததால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது 2 வது முறையாக ஏலம் விடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் க.சிவக்குமார் செய்துள்ளார்.

Read more »

மழையால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் நகர சாலைகள் சீரமைக்கப்படுமா?

சிதம்பரம், நவ.24:

சிதம்பரம் நகரில் சமீபத்தில் பெய்த கனமழையில் 4 வீதிகளைத் தவிர அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. ஆனால் இதுநாள் வரை சாலைகள் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். புதிய பாதாள சாக்கடை விரிவாக்கத் திட்டப்பணி தொடங்கப்பட உள்ளதால் சாலைகள் போடப்படவில்லை எனக் காரணம் கூறும் சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் அந்த சாலைகளை தற்காலிகமாகவாவது சரி செய்யாலாம். கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் கடலூர் நகரச் சாலைகளை சீரமைக்க ஆய்வு மேற்கொண்டு குழு அமைத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதுபோல் சிதம்பரம் நகர சாலைகளை ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் தற்காலிகமாக சாலைகளில் உள்ள பள்ளங்களை அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நகரமன்ற உறுப்பினர் ஏ.ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்க கோரிக்கை:

சிதம்பரம்-அண்ணாமலைநகர் இடையே அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டு 10 மாதங்களுக்கு மேலாகிறது. ஆனால் மேம்பாலத்திற்கு மின்விளக்கு வசதி செய்யப்படவில்லை. மேலும் மேல்பாலத்தின் இருபகுதிகளில் வேகத்தடுப்பு மற்றும் ரவுண்டானா அமைக்கப்படாததால் மேம்பாலம் வழியாக செல்லும் அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவியர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே கடலூர் மாவட்ட ஆட்சியர் நேரடியாக பார்வையிட்டு மேம்பாலத்தில் மின்விளக்கு வசதியும், விபத்துகளை தடுக்க மேம்பாலத்தின் தொடக்கப்பகுதி, முடிவுப்பகுதி ஆகிய இருபுறமும் வேகத்தடுப்பு மற்றும் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக அதிகாரி மணிவாசகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior