சிதம்பரம், டிச. 14:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மைய பொறியியல் பிரிவு சார்பில் பாதுகாப்பு, உடல்நலன், சுற்றுச்சூழல் மற்றும் சக்தி சார்ந்த தலைப்புகளில் தேசிய அளவிலான கலந்தாய்வு கருத்தரங்கு பல்கலைக்கழக ஆம்டெக் ஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது.÷கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து மாணவர்களும், ஆசிரியர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் பங்கேற்றனர். 83 ஆய்வுக் கட்டுரைகள் மீது கலந்துரையாடல் நடைபெற்றது. துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், இக்கருத்தரங்கு இல்லத்துக்கு ஏற்ற தலைப்பில் உள்ளதாகவும், குடும்பத்தினருக்கு பயனுள்ளதாக விளங்கும் என்றும் தெரிவித்தார்.மூளை பலத்துக்கு இந்தியா÷தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் தலைமை வகித்துப் பேசுகையில், பண பலத்துக்கு அமெரிக்கா, மனித வளத்திற்கு சீனா, உடல் பலத்துக்கு ஆப்பிரிக்கா, ஆனால் மூளை பலத்துக்கு இந்தியாதான் உள்ளது. எனவே இக்கருத்தரங்கு உண்மைகள் சேர வேண்டியவர்களுக்கு செம்மையாக போய் சேர வேண்டும் எனக்கூறினார்.
பொறியியல் பிரிவு தலைவர் பி.கந்தபாபா வரவேற்றார். பிரபாகர் அறிமுக உரையாற்றினார். பொறியியல் புல முதல்வர் பி.பழனியப்பன் வாழ்த்துரை வழங்கிபேசுகையில், சமுதாயத்தில் பெண்கள் விழிப்புணர்வு, பாதுகாப்பு, உடல்நலன் சுற்றுச்சூழல் மற்றும் சக்தி சார்ந்த வளர்ச்சி ஒருங்கே இருக்க வேண்டும் எனக்கூறினார். ப திவாளர் எம்.ரத்தினசபாபதி நிறைவு உரையாற்றுகையில், பல்வேறு ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தையும், கோல் உற்பத்தியில் நம்நாடு எதிர்நோக்கியுள்ள எதிர்பார்ப்புகளையும், சவால்களையும், இப்புவி எதிர்நோக்கியுள்ள சுற்றுச்சூழல் ஆபத்துகளையும் அறிவியல் ஆர்வலர்கள் செய்ய வேண்டியவற்றையும் புள்ளி விவரங்களுடன் விளக்கினார்.÷அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.வி.வைத்தியநாதன் சிறப்புரையாற்றினார். கே.சீனிவாசன் நன்றி கூறினார். விழாவில் பிஜிஆர் எனர்ஜி சிஸ்டம்ஸ் லிமிடெட் தலைவர் முரளி, ஆசியன் பெயிண்ட்ஸ் தொழிற்சாலை மேலாளர் ராஜசேகர், செல்வக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Read more »