உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

Annamalai University to introduce tele-conferencing system soon

 
Annamalai University Vice-Chancellor



CUDDALORE: 

       Annamalai University will soon introduce tele-conferencing system in place of contact classes for select subjects under distance education mode, said Vice-Chancellor M. Ramanathan.

           He was addressing a press conference on the premises of the Directorate of Distance Education (DDE) of the university at Chidambaram near here on Wednesday. Mr. Ramanathan said that wide area network (WAN) system installed in the Chennai and Delhi study centres would be utilised for the teleconferencing purpose. The WAN was already in place in 10 study centres across the country, of which six were located in Tamil Nadu, and more centres would be brought under the system. In conformity with the motto of the Distance Education Council that distance education had seamless borders, the DEC was expanding its programmes to students of Uganda, Ethiopia and Indonesia from the coming academic year.

        The Vice-Chancellor said that the DDE had on its roll a total of 4.25 lakh students studying 525 distance education programmes. Seventeen new programmes, including M.Sc in building and real estate valuation, postgraduate diplomas in mobile computing and cyber security, and, diploma in bio-pesticides production technology would be introduced from this academic year. The programmes were designed to meet the requirements of job markets. The DDE had also entered into an agreement with 12 companies to utilise their infrastructure for various distance education programmes. Mr. Ramanathan also released the prospectus and applications for the distance education programmes on the occasion.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?

 
             பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மே மாதம் 2-வது வாரத்தில் வெளியிட தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.  பிளஸ் 2 மாணவர்களின் தேர்வுத் தாள் திருத்தும் பணி இன்னும் ஓரிரு நாளில் முடிவடைய உள்ளது. இதையடுத்து இந்த மாத இறுதிக்குள் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடையும்.மே மாதம் 10-ம் தேதி முதல் 15-ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நவரைப் பட்டம் நெல்லுக்கு மேலுரம்

 கடலூர்:

              நவரைப் பட்ட நெல் சாகுபடி செய்திருக்கும் விவசாயிகளுக்கு கீழ்காணும் ஆலோசனைகளை, கடலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ச.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ச.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

                 நவரைப்பட்ட நெல் பயிருக்கு மேலுரம் அவசியம் இடவேண்டும். குறுகியகால நெல் ரகங்களுக்கு மண் பரிசோதனை சிபாரிசுப்படி உரமிட வேண்டும். அல்லது வேளாண் துறை சிபாரிசுப்படி, ஏக்கருக்கு 50- 20- 20 கிலோ என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்து தரவல்ல ரசாயன உரமிட வேண்டும்.அடியுரமாக 25 சதவீதம் தழைச்சத்து, 100 சதவீதம் மணிச்சத்து, 50 சதவீதம் சாம்பல் சத்து இடவேண்டும். மீதம் உள்ள தழைச்சத்து 75 சதவீதம் சாம்பல் சத்து 50 சதவீதம் ஆகியவற்றை மேலுரமாக இடவேண்டும். நட்ட 15 நாளில் தூர்கட்டும் பருவத்தில் மேலுரமாக 10 கிலோ தழைச்சத்து தரவல்ல யூரியா உரம் 22 கிலோ இடவேண்டும். 2-வது மேலுரமாக நட்ட 30 நாளில் கதிர்முனை உருவாகும் பருவத்தில் 10 கிலோ தழைச் சத்துக்கு யூரியா 22 கிலோவும்,சாம்பல் சத்து 10 கிலோ தரவல்லபொட்டாஷ் உரம் 17 கிலோவும் இடவேண்டும்.3-வது மேலுரமாக நட்ட 45 நாளில் பூக்கும் பருவத்தில் 10 கிலோ தழைச்சத்து தரவல்ல யூரியா 22 கிலோ இடவேண்டும். மேலுரம் இடும்போது நிலத்தில் உள்ள நீரை வடித்து, போதுமான ஈரப்பதம் இருக்கும்போது உரமிட வேண்டும். மேலுரம் இட்ட 24 மணி நேரம் கழித்து நீர்பாய்ச்ச வேண்டும்.நவரை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சரியான தருணத்தில் மேலுரமிட்டு, கூடுதல் மகசூல் பெற்றுப் பயனடையக் கேட்டுக் கொள்கிறேன் என்று செய்திக் குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

அண்ணாமலைப் பல்கலை தொலைதூரக் கல்வியில் மேலும் 17 புதிய பாடங்கள் தொடக்கம்



சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற விண்ணப்ப விற்பனை தொடக்க விழாவில் மாணவிக்கு முதல் விண்ணப்பத்தை வழங்கினார் 

 சிதம்பரம்:

            சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் 4 லட்சத்து 25 ஆயிரம் பேர் பயிலுகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார். 

                அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக்கல்வி மைய 2010-11 ஆண்டு அனுமதி சேர்க்கைக்கான விண்ணப்ப விற்பனை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.  துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முதல் விண்ணப்பத்தை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சிக்கு தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் முன்னிலை வகித்தார். பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம், துணை கட்டுப்பாட்டு அதிகாரி தவமணி, மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் மற்றும் புல முதல்வர்கள் பங்கேற்றனர்.

பின்னர் துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தது: 

             தொலைதூரக்கல்வி மையம் முன்னேற்றப் பாதையில் 31-வது ஆண்டை அடியெடுத்து வைத்துள்ளது. தமிழ், இசை என்ற சொன்னாலே அதை வளர்த்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். இந்திய அளவில் ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிப்பதில் அண்ணாமலைப் பல்கலை 6-வது இடத்தில் உள்ளன. சமுதாய மாற்றத்துக்கு ஏற்றவாறும், வேலைவாய்ப்புக்கு ஏற்றவாறும் புதிய பாடத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.  தொலைதூரக் கல்வி மையம் மூலம் 525 பாடத் திட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 17 புதிய பாடத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன. சில குறிப்பிட்ட துறைகளில் 12 நிறுவனங்களுடன் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி பாடத் திட்டங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.  வெவ்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்கள் படிப்பு மையங்களில் தேவையான செய்திகளை தெரிந்து கொள்ள தமிழகத்தில் 6 படிப்பு மையங்களும், வெளி மாநிலங்களில் 4 படிப்பு மையங்களும் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து மையங்களும் நெட்வொர்க் மூலம் இணைக்கப்படும்.

               சென்னை, புதுதில்லி உள்ள இணைப்பை பயன்படுத்தி சில பாடத் திட்டங்களுக்கு நேர்முக வகுப்பு டெலிகான்பிரன்ஸ் மூலம் நடத்தப்படும். மாணவர்கள் சிரமத்தை குறைக்க மேலும் 23 மையங்களில் அனுமதி சேர்க்கை வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக்கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கும், அண்ணாமலைப் பல்கலைக்கழக பழைய மாணவர்களுக்கு மேலும் பட்டம் பெறவும் 50 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

                     உகாண்டா, எத்தியோப்பியா, இந்தோனேசியா நாடுகளில் தொலைதூரக்கல்வி மைய படிப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மையங்களை அதிகப்படுத்தி இந்தியா முழுவதும் 134 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்கலை வளாகத்தில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள், மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றார் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பிளாஸ்டிக் பைகள் அகற்றும் பணி

 நெய்வேலி:

               தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நெய்வேலி நகரில் பிளாஸ்டிக் பைகள் அகற்றும் முகாம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெற்றது. நெய்வேலி நகரில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த என்எல்சி நகர நிர்வாகம் தடைவிதித்தது. வணிக நிறுவனங்கள் பாலிதீன் பைகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியது. இந்நிலையில் நெய்வேலி நகரில் குப்பைகளோடு குப்பையாக கலந்துள்ள பாலிதீன் பைகளை அகற்ற என்.எல்.சி. நகர நிர்வாகம் முடிவு செய்து. அதன்படி பிளாஸ்டிக் தவிர்ப்பு இயக்கம் ஒன்றை உருவாக்கி, அந்த இயக்கத்தின் மூலம் தன்னார்வத் தொண்டு நிறுவன உதவியுடன் பாலிதீன் பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி செவ்வாய்க்கிழமை பாலிதீன் பைகள் அகற்றும் பணியினை என்எல்சி நிர்வாகத்துறை இயக்குநர் பி.பாபுராவ் தொடங்கி வைத்தார். இந்த பணியில் என்.எல்.சி. சுகாதாரத்துறை ஊழியர்கள், நெய்வேலி ஈஷா தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் மக்கள் சேவை இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஜவகர் அறிவியல் கல்லூரியின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை மாணவர்கள் என 400 பேர் களமிறங்கி ஈடுபட்டுள்ளனர்  என என்எல்சி நகர நிர்வாக முதன்மைப் பொது மேலாளர் சி.செந்தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

துணை முதல்வர் திறந்து வைத்த மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: வசதிகளின்றி மக்கள் தவிப்பு

 நடுவீரப்பட்டு:

           நடுவீரப்பட்டில் துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து மேம்படுத்தப் பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக அறிவித் தும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஊழியர்கள்  இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
 
                பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் 50 ஆண்டுகளுக்கு முன்  துவங்கப்பட்டது.  இங்கு நடுவீரப்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் வெள் ளக்கரை, காரைக்காடு, திருவந்திபுரம், மாதலம்பட்டு, தூக்கணாம்பாக்கம் ஆகிய பகுதியில் உள்ள சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத் தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து 50 லட்சம் ரூபாய் மதிப் பில் 30 படுக்கை வசதி கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை  கடந்த  செப்டம்பர் மாதம் காடாம்புலியூரில் நடந்த அரசு விழாவில் துணை முதல்வர் திறந்து வைத்து மேம்படுத்தப் பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக அறிவித்தார்.
 
                  இங்கு தற்போது  வெளி நோயாளிகள் 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு மாதத்திற்கு 30 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. ஆனால் இங்கு ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் இதர வசதிகள் இல்லை. மேலும் போதுமான ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை. மேலும், தனியாக ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் சிசு பராமரிப்பு வாகனத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆபத்தான நிலையில் உள்ளவர் களை கூட மேல் சிகிச் சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாகன வசதி இல்லாமல் உள்ளது.
 
                  துணை முதல்வர் ஸ்டாலின் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக அறிவித்தும் போதிய வசதிகளின்றி இன்னமும் 'சுகவீனமாக' இருப்பது வேதனையாக உள்ளது. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வேண்டிய மருத்துவ உபகரணங்கள் வழங்கிடவும் மற்றும் ஊழியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ஆலம்பாடி 'நண்டோடை' மதகு ஷட்டர் சீரமைக்கப்படுமா? : 7,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு

புவனகிரி:

                  புவனகிரி அருகே 7,000 ஏக்கர் பாசனம் பெறும் நண்டோடை மதகு உடைந்து விழும் நிலையில் இருப்பதுடன் ஷட்டரும் துருபிடித்து உடைந்துள்ளதால் பாசன நேரங்களில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். புவனகிரி அடுத்த கபு.மணவெளியிலிருந்து ஆலம்பாடிக் கிடையே 'நண்டோடை' அல்லது 'தளவார் ஓடை' எனப்படும் ஓடை உள்ளது. சேத்தியாத்தோப்பு அணைக் கட்டிலிருந்து தண்ணீர் மெயின் வாய்க்காலான முரட்டு வாய்க் காலிலிருந்து 'நண்டோடை' வழியாக சாத்தப்பாடி ஏரிக்கு செல்கிறது.
                  'நண்டோடை'யில் கட்டப்பட்ட மதகில் மழை மற்றும் வெள்ள காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு கிளை வாய்க்கால்கள் மூலம் வயலாமூர், பூவாலை, மணிக் கொல்லை, பு.மணவெளி, வடக்கு திட்டை, தெற்கு திட்டை, கிருஷ்ணாபுரம், தலைக்குளம், சாத்தப்பாடி  உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 7,000 ஏக் கர் விளை நிலங் கள் பாசன வசதி பெற்று விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
 
                   காலப்போக்கில் 'நண்டோடை மதகு' பராமரிப் பின்றி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதன் காரணமாக மதகில் உள்ள 7 ஷட்டர்களின் இரும்பு பிளேட்டுகள் துருப்பிடித்து செரித்து விழுந்துள்ளது. மேலும், பிளேட்டுகள் மற்றும் கம்பிகளை சமூக விரோதிகள் உடைத்து எடுத்துச் சென்று விட்டனர். இதனால் 'நண் டோடை' மதகு ஷட்டரில் பாசன வசதிக்காக திறந்து விடப்படும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ள காலங்களில் 'நண்டோடைக்கு' வரும் தண்ணீரை துருப்பிடித்து செரித்துப்போன 'ஷட்டர்' அருகே மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து கிடைக்கும் நீரைக் கொண்டு விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்துகின்றனர். இப்பகுதியில் எப்போதும் ஆண்டுக்கு மூன்று போகம் விளைச்சல் செய்த நிலை மாறி தற்போது தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஒரு போகம் கூட பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

லாரன்ஸ் ரோட்டில் 'சப் வே' அமைப்பதில் சிக்கல்! நிலம் ஆர்ஜிதம் செய்ய ரூ.3 கோடி தேவையாம்

 கடலூர் : 

           மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கடலூர் ரயில்வே சுரங்கபாதை அமைப்பதில் திடீர் சிக் கல் ஏற்பட்டுள்ளது. நில ஆர்ஜித பணிக்கு மூன்று கோடி ரூபாய் பணம் தேவைப்படுகிறது.
 
            கடலூர் நகரமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில் திருப்பாதிரிபுலியூரில் ரயில்வே சுரங்க பாதை அமைப்பது சம்மந்தமாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு சேர்மன் தங்கராசு தலைமை தாங்கினார். துணை சேர்மன் தாமரைச் செல்வன், கவுன்சிலர்கள்,  கமிஷனர் குமார் மற்றும் பொறியாளர் மனோகரசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
 
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
 
சேர்மன் தங்கராசு: 

              பாதாள சாக்கடை திட்டபணி 2010ல் முடிவடையும். நகராட்சியில் சிங்காரத்தோப்பு, தேவனாம் பட்டினம், அக்கரை கோரி உட்பட 12 வார்டுகள் கடலோர பகுதிகள் என்பதால் இங்கு பாதாள சாக்கடை திட்ட பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. திருப்பாதிரிபுலியூர் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க குறைந்த பட்சம் 20.5 மீட்டர் அகலம் தேவை படுகிறது. இதில் தற்போது 11 மீட்டர் சாலையே உள்ளது. மீதமுள்ள இடத்திற்கு இப் பகுதியில் நில ஆர்ஜிதம் செய்ய மூன்று கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ரயில்வே சுரங்கபாதை அமைப்பது சம்மந்தமாக கலெக்டர் தலைமையில் தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் முன் னிலையில் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும்.
 
கவுன்சிலர் கோவலன்: 

          சுரங்கப்பாதையில் எந்தெந்த வாகனங்கள் செல்லலாம். வாகனங்களை எங்கு நிறுத்துவது.
 
சேர்மன்: 

          இரண்டு சக்கர வாகனங்கள், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்லலாம். சுரங் கபாதையின் உயரம் 9 அடி என்பதால் பஸ், லாரி உள் ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாது.
 
சரளா: 

           செல்லங்குப் பம், சிவானந்தபுரம் பகுதியில் குப்பைகள் கொட்டப் பட்டு வாரப்படாமலும், சாக்கடை சுத்தம் செய்யப் படாமல் உள்ளது.
 
ராதாகிருஷ்ணன்: 

               கொசு மருந்து அடிப்பதற்கு மேலும் 11 மிஷின்கள் வாங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதற்கு பதிலாக இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அடிக்கப்படும் கொசு மருந்தை, 15 நாட்களுக்கு ஒரு முறை அடித் தாலே கொசுக்கள் ஒழிந்துவிடும். இதற்கு நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து வாங்கிக் கொடுத் தால் போதும். 17வது வார்டில் பாதாளசாக்கடை பணிக்கு பள்ளம் தோண்டப்பட்டு சரியாக முடிக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது.
 
கமலநாதன்: 

            பாஷியம் ரெட்டித் தெருவில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படாமல் உள்ளது. இது குறித்து வாட்டர் போர்டு அதிகாரிகளிடம் தெரிவித்தால் சரியான பதிலை கூறாமல் போனை துண்டித்து விடுகின்றனர். கவுன்சிலர்களுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது.
 
துணை சேர்மன் தாமரைச் செல்வன்: 

               கடலூர் பகுதியில் அரசியல் கட்சிகள் வைக்கும் பேனர்கள் போலீசாரிடம் அனுமதி பெற்றே வைக்க வேண்டியுள்ளது. இதற்கு பதில் நகராட்சியில் அனுமதி பெற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்க தீர்மானம் கொண்டுவர வேண்டும். நகராட்சி வருவாய் அதிகாரிகள் வரி வசூல் செய்யும் போது ஒரு வீட்டிற்கும், இன்னொரு வீட்டிற்கும் ஏற்றத்தாழ்வு உள்ளது.  இதனால் நகராட்சி அதிகாரிகள் வரி வசூல் செய்யும் போது கவுன்சிலர்களையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

உஷ்ணத்தை தணிக்கும் 'மட்டிக்கறி'


கிள்ளை : 

             கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் சிதம்பரம் அருகே வெள்ளாற்றுப் பகுதியில் கிடைக் கும் 'மட்டிக்கறிக்கு' மவுசு கூடியுள்ளது.
 
                கோடை காலம் துவங்கிய நிலையில் பலருக்கு அம்மை மற்றும் மஞ்சள் காமாலை என உஷ்ணத்தால் பல நோய்கள் ஏற்படுகிறது. இவற்றை தடுக்க வெள்ளரி பிஞ்சு, சப்போட்டா, ஆரஞ்சு, கமலா, தர்பூசணி, கிர்ணி உள்ளிட்ட பழவகைகளை நகரில் வசிப்போர் அதிகளவில் விரும்பி சாப்பிடுகின்றனர்.  கிராமப்பகுதி மக்கள் கடற்கரையோரம் கிடைக்கும் 'மட்டிக்கறியை' விரும்பி சாப்பிடுவதால் உடலுக்கு  குளிர்ச்சியும், ஆரோக் கியம் கிடைப்பதுடன், உஷ்ணத் தால் ஏற்படும் மஞ்சள் காமாலை மற்றும் அம்மை போன்ற நோய் கள் பெரும்பாலும் நெருங்குவதில்லை.
 
                  சிதம்பரம் அடுத்த கிள்ளை பகுதியில், முழுக்குத்துறை, சின்னவாய்க்கால், பில்லுமேடு, பொன்னந்திட்டு, மடுவங்கரை வெள்ளாறு பகுதியில் அதிக அளவில் கிடைக்கும் மட்டிக்கறியை சுற்றுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பல கி.மீ., தொலைவு சென்று கொண்டு வருகின்றனர். மட்டிக்கறியின் மருத்துவ குணத்தை உணர்ந்த கேரளா, நாகர்கோவில், திருநெல்வேலி பகுதியில் பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக பிச்சாவரத்திற்கு படகு சாவாரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
 
இதுகுறித்து ஆற்றுப்படுகையில் மட்டிக்கறி பிடித்தவர்கள் கூறுகையில், 
            
            'இப்பகுதியில் பால் மற்றும் வரி மட்டிகள்  அதிகம் கிடைக்கிறது. வரி மட்டிக் கறியின் தன்மை மிகவும் கடினமாக இருக்கும். இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் விரும்பி சாப்பிடுவதில்லை. அதனால் கிளிஞ்சலுக்காக மட்டும் பிடிக்கப்படும். தற்போது வரி மட்டிகள் அதிகளவில் கிடைப்பதில்லை. பால் மட்டிக்கறி மிகவும் மிருவதாக இருக் கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். பால் மட்டிக்கறி இப்பகுதியில் அதிகளவில் கிடைக்கிறது. இதை தண்ணீரில் வேக வைத்தால் வெள்ளை நிறத்தில் வரும் தண் ணீரை 50 மில்லி அளவிற்கு குடித் தால் மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல நோய் நெருங்காது' என்றனர்.
 
இது குறித்து அண்ணாமலை பல்கலைக் கழக கடல் வாழ் உயராய்வு மைய இயக்குனர் பாலசுப்ரமணியன் கூறுகையில்,

                மசல் என்றழைக்கப்படும் இந்த இனம் பல வகைகளில் உள்ளது. 'பெர்னா விர்டிஸ், பெர்னா இன்டிகா' வகையை சார்ந்தது. வெள்ளாற் றுப் படுகையில் நல்ல தண்ணீரும், உவர்ப்பு நீரும் கலக்கும் பகுதியில் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் கிடைக்கும். மீனை விட புரோட்டின் குறைவு; 20 சதவீதம் புரத சத்து உள்ளது. கடலோரப் பகுதியில் எளிமையாக கிடைக்கும் கடல் உணவு நோய் எதிர்ப்பு  என்பதை முன் னோர்கள் சொன்னதை கிராமப் புறத்தில் உள்ளவர்கள் நம்புகின்றனர். இந்த மட்டிக்கறி சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை' என்றார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

தொலைதூர கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விற்பனை

 சிதம்பரம் : 

               சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையத்தில் மாணவர்கள் சேர்க்கைக் கான விண்ணப்பம் விற்பனை நேற்று துவங்கியது.
 
             துணைவேந்தர் ராமநாதன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பதிவாளர் ரத்தினசபாபதி, தொலைதூர கல்வி இயக்குநர் நாகேஸ்வரராவ், தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி மீனாட்சி சுந்தரம், துறைத் தலைவர்கள் பழனியப்பன், ராஜேந்திரன், பாஸ்கரன், பாலசுப்ரமணியன், தேர்வுத்துறை அதிகாரி தவமணி, துணைவேந்தரின் நேர்முக செயலாளர் ராஜசேகர், மக்கள் தொடர்பு அதிகாரி செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
 
துணைவேந்தர் ராமநாதன் கூறுகையில், 

          'தொலைத் தூர கல்வி மையம் துவக்கி 31வது ஆண்டு ஆகிறது. இந்த ஆண்டு சேர்க்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத் திற்கும் அதிகமாக இருக்கும். சமுதாய மாற்றத்திற்கு ஏற்ப பாட திட் டங்களும் மாற்றி அமைத்து தருகிறோம். தொலைதூர கல்வியில் ஏற்கனவே உள்ள 525 பாட திட்டங்களுடன் புதிதாக 17 பாட திட்டங்கள் சேர்க்கப் பட்டுள்ளது.
 
          சில குறிப்பிட்ட துறைகளில் வேறு பல நிறுவனங்களுடன் கட்டமைப்பு வசதிகளை உபயோகப்படுத்தி 12 நிறுவனங்களுடன் ஒப்பந் தம் ஏற்பட்டுள்ளது. 'ஒய்ட் ஏரியா நெட் ஒர்க்' தமிழ்நாட்டில் 6 இடங்களிலும், வெளிமாநிலங்களில் 4 இடங்களில் இந்த இணைப்பை பயன்படுத்தி 'டெலி கான்பரன்ஸ்' மூலம் பாடம் நடத்த ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. மேலும் 23 மையங்களில்  உடனடி அட்மிஷன் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. தொலைதூர கல்வியில் இரண்டு பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு 50 சதவீத கட்டணம் தள்ளுபடி செய்யப் படுகிறது. ருவாண்டோ, எத்தியோப்பியா, இந்தினோஷியா ஆகிய நாடுகளிலும் தொலைதூர கல்வி பாடத்திட்டங்களை படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 'ஒய்ட் ஏரியா நெட்வொர்க்' 10 இடங்களில் இருந்து மற்ற இடங்களிலும் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தொலைதூர கல்வியில் 134 மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தோலைதூர கல்வியில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு துணைவேந்தர் ராமநாதன் கூறினார்.   

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மணல் திருட்டை தடுக்க கலெக்டருக்கு கோரிக்கை


சேத்தியாத்தோப்பு : 

         வீரமுடையாநத்தத்தில் மணல் திருட்டை தடுக்க கலெக்டருக்கு பா.ம.க., கோரிக்கை விடுத் துள்ளது.
 
இதுகுறித்து கடலூர் (தெ) மாவட்ட பா.ம.க., செயலாளர் சிட்டிபாபு கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: 

                   புவனகிரி ஒன்றியம் வீரமுடையாநத்தம் ஊராட்சியில் கடந்த ஒரு மாதமாக டிராக்டர்கள் மூலம் சில தனி நபர்கள் அரசின் அனுமதியின்றி மணல் எடுத்துச் செல் கின்றனர். இதுகுறித்து சிதம்பரம் வட்டாட்சியரிடம் பலமுறை முறையிட்டும் மணல் எடுப்பவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இவ்வாரியத்தின் மீது தனி கவனம் செலுத்தி அனுமதியின்றி மணல் எடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மருத்துவ முகாம்

 நடுவீரப்பட்டு : 

              நடுவீரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ முகாம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
 
               வட்டார மருத்துவ அலுவலர் ரூபாவதி தலைமை தாங்கினார். சுகாதார துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ஜனகராஜ் முன்னிலை வகித்தார். புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, மகளிர் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு சிகிச்சை ஆகிய 6 மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில் நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் உள்ள துணை சுகாதார நிலையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 45 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். இதில் 30 பேர் மேல்சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். முகாமில் நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் சசிகலா, சுரேஷ் குமார், புள்ளியியலாளர் கிருஷ்ணராஜ், சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

'டாஸ்மாக்' இடமாற்றம் செய்ய சமூக பாதுகாப்பு பேரவை கோரிக்கை

 சிதம்பரம் : 

             சிதம்பரம் கோவில் அருகே உள்ள 'டாஸ்மாக்' கடையை இடமாற்றம் செய்ய பிற்படுத்தப்பட்டோர் சமூக பாதுகாப்பு பேரவை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
 
இது குறித்து பேரவை தலைவர் திருநாவுக்கரசு  கலெக்டர் சீத்தாராமனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

                      சிதம்பரம் மாலைக் கட்டித் தெருவில் கோவில் அருகே அரசு 'டாஸ்மாக்' கடை உள்ளது.  இப்பகுதியில் கோவில் மற்றும் நகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இதனால் பக்தர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. 'குடி'பிரியர்கள் குடித்து விட்டு போக்குவரத்திற்கு இடையூறாக நின்று கொண்டும், கோவிலுக்கு செல்லும் பெண்களை கேலி செய்தும் வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெண்கள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள 'டாஸ்மாக்' கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டு கடந்தவர்களுக்கு உதவித்தொகை

 கடலூர் : 

           மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் 30 வரை முடிடையும் காலாண்டுக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: 

                  எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, பட்டப் படிப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வயது 45, மற்றவர்களுக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் வேலையில் இருப்பவர்களாக இருத்தல் கூடாது. ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்க கூடாது. ஆனால் அஞ்சல் வழி கல்வியில் பயில்வோர் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் படித்தவராக இருத்தல் அவசியம். ஆண்டு வருமானம் 50 ஆயிரத்திற்குள் இருத்தல் வேண்டும். கல்வி சான்றுகளின் அசல், வேலைவாய்ப்பக அசல் அட்டை நேரில் காண்பித்து விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.  விண்ணப்பித்த அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் 1 மணிவரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை பெறப் படும். இந்த காலாண்டுக்குரிய விண்ணப்பங்கள் திருப்பி செலுத்த இறுதி நாள் மே 31ம் தேதியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சிதம்பரம் கோ- ஆப்டெக்சில் கோடை விற்பனை கண்காட்சி


சிதம்பரம் : 

                  சிதம்பரம் கோ-ஆப்டெக்சில் கோடை கால விற்பனை கண்காட்சி நேற்று துவங்கியது.
 
            சிதம்பரம் மேலவீதியில் கோ-ஆப் டெக்ஸ் துணி விற்பனை நிலையத்தில் பண்டிகை மற்றும் கோடை காலங்களில் சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கோடை கால விற்பனை மற்றும் கண்காட்சி நேற்று துவங்கியது. அண்ணாமலை பல்கலைக்கழக பி.ஆர்.ஓ., செல்வம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
 
                  இந்த ஆண்டு கோடை காலத்திற் கென தோப்பூர், வனவாசி, கோயமுத்தூர், மதுரை, அருப்புக்கோட்டை போன்ற புகழ்மிக்க கைத்தறி சேலைகள், புதிய டிசைன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் சாமுத் திரிகா பட்டு சேலைகளும் இடம் பெற்றுள்ளது. அதே போன்று ஆண்களுக்கான காட்டன் ரெடிமேட் சட்டை புதிய டிசைன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  சிதம்பரம் கோ-ஆப்டெக்சின் இந்த ஆண்டு ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் விற்பனை இலக்கு வைக்கப் பட்டுள்ளது என வட்டார மேலாளர் கிருஷ்ணன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் விற்பனை நிலைய மேலாளர் தில்லை மதிவாணன், கவுரி கடலூர் மண்டல உற்பத்தி மேலாளர் ஜெயபால் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

விபத்து சிகிச்சை விழிப்புணர்வு முகாம்

 கடலூர் : 

                       கருணை விழிகள் அறக்கட்டளை, போக்குவரத்து காவல்துறை சார்பில் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சை விழிப்புணர்வு முகாம் கடலூர் வள்ளி விலாஸ் மருத்துவமனையில் நடந்தது. நிறுவன தலைவர் திருமுருகன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் கல்யாணி வீரராகவன் துவக்கி வைத்தார். கவுரி முருகன் குத்துவிளக்கேற்றினார். கடலூர் டி.எஸ்.பி., ஸ்டாலின், டாக்டர்கள் சண்முகம், கண்ணன் சிறப்புரையாற்றினர். தர்மதணிகைவேல் நன்றி கூறினார். 

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி ஆண்டு விழா

 கடலூர் : 

                  கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் மாணவியர் விடுதி திறப்பு விழா நடந்தது.
 
                கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி ஆண்டு விழா மற்றும் மாணவியர் விடுதி திறப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. பச்சையப்பன் அறக்கட்டளை தலைவர் ஜசரி கணேஷ் தலைமை தாங்கி  37.5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மாணவியர் விடுதியை திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் வள்ளி வரவேற்றார்.  சிறப்பு விருந்தினர் பச்சையப்பன் அறக்கட்டளை நிதி அறங்காவலர் வெற்றி அழகன், மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
 
                விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள் சிவசுப்ரமணியன், காட்டூர் சம்பத், சரவணன், பரமசிவம், சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில்  2008-2009ம் கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளிலும் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவிகள் கல்வி திறன் பரிசுகள் வழங்கப் பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மேல்புவனகிரி ஒன்றியத்தில் திருமண நினைவு திட்ட நிதி

 புவனகிரி : 

          மேல்புவனகிரி ஒன்றிய அலுவலகத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நினைவு திட்டத்தின் கீழ் 70 பயனாளிகளுக்கு  14 லட்சம் ரூபாய் வழங்கப் பட்டது.
 
              மேல்புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சமூக நலத்துறை மூலம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒன்றிய அலுவலகத்தில் காசோலை வழங் கப்பட்டது. 70 பயனாளிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் 14 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை சேர்மன் தனலட்சுமி கலைவாணன் வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர் செல்வராசு, விரிவாக்க அலுவலர் பூஷணம் மற்றும் ஊர்நல அலுவலர்கள் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடலூர் சில்வர் பீச்சில் கோடை விழா நடத்தப்படுமா?

 கடலூர் : 

               கடலூர் சில்வர் பீச்சில் இந்த ஆண்டு கோடை விழா நடத்தப்படுமா என பொது மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
 
                   கோடை காலத்தில் பள்ளி விடுமுறையின் போது மாணவர்கள் குதூகலிக்க பொழுது போக்கு அம்சங்களுக்கு அழைத்துச் சென்று காண்பிப்பது வழக்கம். வசதி படைத்தவர்கள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங் களுக்கு சென்று பொழுதை கழிப்பார்கள். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளூரிலேயே நடக்கும் விழாக்களை பார்த்து மகிழ்ச்சி அடைவர். இதற்காக அரசு ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். விழாவின் போது லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் அரசின் திட்டங்கள் யாவும் அரங்குகள் அமைத்து மக்களுக்கு விளக்கியும், பல்வேறு போட்டிகள் நடத்தி சிறுவர், பெண்களை ஊக்குவித்தும், கலைஞர்களுக்கு வாய்ப்பு அளித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
 
                 கடலூர் மாவட்டத்தில் நீண்ட சில்வர் பீச் அமைந்திருப்பது ஒரு பெரிய வரப்பிரசாதமாகும். கடலூர் நகர மக்களுக்கு வேறெந்த பொழுது போக்கு அம்சமும் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு ஆண்டும் இங்கு 5 நாட்கள் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கோடையின் போது லோக்சபா தேர்தல் நடைபெற்றதால் கோடை விழா நடத்த முடியாமல் போனது. இந்த ஆண்டு சில்வர் பீச்சில் கோடை விழா நடத்தப்படுமா? என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வடக்குத்து ஊராட்சி மன்ற செயல்பாடுகள் புகார் குறித்து இன்று விசாரணை

 கடலூர் : 

               குறிஞ்சிப்பாடி அருகே வடக்குத்து ஊராட்சி மன்ற செயல்பாடுகள் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை இன்று 22ம் தேதி நடக்கிறது.
 
                 குறிஞ்சிப்பாடி வட்டம், வடக்குத்து ஊராட்சி மன்றத்தால் ஊராட்சிப் பகுதிகளில் குடிநீர் இணைப்பு, வரைபடம் அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற் றதாக புகார் வரப்பட்டதன் பேரில், கடலூர் உதவி இயக்குனர் (தணிக்கை), தேசிய வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
                இக்குழு புகார் குறித்து பொதுமக்களிடம் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை வடக்குத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விசாரணை நடத்துகிறது. எனவே மேற்கண்ட பொருள் தொடர்பான புகார்களை பொது மக்கள் நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ மாலை 5 மணிக்குள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விசாரணை அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

எச்.ஐ.வி., உள்ளோர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வுக்கு மாஜி.,க்கள் எதிர்ப்பு

 கடலூர் :  

                 எச்.ஐ.வி., உள்ளோர் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கு முன்னாள் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
                       தமிழ்நாடு எச்.ஐ.வி., உள்ளோர் கூட்டமைப்பு கடலூர் புதுப்பாளையம் மெயின்ரோடில் உள்ள அலுவலகத்தில் இயங்கி வருகிறது. இதில் இச்சங்கத்தில் 90 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது இந்த அமைப்பில் 2,000க்கும் மேற்பட்டவர்கள் எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இந்த சங்கம் மூலம் எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவது, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. இச்சங்கத்திற்கு மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி வழங்குகிறது.
 
                நிதியுதவியை முறையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சேராமல் நிர்வாகிகள் பொறுப்பில் இருந்தவர் கள் கையாடல் செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக முன்னாள் தலைவர் தனபால் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதை தட்டிக்கேட்ட நிர்வாகிகளும் நீக்கப்பட்டனர். தற்போது தலைவராக ராஜேஸ்வரி, செயலாளராக ராஜேந்திரன், பொருளாளராக தனலட்சுமி நிர்வகித்து வருகின்றனர். நேற்று பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவதாக இருந்தது. இதையறிந்த முன்னாள் நிர்வாகிகள் வித்யானந்தன், உஷா, ரவி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் அலுவலகம் முன் திரண்டு கோஷமிட்டனர். 'எங்களுக்குத்தெரியாமல் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க கூடாது. நாங்கள் கடந்த 7 ஆண்டுகளாக இந்த அமைப்பில் உள்ளோம். ஊழல் நடந்ததை தட்டிக் கேட்டதால் வெளியேற்றப்பட்டோம்' என்றனர்.
 
இது குறித்து ராஜேந்திரன், செந்தில்குமார் கூறியது 
                    'அவர்கள் எங்கள் அமைப்பில் இருந்து  பிரிந்த தனி அமைப்பு துவங்க இருப்பதால் இங்கு பிரச்னை செய்கின்றனர். எனவே இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளோம்' என்றனர். நிதி உதவி வழங்கும் அரசுகள் முறையான விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

அங்கன்வாடி பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி

 கடலூர் : 

             அங்கன்வாடி பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி அண்ணாகிராமத்தில் நடந்தது.
 
                      கடலூர் வட்டம் கிராமப்புற குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக கட்டுப்பாட்டில் பணிபுரியும் 142 அங்கன்வாடி பணியாளர்களுக்கும் அண்ணாகிராமம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக கட்டுப்பாட்டில் பணிபுரியும் 18 பணியாளர்களுக்கும் 2 கட்டமாக 4 பிரிவுகளாக புத்தாக்க பயிற்சி நடந்தது. திட்ட அலுவலர் அன்பழகி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிர் வாழ்தல் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளவை, சமூக பாலின பாகுபாடு, ஆலோசனை வழங்கும் திறன், உணர்வு பூர்வமான அறிவு, ஆளுமை திறன், உணர்வு மேம்பாடு, பேரிடர் மேலாண்மை எதிர் கொள்ளுதல், குழந்தைகள் பராமரிப்புபோன்ற தலைப்புகளில் பயிற்சி நடத்தப் பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

அண்ணா விளையாட்டரங்கில் 3வது நீச்சல் பயிற்சி துவங்கியது

கடலூர் : 

            கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் கோடைகால மூன்றாவது நீச்சல் பயிற்சி முகாம் துவங்கியது.
 
          கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஆறு பிரிவுகளாக நடக்கிறது. 15 நாள் கொண்ட முதல் பயிற்சி முகாம் மார்ச் 17ம் தேதியும், இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் ஏப்ரல் 1ம் தேதியும் துவங்கி முடிவடைந்தன. மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் 20ம் தேதி துவங்கியது. பயிற்சி கட்டணம் 250 ரூபாய். பயிற்சிகள் காலை 7 முதல் 8 மணி வரையும், 8 முதல் 9 மணி வரையும், 9 முதல் 10 மணி வரையும், மாலை 3 முதல் 4 மணி வரையும், 4 முதல் 5 மணி வரையும், 5 முதல் 6 மணி வரையும் நடக்கிறது.  மேலும் காலை 6 முதல் 12 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரையும் பொது மக்கள் குளிப்பதற்கு கட்டணமாக ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பயிற்சியாளர் அருணா நீச்சல் பயிற்சி அளிக்கிறார். நான்காவது முகாம் மே மாதம் 1ம் தேதியும், ஐந்தாவது முகாம் 16ம் தேதியும், ஆறாவது முகாம் ஜூன் 1ம் தேதியும் நடக்கிறது.


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

எரியாத மின்விளக்குகள் சீரமைக்கப்படுமா?

 சிறுபாக்கம் : 

                       வேப்பூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம், சர்வீஸ் ரோடு பகுதிகளில் எரியாத மின் விளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேப்பூர் பஸ் நிலையம் முன்புறமாக செல்லும் சர்வீஸ் ரோட்டிலுள்ள சோடிய விளக்கு, மேம் பால விளக்குகள், பஸ் நிறுத்தத்தில் போடப்பட் டுள்ள மின் விளக்குகள் அமைக்கப்பட்ட நாள் முதல் எரிவதில்லை. மேலும் பஸ் நிலையம் முன்புறமுள்ள சாலையோர விளக்குகளும் எரியாததால் பஸ் பயணிகள், பெண்கள் அப்பகுதி வழியாக செல்ல அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்குகள் தொடர்ந்து எரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கால்வாய் நடுவில் மின் கம்பங்கள் சாக்கடை நீர் தேங்கும் அவலம்

 விருத்தாசலம் : 

                      எம்.ஆர்.கே., நகரில் மின் கம்பங்கள் இருப்பது தெரிந்தும் கால்வாய் கட்டப்பட்டுள்ள அவலம் நடந்துள்ளது. விருத்தாசலம் ஆலடிரோடு அருகில் எம்.ஆர். கே., நகர் உள்ளது. இதில் தாமரை குளம் தெருவில் மழைநீர் மற்றும் வீட்டு கழிவுநீர் வெளியேறுவதற்கு சாலை ஓரம் புதிதாக கால்வாய் அமைக்கப்பட் டது. அந்த கால்வாய்கள் தெரு ஓரம் இருந்த மின் கம்பங்களை தவிர்த்து ஒதுக்கி அமைக்காமல் கால்வாய் கட்டியுள்ளனர்.
 
                  இதனால் கால்வாய் வழியாக ஓடும் கழிவுநீர் முழுமையாக வடிந்து ஓடாமல் தேங்கும் நிலை உள்ளது. மழைக் காலங்களில் மழை தண்ணீர் கால் வாய் வழியாக ஓடும் போது நடுவில் இருக்கும் மின் கம்பங்களால் தடுக்கப்பட்டு கால்வாய் வழிந்து சாலையில் மழை நீர் ஓடும் நிலை உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்பட்ட  கால்வாயை கொஞ்சம் கூட யோசனையின்றி புத்திசாலித்தனமின்றி பயனற்ற முறையில் கட்டியிருக்கும் ஒப்பந்ததாரர்களையும், அதற்கு அனுமதி அளித்த அதிகாரிகளையும் நினைத்து அப்பகுதி மக்கள் சிரிப்பதா? அழுவதா என தெரியாத நிலையில் உள்ளனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ஆக்கிரமிப்பால் பயணிகள் நிற்க இடமில்லை : பண்ருட்டி பஸ் நிலையத்தின் அவலம்

பண்ருட்டி : 

                      பண்ருட்டி பஸ் நிலையத்தில்  கடலூர், விழுப்புரம் செல்லும் பயணிகள் நிற்பதற்கு இடம் இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
 
                    பண்ருட்டி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதார வசதி, பயணிகள் உட்காருவதற்கு இருக்கை வசதிகள் ஏதும் இல்லை.  தற்போது பயணிகள் காத்திருக்க அமைத்த நிழற்குடையில் பழ வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பயணிகள் உட்காரவும், நிற்கவும் இடமின்றி அவதியடைந்து வருகின்றனர்.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 10 லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படும் என அப்போதைய கமிஷனர் மதிவாணன் கவுன்சிலர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.ஆனால் அதன்பின்  நிழற்குடை அமைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும் பஸ்களும் அந்தந்த பஸ்சுக்குரிய இடத்தில் (கட்டைகளில்) நிற்காமல் பஸ் நிலையம்முழுவதும் ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சிறைக் கைதி ஓட்டம் காவலர் சஸ்பெண்ட்

 கடலூர் : 

                    உளுந்தூர்பேட்டை கிளைச் சிறையிலிருந்து சாராய வியாபாரி தப்பியது தொடர்பாக சிறை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
               உளுந்தூர்பேட்டை எலவனாசூர்கோட்டை அடுத்த எறையூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் மகன் மோயிஸ் (35). சாராய வியாபாரியான இவர் கடந்த 13ம் தேதி உளுந்தூர்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.  19ம் தேதி மாலை சிறையின் பின்பக்க சுவர் வழியாக தப்பியோடினார். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து தப்பியோடிய மோயிசை தேடி வருகின்றனர். இந்நிலையில் கிளை சிறையிலிருந்து தப்பியோடி சம்பவம் குறித்து கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆனந்த்  விசாரணை நடத்தி சிறை முதல் நிலை காவலர் சிவபிரகாசத்தை சஸ்பெண்ட்  செய்து உத்தரவிட்டார். மேலும் கிளைச் சிறை கண்காணிப்பாளர் குப்பன், முதல்நிலை தலைமை காவலர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மனித சங்கிலி போராட்டம்


கடலூர் : 

           சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
                 மாவட்ட தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ராமச்சந்திரன், ராஜேந்திரன், மல்லிகா, அரசன், மச்சேந்திரன், பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அன்பழகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாநில துணைத் தலைவர் ராமநாதன் சிறப்புரையாற்றினார். மனித சங்கிலியில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் காசிநாதன், மாவட்ட செயலா ளர் பாலசுப்ரமணியன், வங்கி ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மருதவாணன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஆதவன், அய்யாசாமி உள்பட பலர் பங்கேற்றனர். சத்துணவு திட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சிதம்பரம் நகரில் வைக்கப்பட்டிருந்த 'டிஜிட்டல்' பேனர்கள் அகற்றம்


சிதம்பரம் : 

             சிதம்பரம் நகர வீதிகளில் வைக்கப்பட்டிருந்த 'டிஜிட்டல்' பேனர்கள் நேற்று அகற்றப்பட்டன.
 
               சிதம்பரம் நகரில் பிரதான நான்கு வீதிகளிலும் அதிக அளவில் 'டிஜிட்டல்' பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் மாதக்கணக்கில் கூட சில 'டிஜிட்டல்' பேனர்கள் அகற்றப்படாமல் இருந்து வந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் நீண்ட நாட்களாக இருந்த 'டிஜிட்டல்' பேனர்களை அகற்ற போலீசார் முடிவு செய்தனர். அதன்படி சிதம்பரம் பகுதிகளில் நேற்று 'டிஜிட்டல்' பேனர்கள் அகற் றப்பட்டது. நகர இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணபிரான், சப் இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் போலீசார், நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் நகரின் நான்கு வீதிகளிலும் அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவனங்களின் சார்பில் வைக் கப்பட்டிருந்த 'டிஜிட்டல்'  பேனர்களை அகற்றினர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சிறு விடுப்பு போராட்டம்

 கடலூர் : 

                தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று ஒரு நாள் சிறு விடுப்பு போராட்டம் நடத்தினர்.
 
              ஊரக வளர்ச்சித் துறையில் மாவட்ட மாறுதல் செய்ய பிறப்பிக்கப்பட்ட ஊரக வளர்ச்சி ஆணையரின் சுற்றறிக்கையை ரத்து செய்து அனைத்து அலுவலர்களையும் மீண்டும் சொந்த மாவட்டங்களில் பணியமர்த்த வேண்டும். விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரங்களில் ஆய்வுக் கூட்டம் மற்றும் களப்பணி ஆய்வை கைவிட வேண்டும். 'கான்கிரீட்' வீட்டு வசதி திட்டத்திற்கென ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஊரக வளர்ச்சி இயக்கம் ஆகிய அலுவலகங்களில் தனி ஊழியர் கூட்டமைப்பு ஏற்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமையில் ஒட்டு மொத்த சிறுவிடுப்பு போராட்டம் நடத்தினர்.
 
     இதனால் மாவட்ட வளர்ச்சி முகமை, ஊரக வளர்ச்சிப் பிரிவு, ஊராட்சி ஒன்றியம் ஆகிய அலுவலகங்களில் பணிகள் நடைபெறவில்லை.
 
சிறுபாக்கம்: 

              மங்களூர், நல்லூர் ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளின் விடுப்பு போராட் டத்தால் 130 கிராம வளர்ச் சிப்பணிகள் பாதித்தது. மங்களூர் ஒன்றியத்தில் 62 பேரும், நல்லூர் ஒன்றியத்தில் 65 பேரும் விடுப்பிலிருந்தனர். ஒட்டு மொத்த விடுப்பு போராட்டத்தால் இரண்டு ஒன்றியங்களை சேர்ந்த 130 கிராமங்களின் வளர்ச்சிப்பணிகள் நேற்று முற்றிலுமாக பாதிக்கப் பட்டன.
 
பரங்கிப்பேட்டை: 

                     பரங்கிப்பேட்டை ஒன்றிய அலுவலக ஊழியர்கள் 52 பேர் பணிக்கு வர வில்லை. ஊரக வளர்ச்சித் துறை பணியாளர் சங்க ஊழியர்கள் 65 பேர் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

திட்டக்குடியில் ஆர்.டி.ஓ., திடீர் ரெய்டு இரண்டு மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

 திட்டக்குடி : 

                திட்டக்குடியில் ஆர்.டி.ஓ., தலைமையிலான வருவாய்த் துறையினர் நடத்திய திடீர் ரெய்டில் பதுக்கி வைத்திருந்த இரண்டு மூட்டை ரேஷன் அரிசியை கைப்பற்றினர்.
                 திட்டக்குடி பகுதியில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி, பருப்பு பதுக்கல் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில், நேற்று காலை விருத்தாசலம் ஆர்.டி.ஓ., முருகேசன், வட்ட வழங்கல் அலுவலர் வேலு, வருவாய் ஆய்  வாளர் முருகன் ஆகியோர் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது போஸ்ட் ஆபீஸ் ரோட்டிலுள்ள காமராஜ் என்பவரது வீட்டின் முன் கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசி 45 கிலோ எடையிலான மூட்டை ஒன்றும், திட்டக்குடி நுகர்பொருள் வாணிப கிடங்கு அருகில் சுப்பிரமணியன் என்பவரது வீட்டில் கிடைத்த 43 கிலோ அரிசி மூட்டையையும் கைப்பற்றினர். கைப்பற்றிய அரிசி மூட்டைகளை நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior