கடலூர், டிச. 16:
மழை காலங்களில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையிóல் இருந்து, பொதுமக்கள் எந்தவித தகவலையும் கேட்டுப்பெற முடியாத நிலை உள்ளது.
வட கிழக்குப் பருவ மழைகாலத்தில் 24 மணி நேரமும் செயல்படுóம் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியரால் உருவாக்கப்பட்டுள்ளது. புயல் வெள்ளம் போன்ற அவசர காலங்களில் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தொலைபேசியில் தொடர்புகொணடு பொதுமக்கள் தகவல் பெறலாம், தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
ஆனால், கட்டுப்பபாட்டு அறையுடன் பொதுமக்கள் தொடர்பு கொண்டால் எந்தவித தகவலும் தெரிவிப்பது இல்லை. தொலைபேசியில் தொடர்புகொண்டால், இப்பிரிவில் பணிபுரியும் ஊழிர்கள் பெரும்பாலான வேளைகளில் தொலைபேசியை எடுப்பதே இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ÷மேலும், செய்தியாளர்கள் தொடர்பு கொண்டாலும் அவர்களுக்கும் இதே நிலைதான்.
கடலூர் மாவட்டத்தில் மிகுந்த பரபப்பாகப் பேசப்படும் வீராணம் ஏரியின் இன்றைய நிலை என்ன நீர் மட்டம் எவ்வளவு ஏரிக்கு அதிகப்படியாக நீர் வருகிறதா மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருக்கிறதா போன்ற கேள்விகளுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கிடைக்கும் ஒரே பதில் தெரியாது, தெரியாது என்பதுதான். நீர் நிலைகள், ஏரிகளின் நீóர் மட்டம், அவற்றில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுமா போன்ற விவரங்கள் எல்லாம், நாங்கள் தெரிந்து வைத்து இருப்பது இல்லை என்றும் ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். அதற்காக இந்தப் பிரிவு ஏற்படுத்தப் படவில்லை என்றும் கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் உறுதியுடன் தெரிவித்தனர்.
மக்கள் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் ஊழியர்களைக் கொண்ட கட்டுப்பாட்டு அறை, மக்களுக்குப் பயன்படாமல், குறைந்தபட்சம் செய்தியாளர்களுக்குக் கூட தகவல் தெரிவிக்க இயலாத நிலையில் உள்ளது.