உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 20, 2011

அடுத்த அண்டு முதல் ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகள்

             ""தற்போதுள்ள ரேஷன் கார்டுகளுக்குப் பதிலாக, 2012-13ம் ஆண்டில், மின்னணு ரேஷன் கார்டுகள் (ஸ்மார்ட் கார்டுகள்) வழங்கப்படும்'' என்று, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார் 

உணவு மற்றும் கூட்டுறவுத் துறைக்கான மானியத்தின் மீது, சட்டசபையில்  நடந்த விவாதம்:

கிருஷ்ணசாமி - புதிய தமிழகம் : 

               ஒருபக்கம் போலி ரேஷன் கார்டுகள் உள்ளன. மற்றொரு பக்கம், ஏராளமானோர், கார்டுகள் கிடைக்காமல் உள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். ரேஷன் கார்டுகள், சென்னையில் அச்சிட்டு வழங்கப்படுவதால், அவை கிடைக்க தாமதமாகிறது. இதற்குப் பதிலாக, அந்தந்த வட்டார அளவிலேயே ரேஷன் கார்டுகளை அச்சிட்டுக் கொடுக்க வேண்டும்.

அமைச்சர் புத்திசந்திரன்: 

               அனைத்து வட்ட வழங்கல் அலுவலக அளவில், ரேஷன் கார்டுகள் அச்சிடப்படுகின்றன.முதல்வர் ஜெயலலிதா: ரேஷன் கார்டுகள் பற்றி, உணவுத் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது நடப்பில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம், இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிய்டன் முடிகிறது.தற்போது குடும்ப அட்டைகள் வழங்கும் முறையில், ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயரைப் பதிவு செய்தால், அதைக் கண்டுபிடிக்க வழிவகை இல்லை.

              இதனால், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில், குடும்ப அட்டைகளில் ஒரே நபர் பெயர் இடம் பெறும் நிலைய்ம், போலி குடும்ப அட்டைகள் வழங்கப்படும் நிலைய்ம் உள்ளது. மேலும், நியாய விலைக் கடைகளுக்கு பொருள் பெற வராத குடும்ப அட்டைகளுக்கும், கடைப் பணியாளர்கள் போலி பட்டியலிடும் நிலை உள்ளது.இப்பிரச்னையைக் களைய, தற்போது நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, உடற்கூறு பதிவு முறையில், மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தொகுப்பில், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கும் முறை உள்ளதால், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளில் பதிவு செய்ய்ம் நிலை மற்றும் போலி குடும்ப அட்டைகள் வழங்குதல் போன்றவை களையப்படும்.மேலும், ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் பெற வரும் குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே பட்டியலிட முடிய்ம். போலி பட்டியலிடுவது களையப்படும். எனவே, தற்போது நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வரும் 2012-13ம் ஆண்டில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள் ளது. 








Read more »

ராகிங், ஈவ் டீசிங் புகார்களை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி

             கல்லூரிகளில் ராகிங், ஈவ் டீசிங்கை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, புகார்களைத் தெரிவிக்க தனி மொபைல் எண்களும் வழங்கப்பட்டுள்ளன'' என, தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக சட்டம்  ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 


           தமிழக போலீசின், www.tnpolice.gov.in என்ற இணையதளத்தில், ராகிங் மற்றும் ஈவ் டீசிங் ஆகிய புகார்களைத் தெரிவிக்கலாம். புகார்கள் தெரிவிப்பவர் குறித்த விவரங்கள், வெளியிடப்பட மாட்டாது. ராகிங் புகார்களைப் பெற, போலீஸ் அதிகாரிகளுக்கு தனி மொபைல்போன் எண்கள் அளிக்கப்படுகின்றன.

              போலீஸ் மூலம், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய புகார்கள் இருப்பின், அவற்றை மாணவர்கள் தெரியப்படுத்த, கல்வி நிலையங்களில் புகார்ப் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட தனி நபர்கள், மொபைல்போன் மூலம் குறுந்தகவல்களை அனுப்ப, போன் எண்களை அதிகாரிகள் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 











Read more »

நெய்வேலியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/e9f9b2b6-d88f-48b3-b437-89962a33d6da_S_secvpf.gif
நெய்வேலி:

             நெய்வேலி வட்டம்-16ல் செயல்பட்டு வரும் தொல்காப்பியனார் அரசு உதவி பெறும் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நெய்வேலி மகளிர் மன்றத்தின் தலைவி அன்சாரி முகாமினை தொடங்கி வைத்தார். என்.எல்.சி. பொது மருத்துவமனையின் கண் சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் டாக்டர் உஷா தலைமை தாங்கினார்.

                   கண் சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் வெண்மால் தேவி, டாக்டர் ஆர்த்தி ஆகியோர் பள்ளியில் முதல் வகுப்பில் இருந்து 8-வது வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் சுமார் 200 பேருக்கு பார்வைத்திறன் சோதனை மற்றும் கண் தொடர்பான பிற பரிசோதனைகளை மேற்கொண்டனர். இந்த பரிசோதனை முகாமினை முன்னிட்டு பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் பிரியாணி பொட்டலங்கள் மகளிர் மன்றத்தின் சார்பில் வழங்கப்பட்டன.

                மருத்துவர்களின் பரிந்துரையின்படி இப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேவையான மூக்கு கண்ணாடி நெய்வேலி மகளிர் மன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்டது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு அதற்கு ஏற்ற வகையில் சத்து மாத்திரைகள் மற்றும் மருந்துகளும் மகளிர் மன்றத்தால் வழங்கப்பட்டது.

                முகாமில் நெய்வேலி மகளிர் மன்றத்தின் காப்பாளர் உஷாசேகர், செயலாளர் தனலட்சுமி கருப்பசாமி, பொருளாளர் சுஜாதா ஜெகதீஷ், என்.எல்.சி. மருத்துவமனையின் தலைமை பொது கண்காணிப்பாளர் டாக்டர் சண்முகசுந்தரம், தொல்காப்பியனார் பள்ளியின் தலைமை ஆசிரியை குழலி, நெய்வேலி மகளிர் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தினர்கள் பங்கேற்றனர். 

Read more »

நெய்வேலி வடக்குத்து ஊராட்சி மன்றம் சார்பில் கிராமசபை நிர்வாகக் கூட்டம்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/491eb186-4116-43d4-bb6b-e56b6d1be19e_S_secvpf.gif
 
நெய்வேலி

               நெய்வேலியை அடுத்த வடக்குத்து ஊராட்சி மன்றம் சார்பில் கிராமசபை நிர்வாகக் கூட்டம், வடக்குத்து ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் விஜயபாலன், பாபு, வைத்தியநாதன், கோபால் மற்றும் பூங்கோதை, தம்புசாமி, சக்திவேல், அமிர்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

                கூட்டத்தில் வடக்குத்து ஊராட்சிக்குட்பட்ட ரேசன் கடைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினை, தினசரி கடையை உடனே திறப்பது, கண்ணுத்தோப்பு பால்வாடி பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பது, கண்ணுத்தோப்பு வடக்குத்து தெருவில் சிமென்டு சாலை அமைப்பது, குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.  மேலும் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படாததை கண்டித்து போராட்டம் நடத்துதல், சந்தைவெளிப்பேட்டை சர்க்கார்கேணி அருகில் சிமெண்டு சாலை, நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior