உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 05, 2010

இன்று உலக சுற்றுசூழல் தினம்: பல்லுயிர் பெருக்கம்- சூழலியல் மேலாண்மை கடைபிடிப்பு



             
                  உலகச் சுற்றுச்சூழல் தினம், இந்த ஆண்டு பல்லுயிர் பெருக்கம்-சூழலியல் மேலாண்மை என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சனிக்கிழமை (ஜூன் 5) கடைப்பிடிக்கப்படுகிறது.
                       ஒரே விதமான சூழலில் பல்வேறு வகை உயிரினங்கள் ஓர் இடத்தில் சேர்ந்து வாழ்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் நோக்கமே பல்லுயிர் பெருக்கம்-சூழலியல் மேலாண்மை ஆகும். உலகில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப நிலம், நீர், காற்று உள்பட அனைத்து வகையிலும் சுற்றுச்சூழல் அதிக அளவில் மாசுபடுகிறது. இதிலும் குறிப்பாக 1989-ம் ஆண்டு முதல் புவிவெப்பமயமாதல் என்ற நிகழ்வு உலத்தை அச்சுறுத்தி வருகிறது. 
                   சுற்றுச் சூழல் பாதிப்புக்கு மக்கள் தொகை பெருக்கமே பெரும் சவாலாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.31.5.2010 கணக்குப்படி உலக மக்கள் தொகை 682 கோடி என்றும், அதிகபட்சமாக சீனாவில் 133 கோடி, இந்தியாவில் 118 கோடி, அமெரிக்காவில் 30 கோடி, இந்தோனேசியாவில் 23 கோடி, பிரேசிலில் 19 கோடி, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் 16 கோடி மக்கள் தொகை உள்ளதாக ஐக்கியநாடுகள் சபை எச்சரித்துள்ளது. உலக மக்கள் தொகை பெருக்கம்தான் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு முக்கிய காரணம் என்று 1970-களிலேயே ஒரு ஆய்வு எச்சரித்தது. இதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அமைப்பு சார்பில் 1974-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி, முதன் முதலாக உலக சுற்றுச் சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. மேலும் அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழலை பாதிக்கும் முக்கிய காரணிகளை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு கருப்பொருள் பிரதானப்படுத்தப்பட்டது. மேலும் இது குறித்து அந்தந்த நாட்டு அரசுத் துறைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.


Read more »

சிதம்பரம் அருகே வாங்கப்பட்ட குளிர்பான பாட்டிலில் தவளை



சிதம்பரம்:
                சிதம்பரம் அருகே வாங்கப்பட்ட சீலிடப்பட்ட "பெப்ஸி' குளிர்பான பாட்டிலில் இறந்த நிலையில் தவளை கிடந்தது.சிதம்பரத்தை அடுத்த பி.முட்லூரைச் சேர்ந்தவர் அஸ்கர்அலி (35). 
                 இவர் வெள்ளிக்கிழமை பி.முட்லூரில் உள்ள கடை ஒன்றில் 600 மில்லி "பெப்ஸி' குளிர்பான பாட்டிலை வாங்கினாராம். மூடியை திறப்பதற்கு முன் அதில் தவளை மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். உடனே அக்கடைக்குச் சென்று அப்பாட்டிலை வாங்கியதற்கான ரசீதை வாங்கியுள்ளார். பாட்டிலில் தவளை கிடந்தததால் தனக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டது. அதை குடித்திருந்தால் எனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்கும். எனவே அக்கடை உரிமையாளர் மற்றும் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர உள்ளதாக அஸ்கர்அலி தெரிவித்தார்.


Read more »

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக கடலூரில் 108 டிகிரி வெயில்




சென்னை:
 
                 தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக கடலூரில் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. இதுதவிர சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.
 
முக்கிய இடங்களில் பதிவான வெயில் அளவு (பாரன்ஹீட்டில்):
 
புதுச்சேரி        106
வேலூர்         105
திருநெல்வேலி    105
சென்னை        104
திருச்சி          104
மதுரை          104
சேலம்           101
நாகப்பட்டினம்    100
கோவை          98
தூத்துக்குடி       94
கன்னியாகுமரி     90
வால்பாறை       85
கொடைக்கானல்   71



Read more »

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு தேர்வில் கேள்வித்தாள் மாற்றம்


கடலூரில் வெள்ளிக்கிழமை நடந்த ஆசிரியர் பட்டயப் பயிற்சி தேர்வில் கேள்வித்தாள் மாறியதால் தேர்வு மையத்தின் முன் கூடிய பெற்றோர்.
கடலூர்:
                  கடலூரில் வெள்ளிக்கிழமை நடந்த ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்புத் தேர்வில் கேள்வித்தாள் மாறியதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பெற்றோர் தேர்வுக் கூடத்தை முற்றுகையிட்டனர். ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு தேர்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. 
                   கடலூர் திருப்பாப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மையத்தில் வெள்ளிக்கிழமை தேர்வுகள் நடந்தன. இதில் தனித் தேர்வர்களாக 192 மாணவர்கள் கணிதப் பாடத்துக்கான தேர்வை எழுதினர்.இவர்களுக்கு தமிழ் வழிக்கல்வி கேள்வித்தாள் வழங்குவதற்குப் பதில் தெலுங்கு வழிக்கல்விக்கான கேள்வித்தாள் வழங்கப்பட்டு விட்டது. இதனால் மாணவ, மாணவியர் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களின் பெற்றோரும் தேர்வு மையத்தை முற்றுகையிட்டனர். தேர்வு மைய அலுவலர்களிடம் முறையிட்டனர். தகவல் அறிந்ததும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி, தேர்வு மையத்துக்கு விரைந்து சென்று, மாணவர்களை சமாதானப்படுத்தினார். இதே பாடத் திட்டத்தில் தேர்வு எழுதும், வடலூர் மையத்தில் இருந்து தமிழ்வழிக் கல்வி கணிதத் தேர்வுத்தாள் வரவழைக்கப்பட்டது. அதில் இருந்து ஜெராக்ஸ் எடுத்து மாணவ, மாணவிருக்கு கேள்வித் தாள்கள் வழங்கப்பட்டது.இதனால் தேர்வு எழுத மாணவர்கள் பிற்பகல் 3 மணிவரை அனுமதிக்கப்பட்டனர். காலம் கடந்து தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டதால் மானவர்களுக்கு தேநீர், பிஸ்கட் வழங்கப்பட்டது.



Read more »

பஸ் நிறுத்த நிழற்குடைக்கு பரிதவிக்கும் கடலூர் நகரம்




பயணிகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பாதாள சாக்கடைத் திட்டக் குழாய்களால் அடைபட்டுக் கிடக்கும், கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் அரசு மருத்துவமனையின் எத
 
கடலூர்:
 
               பழைமை வாய்ந்த கடலூர் நகரம், அடிப்படை வசதிகள் இன்றி தற்போது பழம் பாய் போல் சிதைந்து கிடக்கிறது. 4 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள்தான் பெயர் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. 
 
                      4 ஆண்டுகளுக்கு முன் நமக்கு நாமே திட்டத்தில் நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்றுகள், பூங்காக்கள், பஸ் நிறுத்த நிழற்குடைகள் எல்லாம் வரலாற்றுச் சின்னங்களாக சிதைந்து கிடக்கின்றன. நகரெங்கும் அடைபட்ட சாக்கடைகள், எரியாத தெரு விளக்குகள், குப்பை வாராத தெருக்கள், மண் மேடுகள் அகற்றப்படாத பாலங்கள் இவைதான், இந்த மாவட்டத் தலைநகரான கடலூர் நகரக் காட்சிகள். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பார்கள். ஆனால் இப்போதோ கடலூர் தேய்கிறது, விழுப்புரம் வளர்கிறது என்பதுதான் புதுமொழி. அரசியல் மனமாச்சரியங்களை முன்னிறுத்தி, மக்கள் நலத்திட்டங்களை பின்னுக்குத் தள்ளும் அரசியல் தலைமைகளை கடலூரிலன்றி வேறெங்கும் காண முடியாது. அத்துடன் ஆமை வேகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தால், சாலைகள் நீண்டகாலமாக நார்நாராக் கிழிந்து கிடக்கும் அவலநிலை, குடிநீர் விநியோகத்தில் கோளாறுகள், நிதிப் பற்றாக்குறையால் நகராட்சி, திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம், அத்தியாவசியத் தேவையான ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டத்தை நிறைவேற்றுவதில், பொதுமக்கள் நலனா வணிகர்களின் நலனா என்பதில் முடிவுக்கு வர முடியாமல் தவிக்கும் நகராட்சி, இவற்றின் விளைவாக கடலூர் நகரம், 15 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்டு கிடக்கிறது என்பது நடுநிலையாளர்களின் கருத்து.இவற்றை எல்லாம் நிறைவேற்ற, நிர்வாகத்தை முடுக்கி விடும் சக்திஏதும் இல்லாததுதான், கடலூர் மக்களின் துரதிருஷ்டம். பணம் இருந்தால்தான் இன்று அரசியல் நடத்த முடியும், தேர்தலைச் சந்திக்க முடியும் என்பது ஊரறிந்த உண்மை. பணம் சம்பாதிக்கும் அதே நேரத்தில் மக்கள் பணிகளையும் முன்னின்று நிறைவேற்றுவோர்தான் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த இரண்டில் எது இல்லை என்றாலும், மக்கள் மனதில் இருந்து மறைந்து போவார்கள் என்பதைக் கடலூர் மக்கள் பிரதிநிதிகள் எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை.
 
                இதன் விளைவு கடலூரில் பஸ் நிறுத்த நிழற்குடைகள்கூட முறையாக இல்லை. கடலூர் டவுன்ஹால் அருகே பல்லாண்டுகளாக இருந்த பஸ் நிழற்குடை, சாலை விரிவாக்கத்துக்காக உடைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்குமேல் ஆயிற்று.  இங்கு எப்போதும் நூற்றுக்கணக்கில் பயணிகள் தகிக்கும் வெயில் தவிக்கும் நிலை உள்ளது.  இங்கு நிழற்குடை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எந்த நிர்வாகத்துக்கும் ஏற்படாததும், யாரும் அதுபற்றி கேள்வி எழுப்பாததும்தான் இங்குள்ள பரிதாபநிலை. 
 
அண்மையில் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், கடலூர் நகராட்சி ஆணையரிடம் பேசுகையில், 
 
                  நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் நிழற்குடை போன்றவற்றை அமைத்துத் தரத் தயாராக உள்ளன. அதை நகராட்சி ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பியபோது, ஆணையரால் ஏனோ பதில் சொல்ல முடியவில்லை. அரசு பொது மருத்துவமனை அருகில், மிகப்பெரிய நினைவஞ்சலி டிஜிட்டல் பேனர்களை எல்லாம் அனுமதித்து இருக்கிறீர்களே, அங்குவரும் நோயாளிகளின் மன நிலையை எண்ணிப் பார்த்தீர்களா அவற்றை உடனே அகற்றுங்கள் என்று, மாவட்ட ஆட்சியர் கடுமையாகப் பேசியபோதும், ஆணையரின் பதில் மெனம்தான்.  அரசு மருத்துவமனை சவக்கிடங்கு அருகில், நவீன பஸ் நிறுத்த நிழற்குடை விளம்பரதாரர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்தைத் தேர்வு செய்து அளித்தது யார் என்றே தெரியவில்லை. அதையும் மக்கள் பயன்படுத்த முடியாமல், பாதாளச் சாக்கடைத் திட்டக் குழாய்களைப் போட்டு அடைத்திருப்பதும், அரசு நிர்வாகங்களின் அலட்சியத்தைப் பறைசாற்றுவதாக அல்லாமல் வெறெதுவாக இருக்க முடியும்?




Read more »

கூடுதல் கட்டண அறிவிப்பு: பள்ளியை பணிய வைத்த பெற்றோர்கள்




பள்ளியை முற்றுகையிட்டுள்ள பெற்றோர்கள்.

நெய்வேலி:

                 அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டண அறிவிப்பு வெளியிட்ட பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதையடுத்து, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அருள்மொழி பள்ளிக்குச் சென்று அரசு நிர்ணயித்தக் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டதையடுத்து, பள்ளி நிர்வாகம் அரசு நிர்ணயித்தக் கட்டணத்தையே பெற முன்வந்துள்ளது.

                    நெய்வேலி வட்டம் 25-ல் செயின்ட் ஜோசப் ஆப் குளுனி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இந்த ஆண்டு கல்விக் கட்டணத்தின் முதல் தவணையாக (ஜூன்-செப்டம்பர் இடைப்பட்ட 4 மாதங்களுக்கு) முதல் வகுப்பிலிருந்து 5-ம் வகுப்பு வரை ரூ.4750, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை ரூ.4250 எனவும், 10-ம் வகுப்புக்கு ரூ.5200 எனவும் பள்ளி கட்டண அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் 2 மற்றும் 3-ம் பருவக் கட்டணங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறியது.

                அரசு ஒரு ஆண்டுக்கு வெளியிட்ட கட்டணத்தை, பள்ளி நிர்வாகம் மாற்றியமைத்து முதல் பருவக் கட்டணம் என வெளியிட்டுள்ளதைக் கண்டு பெற்றோர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு அரசு ஒரு ஆண்டுக்கு நிர்ணயித்த கட்டணத்தை விட 300 மடங்கு உயர்வு கொண்ட கட்டணத்தை அறிவிப்பு செய்துள்ளனர். எனவே, பள்ளி நிர்வாகம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை அறிவிப்புப் பலைகையில் ஒட்ட வேண்டும் என்றும், அரசு நிர்ணயித்த கட்டணத்தையே பெற்றோர்களிடம் வசூலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டனர் பெற்றோர்கள் முற்றுகையிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பள்ளி ஆசிரியர்கள் வகுப்பைப் புறக்கணித்து பள்ளியைவிட்டு வெளியேறினர். இதைத் தொடர்ந்து நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அருள்மொழி முன்னிலையில் பள்ளி நிர்வாகத்துடன் பெற்றோர்கள் பேச்சு நடத்தினர்.

                   இப்பேச்சின் போது, அரசு அறிவித்த கட்டணத்தை மட்டுமே பள்ளி நிர்வாகம் வசூலிக்க வேண்டும். பருவக் கட்டணம் என்ற கூடுதல் தொகை வசூலிக்கக் கூடாது. அரசு அறிவித்த கட்டண விவரத்தை பள்ளியின் அறிவிப்புப் பலகையில் ஒட்ட வேண்டும். மெட்ரிக் பள்ளிகள் மேல்முறையீடு குறித்து பதில் கிடைக்கும் வரை பள்ளிகள் அமைதிகாக்க வேண்டும் என ஆய்வாளர் அருள்மொழி உத்தரவிட்டதையடுத்து, பள்ளி நிர்வாகம் அரசு அறிவித்த கட்டணத்தைப் பெற ஒப்புக்கொண்டது. இதையடுத்து பெற்றோர்கள் ஆய்வாளர் அருள்மொழிக்கும், காவல் ஆய்வாளர் சேகருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இதையடுத்து வகுப்பைப் புறக்கணித்த ஆசிரியர்களும் வகுப்புகளுக்குத் திரும்பினர்.



Read more »

பண்ருட்டி வட்டாட்சியராக பி. பன்னீர்செல்வம் பொறுப்பேற்பு



பண்ருட்டி:
                பண்ருட்டி வட்டாட்சியராக பி. பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நிலவரி திட்ட தனி வட்டாட்சியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் வட்டாட்சியராக இருந்த ஆர்.பாபு 31.5.2010 அன்று பணி நிறைவு பெற்றார்.


Read more »

ரூ.1 லட்சம் நிர்ணயித்தாலும் கட்டணம் செலுத்த தயாராக உள்ளோம்: பண்ருட்டி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர்






நெய்வேலி:

                  அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டண அறிவிப்பு வெளியிட்ட பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திபோது, அங்குவந்த பண்ருட்டி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர் எழிலரசியின் கணவர் ரவிச்சந்திரன் பள்ளிக்கு ஆதரவாக குரல் கொடுத்து, "பள்ளியின் தரம் வியக்கவைக்கும் வகையில் உள்ளது. எனவே இப்பள்ளிக்கு கட்டணமாக ரூ.1 லட்சம் நிர்ணயித்தாலும் நான் செலுத்தத் தயாராக இருக்கிறேன்' எனக் கூறினார். 

                      இதைக்கேட்ட பெற்றோர்கள் அதிருப்தியடைந்தனர். இதையடுத்து பெற்றோர்கள் அரசு நிர்ணயித்தக் கட்டணத்தை கட்டத் தயாராக உள்ளோம். அதே நேரத்தில் பள்ளி நிர்வாகம் மேல்முறையீடு செய்திருந்து, அதன்படி கட்டணம் அதிகரிக்கும் பட்சத்தில் அக்கட்டணத்தை வழங்க தயாராக இருக்கிறோம். எனவே அரசியல் பிரமுகர்கள் இவ்விஷயத்தில் தலையிட வேண்டாம் என கோரிக்கை வைத்தனர்.

பெற்றோர் ஆசிரியர் கழகம் துவக்க ஏற்பாடு: 

                      அண்மைக் காலமாக பள்ளி நிர்வாகம் ஒரு சில முடிவுகளை தன்னிச்சையாக எடுத்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே இனி பள்ளி நிர்வாகம் எவ்விதமான முடிவுகளை மேற்கொள்ளவேண்டுமானால், பெற்றோர்களை கலந்தாலோசித்து எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்தினர். மேலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் தொடங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பள்ளி எதிரில் வரும் 10-ம் தேதி நடைபெறும் என பெற்றோர்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.


Read more »

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை அநாகரிகமாகப் பேசியதாக பா.ம.க.வினர் மீது புகார்



கடலூர்:

              விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை அநாகரிகமாகப் பேசியதாக பா.ம.க.வினர் மீது, காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் கொடுக்கப்பட்டது. 

                 கடலூர் முதுநகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமணத்துக்கு, பண்ருட்டி எம்.எல்.ஏ.வும், பா.ம.க. அமைப்புச் செயலாளருமான தி.வேல்முருகன் வந்தார். அவரை வரவேற்க காலை 8 மணி அளவில் பா.மக.வினர் திருமண மண்டபம் எதிரில் திரளாக நின்று இருந்தனர். 

               குள்ளஞ்சாவடியில் நடைபெற்ற திருமண மண்டபம் ஒன்றில் பங்கேற்பதற்காக, கடலூர் நகராட்சி துணைத் தலைவரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளம் சிறுத்தை எழுச்சிப் பாசறை மாநில துணைச் செயலாளருமான தாமரைச்செல்வன், காரில் அந்த வழியாகச் சென்றார். அவருடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் சென்றனர். காரை விட்டு இறங்கிய தாமரைச்செல்வன், அங்கிருந்த நகராட்சி பா.ம.க. உறுப்பினர் உள்ளிட்டோருக்கு வணக்கம் செலுத்திவிட்டு புறப்படத் தயாரானார். 

               அப்போது பா.ம.க.வைச் சேர்ந்த சிலர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை கேலி செய்து, அநாகரிகமான வார்த்தைகளைப் பேசினராம். எனினும் தாமரைச்செல்வன் அங்கிருந்து சென்றுவிட்டார். இப்பிரச்சினை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சினர் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் சொக்கு என்ற புகழேந்தி, முதுநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸôர், சி.எஸ்.ஆர். ரசீது கொடுத்தனர். விசாரணை நடந்து வருகிறது.

Read more »

மானிய விலையில் தானிய சேமிப்புக் கலன்கள் விநியோகம்


கடலூர்:

             கடலூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தானிய சேமிப்புக் கலன்கள் வழங்கப்படும் என்று, வேளாண் துறை வியாழக்கிழமை அறிவித்து உள்ளது.

வேளாண் உதவி இயக்குநர் சீ.இளவரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                 தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில், தானிய சேமிப்புக் கலன்கள் 50 சதவீதம் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகின்றன. ஒரு மெட்ரிக் டன், 0.5 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்த தானிய சேமிப்புக் கலன்களைப் பெற, விரும்பும் விவசாயிகள் கடலூர், கீழ்குமாரமங்கலம் மற்றும் தூக்கணாம்பாக்கம் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்கள் மற்றும் வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு தானிய சேமிப்புக் கலன்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

 


Read more »

பள்ளிகளுக்கான கட்டணப் பிரச்னைக்கு முதல்வர் தீர்வு காண வலியுறுத்தல்



சிதம்பரம்:

                  தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விஷயத்தில் முதல்வர் தலையிட்டு உடனடி தீர்வுகாண வேண்டும் என காமராஜ் கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் மேலவை உறுப்பினருமான சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காமராஜ் கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் மேலவை உறுப்பினருமான சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்திருப்பது: 
                         
                       தமிழகத்தில் உள்ள சுமார் 11 ஆயிரம் மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளின் கட்டண நிர்ணயம் சம்பந்தமாக இன்னமும் குழப்ப நிலை நீடிக்கிறது. பள்ளிகள் தொடங்கும் இந்த கட்டத்திலும் கல்விக் கட்டணப் பிரச்னை தீர்க்கப்படாமல் இருப்பதால் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர், ஆசிரியர்களிடையே குழப்ப நிலை நீடிக்கிறது.நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வைத்து பள்ளிகளை நடத்த முடியாத நிலையும், பள்ளிகளை முடக்கப்பட வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது. 

                        ஏற்கெனவே பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும், அவர்களின் ஊதியமும் குறைக்கப்பட வேண்டிய நிர்பந்தம் வந்துள்ளதால் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள். அண்மையில் வெளியாகிய 12-ம் வகுப்பு மற்றும் மெட்ரிக் தேர்வுகளில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறந்த மதிப்பெண்களை மெட்ரிக் பள்ளி மாணவர்களே குவித்திருப்பது மெட்ரிக் பள்ளிகளின் கல்வித் தரத்தை நிரூபித்துள்ளது. இப்பள்ளிகளில் உள்ள கல்வித்தரம் மற்றும் மாணவர் ஒழுங்கு-கட்டுப்பாடு திருப்திகரமாக இருப்பதால்தான் பெற்றோர்கள் செலவைப் பற்றி பொருட்படுத்தாமல் தாங்களே விரும்பி மெட்ரிக் பள்ளிகளை நாடுகிறார்கள்.

3 தீர்வுகள்:

                இப்பிரச்னையைத் தீர்க்க இரு சுலபமான வழிகள் உள்ளன. ஒன்று சென்ற ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்தையே இந்த ஆண்டும் வசூலிக்க அனுமதி தந்து அடுத்த ஆண்டு முதல் என்ன கட்டணம் நிர்ணயிப்பது என நிதானமாக ஆய்வு செய்து முடிவெடுக்கலாம். 

                 மற்றொன்று 11 ஆயிரம் பள்ளிகளில் பணியாற்று ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, உதவிபெறும் தனியார் பள்ளிகளைப் போல ஊதியத்தை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த இருவழிகளும் சாத்தியப்படாவிட்டால் தமிழக அரசே இப்பள்ளிகளை ஏற்று நடத்த முன்வர வேண்டும் என சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்துள்ளார்.


Read more »

திருட்டை மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்க ஆலோசனை

சிதம்பரம்:

                   திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்க சிதம்பரத்தில் போலீஸர் மற்றும் அடகுகடை, வட்டிக்கடை உரிமையாளர்கள், கூட்டுறவு வங்கி அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டிஎஸ்பி மா.மூவேந்தன் தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பி.சுப்பிரமணியன், அறிவானந்தம், ஜி.சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மதிவாணன், கண்ணுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முடிவுகள்: 

                      பாதுகாப்பு பெட்டக்தில் நகைகளை பத்திரமாக வைப்பது, அடகுகடை மற்றும் வட்டிக்கடைகளுக்கு இரவு காவலாளிகள் நியமிப்பது, பணம் அதிகமாக இருந்தால்  அவ்வங்கியில் ஊழியர் ஒருவரை தங்கவைப்பது, அடையாளம் தெரியாத நபர்களிடம் நகைகளை அடமானம் செய்வதை தவிர்ப்பது என்று இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Read more »

Desilting of water channels under way in Cuddalore

CUDDALORE: 

         In preparation for receiving the Mettur water for irrigation, as many as 56 channels in Cuddalore district are being desilted at a cost of Rs 2.5 crore allotted by Chief Minister M.Karunanidhi, according to P.Seetharaman, District Collector.

            The Collector inspected the desilting works under way in the Godhavari channel near Boothangudi at Veeranam, and, at Manavaikkal and Gunavasal and Elleri channels on Tuesday. He called upon the officials of the Public Works Department (Water sources) to utilise the scooped out soil for strengthening the bunds. Later, the Collector held a meeting with farmers from Kattumannarkoil, Chidambaram and Killai blocks. They made a representation to the Collector to properly measure the waterways before undertaking the desilting work. Accordingly the Collector instructed the officials of the revenue and land survey departments to take measurements of the channels prior to carrying out the desilting works. 

The Collector called upon the farmers to give their suggestions and complaints, if any, to the following officials: 

Executive Engineer (PWD), 
Chidambaram – 94432 92948, 
Assistant Executive Engineer (PWD), 
Anaikkarai – 98422 58499, 
Assit.Exe.Engr (PWD), 
Chidambaram – 94436 50656,
and Asst.Exe.Engr (PWD), 
Lalpettai – 94423 12589.

Read more »

Kalaignar Housing Scheme beneficiaries can register before June 30

CUDDALORE: 

              Under the Kalaignar Housing Scheme, 2,10,914 huts have been identified in Cuddalore district, according to P.Seetharaman, Collector.

             In a statement here, the Collector said that of these 1,90,264 huts in 668 villages had been supervised. After due verification the details would be computerised. The Collector further said that the enumerators found certain huts locked. The residents might have either migrated elsewhere or might have gone on vacation. In such cases the residents of those huts ought to approach either the panchayat presidents or the Block Development Officers concerned to register before June 30. Those who had not given the required documents should also do so within the stipulated date. No petitions would be entertained after the deadline, the Collector added.

Read more »

VCK leader lodges police complaint against PMK cadre

CUDDALORE: 

              Chockalingam alias Pugalendi, district deputy secretary of the youth wing of the Viduthalai Chiruthaigal Katchi, has lodged a complaint with the Old Town Police against certain Pattali Makkal Katchi cadre.

            In the complaint filed on Friday, Mr. Pugalendi stated that when he along with Cuddalore Municipal Vice-Chairman Thamaraiselvan and party cadres were going in a car from Cuddalore to Kullanchavadi certain PMK men standing in front of a marriage hall loudly mouthed derogatory comments against them. Mr Pugalendi sought appropriate action against them.

Read more »

விருத்தாசலம் கோவில் சைரன் அடித்ததால் திடீர் பரபரப்பு

விருத்தாசலம் : 

                        விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் "எச்சரிக்கை சைரன்' அடித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வர் கோவிலில் உண்டியல், கோபுரம், சுவாமி நகை பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் அறை உள்ளிட்ட இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க "எச்சரிக்கை சைரன்' ஒலி எழுப்பும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தினர் இரவு நேரங்களில் இக் கருவியை "ஆன்' செய்துவிட்டு கோவிலை பூட்டிச் செல்வது வழக்கம்.

                 நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு கோவில் வளாகத்தில் இருந்து "எச்சரிக்கை சைரன்' அடித்தது. ஐந்து நிமிடம் "சைரன்' அடித்ததால் கோவிலைச் சுற்றியிருந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் கோவில் உள்ளே திருடர்கள் இருக்கலாம் என அஞ்சினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார், கோவிலை திறந்து முக்கிய இடங்களை பார்வையிட்டனர். பின், திருட்டு சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்தனர்.

இதுபற்றி கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது 

                  "கோவிலில் பூனை, வவ்வால்கள் ஏதேனும் பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்ட இடங்களில் உள்ள பொருட்களை தொட்டிருக்கலாம். அதனால், "சைரன்' அடித்திருக்கலாம் அல்லது கருவியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு "சைரன்' அடித்திருக்கலாம். கருவியை சோதனை செய்து பார்த்தால் தெரியும்' என்றனர்.

Read more »

தலைமை ஆசிரியர் யார்? போட்டா போட்டி டி.இ.ஓ., விசாரணைக்குப் பின் தற்காலிக தீர்வு

விருத்தாசலம் : 

                விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு யார் தலைமை ஆசிரியர் என இரண்டு நாட்களாக நீடித்த குழப் பத்திற்கு டி.இ.ஓ., விசாரணைக்கு பின் நேற்று தற்காலிக தீர்வு ஏற்பட்டது.

                 விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த உதவித் தலைமை ஆசிரியர் முருகேசன் 10 மாதங்களுக்கு முன் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு இடமாறுதலில் சென்றார். இதற்கிடையே முருகேசன் திடீரென நேற்று முன் தினம் காலை விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தனக்கு மனமொத்த மாறுதலுக்கான ஆணை வந்திருப்பதாக வருகை பதிவேட்டில் கையெழுத்திட பள்ளிக்கு வந்தார். ஆனால், இது குறித்து தனக்கு எந்த தகவலும் வரவில்லை என கூறி தற்போது பணியில் உள்ள தலைமை ஆசிரியர் பிரகாசம் வருகை பதிவேட்டை எடுத்து பூட்டி வைத்து விட்டார். 

                  இதனால் பள்ளிக்கு யார் தலைமை ஆசிரியர் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முருகேசன் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட மீண்டும் பள்ளிக்கு வந்தார். நேற்றும் தலைமை ஆசிரியர் பிரகாசம் தனக்கு எந்த உத்தரவும் வரவில்லை என கூறி தடுத்தார்.தலைமை ஆசிரியர்களுக்குள் மீண்டும் பிரச்சனை தலை தூக்குவதை அறிந்த டி.இ.ஓ., குருநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தி இருவரிடமும் விளக்க கடிதம் பெற் றுக் கொண்டு "சி.இ.ஓ., பள்ளி கல்வி இயக்குனரிடம் பேசி பின்னர் முடிவு கூறுவார். அதுவரை நீங்கள் பள்ளிக்கு வரவேண்டாம்' என முருகேசனிடம் கூறினார். அதனையடுத்து முருகேசன் பள்ளியை விட்டு சென்றார். இதனால் 2 நாட்களாக நீடித்த குழப்பத் திற்கு தற்காலிக தீர்வு காணப்பட்டது.

Read more »

நெய்வேலி பள்ளியில் கூடுதல் கட்டணம் பெற்றோர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

நெய்வேலி : 

                    நெய்வேலி குளூனி பள்ளியில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட் டதால் பெற்றோர் பள் ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

                 தமிழக அரசு சமீபத்தில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்தி சட்டம் இயற்றியது. ஆனால் நெய்வேலி குளூனி பள்ளியில் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை அரசு அறிவித்துள்ள ஆண்டு கல்வி கட்டணமான 4,705 ரூபாய்க்கு பதில் 14 ஆயிரத்து 250 ரூபாய் வசூலித்தனர்.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டவுன்ஷிப் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். "அரசு அறிவித்துள்ள கட்டணம் எவ்வளவு இருந்தாலும் அதை கட்ட நாங்கள் தயார். ஆனால் பள்ளி நிர்வாகம் தன்னிச்சையாக அறிவித்துள்ள கூடுதல் கட்டணத்தை எங்களால் கட்ட முடியாது' என்றனர்.

பள்ளி முதல்வர் மாசிலாமேரி கூறுகையில், 

                  "கோவிந்தராஜன் கமிட்டி அறிவித்துள்ள கல்வி கட்டண பட்டியல் தவறானது. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது' என்றார். இதனைத் தொடர்ந்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அருள்மொழி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு "அரசின் மறு உத்தரவு வரும் வரை தன்னிச்சையாக கட்டணம் வசூலிக்க கூடாது எனவும், அரசு அறிவித்துள்ள கட்டணத்தை வசூலிக்க வேண்டும்' என உத்தரவு பிறப்பித்தார். முற்றுகையின் போது ஒரு சில பெற்றோர் ஆசிரியைகளை தரக்குறைவாக பேசியதை கண்டித்து ஆசிரியைகள் வகுப்பறைக்குள் செல்லமாட்டோம் எனக் கூறி பள்ளியை விட்டு வெளியேறினர்.

பள்ளி முதல்வர் குமுறல் : 

                 பள்ளி முதல்வர் மாசிலாமேரி மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அருள்மொழியிடம் "பள்ளி முதல்வர் பொறுப்பில் என்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எம்.எல்.ஏ., எம்.பி., என்.எல்.சி., தொழிற்சங்க நிர்வாகிகள் என பலரும் தங்களது சிபாரிசுகளை ஏற்று அதன்படிதான் செயல்பட வேண்டுமென துன்புறுத்துகின்றனர். இதனால் என்னால் பள்ளியை சரியாக நிர்வாகம் செய்ய முடியாமல் திணறுகிறேன்' என தனது குமுறலை வெளிப்படுத்தினார்.

Read more »

கடலூரில் பாரபட்சமாக ஆக்கிரமிப்பு அகற்றம் பொதுமக்கள் எதிர்ப்பால் பாதியில் நிறுத்தம்

கடலூர் : 

                  கடலூரில் பாரபட்சமாக ஆக்கிரமிப்பை அகற்றியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

               கடலூர் மஞ்சக்குப்பம் கருமாரபேட்டைத் தெருவில் சிமென்ட் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்தது. பாதி சாலை முடிந்த நிலையில் மீதமுள்ள பகுதியை ஆக்கிரமித்து குடிசை போட்டிருந்ததால் சாலை போடும் பணி ஒரு ஆண்டாக கிடப்பில் போடப் பட்டது. கவுன்சிலர் ராஜ் மோகன் மற்றும் வார்டு பொதுமக்கள் கலெக்டர் மற்றும் நகராட்சி சேர்மன் ஆகியோரை சந்தித்து ஆக்கிரமிப்பை அகற்றி சிமென்ட் சாலை பணியை முடிக்க வேண்டும் என மனு கொடுத்தனர். கலெக்டர் உத்தரவின் பேரில் நேற்று நகராட்சி அதிகாரிகள் கருமாரபேட்டைத் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆளும் கட்சி பிரமுகருக்கு வேண்டிய ஒருவரின் வீட்டை பிரிக்காமல் மற்ற வீடுகளை பிரித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பாரபட்சம் இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண் டும் என திரண்டு தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த தெருவில் சிமென்ட் சாலை பணி நிறைவடைவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. 



Read more »

ஓய்வு பெற்ற சப் கலெக்டர் வீட்டில் ரூ.2.5 லட்சம் நகை திருட்டு

கடலூர் : 

                    கடலூரில் ஓய்வு பெற்ற சப் கலெக்டரின் வீட்டின் பூட்டை உடைத்து 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

                   கடலூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் வீரராகவன். ஓய்வு பெற்ற சப் கலெக்டர். இவரது மனைவி கல்யாணி. இவர்கள் 2 நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிக் கொண்டு சென்னை சென்றிருந்தனர். நேற்று முன்தினம் மாலை தெருவை பெருக்க வேலைக்கார பெண் வந்தபோது பூட்டு உடைந்திருந்தது. தகவலறிந்த கடலூர் டி.எஸ்.பி., மகேஷ்வரன் மற்றும் கடலூர் புதுநகர் போலீசார் தடயங்களை சேகரித்தனர். இந்நிலையில் வீடு திரும்பிய கல்யாணி அறைக்கு சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 25 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது. இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Read more »

வெள்ளாற்றில் மணல் திருட்டு ஒருவர் கைது

கடலூர் : 

                 சிதம்பரம் அருகே வெள்ளாற்றில் அரசு அனுமதியின்றி மணல் எடுத்த ஆசாமியை போலீசார் கைது செய்து டிராக் டரை பறிமுதல் செய்தனர்.

                   ஒரத்தூர் சப் இன்ஸ் பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரத்தூரை அடுத்த சாக்காங்குடி பஸ் நிறுத்தம் அருகே மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை செய்தனர். இதில் அரசு அனுமதியின்றி வெள்ளாற்றங்கரையில் மணல் திருடியது தெரிய வந்தது. இது குறித்து ஒரத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து தாதம்பேட்டையைச் சேர்ந்த சிவமுருகன் (24) என்பவரை கைது செய்தனர். மேலும் மணல் திருட்டுக்கு பயன் படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior