உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 10, 2009

அண்ணாமலை நகர் பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வெற்றி

அக்டோபர், 09- 2009

கடலூர்:
    
        தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிக்கான இடைத்தேர்தல் 7-ந் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடந்தது.

           கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் தமிழரசன் வெற்றி பெற்றுள்ளார். 

ஓட்டுகள் விவரம் வருமாறு:-

         தமிழரசன்-146 (தே.மு.தி.க.), மங்கையர்க் கரசி-124 (தி.மு.க.). 

லால்பேட்டை பேரூராட்சி
 
           லால்பேட்டை பேரூராட்சி 3-வது வார்டு கவுன் சிலர் பதவிக்கான தேர்தலில் த.மு.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். 

ஓட்டுகள் விவரம் வரமாறு:-
 
         யாசர் அரபாத்-102 (தே.மு.தி.க.), சிராஜுதீன்-85 (சுயே).
 
விருத்தாசலம்

              விருத்தாசலம் நகராட்சி 25-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் காசிநாதன் 999 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மணிகண்டன் 876 ஓட்டுகள் பெற்றார்.
 
         இதேபோல் விருத்தாசலம் ஒன்றியம் எம்.புதூர் ஊராட்சி மன்ற 1-வது வார்டு உறுப்பினர் தேர்த லில் 150 வாக்குகள் பெற்று முருகையனும், எம்.பரூர் ஊராட்சி மன்ற 3-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் முருகேசன் 325 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
          

Read more »

ஸ்டிரைக் வாபஸ் என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர்

நெய்வேலி:

             நெய்வேலி என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்களுக்கான புதிய போனஸ் மற்றும் ஊக்க ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகத்திடம் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

               இதுகுறித்து நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடந்த 7-ந்தேதி இரவு 10 மணி முதல் என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் என்.எல்.சி. நிறுவன நிர்வாகத்தினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்தது.

            அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன், கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், என்.எல்.சி. நிறுவன சேர்மன் அன்சாரி, நிறுவன இயக்குனர்கள் சுரேந்தர்மோகன், பாபுராவ், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மற்றும் பாட்டாளி தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் பேச்சுவார்த் தையில் கலந்து கொண்டனர்.

             சுமார் 3 மணி நேர பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி ரூ.51 ஆயிரம் போனஸ் மற்றும் இன்சென்டிவ் தொகையாகவும், வருகை பதிவின் அடிப்படையில் கூடுதல் ஊக்க தொகையாக ரூ.8160 வழங்கவும் என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புக்கொண்டது. மேலும் ஒப்பந்த தொழிலாளர் சீனியாரிட்டி பட்டியலை 2 மாதங்களில் வெளியிடவும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக தலா ரூ.500 வழங்கவும் நிர்வாக தரப்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. 

              பேச்சுவார்த்தை உடன் பாட்டை தொடர்ந்து ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர். இன்று காலையிலும் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior