நெய்வேலி:
முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நெய்வேலி 19-வது வட்டம் கே.என்.சுப்புராயர் சாலையில் உள்ள பா.ம.க.வின் என்.எல்.சி. பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்திற்கு நள்ளிரவு 12 மணிக்கு சிலர் வந்தனர். வாசலில் நின்ற காவலாளி கோவிந்தராஜை தாக்கினார்கள். பின்னர் அலுவலக கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த டி.வி. மற்றும் டெலிபோனை உடைத்து நொறுக்கினார்கள். நாற்காலிகள், மேஜைகள், டியூப்லைட்டுகள் உடைக்கப்பட்டன. பீரோவை தள்ளி விடடு அங்கிருந்த பொருட்களை சூறையாடிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
மேலும் நெய்வேலி 1-வது வட்டத்தில் இருந்து 30-வது வட்டம் வரை இருந்த பா.ம.க.கொடிக்கம்பங்கள் நள்ளிரவில் வெட்டி சாய்க்கப்பட்டன. சூறையாடிப்பட்ட பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்திற்கு என்.எல்.சி. பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
பாட்டாளி தொழிற்சங்க தலைவர் ஜோதி பிரகாசம், பொது செயலாளர் திலகர் பொருளாளர் ஏஞ்சலின் மோனிகா, அலுவலக செயலாளர்கள் சுப்பிரமணியன் மற்றும் நெய்வேலி நகர செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் சூறையாடப்பட்ட அலுவலகத்தை பார்வையிட்டார்கள்.
நெய்வேலி பா.ம.க. நகர செயலாளர் சக்கரவர்த்தி கூறியது:-
பாட்டாளி மக்கள் கட்சியின் அடித்தள பணியிலிருந்து தொடங்கி முற்றிலுமாக பாடுபட்டவர் வேல்முருகன். அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. இதனால் நெய்வேலி பா.ம.க. தொண்டர்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவர்களது உணர்வுக்கு மதிப்பு அளிக்கிறேன். கட்சியில் வேல்முருகனின் சீரிய பணிகளை நினைவில் கொண்டு மீண்டும் அவரை கட்சி பணியில் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.