உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 20, 2011

கடலூரில் 166 வி.ஏ.ஓ. பணியிடங்கள் காலி: ஆட்சியர்

சிதம்பரம்:

               கடலூர் மாவட்டத்தில் 166 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாக பணிகள் மேற்கொள்ள நெருக்கடி ஏற்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.  

              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக எஸ்.சி., எஸ்.டி. தனிப்பிரிவு மற்றும் கடலூர் மாவட்ட தாட்கோ நிறுவனமும் இணைந்து எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான ஒரு மாதகால ஆயத்த பயிற்சி முகாம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.  

            விழாவில் பல்கலைக்கழக பதிப்புத்துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான நூலை துணைவேந்தர் எம்.ராநாதன் வெளியிட்ட அதன் முதல் பிரதியை ஆட்சியர் பெ.சீதாராமன் பெற்றுக் கொண்டார்.  

விழாவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்துப் பேசியது:  

           கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 604 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உள்ளது. இவற்றில் 166 இடங்கள் காலியாக உள்ளதால் மாவட்ட நிர்வாக பணிகள் மேற்கொள்ள நெருக்கடி ஏற்படுகிறது. தற்போது ஒரு நிர்வாக அலுவலர் 3 கிராமங்களில் பணியாற்றும் நிலை உள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் அனைவரும் தோல்வியுற்றனர்.  

           இதைக் கருóத்தில் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வகிப்பதால் அவ்ர்களுக்கு தேர்வுக்கான ஆயத்த பயிற்சி நடத்த முடிவு செய்யப்பட்டு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 59.354 பேர் தேர்வு எழுதுகின்றனர். எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயிற்சியில் பங்கேற்ற 85 பேரும் தேர்ச்சி பெற வேண்டும். கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இப்பயிற்சியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பெ.சீதாராமன் தெரிவித்தார்.  

விழாவில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் வாழ்த்துரை வழங்கி பேசியது: 

             கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்காக பல்கலைக்கழக ஆசிரியர்கள் தொகுத்து பதிப்புத்துறை மூலம் இலவச நூலை வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரியது. இந்த நூல் அனைவருக்கும் மலிவான விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இதுபோன்று டிஎன்பிஎஸ்சி, ஐஏஎஸ் உள்ளிட்ட தேர்வுக்கான நூல்களை பேராசிரியர்கள் தயாரித்து நமது பதிப்புத்துறை மூலம் வெளியிட வேண்டும்.  

              மேலும் இதுபோன்ற அரசு பயிற்சி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த அண்ணாமலைப் பல்கலைக்கழக தயாராக உள்ளது என துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தார். விழாவுக்கு கலைப்புல முதல்வர் ஏ.என்.கண்ணப்பன் தலைமை வகித்தார். எஸ்.சி., எஸ்.டி.ஸ பிரிவு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தெய்வசிகாமணி வரவேற்றார். மாவட்ட தாட்கோ மேலாளர் ரங்கநாதன் திட்டவிளக்கவுரையாற்றினார். பேராசிரியர் கே.சிவக்குமார் நன்றி கூறினார்.  விழாவில் என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.ஜெயராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

சிதம்பரம் அருகே 1100 ஏக்கரில் 3600 மெகாவாட் மின்உற்பத்தி அனல் மின் நிலையம்

சிதம்பரம்:

             சிதம்பரத்தை அடுத்த கொத்தட்டை அருகே 1100 ஏக்கரில் ஐஎல் எஃப்எஸ் தமிழ்நாடு பவர் கம்பெனி 3,600 மெகாவாட் மின்உற்பத்தி அனல் மின்நிலையத்தை தொடங்கவுள்ளது.  தற்போது நிலங்கள் கையகப்படுத்தும் பணி முடிவுற்றுள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் மின்நிலையம் இயங்கும் என தமிழ்நாடு பவர் கம்பெனி துணைத் தலைவர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார்.  

இதுகுறித்து சிதம்பரத்தில் புதன்கிழமை தமிழ்நாடு பவர் கம்பெனி துணைத் தலைவர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தது:  

              இந்த மின்நிலையம் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 10 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தோனேசியாவிருந்து நிலக்கரி கொண்டு வரப்பட்டு மின்உற்பத்தி செய்யப்படவுள்ளது. முதல்கட்டமாக 1,200 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும்.  

            மேலும் தமிழ்நாடு பவர் கம்பெனி, ஐஎல்எஃப்எஸ் கல்வி நிறுவனத்துடன் இணைந்து புதுச்சத்திரத்தில் கிராமப்புற மகளிர் தொழிற்பயிற்சி மையத்தை தொடங்கி உள்ளது. இதில் மின்சாரத்தில் இயங்கும் 30 நவீன தையல் இயந்திரங்களும், உபகரணங்களும் நிறுவப்பட்டுள்ளன.  கொத்தட்டை மற்றும் வில்லியநல்லூருக்கு உட்பட்ட கிராமங்களான பஞ்சங்குப்பம், கரிக்குப்பம் ஆகிய கிராமங்களில் இயங்கும் சுமார் 20 மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருக்கும் மகளிர் சுமார் 60 பேர் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு தொழிற்பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.  

           தொழிற்பயிற்சி முடிந்தவுடன் அதில் தேர்வு பெறும் மகளிர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க ஏதுவாக மேலும் 70 தையல் இயந்திரங்களை நிறுவவும் ஐஎல்எஃப்எஸ் தமிழ்நாடு பவர் கம்பெனி திட்டமிட்டுள்ளது.  கொத்தட்டை, அரியகோஷ்டி பஞ்சாயத்துக்குட்பட்ட கரிக்குப்பம், வி.பஞ்சங்குப்பம், புதுக்குப்பம், புதுப்பேட்டை, இந்திராநகர், சின்னூர் பகுதிகளில் உள்ள தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு வெல்டிங், பிட்டர் போன்ற தொழிற்கல்வி வழங்க எங்களது நிறுவனம் மங்களம் ஐடிஐ, முருகேசன் ஐடிஐ ஆகிய கல்வி நிறுவனங்களில் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் மாணவர்களின் முழுகல்வி கட்டணத்தையும் வழங்கி படிக்க வைக்கவுள்ளோம்.  

             இதன் மூலம் 2011-ம் ஆண்டில் மட்டும் 75 மாணவர்களை வேலைத் தகுதி பெற முடியும் என எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார். ஐஎல்எஃப்எஸ் கல்வி நிறுவன ஒருங்கிணைப்பாளர் என்.ரமேஷ் உடனிருந்தார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் மது விற்பனை ரூ. 8.50 கோடி

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில் 3 நாள்களில் ரூ. 8.5 கோடிக்கு மேல் மது விற்பனை ஆகி இருக்கிறது.  

            தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டு தினமாக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, பொங்கல் கொண்டாட்டங்களில் மக்களின் ஈர்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது.  மேலும் பொங்கல் புத்தாண்டை முன்னிட்டு, தொடர்ந்து 4 முதல் 5 நாள்கள் வரை விடுமுறை நாளாகும் நிலை ஆண்டுதோறும் இருப்பது, மக்களின் மகழ்ச்சிக் கொண்டாட்டங்களை மேலும் தீவிரப்படுத்தி விடுகிறது.  

           அந்த வகையில் இவ்வாண்டும் பொங்கல் பண்டிகை, களைகட்டி இருந்தது. 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் தாண்டவம் ஆடிய மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.  இதன் விளைவு இளைஞர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரையும் மதுபானக் கடைகள் சுண்டி இழுத்துக் கொண்டன.  திருவள்ளுவர் தினமாகக் கொண்டாடப்பட்ட 16-ம் தேதி, டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. எனவே 14, 15, 17 ஆகிய 3 நாள்களில் கடலூர் மாவட்ட மதுக்கடைகளில் மது விற்பனை அமோகமாக இருந்தது.  3 நாள்களிலும் மொத்தம் ரூ. 8,55,32,825-க்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 

14-ம் தேதி ரூ. 1,72,35,750-க்கும் 
15-ம் தேதி ரூ. 3,39,82,320-க்கும் 
17-ம் தேதி 3,43,14,755 க்கும் 

          மது விறப்பனை ஆகி இருக்கிறது.  

               இதுதவிர கடலூர் மாவட்ட மற்றும் புதுவை மாநில எல்லையில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பலர், மது விலை குறைவு காரணமாக புதுவை மாநிலம் சென்று மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.  எனவே மேற்கண்ட 3 நாள்களில் தமிழக மக்களின் வருவாயில் கணிசமான ஒரு பகுதி, புதுவை மாநிலத்துக்கும் சென்று இருப்பதை மறுக்க முடியாது.    

கோரிக்கை அட்டை அணிந்த டாஸ்மாக் பணியாளர்கள்  

              இந்நிலையில் டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம், பணிப்பாதுகாப்பு, 8 மணி நேர வேலை உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர், தங்கள் கோரிக்கைளை வலயுறுத்தி செவ்வாய்க்கிழமை, கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் போராட்டம் நடத்தினர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கைவினை கலைஞர்களுக்கு விருது போட்டி விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

            கைவிணை கலைஞர்களுக்கு தேசிய விருதுக்கான போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பு: 

           டில்லி மத்திய அரசின் கைவினை பொருட்கள் அபிவிருத்தி ஆணையர் அலுவலகம் ஒவ்வொரு ஆண்டும் தலை சிறந்த கைவினை கலைஞர்களுக்கு போட்டி நடத்தி அதன் மூலம் தேர்வு செய்து விருது வழங்கப்படுகிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்களை கவுரவப்படுத்தும் வகையில் மத்திய அரசின் சான்றிதழ், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் அங்கவஸ்திரம் ஆகியவற்றை ஜனாதிபதி நேரடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

 இப்போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள கலைஞர்கள் உரிய விண்ணப்பத்துடன் 

உதவி இயக்குனர் 
(கைவினைப் பொருட்கள்) கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் சேவை விரிவாக்க மையம், 
எண்.14, பொன்நகர் மெயின்ரோடு, 
ரெட்டியார்பாளையம், 
புதுச்சேரி-605010 (போன் 0413-2206615) 

            அல்லது கடலூர் மாவட்ட தொழில் மையத்தில் வரும் மார்ச் 25ம் தேதிக்குள் நேரடியாக வழங்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதியில் 16.5 லட்சம் வாக்காளர்கள்: கலெக்டர்

கடலூர்:

 கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-

                   2011-ம் ஆண்டிற்கான சுருக்குமுறை திருத்த புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல், கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 10-01-2011-ல் வெளியிடப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி கடலூர் மாவட்டத்தில் 01-01-2011 தேதியை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள் 25-10-2010 முதல் 13-11-2010 வரை 56534 மனுக்கள் பெறப்பட்டு, கள விசாரணையின் அடிப்படையில் 49976 மனுக்கள் தகுதியுடையவைகளாக கண்டறியப்பட்டு பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

 கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் தற்பொழுது உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

தொகுதி - திட்டக்குடி (தனி), ஆண்-87542, பெண்-86065,  மொத்தம் - 173607 
 
தொகுதி - விருத்தாசலம், ஆண்-98630, பெண்-94490, மொத்தம் - 193120 
 
தொகுதி - நெய்வேலி, ஆண்-83277, பெண்-78530, மொத்தம் - 161807 
 
தொகுதி - பண்ருட்டி, ஆண்-95037, பெண்-94331, மொத்தம் - 189368 
 
தொகுதி - கடலூர், ஆண்-88650, பெண்-88716, மொத்தம் - 177366 
 
தொகுதி - குறிஞ்சிப்பாடி, ஆண்-91543, பெண்-86807, மொத்தம் - 178350 
 
தொகுதி - புவனகிரி, ஆண்-104753, பெண்-100511, மொத்தம் - 205264 
 
தொகுதி - சிதம்பரம், ஆண்-94192, பெண்-92427, மொத்தம் - 186619 
 
தொகுதி -  காட்டுமன்னார்கோயில் (தனி), ஆண்-93009, பெண்-86624, மொத்தம் - 179633 
 
மொத்தம் ஆண்-836633, 
பெண்-808501, 
மொத்தம் - 1645134 
 
                   மேற்காணும் இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்பதை மேற்காணும் இடங்களில் வைக்கப் பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் சரிபார்த்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more »

River festival draws large turnout

CUDDALORE: 

         The annual ‘river festival' drew a large number of people to the banks of the Pennaiyar here on Wednesday.

          There was also a huge congregation of deities, carried on flower bedecked bullock-carts and tractor-trailers, taken from various temples across the district to the river front for “theerthavari” or in other words for sanctified bath. Hence, it was a fete combining the spiritual and natural aspects of life. In fact, the Pongal festivities culminated with the river-side event. S.Kamakoti (56), who has been in the habit of coming to the river along with his family members on the occasion, said that he imbibed the habit from his ancestors and was too happy to pass on the heritage to his successors.

            It was also an occasion for devotees to offer worship to various deities at once place. K.Thirumalai, a native of Cuddalore town, said that knowing the importance of the festival, the civic body should make advance preparations by keeping the river banks neat and tidy. Thorny outgrowths are a common sight and the civic body cared to clear them only a day prior to the festival. It would be better if permanent arrangements were made to keep the river banks at this point always clean.

        The lighting arrangement could also be improved and a small park could be set up to enable people to visit the place regularly, he said. The event also provided the avenue for the small vendors to make tidy profits through brisk business.

Read more »

Compensation distributed to accident victims


Collector P.Seetharaman giving away compensation in Cuddalore on Tuesday.

CUDDALORE: 

              District Collector P.Seetharaman on Tuesday gave away compensation to the tune of Rs 7.10 lakh to the families of four students who were killed and 31 others who were injured in a recent road accident that occurred at Semmanguppam. It included a solatium of Rs 1 lakh each to four families and a financial assistance of Rs 10,000 to the injured to defray the medical expenses.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior