கடலூர்:
கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் கிரவுன் சர்க்கஸ் துவக்க விழா நேற்று நடந்தது. நகராட்சி சேர்மன் சுப்ரமணியன் திறந்து வைத்தார். விழாவில் கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். சர்க்கசில் ஆப்பிரிக்கா, மணிப்பூர்,
மங்கோலியா கலைஞர்களின் ஜிம்னாஸ்டிக், ரிங் டான்ஸ், இரும்பு கூண்டுக்குள் இருசக்கர வாகனம் ஓட்டுவது, ஸ்கை வாக், பயர் டான்ஸ், ஆப்பிரிக்கா காட்டு நடனம், பார் விளையாட்டு, கூர்மையான நான்கு கம்பி மீது படுப்பது, அந்தரத்தில் கம்பி மீது தலைகீழாக தொங்குவது உள்பட 28 வகையான சாகசங்கள் இடம் பெற்றுள்ளன. கலைஞர்கள், குதிரை, ஒட்டகங்களின் அணிவகுப்பு, ஜோக்கர்களின் நகைச்சுவை உள்ளிட்ட நிகழ்ச்சியும்இடம் பெற்றுள்ளன. அக்டோபர் 10ம் தேதி, வரை நடைபெறும் சர்க்கஸ் தினமும் மதியம் 1 மணி, மாலை 4, இரவு 7 மணி என மூன்று காட்சிகள் நடக்கிறது. கட்டணம் 50, 100, 150 ரூபாய் ஆகும். 150 ரூபாய் டிக்கெட் மட்டும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை முன்பதிவு செய்யப்படுகிறது.
இதுகுறித்து சர்க்கஸ் மேலாளர் சந்திரன் கூறுகையில்,
சர்க்கசில் ஆப்பிரிக்க கலைஞர்கள் பங்கேற்பது இதுவே முதன் முறையாகும். பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் கலைஞர்களின் சாகச நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன என்றார்.
.