உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 27, 2011

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: இரண்டாம் இடம் பிடித்த 11 மாணவர்கள் விபரம்

 பத்தாம் வகுப்புத் தேர்வில் 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் 11 மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். 


அவர்களின் விவரம்:
1. ஏ.சதாம் உசேன், முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, மேலப்பாளையம்.

2. வி.பாக்யஸ்ரீ, ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.

3. பி.அருண்ராஜா, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, அபிராம், பரமக்குடி.

4. ஜெ.ஜெயப்பிரியா, எஸ்.எச்.என். இதெல்ஹார்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாத்தூர்.

5. டி.ஹரிபாரதி, நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்.

6. எம்.பொன்மணி, எஸ்.ஆர்.பகத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்.

7. என்.எம்.கார்த்திக், புனிதமேரி மேல்நிலைப்பள்ளி, மதுரை.

8. ஏ.சுபலட்சுமி, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, செல்ல பெருமாள்பேட்டை, புதுச்சேரி.

9. வி.சீனிரதி, அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பேட்டை, சென்னை.

10. எம்.புவனா, விஜயந்தா மேல்நிலைப்பள்ளி, ஆவடி, சென்னை.

11. ஆர்.சுஷ்மிதா, பென்டிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி, சென்னை. 



Read more »

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மூன்றாம் இடம் பிடித்த 24 மாணவர்கள் விபரம்

பத்தாம் வகுப்புத் தேர்வில் 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் 24 மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். 
 
அவர்களின் விவரம்:

1. நிம்ருதா - செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோயில்.

2. கே.லட்சுமி பிரியா - எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, வடசேரி, நாகர்கோயில்.

3. ஜே. உமா - எஸ்.எச்.என். எதேல் ஹார்வி மேல்நிலைப்பள்ளி,  சாத்தூர், அருப்புக்கோட்டை.

4. லலித் செல்லப்பா - பி.ஏ.சி.எம்., மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம்.

5. குங்குமால்யா -  எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி, உடுமலைப்பேட்டை.

6. பி.எம்.இந்து - அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கவிந்தாபாடி, கோபிச்செட்டிப்பாளையம்.

7.எஸ்.ஹரிபிரபா - ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்.

8. ஏ.ஷோபனா - ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால்,
கோபிச்செட்டிப்பாளையம்

9. எஸ்.அசோக்குமார் - எஸ்.வி.வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, தாசம்பாளையம், கோபிச்செட்டிப்பாளையம்.

10. என்.லோகேஷ்குமார் - ஜி.வி. மேல்நிலைப் பல்ளி, மாசிலாபாளையம், சங்ககிரி.

11. கே.விக்னேஸ்வரி - வெற்றி விகாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கீரனூர், நாமக்கல்.

12. கே.காவ்யா - அரசு மேல்நிலைப்பள்ளி, காரிமங்கலம், தருமபுரி.

13. என்.செந்தில்குமார் - சேரன் மேல்நிலைப் பள்ளி, புன்னம்சத்திரம், கரூர்.

14. எஸ்.ஜெயப்பிரகாஷ் - ஈ.ஆர்.  மேல்நிலைப் பள்ளி,  திருச்சி.

15. எம்.ஜோதீஸ்வரன் - ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி, திருச்சி.

16. எஸ்.காயத்ரி - அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை.

17. ஏ.பவித்ரா தேவி - ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,  தஞ்சாவூர்.

18. சி.அபிநயா - கலைமகள் மேல்நிலைப் பள்ளி, வல்லம், தஞ்சாவூர்.

19. ஜே.ஷைனி - மௌன்ட் பார்க் மேல்நிலைப் பள்ளி, தியாகதுர்கம், விழுப்புரம்.

20. எம்.ஷபனா பேகம் - செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம்.

21. இ.தனசேகர் - டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

22. எச்.சங்கீதா - செயின்ட் ஆன்டனி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்.

23. ஜே.தாமோதரன் - பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை -21.

24. எஸ்.ஐயப்பன் - பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை -௨௧

Read more »

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னலா தேவி முதலிடம்


  எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: 5 மாணவிகள் முதல் இடம்; 11 பேர் 2-ம் இடம், 24 பேர் 3-வது இடம்

 
 
 வாழ்த்துக்கள்
 
 
         10ம் வகுப்பு தேர்வில் முதல் இடத்தை 4 பேர் பிடித்து உள்ளனர். இதில் செய்யாறு மாணவி மின்னலா தேவியும் ஒருவர். செய்யாறு அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்து மின்னலா தேவியும் 500-க்கு 496 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
 
மின்னலா தேவி பாடவாரியாக எடுத்த மதிப்பெண் :-
 
தமிழ் - 98 
ஆங்கிலம் - 98 
கணக்கு - 100 
அறிவியல் - 100 
சமூக அறிவியல் - 100  
மொத்தம் - 496 
 
 மாணவி மின்னலா தேவியின் தந்தை மோகன் எம்.படி. பூண்டி கிராம அஞ்சலகத்தில் தபால்கரராக பணிபுரிகிறார். தாய் சாந்தி. 
 
முதலிடம் பிடித்த மாணவி மின்னலாதேவி கூறியது:-
 
              நான் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்தேன். பண கஷ்டத்தால் 6-ம் வகுப்பு முதல் செய்யாறு அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் சேர்த்தனர். எனது தாத்தா ஏழுமலை என்னிடம் மாநிலத்தில் முதலிடம் பிடித்து பத்திரிகையில் உன் படம் வரவேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறினார். அதற்காக நன்கு படித்தேன். எனக்கு தலைமை ஆசிரியர் அனுசா, ஆசிரியர்கள் ஊக்கம் அளித்தனர். ஆசிரியர்கள் என்னை வீட்டுக்கு அழைத்து நன்கு பயிற்சி அளித்தனர். மேலும் எனது தோழிகளுடன் மாநிலத்தில் முதலிடம் பிடிப்பது யார்? என்று போட்டி இருந்தது.
 
            ஆனால் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் படித்தேன். 498 மதிப்பெண் எதிர்பார்த்தேன். ஆனால் 496 மதிப்பெண் எடுத்தது சிறிது வருத்தமாக இருந்தாலும் மாநிலத்தில் முதலிடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக டி.வி.பார்ப்பதை நிறுத்திவிட்டேன். எந்த நேரமும் புத்தகத்துடனேயே இருப்பேன். எதிர்காலத்தில் டாக்டராக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஒரு உயிரை காப்பாற்றுவதில் ஏற்படும் திருப்தி வேறு எதிலும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
 
செய்யாறு அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி 2005, 2009 ஆகிய ஆண்டுகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றது. தற்போது மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
 
 
 
 

Read more »

சிதம்பரம் அருகே பூட்டியே கிடக்கும் வி.ஏ.ஓ. அலுவலகம்!

சிதம்பரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தில் பல மாதங்களாக பூட்டியே கிடக்கும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்.
சிதம்பரம்:

         சிதம்பரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், கடந்த பல மாதங்களாக பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இதனால், தேவையான சான்றுகள் பெற முடியாமல் பொதுக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

           போதிய கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் கடலூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் பூட்டப்பட்ட நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்கள் சிட்டா-அடங்கல், சான்றிதழ் உள்ளிட்டவை பெற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே காலியான பணியிடங்களில் கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரம் கோட்டத்தில் நாஞ்சலூர், சிவாயம், பூலாமேடு, துணிஞ்சிரமேடு ஆகிய கிராமங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லை. 

            போதிய கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் மேற்கண்ட கிராமங்களுக்கு காட்டுக்கூடலூர் கிராம நிர்வாக அலுவலர் செüந்தரராஜன், கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். ஆனால் நாஞ்சலூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு வருவது இல்லை. வாரத்திற்கு ஒருமுறை வந்தாவது இப்பகுதி மக்களுக்கு தேவையான சான்றிதழ்களை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



Read more »

மருத்துவ விண்ணப்பம் சேர்ந்து விட்டதா? இணையதளத்தில் அறிய வசதி


சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பூர்த்தி செய்யப்பட்ட எம்.பி.பி.எஸ். விண்ணப்பத்தை வியாழக்கிழமை
 
             தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்து வரும் மாணவர்கள், தங்களது விண்ணப்பம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவைச் சென்று விட்டதா என்பதைத் தெரிந்து கொள்ள இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.
 
              சென்னை உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள், 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 600-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 900-த்துக்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் சேர இதுவரை 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.
 
             விண்ணப்பத்தைப் பெறவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்கவும் ஜூன் 2-ம் தேதி கடைசி நாளாகும். எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 21-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் ஜூன் 30-ம் தேதி, முதல் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.இணையதளத்தில் வசதி: பள்ளிகளில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை (மே 25) முதல் வழங்கப்பட்டு வருவதால், எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பம் பெற்ற மாணவர்கள், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வருகின்றனர். 
 
               சில மாணவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் வளாகத்தின் தேர்வுக் குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் போட்டு வருகின்றனர்.இ தே போன்று டிப்ளமோ (நர்சிங்), பி.எஸ்ஸி. (நர்சிங்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேரவும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர். எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். மற்றும் டிப்ளமோ (நர்சிங்), பி.எஸ்ஸி. (நர்சிங்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்துள்ள மாணவர்கள், தங்களது விண்ணப்பம் சேர்ந்துவிட்டதை தமிழக அரசின் இணையதளம்  மூலம் உறுதி செய்து கொள்ளலாம். இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள காலியிடத்தில் விண்ணப்ப எண் அல்லது பிளஸ் 2 தேர்வு பதிவு எண் ஆகிய ஏதாவது ஒன்றை "டைப்' செய்யும் நிலையில் விண்ணப்பம் சேர்ந்து விட்டதை எளிதாக உறுதி செய்து கொள்ள முடியும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி கூறினார்.
 
 முகவரி 
 
http://www.tnhealth.org/

Read more »

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 5 மாணவிகள் முதலிடம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் 5 மாணவிகள் 496 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

முதலிடத்தைப் பிடித்துள்ள மாணவர்கள் விவரம்:

என்.நித்யா- ஸ்ரீவில்லிபுத்தூர்  எஸ்.எச். அரசு மேல்நிலைப்பள்ளி
எஸ்.ரம்யா- கோபிசெட்டிபாளையம்  ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப்பள்ளி
எஸ்.சங்கீதா- சேலம்  முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி
மின்னல்தேவி- செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளி 
ஹரிணி-திருவொற்றியூர்  அவர்லேடி மெட்ரிக் பள்ளி



Read more »

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 85.3 சதவீதம் தேர்ச்சி

           தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரலில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. மார்ச் 28 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, எட்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 956 மாணவர்கள் எழுதினர்.

             மெட்ரிக் தேர்வை, ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 252 பேர் எழுதினர். ஓ.எஸ்.எல்.சி., தேர்வை, 1,561 பேரும் எழுதினர்.  இன்று காலை 10 மணியளவில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.

             500க்கு 496 மதிப்பெண் பெற்று 5 பேர் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளனர். 12 பேர் இரண்டாவது இடத்தையும், 24 பேர் 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 85.3 சதவீதமாகும்.


Read more »

கடலூர் தாசில்தார் அலுவலகத்தில் "சிட்டா" கிடைக்காமல் பொதுமக்கள் அலைகழிப்பு

கடலூர் : 

           கடலூர் தாசில்தார் அலுவலகத்தில் "சிட்டா' கிடைக்காமல் பொதுமக்கள் கடந்த நான்கு நாட்களாக அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். 

             பொதுமக்கள் வங்கியில் கடன் பெறவும், பல்வேறு அரசு சலுகைகளை பெறவும் சிட்டா நகல் தேவைப்படுகிறது. இதை கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறுவதற்கு காலதாமதம் ஆவதை தடுக்க அரசு கம்ப்யூட்டர் மூலம் எளிதாக சிட்டா வழங்கும் முறையை கொண்டு வந்தது. இதன் பயனாக எந்த ஊரில் இருந்தாலும் உரிமையாளர்கள் தமது நிலத்திற்கான "சிட்டா' வை எடுத்துக்கொள்ளலாம். கடலூரில் கலெக்டராக இருந்த ககன்தீப் சிங் பேடி காலத்தில் "சிட்டா' பெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. 

              ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் தொடுதிரை மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான "சிட்டா' மற்றும் இதர விவரங்கள் பெற்றுச் செல்ல எளிய முறையை துவக்கி வைத்தார். இந்நிலையில் கடலூர் தாலுகா அலுவலகத்தில் கடந்த நான்கு நாட்களாக பொதுமக்கள் "சிட்டா' கேட்டு காத்துக் கிடந்தனர். ஆனால் இதற்கான தொடுதிரை அறை திறக்கப்படாமல் இருந்தது. அப்படியே திறந்தாலும் அதற்குரிய ஊழியர் இருப்பதில்லை. இது பற்றி கேட்டால் பிரிண்டரில் டோனர் இல்லை. பிறகு வாருங்கள் என கூறி அனுப்புகின்றனர். இப்படியே கடந்த நான்கு நாட்களாக பொதுமக்கள் "சிட்டா' கிடைக்காமல் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து ஊழியர்கள் பணியை சரிவர செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர் என பொதுமக்கள் புலம்புகின்றனர்.


Read more »

Cuddalore MP K.S.Alagiri plea to resume train services

CUDDALORE: 

         Cuddalore MP K.S.Alagiri has appealed to Minister of State for Railways K.H. Muniyappa to resume train services that were earlier operated on the metre gauge section but later withdrawn after gauge conversion in this region.

           In a representation, Mr. Alagiri said that since there was no proper road transport facility between Sengottai and Chennai, people were expecting the Sengottai-Chennai Express service to be resumed via Thanjavur, Chidambaram and Cuddalore. He also called upon the Minister to arrange for the resumption of the Mayiladuthurai-Bengaluru service via Chidambaram, Cuddalore and Vriddhachalam, which was discontinued after the gauge conversion work was taken up.

            Similarly, he sought the re-introduction of the Mayiladuthurai-Chennai Express to be run through Chidambaram and Cuddalore. Mr. Alagiri also called for introduction of train service in the Tiruchi-Bengaluru section via Vriddhachalam during summer. Such a train service was in vogue last summer but cancelled in the current season. Mr. Alagiri also pointed out that the train service operating between Madurai and Tirupati did not stop at the Chidambaram junction.

         Residents of Chidambaram were disappointed that such a train linking important centres did not halt at the temple town. Traders, students, businessmen and pilgrims were hoping that after gauge conversion more number of trains would be introduced. However, their hopes were belied because even the usual train services were either cancelled or run without halt in any of the stations in Cuddalore, Mr. Alagiri said.


Read more »

Groupism within the Dravida Munnetra Kazhagam in Cuddalore district : Former MLA flays some party functionaries

CUDDALORE: 

        Groupism within the Dravida Munnetra Kazhagam in Cuddalore district came to the fore at the executive committee meeting held in the presence of former Health Minister M.R.K. Panneerselvam, district secretary of the party, at Kurinjipadi on Wednesday.

        The meeting took stock of the reasons for the rout the party suffered in the Assembly elections. Some of the speakers blamed it on the alliance partners, stating that they either remained complacent or did not do proper field work. When it was the turn of former MLA (Nellikuppam constituency) Saba Rajendran, who lost the Panruti seat to P. Sivakolunthu of the Desiya Murpokku Dravida Kazhagam by a margin of 10,716 votes, he attributed his defeat to the “surreptitious activities” of certain party functionaries.

        Mr. Rajendran even pinpointed Venkataraman, Anna Gramam union secretary of the DMK (who was also present at that time), as having primarily worked against him and therefore called for his removal from the party. The meeting adopted resolutions on how to celebrate the birthday of DMK chief M. Karunanidhi in a grand manner by distributing educational aid to students and organise demonstration against the new government for having deferred the implementation of the uniform system of education.

         However, it noted that for the partymen of the district, which remained a bastion of the DMK, the recent election results must have come as a shock. But, to lift their spirits, the resolution called upon them not to take the electoral setback to their heart. However, soon after the meeting concluded, some partymen, said to be supporters of Mr. Rajendran, physically assaulted Mr. Venkataraman. Mr. Panneerselvam came to the latter's rescue .


Read more »

Mass contact programmes to be held on May 28, 29 in Cuddalore district

CUDDALORE: 

       Two mass contact programmes will be held on May 28 and 29 at C. Keeranur in Vriddhachalam block and Kudikadu in Cuddalore block respectively in the presence of District Revenue Officer C. Rajendran.

         A statement from the Collectorate said petition boxes would be kept in the office of the Village Administrative Officers of both the places and residents could deposit their written grievances in advance. Officials would also visit the villages a day prior to the programme to personally collect petitions. Medical camps and exhibitions highlighting the performance of the government departments would also mark the occasion.



Read more »

Free rice available throughout the month in Cuddalore district

CUDDALORE: 

   The State government has allotted adequate quantity of free rice to meet 100 per cent requirements of all eligible ration card-holders in Cuddalore district.

         The supply of free rice will begin on June 1 at all fair price shops across the district, according to P. Seetharaman, Collector. However, anticipating heavy rush at the fair price shops, the Collector said in a release that card-holders need not crowd around the shops on the very first day itself. As free rice would be available throughout the month, they could go to the shops on any day in the month.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior