உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 06, 2011

உங்கள் வாக்கை யாரேனும் செலுத்தினால் என்ன செய்ய வேண்டும்?

          உங்களுடைய வாக்கை வேறு யாரேனும் செலுத்தினால், வாய்ப்பு பறிபோய் விட்டதே எனக் கருதி உடனடியாக வாக்குச் சாவடியை விட்டு வெளியேறாதீர்கள். இதற்கான மாற்று ஏற்பாட்டை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.


            வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடி சென்றதும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா? என சரிபார்க்கப்படும். அப்போது, உங்களுடைய பெயரில் வேறு யாரேனும் வாக்களித்து இருந்தால் அந்தத் தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.நீங்கள் வாக்களிக்காத பட்சத்திலும் உங்கள் வாக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் இதனை வாக்குச் சாவடி அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.இதையடுத்து, தேர்தல் சட்டத்தின் "49 பி' பிரிவின்படி வாக்குச் சீட்டு தரப்படும். 

             மேலும், இதற்கான பதிவேட்டில் உங்கள் பெயர் மற்றும் கையெழுத்து பெறப்படும். இதன்பின், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குச் சீட்டைப் போன்றே ஒரு சீட்டு தரப்படும்.அந்தச் சீட்டின் பின்புறம், வாக்களிக்க இயலாத நிலையில் உள்ள வாக்குச் சீட்டு (tendered ballot paper) என எழுதப்படும். அதில் தேர்தல் வாக்குச் சாவடி அதிகாரியின் கையெழுத்திடப்படும். அந்தச் சீட்டு உங்களிடம் தரப்படும். அதனுடன் அம்புக்குறியிட்ட ஒரு ரப்பர் சீல் கொடுக்கப்படும். 

             சீட்டில் நீங்கள் விரும்பும் நபரின் பெயருக்கு எதிரே அந்த சீலின் உதவியுடன் அச்சிடலாம். இந்தச் சீட்டுகள் தனியாக ஒரு கவரில் வைக்கப்படும்.தண்டனை கிடைக்கும்...வாக்குச் சாவடிக்குள் ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்த முகவர்கள் இருப்பார்கள். வாக்களிக்கும் ஒவ்வொருவரின் அடையாளத்தையும் அவர்கள் சோதிப்பார்கள். அதாவது, நீங்கள் வாக்களிக்கும் போது உங்களின் அடையாளம் கட்சி முகவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தலாம்.அந்தச் சூழலில், உங்களது வாக்கு சவாலான வாக்காக (CHALLENGE VOTE) கருதப்படும். அடையாள சான்றாக புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றைக் காட்டலாம். 

             சான்றுகளின் உண்மைத்தன்மை அடிப்படையில் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.அவர் வாக்காளர் இல்லை என்ற கட்சிகளைச் சேர்ந்த முகவர்களின் சவால் நிரூபிக்கப்படவில்லை என்றால் வாக்காளருக்கு வாக்குரிமை அளிக்கப்படும். சவால் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட வாக்காளர் வாக்களிக்க முடியாது. அதேசமயம், அவர் கள்ள வாக்கு அளிக்க முயற்சித்தார் என காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் சீட்டு வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.  தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்காளர் சீட்டுகளை விநியோகிக்க, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வாக்காளர் சீட்டுகளை வழங்கினர். 

              ஒரு வாக்குச் சாவடிக்கு ஒருவர் வீதம் நியமிக்கப்பட்டுள்ள, வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள், இந்த வாக்காளர் சீட்டுகளை வீடுவீடாகச் சென்று வழங்கி வருகிறார்கள்.  வாக்காளர் சீட்டுகள் முறையாக வழங்கப்பட்டு உள்ளனவா என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், திங்கள்கிழமை கங்கனாங்குப்பம், உச்சிமேடு கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர்  கடலூர் மாவட்ட ஆட்சியர் கூறியது:  

                சிதம்பரம் தொகுதியைத் தவிர மற்ற 8 தொகுதிகளிலும் வாக்காளர் சீட்டு வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. செவ்வாய்க்கிழமை இப்பணி முடிவடையும். மாவட்டம் முழுவதும் 16லட்சத்து 76 ஆயிரத்து 117 வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டு வழங்கும் பணி 2 நாள்களில் முடிவடையும். சிதம்பரம் தொகுதிக்கு மட்டும் வாக்காளர் சீட்டு 5,6 தேதிகளில் வழங்கப்படும்.  வாக்காளர் சீட்டு கிடைக்காதவர்கள் தாலுகா அலுவலகங்களைத் தொடர்பு கொண்டும் பெற்றுக் கொள்ளலாம். வாக்குப் பதிவின்போது வாக்காளர் சீட்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம். 

                9,458 தேர்தல் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்டப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், பிரதிநிதிகள், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டு சின்னம் பதிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.   பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு நுண் பார்வையாளர்களை நியமிக்க விரைவில் ஆணை வழங்கப்படும். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, முதன் முறையாக தேர்தல் பணி புரியும் போலீஸ் காவலர்களும் கணினி மென்பொருள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

                 வாக்குச் சாவடிகளில் லேப்டாப் வெப் காமிரா போன்றவற்றை பயன்படுத்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.  9 தொகுதிகளிலும் தபால் ஓட்டு வழங்கும் பணி செவ்வாய்க்கிழமைக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளைக் கடைபிடிக்க இரவு நேரங்களில் பறக்கும் படைகளின் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பறக்கும் படைகளில் ஏற்கெனவே நியமிக்கப்பட்டு இருந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நீக்கப்பட்டு, அந்த இடங்களில் துணை வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றார் ஆட்சியர்.

Read more »

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு மதுக்கடைகள் 3 நாள் மூடல்

கடலூர்:

            சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 11-ம் தேதி மாலை முதல், வாக்குப் பதிவு நடைபெறும் 13-ம் தேதி வரை மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.  

இதுகுறித்து ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

              சட்டப் பேரவைத் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதையொட்டி மதுபானக் கடைகள் அனைத்தையும், 11-ம் தேதி மாலை 5 மணி முதல், 13-ம் தேதி மாலை 5 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 13-ம் தேதியும் மூடிவிட தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. 

              இதனால், டாஸ்மாக் நிறுவனம் மூலம் நடத்தப்படும் சில்லறை மதுபானக் கடைகள், ஹோட்டல்களில் உள்ள மது அருந்தும் கூடங்கள் அனைத்தும், மேற்கண்ட தேதிகளில் மூடப்பட்டு இருக்கும்.  இந்த நாள்களில் மதுபானக் கடைகளும், மது அருந்தும் கூடங்களும் ஹோட்டல்களில் உள்ள மது அருந்தும் கூடங்களும் மூடப்பட்டு இருப்பதை டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள்,  ஹோட்டல் உரிமையாளர்கள் உறுதி செய்யவேண்டும். 

               இந்த உத்தரவை மீறி மதுபானக் கடைகள், மது அருந்தும் கூடங்கள் மற்றும் ஹோட்டலில் மது அருந்தும் பார்களை திறந்து வைத்து இருந்தாலோ, அவற்றில் மது விற்பனை நடைபெற்றாலோ, கடை மேற்பார்வையாளர்கள், ஹோட்டல், பார் உரிமையாளார்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

Read more »

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு தின விழா

குறிஞ்சிப்பாடி : 

            குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு தின விழா நடந்தது. 

            கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். தமிழ்த் துறைத் தலைவர் சிவபாலன் வரவேற்றார். நிர்வாகக்குழுத் தலைவர் சட்டநாதன் முன்னிலை வகித்தார். தமிழ்ச் சங்க செயலர் பேராசிரியர் குழந்தைவேலனார் சிறப்புரையாற்றினார். நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மோகன், ராமலிங்கம், சுந்தரமூர்த்தி, ராஜாமணி, ராஜாராம், வைத்தியநாதன், கணேசன், கிருபாகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் பேராசிரியர் முனவர் ஜான், மோகன் பரிசு வழங்கினர். விழா ஏற்பாடுகளை பேராசிரியர் ஆறுமுகம், ஸ்டாலின், உடற்கல்வி இயக்குனர் பத்மநாபன் ஆகியோர் செய்திருந்தனர்.

Read more »

சி.முட்லூர் அரசு கல்லூரி முதல்வருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

கிள்ளை : 

        சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி முதல்வருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது.
 
           சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சேரமான். இவருக்கு கல்லூரி வளாகத்தில் நடந்த பணி நிறைவு பாராட்டு விழாவில் துணை பேராசிரியர் லோகராஜன் வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் தட்சணாமூர்த்தி, வடலூர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் தெய்வநாயகம், ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் நடனம் முன்னிலை வகித்தனர்.
 
               அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆங்கிலத் துறை பேராசிரியர்கள் பழனியப்பன், ராஜாராமன், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவர் கதிர்வேல், கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி துணைப் பேராசிரியர் பாஸ்கர், சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி துணைப் பேராசிரியர் தங்கமணி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் செய்திருந்தனர்.

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் மாணவர்கள் விடைபெறும் விழா

விருத்தாசலம் : 
 
           கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் தமிழ்த் துறை சார்பில் விடைபெறும் நாள் விழா நடந்தது. இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு தமிழ்த்துறை மாணவர்கள் சார்பில் நடந்த விழாவிற்கு துறைத் தலைவர் முத்தழகன் தலைமை தாங்கினார். பேராசிரியர் தண்டபாணி, சிவக்குமார், ராணி, கருணாநிதி முன்னிலை வகித்தனர். மாணவர் பெர்னாண்டஸ் வரவேற்றார். விழாவில் இறுதியாண்டு மணவர்கள் தங்கள் கல்லூரி அனுபவங்களை மற்ற மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். பேராசிரியர்கள் ராஜசேகர், புவனேஸ்வரி, சாலமன், துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

NLC gets three modern indoor badminton courts


Brisk opening: NLC Chairman-cum-Managing Director A.R.Ansari (left) playing the maiden game after inaugurating the modern badminton court on NLC premises at Neyveli.

CUDDALORE: 

          The Neyveli Lignite Corporation has got another much-needed sporting facility in the form of three modern indoor badminton courts of national standards. These are meant to promote sports, recreational avenues and health aspects of the employees and their wards.

           The facility was thrown open to the employees by NLC Chairman-cum-Managing Director A.R.Ansari last Sunday in the presence of Director (Mines) Surender Mohan, Executive Director (Contracts) B.Sivagnanam and head of the research wing S.Santhanam. Speaking on the occasion, Mr Ansari said that sporting activity was a must for keeping good health and to nurture team spirit. Sports would not only develop physical fitness but would also instil confidence among the players to forge ahead.

           The CMD further said that the badminton courts had all sorts of modern facilities such as wooden flooring, floodlights and 15-metre high ceiling, all of national standards. NLC could already boast two swimming pools of national standards and two more swimming pools of international standards were under construction. Mr Ansari hoped that the employees and their wards would properly utilise the facilities to excel in sports activities to win laurels at the State, national and international events. The Chairman also played an exhibition match at the new badminton court.

           The NLC sources said that the Lignite City Club had been taking care of all sporting activities, besides conducting zonal and State-level events periodically. The Club had under its purview a modern gymnasium, table-tennis courts, tennis courts, billiard and snooker games, besides golf and swimming. Another significant aspect about the Club was that it had engaged qualified coaches for all the sports and they had a keen eye for spotting the budding talents and duly equipping them to excel in their chosen events.

         Since the Club was catering to the in-house requirements, there was a sense of exclusivity and much-needed privacy to practise to one's heart's content. The Club had also been successfully motivating the talented sportspersons to develop competitive spirit.

Read more »

EVMs kept poll-ready in Cuddalore



Cuddalore Collector P.Seetharaman verifying electronic voting machines in Cuddalore on Tuesday.


CUDDALORE:

    Electronic Voting Machines for the Cuddalore and Chidambaram constituencies were made poll-ready on Tuesday by inserting ballot papers carrying names and symbols of the candidates, in the machines.

         The exercise was carried out under the guidance of a technician from Bharat Electronics Ltd., in the presence of Election Observer D.S. Dhok Rajurkar, District Election Officer P. Seetharaman, and, candidates and their agents. The functionality of the EVMs were verified and the Returning Officer affixed his signature on the rear of the ballot papers.

       After the task was completed, the EVMs were sealed for safe custody. Similar measures would be adopted for other constituencies on Wednesday. Later, Mr. Rajurkar and Mr. Seetharaman reviewed the security arrangements at the places where the EVMs would be secured and counting centres.

Dry run to be held today

          Mr Seetharaman told reporters that for the first time, a “dry run” would be conducted at Cuddalore, Panruti, Kurinjipadi, Chidambaram, Neyveli, Thittakudi, Vriddhachalam and Bhuvanagiri on Wednesday. For each of the Assembly segment, a company of Central Para Military Forces led by a sectoral officer and micro-observers would carry out a mock exercise of how to safely transport the EVMs the day prior to and after polling.

          Mr. Seetharaman further said that micro-observers, mostly employees of the Neyveli Lignite Corporation and banks, would be imparted training on the NLC Training Complex on April 8. On April 10, the microwave towers of Bharat Sanchar Nigam Ltd. would be checked for load capacity and readiness of the polling stations would be checked.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior