உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 12, 2010

கல்வி உதவி வேண்டி விண்ணப்பம்

 உங்களால் முடிந்தால் உதவுங்கள் 
 
 
அனுப்புநர்:
S. நூர் முஹம்மது (டைலர்),
197/4 மேலாண்ட வீதி, C.N. பாளையம் - 607102, 
கடலூர் மாவட்டம்.
அலைபேசி எண்: (+91) 9786453164
 
            அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு...!  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
 
               நம் அனைவரின் மீதும் அந்த ஓரிறைவனின் சாந்தியும், சமாதானமும் நிகழட்டுமாக! ஆமீன்!!  நலம்! நலமறிய ஆவல்!! நிற்க...
 
                   S. நூர் முஹம்மது ஆகிய நான் கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் மற்றும் நடுவீரப்பட்டு அருகிலுள்ள C.N. பாளையம் என்ற கிராமத்தில் மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோருடன் வசித்து வருகின்றேன். அதே கிராமத்தில் பல்லாண்டுகளாக சொந்தமாக தையல் தொழிலையும் செய்து வருகின்றேன். நாளொன்றுக்கு வருமானம் ரூ. 75லிருந்து ரூ. 150 வரை மட்டுமே கிடைக்கும். விஷேச காலங்களில் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும். அல்லாஹ்வின் அருளால் இந்த குறைந்த வருமானத்தில்தான் என் மனைவி மக்களை காப்பாற்றி வருகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்...
 
                 என் பிள்ளைகளில் மூத்த மகள் யாஸ்மின் தற்போது திருச்சியிலுள்ள ஒரு மகளிர் கல்லூரியில் BCA படிப்பில் மூன்றாம் வருடமும், இளைய மகள் சுமைய்யா அதே கல்லூரியில் B.Sc., (Nutrition & Dietetics)  படிப்பில் இரண்டாம் வருடமும் சேருவதற்கு தயாராக இருக்கின்றனர்.
 
                 மகனார் முஹம்மது அனஸ் பத்தாவது முடித்து விட்டு மார்க்கக் கல்வியுடன் இணைந்த படிப்பை கீழக்கரையில் உள்ள புகழ்ப் பெற்ற கல்லூரியில் படித்து வருகின்றார்.
 
                     இது வரையும் என் பிள்ளைகளை அல்லாஹ்வின் பேரருளால் மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்தேன். ஆனால், தற்போது மேலும் படிக்க வேண்டும் என்று பிள்ளைகள் விரும்புகிறார்கள். என் சூழ்நிலையில் அவர்களின் கனவை நிறைவேத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
 
                    காரணம், மூத்த மகள் யாஸ்மின் படிப்பு செலவுக்காக கடந்த இரண்டு வருடங்களாக கல்வி கட்டணம் சுமார் 22,000 - விடுதி கட்டணம் சுமார் 12,000 - உணவு கட்டணம் சுமார் 15,000 - கல்லூரியின் இதரச் செலவுகள் சுமார் 5,000 - பயணச் செலவு சுமார் 10,000 மற்றும் பிள்ளைக்குத் தேவையான செலவுகள் சுமார் 5,000 என ஏறக்குறைய 69,000 ரூபாய்களும்), என் இளைய மகள் சுமைய்யா படிப்பு செலவுக்காக கடந்த வருடம் கல்வி கட்டணம் சுமார் 11,000 - விடுதி கட்டணம் சுமார் 6,000 - உணவு கட்டணம் சுமார் 7,000 - கல்லூரியின் இதரச் செலவுகள் சுமார் 2,000 - பயணச் செலவு சுமார் 5,000 மற்றும் பிள்ளைக்குத் தேவையான செலவுகள் சுமார் 2,000 என ஏறக்குறைய 33,000 ரூபாய்களும் ஆக மொத்தம் 1,02,000 (ஒரு இலட்சத்து இரண்டாயிரம்) ரூபாய்கள் வரை செலவு செய்து படிக்க வைத்துள்ளேன்.
 
                  படிக்காத தலைமுறையில் பிறந்த என் பிள்ளைகள் படித்தவர்களாக, அடுத்தவருக்கு வழிகாட்டுபவராக திகழ வேண்டும் என்ற ஆசையிலும், என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும், நாம் சிரமபட்டாலும் பரவாயில்லை, என் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும்தான் தெரிந்த நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கியும், என் வேண்டுகோளை ஏற்று அவ்வப்போது உதவிகளை அனுப்பி வைத்த சகோதரர்கள் வாயிலாகவும் இந்த செலவுகளை செய்தேன்.
 
நான் கேட்ட உறவு முறைகளில் எனக்கு எந்தவொரு உதவியும் கிடைக்க வில்லை. என் குடும்ப உறவினர்களும் வசதியானவர்களாக இல்லை. கல்லூரி மூலமாக கல்வி உதவித்தொகையும் கிடைக்க வில்லை.
 
கடந்த வருடம் இதுபோன்று கோரிக்கை வைத்தவுடன் என் பிள்ளைகளின் படிப்புக்கு சிலர் உதவி செய்தனர். அவர்கள் அனைவருக்கும் இந்த மடல் வாயிலாக நன்றிகளையும், துஆக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
 
இந்த சூழ்நிலையில் மூத்த மகள் யாஸ்மின் மூன்றாம் ஆண்டு படிப்புக்கு செல்ல வேண்டும். இளைய மகள் சுமைய்யா இரண்டாம் ஆண்டு படிப்பிற்கு செல்ல வேண்டும். இதற்காக குறைந்த பட்சம் இவ் வருடத்திற்கு மட்டும் எல்லா செலவுகளையும் சேர்த்து சுமார் 70,000 ரூபாய் வரை தேவைப்படுகிறது.
 
கடந்த வருடங்களில் செய்த செலவின் கடனே இன்னும் முடிவடையாத சூழலில் இப்போது என் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக மேலும் கடன் வாங்க முடியாத நிலை.
 
அதனால்தான்... அல்லாஹ்விற்காக... என் பெண் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை கவனத்தில் கொண்டு சகோதர சகோதரிகளான தாங்கள்...
 
1. தங்களால் முடிந்த உதவிகள் செய்திடுமாறு (அல்லது)
2. கல்வி உதவித் தொகை கிடைக்குமிடங்களில் என் பிள்ளைகளின் பெயர்களை சேர்த்து விடுமாறு (அல்லது)
3. தங்களுக்கு தெரிந்த அமைப்புகள், நண்பர்கள் ஆகியோரிடம் என் பிள்ளைகளின் நிலைகளை எடுத்துச் சொல்லி உதவி புரியுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
 
என் பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக வரக்கூடிய உதவிகள் அனைத்தையும் இன்ஷா அல்லாஹ் அதற்காக மட்டும்தான் பயன்படுத்துவேன் என்றும், அதன் சார்பாக வாங்கப்பட்ட கடன்களை மட்டும்தான் அடைப்பேன் என்றும், மேலதிக உதவிகள் வந்து விட்டால் அவற்றை என் பிள்ளைகள் போன்று கல்வி கற்க வசதியில்லாத பிள்ளைகளுக்கு அளித்து உதவி செய்வேன் என்றும் இந்த மடல் மூலம் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உறுதியளிக்கின்றேன்.
 
இந்த கோரிக்கை அல்லாஹ், ரசூலுக்காக தாங்கள் ஏற்று, என் பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
 
இத்துடன் ஊர் ஜமாஅத் கடிதத்தையும், கல்லூரியின் நற்சான்றிதழ்களையும் இணைத்துள்ளேன்.
 
எல்லா வல்ல அல்லாஹ் நற்காரியங்கள் பல செய்யும் தங்கள் அனைவருக்கும் இம்மை மறுமை இரண்டிலும் நற்பாக்கியங்களை வழங்க வேண்டும் எனவும் துஆ செய்கின்றேன். நன்றி. வஸ்ஸலாம்.
 
இப்படிக்கு,
தங்களின் உதவிகளை அன்புடன் எதிர்பார்க்கும் சகோதரன்...
எஸ். நூர் முஹம்மது (டைலர்)

என் வங்கி கணக்கு விபரங்கள் (Bank Account Details):
 
S. Noor Mohamed,
A/C # 6655, Indian Overseas Bank,
Naduveerapattu Branch (280),
Cuddalore District, Pin code – 607102.
 Mobile: (+91) 9786453164

Educational Help - Noor Md.pdf    


Read more »

வேளாண் இளநிலைப் படிப்பு: மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல்

                  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வழங்கும் இளநிலைப் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

                    மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கவுன்சலிங் ஜூன் 16-ல் துவங்கி ஜூன் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிஎஸ்ஸி-யில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், மனையியல் ஆகிய படிப்புகளும் பிடெக்-கில் வேளாண் பொறியியல், உணவுப் பதப்படுத்தல் பொறியியல்  வேளாண் உயிரித் தொழில்நுட்பம், தோட்டக்கலை, சக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், உயிரித் தகவலியல், வேளாண் தகவல் தொழில்நுட்பம், பிஎஸ் வேளாண் தொழில் வேளாண்மை ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. 

                  விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் பல்கலை. இணையதளத்தில் http://www.tnau.ac.in/ugcoun10/index.html வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கவுன்சலிங் ஜூன் 16-ம் தேதி பல்கலை. வளாகத்தில் துவங்குகிறது.    முதல் கட்ட கவுன்சலிங்கில் 1,561 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தகவல் கடிதம் கிடைக்கப் பெறாத மாணவர்கள் தரவரிசைப் பட்டியலின்படி குறிப்பிட்ட நாள்களில் கவுன்சலிங்கில் பங்கேற்கலாம். 

கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சலிங் நடைபெறும் தேதி விவரம்:

                    ஜூன் 16 காலை 9.30 - 198.25 முதல் 189.50 வரை; மாலை 1.30 - 189.25 முதல் 185.50 வரை.ஜூன் 17 காலை 9.30 - 185.25 முதல் 182.50 வரை; மாலை 1.30 - 182.25 முதல் 179.75 வரைஜூன் 18 காலை 9.30 - 179.50 முதல் 177.25 வரை; மாலை 1.30 177 முதல் 175 வரை.ஜூன் 19 காலை 9.30 - 174.75 முதல் 172.50 வரை; மாலை 1.30 172.25 முதல் 170 வரை.ஜூன் 20 காலை 9.30 - 169.75 முதல் 167.50 வரை; மாலை 1.30 167.25 முதல் 165.25 வரை. கோவை வேளாண் கல்லூரி முதல்வர் க.வணங்காமுடி இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

Read more »

விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பு: பெரும் சேதம் தவிர்ப்பு


விழுப்புரம்:
 
                சித்தனி அருகே ரயில் தண்டவாளத்தை மர்ம நபர்கள் வெடிகுண்டு வைத்துத் தகர்த்திருக்கின்றனர். எனினும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் சித்தனி அருகே வந்தபோது பெரும் சப்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது தண்டவாளம் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது தெரியவந்தது.
 
                  இதையடுத்து அந்த வழியாகச் செல்ல இருந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் சாலை வழியாகப் போக்குவரத்தைத் தொடங்கினர். ரயில்வே அதிகாரிகளும், போலீஸாரும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். முதல்கட்ட ஆய்வின்படி, அருகிலிருக்கும் மின் கம்பத்திலிருந்து மின்சாரம் எடுத்து குண்டை வெடிக்கச் செய்திருக்கலாம் எனத் தெரியவந்திருக்கிறது. இன்று காலையில் தண்டவாளம் சரி செய்யப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கியது.

Read more »

உலக கோப்பை கால்பந்து 2010, போட்டி அட்டவணை

Read more »

உலக கோப்பை: பிரான்ஸ் அதிர்ச்சி "டிரா'

 

 


கேப்டவுன்: 

                     உலக கோப்பை லீக் போட்டியில் பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சி. உருகுவேயுடனான போட்டியை பரிதாபமாக டிரா(0-0) செய்தது. தியரி ஹென்றியை மிகவும் தாமதமாக களமிறக்கியது பிரான்ஸ் அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
 
                      தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று "ஏ' பிரிவில் நடந்த லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ், உருகுவே அணிகள் மோதின. ஜிடேன் ஓய்வு, பிரான்ஸ் அணிக்கு சிக்கலாக அமைந்தது. இவர் இல்லாமல், கடந்த 1994க்கு பிறகு முதல் முறையாக களமிறங்கியது.
 
ஹென்றி இல்லை:
 
                    முதல் பாதியில் பிரான்ஸ் சார்பில் அனுபவ வீரர்களான தியரி ஹென்றி மற்றும் பிளாரன்ட் மலூடா களமிறக்கப்படவில்லை. ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் இந்த அணியின் பிராங்க் ரிபரி, பந்தை அருமையாக "பாஸ்' செய்தார். இதனை பெற்ற கோவு, கோல் அடிக்க தவறினார். பின் 11வது நிமிடத்தில் உருகுவே அணியின் சாரஸ், கோல் போஸ்டை நோக்கி முன்னேறி சென்றார். ஆனால், அம்பயர் "ஆப் சைடு' என அறிவிக்க, ஏமாற்றம் அடைந்தார்.
 
முரட்டு ஆட்டம்:
 
          பிரான்ஸ் வீரர்கள் ஒரு கட்டத்தில் முரட்டு ஆட்டத்துக்கு மாறினர். இதையடுத்து கேப்டன் பாட்ரிஸ் எவ்ரா, பிராங்க் ரிபரி "எல்லோ கார்டு' எச்சரிக்கை பெற்றனர். உருகுவே அணியின் தற்காப்பு பகுதி வலிமையாக இருந்ததால், பிரான்ஸ் அணியால் முன்னேறிச் செல்ல இயலவில்லை. முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
 
தவறான முடிவு:
 
                     இரண்டாவது பாதியிலும் பிரான்ஸ் அணியினர் மந்தமாக ஆடினர். இதையடுத்து 72வது நிமிடத்தில் அனல்காவுக்கு பதிலாக தியரி ஹென்றி களமிறக்கப்பட்டார். 75வது நிமிடத்தில் மலூடாவும் மாற்று வீரராக வந்தார். இரண்டு நட்சத்திர வீரர்களை மிகவும் தாமதமாக களமிறக்கியது பிரான்ஸ் அணிக்கு பின்னடைவாக அமைந்தது. பயிற்சியாளர் ரேமண்ட் டோமெனக்கின் இம்முடிவு மிகுந்த அதிர்ச்சி அளித்தது.
 
"கை' பந்து:
 
                    ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் நிக்கோலஸ் லொடியிரா "ரெட் கார்டு' பெற்று வெளியேறினார். இதையடுத்து உருகுவே 10 வீரர்களுடன் விளையாட நேர்ந்தது. பின் 89வது நிமிடத்தில் ஹென்றி கோல் அடிக்க முயன்றார். அப்போது உருகுவே வீரர் விக்டோரினோ தனது கையால் தவறாக தடுத்ததாக, ஹென்றி வாதிட்டார். இதனை நடுவர் கண்டுகொள்ளவில்லை. பின் கடைசி கட்டத்தில் கிடைத்த "பிரீகிக்' வாய்ப்பையும் ஹென்றி வீணாக்க, பிரான்ஸ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காத நிலையில் போட்டி டிரா(0-0) ஆனது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன.

Read more »

மனித கழிவை அகற்ற எளிய சாதனம் : தமிழக கல்லூரி மாணவர் உலக சாதனை



                  உலகின் 124 நாடுகளைச் சேர்ந்த மூன்று லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்ற போட்டியில் கலந்து கொண்டு மனிதக் கழிவுகளை எளிய வகையில் பயனுள்ளதாக மாற்றி, அதை எரிசக்தியாக மாற்ற முடியும் என சாதித்தார் தமிழக கல்லூரி மாணவர்.

                    அமெரிக்க நாட்டின் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆண்டுதோறும் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர் இடையே "இமேஜின் கப்' என்ற பெயரில் உலகளாவிய போட்டியை நடத்துவது வழக்கம். இதில், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொள்வர். இந்த ஆண்டுக்கான போட்டியில் இந்தியா உட்பட 124 நாடுகளைச் சேர்ந்த மூன்று லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மொத்தம் ஆறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தாலும், கடும் போட்டிகளை சமாளித்து இன்விஷனிங் 2020 அவார்டு என்ற பிரிவில் இந்திய மாணவ, மாணவியர் தங்கள் பங்கை அளித்தனர். இப்பிரிவில் திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் குப்பம் ,பிரதியுஷா தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் மாணவர் கவுசிக் தனது கண்டுபிடிப்பான "எலக்ட்ரானிக் லேவட்டரி' (மின்னணு கழிவறை) யை சமர்ப்பித்தார். இத்திட்டத்தின்படி செயல்படும் எளிய கருவி மூலம் நீரை சேமிக்கவும், மனிதக் கழிவுகளை எளிதாக அகற்றவும், அகற்றப்பட்ட கழிவுகள் மூலம் பயோ காஸ் தயாரிக்கவும், எரிசக்தி உற்பத்தி செய்யவும் முடியும். இக்கருவி மூலம் சுற்றுச்சூழலை பாதிப்படையாமல் காப்பதோடு, ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். மாணவர் கவுசிக்கின் கண்டுபிடிப்பு, போட்டியில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, கவுசிக் இறுதிச்சுற்றுப் போட்டியில் கலந்துகொள்ள போலந்து நாட்டுக்கு செல்ல உள்ளார். அவரது பயணச் செலவு அனைத்தையும் மைக்ரோசாப்ட் நிறுவனமே ஏற்றுக் கொள்கிறது. 

கல்லூரி செயல் அலுவலர் பிரதியுஷா கூறியதாவது: 

                 மாணவர் கவுசிக் கல்லூரியில் பயின்ற நான்கு ஆண்டுகளில், தனது பல்வேறு ஆய்வுகளுக்காக, பல்வேறு வகைகளில் 75 பரிசுகளை வென்றுள்ளார். அண்ணா பல்கலைக் கழகத்திலும் அவர் பரிசினைப் பெற்று சாதனை படைத்துள்ளார். அவர் போலந்து நாட்டில் நடக்கும் இறுதிச் சுற்றிலும் வெல்வார் என்று நம்புகிறேன். இவ்வாறு பிரதியுஷா கூறினார். நிகழ்ச்சியில் முதல்வர் குணசேகரன், இயக்குனர்கள் பியுலா தேவமலர், தயாகரன் மற்றும் பலர் வாழ்த்தினர்.

Read more »

இன்று காலை எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல்

                தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்களுக்கு சனிக்கிழமை (ஜூன் 12) காலை 11 மணிக்கு ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது.  சென்னை, செங்கல்பட்டு, மதுரை, சேலம், கோவை உள்பட 15 அரசு மருத்துவக் கல்லூரிகளின் 1,483 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.  சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் ரேங்க் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிடுகிறார். அமைச்சர் வெளியிட்டவுடன், இதே அலுவலக வளாகத்தில் பொது மக்கள் பார்வையிட வசதியாக ரேங்க் பட்டியல் ஒட்டப்படும்.  சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhe​alth.org மூலம் ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது.

Read more »

Stress on compulsory education for children


Creating awareness: A rally on value of education being taken out in Cuddalore on Friday.

CUDDALORE: 

             Collector P. Seetharaman flagged off an awareness rally here on “free and compulsory education for children” on Friday. Around 2,000 students from 16 schools participated.

            The rally began at Thirupadiripuliyur and culminated at the Anna Stadium here, where the students took an oath. Mr. Seetharaman said that the rally was aimed at creating awareness of the ‘Right of children to free and compulsory education Act,' which stipulated that all children in the 6-14 age group should be put in school. Last year, as many as 1,398 ‘out of school children' were identified in the district and linked to the mainstream through various modes. These children were identified through assessments made by the block resource teacher educators, numbering 212, deployed in villages. The children were being classified into three categories — dropouts, those who never enrolled and those who migrated. Dropouts were mainly owing to poverty, aversion to studies, family problem, etc.

              While generally the dropout rate and ‘never enrolled' status were higher among girls in other districts, in Cuddalore, boys outnumbered girls. Mr. Seetharaman said that this was mainly owing to the feeling that boys should help their parents in earning for the family. He said that the dropout situation seemed to be a recurring phenomenon and this year, as many as 1,548 ‘out of school children' had been identified. However, awareness of the need for education was on the rise owing to publicity, peer pressure and the urge to improve the standard of living, he added.

Read more »

பிளஸ் 2 உடனடி மறுதேர்வு அட்டவணை வெளியீடு

கடலூர் :

                   பிளஸ் 2 பொதுத் தேர்வில் மூன்று பாடங்களுக்குள் தோல்வி அடைந்தவர்களுக்கான உடனடி மறு தேர்வு அட்டவணை அறிவிக்கப் பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தேர்வு எழுதிய 6 லட்சத்து 82 ஆயிரத்து 607 மாணவ, மாணவிகளில் ஐந்து லட்சத்து 81 ஆயிரத்து 251 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒரு லட்சத்து ஆயிரத்து 356 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. இவர்களில் ஏதேனும் மூன்று பாடங்களில் மட்டும் தோல்வி அடைந்தவர்களுக்கு உடனடி மறு தேர்விற்கான அட்டவணையை பள்ளி கல்வித்துறை இயக்குனர் நேற்று வெளியிட்டார்.

தேர்வு அட்டவணை விவரம் வருமாறு: 

                     வரும் 29ம் தேதி காலை (10 மணி முதல் 1.15 வரை) மொழி முதல் தாள், 30ம் தேதி மொழி 2ம் தாள், ஜூலை 1ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 2ம் தேதி ஆங்கிலம் 2ம் தாள், 3ம் தேதி இயற்பியல், வணிகவியல், 5ம் தேதி காலை வேதியல், பொருளியல், மதியம் ( 2 மணி முதல் 5.15வரை) தொழிற்கல்வி கருத்தியல் பாடப்தேர்வுகள் நடக்கிறது. அதே போல், 6ம் தேதி காலை கணிதம், விலங்கியல், கணக்கியல், மதியம் அடிப்படை அறிவியல், புவியியல், 7ம் தேதி காலை உயிரியல், தாவரவியல், வரலாறு. மதியம் நுண்ணுயிரியல், சிறப்பு மொழியியல், 8ம் தேதி காலை அரசியல் அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிர் வேதியியல், மதியம் புள்ளியியல், தட்டச்சு, மனையியல், தொடர்பு ஆங்கிலம், 9ம் தேதி காலை வணிக கணிதம், இந்திய கலாசாரம், நர்சிங் (பொது), சத்துணவு மற்றும் உணவூட்டவியல், மதியம் சுருக்கெழுத்து மற்றும் சைக்காலஜி பாடத் தேர்வுகள் நடக்கிறது.

Read more »

லால்பேட்டை பேரூராட்சி துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

சிதம்பரம் : 

                         காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை பேரூராட்சி துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப் பட்டது. காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை பேரூராட்சி துணைத்தலைவராக இருந்தவர் காஜா மொய்தீன். இவரது நடவடிக்கை சரியில்லாததால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தலைவர் உள்ளிட்ட ஒட்டு மொத்தமாக 14 கவுன்சிலர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். 

                        அதையடுத்து நேற்று பேரூராட்சிகள் துணை இயக்குநர் சடையப்பன் முன்னிலையில் லால்பேட்டை பேரூராட்சியில் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தின்போது, பேரூராட்சி தலைவர் சபியுல்லா உள்ளிட்ட 14 கவுன் சிலர்களும் ஒட்டுமொத்தமாக துணைத்தலைவர் காஜா மொய்தீன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர ஆதரவு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு கலெக்டருக்கு அனுப்பப்பட்டது.

Read more »

காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

கடலூர் : 

                    காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையைச் சேர்ந்தவர் அகமதுல்லா. இவர் கடந்த டிசம்பர் 23ம் தேதி கடலூர் சி.ஜே.எம்., கோர்ட்டில் புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த அக்டோபர் 7ம் தேதி நடந்த லால்பேட்டை பேரூராட்சி 3வது வார்டு உறுப்பினர் தேர்தலில் தேசிய லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட சிராஜூதீனுக்கு முகவராக நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பகல் 12 மணிக்கு நடந்த தகராறில் காட்டுமன்னார் கோவில் இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் முன்னிலையில் மனிதநேய கட்சியினர் 5 பேர் என்னை தாக்கினர்.

                     இரவு 11 மணிக்கு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் என்னை தேடி லால்பேட்டை வந்து, அங்கிருந்த பெண்கள் பைஜூன்னிசா, முகமுதாபீபி ஆகியோரை ஆபாசமாக திட்டினர். பின்னர், என்னையும், எனது தம்பி அமீர் உல்கக்கையும் தாக்கி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எங்கள் இருவரையும் சட்டையை கழற்றி லாக்கப் கம்பியில் வைத்து அடித்ததாக மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சண்முகநாதன், இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் ஆகியோர் மீது அத்துமீறி நுழைந்து தாக்கியது (448), ஆபாசமாக திட்டியது (294), இரும்பு பைப்பால் தாக்கியது (324) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, வழக்கு விசாரணைக்காக இருவரும் வரும் 2ம் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்திரவிட்டார்.

Read more »

வடக்குத்து ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்


நெய்வேலி : 

                     நெய்வேலியை அடுத்த வடக்குத்து ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். உதவியாளர் மணிவாசகம் வரவேற்றார். கவுன்சிலர்கள் தம்புசாமி, ஜெயபால், பாபு, பூங்கோதை, சக்திவேல், பவுனு முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் இடம் பெற்ற குக்கிராமங்கள் இல்லாமல் கூடுதல் குக்கிராமங்களின் பட்டியலை அங்கீகரித்தல், "கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஊராட்சியில் உள்ள தெருக்கள் மற்றும் இருப் பிடங்களை கிராம ஊராட்சி தலைவர் மற் றும் கணக்கெடுப்புகுழு அலுவலர்களை வைத்து சரிபார்த்த பின் திருத்தங்கள் இருப்பின் அதனையும் சரி செய்து சரியான இருப்பிடம், மற் றும் தெருக்களின் பெயர் பட்டியலை இறுதி செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் அதிகளவாக சேத்தியாத்தோப்பில் 67 மி.மீ., மழை பதிவு

கடலூர் : 

                           கடலூர் மாவட்டத்தில் அதிகளவாக சேத்தியாத்தோப்பில் 67 மி.மீ., மழை பதிவானது. அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று முன் தினம் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அதிகபட்சமாக சேத்தியாத்தோப் பில் 67 மி.மீ., மழை பதிவானது. 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பதிவாகியுள்ள மழை அளவு மி.மீ., வருமாறு:

அண்ணாமலை நகர் 48.20, 
சிதம்பரம் 47, 
பெலாந்துறையில் 44, 
கீழ்ச் செருவாய் 41, 
லால்பேட்டை 40, 
கடலூர் 36, 
புவனகிரி 32, 
தொழுதூர் 30, 
கொத்தவாச்சேரி 29, 
வானமாதேவி 27, 
காட்டுமன்னார்கோவில் 25, 
லக்கூர் 21, 
ஸ்ரீமுஷ்ணம் 20, 
பரங்கிப்பேட்டை 13, 
பண்ருட்டி 8.20, 
விருத்தாசலம் 6, 
குப்பநத்தம் 4.40, 
மேமாத்தூர் 2 மி.மீ., 

மழையும் பதிவாகியுள்ளது.

Read more »

'கேமரா, அலாரம் இல்லாத நகை கடைகள் உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்'

கடலூர் : 

                   நகைக் கடைகளில் பாதுகாப்பிற்காக அலாரம், கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளதா என போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். நகைக் கடைகளில் நடைபெறும் திருட்டை தவிர்க்க நகைக்கடை உரிமையாளர்கள் விழிப்புணர்வு கூட்டத்தை போலீசார் நடத்தினர். அதில் பாதுகாப்பு கருதி ஒவ்வொரு கடையிலும் கண் காணிப்பு கேமரா, அலாரம் ஆகியவற்றை பொறுத்த வேண்டும் என போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ராமநத்தம் நகை அடகு கடையில் நகைகள் திருடு போயின. இந்த கடையில் போலீசார் அறிவுறுத்தியது போன்று கண்காணிப்பு கேமரா, அலாரம் பொறுத்தப்படவில்லை.

                   இதனைத் தொடர்ந்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகைக் கடைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அதில் கேமரா, அலாரம் இல்லாத கடைகளில் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டனர்.

Read more »

கடலூரில் அனைவருக்கும் கல்வி இயக்க விழிப்புணர்வு ஊர்வலம்

கடலூர் : 

                   கடலூரில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார். எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., மணவாள ராமானுஜம், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம், ஒருங்கிணைப் பாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள். ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், தலைமை ஆசிரியர்கள், கடலூர் தொழிலாளர் ஆய்வாளர் கமலக்கண் ணன், தொழிலாளர் துறை துணை தலைமை ஆய்வாளர் தங்கராஜ், தொழிற்சாலைகள் ஆய்வாளர் ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊர்வலத்தில் கடலூர் வட்டாரத்தில் உள்ள 16 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வியின் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்திச்சென்றனர். முடிவில் அண்ணா விளையாட்டரங்கில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.

Read more »

பண்ருட்டியில் போலி டாக்டர் இருவர் கைது

பண்ருட்டி : 

                  பண்ருட்டியில் போலி டாக்டர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் நிப்பேன்ராய் (40). இவர் கடந்த 12 ஆண்டுகளாக பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் ராய் என்ற பெயரில் கிளினிக் நடத்தி மூலம், பவுத்திரம் உள்ளிட்ட வியாதிகளுக்கு மருத்துவம் அளித்து வந்தார். பண்ருட்டியைச் சேர்ந்தவர் நீலமேகம் (43). இவர் கும்பகோணம் சாலையில் 3 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி அலோபதி முறையில் மருத்துவம் செய்தார் .இருவரும் போலி டாக்டர்கள் என சுகாதாரத் துறைக்கு புகார் தெரிவித்ததன் பேரில் சுகாதாரத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பண்ருட்டி போலீசில் புகார் அளித்தார்.

                     இதனையடுத்து பண்ருட்டி இன்ஸ்பெக்டர் செல்வம் இருவரிடமும் விசாரணை மேற்கொண் டதில் நிப்பேன்ராய் பி.ஏ., முதலாம் ஆண்டு வரையும், நீலமேகம் பத்தாம் வகுப்பு வரையும் படித்திருப்பது தெரியவந்தது. பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து நிப்பேன் ராய், நீலமேகம் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த சான்றிதழ்களை பறிமுதல் செய்தனர்.


Read more »

ராமநத்தத்தில் முன்விரோத தகராறு: மூவர் கைது

ராமநத்தம் : 

                    திருமணமான பெண்ணை கடத்திய விரோதத்தில் முதியவரை தாக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர். ராமநத்தம் அடுத்த பெரங்கியத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். சென்னையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் கீதாவுக்கு ஆலத்தூரைச் சேர்ந்த சவுந்தரராஜனை திருமணம் செய்து வைத்தார். கொளஞ்சிநாதன், குலதெய்வ கோவில் திருவிழாவிற்காக கடந்த ஏப்ரல் மாதம் மருமகன், மகள் உள்ளிட்டோருடன் பெரங்கியம் வந்தார். அப்போது கீதாவை, வீரமுத்து என்பவர் தனது உறவினர் பன்னீர்செல் வம் உதவியுடன் கடத்திச் சென்றார்.

                 இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கொளஞ்சிநாதன் உறவினர் முத்துசாமி (60) ராமநத்தம் மேம்பாலத்தின் அருகே சென்ற போது பன்னீர்செல்வம், அங்கமுத்து, அய்யாசாமி, ஆனந்தன் ஆகியோர் முத்துசாமியை தாக்கினர். இதில் முத்துசாமி பலத்த காயமடைந்தார். இதுகுறித்து முத்துசாமி கொடுத்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து பன்னீர் செல்வம் (54), அங்கமுத்து (25), அய்யாசாமி (70) ஆகியோரை கைது செய்து ஆனந்தனை தேடி வருகின்றனர்.

Read more »

கடலூரில் 19 சவரன் நகை திருட்டு

கடலூர் :

                     கடலூரில் வீட்டில் பீரோவை திறந்து 19 சவரன் நகை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் என்.ஜி.ஓ., நகரைச் சேர்ந்தவர் செல்வபாண்டுரங்கன். அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி ஆதிலட்சுமி விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிகிறார். இந்நிலையில் நேற்று மாலை பணி முடித்து வந்த ஆதிலட்சுமி வீட்டில் பீரோ திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பீரோவை பார்த்தபோது அதில் இருந்த 15 சவரன் தங்க காசு, 4 சவரன் செயின் ஆகியவை திருடு போயிருந்தது. இது குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி., மகேஷ் வரன், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

முன்னாள் எம்.எல்.ஏ., உறவினர் வீடு தாக்கு: 12 பேர் கைது

 கடலூர் : 

               முன்னாள் எம்.எல்.ஏ., உறவினர் வீடு மற்றும் காரை தாக்கி சேதப்படுத்திய வழக்கில் 12 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் செல்லங்குப்பம் மின்வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் வேலாயுதபாண்டியன். தேங்காய் மண்டி உரிமையாளரான இவர் கடந்த 6ம் தேதி கடலூர் முதுநகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்., சென்டரில் பணம் எடுத்தபோது, செல்லங்குப்பம் காலனியைச் சேர்ந்த சேதுராமன், சுமன், ராஜா உள்ளிட்டோர் பணம் கேட்டு தகராறு செய்தனர்.

                    இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் இரவு வேலாயுத பாண்டியன் வீட்டையும், அங்கு நின்றிருந்த "இநோவா' காரை அடித்து நொறுக்கியது. இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் மதியம் சுமன் உட்பட 12 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்து தலைமறைவாக உள்ள சேதுராமன், ராஜாவை தேடிவருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தில் தொடர்பில்லாதவர்களை கைது செய்திருப்பதாகவும், அவர்களை விடுவிக்க கோரி செல்லங்குப்பம் காலனி மக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். தகவலின் பேரில் டி.எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Read more »

குள்ளஞ்சாவடியில் நகைக்கடை உள்ளிட்டமூன்று கடைகளில் ரூ.3.5 லட்சம் திருட்டு

குறிஞ்சிப்பாடி :

                    குள்ளஞ்சாவடியில் நகைக்கடை உட்பட 3 கடைகளின் பூட்டை உடைத்து 3.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குள்ளஞ்சாவடி அடுத்த தோப்புக்கொல்லையைச் சேர்ந்தவர் பிரகாஷ் (30). இவர் குள்ளஞ்சாவடி கடை வீதியில் நகை கடை வைத்துள்ளார். நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கடைக்கு வந்த போது பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது 25 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி மற்றும் 25 ஆயிரம் ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது. அதே பகுதியில் உள்ள சிவக்குமார் ஜெனரல் ஸ்டோர் என்ற கடையின் பூட்டை உடைத்து 20 ஆயிரம் ரூபாயும், அதன் அருகே இருந்த பாலாஜி மருந்து கடையில் 1,500 ரூபாயும் திருடு போயுள்ளது.

                     மூன்று கடைகளிலும் திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 3.5 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.தகவலறிந்த நெய்வேலி டி.எஸ்.பி., மணி, குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Read more »

சிதம்பரம் அருகே கோஷ்டி மோதல்: ஐந்து பேர் கைது

கிள்ளை : 

                 கந்தமங்கலத்தில் நடந்த கோஷ்டி மோதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். சிதம்பரம் அடுத்த கந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் செல்வம் (36). இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஜெயவேல் (30). இருவருக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் செல்வம், தான் கட்டிய புதிய வீட்டிற்கு கிரக பிரவேசம் நடத்துவது தொடர்பாக உறவினர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே சென்ற ஜெயவேல், தன்னைப்பார்த்து ஏளனம் செய்வதாக கூறி தட்டிக் கேட்டார். இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டு இரு கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். இதில் செல்வம், சுந்தரராஜ், சுந்தரமூர்த்தி, தீபா, சுகந்தி, ரவிச்சந்திரன், கனகசபை ஆகியோர் காயமடைந்தனர். இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் கிள்ளை போலீசார் 14 பேர் மீது வழக்குப் பதிந்து ரவி, ரமேஷ், ஜெயவேல் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 7 பேரை தேடிவருகின்றனர்.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior