உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 24, 2010

தமிழ் மாநாட்டின் துவக்கவிழாவில் ஆங்கிலத்தின் ஆதிக்கம்


அமெரிக்க பேராசிரயர் ஜார்ஜ் ஹார்ட்
 

கோவை :

               உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துவக்கவிழாவில் ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்தியதால், மாநாட்டுக்கு வந்த மக்களிடையே பெரும் சோர்வு ஏற்பட்டது.

              உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை கொடிசியா சாலையிலுள்ள மாநாட்டு வளாகத்தில் நேற்று காலை துவங்கியது. வரும் 27ம் தேதி வரை நடக்கவுள்ள இம்மாநாட்டை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நேற்று காலை துவக்கி வைத்தார்.மேடைக்கு எல்லாத் தலைவர்களும் சரியான நேரத்துக்கு வந்து விட்டதால், திட்டமிட்டபடி காலை 10.30 மணிக்குத் துவங்கி விட்டது. தேசிய கீதத்துடன் விழா துவங்கியது. செம்மொழி மாநாட்டின் மையநோக்குப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்போது, பொதுமக்கள் பெரும் உற்சாகமாக கைதட்டினர். ஜனாதிபதிக்கு முதல்வரும், மற்றவர்களுக்கு துணை முதல்வர் ஸ்டாலினும் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.துணை முதல்வருக்கும், தலைமைச் செயலர் ஸ்ரீபதிக்கும் மாநாட்டு தனி அலுவலர் அலாவுதீன், நினைவுப்பரிசு வழங்கினார்.

                      அஸ்கோ பர்போலோவுக்கு வழங்கப்பட்ட, "கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது,' ஐம்பொன்னால் ஆன திருவள்ளுவர் சிலையுடன், 10 லட்ச ரூபாய் பெறுமானம் உடையது என்று விளக்கப்பட்டது. மொழி வல்லுனர் ஜார்ஜ் ஹார்ட், சில வார்த்தைகளை தமிழில் பேசிவிட்டு, பின்பு ஆங்கிலத்தில் பேசினார்.அடுத்ததாக, வா.செ.குழந்தைசாமி பேசினார்.

                     அவருக்குப் பின், பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பேசினார். அவர் உட்கார்ந்தவாறே பேசியதால், அவருக்கு, "கார்டுலெஸ் மைக்' தரப்பட்டது. இடையிடையே அது தடைபட்டதால், முதல்வர் சற்று கடுப்பானார்.ஆனால், "மைக்' மாற்றப்படுவதற்கு முன்பே, அது சரியாகி விட்டது. அவர், ஐந்து நிமிடம் தமிழ் பேசும் வரை தகராறு செய்த "மைக்,' ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்ததும் சரியாகி விட்டது.

                     அடுத்ததாக, விருது பெறும் அஸ்கோ பர்போலோ குறித்து தமிழக நிதியமைச்சர் அன்பழகன் விளக்கிப்பேசினார். விருது பெற்ற அஸ்கோ பர்போலோவும், ஒரு சில வார்த்தைகளைத் தவிர முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசினார். ஜார்ஜ் ஹார்ட், பர்போலோ இருவரும் பேசி முடிக்கும்போது, "தமிழ் வாழ்க' என்று கூறியபோது, சிலர் கை தட்டினர்.

முதல்வர் பேசுகையில், 

                 செம்மொழித் தகுதி வழங்குவது குறித்து சோனியா தனக்கு எழுதிய கடிதத்தை அப்படியே ஆங்கிலத்தில் படித்து, அதற்குரிய தமிழாக்கத்தையும் விளக்கினார்.

அவருக்குப் பின் பேசிய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், 

                        தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா இருவருமே ஆங்கிலத்தில் பேசினர். முடிவில், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, தமிழ், ஆங்கிலம் இரு மொழியிலும் நன்றி தெரிவித்தார். தமிழ் மாநாட்டின் துவக்க விழா முழுவதும், ஆங்கில ஆதிக்கமே அதிகம் இருந்தது.ஆங்கிலத்தில் பேசியதை தமிழில் மொழி பெயர்க்கவும் எந்த ஏற்பாடும் செய்யப்படாததால், ஜனாதிபதி ஆங்கிலத்தில் பேசியபோது, மக்கள் சோர்வு அடைந்து பேசத்துவங்கி விட்டனர்.

* பந்தலுக்குள் வந்த சிலரை போலீசார் சோதனையிட்டபோது, அவர்களிடம் மது பாட்டில்கள் இருந்தன. அவற்றையும், சிகரெட் பாக்கெட், தீப்பெட்டியையும் வாங்கி வைத்துக்கொண்டனர். ஒரு சிலர் கொடுக்க மனமில்லாமல், மண்ணைத் தோண்டி புதைத்துச் சென்றனர்.

* பல ஆயிரம் பேருக்கு மதிய உணவு கிடைக்கவில்லை. மானிய விலையில் உணவு கொடுத்த இடத்தில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. குறைவான எடையிலும், அதிக விலையிலும் இருந்ததாகக் கூறி, தனியார் உணவு நிறுவனங்கள் அமைத்திருந்த உணவுக்கூடம்-2க்குச்சென்று தேவையானதை வாங்கிச் சாப்பிட்டனர்.

Read more »

இந்திய ரூபாய்க்கு விரைவில் அடையாள குறியீடு


                     இந்திய ரூபாய்க்கு விரைவில் அடையாள குறியீடு வழங்கப்பட இருக்கிறது. சர்வதேச கரென்சிகளான அமெரிக்க டாலருக்கு $ , யூரோவுக்கு €, பவுண்டுக்கு £ ஆகிய அடையாள குறியீடு இருப்பது போல இந்திய ரூபாய்க்கும் அடையாள குறியீடு வழங்கப்பட இருக்கிறது. அடையாள குறியீடு மாதிரியை இன்று அமைச்சரவை இறுதி செய்கிறது. இது வரை 5 மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. இந்திய ரூபாய்க்கு அடையளா குறியீடு வழங்கும் முடிவு கடந்த ஆண்டு மத்திய அரசால் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

வெலிங்டன் ஏரிக்கு நீர் வரத்து குறைவால் 400 அடிக்குக் கீழ் சென்ற ஆழ்குழாய்க் கிணறுகள்


கருவேல மரங்கள் வளர்ந்து தூர்ந்து கிடக்கும், வெலிங்டன் ஏரியின் துணை ஏரியான 300 ஏக்கர் ஆயக்கட்டு உள்ள கார்மாங்குடி ஏரி. (வலது படம்) வெலிங்டன் ஏரியின் தரை
கடலூர்:

             தமிழகத்தின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்று, திட்டக்குடியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்து இருக்கும் வெலிங்டன் ஏரி. இது 1918-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது.

                    திட்டக்குடி, விருத்தாசலம் வட்டங்களில், 62 கிராமங்களைச் சேர்ந்த 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், இதன் மூலம் பாசன வசதி பெறுகின்றன. சிறு சிறு ஓடைகள் வழியாகவும், வெள்ளாற்றில் இருந்து தொழுதூர் அணைக்கட்டு மூலமாகவும் வெலிங்டன் ஏரிக்குத் தண்ணீர் கிடைக்கிறது. பருவமழை காலத்தில், கிடைக்கும் நீரைக் கொண்டு, ஆண்டுக்கு 220 நாள்கள் பாசனத்துக்கு நீர் கிடைக்கும் வகையில் ஏரி உருவாக்கப்பட்டது. ஆனால் வெள்ளாற்றில் பல அணைகள் கட்டப்பட்டு விட்டதால், நீர் வரத்து குறைந்து விட்டது.  இதனால் ஏரி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நிரம்புவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். ஏரியின் மொத்த நீர்மட்டம் 29 அடி. ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் ஏரி அதன் முழுக் கொள்ளளவை எட்டியதே இல்லை. ஏரியின் நீர் மட்டம், அளவுகோல் இருக்கும் இடத்தில்தான் 29 அடி. மற்ற இடங்களில் 18 அடி ஆழம்கூட இல்லை என்கிறார்கள் விவசாயிகள்.

                  விருத்தாசலம் திட்டக்குடி வட்டங்களில் 1 லட்சம் ஏக்கர் நிலங்களில் கரும்பு, நெல், உளுந்து, கம்பு, மக்காச்சோளம், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்கள் பெருவாரியாகச் சாகுபடி செய்யப்படுகின்றன.இதில் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வெலிங்டன் ஏரி நேரடிப் பாசனம். 26 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வெலிங்டன் ஏரியின் 52 துணை ஏரிகள் மூலமாகப் பாசன வசதி பெறும் வகையில், ஆங்கிலேயர்களால் பாசனத் திட்டம் வகுக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் வெலிங்டன் ஏரியும் அதன் துணை ஏரிகளும், இணைப்பு வாய்க்கால்களும் தூர்வாரப்படாதது மற்றும் ஆக்கிரமிப்புகளால் இன்று, 27 ஏரிகள் மட்டுமே உள்ளதாகவும், இணைப்பு வாய்க்கால்கள் ஒற்றையடிப் பாதைகளாக மாறிவிட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். இப் பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆழ்குழாய் கிணற்றுப் பாசனத்தில் உள்ளன. 

               வெள்ளாற்றில் போதிய தண்ணீர் வராததாலும், வெலிங்டன் ஏரி நிரம்பாததாலும், 10 ஆண்டுகளுக்கு முன் 45 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம், தற்போது 120 அடி ஆழத்துக்கும் கீழ் சென்றவிட்டது.150 அடி தோண்டப்பட்ட ஆழ்குழாய்க் கிணறுகள் தற்போது, 400 அடிக்குக் கீழே சென்றுவிட்டது. தண்ணீரின் தன்மையும் மாறி, கரும்பு, நெல் விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டு வருவதாகவும், கிராமங்களில் குடிநீர்ப் பிரச்னை அதிகரித்து வருவதாகவும் விசாயிகள் கூறுகிறார்கள். விவசாயத்தில் ஏற்பட்டு இருக்கும் சிக்கல்கள் காரணமாக, விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் மாற்றுத் தொழில்களை நாடி, நகரங்களுக்கு இடம் பெயரத் தொடங்கவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். வெலிங்டன் ஏரிக்கரை பழுதடைந்ததால், கடந்த 10 ஆண்டுகளாக 18 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் பிடிக்க முடியவில்லை. மேலும் 6 அடிக்கு மேல் ஏரி தூர்ந்து மண் மேடிட்டுக் கிடக்கிறது.ஏரிக்கரையை சீரமைக்க தமிழக அரசு ரூ. 20 கோடி நிதி ஒதுக்கி, 85 சதவீதம் பணிகள் முடிவடைந்து விட்டன. எனினும் தண்ணீருக்கு என்ன வழி? காவிரியில் இருந்து இணைப்பு வாய்க்கால் ஒன்றை வெட்டினால்தான் ஏரிக்கு நிரந்தரமாகத் தண்ணீர் கிடைக்கும் என்கிறார்கள் விவசாயிகள்.

இது குறித்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்டப் பொதுச் செயலர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறுகையில், 

                "வெலிங்டன் ஏரியின் 52 துணை ஏரிகள் தூர்ந்து, 27 ஏரிகள் மட்டுமே உள்ளன.கீரனூர், சிறுகரம்பலூர், புலிவலம் உள்ளிட்ட 40 கிராமங்கள் குடிநீருக்கே தவிக்கின்றன. நூற்றுக்கணக்கான ஆழ்குழாய்க் கிணறுகள் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர் மட்டம் 120 அடிக்குக் கீழே சென்றுவிட்டதால், 10 குதிரைத்திறன் கொண்ட மோட்டார்களை, 20 குதிரைத்திறன் கொண்டதாக மாற்றும் நிலை ஏற்பட்டு விட்டது.ஆனால் மின் வாரியம் அனுமதி கொடுக்க மறுக்கிறது. பிரச்னையை மேலும் சிக்கலாக்கி இருக்கிறது, மின்வெட்டு.40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறிவிட்டதால், ஏக்கருக்கு 60 டன்கள் வரை கிடைத்த கரும்பு தற்போது 40 டன்களாகக் குறைந்து விட்டது என்றார்.

Read more »

லாபம் தரும் இயற்கை ஸ்ட்ரூவைட் உரம்


சிதம்பரம்:
 
              தமிழக வாழை சாகுபடி விவசாயிகள்  சில ஆண்டுகளாக பொருளாதார சவால்களை சந்தித்து வருகின்றனர்.வேளாண் இடுபொருள்களின் அதிகப்படியான விலை உயர்வு, பெருமழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் காரணமாக வாழை மரங்கள் ஒடிந்து விடுதல் போன்ற காரணங்களால் கடுமையான உற்பத்தி இழப்புகள், பொருளாதாரச் சரிவுகளை சந்தித்து வருகின்றனர். 
 
                    வாழை சாகுபடியில் அதிகப்படியாக செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுவதாலும், பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களையும் சந்திக்கின்றனர்.இத்தகைய நடைமுறைச் சூழலில் குறைந்த செலவில் இயற்கை முறையில் அதிக லாபம் பெற்றுத் தரும் புதிய வாழை சாகுபடி முறைகள் பற்றி தமிழக விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியம்.
 
ஸ்ட்ரூவைட் உரம்: 
 
                 வாழை சாகுபடியில் பல நடைமுறை சிக்கல்களுக்கு எளிதான தீர்வுகளை இயற்கை ஸ்ட்ரூவைட் உரம் தருகிறது. மனிதச் சிறுநீர் மற்றும் மெக்னீசியம் கலந்து தயாரிக்கப்படும் ஸ்ட்ரூவைட் உரத்தை விவசாயிகள் தங்களின் வாழைத் தோட்டத்தில் பயன்படுத்தும் போது செயற்கை உரமிடுதல் பாதிப்புகளை தடுப்பதுடன் பூச்சி மற்றும் நோய் தாக்குதலையும் குறைக்கிறது. வாடல் நோயால் ஏற்படும் உற்பத்தி இழப்புகள் வாழை சாகுபடியில் தடுக்கப்படுகிறது. 
 
                  ஸ்ட்ரூவைட் உரத்தை பயன்படுத்தும் போது வாழை மரத்துக்கு தேவையான தழைச்சத்து மற்றும் மணிச்சத்து எளிதாக கிடைக்கிறது. எனவே விவசாயிகள் தங்களின் வாழைக்குத் தேவையான அளவு சாம்பல் சத்தை ஸ்ட்ரூவைட் உரத்துடன் கலந்து சாகுபடி பணிகளுக்கு பயன்படுத்தலாம். திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் இந்த ஸ்ட்ரூவைட் உரத்தை உருவாக்கியது. தற்போது பரிசோதனையில் உள்ள நிலையில் இந்த ஸ்ட்ரூவைட் உரங்கள் திருச்சியில் உள்ள தனியார் வேளாண் இடுபொருள்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.  மேலும் உலகத்தின் பல நாடுகளில் வாழை, பூக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடியில் ஸ்ட்ரூவைட் இயற்கை உரம் அதிகளவில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு சிறு மற்றும் குறு விவசாயிகள் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படச் செய்துள்ளது.
 
பிற பயன்கள்: 
 
                    செயற்கை உரங்களைப் போல் மண், நீர் மற்றும் இயற்கை வளங்களில் பாதிப்பு ஏற்படச் செய்யாது. விவசாயிகள் குறைந்த செலவில் சாகுபடிப் பணிகளை மேற்கொண்டு அதிக லாபம் பெற முடியும். தமிழகத்தின் சிறு மற்றும் குறு விவசாயிகள், பண்ணை மகளிர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விவசாய சங்கங்கள் வாழை சாகுபடியில் அதிக உற்பத்தி, உற்பத்தி திறன் மற்றும் மகசூல் பெற இயற்கை ஸ்ட்ரூவைட் பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம் என்கிறார் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன்.

Read more »

வடலூரில் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து வடலூரில் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்




கடலூர்:

                  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூரில் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து அதிமுக சார்பில் வடலூரில் வியாழக்கிழமை (ஜூன் 24) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக் கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

                  டலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுகா மருத்துவமனை அதிமுக  ஆட்சிக் காலத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட நவீன மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தினசரி ஆயிரம்  புற நோயாளிகளுக்கு மேல் வந்துசெல்லக்கூடிய இந்த மருத்துவமனை தற்போது எதற்குமே பயனில்லாத மருத்துவமனையாக விளங்குகிறது.÷இந்த மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு செயலற்ற நிலையில் உள்ளதாகவும், அறுவை சிகிச்சை எதுவும் நடைபெறுவதில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  நாய்கடி, பாம்புக்கடி போன்ற விஷக்கடி மருந்துகள் இல்லாத சூழ்நிலையும், சாதாரண நோய்களுக்குக் கூட வெளியூர் செல்கின்ற நிலைமையும், முதலுதவி கூட செய்ய முடியாத அவலமும்தான் மருத்துவமனையில் நிலவுகிறது.

                    இதன் காரணமாக, விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் ஏழை, எளிய பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறைபாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் திமுக அரசு எவ்வித நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. மேலும், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு இதுநாள் வரை வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் மீன் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சுகாதாரமற்ற நிலை நிலவுவதோடு, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படுவதில்லை.

                  வடலூர் பேரூராட்சியிலும் இதே போன்று சுகாதாரமற்ற நிலை காணப்படுவதோடு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாத அவலநிலை உள்ளது. எனவே, குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூரில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் வடலூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதிமுக அமைப்புச் செயலாளர் செ.செம்மலை எம்.பி. தலைமையிலும், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலர் எம்.சி.சம்பத் முன்னிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Read more »

தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 2.88 லட்சம்

சிதம்பரம்:

                     சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல் தொகை எண்ணப்பட்டதில் ரூ.2 லட்சத்து 88 ஆயிரத்து 66  காணிக்கையாக வந்துள்ளது தெரியவந்தது. இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆர்.ஜகந்நாதன், செயல் அலுவலர் க.சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை 5 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. 5 உண்டியல்களில் ரூ. 2,88,066 மற்றும் பத்தொன்பதரை கிராம் தங்கம், 165 கிராம் வெள்ளி  இருந்தது. இக் கோயிலில் 3 மாதத்துக்கு ஒருமுறை உண்டியல் திறந்து எண்ணப்பட்டு வருகிறது. கடந்த முறை எண்ணியதில் ரூ. 1 லட்சத்து 88 ஆயிரத்து 661 கிடைத்தது.

Read more »

கடலூர் அருகே மேம்பாலப் பணியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு புதிய பஸ் வசதி: ஆட்சியர்

கடலூர்:

             கடலூர் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்காக, பஸ்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டதால் பாதிக்கப்பட்ட 3 கிராம மக்களுக்கு, புதிய பஸ் வசதி செய்யப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை அறிவித்தார். 

கடலூர் மாவட்ட  ஆட்சியரின் செய்திக் குறிப்பு: 

               கடலூர் அருகே பச்சாங்குப்பம் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடப்பதால், கடலூர்- விருத்தாசலம் மார்க்கத்தில் செல்லும் புறநகர் பஸ்கள் சேடப்பாளையம், சுப்பிரமணியபுரம், பெரியகாட்டுசாகை வழியாக இயக்கப்பட்டதை மாற்றி, கடலூர்- சிதம்பரம் சாலை வழியாகச் சென்று ஆலப்பாக்கம் அருகே வலது பக்கம் திரும்பி, குள்ளஞ்சாவடி வழியாக விருத்தாசலத்துக்கு இயக்கப்படுகின்றன.

                 இதனால் சேடப்பாளையம், சுப்பிரமணியபுரம், பெரியகாட்டுசாகை கிராம மக்கள், புறநகர் பஸ் வசதியை இழக்க நேரிட்டது. எனவே அக்கிராம மக்களின் நலன் கருதி, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் இரு புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன.  அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த இந்த இரு பஸ்கள் (219வி மற்றும் 219விஏ) 24 தடவை, தற்போது நகரப் பஸ்கள் இயக்கப்படும் வழித்தடத்தில் மேற்கண்ட கிராமங்கள் வழியாக கடலூர் வரும் வகையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

என்எல்சி ஊதியமாற்று ஒப்பந்த பேச்சுவார்த்தை: எம்.பி. முன்னிலையில் நடத்தக் கோரிக்கை

நெய்வேலி:

                  என்எல்சி தொழிலாளர்களுக்கான ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை கடலூர் எம்பி கே.எஸ். அழகிரி முன்னிலையில் நடத்தவேண்டும் என என்எல்சி பிற்படுத்தப்பட்டோர் தொழிற்சங்கப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. 

               இப்பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலர் மகேஷ் தலைமை வகித்தார். மாவட்டச்  செயலர் வீரவன்னியவேங்கன் வரவேற்றார். அகில இந்திய செயலர் வன்னியராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இக் கூட்டத்தில், என்எல்சி தொழிலாளர்களின் புதிய ஊதியமாற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் போது, கடலூர் எம்.பி.யும், பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் சிறப்புத் தலைவருமான கே.எஸ்.அழகிரி முன்னிலையில் நடத்தவேண்டும் என என்எல்சி தலைவரை கேட்டுக்கொள்வது, கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் திரளாகக் கலந்துகொள்வது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

விருத்தாசலம் பஸ் நிலைய வசூல்: நகர்மன்ற தலைவர், ஆணையர் முரண்பட்ட தகவல்

விருத்தாசலம்:

               விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பஸ்களுக்கு தனிநபர் கட்டணம் வசூலிக்கிறார் என்று நகர்மன்ற தலைவரும், நகராட்சி ஊழியர் தான் வசூலிக்கிறார் என்று ஆணையரும் தெரிவித்துள்ளனர். கடந்த 16-ம் தேதி பொதுமக்கள் தெரிவித்த புகாரின் பேரில் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நகர்மன்றத் தலைவர் வ.க.முருகன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் நகர்மன்றத் தலைவர் வ.க.முருகன் கூறியது:

               விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பஸ்களுக்கான வசூலை தனிநபர் செய்கின்றார் என தகவல் கிடைத்ததின் பேரில், நான் பஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தேன். அப்போது நகராட்சிக்கு தொடர்பில்லாத கண்ணன் என்ற நபர் வசூல் செய்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்த வசூல் புத்தகத்தை வாங்கிப் பார்த்தபோது, பஸ் ஒன்றுக்கு கட்டணம் 12 ரூபாய் என்று அச்சடிக்கப்பட்ட புத்தகம் இருந்தது. அவரிடம் இதுகுறித்து கேட்டதற்கு, நகராட்சி துப்புரவு பணியாளர் பழனி என்பவர் புத்தகம் கொடுத்து தினமும் வசூல் செய்ய சொல்லுவார். நான் வசூல் செய்து தினமும் அவரிடம் ரூ. 3480 கொடுப்பேன். அவர் எனக்கு தினக்கூலியாக ரூ 250 கொடுப்பார் என்று தெரிவித்தார்.

                இதுகுறித்து அவர் எழுத்து மூலமாகவும் எழுதிக்கொடுத்துள்ளார். கண்ணனிடம் இருந்த ரசீது புத்தகத்தில் நகராட்சி சீல் போடப்பட்டுள்ளது. அந்த முத்திரை அலுவலக மூலம் போடப்பட்டதா அல்லது தனியார் மூலம் தயார் செய்யப்பட்டதா என்று ஆராயப்படும். இதையடுத்து பஸ் நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பிடத்தை பார்வையிட்டேன். அங்கு பயன்படுத்தப்பட்ட ரசீதில் விருத்தாசலம் நகராட்சி 2009-2010 என உள்ளது. ஆனால் தற்போது 2010-2011 நடந்து கொண்டிருக்கிறது. இதில் கட்டணம் 2 ரூபாய் என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. இதை சிவப்பு மையால் அடித்து ரூ. 1 என திருத்தம் செய்துள்ளனர். எனவே மேற்கண்ட முறைகேடுகளுக்கு யார் காரணம் என்பதை ஆணையர் கண்டறிந்து, நகராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர்மன்ற தலைவர் கூறினார்.

நகர்மன்றத் தலைவரின் இத் தகவல் குறித்து நகராட்சி ஆணையர் திருவண்ணாமலை கூறியது:

              பஸ் கட்டணம் வசூலிப்பதில் முறைகேடுகள் நடைபெறவில்லை. விருத்தாசலம் பஸ் நிலையத்தில் ஜூன் 2009 முதல் நகராட்சி சார்பில் தான் பஸ்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் வசூலிக்க 9 முறை ஏலம் விட்டும், இதில் இழப்பு ஏற்படுவதாகக் கூறி யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இந்நிலையில் நகராட்சி ஊழியர் பழனி என்பவர் தான் வசூல் செய்து வருகிறார். இவர் வசூல் செய்யும் புத்தகமும், பற்றுச்சீட்டில் உள்ள முத்திரையும் நகராட்சி அலுவலகத்துக்கு உள்பட்டதாகும். இதில் தவறு எதுவும் இல்லை. வசூல் தொடர்பாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, நேரில் சென்று பார்வையிட்டேன். புதன்கிழமை காலையில் கூட ரசீது புத்தகத்தை நான் ஆய்வு செய்தேன். ஆனால் தனிநபர் வசூல் செய்கிறார்கள் என்று நகர்மன்ற தலைவர் கூறுவது அவருடைய கருத்து. வசூல் செய்யப்படும் பணம் முறையாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தப்படுகிறது. அதற்கான ஆவணங்கள் இருக்கின்றன. அப்படி வசூல் செய்வதில் குளறுபடிகள் நடப்பதாக புகார் வந்தால், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பஸ் நிலைய வசூல் குறித்து பொது ஏலம் விடப்பட்டு நிரந்தர தீர்வு காணப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

Read more »

BSNL 3G services in Cuddalore, Villupuram towns

CUDDALORE: 

       Bharat Sanchar Nigam Ltd. General Manager (Cuddalore division) T. Rajendran inaugurated 3G mobile services here on Wednesday.

          The services would enable subscribers to watch television channels on their mobile phones with utmost clarity and also offer high-speed access to Internet browsing, he told a press conference. The 3G mobile phones would also display pictures of the speakers on the other end. To start with, the new services would be available in Cuddalore and Villupuram towns. It would be extended to other areas in the division in a phased manner, Mr. Rajendran said.

            The salient features of 3G services were high-speed data and video transmission, voice calls, video calls, multimedia short messaging services, wireless data exchange, mobile television and Internet browsing. While stationary, the speed of the Internet access would be a maximum of 3.6 mega bytes per second, while travelling, 144 kilo bytes per second and while walking, 384 kbps, Mr. Rajendran said. Television viewing could be possible by sending an SMS—My3GTV to 55447 for a fee.

The fee structure had been fixed as follows: 

               for watching all 40 channels Rs. 150 a month, for a single channel for a month –Rs. 50 and for a single channel for a day – Rs. 10. Those who are presently under 2G services but having 3G compatible handsets could easily migrate to the new services by just sending an SMS-- M3G 120—to 537333 for pre-paid subscribers and M3G25 to 53733 for post-paid subscribers. Those who were under 3G services could establish communication with those under 2G services through voice calls. Mr. Rajendran said that the BSNL was also marketing 3G Huwaei handsets that came with a “bundled offer”:

                 Handset – Rs. 6,500, 3G SIM card – Rs. 59, first recharge coupon – Rs. 161, validity – 180 days, talk time – Rs. 20. The freebies that came along with it were: free talk time for Rs. 50 every month for first six months, and free video calls for 30 minutes for first six months, and 25 MB download per month for two months. For facilitating 3G services, appropriate technology would be incorporated into the existing micro towers and the new towers to be set up would adopt modern technology. Mr. Rajendran also said that 2G services would continue along with 3G services.

Read more »

Shortage of stamp papers, revenue stamps

CUDDALORE: 

           Secretary of the Consumer Guild of Tamil Nadu C.D. Appavu has said that there is shortage of stamp papers and revenue stamps in Chidambaram. In a representation to the District Collector, he said that stamp papers in the denominations of Rs. 10, Rs. 100, Rs. 500 and Rs. 1,000 had gone scarce as also revenue stamps.

Officials' inability

           Whenever officials of the Sub-Treasury were contacted, they pleaded inability to replenish the stocks in time. The shortage posed great inconvenience to people as they could not get the stamp papers of right denominations in time and had to spend more for buying stamp papers of higher denominations, he said.

Read more »

வடலூரில் பெண் மானபங்கம் எஸ்.ஐ., உட்பட 7 பேர் மீது வழக்கு

கடலூர்:

                   வடலூர் அருகே நில பிரச்னையில் பெண்ணை மானபங்கப்படுத்தியதாக சப்- இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த ஆயிப்பேட்டையைச் சேர்ந்தவர் முருகபெருமாள். இவரது மனைவி சூடாமணி (38). முருகபெருமாளுக்கு சொந்தமான 10 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை, அதே ஊரைச் சேர்ந்த சீனுவாசன் என்பவரிடம் விற்றார்.

                சீனுவாசன் அந்நிலத்தை நெய்வேலி அடுத்த இந்திரா நகர் சவுந்தர்ராஜனுக்கு விற்று விட்டார். இதற்கிடையே சூடாமணி, "தனது கணவர் முருகபெருமாளை ஏமாற்றி நிலத்தை வாங்கி விட்டனர்' என, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சவுந்தர்ராஜன் மற்றும் கீழகுப்பம் சவுரிராஜன் உள்ளிட்ட ஆறு பேர் வடலூர் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோ முன்னிலையில், பிரச்னைக்குரிய நிலத்தில் உள்ள மரங்களை வெட்டிய போது, அதை தடுக்கச் சென்ற சூடாமணியை சவுந்தர்ராஜன், சவுரிராஜன் கட்டியாங்குப்பம் பெருமாள், தாமோதரன், பன்னீர், பண்ருட்டி ரங்கநாதன் (45) மற்றும் வடலூர் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் மிரட்டி, மானபங்கப்படுத்தியதாக வடலூர் போலீசில் புகார் செய்தார். சவுந்தர்ராஜன், சவுரிராஜன் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோ உள்ளிட்ட ஏழு பேர் மீது, பெண் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Read more »

ரூ.5 கோடி செலவு செய்யப்பட்ட புறவழிச்சாலை பாழாகும் அவலம்

கடலூர் : 

                கடலூர் ஜவான்ஸ் பவன் புறவழிச்சாலையாக மாற்றும் நிதி பற்றாக் குறையால் தார் சாலை பணி கிடப்பில் போடப் பட்டுள்ளது.

                கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு ஜவான்ஸ் பவன் கட்டடத்தில் இருந்து செம்மண்டலம் வரையிலான கெடிலம் ஆற்றங்கரையில் புறவழிச் சாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டது. மேலும், மழைக் காலத்தில் கெடிலம் ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் அருகில் உள்ள சுப்ராயலு நகர், நெடுஞ்சாலை நகர், குப்பன் குளம் நகர்கள் நீரில் மூழ்கி தத்தளிக்கும் நிலையை தவிர்ப்பதற்காகவும் சுனாமி நிதியில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனையடுத்து 1.8 கி.மீ., நீளத்தில் பொதுப்பணித்துறை 40 லட்ச ரூபாய் மதிப்பில் அகலமான சாலை அமைத்தது. இதனையடுத்து நெடுஞ்சாலைத் துறை ஒன்னரை கருங்கல் ஜல்லி போடப்பட்டதோடு சரி. அதன் பிறகு இச்சாலையை கண்டு கொள்ளவில்லை. 5 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்ட இச்சாலை தார் சாலை அமைப்பதற்கான நிதி இல்லாததால் பணிகள் நடைபெறாததால் சாலை மக்களுக்கு பயன்படாமல் உள்ளது.

                   இந்நிலையில் தற்போது பெய்த மழையினால் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக தண்ணீர் தேங்கி மோசமான நிலையில் உள்ளது. இனியும் இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லையெனில் இதற்காக செலவழிக்கப்பட்ட 5 கோடி ரூபாயும் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Read more »

கடலூர், விழுப்புரம் நகரில் 3 ஜி மொபைல் சேவை துவக்கம்: பொதுமேலாளர் தகவல்

கடலூர் : 

           கடலூர், விழுப்புரம் நகரில் 3 ஜி மொபைல் சேவை வசதி தொடங்கப்பட்டுள்ளது என தொலை தொடர்புத்துறை மாவட்ட பொது மேலாளர் ராஜேந்திரன் கூறினார்.

கடலூரில் தொலை தொடர்புத்துறை மாவட்ட பொது மேலாளர் ராஜேந்திரன் கூறியதாவது: 

                தமிழகத்தில் ஏற்கனவே 29 நகரங்களில் 3 ஜி வசதி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் கடலூர், விழுப்புரம் நகரங்களில் 3 ஜி வசதி இன்று முதல் (நேற்று) தொடங்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரத்தில் தற்போதுள்ள இயந்திரத்தின் மூலம் 5,000 பேர் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வசதியுள்ளது. இந்த வசதியின் மூலம் 3 ஜி வசதியுள்ள நகரங்களில் 3 ஜி சந்தாதாரர்களோடு வீடியோ அழைப்புகளை முகத்தை நேராக பார்த்து பேசும் வசதி கிடைக்கும். முக்கிய நிகழ்ச்சிகளை "டிவி'யில் பார்க்க நேரம் அல்லது வசதியில்லாத போது செல்போன் மூலமாகவே கண்டுகளிக்கும் வசதி உள்ளது. நிகழ்ச்சிகளை வீடியோவாக படம் பிடித்து உடனுக்குடன் "லைவாக' அனுப்பும் வசதியும் இதில் உள்ளது. மொபைல் "டிவி' யில் 40 சேனல்கள் வரை பார்த்து மகிழலாம். இதற்கு மாதமொன்றுக்கு 150 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். ஒரு சேனல் மட்டும் பார்க்க வேண்டு மென்றால் கூட (ஒரு நாளைக்கு) 10 ரூபாயில் பார்த்து மகிழலாம்.

                   டேட்டா உபயோகிக்கும்போது 3.5 எம்.பி., வரை வேகம் கிடைக்கும். இந்த வசதிக்கென தனியாக மொபைல் போன் உள்ளது. தொலை தொடர்புத் துறையிலும் 3ஜி வசதியுள்ள மொபைல் 6,500 ரூபாய்க்கு கிடைக்கும். 3 ஜி சிம் கார்டுகள் கடலூர், விழுப்புரம் நகரப் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையங்களிலும், முகவர்களிடமும் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிம் விலை 59 ரூபாய். ஏற்கனவே மொபைல் வைத்திருப்போர் எஸ்.எம்.எஸ்., மூலம் 3 ஜி சேவையை பெறலாம். இவ்வாறு பொது மேலாளர் ராஜேந்திரன் கூறினார். டி.ஜி.எம்., விஸ்வநாதன், டி.ஜி., ஜெயந்தி அபர்ணா, சுந்தர்ராஜ், கோட்டப் பொறியாளர்கள் சாந்தா, சமுத்திரவேலு, இளங்கோ, பால்கி உடனிருந்தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களின் தரம் உயர்த்த பரிந்துரை : சட்டம் ஒழுங்கை காத்திட கூடுதல் போலீஸ்

கடலூர் : 

               சட்டம் ஒழுங்கை நிலை நாட்டிடும் பொருட்டு போலீஸ் ஆணையத்தின் அறிவுரையின் பேரில் கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களின் தரத்தை உயர்த்தி கூடுதல் போலீசார் நியமித்திட அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

              சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதிலும், குற்றங்களை தடுப்பதிலும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும் ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையாக தமிழக போலீஸ் துறை விளங்கி வருகிறது. இருப்பினும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்தாததால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்தி மாநிலத்தில் அமைதியை நிலை நாட்டிடும் பொருட்டு போலீஸ் துறையை பலப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக போலீஸ் துறையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்திட கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு "போலீஸ் ஆணையம்' அமைத்தது.

                        இக்குழுவினர் தமிழகத்தில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், அதிக அளவில் பிரச்சனைகள் ஏற்படும் பகுதிகள், எதன் காரணமாக பிரச்சனை ஏற்படுகிறது, அந்த பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனின் நிலை, போலீசாரின் எண்ணிக்கை, மக்கள் தொகை உள்ளிட்ட பல்வேறு விவரங்களின் அடிப்படையாக கொண்டு போலீஸ் துறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்த அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். அந்தந்த பகுதிகளில் நடைபெறும் பிரச்னைகள், குற்றங்களின் அடிப்படையில் ஸ்டேஷன்களை "ஹெவி, மீடியம், லைட்' என மூன்று வகையாக பிரிக்கவும், "ஹெவி' ஸ்டேஷன்களுக்கு 2 இன்ஸ்பெக்டர்கள், 5 சப் இன்ஸ் பெக்டர்கள், ஏட்டுகள் மற்றும் போலீசார் 73 பேர் என மொத்தம் 80 பேரும், "மீடியம்' ரக ஸ்டேஷன்களுக்கு ஒரு இன்ஸ்பெக்டர், மூன்று சப் இன்ஸ்பெக்டர், 46 போலீசார் என மொத்தம் 50 பேரும், "லைட்' ரக ஸ்டேஷன்களுக்கு இரண்டு சப் இன்ஸ் பெக்டர்கள், 28 போலீசார் என மொத் தம் 30 பேரை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

                      போலீஸ் ஆணைய பரிந்துரையில் முக்கிய அம்சங்களை செயல் படுத்த முடிவு செய்துள்ள தமிழக அரசு முதல் கட்டமாக போலீஸ் ஸ்டேஷன்களை தரம் பிரித்து போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்திட ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் கருத்துரை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஜாதிக் கலவரம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும், தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகம் உள்ள கடலூர் மாவட்டத்தில் தற்போது உள்ள 45 போலீஸ் ஸ்டேஷன்களில் 9 ஸ்டேஷன்களை "ஹெவி', 13 ஸ்டேஷன்களை "மீடியம்', 23 ஸ்டேஷன்களை "லைட்' என தரம் பிரிக்கவும், இதன்படி தற்போது உள்ள 7 போலீஸ் உட்கோட் டங்களை உள்ளடக்கிய கடலூர் மாவட்டத்திற்கு 4 இன்ஸ்பெக்டர் கள், 12 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏட்டுகள், முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை போலீசார் 422 பேர் என மொத்தம் 438 பேர் கூடுதலாக நியமிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட் டுள்ளது.

                    மேலும் மாவட்டத்தில் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் காட்டுமன்னார்கோவில் போலீஸ் ஸ்டேஷன் பரப்பளவு பெரியதாக உள்ளதால் நிர்வாக வசதிக்காக இந்த ஸ்டேஷனை இரண்டாக பிரித்து ரெட்டியூரை தலைமையாக கொண்டு புதிய போலீஸ் ஸ்டேஷன் உருவாக்கவும், அதேபோன்று அதிகம் பிரச்னைகள் ஏற்படும் மங்களூர் மற்றும் பட்டாம்பாக்கத்தில் புதிதாக போலீஸ் ஸ்டேஷன்களை ஏற்படுத்தவும் மாவட்ட போலீஸ் துறை சார்பில் அரசுக்கு கருத்துரை அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் பரிந்துரையை ஏற்று வரும் 2011ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களை தரம் பிரித்து கூடுதல் போலீசார் நியமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more »

உயர் கல்வியில் நுகர்வோர் பாதுகாப்பு பொதிகை "டிவி'யில் இன்று ஒளிபரப்பு

கடலூர் : 

            உயர் கல்வியில் நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த நிகழ்ச்சி பொதிகை "டிவி' யில் இன்று ஒளிபரப்பாகிறது.

இதுகுறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

               மாநில அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் பொதிகை "டிவி'யில் நுகர்வோர் விழிப்புணர்வு கேள்வி நேரம் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று 24ம் தேதி பகல் 12.05 முதல் ஒரு மணி வரை "உயர் கல்வியில் நுகர்வோர் பாதுகாப்பு' என்ற தலைப்பில் கேள்வி நேரம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கு நுகர் வோர் பாதுகாப்பு துறை, பல்லைக்கழக மாணவர் ஆலோசனை மையம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தொழில் நுட்பக் கல்வி இயக்குனரக உயர் அதிகாரிகள் மற்றும் தன்னார்வபாதுகாப்பு ஆர்வலர்கள் பதில் அளிக்க உள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

Read more »

விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கலெக்டர் சீத்தாராமன் ஆய்வு

விருத்தாசலம் : 

                 விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கலெக்டர் ஆண்டு ஆய்வு செய்து நலதிட்ட உதவிகள் வழங்கினார்.

                  ஆய்வின் போது அலுவலகத்தில் ஆவணங்கள் பராமரிப்பு, பதிவேடுகள், அலுவலக செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் 18 பேருக்கு முதியோர் உதவி தொகை, 2 பேருக்கு திருமண உதவித் தொகை, விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் ஜெயராமன், திட்டக்குடி தாசில்தார் கண்ணன், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், சமூக நல திட்ட தாசில்தார்கள் பத்மாவதி, சையத் ஜாபர், ஆர்.ஐ., ராஜ்குமார், வி.ஏ.ஓ., ராஜேஸ்வரன் உடனிருந்தனர்.

Read more »

பா.ம.க., மகளிர் செயற்குழு பொறுப்பாளர்கள் கூட்டம்

கடலூர் : 

                பா.ம.க., மகளிர் செயற் குழு மற்றும் பொறுப் பாளர்கள் கூட்டம் கடலூர் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

                  பாட்டாளி மகளிர் சங்க மாநில செயலாளர் சிலம் புச்செல்வி தலைமை தாங்கினார். எழிலரசி ரவிச் சந்திரன், அமுதா, தானாயி, தர்மலிங்கம், பஞ்சமூர்த்தி முன்னிலை வகித்தனர். அலுவலக செயலாளர் போஸ் ராமச்சந்திரன் வரவேற்றார். பா.ம.க., மாநில அமைப்புச் செயலாளர் எம்.எல்.ஏ., வேல்முருகன், மாநில துணை பொதுச் செயலாளர் திருமால்வளவன் பங்கேற்று பேசினர். மாலதி, கலைமதி, உஷாராணி, செல்வகுமாரி, மலர்விழி, சுமதி, பாக்கியம், ஜெயக்கொடி உட்பட பலர் பங்கேற்றனர்.

                     கூட்டத்தில் ஜூலை 18ம் தேதி நடக்கும் வன்னியர் மகளிர் பெரு விழாவில் கடலூர் மாவட்டத்தில் இருந்து 1,000 வாகனங்களில் செல்வது, ஜூலை 28ம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்கள் முன் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பெருவாரியாக கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தேவசுந்தரி நன்றி கூறினார்.

Read more »

கடலூர் அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

                கடலூர் அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி பெற விரும்பும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: 

                        தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் கடலூர் அரசு சேவை இல்ல மேல் நிலைப் பள்ளியில் 2010-11ம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ், நர்சிங் பாடப்பிரிவு, தையல் மற்றும் தட் டச்சு, சுருக்கெழுத்து பிரிவில் சேர்ந்து கல்வி பயில விரும்புவோருக்கு இலவசமாக உணவு, சீருடை, பாடக் குறிப்பேடுகள் மற்றும் இருப்பிட வசதிகள் செய்து தரப்படும். சேவை இல்லத்தில் சேர்ந்து கல்வி பயில விரும்பும் பெண்கள் 16 வயது பூர்த்தி அடைந்தவரும் 40 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பெற்றோர், பாதுகாவலருக்கு ஆண்டு வருமானம் 24 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். சேவை இல்லத்தில் சேர விரும்புவோர் விண்ணப்பத்தினை இலவசமாக அஞ்சல் மூலமாகவோ நேரிலோ கண்காணிப்பாளர் அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளி, நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, கடலூர் என்கிற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

விருத்தாசலம் ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்கு வினாடி- வினா

விருத்தாசலம் : 

                விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.எல்.சி., சார்பில் மாணவர்களுக்கு வினாடி - வினா நிகழ்ச்சி நடந்தது.

                என்.எல்.சி., சார்பில் ஆண்டுதோறும் நெய்வேலியில் புத்தகக் கண் காட்சி நடைபெறும். இதில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு அறிவு சார்ந்த போட்டிகள் நடத் தப்பட்டு பரிசு வழங்கப்படும். இதற்கான வினாடி - வினா நிகழ்ச்சி விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்தது. ஆசிரியர்கள் வெங்கடேசன், உலகநாதன் போட்டியை நடத்தினர். சேப்ளாநத்தம், விருத்தாசலம் அரசு பள்ளிகள், பாத்திமா, சாரதா பள்ளி மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். ஆசிரியர்கள் அசோகன், ராஜேஷ், மாதவி, ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர்.

Read more »

பண்ருட்டி எல்.என். புரம் ஸ்டேட் பாங்க் நகரில் சாலையில் கழிவு நீர் தேக்கம் நோய் பரவும் அபாயம்

பண்ருட்டி : 

               பண்ருட்டி எல்.என். புரம் ஸ்டேட் பாங்க் நகரில் கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

              பண்ருட்டி எல்.என்.புரம் ஸ்டேட் பாங்க் நகர் முதல் தெருவில் உள்ள வீடுகளில் முறையான கழிவுநீர் தேக்கத் தொட்டி கட்டாததால் அந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் ஸ்டேட் பாங்க் நகர் விரிவாக்கம், நேரு நகர், வக்கீல் ஆறுமுகம் நகர் ஆகிய நகருக்கு செல்லும் 300 குடும்பத்தினர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

                     இது குறித்து கடந்த இரு ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் ஊராட்சி தலைவர் சேகர் உடன் கழிவுநீர் ரோட்டில் விடுவதை நிறுத்தாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்தார். ஆனால் அதன் பின்னரும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் தூர்நாற்றம் வீசி வருகிறது. கொசுக்கள் அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

Read more »

டி.புதுப்பாளையத்தில் டிரான்ஸ்பார்மர் பழுது பத்து நாட்களாக இருளில் மூழ்கியது கிராமம்

கடலூர் : 

             பழுதடைந்த டிரான்ஸ் பார்மரை சரி செய்யாததால் 10 நாட்களாக டி.புதுப்பாளையம் இருளில் மூழ்கியது.

                   கடலூர் அடுத்த டி.புதுப்பாளையம் கிராமத்தில் 700க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள டிரான்ஸ்பார்மர் கடந்த 10 நாட்களுக்கு முன் பழுதடைந்தது. இது குறித்து அருகில் உள்ள எஸ்.புதூர் மின் வாரிய அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தும் இதுவரை சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி 10 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளது. மேலும் போர் வெல் இயக்க முடியாததால் குடிநீருக்கும் அல்லாடி வருகின்றனர். மாணவ, மாணவிகளும் இரவு நேரத்தில் படிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

இது குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 

                  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பழுதடைந்த டிரான்ஸ்பார்மர் 2 நாட்களில் சரி செய்யப்பட்டது. பின்னர் திருவிழாவின் போது தெரு விளக்கு மற்றும் அலங்கார விளக்குகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டதால் அதிக மின்திறன் சுமை தாங்காமல் மீண்டும் பழுதடைந்தது. இதனால் அப்பகுதியில் 2 டிரான்ஸ்பார்மர்கள் வைக்க ஏற்பாடு செய்ததுடன் விரைவில் சரிசெய்து மின்சாரம் வழங்கப்படும்' என தெரிவித்தனர்.

Read more »

தமிழில் பெயர் பலகை கோரி பா.ம.க., ஆர்ப்பாட்டம்


சிதம்பரம் : 

              வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கக் கோரி சிதம்பரத்தில் பா.ம.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

                     சிதம்பரம் ஆர்.டி.ஒ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் சந்திரபாண்டியன் தலைமை தாங்கினார். மாநில விளம்பர அணி செயலாளர் வேணு புவனேஸ்வரன் வரவேற்றார். நகர தலைவர் தட்சணாமூர்த்தி முன்னிலை வகித்தார். தேவதாஸ் படையாண்டவர், மாவட்ட துணைத் தலைவர் அருள், திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் கள் பரமகுரு, செல்வக்குமார், இளையராஜா, குமார், கலையரசன், சரவணன் மற்றும் நகர பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். நகர செயலாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior