உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 02, 2010

இந்த ஆண்டாவது நிரம்புமா வெலிங்டன் ஏரி? நம்பிக்கையுடன் காத்திருக்கம் விவசாயிகள்


 
கடலூர்:
 
                   இந்த ஆண்டு ஏரி நிரம்பும் என்ற நம்பிக்கையில் வெலிங்டன் நீர்த்தேக்க விவசாயிகள் காத்து இருக்கிறார்கள்.  
 
                     வறண்டப் பகுதியான திட்டக்குடி வட்டம் கீழச்செறுவாய் பகுதியில் அமைந்து இருக்கும் வெலிங்டன் நீர்த் தேக்கம், 1918-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாக்களில் உள்ள 67 கிராமங்களைச் சேர்ந்த 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், இந்த ஏரியின் ஆயக்கட்டுகளாக உள்ளன. ஏரியின் கரை 300 மீட்டர் நீளத்துக்கு தொடர்ந்து பூமிக்குள் அழுந்திக் கொண்டு இருந்ததால், பலவீனப்பட்டு வந்தது. 
 
                     அண்மையில் ரூ. 30 கோடி செலவிட்டு, கரையைப் பலப்படுத்தியதால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எனினும் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஏரி, முழுக் கொள்ளளவுக்கு நிரம்புகிறது என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.   கடந்த ஆண்டு ஏரிக்கரை சீரமைப்புப் பணி நடைபெற்றதால் ஏரியில் தண்ணீர் பிடிக்கவில்லை. 2008-ம் ஆண்டு வெள்ளாற்றில் நீர்வரத்து இல்லை. அதனால் அந்த ஆண்டும் ஏரி நிரம்பவில்லை.  
 
                  இந்த ஆண்டு வெலிங்டன் நீர்த்தேக்க விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படும் விதமாக, வடகிழக்குப் பருவமழை தொடங்கிய முதல் நாளே, ஏரியின் நீர் மட்டம் 9.1 அடியாக உயர்ந்து இருக்கிறது. ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு உயரம் 32 அடி. ஏரிக்கரை அண்மையில் செப்பனிடப்பட்டு இருப்பதால், இந்த ஆண்டு 23 அடி உயரம் மட்டுமே நீர் தேக்கலாம் என்று பொதுப் பணித் துறை அறிவுறுத்தி உள்ளது.  ஏரியில் நீர்மட்டம் 21 அடியைத் தொட்டதும் பொதுப் பணித் துறை, விவசாயிகளுடன் கலந்து பேசி பாசனத்துக்கு நீர் திறப்பது பற்றி அறிவிக்கும்.  
 
                      வெலிங்டன் ஏரி மேல்மட்டக் கால்வாய் பாசனப் பகுதிகள் மோட்டார் பம்பு செட் வசதிகளைக் கொண்டது. இப்பகுதியில் தற்போது 6 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல், 10 ஆயிரம் ஏக்கரில் கரும்பு, சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.   கீழ் மட்டக் கால்வாய் பகுதிகளான பெருமுளை, சிறுமுளை, புதுக்குளம், ஆதமங்கலம், நாவலூர், இளமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் ஏக்கரில் தற்போது மானாவாரிப் பயிர்கள்தான் உள்ளன.  
 
                    ஏரி நிரம்பினால் முதல் கட்டமாக கீழ்மட்டக் கால்வாய் பகுதிகளான 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன் அடையும். இந்த ஆண்டு வெலிங்டன் ஏரி நிரம்பி கீழ்மட்டக் கால்வாய் பகுதிகளுக்குத் தண்ணீர் கிடைக்கும் என்று விவசாயிகள் பெரிதும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.  
 
இது குறித்து வெலிங்டன் ஏரிப் பாசன விவசாயிகள் சங்கச் செயலர் பெண்ணாடம் சோமசுந்தரம் கூறுகையில், 
 
                    "10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வெலிங்டன் ஏரி நிரம்புகிறது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நாளன்றே ஏரி நீர் மட்டம் 9.1 அடியாக உயர்ந்து விட்டது.  சேலம் பகுதியில் நல்ல மழை பெய்ததால், வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளிக்கிழமை 2 ஆயிரம் கனஅடி வீதம் ஏரிக்குத் தண்ணீர் வந்தது. சனிக்கிழமை 236 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.  
 
                                  ஏரி நிரம்புவதன் மூலம் முதல்கட்டமாக கீழ்மட்டக் கால்வாய் பாசனப் பகுதிக்கு தண்ணீர் விடப்படும். அப்பகுதி முழுவதும் நெல் பயிரிட விவசாயிகள் காத்து இருக்கிறார்கள்.  மேல்மட்டக் கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காவிட்டாலும், ஏரியில் தண்ணீர் இருந்தால் ஆழ்குழாய்க் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். பெண்ணாடம் பகுதியில் 1960-களில் 5 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர் மட்டம், தற்போது 50 அடிக்குக் கீழே போய்விட்டது. வெலிங்டன் ஏரிக்கு போதுமான அளவு நீர் வரத்துக்கு வகை செய்ய, அரசு புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். வெலிங்டன் ஏரி நிரம்பினால் வறண்டுக் கிடக்கும் திட்டக்குடி, விருத்தாசலம் வட்டங்களில் தண்ணீர் பிரச்னை தீரும்' என்றார்.

Read more »

கடலூர் டெல்டா பகுதிகளில் கனமழை: வீராணம் ஏரி அடைப்பு


கடலூர்:
 
                  கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் கனமழை காரணமாக, வீராணம் ஏரியின் பாசன மதகுகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டன.  
 
                 டெல்டா பாசனப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி இருப்பதால், கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு, வீராணம் ஏரியின் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. கடைமடைப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா நடவுப் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது பெய்துவரும் மழையே நடவுப் பணிகளுக்குப் போதுமான அளவில் உள்ளது. எனவே வீராணத்தின் நேரடிப் பாசன வாய்க்கால்களின் ஷட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.  
 
               வீராணத்தில் இருந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு 502 கன அடி வீதமும், சென்னைக் குடிநீருக்கு 74 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.  ÷வீராணம் ஏரியின் நீர்மட்டம் திங்கள்கிழமை, 44.2 அடியாக (மொத்த உயரம் 47.5 அடி) உயர்ந்துள்ளது. இந்நிலையில் வீராணம் ஏரிக்கு கொள்ளிடம் கீழணையில் நீர் விநியோகிக்கும் வடவாறிலும் தண்ணீர் திறக்கப்படவில்லை. கொள்ளிடம் கீழணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 8.5 அடியாக உள்ளது (மொத்த உயரம் 9 அடி).  
 
                  கொள்ளிடம் கீழணையில் இருந்து கடலூர் மாவட்ட சம்பா பாசனத்துக்காக வடக்கு ராஜன் வாய்க்காலில் 420 கன அடி, நாகை மாவட்டப் பாசனத்துக்காக தெற்கு ராஜன் வாய்க்காலில் 136 கன அடி, குமுக்கி மண்ணியாறில் 78 கன அடி, ஏனைய வாய்க்கால்களில் 15 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 
 
இதுதொடர்பாக பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன் கூறுகையில், 
 
                  ""டெல்டா பாசனப் பகுதிகளில் பெரும்பாலும் நடவு முடிந்து விட்டது. கடைமடைப் பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கரில் நடவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பெய்துவரும் மழை, நடவுப் பணிகளுக்கு போதுமானதாக இருக்கிறது. எனவே வீராணம் ஏரி மதகுகளை பாசனத்துக்கு மூடிவிடுமாறு விவசாயிகள் தெரிவித்தனர். தேவைப்பட்டால் மதகுகள் திறக்கப்படும்'' என்றார்.

Read more »

கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலம்

கடலூர்:

               விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடலூரில் திங்கள்கிழமை, கோரிக்கை ஊர்வலம்  நடத்தினர். 

                   குள்ளஞ்சாவடி அருகே புலியூர் காலனியில் இரவு நேரங்களில் குடிசைகளைக் கொளுத்துவோரைத் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புலியூர், வசனாங்குப்பம், மக்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்து, குடியமர்த்த வேண்டும் அல்லது தீப் பிடிக்காத வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும். புலியூர் வசனாங்குப்பம் காலனி மக்களுக்கு தெருவிளக்கு, சாலைவசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடந்தது.

                      திருப்பாப்புலியூர் உழவர் சந்தை அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தது. ஊர்வலத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி திருமார்பன், துணைச் செயலாளர்கள் அறிவுடைநம்பி, செல்லப்பன், முல்லைவேந்தன், திருமேனி வழக்கறிஞரணி செயலாளர் காத்தவராயன், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலாளர் சுந்தர், கடலூர் நகரச் செயலாளர் பாவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


Read more »

கடலூரில் 22 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்

கடலூர்:

                 கடலூரில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில், 22.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வழங்கினார்.

                    மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 210 மனுக்கள் பெறப்பட்டன. அவை மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 

                 தாட்கோ மூலம் துப்புரவுப் பணியாளர் நலவாரியத் திட்டத்தில் 11 பேருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் திருமண உதவித் தொகை 14,200, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 2 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில் 74 பேருக்கு 18 லட்சம் உதவித் தொகை உள்ளிட்ட 22.80 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Read more »

பண்ருட்டி பஸ் நிலையத்தில் வழிந்தோடிய கழிவுநீர்

பண்ருட்டி:

                பண்ருட்டி பஸ் நிலையம் அருகே உள்ள பிரதான கால்வாய் அடைபட்டு கழிவுநீர் வெளியே வழிந்தோடியதால் அப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டதுடன் பொதுமக்களும் அவதி அடைந்தனர்.

                 பண்ருட்டி நகர நிர்வாகம் கடந்த பல ஆண்டுகளாகவே கழிவுநீர் கால்வாய்களை பராமரிக்கத் தவறிவிட்டது. இதனால் பல்வேறு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்ந்து மண் மூடி உள்ளன. இதுகுறித்து நகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலமுறை முறையிட்டும் நகர நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. கழிவுநீர் கால்வாய்களில் அடைபட்டுள்ள மண்ணை அப்புறப்படுத்தாமலேயே, பல லட்சம் ரூபாய் செலவில் கால்வாய்களின் உயரத்தை உயர்த்தியது நகர நிர்வாகம்.

                    இந்நிலையில் பண்ருட்டி பஸ் நிலையம் அருகே செல்லும் பிரதான கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கடந்த இரு நாள்களாக கழிவுநீர் வெளியேறி ஓடியது, இதனால் அவ்வழியே சென்ற பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டிகள் பாதிப்பு அடைந்தனர். பின்னர் வந்த நகராட்சி ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி கழிவு நீர் வழிந்து வெளியே வராமல் செய்தனர்.

Read more »

காட்டுமன்னார்கோவிலில் கிராமப்புற பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

சிதம்பரம்:

               காட்டுமன்னார்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் வாழ்ந்துக் காட்டுவோம் திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற கிராமப் புற பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

                  மாவட்ட திட்ட மேலாளர் நித்தியானந்தம் தலைமை வகித்தார். உதவித் திட்ட மேலாளர் சிட்டிபாபு முன்னிலை வகித்தார். சென்னையைச் சேர்ந்த தனியார் ஆயத்தஆடை நிறுவனம் பங்கு கொண்டு எழுத்துத் தேர்வு மூலம் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்தனர். 400 பேர் பங்கேற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமில் 250 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என மாவட்ட திட்ட மேலாளர் நித்தியானந்தம் தெரிவித்தார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 9-ம் தேதி முதல் 28 கிராமங்களில் கால்நடை பாதுகாப்பு முகாம்கள்

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் 9-ம் தேதி முதல் 28 கிராமங்களில் கால்நடை பாதுகாப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                   2000ம் ஆண்டு தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட கால்நடை பாதுகாப்புத் திட்டம், கால்நடை பராமரிப்புத் துறையினரால் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் சிறந்த கால்நடை மருத்துவர்கள் பங்கேற்று, கால்நடைகளுக்கு செயற்கைக் கருவூட்டல், பசுக்களின் மலட்டுத் தன்மை நீக்கல், நோய்தடுப்பு ஊசிகள் போடுதல், சினைப் பரிசோதனை, குடற்புழு நீக்கம் செய்தல் மற்றும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்படும். சிறந்த கன்றுகளுக்கு பரிசும் வழங்கப்படும்.

கால்நடை மருத்துவ முகாம்கள்: 

                   9-ம் தேதி அழகப்பெருமாள் குப்பம், செüந்தர சோழபுரம், சி.சாத்தமங்கலம், 10-ம் தேதி சர்வராஜன்பேட்டை, தென்குத்து, 11-ம் தேதி வேளங்கிப்பட்டு, கிளிஞ்சிக்குப்பம், அரசக்குழி, நடியப்பட்டு, வடபாதி, 12-ம் தேதி கரிவெட்டி, 15-ம்தேதி ஆலம்பாடி, 16-ம் தேதி கண்டமங்கலம், திருக்கண்டேஸ்வரம், 17-ம் தேதி டி.வி.புத்தூர், 18-ம் தேதி அரியகோஷ்டி, இருளக்குறிச்சி, ஆக்கனூர், 19-ம் தேதி சிவபுரி, 20-ம் தேதி காட்டுக் கூடலூர், 21-ம் தேதி பரவளூர், 24-ம் தேதி ரங்கநாதபுரம், கொக்கரசன் பேட்டை, 24-ம் தேதி காவாலக்குடி, 25-ம் தேதி ஒதியடிக்குப்பம், மாளிகைக் கோட்டம்,  26-ம் தேதி ஜெயங்கொண்டான், கீழிருப்பு ஆகிய கிராமங்களில் நடைபெறும்.

Read more »

சேத்தியாத்தோப்பு அருகே ரசாயன கல் வெடித்து மூவர் படுகாயம் : பழக்கடை, சலூன் சேதம்



சேத்தியாத்தோப்பு : 

                   சேத்தியாத்தோப்பு பழக்கடையில் பயங்கர சத்தத்துடன் ரசாயன கல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

                       கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (50). இவருக்கு சொந்தமான ஏ.ஜி.ஆர்., பழக்கடை சேத்தியாத்தோப்பு கடை வீதியில் உள்ளது. நேற்று மாலை 4.45 மணிக்கு கடையின் பின்புறத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிமென்ட் ஓடுகள் தூள் துளாகி கடை வீதி முழுவதும் சிதறின. இதனால், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். அருகில் இருந்த ஆனந்தன் என்பவரின் சலூன் கடையும் சேதமடைந்தது.

                   இவ்விபத்தில் ராமலிங்கம், கடையில் வேலை செய்யும் அகர ஆலம்பாடி வேல்முருகன், சக்திவிளாகம் குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். மூவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்த இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பழக்கடையில் பழம் பழுக்க வைத்திருந்த ரசாயன கல் வெடித்தது தெரிந்தது.

பழக்கடையில் வைத்திருந்த ரசாயன கல் வெடித்ததா... 

                        வேறு ஏதாவது வெடி பொருட்கள் வெடித்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சேத்தியாத்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் தீபாவளியையொட்டி கடைகளில் வியாபாரம் களைகட்டுகிறது : கடைவீதிகளில் குவியும் மக்கள் கூட்டம்

கடலூர் : 

                   தீபாவளிப் பண்டிகையையொட்டி கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளதால் மாவட்டம் "களை' கட்டியுள்ளது. சூரனை வதம் செய்த நாளைத் தான் நாம் தீபாவளிப் பண்டிகையாக கொண்டாடி வருகிறோம். தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளிலேயே தீபாவளியைத்தான் மக்கள் அதிக உற்சாகத்துடன் கொண்டாடுவது வழக்கம். பொதுவாக தீபாவளிப் பண்டிகை அக்டோபர் கடைசி அல்லது நவம்பர் முதல் வாரத்திலும் வரும். அப்போது தமிழகத்தில் மழைக் காலமாக இருப்பதால் அடைமழை பெய் யும். இதன் காரணமாக சில சமயங்களில்  வெள் ளப்பெருக்கு ஏற்பட்டு பொது மக்கள் பாதிப்படையும் சூழ்நிலை நிலவும்.

                             பண்டிகை அமாவாசையின் போது வருவதால் இடைவிடாது கனமழை பொழிந்து மக்கள் பொருட்கள் வாங்க கூட முடியாமல் அவதிப்பட்ட காலங்களும் உண்டு. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பருவமழை தாமதமாக துவங்கியது தீபாவளி கொண்டாடுவோர்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

                         அதுவும் இதுவரை மழை தீவிரம் அடையாமல் மிதமான மழை பெய்து வருவதால் மக்கள் எவ்வித சிரமமுமின்றி கடைகளில் பொருட்கள், புத்தாடைகள், இனிப்பு வகைகள் வாங்கி குவித்து வருகின்றனர். தீபாவளிப் பண்டிகை இன்னும் 2 நாட்களே இருப்பதால் மக்கள் பொருட்களை வாங்க கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். மேலும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு விட்டதால் மக்கள் மகிழ்ச்சியுடன் கடைகளில் பொருட்களை வாங்கி செலவழித்து வருகின்றனர்.

                       கடலூர் நகரில் குறிப் பாக லாரன்ஸ் ரோடு, தேரடித்தெரு, பான்பரி மார்க் கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேப்போல மஞ்சக்குப்பம் சுதர்சனம் நாயுடு வீதி, முதுநகர் மார்க்கெட் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலினால் மாலை 6 மணி முதல் லாரன்ஸ் ரோடில் வாகனங்களில் செல்ல முடியவில்லை. 

                        துணிக்கடைகளில் காலை முதல் இரவு வரை மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சில துணிக்கடைகளில் கூட்ட நெரிசல் காரணமாக வியாபாரம் கவனிக்க முடியாததால் கடை வியாபாரிகள் இடைவெளி கொடுத்து கடைகளுக்குள் அனுப்புகின்றனர். இதனால் மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து கடைகளுக்குள் செல் லும் நிலை உள்ளது. இதேப்போல பட்டாசுக் கடை, ஓட்டல்கள், இனிப்பு கடைகளிலும் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

                  போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவற்காகவும், திருடர்களிடமிருந்து பொது மக்களை காப்பாற்றவும் போலீசார் நெரிசல் மிகுந்த முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து சீர்படுத்தி வருகின்றனர். இதேப்போல பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

சிதம்பரம்: 

                        தீபாவளிப் பண்டிகையையொட்டி சுற் றுப்புற கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள் சிதம்பரம் நகருக்கு வர துவங்கியுள்ளனர். இதனால் சிதம்பரம் நகரத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக மேல வீதியில் துணிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் அதிகமாக உள்ள நிலையில் மாலை நேரங்களில் கட் டுப்படுத்த முடியாத அள வில் கூட்ட நெரிசல் உள்ளது. 

                        அதையொட்டி போக்குவரத்து சீரமைக்க போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மேல வீதியில் இன்று (1ம் தேதி) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. நேற்று மாலையே மேல வீதி வழியாக போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. இரு சக்கர வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் மேல வீதியில் நிறுத்த அனுமதிக்கப்படாமல் வடக்கு வீதியில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

Read more »

சிதம்பரம் லால்புரத்தில் பள்ளி அருகே டாஸ்மாக் கடை அகற்ற இந்திய கம்யூ., கோரிக்கை

சிதம்பரம் : 

               சிதம்பரம் லால்புரத்தில் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

                     இந்திய கம்யூ., லால்புரம் கிளை மாநாடு கிளை செயலாளர் நடராஜன் தலைமையில் நடந்தது. மணிகண்டன், தெய்வசிகாமணி முன்னிலை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினர் நாகராஜன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சேகர் பேசினர். குமார், ஆதிமூலம், மரியம் பீவி, உட்பட பலர் பங்கேற்றனர். 

                   கூட்டத்தில், லால்புரம் பகுதியில் நீண்ட நாட்களாக உள்ள குடிநீர் பிரச்னையைப் போக்க கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.  அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை பாசன வாய்க்காலில் கலப் பதை தடுக்க வேண்டும். ஆரம்பப்பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மாற்ற வேண்டும் என அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

திட்டக்குடி அருகே இரண்டு "கான்கிரீட்' வீடுகள் இடி தாக்கி சேதம்




திட்டக்குடி : 

                   கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டு வீடுகள், இடி தாக்கி பலத்த சேதமடைந்தன. 

                   தமிழகம் முழுவதும் குடிசை வீடுகள் இல்லாத மாநிலமாக உருவாக்க, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், "கான்கிரீட்' வீடு கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியத்தில் இத்திட்டத்தின் கீழ் 1,786 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. கடந்த நான்கு நாட்களாக திட்டக்குடி பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 

                 திட்டக்குடி அடுத்த நெடுங்குளம் கிராமத்தில் விழுந்த பலத்த இடி, வடக்குத் தெருவில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மணிவேல் மனைவி செல்வி மற்றும் பக்கத்து வீடான கணேசன் மனைவி மலர்கொடி வீடுகளை தாக்கியது. இரண்டு வீடுகளின் கீழ்ப்புற, "கான்கிரீட்' தளங்கள் முற்றிலும் பெயர்ந்து, சுவரில் விரிசல் ஏற்பட்டு, வீடுகள் சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. ஊராட்சித் தலைவர் கணபதி கொடுத்த தகவலின் பேரில் தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர்  ராமச்சந்திரன், வி.ஏ.ஓ., கருணாகரன் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர். 

இது குறித்து தாசில்தார் கண்ணன் கூறுகையில், 

                      "இரண்டு பயனாளிகளுக்கும் கட்டுமான பணிக்கென இருதவணைகளாக தலா 21 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடையும் நிலையில், "இடி' தாக்கி பக்கத்து பக்கத்து வீடுகள் சேதமடைந்துள்ளன. இரு வீடுகளையும் முழுமையாக அகற்றி, மீண்டும் புதிய வீடு கட்டித்தர சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும்' என்றார்.

Read more »

கடலூர் கூத்தப்பாக்கத்தில் ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்

கடலூர் : 

                  கூத்தப்பாக்கம் சக்தி நகரில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. கடலூர் திருவந்திபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தின் கட்டுப்பாட்டில்  அதிக ரேஷன் கார்டு உள்ளதால் கூத்தப்பாக்கம் சக்தி நகரில் 883 ரேஷன் கார்டுகளுக்காக தனி ரேஷன் கடை அமைக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு ஊராட்சி தலைவர் கோமதி சிவலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ஸ்ரீமதி முன்னிலை வகித்தார். மண்டல இணைப்பதிவாளர் வெங்கடேசன் வரவேற்றார்.எம்.எல்.ஏ., அய்யப்பன் ரேஷன் கடையை திறந்து விற்பனையை துவக்கி வைத்தார்.

                      மேலும் செல்லங்குப்பத்தில் முழு நேர ரேஷன் கடை, வெளிச்செம்மண்டலத்தில் 251 ரேஷன் கார்டுகளுக்கு பகுதி நேர ரேஷன் கடையும், புதுப்பாளையம் கூட்டுறவு பண்டக சாலையில் தீபாவளி பட்டாசு விற்பனை நிலையத்தையும் எம்.எல்.ஏ., அய்யப்பன் திறந்து வைத்தார். இவ்விழாக்களில் கடலூர் சேர்மன் தங்கராசு, பொது வினியோகத் திட்ட துணைப்பதிவாளர் மகபூப் ஷெரீப், கோண்டூர் ஊராட்சி தலைவர் சுஜாதா, கவுன்சிலர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், தனி அலுவலர்கள் நிர்மலா, கோபிநாத், கிருஷ்ணராஜ், இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

சிதம்பரம் அடுத்த முடசல்ஓடை முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி துவக்கம்

கிள்ளை : 

              சிதம்பரம் அடுத்த முடசல்ஓடை, சின்ன வாய்க்கால் மற்றும் பில்லுமேடு முகத்துவாரங்களை 30 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிகமாக ஆழப்படுத்தும் பணி துவங்கியது. 

                  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே முடசல்ஓடை, சூரியா நகர், கூழையார், எம்.ஜி.ஆர்., திட்டு, முழுக்குத்துறை, பில்லுமேடு, சின்ன வாய்க்கால் சுற்றுப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட  மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் அன்னங்கோவில், சின்ன வாய்க்கால் மற்றும் பில்லுமேடு முகத்துவாரங்கள் வழியாக கடலுக்கு சென்று மீன் பிடித்தொழில் செய்து வந்தனர். இந்த முகத்துவாரங்கள் கடந்த நான்கு ஆண்டிற்கு முன் மணல் மேடானதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். முடசல்ஓடை சிங்காரவேலர் விசைப் படகு உரிமையாளர் சங்கத்தினர் மீன் வளத்துறை அமைச்சரை சந்தித்து, முகத்துவாரங்களை ஆழப்படுத்த கோரிக்கை விடுத்தனர். 

                        கடந்த ஆண்டு முகத்துவாரங்களை பார்வையிட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பழையாறில் உள்ளது போல் 10 கோடி ரூபாய் செல வில் முகத்துவாரம் அமைக்கப்படும் எனக் கூறினர்.  அதன்படி முடசல்ஓடை முகத்துவாரத்தை  270 மீ., நீளம், 30 மீ., அகலம், 1.5 மீ., ஆழத்திலும்,  சின்னவாய்க்கால் மற்றும் பில்லுமேடு முகத்துவாரங்களை 180 மீ., நீளத்திற்கு 15 மீ., அகலத்தில் ஒரு மீ., ஆழத்திற்கு தூர்வாரும் பணியை தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி துவக்கி வைத்தார்.

Read more »

Construction of concrete houses under way

CUDDALORE: 

                 The construction of concrete houses under the Kalaignar Housing Scheme has gathered momentum in Cuddalore district. Of the 26,119 houses proposed to be built this year, 21 have already been completed and 2,441 are under various stages of construction.

                Construction activity is going on at a brisk pace particularly at Thiruvahindrapuram and Otteri areas. One of the beneficiaries, Dhanasekaran, a mason, said that he along with his wife had jointly constructed the dwelling unit. Since no outside labour was involved, they could complete the house within the budget of Rs 75,000. Yet another beneficiary Thangavel at Otteri had availed himself of the benefits of the housing scheme and the total sanitation scheme.

                Under the scheme, each unit is to be built on 207 sq.ft of land for which 60 bags of cement, 155 kg of iron rods, 6,500 bricks and 11 units of sand would be required. While the government supplies the necessary cement and iron rods , the beneficiaries have to arrange for other things. District Collector P.Seetharaman said that of the 2,10,750 huts in the district (the second highest in the State next only to Villupuram) 1,26,735 were eligible for the scheme. Those who had their tenements on patta lands, government poromboke, and objectionable or non-objectionable government poromboke were included in the scheme. The administration has trained 113 Self-Help Groups in brick manufacturing to aid the existing 897 units in meeting the demand.

                    The personnel of the Larsen and Toubro have imparted masonry training to interested youths. The Collector said loans with 35 per cent subsidy would also be arranged for the prospective brick-makers that through the Khadi and Village Board . Another 4,336 houses would be constructed under the Indira Awaz Yojana programme and soon, the landscape of the district would be totally transformed, the Collector added.

Read more »

The regulated market committee Moves to new premises

CUDDALORE: 

              The regulated market committee located on the Thozhudur-Thittakudi road has been shifted to a spacious premises on the Vriddhachalam—Thittakudi highway, opposite the Tamil Nadu Electricity Board (TNEB) office, according to a press release.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior