உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 03, 2010

ரேஷன் கார்டு கிடைக்காமல் மக்கள் அவதி! மாவட்ட நிர்வாகம் கருணை காட்டுமா?

சேத்தியாத்தோப்பு : 

                       விண்ணப்பித்து 6 ஆண்டாகியும் ரேஷன் கார்டு கிடைக்காமல் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சேத்தியாத்தோப்பு குறுவட்டத்திற்கு சேத்தியாத்தோப்பு, பெரியக்குப்பம், சின்னக்குப்பம், ப.ஆதனூர், அகரஆலம்பாடி, கத்தாழை, கரிவெட்டி, முத்துகிருஷ்ணாபுரம், வளையமாதேவி, எறும் பூர், ஆனைவாரி, வீரமுடையாநத்தம், பெரியநற்குணம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 2008ம் ஆண்டு சேத்தியாத்தோப்பில் அப் போதைய வருவாய் ஆய்வாளரிடம் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்தனர்.

                விண்ணப்பம் பெறவே வள்ளலார் ஆலய நன்கொடையையும் மனுதாரர்கள் கொடுத்தனர். இது தொடர்பாகவும், வேறு சில பிரச்னை தொடர்பாக வருவாய் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப் பட்டு புதிய வருவாய் ஆய்வாளர் நியமிக்கப்பட்டார். அதன் முந்தைய வருவாய் ஆய்வாளரில் பரிசீலிக்கப்படாத மனுக்களையும், புதிய மனுக்களையும் புதிய ரேஷன் கார்டு வேண்டி பொதுமக்கள் கொடுத்தனர். அதன்படி இதுவரை சேத்தியாத்தோப்பு வருவாய் கோட்டத் தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டு வேண்டிய விண் ணப்பங்கள் தாலுகா அலுவலகங்களுக்கு பரிந்துரைத்து அனுப்பியும் கூட இதுவரை எவருக்கும் ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. உணவு அமைச்சர் வேலு பங் கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரேஷன் கார்டு வேண்டி விண் ணப்பித்த மூன்று மாதத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏனோ சேத்தியாத்தோப்பு வருவாய் கோட்ட மக்களுக்கு பொருந்தாமல் போகிறது. விண்ணப்பித்து இரு ஆண்டுகளாகியும் ரேஷன் கார்டு கிடைக் காத சேத்தியாத்தோப்பு குறுவட்டத்தை சேர்ந்த மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உறுப்பினர் அட்டை பெறமுடியவில்லை.
                        தற்போது உள்ள ரேஷன் கார்டின் காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில் அனைவருக்கும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் போது தங்களுக்கும் ரேஷன் கார்டு புதியதாக கிடைத்து விடும் என்று எதிர்பார்த்திருந்தனர்.  ஆனால் தமிழக அரசு ரேஷன் கார்டுகளை புதுப்பிக்க கால அவகாசம் வேண் டும் என்ற காரணத்தை காட்டி பழைய ரேஷன் கார்டுகளுக்கான உரிமத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அறிவித்துள்ளது. இதனால் தற்போதைக்கு தங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்க வாய்ப்பே இல்லை என்று புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் மனுக்களை பரிசீலித்து உடனடியாக ரேஷன் கார்டு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

மின் உற்பத்தியை பெருக்க புதிய திட்டங்கள் : அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

காட்டுமன்னார்கோவில் :

                 மின் உற்பத்தியை பெருக்க தி.மு.க., ஆட்சியில் மட்டுமே புதிய திட் டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

                      காட்டுமன்னார் கோவில் அடுத்த முட்டத்தில் 33 கே.வி., புதிய துணை மின் நிலைய துவக்க விழா நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். சிதம்பரம் செயற் பொறியாளர் செல்வசேகர் வரவேற்றார்.  துணை 

மின் நிலையத்தை திறந்து வைத்து அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: 

                           கடந்த 1996ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில்தான் மின் உற்பத்திக்காக பல் வேறு நடவடிக்கை எடுக் கப்பட்டது. அடுத்து வந்த அ.தி.மு.க., அரசு மின் உற்பத்தியை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த ஆட்சியில் தொழிற்சாலைகள் புதிதாக துவங்காததால் மின் தேவை அதிகரிக்கவில்லை. ஆனால் தி.மு. க., ஆட்சியில் தொழிற்சாலைகள் அதிகம் துவங்கியுள்ளதாலும், கிராமங்களில் இலவச "டிவி', வழங்கியுள்ளதால் குடிசைகளுக்கும் மின்சாரம் வழங்குவதால் தேவை அதிகரித்துள்ளது. அதற் கேற்ப மின் உற்பத்தியை பெருக்க பல புதிய திட் டங்கள் செயல்படுத்தி வருகிறது.

              கடந்த 96ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த இந்த துணை மின் நிலைய திட் டம் அடுத்து வந்த அ.தி. மு.க., ஆட்சியில் கைவிடப்பட்டு தற்போது திறக் கப்பட்டுள்ளது. இங்கு துணை மின் நிலையம் திறந்ததன் மூலம் 50 கிராமங்களை சேர்ந்த 6100 வீடுகள், வணிக நிறுவனங்கள், 85 குடிசை தொழில், 4000 குடிசை வீடுகள், 30 தொழிலகங்கள் பயனடையும். சிதம்பரம் மின் கோட் டத்தில் மின் தட்டுப் பாட்டை போக்கவும், ஸ்ரீமுஷ்ணம், வானமாதேவி, பின்னத்தூர், பி.முட்லூர், புவனகிரி துணை மின் நிலையங்களின் திறன் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என பேசினார்.விழாவில் டி.ஆர்.ஓ., நடராஜன், ஒன்றிய சேர் மன்கள் ஜெயச்சந்திரன், மாமல்லன், முத்துப்பெருமாள், பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் சின்னப்பா உள்ளிட்டடோர் பங்கேற்றனர். தலைமை பொறியாளர் சண்முகம் நன்றி கூறினார்.

Read more »

மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

விருத்தாசலம் : 

                     விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலை கல்லூரி மாணவ,மாணவர்கள் அடிப்படை வசதிகள் கோரி வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவிக் தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண் டும் எனவும் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், மாணவியர் விடுதியை திறக்கக்கோரி நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியே வந்தனர்.பின்னர் கல்லூரியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாணவர் சங்க முன்னாள் தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். மாணவர்கள் கனகராஜ், ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Read more »

மாணவிகளுக்கு கலைத்திறன் போட்டி

கடலூர் : 

                        கடலூர் தூய இருதய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாணவிகளுக் கான கலைத்திறன் போட் டிகள் நடந்தது.நிறுவன முதல்வர் பாத்திமா போட்டிகளை துவக்கி வைத்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆபெல், ஆசிரியர்கள் சாந்தி, கிறிஸ்டினா மேரி நடுவர்களாக இருந்தனர்.  இதில் பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியம், நடனம், தனி நடிப்பு, குழு நாடகம், குழு நடனம், இசை உட்பட 13 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப் பட்டன.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சென்னை தலைமை செயலக அரசு ஊழியர் சங்க செயலர் பீட்டர் அந் தோணி, கடலூர் புதுநகர் இன்ஸ் பெக்டர் ஆரோக்கியராஜ் பரிசு வழங்கினர்.

Read more »

வரகு பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

சிறுபாக்கம் : 

                 மங்களூர் ஒன்றிய பகுதி விவசாயிகள் தற்போது வரகு தானியம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மங்களூர் ஒன்றியம் சிறுபாக்கம், மங்களூர், மலையனூர், அரசங்குடி, அடரி, களத்தூர், கழுதூர், வப்பூர் அடுத்த பெரிய நெசலூர், கீழ் ஒரத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மானாவாரி நிலங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டு சோளம், வரகு தானியங்களையே பயிரிட்டு வந்தனர்.

                 அப்பகுதி மக்கள் இரவில் வரகு சாப்பாடும், பகலில் நாட்டு சோள கூழ் உண்டு வந்தனர். இதனால் தேக ஆரோக்கியத்துடன் சர்க்கரை, காசநோய், நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட நோய்கள் இல்லாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியுடன் வாழ்ந்து வந்தனர்.அதன்பிறகு இப்பகுதியிலும் உணவு முறையில் மாற்றம் வந்ததால் வரகு, நாட்டு சோளம் பயிரிடுவது படிப்படியாக குறைந்தது. அதற்கு பதிலாக மக்காசோளம், பருத்தி உள்ளிட்ட பணப் பயிர்களையே உற்பத்தி செய்திட ஆர்வம் காட்டினர். இதனால் வரகு கிடைப்பது மிகவும் அரிதாக இருந்தது.

             இந்நிலையில் குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் விற்பனையும், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து வரகு அரிசியின் தேவையும் அதிகரித்தது.இதனால் மங்களூர் பகுதியில் குறைந்த அளவில் அறுவடை செய்யப்படும் வரகு தானியத்தை தேனி, பரமக்குடி பகுதி வியாபாரிகள் நெல் விலைக்கு இணையாக 800 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கினர்.நன்செய் நிலங்களில் அதிக செலவு செய்து பயிரிடப்படும் நெல்லுக்கு இணையாக மானாவாரி நிலங்களில் குறைந்த செலவில் பயிரிடப்படும் வரகு தானியத்திற்கு விலை கிடைப்பதை அறிந்த மங்களூர் ஒன்றிய விவசாயிகள் தற்போது வரகு பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Read more »

என்.எல்.சி., மருத்துவமனையில் இன்று கண் சிகிச்சை முகாம்

நெய்வேலி : 

                என்.எல்.சி., பொது மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று நடக்கிறது. நெய்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் பயன்பெறும் வகையில் என்.எல்.சி., பொது மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண்சிகிச்சை முகாமை நடத்துகிறது. நெய்வேலி மருத்துவமனையில் இன்று நடைபெறும் முகாமை என்.எல்.சி., சேர்மன் அன்சாரி துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் இயக்குனர்கள் சுரங்கத்துறை சுரேந்தர் மோகன், செயலாக்கத்துறை கந்தசாமி, நிதித்துறை சேகர், நிர்வாகத்துறை பாபுராவ், மின்துறை சேதுராமன், விஜிலென்ஸ் துறை முதன்மை அதிகாரி பாலசுப்ரமணியன் முன்னிலை வகிக்கின்றனர். முகாம் ஏற்பாடுகளை என்.எல்.சி., மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

Read more »

பண்ருட்டியில் ரூ.27 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இறகுபந்து உள் விளையாட்டரங்கம் பூட்டிக் கிடக்குது

பண்ருட்டி : 

                பண்ருட்டியில் 27 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இறகுபந்து உள்விளையாட்டரங்கம் திறப்பு விழா காணாமல் உள்ளது. பண்ருட்டி திருநகரில் கடந்த 2007-08ம் ஆண்டு எம்.எல்.ஏ. நிதியில் 11 லட்சம் செலவில் இறகு பந்து உள்விளையாட்டரங்கம் கட்டும் பணி துவங்கியது. இப்பணிக்கு கூடுதல் நிதியாக நமக்கு நாமே திட் டத்தில் பொதுமக்கள் பங்களிப்பு 1.50 லட்சம் உதவியுடன் 6 லட்சம் ரூபாய் செலவுடன் மொத்தம் 17 லட்சத்தில் உள்விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டது.

                  இந்த அரங்கில் மரத்திலான ஆடுதளம் அமைக்காததால் விளையாட்டு வீரர்களின் கால்களில் பாதிப்பு ஏற்படும் என்பதால், மரத்திலான ஆடுதளம் அமைக்க வேண்டும் என இறகு பந்து விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் எம்.எல்.ஏ., வேல்முருகன் விடுத்த கோரிக்கையை ஏற்று மரத்திலான ஆடுதளம் அமைக்க 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக துணை முதல்வர் உத்தரவிட் டார். அதனைத் தொடர்ந்து சென்னை பி.எஸ்.எஸ். கன்ஸ்ட் ரக்ஷன் நிறுவனம் கீழ்தளம் அமைக்கும் பணியை கடந்த டிசம்பர் 25ம் தேதி முடித்தது. முழுமையான இறகு பந்து உள்விளையாட்டரங்கம் அமைத்து  ஒரு மாதத்திற்கு மேலாகியும், திறப்பு விழா காணாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நகரில் உள்ள இறகு பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பழகுனர்கள் பயிற்சி மேற் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தயார் நிலையில் உள்ள இறகுபந்து உள்விளையாட்டரங்கை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பள்ளி அருகே ஆகாயத் தாமரை புதர்

கடலூர் : 

               கடலூரில் பள்ளி அருகே உள்ள குளத்தில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந் துக்கள் நடமாட்டத் தால் மாணவ, மாணவிகள் அச்சத்தில் உள்ளனர்.கடலூர் வண்ணாரப்பாளையம் ரங்கநாதன் நகரில் பாபா பள்ளி அருகே பாப்பான் குளம் உள்ளது. நெடு நாட்களாக குடியிருப்பு பகுதியின் நடுவில் இருக்கும் இந்த குளத்தில் தற்போது ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால் இந்த குளத்திலிருந்து சாரை உள்ளிட்ட பெரிய பாம்புகள் மற்றும் தேள், நண்டுவாக்களி உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித் துள்ளது. அப்பகுதியில் உள்ள வீடு, பள்ளியிலும் புகுந்து மாணவ, மணவிகளை அச்சுறுத்தி வருகின்றன. இதுபற்றி நகராட்சி, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பெண்ணாடம் மணல் குவாரியில் விதிமுறை மீறல் : சாலை மறியலில் ஈடுபட கிராம மக்கள் முடிவு

திட்டக்குடி : 

               பெண்ணாடம் வெள்ளாற்று குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். திட்டக்குடி வெள்ளாற்றில் பெண் ணாடம், முருகன்குடி, இறையூர், நெய்வாசல், வதிஷ்டபுரம் பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு லாரி, டிராக்டர் மற்றும் டயர் வண்டிகள் மூலம் மணல் ஏற்றி செல்ல அரசு அனுமதி வழங்கியுள் ளது. பெண்ணாடம் குவாரியில் தினமும் 120க்கும் மேற்பட்ட லாரிகள் மணல் ஏற்றி செல்கின்றன.

                  தண்ணீர் ஓடும் பாதையில் 3 அடி ஆழத்திற்கு கீழ் மணல் எடுக்க கூடாது என அரசாணை இருந்தும், பெண்ணாடம் மணல் குவாரியில் விதிமுறைகளை மீறி 9 அடிக்கும் மேல் மணல் அள்ளப்படுகிறது. தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் புதியதாக குளம் வெட்டியிருப்பதை போல, வெள்ளாற்றில் ஆங்காங்கே பாதாள குளங்கள் காட் சியளிக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும், விவசாய பணிகளுக்கு நீர் ஆதாரம் குறையும் அபாயமும் உருவாகியுள்ளது. அதிக ஆழத்திற்கு மணல் எடுக்கும் குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டும், இதுவரை பெண்ணாடம் குவாரியில் நடவடிக்கை எடுத்தபாடில்லை. மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வெள்ளாற்று கரையோர விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையில் மணல் வண்டிகளை மறிக்கும் தொடர் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Read more »

பெண்களுக்கு வேலைவாய்ப்பு சுய தொழில் இலவச பயிற்சி

கடலூர் : 

                   கடலூர் ரோட்டரி சங்கங்கள் சார்பில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு சுய தொழில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. கடலூர் ரோட்டரி சங் கங்கள் சார்பில் செல்வி செயல் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான 3 நாள் வேலை வாய்ப்பு சுய தொழில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. நி கழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். வக் கீல் அருணாசலம் முன் னிலை வகித்தார். ரோட் டரி உதவி ஆளுனர் தாயுமானவர் மற்றும் மண்டல செயலாளர் டாக்டர் மனோகரன், சங்க தலைவர்கள் டாக்டர் கோவிந்தராஜன், சத்தியநாராயணன், புனிதா கலந்து கொண்டனர்.பயிற்சியில் கம்ப்யூட்டர் சாம்பிராணி, பட்டுப்புடவை பாலிஷ் செய்தல், சந்தன வில்லை தயாரித்தல் உள்ளிட்ட 10 தொழில் முறை பயிற்சி அளிக்கப்பட்டது. 

                          இப்பயிற்சியில் 100 பெண்கள் கலந்து கொண்டனர்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை "யுனிவர்ஸ் மல்டிபர்பஸ்' பயிற்சி நிலையத்தினர் செய்திருந்தனர்.

Read more »

என்.எச்., சர்வீஸ் ரோடுகள் உலர் களமாக மாறும் அவலம்

ராமநத்தம் : 

                            சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோடுகள் உலர் களமாக மாறிவருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அவலம் நிலவி வருகிறது.சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கழுதூர், வேப்பூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் இடையூறு இல்லாமல் சாலையை கடந்து செல்ல மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலங்களின் அருகே தடையற்ற போக் குவரத்து மற்றும் உள்ளூர் பஸ்கள் நிறுத்தி செல்லவும், பயணிகள் பாதுகாப் பாக செல்லவும் சர்வீஸ் ரோடுகள் அமைக்கப் பட் டது. இந்த சர்வீஸ் ரோடுகளை அப்பகுதி விவசாயிகள் மானாவாரி நிலங்களில் பயிரிட்டுள்ள எள், உளுந்து, கொத்தமல்லி, மக்காசோளம் உள் ளிட்ட பயிர்களை அறுவடை செய்து தானியத்தை பிரித் தெடுக் கும் உலர் களமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தானியங்களில் வழுக்கு விழும் நிலை தொடர்கிறது.இதனை தவிர்த்திட தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து செல்லும் போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினரும் சர்வீஸ் ரோடுகளில் விவசாயிகள் ஆக்கிரமித்து தானிய கதிர்களை உலர வைப்பதை தடுத்து, ஊராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள தானிய களத்தை பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

ஊராட்சி அலுவலகம் கட்டுமான பணி : தடுத்து நிறுத்தக் கோரி போலீசில் புகார்

பண்ருட்டி : 

                 கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் ர்வாக அதிகாரி போலீசில் புகார் செய்துள்ளார்.

                 பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோவில் குளம் அருகில் சிஷ்டகுருநாதர் கோவில், பிடாரிம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் 28 சென்ட் காலியிடம் உள்ளது. இந்த இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து ஊராட்சிக்கும், இந்துசமய அறநிலையத்துறைக்கும் பண்ருட்டி மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் பிரச்னைக்குரிய இடத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் 2 லட்சம் ரூபாய் செலவில் கலையரங்கம் கட்டும் பணி துவங்கியது. நேற்று முன்தினம் 6 லட்சம் செலவில் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி துவங்கியது.

                  இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி சிவஞானம், கோவிலுக்கு சொந்தமான இடம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அந்த இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டுவது கோர்ட் விதிமுறைகளை மீறிய செயல். ஆகவே கட்டுமான பணியை தடுத்து நிறுத்தக் கோரி புதுப்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார்.

Read more »

போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கு பாராட்டு விழா

சேத்தியாத்தோப்பு : 

                போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கு பாராட்டு விழா சேத்தியாத்தோப்பில் நடந்தது. சேத்தியாத்தோப்பு போலீஸ் ஸ்டேஷனில் நடந்த போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கான பாராட்டு விழாவில் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் குமார் முன்னிலை வகித்தார். போலீஸ் நண்பர்கள் குழு தலைவர் குண்டுமணி வரவேற்றார். போலீஸ் நண்பர்கள் குழுவினரின் போக்குவரத்து சீரமைப்பு, இரவு காவல் பணியை பாராட்டி டி.எஸ்.பி., மச்சந்திரன் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை தளபதி தில்லைசேகரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். ஏட்டு ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Read more »

பள்ளி மாணவிகளுக்காக ரூ.10 ஆயிரம் டெபாசிட்

சிதம்பரம் : 

                        சிதம்பரம் நந்தனார் பெண்கள் பள்ளியில் சகஜானந்தா பிறந்தநாளையொட்டி மாணவிகளுக்கு பரிசு வழங்க ஆதிபராசக்தி மன்றம் சார்பில் 10 ஆயிரம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப் பட்டது.

                  சிதம்பரம் நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு சுற்றுப்புறச் சூழல் போட்டிகள் நடத்தி ஆண்டுதோறும் சுவாமி சகஜானந்தா பிறந்த நாள் விழாவில் பரிசு தரும் வகையில் வடக்கு வீதி ஆதிபராசக்தி மன்றம் சார்பில் 10 ஆயிரம் ரூபாய் நிரந்தர டெபாசிட் செய்துள்ளது. அதற்கான வட்டி தொகையை எடுத்து பயன்தரும் வகையில் அறக்கட்டளை நிறுவ ஒப்பந்த படிவத்தை ஆதிபராசக்தி மன்றம் சார்பில் சமுதாயப்பணி பொறுப்பாளர் விரிவுரையாளர் ஞானக்குமார், தலைமை ஆசிரியர் ராணியிடம் வழங்கினார்.

Read more »

ஆசிரியருக்கு அண்ணாதுரை விருது நுகர்வோர் பேரவை பாராட்டு

புவனகிரி : 

                பள்ளி குழந்தைகளின் உயிரை காப் பாற்ற தன் உயிரை இழந்த ஆசிரியை சுகந்திக்கு அண்ணாதுரை விருது வழங்கிய முதல்வருக்கு புவனகிரி நுகர்வோர் பாதுகாப்பு பேரவை நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புவனகிரி நுகர்வோர் பாதுகாப்பு பேரவை தலைவர் ஜெயபாலன், சட்ட ஆலோசகர் குணசேகர் ஆகியார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: 

                        நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினத்தில் பள்ளி மாணவர்கள் சென்ற வேன் குளத்தில் விழ்ந்தது. அதில் 11 மாணவர்களை காப்பாறி, 12வது மாணவரை காப்பாற்ற முயன்றபோது ஆசிரியர் சுகந்தி இறந்தார். அவருக்கு அண்ணாதுரை விருது வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆசிரியர் சுகந்திக்கு வரும் ஆண்டில் கல்பனா சால்வா விருது வழங்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.

Read more »

மாவட்ட கைப்பந்து போட்டி : டேனிஷ் மிஷன் பள்ளி வெற்றி

நெல்லிக்குப்பம் : 

                   மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கடலூர் நியூ மில்லேனியம் மெட்ரிக் பள்ளி சார் பில் சண்முகம் - செங் கேணி அம்மாள் நினைவாக மாவட்ட பள்ளிகளுக்கிடையே கைப்பந்து போட்டி நடத்தினர். இதில் நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்து சுழற்கோப்பையை கைப்பற்றினர். பள்ளி தாளாளர் ஜெயகரன், தலைமையாசிரியர் ஆல்பிரட் மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினர்.உடற்கல்வி இயக்குநர் ஜோசப் ஜெயராஜ், சாமுவேல், டெய்சி ராணி, ஷீபா, ராஜேஷ் உடனிருந்தனர்.

Read more »

ஜனநாயக முறையில் தேர்தல் நடக்கும் : காங்., தேர்தல் பொறுப்பாளர் உறுதி

கடலூர் : 

            மாவட்ட காங்., கட்சி தேர்தல் பணி தொடர்பாக நிர்வாகிகள் கூட்டம் கடலூர் நேருபவனில் நடந்தது.  மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். செயலாளர் அலமுதங்கவேல் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ., புரட்சிமணி, முன்னாள் மாவட்டத்தலைவர் ராதாகிருஷ்ணன், புவனகிரி சேர்மன் தனலட்சுமி, ராமலிங்கம், வக்கீல் சந்திரசேகர், பண்ருட்டி மணி, கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ஜெயபிரகாஷ், தேர்தலை சமரச முறையில் நடத்துவதா அல்லது போட்டியிட்டு தேர்வு செய்வதா என நிர்வாகிகளை கேட்டதற்கு, போட்டியிட்டு தேர்வு செய்வதே சிறந்தது என நிர்வாகிகள் கூறினர். அதனைத் தொடர்ந்து ஜெயபிரகாஷ், ஜனநாயக முறையில் தேர்தல் நடக்கும் என உறுதியளித்தார். நகரத்தலைவர் ரகுபதி நன்றி கூறினார்.

Read more »

குறிஞ்சிப்பாடி இளைஞர் காங்., முதல்வருக்கு பாராட்டு

கடலூர் : 

          குறிஞ்சிப்பாடியை தாலுக்காவாக உருவாக்கிய முதல்வர் மற்றும் மாவட்ட அமைச்சருக்கு இளைஞர் காங்., நன்றி தெரிவித்துள்ளது. குறிஞ்சிப்பாடி நகர இளைஞர் காங்., கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. முன்னாள் நகர இளைஞர் காங்., தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார். முத்துகுமரசாமி வரவேற்றார். செந் தில்குமார், குமார், சீனுவாசன், ரமேஷ், சிவராஜ், சண்முகம் முன் னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக வைத்தியநாதன், வி.எஸ். வைத்தியநாதன், செல்வமணி, தணிகாசலம் பேசினர்.காங்., கட்சியில் ஜனநாயகத்தை ஏற்படுத்த தேர்தல் நடத்த உத்தரவிட்ட ராகுலுக்கு நன்றி தெரிவிப்பது, குறிஞ்சிப்பாடியை தனி தாலுகா வாக உருவாக்கிய முதல் வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சருக்கும், ஏழை மாணவர்களுக்காக கடலூரில் கல்விக் கடன் மேளா நடத்திய மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

அதிக பயணிகளை ஏற்றிய 30 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல்

கடலூர் : 

                கடலூரில் அதிக பயணிகள் ஏற்றிச் சென்ற 30 ஷேர் ஆட்டோ ஓட்டுனர் கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். கடலூர் புதுநகர் இன்ஸ் பெக்டர் ஆரோக்கியராஜ், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார் திடீர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அதிகளவில் பயணிகளை ஏற்றிச் சென்ற 30 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்து ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

                இதுபற்றி இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் கூறுகையில் "ஷேர் ஆட் டோக்களில் பள்ளிக்கு குறிப்பாக பெண் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் கூட் டம் அதிகமாக உள்ள ஆட் டோக்களில் ஏற்றி அனுப்ப வேண்டாம். பெற்றோர் கள் ஒத்துழைத்தால் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் அபய் ஆட்டோக்களில் அதிகளவில் மாணவர்கள் ஏற்றிச் செல்வதை தவிர்க்கலாம். இனி நகர்புறத்தில் அடிக்கடி திடீர் சோதனை மேற் கொண்டு விதிமுறை மீறும் வாகனங்கள் மீது வழக்குப் பதியப்படும்' என்றார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior