உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

விருத்தாசலத்தில் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது! ஆக்கிரமிப்புகள் அகற்றியும் பயனில்லை

விருத்தாசலம் : 

                  விருத்தாசலத்தில் பெருகி வந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். இடிக்கப்பட்ட சிமென்ட் கட்டைகளை அகற்றாமல் சாலையிலேயே குவித்து வைத்திருப்பதால் போக் குவரத்து நெரிசல் நீடித்து வருவதோடு, மீண்டும் சாலைகள் மெல்ல, மெல்ல ஆக்கிரமிக்கப் பட்டு வருகிறது.
 
                     விருத்தாசலம் நகரின் முக்கிய வீதிகளான ஜங்ஷன் ரோடு, கடலூர் ரோடு, கடைவீதிகளில் பெரும்பாலான வியாபார நிறுவனங்கள் உள்ளன. நகரம் மற்றும் சுற்றியுள்ள 100 ம் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் விருத்தாசலத்திற்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட் களை வாங்கி சென்று வருகின்றனர். இதனால் எப்போதும் இந்த சாலைகளில் மக்கள் கூட் டம் நிறைந்தே காணப்படும்.
 
                 இப்பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரிகள் பொதுமக்கள் நிழலில் நின்று பொருட்கள் வாங்குவதற்காக கடைகளின் முன் முதலில் "ஷெட்' அமைத் தும், பின்னர் சிமன்ட் தளம் அமைத்தும் சாலையை ஆக்கிரமித் தனர். கடைகளில் பொருள் வாங்க வருபவர்கள் தங் களது வாகனங்களை அந் தந்த கடைகளின் முன் நிறுத்திவிடுகின்றனர். சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத் திவிட்டு செல்வதால் சாலை குறுகலாகி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.  போக்குவரத்து பாதிப்பை சரி செய்திட பிரதான சாலைகளின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் வியாபாரிகள் ஆக்கிரமிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் நகர மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தி வந்தனர்.
 
              அதன்படி இரண்டு வாரங்களுக்கு முன் நகராட்சி ஒத்துழைப்புடன் நெடுஞ்சாலை துறையினர் சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துவங்கினர்.  கடைவீதியில் துவங்கி ஜங்ஷன்ரோடு, கடலூர் ரோடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து ஆறு நாட்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். கடைகள் முன்பு அமைத்திருந்த ஷெட் களை பெரும்பாலான வியாபாரிகள் அவர் களாகவே கழற்றி கொண்ட நிலையில், அவர்கள் அமைத்திருந்த சிமென்ட் கட்டைகளை நெடுஞ்சாலை துறையினர் இடித்து தள்ளினர்.
 
               அவ்வாறு இடித்து தள்ளிய சிமென்ட் கட்டைகளை உடனடியாக அகற்றாமல், தங்கள் வேலை முடிந்தது என நெடுஞ்சாலை துறையினர் சென்றுவிட்டனர்.  நகராட்சியினரும் இது தங்கள் வேலை இல்லை என ஒதுங்கி கொண்டனர். பெரும்பாலான இடங்களில் இடிக் கப்பட்ட சிமென்ட் கட்டைகள், தோண்டப்பட்ட மண் சாலை ஓரத்தில் அப்படியே கிடக்கிறது. இதனால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
 
                இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஒரு வாரத்திலேயே சில வியாபாரிகள் தற்போது மீண் டும் தங்கள் கடைகளுக்கு முன் தற்காலிக ஷெட் அமைக்க துவங்கி விட்டனர். அங்கொன்றும் இங் கொன்றுமாய் தொடங்கி அனைத்து வியாபாரிகளும் விரைவில் தங்கள் கடைகளின் முன்பு தற்காலிகமாக தார்பாய் கொண்டு கொட்டகை  அமைத்து வருகின் றனர்.  சில மாதங்களில் அதை நிரந்தர ஷெட்டாக அமைத்து மீண்டும் சாலைகளை ஆக்கிரமித்து விடுவர்.  எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை ஆக்கிரமிப்பு பணியை சம்பிரதாய நடவடிக்கையாக மேற்கொள்ளாமல்  நிரந்தர தீர்வு காண முன்வரவேண்டும்.
 
                    சாலையின் இருபுறங்களிலும் எல்லையை குறிப்பிட்டு வியாபாரிகள் எக்காரணம் கொண்டும் ஆக்கிரமிக்க கூடாது என எச்சரிக்கை விடுக்க வேண்டும். மேலும் வியாபாரிகள் ஆக்கிரமிக்காதவாறும், பொதுமக்கள் பயனடையும் வகையிலும் சாலையின் இருபுறங்களிலும் நடைபாதைகள் அமைக்க முன்வர வேண்டும்.  அதுபோல் சாலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றி சாலையின் ஓரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூரில் மாசி மகத் திருவிழா: பக்தர்கள் குவிந்தனர்

கடலூர் : 

                  கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நேற்று நடந்த மாசி மக விழாவில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் உள்ளிட்ட  நூற் றுக்கு மேற்பட்ட சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
                   கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நேற்று மாசி மகம்  திருவிழா நடந்தது. காலை 7 மணிக்கு திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், கடலூர் வரதராஜ பெருமாள், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் சுவாமிகள், குணமங்கலம் மாரியம்மன் உள் ளிட்ட 100க்கும் மேற்பட்ட  கோவில் களிலிருந்து உற்சவ மூர்த்திகள் மேளதாளம், பேண்டுவாத்தியம், தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தேவனாம்பட்டினம் கடலில் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் சிறப்பு பூஜை நடந்தது.  இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பலர் கடலில் நீராடி இறந்த தங்களது மூதாதையர்களுக்கு தர்பணம் கொடுத்தனர். மாசி மக கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.  மாசி மகத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தேவனாம்பட்டினத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தீர்த்தவாரி முடிந்த பின் திருக்கோவிலூர் உலகலந்த பெருமாள் நேற்று மதியம் மஞ்சக்குப்பம் ஜெயலட்சுமி நாயுடு பள்ளி வளாகத்தில் மண்டகபடியும், இரவு திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

Read more »

விருத்தாசலம் அருகே அம்பேத்கர் சிலை பழைய இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டது

விருத்தாசலம் : 

              பழையப்பட்டினம் கிராமத்தில் அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலை,  ஐகோர்ட் தீர்ப்பை அடுத்து மீண்டும் பழைய இடத்தில் அமைத்து கலெக்டர் தலைமையில் நேற்று திறக் கப்பட்டது.
 
                கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பழையபட்டினம் கிராமத் தில் நூலகம் அருகில் அனுமதியின்றி ஓராண் டிற்கு முன் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த இரு (ஆதிதிராவிடர்-முஸ்லீம்) சமுதாயத்தினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 25ம் தேதி வெண் மணி தியாகிகள் தினத் தன்று ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பிரச்னைக்குரிய அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க முயன் றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அப் போது அதிகாரிகள் ஒரு மாதத்தில் சிலை வேறு இடத்தில் நிறுவப்படும். அதன்பின் சிலைக்கு மாலை அணிவிக்கலாம் என்றனர்.
 
                     சிலையை வேறு இடத் தில் மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு தடை விதிக்க கோரி அதே ஊரைச் சேர்ந்த ஜனநாயக வாலிபர் சங்க கிளை செயலாளர் அமிர்தலிங்கம் சென்னை ஐகோர்ட் டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே கடந்த ஜனவரி 20ம் தேதி நள்ளிரவு திடீரென வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அம்பேத்கர் சிலையை வேறு இடத்தில் நிறுவினர். வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் கடந்த 11ம் தேதி அளித்த தீர்ப்பில் சிலையை மாற்றி அமைத் ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.  இம்மாத இறுதிக்குள் பழைய இடத்தில் மீண்டும் சிலையை நிறுவி கலெக்டர், எஸ்.பி., முன் னிலையில் திறப்பு விழா நடத்தவேண்டும் என தீர்ப்பளித்தனர். அதனையடுத்து அதிகாரிகள் நேற்று முன்தினம்  அம்பேத்கர் சிலையை பழைய இடத்திலேயே நிறுவினர். நேற்று காலை 9.30 மணிக்கு கலெக்டர் சீத்தாராமன் முன்னிலையில் வாலிபர் சங்க மாநில செயலாளர் கண்ணன், துணை செயலாளர் வேல்முருகன், மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் தனசேகரன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அசோகன், செயலாளர் ராஜேஷ்கண்ணன், வக்கீல் திருமூர்த்தி உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.  பின்னர் கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ், டி.ஆர்.ஓ., நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் தனித்தனியே சிலைக்கு மாலை அணிவித்தனர். சிலை திறப்பு விழாவையொட்டி பழையபட்டினம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Read more »

துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு : பண்ருட்டி ஒன்றிய தி.மு.க., செயற்குழு முடிவு

பண்ருட்டி : 

                 மாவட்டத்திற்கு வருகை தரும் துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க பண்ருட்டி ஒன்றிய தி.மு.க., செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
                 பண்ருட்டி ஒன்றிய தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். துணை செயலாளர் தென்னரசு வரவேற்றார். மாவட்ட பிரதிநிதி அன்பழகன், பொருளாளர் பொன்னம்பலம் முன் னிலை வகித்தனர்.  கூட்டத்தில் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மார்ச் 1ம் தேதி (இன்று) துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு  பண்ருட்டி ஒன்றியத்தில் கிளைகள்  தோறும் கட்சி கொடியேற்றி அன்னதானம் வழங்கி கொண்டாடுவது, வரும் 6ம் தேதி மாவட்டத்திற்கு வருகை தரும் துணைமுதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. கோவையில் நடைபெறும் உலக தமிழ் செம் மொழி மாநாட்டை விளக்கி தெருமுனை பிரசாரம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி தலைவர் பாரிவள்ளல், மாவட்ட கவுன்சிலர் ராஜா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஞானமணி, துணை அமைப் பாளர் சிவக்குமார், கோவிந்தராஜன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Read more »

டி.இ.சி., மாத்திரை வழங்கும் பணி : எம்.எல்.ஏ., அய்யப்பன் துவக்கி வைத்தார்


கடலூர் : 

                கடலூர் அடுத்த கோண் டூர் ஊராட்சியில் யானைக் கால் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் பணியை எம்.எல்.ஏ., அய்யப்பன் துவக்கிவைத்தார்.
             மாவட்டத்தில் யானைக் கால் நோயை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு சுகாதாரத்துறை சார்பில் 22 லட்சம் பேருக்கு டி.இ.சி., மற்றும் அல்பண்டசோல் மாத்திரைகள் வழங்கும் பணி நேற்று நடந்தது. கடலூர் அடுத்த கோண்டூரில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் சுஜாதா தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ரூபாதேவி வரவேற் றார். மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் டாக்டர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகளை உட்கொள்ளும் முறையை மருத்துவ பணிகள் துணை இயக்குனர் மீரா விளக்கினார்.
            
              யானைக்கால் நோய் ஒழிப்பு மாத்திரையை வீடு, வீடாக சென்று வழங்கிட களப்பணியாளர்களிடம் மாத்திரைகளை எம்.எல்.ஏ., அய்யப்பன் வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர்கள் சுரேஷ், சுஜாதா, சுகாதார ஆய் வாளர் கோவிந்தன், ஒன் றிய கவுன்சிலர் மணிமொழி  பங்கேற்றனர்.

மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் டாக்டர் பாஸ்கரன் கூறுகையில்:, 

                  டி.இ.சி., மாத்திரைகள் 2 முதல் 5 வயதினர் ஒன்றும், 6 முதல் 14 வயதினர் இரண்டும், 15 முதல் 60  வயதினர் மூன்று உட்கொள்ள வேண்டும். இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், 60 வயதுக்குமேற்பட்டவர், இருதயம் மற்றும் சர்க்கரை நோயாளிகள் இந்த மாத்திரையை சாப்பிடக் கூடாது. வெறும் வயிற்றில் உட் கொள்ளக்கூடாது. மாத்திரைகளை சாப்பிட்டால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. ஒரு சிலருக்கு காய்ச்சல், அரிப்பு, தடிப்பு, வாந்தி போன்றவை ஏற்பட்டால் அது அவர்களின் உடலில் உள்ள உள்ள யானைக்கால் நோய் புழுக்கள் அழிக்கப் படுவதன் விளைவேயின்றி அச்சப்படதேவையில்லை என்றார்.

Read more »

பார்வையற்ற, உடல் ஊனமுற்ற மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத கூடுதல் நேரம்

கடலூர் : 

                  இன்று துவங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலூர் மாவட் டத்தில் 61 மையங்களில் 29 ஆயிரத்து 528 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். வெளி மாவட்ட ஆசிரியர்களும் பறக்கும் படை பணியில் ஈடுபடுகின்றனர்.
           பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது. கடலூர் கல்வி மாவட்டத்தில் 9,356 மாணவர்கள், 10 ஆயிரத்து 488 மாணவிகள், விருத்தாசலம் கல்வி மாவட்டத் தில் 5,323 மாணவர்கள், 4,361 மாணவிகள் என கடலூர் வருவாய் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 679 மாணவர்களும், 14 ஆயிரத்து 849 மாணவிகள் என மொத்தம் 29 ஆயிரத்து 528 பேர் தேர்வு எழுதுகின்றனர். கடலூர் கல்வி மாவட்டத்தில் 39 மையங்களிலும், விருத்தாசலம் கல்வி மாவட்டத் தில் 22  என மொத்தம் 61 மையங்களில் தேர்வு நடக்கிறது.
               தனித் தேர்வர்கள் கடலூர் கல்வி மாவட்டத்தில் 1,063 மாணவர்கள், 579 மாணவிகள், விருத்தாசலத்தில் 1,408 மாணவிகள், 886 மாணவிகள் என வருவாய் மாவட் டத்தில் 3,936 பேர் 12 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். பார்வையற்ற மாணவர்கள் கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்  பள்ளியில் 8 பேரும், வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் 2 பேரும், முதுநகர் செயின்ட் டேவிட் பள்ளியில் 4 பேர் என 14 பேரும், உடல் ஊனமுற்ற மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு சொல்வதை எழுதுவது ("ஸ்கிரைப்') 11 மையங்களிலும் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு ஒன்னரை மணிநேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. தேர்வையொட்டி மாவட்டம் முழுவதும் 61 துறை அலுவலர் கள், 74 கூடுதல் துறை அலுவலர் கள், 1,500 அறை கண்காணிப் பா ளர்கள் பணியில் அமர்த்தப்பட் டுள்ளனர்.
                              மேலும் சி.இ.ஓ., டி.இ.ஓ.,க் கள் தலைமையில் ஒவ்வொரு குழுவிற்கும் 5 ஆசிரியர்கள் கொண்ட 9 பறக்கும் படையினரும், பிரச்னைக்குரிய மையங்களுக்கு 3 சிறப்பு படை மற்றும் அந்த மையங்களில் நிரந்தர படையும் நிறுத்தப்படுகிறது. மேலும்  இணை இயக்குனர் தலைமையில் வெளி மாவட்ட ஆசிரியர்கள் கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கலெக்டர்,  எஸ்.பி.,  டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ.,க்கள்,  தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காப்பியடித்து பிடிபடுபவர்கள் 16 தலைப்புகளின் கீழ் அந்தந்த குற்றங்களுக்கு தக்கவாறு தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more »

பிளஸ் 2 தேர்வையொட்டி மின் தடை நேரம் மாற்றம்

கடலூர் : 

            பிளஸ் 2 தேர்வையொட்டி மின்நிறுத்த நேரம் இன்று முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து கடலூர் செயற்பொறியாளர் மூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
              
                          பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்கும்பொருட்டு மின்சுமை குறைப்பு நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மதியம் 12 மணி முதல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட்டு வந்த செம்மங்குப்பம், கேப்பர்மலை  துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் இனி பகல் 2 மணி முதல் 4 மணி வரைக்கும், காலை 10 மணி முதல் 12 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட்டு வந்த நத்தப்பட்டு துணை மின் நிலைய பகுதிகளுக்கு காலை 6 மணி முதல் 8 மணிவரை என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் தடை நேரம் இன்று முதல் ஏப்ரல் 7ம் தேதிவரை அமலில் இருக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

மாசிமகத் திருவிழாவில் படகு சவாரி ரத்து

கடலூர் : 

                தேவனாம்பட்டினம் மாசி மகத் திருவிழாவில் பாதுகாப்பையொட்டி படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.
 
               ஆண்டுதோறும் தேவனாம்பட்டினம் மாசிமகத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு "திதி' கொடுப்பது வழக்கம். அதனால் கடலில் புனித நீராடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அவ்வாறு நீராடுபவர்கள் அலையின் சீற்றத்தால் இழுத்துச் செல்லப்பட்டு விபத்துக்குள்ளாகிவிடுகின்றனர். அத்துடன் தொலைதூரத்தில் இருந்து சாமி தரிசனம் செய்ய வருபவர்கள் படகு சவாரி செய்து மகிழ்வது வழக்கம். இதனால் சில நேரங்களில் படகு கவிழ்ந்து  உயிர் சேதம் ஏற்பட்டது. அதையொட்டி கடற்கரையில் படகு சவாரி செய்வதற்கு போலீஸ் முற்றிலுமாக தடை விதித்தது. அத்துடன் 12 பேர் அடங்கிய மீட்பு குழுவினர் அமைத்து புனித நீராடுபவர்கள் கரையோரமாக குளிக்கும்படியாக அறிவுறுத்தப்பட்டனர். மேலும் மீனவர்கள் உதவியோடு மாசிமகத்திருவிழா பகுதியிலிருந்து சில்வர் பீச் முகத்துவாரம் வரை படகில் ரோந்து பணி மேற்கொண்டனர். இவர்கள் ஏதேனும் கடலில் குளிப்பவர்கள் அபாயக்குரல் எழுப்பினால் அவர்களை காப்பாற்றுவதற்காக  "லைஃப் ஜாக்கெட்' அணிந்து கண்காணித்து வந்தனர்.

Read more »

தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

சேத்தியாத்தோப்பு : 

              கேர்விமன் தொண்டு நிறுவனம் சார் பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
 
                   சென்னை சி.பி.ராமசாமி ஐயர் பவுன் டேஷன், சென்னிநத்தம் கேர்விமன் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் சந்திரா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடந்தது. முகாமிற்கு தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கணேசன் தலைமை தாங்கினார். தலைவர் கஸ்தூரி முன்னிலை வகித்தார். செயலாளர் வள்ளி வரவேற்றார். ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கிலிதேவன் முகாமை துவக்கி வைத்தார். செயலாளர் வள்ளி வரவேற்றார். ரிசோர்ஸ் பவுன்டேசன் தலைவர் வேளாங்கண்ணி, அரிமா சங்க முன்னாள் தலைவர் சேனாபதி ஆகியோர் புவிவெப்பமடைதல் தடுப்பு குறித்து பேசினர். ஆசிரியர்கள் தியாகராஜன் பாலமுருகன், ஜானகி, எழிலரசி, ஆனந்தன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Read more »

பிளஸ் 2 பொது தேர்வு இன்று துவக்கம் : ஹயக்கிரீவர் கோவிலில் சிறப்பு பூஜை

கடலூர் : 

             பிளஸ் 2 தேர்வு இன்று துவங்குவதையொட்டி திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில் நேற்று ஏராளமான மாணவ, மாணவிகள் நுழைவுச்சீட்டு மற்றும் பேனா வைத்து வழிபட்டனர்.
 
                   திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலின் எதிரில் மலை மீது உள்ள ஹயக்கிரீவரை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம். இன்று துவங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டி நேற்று திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி, தேன் மற்றும் கற்கண்டு கொண்டு சிறப்பு பூஜை செய்தனர்.  பலர் தங்களது தேர்வு அறை நுழைவுச் சீட்டு, தேர்வு எழுதுவதற் காக வாங்கிய புதிய பேனாக்களை வைத்து பூஜை செய்தனர். சிலர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டி கோவில் வளாகத்தில் தங்களது தேர்வு எண்களை எழுதி வைத்தனர். இதன் காரணமாக நேற்று காலை திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Read more »

வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு

பண்ருட்டி : 

               அங்குச்செட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் செஞ்சுருள் சங்கத்தின் சார்பில்  எய்ட்ஸ் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தன.
                பண்ருட்டி அடுத்த  அங்குச்செட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி துணை  முதல்வர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செஞ்சுருள் சங்க மேலாளர் கதிரவன் முன் னிலை வகித்தார்.  அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். இதில் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, வினாடி-வினா போட்டிகள் நடந்தன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்பு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் உள்ள நம்பிக்கை மையத்திற்க்கு மாணவர்களை அழைத்து சென்று எய்ட்ஸ் குறித்தும் அதை தடுக்கும் வழி முறைகளை பற்றியும் விளக்கம் அளிக்கப்பட் டது. செஞ்சுருள் சங்க அலுவலர்  ரமேஷ், விரிவுரையாளர்கள் புனிதா, அமலோற்பவம் மற்றும் துறை தலைவர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Read more »

கிள்ளை கடற்கரையில் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமிக்கு தீர்த்தவாரி

 கிள்ளை : 

              கிள்ளை மாசிமக திருவிழாவில் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி உட்பட நூற்றுக் கும் மேற்பட்ட சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர் கள் கடலில் நீராடி தரிசனம் செய்தனர்.
                  சிதம்பரம் அடுத்த கிள்ளை முழுக்கத்துறையில் மாசிமக  தீர்த்தவாரி நேற்று நடந்தது. அதனையொட்டி சுற்று வட்டார பகுதியில் உள்ள நூற்றுக் கும் மேற் பட்ட கோவில்களில் இருந்து உற்சவர்கள் அதிகாலை முதல் முழுக் கத்துறை வெள்ளாற்றங்கரையில் வரிசையாக எழுந் தருள செய்து தீர்த்தவாரி நடந்தது. ஆயிரக்கணக் கான பக்தர்கள் கடலில் நீராடி சாமியை தரிசனம் செய்தனர். மாசிமக தீர்த்தவாரிக் காக ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி நேற்று முன்தினம் நள்ளிரவே கிள்ளை கொண்டுவரப்பட்டு  தைக் கால் மாரியம்மன் கோவிலில் தங்க வைத்தனர். நேற்று காலை 9 மணிக்கு ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவில் அறங்காவல் குழுத்தலைவர் செல்வக்குமார், செயல் அலுவலர் நாகராஜன் முன்னிலையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கிள்ளை தைக் கால் பள்ளிவாசலில் சிறப்பு பாத்தியா ஓதி பூவராகசாமிக்கு பட்டு சாத்தி வரவேற்கப்பட்டது. பின்னர் பிரசாதம் வழங் கப்பட்டது. அதில் கிள்ளை பேரூராட்சி சேர் மன் ரவிச்சந்திரன், தைக் கால் டிரஸ்ட்டி முத்தவல்லி சையத் காப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வடலூர் சத்திய பேரொளி அறநெறி தொண்டு நிறுவனம், மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி மன்றம் சார்பில் அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. 

விருத்தாசலம்: 

                 விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா கடந்த 19 ம் தேதி துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று மாசி மகத்தை முன்னிட்டு விருத்தாம் பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் மணிமுக்தா ஆற்றில் எழுந்தருளி தீர்த்தாவரி மற் றும் தீபாராதனை நடந்தது. இதில் பல்லாயிரக்கனக் கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். மேலும், பலர் இறந்த தங்கள் மூதாதையர்களுக்கு மணிமுக்தாற்றில் தர்ப்பணம் கொடுத்தனர்.
பரங்கிப்பேட்டை: 

                புதுப்பேட்டை கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி திருவிழா நேற்று நடந்தது. புவனகிரி, ஆதிவராகநல்லூர், தச்காடு, குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி  உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சாமிகள் தீர்த்தவாரிக்கு கொண்டுவரப் பட்டன.
குறிஞ்சிப்பாடி:

               சுப்ராயர் சாமிக்கு புதுப்பேட்டை கிராம நிர்வாகிகள் நமச்சிவாயம், குட்டியாண்டி தலைமையில் கிராமத்தினர் வரிசை எடுத்து அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்தனர். இதேபோல் சாமியார்பேட்டை, பெரியகுப்பம் பகுதி கடற்கரையில் தீர்த்தவாரி நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம்:  

              கூடலையாத்தூரில் வெள்ளாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரு ஆறுகளும் கூடும் இடத்தில் நேற்று மாசி மக உற்சவம் நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் நித்தீஸ் வரர் சுவாமி மற்றும் வலகாடு வரதராஜப் பெருமாள் சுவாமிகள் தீர்த்தவாரிக்காக ஆற்றுக்கு வந்து பின்னர் தீர்த்தவாரி நடந் தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக் தர்களுக்கு அருள்பாலித் தார். பலர் இறந்த தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Read more »

சிலிண்டர் வினியோகம் முறைப்படுத்தப்படும் : மாவட்ட வழங்கல் அலுவலர் தகவல்

பண்ருட்டி : 

                 காஸ் சிலிண்டர் வினியோகம் சீராக வழங்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலர்  கூறினார்.
 
                    பண்ருட்டி தாலுகாவில் காஸ் நுகர்வோர்களின் குறைகள் களைவதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று தாலுகா அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ் தலைமை தாங்கினார். தாசில்தார் பாபு, கண்காணிப்பாளர் கோவிந்த், வட்ட வழங் கல் அலுவலர் ரங்கநாதன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் காஸ் ஏஜென்சியினர் நுகர்வோர்களை தரக்குறைவாக பேசுவது, 25 நாள் கழித்து பதிவு செய்த பின் 15 நாள் கழித்து சிலிண்டர் வழங் குவது, இணைப்புக்கு கூடுதல் கட்டணம் மற் றும் எண்ணெய் உள்ளிட் டவை வாங்க வற்புறுத்துவது, வீடுகளுக்கு டெலிவரி செய்யாதது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர்கள் பேசினர். இதற்கு பதிலளித்த மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ்,  காஸ் ஏஜென்சிகள்  நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காலவரையறை சரிவர பின்பற்றவில்லை. மேலும் நுகர்வோர்களிடம் அணுகுமுறை குறைவாக உள்ளது. நுகர் வோர்கள் காஸ் அடுப்பு உள்ளிட்ட பொரு ட்களை   ஏஜென்சியிடம் வாங்க வேண்டியதில்லை. சிலிண்டருக்கு "பில்'லில் குறிப்பிட்ட தொகை வழங்கினால் போதும். சீரான சிலிண் டர் விநியோகம் உள்ளிட்ட நுகர்வோர் கோரிக் கைகள் களைவதற்கு பாரத் காஸ் நிர்வாக அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என்றார். இதில் ஜெயா காஸ் உரிமையாளர் பிரபுராஜ், ராதா காஸ் மேலாளர், நிலவரித் திட்ட தாசில்தார் பன்னீர் செல்வம், விவசாயிகள் சங்க பிரதிநிதி வேங்கடபதி, கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, நடராஜன், த.மு.மு.க.,செயலாளர் ஷேக்தாவூத், ராஜவேல், நாமதேவ் பங்கேற்றனர்.

Read more »

போலீஸ்-பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம்

திட்டக்குடி : 

           திட்டக்குடி நகர அனைத்து கட்சி நிர்வாகிகளுடனான போலீசார் கலந் தாய்வு கூட்டம் போலீஸ் நிலையத்தில் நடந்தது.
 
             காங்., மாவட்ட பொதுச்செயலாளர் இளவழகன், தி.மு.க., செந்தில்குமார், மதியழகன், அ.தி. மு.க., நகர செயலாளர் நீதிமன்னன், தொகுதி செயலாளர் மதியழகன், பா.ம. க., நகர செயலாளர் காசி, காங்., நகர தலைவர் கனகசபை முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வரவேற்றார். கூட் டத்திற்கு தலைமை தாங்கி டி.எஸ்.பி., இளங்கோ பேசியதாவது: திட்டக்குடி நகரத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் அதிகளவு விளம்பர டிஜிட் டல் போர்டுகள் வைக்கப் பட்டுள்ளது. போலீசாரிடம் அனுமதி பெற்று இரண்டு நாட்களுக்கு முன் வைத்து, நிகழ்ச்சி முடிவடைந்த இரண்டு நாளில் தாங்களாகவே அகற்றிட வேண்டும். அதிக நாட்கள் அகற்றப்படாத போர்டுகள் முன் அறிவிப்பின்றி போலீசாரால் அகற்றப்படும். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 200 விபத்துகள் நடப்பதால், டூ-வீலர் வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். போலீசாரின் எச்சரிக்கை பொதுமக்கள் பயன்பெறுவதற்காகத்தான். நகை பாலீஷ் செய்வதுபோல நடித்து வீட்டில் நகை, பணம் ஆகியவற்றை திருடும் நோக்கத்தோடு திருடர்கள் நுழைய வாய்ப்புள்ளது. வெயில் காலம் துவங்கி விட்டதால் கதவினை திறந்து வைத்து உறங்க வேண்டாம் என பேசினார்.

Read more »

கீரப்பாளையம் ஒன்றியத்தில் ரூ.26 லட்சம் திருமண உதவி


சேத்தியாத்தோப்பு : 

             கீரப்பாளையம் ஒன்றியத்தில் 26 லட்ச ரூபாய் திருமண உதவி திட்ட நிதியை சேர்மன் செந்தில்குமார் வழங்கினார்.
 
            தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தின் கீழ் கீரப்பாளையம் ஒன்றியத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் தலைமை தாங்கினார். கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலியமூர்த்தி வரவேற்றார். விழாவில் 132 பயனாளிகளுக்கு தலா 20 ஆயிரம் வீதம் 26 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கான  காசோலைகளை ஒன்றிய சேர்மன் செந்தில்குமார் வழங்கினார். விழாவில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலு, தி.மு.க., மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சபா நாயகம், தி.மு.க., பரதூர் அமைப்பாளர் பாலு, ஆயிப்பேட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிவராமன் நன்றி கூறினார்.

Read more »

மாணவர்களுக்கு கவர்னர் விருது

சிதம்பரம் : 

                  சிதம்பரம் ராமசாமி செட்டியார்  மேல்நிலைப்பள்ளி சாரண மாணவர்கள் 6 பேருக்கு கவர்னர் விருது வழங்கப்பட்டது.
 
                    சிதம்பரம் ராமசாமி செட்டியார்  மேல்நிலைப் பள்ளி சாரண மாணவர்கள் 6 பேருக்கு கவர்னர் விருது வழங்க நெய்வேலியில் செய்முறை, எழுத்து உள்ளிட்ட தேர்வுகள்  நடந் தன. இதில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னை கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா விருது வழங்கி சிறப்பித்தார். விருது பெற்ற மாணவர்கள் கவியரசன், மதன்குமார், அன்பரசன், ஹரிகரன், சேதுமாதவன், தர்மேந்திரன் மற்றும்  சாரண ஆசிரியர் வேலாயுதம் ஆகியோரை பள்ளியின் செயலர் சண்முகசுந்தரம், தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.

Read more »

புவனகிரி பகுதி விவசாயிகளுக்கு மிளகாய் வீரிய ஒட்டு ரக விதை

சிதம்பரம் : 

                புவனகிரி பகுதி விவசாயிகளுக்கு மிளகாய் வீரிய ஒட்டு ரகம் யுஎஸ் 622 விதை வழங்கப் பட்டது.
 
               தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 2009-2010 ஆண்டிற்கு புவனகிரி வட்டாரத்தில் மிளகாய் புதிய பரப்பு 10 எக்டர், வாழை புதிய பரப்பு 10 எக்டேர், கொய் மலர்கள் புதிய பரப்பு 2 எக்டர், மா புதிய பரப்பு 1 எக்டர், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் 20 எக்டர் அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு மானியமாக ஒரு எக்டருக்கு வாழைக்கு 7500, மிளகாய்க்கு 11,250, கொய்மலர்களுக்கு 12,000 ரூபாயில் இடு பொருட் கள் வழங்கப்படுகிறது. புவனகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மிளகாய் புதிய பரப்பின் கீழ் புவனகிரி வட்டார விவசாயிகள் 53 பேருக்கு வீரிய ஒட்டு ரகம் யுஎஸ் 622 விதை வழங்கப்பட்டது. தோட் டக் கலை உதவி இயக்குனர் சந்திரமோகன் வழங் கினார். நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர்கள் பாரி, வினோத், விவசாயிகள் அண்ணாமலை, ராஜேந்திரன், தமிழ்மணி, வீரமுத்து, அரிகரன், ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.

Read more »

இலவச கண் சிகிச்சை முகாம்


நெல்லிக்குப்பம் : 

                    கோழிப்பாக்கத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. அண்ணாகிராமம் ஒன்றியம் கோழிப்பாக்கம் ஊராட்சியும், பண்ருட்டி அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் கிசிச்சை முகாம் நடத்தினர். ஊராட்சி தலைவர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். பகண்டை தலைவர் எழில்செல்வம் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் ஷெரிப், பாத்திமா தலைமையிலான குழுவினர் முகாமில் பங்கேற்ற 500 பேரின் கண்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.

Read more »

மோசட்டை ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம்

திட்டக்குடி : 

                பெண்ணாடம் அடுத்த மோசட்டை ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.
 
               ஊராட்சி தலைவர் தனம் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் பாலு, ஊராட்சி துணைத்தலைவர் வேலாயுதம், நல்லூர் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ராஜசேகரன், அனந்தராஜன், வருவாய் ஆய்வாளர் விருத்தகிரி, ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தசாமி வரவேற்றார். திட்டக்குடி தாசில்தார் கண்ணன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில் வேளாண் உதவி அலுவலர் தங்கதுரை, நிலஅளவைத்துறை சார் ஆய்வாளர் விநாயகம், நில அளவர் பழமலை, ஜெயக்குமார் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். முகாமில் ஊனமுற்ற, மனநலம் பாதித்த மற்றும் முதியோர் உதவித்தொகை கோரி 22 மனுக்கள் பெறப்பட்டன. சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.

Read more »

மணிக்கொல்லையில் மின்மாற்றி இயக்கம்

பரங்கிப்பேட்டை : 

                பரங்கிப்பேட்டை அருகே புதிய மின்மாற் றியை சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் இயக்கி வைத்தார்.
 
                      பரங்கிப்பேட்டை அடுத்த மணிக்கொல்லை கிராமத்தில் மத்திய அரசின் ராஜிவ் காந்தி கிராம வித்யூத் யோஜனா திட்டத்தின் கீழ் மின் வாரியம் சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடிசைவாசிகளுக்கு மின்சாரம் வழங்கிட புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது. பு.முட்லூர் துணை மின் நிலைய இளமின் பொறியாளர் வெங்கடேசன் தலைமையில்  சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் செல்வசேகர் புதிய மின் மாற்றியை இயக்கி வைத் தார். விழாவில் ஊராட்சி தலைவர் பழனியம்மாள், நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

Read more »

வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

சிறுபாக்கம் : 

                வேப்பூர் அடுத்த நகர் ஊராட்சியில்  அரசின் சிறப்பு வருமுன் காப் போம் மருத்துவ முகாம் நடந்தது.
 
                 ஊராட்சி தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய வேளாண்மை குழு (ஆத்மா) தலைவர் பாவாடைகோவிந்தசாமி, மாவட்ட கவுன்சிலர் தங்கதுரை, ஒன்றிய கவுன்சிலர் சக்திவினாயகம் முன்னிலை வகித்தனர். வட் டார சுகாதார மேற்பார்வையாளர் தம்பா வரவேற்றார். நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் ஜெயசித்ரா மருத்துவ முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். நல்லூர் வட்டார தலைமை மருத்துவர் பரமேஸ்வரி தலைமையில் டாக்டர்கள் பொது மற்றும் காசநோய், இருதயம், கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன், இ.சி.ஜி., ரத்தம், எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகளை வழங்கினர்.  ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Read more »

வேலை வாய்ப்பு பயிற்சிக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி

கடலூர் : 

          கடலூரில் சுய வேலை வாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பித்திருந்தவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது.

                    படித்து வேலை இல்லாத இளைஞர்களுக்கு சுவர்ண ஜெயந்தி சுகாரி ரோஸ்கர் யோஜனா திட்டத்தின் கீழ் பயிற்சியுடன் கூடிய சுய வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதில் ரெப்ரிஜிரேட்டர், மொபைல் போன் பழுது நீக்கும் பயிற்சி, கம்யூட்டர் ஹார்டுவேர் பயிற் சிகள் 4 முதல் 6 மாதங்கள் அளிக்கப்படுகிறது. இதற்கு கடலூர் நகராட்சி பகுதியில் விண்ணப்பித்திருந்த 104 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி  நடந்தது.  தகுதியுடையவர்களுக்கு பயிற்சி நியமன ஆணையை சேர்மன் தங்கராசு வழங்கினார். நிகழ்ச்சியில் கமிஷனர் குமார், துணைச் சேர்மன் தாமரைச்செல்வன், சமூதாய அமைப்பாளர்கள் தமிழரசி, பவுனாம்பாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சி வரும் 3ம் தேதி துவங்குகிறது.

Read more »

அருணாசலம் மருத்துவமனையில் சர்க்கரை நோய் மருத்துவ முகாம்

நெல்லிக்குப்பம் : 

               நெல்லிக்குப்பம் அருணாசலம் மருத்துவமனையில் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் நடந்தது. நிர்வாக அதிகாரி வீரமணி தலைமை தாங்கினார். ராஜேந்திரன், சுந்தர் முன்னிலை வகித்தனர். தலைமை மருத்துவ அதிகாரி பெருமாள் முகாமை துவக்கி வைத்தார். டாக்டர்கள் ஜெயபாலன், முகமது ரபிக் பாபு, சுசீலா ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட ஐநூறுக் கும் மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். சர்க்கரை நோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங் களை வழங்கினர்.

Read more »

நெய்வேலியில் அதிநுட்ப நினைவாற்றல் பயிற்சி

நெய்வேலி : 

               நெய்வேலி மாணவ, மாணவிகளுக்கான அதிநுட்ப நினைவாற்றல் பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகள் நடத்தப் பட்டன.
 
                  நெய்வேலி நகரம், வட்டம்-16ல் உள்ள தொல்காப்பியனார் பள்ளியில் ரிஷிஸ் தியானம் மகா யோகம் அமைப்பு சார்பில் அதிநுட்ப நினைவாற்றல் பயிற்சி நடந்தது. நிறைவு விழாவில் நளினி சாஸ்திரி வரவேற்றார். ஞானசேகர் மற்றும் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட என்.எல்.சி. திட்ட இயக்குனர் கந்தசாமி பேசியபோது : 

                     மாணவர்கள் இதுபோன்ற தியானம், யோகப் பயிற்சியில் ஈடுபட்டால் அவர்களின் உடலும், உள் ளமும் சீரடையும். தியானத்தால் தொழிலாளர்களும் திறம்பட பணியாற்றி நிறுவனத்தை உயர்த்த வேண்டும் என்று பேசினார்.

Read more »

லக்கூர் ஊராட்சியில் மருத்துவ முகாம்

ராமநத்தம் : 

                         மங்களூர் ஒன்றியம் லக்கூர் ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ திட்டத்தின் கீழ் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி தலைவர் ராணி தலைமை தாங்கினார். தி.மு.க., பிரதிநிதி வெங்கடேசன், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் லோகநாதன் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாண்டியன் வரவேற்றார். மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் மகேஸ்வரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற 969 பேரை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். அவர்களில் 10 பேர் தொடர் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். சுகாதார ஆய்வாளர் லோகநாதன் நன்றி கூறினார்.

Read more »

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்கத்தினர் வரும் 21ம் தேதி பட்டினி போராட்டம்

கடலூர் : 

                 கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் ஒப்புக்கொண்டபடி 14 சதவீதம் சம்பள உயர்வு வழங்கக்கோரி வரும் 21ம் தேதி சென்னையில் ஒரு நாள் பட்டினி போராட்டம் நடத்துவதென ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
 
                  கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் சங்க நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் நடந்தது. பொது செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

                   கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 10 ஆண்டாக சம்பள உயர்வு வழங்காத நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஊழியர் சங்கத்துடன் நிர்வாகம் இறுதிச் சுற்று பேச்சு வார்த்தை நடத்தியது. அதில் 1.7.09 முதல் 14 சதவீதம் சம்பள உயர்வு வழங்க ஒப்புக் கொண்டதை இதுவரை வழங்காமல், நிர்வாகம்  காலதாமதம் செய்கிறது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் கடந்த 25 ஆண்டுகளில் 2 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். தற்சமயம் 1050 ஊழியர்களும் கூடுதல் சுமையுடன் பணிபுரிகின்றனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 150 ஊழியர்களை பணி நியமனம் செய்யாமல் தமிழக அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது. இதனைக் கண்டித்தும், விற்பனை பிரிவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21ம் தேதி சென்னையில் ஒரு நாள் பட்டினி போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

''பட்ஜெட்டை கண்டித்து போராட்டம் பணியாளர் சங்கம் பங்கேற்கும்''

கடலூர் : 

                மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மத்திய தொழிற்சங்கம் அறிவித்துள்ள போராட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் பங்கேற்கும் என மாநிலத் தலைவர் பாலசுப் ரமணியன்  தெரிவித் துள்ளார்.
 
இது குறித்து அவர் நேற்று கடலூரில் கூறியதாவது: 

            வருமான வரி உச்சவரம்பை மூன்று லட்சமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப் பட்டது. ஆனால் மத்திய அரசின் பட்ஜெட்டில் வருமான வரி வரம்பை உயர்த் தாமல் மீண்டும் 1.60 லட் சம் ரூபாய் உச்சவரம்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமான வரி செலுத்தும் மூன்று கோடி போரில் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தற்போது பெட் ரோல், டீசல் விலை உயர்த்தப்பட் டுள்ளதால், அனைத்து பொருட்களின் விலை மேலும் உயரும். இதனால்  மத்திய அரசின் பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்க செய்துள்ளது. விவசாயத்திற்கு எந்தவித கொள்கை அறிவிப்பும் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட் டுள்ளனர். இதனைக் கண்டித்து வரும் 5ம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள சத்தியாகிரகப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியா ளர் சங்கம் ஆதரவளித்து பங்கேற்கும். அனைத்து மாவட்டத்தில் உள்ள பணியாளர் சங்கத்தினர் மத்திய தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்வர். நேற்று மாநிலத்தில் 28 மாவட்டங்களைச் சேர்ந்த டாஸ்மாக் பணியாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். அடுத்த கட்டமாக வரும் 17ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து, அன்று  கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். எனவே முதல்வர் அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்.

Read more »

ரயில்வே மேம்பாலம் திறந்து ஓராண்டாகியும் மின்விளக்கின்றி இருண்டு கிடக்கும் அவலம்


சிதம்பரம் : 

                  சிதம்பரம் ரயில்வே மேம்பாலம் திறந்து ஓராண்டாகியும் விளக்கு போட யாரும் அக்கறை காட்டாததால்  இருண்டு கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
                 கடலூர் மாவட்டம், சிதம்பரம் - அண்ணாமலைநகர் இடையே 18 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி திறக்கப்பட்டது.  பொதுமக்களின் 30 ஆண்டுகால போராட்டத்திற்கிடையே கட்டப்பட்ட இப்பாலம், அண்ணாமலைப் பல்கலை மற்றும் மருத்துவமனைக்கு செல்பவர்கள், மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. பாலம் திறக்கப்பட்டு இன்றுடன் (25ம் தேதி) ஓராண்டு நிறைவடைந்தும் கூட, பாலத்தில் விளக்கு போட அரசு அதிகாரிகளோ, அரசியல் தலைவர்களோ அக்கறை எடுத்துக்கொள்ளாதால் இன்றுவரை "இருட்டு பாலமாகவே' இருந்து வருகிறது. இரவு நேரங்களில் பாலம் இருளில் மூழ்கிவிடுவதால் பாலம் வழியாக செல்வதற்கே அஞ்ச வேண்டிய நிலை உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட பாலத்தில் நிதி போதவில்லை என்ற காரணத்தால் விளக்குபோடப்படவில்லை.  

                       இதற்கிடையே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திடம் பொறுப்பை ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதற்கான முயற்சியில் இறங்க கூட யாரும் இதுவரை அக்கறை காட்டவில்லை.  எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் பாலத்தில் அச்சமின்றி செல்லவும், விபத்துக்கள் நடப்பதை தடுக்கவும் பாலத்தில் மின்விளக்கு போட நடவடிக்கை வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்பார்ப்பாக உள்ளது.

Read more »

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


நெய்வேலி : 

                  மந்தாரக்குப்பம் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
 
                     நெய்வேலி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை, மக்கள் மையம் நடத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் மந்தாரக்குப்பத்தில் நடந்தது. என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய ஊர்வலத்தை பவர் சிட்டி அரிமா சங்க தலைவர் சிவசுப்ரமணியன் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் ஆனந்தன், தியாகராஜன், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெய்வேலி டி.எஸ். பி., மணி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். நுகர் வோர் சம்மேளன பொது செயலாளர் நிஜாமுதீன், மாவட்ட நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பு தலைவர் செந்தமிழ்செல் வன், நெய்வேலி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தலைவர் தங்கம், வர்த்தக சங்க பொது செயலாளர் பன் னீர்செல்வம், கெங்கைகொண்டான் நூலகர் வேல்முருகன் வாழ்த்தி பேசினர்.

Read more »

மினிடோர் வேன் கவிழ்ந்து விபத்து 7 பெண்கள் உட்பட 26 பேர் காயம்

விருத்தாசலம் : 

                    விருத்தாசலம் அருகே மாசிமகத்திற்கு பொதுமக்களை ஏற்றிச் சென்ற மினிடோர் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பெண்கள் உட்பட 26 பேர் காயமடைந்தனர்.
                      கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சி.கீரனூர், மருங்கூர், மேலப்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த 25 பேர் நேற்று விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் நடந்த மாசி மக திருவிழாவிற்கு மினிடோர் வேனில் புறப்பட்டனர்.  வேனை, கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (21) ஓட்டி வந்தார். விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் எதிரே  வேன் வந்தபோது, நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் வேன் டிரைவர் மணிகண்டன், வேனில் பயணம் செய்த சேட்டு (32) வேல்முருகன் (38) ஆறுமுகம் (45) ராஜேந்திரன் (40) கலியபெருமாள் (70) பத்மினி (42) கொளஞ்சி (70) ராதிகா (16) உள்ளிட்ட  26 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

                            இவர்களை கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின்கோட்னீஸ், டி.ஆர்.ஓ., நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்து ஆறுதல் கூறினர். இதில் படுகாயமடைந்த முருகேசன் (70) சுப்புராமன் (60) பாஸ்கர்செல்வம் (30) பெரியநாயகி (45) தனக்கொடி (51) ஆகிய ஐந்து பேரும் மேல்சிகிச்சைக் காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Read more »

பெண் எஸ்.ஐ., மீது போலீசில் புகார்


பரங்கிப்பேட்டை : 

               மகனை வெளியேற்றி வீட்டை பூட்டியதாக பெண் சப் இன்ஸ்பெக்டர் மீது ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் போலீசில் புகார் செய்துள்ளார்.
 
           கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து கடந்த மாதம் ஓய்வு பெற்றவர் செல்வராஜ். பரங்கிப்பேட்டை போலீஸ் குடியிருப்பு வீட்டை காலி செய்யவில்லை. இந்நிலையில் அதே குடியிருப்பில் தங்கியுள்ள புதுச்சத்திரம் பெண் சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, நேற்று காலை செல்வராஜ் வீட்டிற்கு சென்று அவரது மகன் காமராஜை மிரட்டி வெளியே அனுப்பிவிட்டு வீட்டை பூட்டி சாவியை எடுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து செல்வராஜ் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் புகழேந்தி விசாரித்து வந்தார். இந்நிலையில் பெண் சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, செல்வராஜ் மகன்  காமராஜ் தன்னை மிரட்டியதாக புகார் கொடுத் துள்ளார். இந்த சம்பவம் பரங்கிப்பேட்டை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more »

வயலில் மாடு மேய்ந்த தகராறு : கட்டையால் தாக்கி மூதாட்டி கொலை

பரங்கிப்பேட்டை : 

                  சிதம்பரம் அருகே வயலில் மாடு மேய்ந்த தகராறில் மூதாட்டியை கட்டையால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
 
                சிதம்பரம் அடுத்த தீர்த்தனகிரி கிராமத்தில் கலியமூர்த்தி என்பவருக்கு சொந் தமான வயலில் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த மங்கை என்பவரின் மாடு மேய்ந்துவிட்டது. இதை அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் தட்டிகேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ராஜேந்திரன் தகராறு செய்தது குறித்து தனது கணவர் சங்கரிடம் மங்கை கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர், ராஜேந்திரன் வீட்டிற்கு சென்று கேட்டபோது தகராறு ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர். ராஜேந்திரன், அவரது சகோதரர்கள் இளவரசன், பழனிவேல் ஆகியோர் சேர்ந்து சங்கரை தாக்கினர். அதனை தடுக்க வந்த சங்கரின் பாட்டி செல்லபாங்கி (72)யின் தலையில் கட்டையால் தாக்கினர். படுகாயமடைந்த செல்லபாங்கியை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து சங்கர் கொடுத்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்கு பதிந்து ராஜேந்திரனை (40) கைது செய்தனர். இளவரசன், பழனிவேலை தேடிவருகின்றனர்.

Read more »

கடலில் விழுந்த பேத்தியை காப்பாற்ற முயன்ற தாத்தா பலி

பரங்கிப்பேட்டை : 

               மாசிமக திருவிழாவில் கடல் அலையில் சிக்கிய பேத்தியை காப்பாற்ற முயன்ற தாத்தா மூச்சி திணறி இறந்தார்.
 
           சிதம்பரம் அடுத்த கஸ்பா ஆலம்பாடியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (48). நேற்று பரங்கிப்பேட்டை அடுத்த புதுப்பேட்டை கடற்கரையில் மாசிமக திருவிழாவில் கலந்துகொள்ள தனது மகள்கள் புனிதா, பராசக்தி, பேத்தி பைரவி ஆகியோருடன் சென்றார். அங்கு கடலில் குளித்த அவரது பேத்தி பைரவி அலையில் சிக்கினார். அதைப் பார்த்த சக்கரவர்த்தி, பேத்தி பைரவியை காப்பாற்ற கடலில் இறங்கினார். அப்போது அலை இழுத்து சென்றதில் மூச்சுத்திணறி சக்கவரவர்த்தி இறந்தார். அலையில் சிக்கிய பைரவி அலையின் வேகத்தில் கரைக்கு வந்துவிட்டார். தண்ணீர் அதிகமாக குடித்து மயங்கிய பைரவி, பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 
கடலூர்: 

                      பண்ருட்டி அடுத்த கருக்கை கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல்(55). இவர் நேற்று தனது தம்பியுடன் கடலூர் தேவனாம்பட்டினத்தில் நடந்த மாசி மகத் திருவிழாவிற்கு வந்தார். பின்னர் இருவரும் பஸ் ஏறுவதற்காக நடந்து சென்றபோது முருகவேல் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடன் அவர் ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந் தார். இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

பூட்டிய வீட்டில் பைக் திருட்டு

சிதம்பரம் : 
                
                பூட்டிய வீட்டில் மோட்டார் சைக்கிளை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம் லப்பை தெருவை சேர்ந்தவர் முகமது ஷபி. வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். நேற்று காலை வந்தபோது வீட்டில் நிறுத்தியிருந்த மோட்டார்  சைக்கிளை காணவில்லை. மேலும் "டிவிடி' பிளேயர் திருடு போயிருந்தது. சிதம்பரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior