உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 23, 2010

அடிப்படை வசதி கேட்டு கலெக்டர் அலுவலகம் முற்றுகை : ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை ஒப்படைக்க முடிவு

கடலூர் :           அடிப்படை வசதியின்றி தவிக்கும் நெய் வேலி நகர மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.             நெய்வேலி நகரியத்தில் 21, 30 வது பிளாக்குகளில் 6 ஆயிரம் குடும்பத்தினர் 30 ஆண்டிற்கு மேலாக வசித்து வருகின்றனர். என்.எல்.சி., நிறுவனத்தில் கான்ட்ராக்ட் வேலை செய்து வரும் இவர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு...

Read more »

மார்ச் 5ம் தேதி மறியல் : இந்திய கம்யூ., முடிவு

திட்டக்குடி :              விலைவாசி உயர் வைக் கண்டித்து மார்ச் 5ம் தேதியில் நான்கு இடங்களில் மறியல் போராட்டம் நடத்த திட்டக்குடி வந்த இந்திய கம்யூ., முடிவு செய்துள்ளது. திட்டக்குடி வட்ட இந்திய கம்யூ., கிளை கூட்டம் வட்டக்குழு சின்னதுரை தலைமையில் நடந்தது. வட்டக்குழு முருகையன், பொருளாளர் பரமசிவம், துணை செயலாளர் சண்முகம், மாயவன், சாமிவேல், லட்சுமணன் முன்னிலை வகித்தனர். விவசாய...

Read more »

பல்கலைக்கழக தேர்வில் சாதனை : ஜவகர் கல்லூரி மாணவிக்கு பரிசு

நெய்வேலி :                    பல்கலைக்கழக தேர்வில் மூன்றாம் இடத்தை பெற்ற நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரி மாணவியை பாராட்டி சான்றிதழ் வழங்கப் பட்டது.               நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரி வேதியியல் துறை 2ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக் கான 3 நாள் தொழில் நுட்ப பயிற்சி முகாம்...

Read more »

பள்ளிக்கு முன்பாக கரும காரியம்: மாணவர்கள் படிப்பு பாதிக்கிறது

திட்டக்குடி :           பெண்ணாடத்தில் தொடக்கப்பள் ளிக்கு முன்புறம் கரும காரிய நிகழ்ச்சிகள் நடப்பதால் மாணவர்கள் படிப்பு பாதிக்கிறது. பெண்ணாடம் பகுதியில் இறந்தவர்களுக்கு பேரூராட்சி 3வது வார்டு அய்யனார் கோவில் தெருவில் உள்ள பொது இடத்தில் கரும காரியம் செய்து வருகின்றனர். 25 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் நல்லூர் ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டப்பட்டது. இங்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த 300 மாணவ,...

Read more »

சிதம்பரம் அடுத்த கிள்ளையில் 28ம் தேதி பூவராகசாமி தீர்த்தவாரி

கிள்ளை :           கிள்ளையில் வரும் 28ம் தேதி ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி பங்கேற் கும் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. சிதம்பரம் அடுத்த கிள்ளையில் வரும் 28ம் தேதி நடைபெறும் மாசி மக தீர்த்தவாரி உற்சவத்தில் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அப்போது சுற்ற வட்டார கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்பது சிறப்பாகும்....

Read more »

கத்தார் கப்பல் கடலூர் வந்தது

கடலூர் :              கத்தாரிலிருந்து, "காஸ்' ஏற்றி புறப்பட்ட கப்பல், நேற்று முன்தினம் கடலூர் வந்தது. கடலூர் அடுத்த சிப்காட் வளாகத்தில் கெம்ப்ளாஸ்ட் கம்பெனி உள்ளது. இக்கம்பனிக்கு தேவையான மூலப்பொருள், "வினைல் குளோரைடு மோனோமர்' 6,000 டன் காஸ், கத்தார் நாட்டிலிருந்து ஏற்றி புறப்பட்ட "நார்கஸ் சேலஞ்சர்' கப்பல், நேற்று முன்தினம் கடலூர் வந்தடைந்தது.மூலப்பொருட்களை இறக்கியதும்...

Read more »

கொள்ளிடம் ஆற்றில் பாலம் ஆயத்த பணிகள் தீவிரம்

காட்டுமன்னார்கோவில் :               காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் 43 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.கடலூர்- நாகை மாவட்டத்தை இணைக் கும் வகையில் காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் அருகே கொள்ளிடத்தில் 43 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டுவதற்காக பூமி பூஜை கடந்த 27ம் தேதி நடந்தது. அதனை தொ டர்ந்து சேத்தியாத்தோப்பில் இருந்து...

Read more »

சுகாதார மேற்பார்வையாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி

விருத்தாசலம் :                  நர்சை ஆபாசமாக திட்டி தாக்கிய சுகாதார மேற் பார்வையாளருக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அளித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை விருத்தாசலம் விரைவு கோர்ட் உறுதி செய்தது.               கடலூர் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்தவர் பாண்டியன்(55). மங்களூர் அரசு ஆரம்ப...

Read more »

கோ-கோ போட்டியில் வள்ளலார் பள்ளி முதலிடம்

சேத்தியாத்தோப்பு :              கோ-கோ போட்டியில் வளையமாதேவி வள்ளலார் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். நல்லாசிரியர் கோதண்டராமன் நினைவு கோ-கோ போட்டி வளையமாதேவி வள்ளலார் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, வடலூர், வடக்குப்பாளையம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் வளையமாதேவி வள்ளலார்...

Read more »

புதிய ஆட்டோக்களை அனுமதிக்க கூடாது : ஆட்டோ ஓட்டுனர் சங்கம் கலெக்டரிடம் மனு

கடலூர் :               புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என கடலூர் நகர ஆட்டோ ஓட்டுனர் நலச் சங்கம் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துள்ளது. இது குறித்து கடலூர் நகரத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:                    கடலூர் நகரில் 5,000...

Read more »

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க பிச்சாவரத்தில் கலந்துரையாடல்

பரங்கிப்பேட்டை :                  கிள்ளை பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கிள்ளை பேரூராட்சி மற்றும் கிரீடு நிறுவனம் இணைந்து பிச்சாவரத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. பேரூராட்சி சேர்மன் ரவிச்சந்திரன் தலைமை...

Read more »

மகளிர் சுய தொழில் பயிற்சி முகாம்

விருத்தாசலம் :                  விருத்தாசலம் திருமுதுகுன்றம் திருமண மண்டபத்தில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்தநாளை முன்னிட்டு ஜனக்கல்யான் சார்பில் மகளிர் சுய தொழில் பயிற்சி முகாம் நடந்தது. ஜனகல்யான் மாநில பொதுசெயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மன்ற தலைவர் சுபாஷ்சந்திரபோஸ், முருகவேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார்....

Read more »

உயிர் காக்கும் உயர் சிகிச்சை மருத்துவ முகாம் காடாம்புலியூரில் வரும் 25ம் தேதி நடக்கிறது

பண்ருட்டி :                     பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் உயிர் காக்கும் உயர் சிகிச்சை மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம் வரும் 25ம் தேதி நடக்கிறது.  இதுகுறித்து மருங்கூர் வட்டார மருத்துவ அலுவலர் தனசேகர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:                 ...

Read more »

முட்டம் கொள்ளிடம் குறுக்கே கட்டப்படும் பாலத்தில் ரெகுலேட்டருடன் கூடிய கதவணை அமைக்க கோரிக்கை

காட்டுமன்னார்கோவில் :                 கடலூர்- நாகை மாவட்டத்தை இணைக்கும் முட்டம் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட இருக்கும் பாலத்தில் ரெகுலேட்டருடன் கூடிய கதவணை அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இது குறித்த கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் கண்ணன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:                      ...

Read more »

வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம்சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை

விருத்தாசலம் :                வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்க வேண்டும் என சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது. சங்க ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இணை செயலாளர் பழனி வரவேற்றார். செயலாளர் சின்னசாமி அறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்வராஜ் வரவு செலவு அறிக்கை வாசித்தார்....

Read more »

விருத்தாசலம் அரசு பள்ளியில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை

விருத்தாசலம் :                      விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள் ளியில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில் விருத்தாசலம் கல்வி மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் மாணவர்களுக்கு...

Read more »

டலூரில் மாநில கைப்பந்து போட்டி : வேல்ஸ் பல்கலைக்கழக அணி வெற்றி

கடலூர் :                     கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வேல்ஸ் பல்கலைக் கழக அணி முதல் இடத்தை பிடித்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கைப்பந்து போட்டி கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் கடந்த 19ம் தேதி துவங்கியது. 20 கல்லூரிகள் பங்கேற்ற இந்த போட்டியில்...

Read more »

காட்டுமன்னார்கோவில் அருகே பன்றிகள் அட்டகாசம் : அறுவடைக்கு தயாரான விவசாய நிலங்கள் பாதிப்பு

காட்டுமன்னார்கோவில் :                  காட்டுமன்னார்கோவில் பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலங்களில் பன்றிகள் புகுந்து நாசம் செய்வதால் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.                  காட்டுமன்னார்கோவில் குப்பங்குழி பகுதியில் அதிகளவு பன்றிகள் வளர்க்கப்படுகிறது. இவைகள்...

Read more »

மின்சாரம் பாய்ச்சி ஆசிரியர் குடும்பத்தை கொல்ல முயற்சி : கடலூரில் மூன்றாவது சம்பவத்தால் மக்கள் பீதி

கடலூர் :                      மின் கம்பத்திலிருந்து கம்பி மூலம் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுத்து ஆசிரியர் குடும்பத்தை கொலை செய்ய முயன்ற சம்பவம் கடலூர் மக்களை பீதியடையச் செய்துள்ளது.                    கடலூர் அடுத்த பாதிரிக்குப்பம் சுந்தரமூர்த்தி...

Read more »

கவுரவ விரிவுரையாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

கடலூர் :                            பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, கவுரவ விரிவுரையாளர்கள் குடும்பத்துடன் நேற்று கடலூரில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.அரசு கலைக் கல்லூரிகளில் சுயநிதிப் பிரிவாக துவங்கி அரசு பாடப்பிரிவாக மாற்றப்பட்ட வகுப்புகளுக்கு நியமித்த 977 கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய...

Read more »

திடீர் தீ விபத்து : ரூ.5 லட்சம் சேதம்

திட்டக்குடி :                     தீ விபத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. பெண்ணாடம் அடுத்த காரையூர் காலனியை சேர்ந்த முத்து வீடு நேற்று மதியம் தீப்பிடித்து எரிந்து அருகிலிருந்த வீடுகளுக்கு பரவியது. தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் முத்து, தவசு,...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior