உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 07, 2012

அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறைப் பேராசிரியர் அ.சிவபெருமான் எழுதிய நூலுக்கு விருது

சிதம்பரம்:

      சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறைப் பேராசிரியர் அ.சிவபெருமான் எழுதிய இலக்கியங்களில் மனித உரிமைகள் என்ற ஆய்வு நூலுக்கு விருது கிடைத்துள்ளது.


        புதுச்சேரியில் இயங்கி வரும் மூவொரு கடவுள் அறக்கட்டளை ஆண்டுதோறும் பல்துறை இலக்கிய அறிஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் 2010-ம் ஆண்டுக்கான ஞானராஜா மகிமை செல்வி இலக்கிய விருதுக்கு கட்டுரைப் பிரிவின் கீழ் அ.சிவபெருமான் எழுதிய இலக்கியங்களில் மனித உரிமைகள் என்ற ஆய்வு நூலை தேர்ந்தெடுத்துள்ளது என அறக்கட்டளை நிறுவனர் ஞா.ஜோசப் அதிரியன் ஆண்டோ கடிதம் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். இதற்கான விருது மற்றும் நற்சான்றிதழ் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி புதுச்சேரியில் நடைபெறவுள்ள அறக்கட்டளையின் 6-ம் ஆண்டு விழாவில் வழங்கப்படவுள்ளது.








Read more »

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவுக்கு புதிய கட்டடம்

சிதம்பரம்:

    சிதம்பரம் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கையை ஏற்று அரசு காமராஜர் மருத்துவமனையில் சித்தா பிரிவுக்கு ரூ.33 லட்சம் செலவில் தனியே புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக செயலாளர் கோ.பழனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

       சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு தனி கட்டடத்தில் இயங்கி வந்தது. அக்கட்டடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலானதாலும், கட்டடம் பழுதடைந்ததாலும் தற்போது இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்த மருத்துவப் பிரிவுக்கு தனி கட்டடம் இல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு சிறு அறையில் இயங்கி வருவதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சிதம்பரம் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், கடந்த 4-ம் தேதி தமிழக சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வி.எஸ்.விஜய், 2012-13ம் நிதியாண்டில் சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவுக்கு தனியே கட்டடம் கட்டுவதற்கு ரூ.33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபடும் என உறுதியளித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.







Read more »

மங்களூர் ஒன்றியத்தில் சுகாதார வளாகத்தினை பராமரிப்பிற்கும் பணி மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் ஒப்படைப்பு


சிறுபாக்கம்:

     மங்களூர் ஒன்றியத்தில் 15 ஊராட்சிகளில் உள்ள சுகாதார வளாகத்தினை பராமரிப்பிற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மங்களூர் ஒன்றியத்திலுள்ள 66 ஊராட்சிகளில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருந்தன. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஊரக வளர்ச்சி நிர்வாகப் பொறியாளர் பிரபாகரன், உதவிக் கோட்டப் செயற் பொறியாளர் திருநாவுக்கரசு தலைமையில் அடரி, பொயனப்பாடி, கீழ்ஒரத்தூர், மா.கொத்தனூர், பாசார், வினாயகனந்தல், எஸ்.புதூர், வடபாதி, நரையூர், சிறுகரம்பலூர் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தினர். தண்ணீர் வசதி, மின்மோட்டார் இயங்கும் நிலையில் உள்ளதா என ஆய்வு செய்து மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் பேசி தினசரி முறையாக பயன்படுத்தி பராமரிக்குமாறு அதன் சாவிகளை ஒப்படைத்தனர். பி.டி.ஓ.,சுந்தரம், பொறியாளர் மணிவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.













Read more »

கடலூர் ஜெ.எஸ்.ஜெ.வி., கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்


கடலூர்:

      கடலூர் ஜெ.எஸ். ஜெ.வி., கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நேற்று நடந்தது.கல்லூரி முதல்வர் ராஜசேகரன் வரவேற்றார். கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் துவக்க உரையாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக் கழக கல்வியியல் துறை பேராசிரியர் ராஜசேகர், இணைப் பேராசிரியர் நடராஜ் ஆகியோர் பேசினர். முனைவர் வையாபுரி ராஜா மற்றும் சிவக்குமார் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு செய்தனர்.விழாவில் "ஆராய்ச்சி இதழ்' என்ற மலர் வெளியிடப்பட்டது. கருத்தரங்கில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விழாவை பேராசிரியை செண்பக பிரியா தொகுத்து வழங்கினார். ராஜ் கவிதா நன்றி கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior