உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 27, 2010

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

                    
 
                     சுமார் 3,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாபெருமபனிமலை உடைந்து அண்டார்டிகா கடலிலவிழுந்தது. அதாவது ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் என்ற நாட்டின் பரப்பளவுக்கு சமமான பனிமலைச் சிகரம் மெர்ட்ஸ் என்ற மிகப்பெரிய பனிமலையிலிருந்து பெயர்ந்து விழுந்துள்ளது.

                     இதனால் கடல் நீர் சுழற்சியில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

                    பிப்ரவரி 12ஆம் தேதி அல்லது 13ஆம் தேதியில் பி9ி (B9B) என்று அழைக்கப்படும் மற்றொரு பனிமலை மெர்ட்ஸ் பனிமலை மீது மோதியதில் பல பில்லியன் டன் நிறையுள்ள, நினைத்துப் பார்க்க முடியாத பரப்பளவிலான பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்துள்ளது.

                    கிழக்கு அண்டார்டிக்காவிலிருந்து தெற்குக் கடலில் இந்த பனிமலை பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த இரண்டு பனிமலைகளும் தற்போது அடுத்தடுத்து அண்டார்டிகாவில் மிதந்து வருகிறது என்று ஆஸ்ட்ரேலிய அண்டார்டிகா ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

                  இந்த மிகப்பெரிய பனிமலையில் ஒரு ஆண்டிற்கு உலகில் உள்ள ஐந்தில் ஒரு பங்கு நாடுகளுக்கு தண்ணீர் அளிக்கக் கூடியது என்று அவர் மேலும் கூறினார்.

                    இதனால் ஐரோப்பாவில் பனிப்பொழிவு நாட்களும், பனிப்பொழிவு அளவும் அதிகரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு இயற்கையான நிகழ்வுதான் என்றாலும் இதன் நீண்ட கால தாக்கம் பற்றி நாம் கவலையடையாமல் இருக்க முடியாது என்று கிரின்பீஸ் ஆய்வுச் சோதனை மைய விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

                இந்த பனிமலை உடைந்து விழுந்த அண்டார்டிகா கடல் பகுதியில் கடல்பனி அவ்வளவாக இல்லாஒரு இடமாகும். இதனால் இங்கு வாழும் உயிரினங்கள் உணவிற்கு நீண்ட தொலைவு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பனிமலை உடைந்து விழுந்த இடம் குளிர்ந்த, அடர்த்தியான பிராண வாயு நிரம்பிய நீர் உருவாகும் இடமாகும். இது கடல்தரைக்குச் சென்று ஆழ்கடலை பிராண வாயு நிரம்பிய ஒன்றாக மாற்றும்.

                      இப்போது இந்தப் பனிமலை உடைந்து அண்டார்டிகாவில் விழுந்தது, மேற்கூறிய பிராண வாயு உருவாக்க நடவடிக்கையில் தாக்கம் ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் என்னவென்று இப்பொது கூற முடியாது என்று அந்த விஞ்ஞானி தெரிவித்தார்.

Read more »

பகுதி நேர பி.இ.​ படிப்பில் சேருவதற்கு ஏப்ரல் 5 முதல் விண்ணப்பம் விநியோகம்

              பொறியியலகல்லூரிகளிலபகுதி நேி.இ.​ படிப்புகளிலசேருவதற்காவிண்ணப்பங்களஏப்ரல் 5ஆமதேதி முதலவழங்கப்படவுள்ளன. பாலிடெக்னிகபட்டயபபடிப்பிலதேர்ச்சி பெற்று,​​ 2 ஆண்டபணி அனுபவமஇருப்பவர்களஇந்படிப்புகளிலசேவிண்ணப்பிக்கலாம்.

இததொடர்பாதொழில்நுட்பககல்விததுறை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், 
 

                     2010-11 ஆண்டிலபகுதி நேி.இ.,​​ ி.டெக்.,​​ பொறியியலபடிப்புகளுக்கமாணவரசேர்க்கநடைபெஉள்ளது.​ பாலிடெக்னிகபட்டயபபடிப்புகளிலதேர்ச்சி பெற்று,​​ 2 ஆண்டுகளுக்ககுறைவில்லாமலபணிகளிலஇருப்பவர்களஇந்படிப்புகளிலசேரலாம்.

                              அதற்காவிண்ணப்பங்கள்,​​ சென்னையிலஉள்தொழில்நுட்பககல்வி இயக்குநரஅலுவலகம்,​​ கோவை,​​ சேலம்,​​ திருநெல்வேலி,​​ காரைக்குடி,​​ வேலூர்,​​ பர்கூரஆகிஇடங்களிலஅரசபொறியிலகல்லூரிகள்,​​ கோவி.எஸ்.ி.​ பொறியியலகல்லூரி,​​ கோவஇன்ஸ்டிடியூடஆபடெக்னாலஜி,​​ மதுரதியாகராஜரபொறியியலகல்லூரி ஆகியவற்றிலஏப்ரல் 5ஆமதேதி முதலஏப்ரல் 26ஆமதேதி வரஅலுவலவேலநாள்களிலவழங்கப்பஉள்ளன.

                       விண்ணப்பககட்டணமூ.300 ​(எஸ்.ி.,​​ எஸ்.ி.​ பிரிவினருக்கூ.150). கட்டணத்தை "செயலர்,​​ பகுதிநேி.இ.​ மாணவரசேர்க்கை,​​ கோவை'' என்பெயரிலகோவையிலசெல்லத்தக்வகையிலி.ி.யாசெலுத்வேண்டும். விண்ணப்பங்களதபாலமூலமாகவுமபெறலாம்.​ விண்ணப்பங்களைபபூர்த்தி செய்தசமர்ப்பிப்பதற்கஏப்ரல் 26ஆமதேதி கடைசி நாள் ஆகு‌ம்.

Read more »

இ‌ன்று ஒரு மணி நேரம் விளக்குகளை அணைக்க மக்களுக்கு வே‌ண்டுகோ‌ள்

                   பருவநிலமாற்றத்தைததடுக்குமவகையிலஒரமணி நேரமஅத்தியாவசியமற்விளக்குகளஅணைக்மின்சாவாரியமபொதுமக்களுக்கவேண்டுகோளவிடுத்துள்ளது.

                      "
டபிள்யு.டபிள்யு.எப்.​- இந்தியா'' என்அரசசாரநிறுவனமும்,​​ தமிழஅரசுமஇணைந்தபருவநிலமாற்றத்ததடுப்பதற்காவிழிப்புணர்வபிரசாரத்திலஈடுபட்டுள்ளன.​ ​ இதனஒரபகுதியாக இ‌‌ன்று இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரவீடுகளிலஅத்தியாவசியமற்விளக்குகளஅணைக்குமாறு,​​ பொதுமக்களுக்கவேண்டுகோளவிடுக்கப்பட்டுள்ளது.
 இது குறித்ததமிழ்நாடமினவாரிதலைவரி.ி.​ சிங்,​​ எரிசக்தி மற்றுமதகவலதொழில்நுட்பததுறசெயலரடேவிதாரஆகியோரூறுகை‌யி‌ல், 
 
                  தமிழகத்தில் 2004ஆமஆண்டமார்சமாதம் 3,800 கோடி மெகாவாட்டாஇருந்மினபயன்பாடு,​​ 2009ஆமஆண்டமார்ச்சில் 5,300 கோடி மெகவாட்டாஉயர்ந்துள்ளது.
                 தேவையைககருத்திலகொண்டு,​​ மின்சாரத்தசிக்கனமாபயன்படுத்மக்களமுன்வவேண்டும்.​ உலவெப்பமயமாதலைததடுக்குமவகையில்,​​ 27ஆ‌ம் தே‌தி மேற்கொள்ளவுள்விழிப்புணர்வநிகழ்ச்சியிலஅனைத்தமக்களுமபங்கேற்ஒரமணி நேரமதேவையற்விளக்குகளஅணைக்முன்வரவேண்டும்.​ இதனமூலம் 60 மெகவாடமின்சாரமசேமிக்கப்படும்.
                     தமிழகத்திலஇப்போது 1,100 மெகவாடமின்சாரமபற்றாக்குறஉள்ளது.​ இந்பற்றாக்குறகாரணமாசிபகுதிகளில் 2 மணி நேரத்துக்கமேலமின்தடஏற்படுவதஉண்மைதான். இப்போதநடைமுறையிலஇருக்குமமின்வெட்டு,​​ கோடகாலத்திலஉயர்த்தப்படாது.​ இதஅளவில்தானமின்வெட்டஇருக்கும்.​ ே 15ஆமதேதிக்குபபினகாற்றாலமினஉற்பத்தி தொடங்கிவிடும்.​ அதன்பிறகமினபற்றாக்குறஒரளவகுறையும்.
                     பருவநிலமாற்றத்தைததடுக்குமவகையிலவனத்துறசார்பிலுமபல்வேறநடவடிக்கைகளமேற்கொள்ளப்பட்டவருகின்றன. தேசிகொள்கையினபடி நிலப்பரப்பில் 33 சதவீதமவனபபகுதி இருக்வேண்டும்.​ இந்இலக்கஎட்தீவிநடவடிக்கைகளமேற்கொள்ளப்பட்டவருகின்றன.
                        கடந்இரண்டரஆண்டுகளாமேற்கொண்முயற்சிகளமூலம்,​​ கூடுதலாக 24 சதுகிலமீட்டரஅளவுக்கவனபபரப்பஅதிகரித்துள்ளது. இதன்படி இப்போததமிழகத்தில் 22 சதவீநிலப்பரப்பு,​​ வனபபகுதியாஉள்ளது.​ இதை 33 சதவீதமாஉயர்த்த,​​ 2010-11 நிதியாண்டிலூ.​ 25 கோடி நிதியஅரசஒதுக்கியுள்ளதஎன்றன‌ர்.

Read more »

Impersonator Held


CUDDALORE: 

            A person posing as a policeman was arrested and lodged in the Cuddalore Central Prison on Friday.

                Police said that V. Ramachandran (36) of Kottai Kadungulam, Tirunelveli district, had recently come to stay in a rented house at Sothikuppam near here. He used to go around in police uniform carrying a ‘lathi' and a whistle. Residents informed police about him. The police followed him for sometime, arrested and produced him before a court. The police said there were allegations that two years ago, Ramachandran, wearing police uniform, cheated the people of Valliyur at Tirunelveli.

Read more »

காச நோய்க்கு அதிக நிதி: என்எல்சிக்கு விருது

நெய்வேலி:
 
              கடலூர் மாவட்டத்தில் காசநோய்க்கு அதிக நிதி வழங்கிய என்எல்சி நிறுவனத்துக்கு மாவட்ட ஆட்சியர் சீதாராமன் விருது வழங்கி கௌரவித்தார். காசநோய் ஒழிப்புக்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இம்முயற்சியில் பொதுமக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக ஊழியர்கள் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் மூலமாக நிதி திரட்டப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்ட காசநோய் தடுப்பு மையம் நடத்திய காசநோய் ஒழிப்பு நடவடிக்கையில் என்எல்சி நிறுவனம் ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கியது. இதன்மூலம் என்எல்சி நிறுவனம் மாவட்டத்திலேயே அதிகபட்ச நிதி வழங்கி முதலிடம் வகிக்கிறது. இதை கெüரவிக்கும் பொருட்டு உலக காச நோய் தினமான மார்ச் 24-ம் தேதி கடலூரில் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சீதாராமன் கலந்துகொண்டு என்எல்சி நிறுவனத்துக்கு விருதை வழங்கினார். என்எல்சி நிர்வாகத் துறை முதன்மைப் பொதுமேலாளர் லூர்தஸ் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காசநோய் தடுப்பு மையத்தின் கௌரவச் செயலர் எம்.மனோகரன் உள்ளிட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Read more »

கடலூரில் போலீஸ் உடையுடன் சுற்றித் திரிந்தவர் கைது


கடலூர்:

                  போலீஸ் உடையுடன் கடலூரில் சுற்றித் திரிந்த இளைஞர் ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். கடலூர் முதுநகர் போலீஸôர் கடலூர்- சிதம்பரம் சாலையில் செல்லங்குப்பம் அருகே வாகனத் தணிக்கை செய்து கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும் நிலையில் காணப்பட்ட இளைஞர் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். அவர் வைத்து இருந்த பையில் போலீஸ் உடைகளும், போலீஸ் உடையுடன்  எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையும் இருந்ததைப் போலீஸôர் கைப்பற்றினர். மேற்கொண்டு விசாரித்ததில் அவர் பெயர் ராமச்சந்திரன் (27) என்றும், நெல்லை மாவட்டம் கோட்டைக் கருங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. தான் கடலூருக்கு மாறுதலாகி வந்து இருக்கும் போலீஸ் காவலர் என்றுகூறி, கடலூர் செல்லங்குப்பத்தில் சேகர் என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து, கடந்த 5 மாதங்களாகத் தங்கி இருந்ததும் தெரியவந்தது. ஆனால், அவர் தனக்கு போலீஸ் காவலராக பணிபுரிய வேண்டும் என்று ஆசை இருந்ததாகவும், அதனால் போலீஸ் உடை அணிந்ததாகவும் தெரிவித்தார். அவரை கடலூர் முதுநகர் போலீஸôர் கைது செய்து, அவர் போலீஸ் உடையுடன் ஏதேனும் குற்றங்கள் புரிந்து உள்ளாரா என்று விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Read more »

நூல் வெளியீட்டு விழா

கடலூர்:
 
                   கடலூர் தெரசா கேத்தரின் எழுதிய "புவியியலைப் புரிந்து கொள்வோம்' என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு கவிஞர் வெற்றிச்செல்வி தலைமை வகித்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்க கடலூர் கிளைச் செயலாளர் ஆசைத்தம்பி வரவேற்றார். "புவியியலைப் புரிந்து கொள்வோம்' என்ற நூலை, கடலூர் புனித வளனார் கல்லூரி துணை முதல்வர் சூசை ஜான் ரொசாரியோ வெளியிட, முதல் பிரதியை முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் பெற்று கொண்டார்.  அதைத் தொடர்ந்து செம்மொழித் தமிழுக்கு செய்ய வேண்டியவை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் எழுத்தாளர் சங்க மாநிலச் ராமச்சந்திரன் உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து கவியரங்கம் நடந்தது. 
 
                    கடலூர் குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன், முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் ஜீவகாருண்யன், மாவட்டத் தலைவர் ஆறு.சேகர், பொருளாளர் வெங்கடேசன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் காசிநாதன், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் முத்துக்குமாரசாமி, வழக்கறிஞர் மன்றவாணன் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர்.  விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செய்து இருந்தது.

Read more »

மாநில கோ-கோ ஜவகர் பள்ளி சாதனை

நெய்வேலி:
 
                   திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இம்மாதம் 9-ம் தேதி நடந்த மாநில அளவிலான கோ-கோ போட்டியில் நெய்வேலி ஜவகர் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 4 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். இப்பள்ளியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் ஜெ.ராஜேஷ் 4 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாம்பியன் பட்டத்தையும் வென்றார். இதேபோன்று 5-ம் வகுப்பைச் சேர்ந்த மாணவன் சுந்தர்ராஜன் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.  மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களையும் உடற்பயிற்சி ஆசிரியர்களையும் பள்ளி முதல்வர் கணேஷ் பாராட்டினார்.

Read more »

விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப்பாதையில் அனைத்து ரயில்களையும் இயக்க கோரிக்கை

கடலூர்:
 
                 விழுப்புரம் - மயிலாடுதுறை அகலப் பாதையில், ஏற்கெனவே மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும் என்று, கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 
 
கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் வெள்ளிக்கிழமை தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: 
 
             விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப்பாதைப் பணிகள் முடிக்கப்பட்டு, ஏப்ரல் 15-ம் தேதி முதல் இப்பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட இருப்பதாக அறிகிறோம். இந்த மார்க்கத்தில் சென்னையில் இருந்து கடலூர் வழியாக, 12 ரயில்கள் இயக்கப் பட்டன. தற்போது, இப்பாதையில் இரு பாசஞ்சர் ரயில்களும் (விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மட்டும்) மற்றும் இரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் வாரம் ஒரு முறை மட்டும் இயக்க, தென்னக ரயில்வே திட்டமிட்டு இருப்பதாக அறிகிறோம். 
 
                      இது கடலூர் மாவட்ட மக்களுக்கு பெரிதும் ஏமாற்றம் அளிப்பதாகும். எனவே மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கும், கடலூரில் இருந்து கோவை மற்றும் வேலூருக் கும் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். மக்கள் அதிகம் பயன்படுத்தும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள்தான் நிற்கும் என்ற அறிவிப்பு கண்டனத்துக்கு உரியது. சரித்திர முக்கியத்துவம் கருதி, கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தை மாதிரி ரயில் நிலையமாக மேம்படுத்த வேண்டும். கணினி பதிவு மையம் காலை 8 மணி முதல் 14 மணி நேரம் இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மக்கள் தேவையைக் கருத்தில் கொண்டு லாரன்ஸ் சாலை முதல், கம்மியம்பேட்டை ரயில்வே கேட் வரை, ரயில்வே லைன் ஓரமாக அகல நடைபாதை அமைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

Read more »

கான்கிரீட் வீட்டு வசதி திட்ட கணக்கெடுப்பு 29ம் தேதி துவக்கம் : கலெக்டர் சீத்தாராமன் தகவல்


சிதம்பரம்: 

                 தமிழக அரசின் கான் கிரீட் வீட்டு வசதி திட்டத் தின் கீழ் பயனாளிகள் கணக்கெடுப்பு கடலூர் மாவட்டத்தில் 29ம் தேதி துவங்குகிறது என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்தார்.

                   சிதம்பரம் அடுத்த இளநாங்கூர் கிராமத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி 9 பேருக்கு வீட்டுமனை பட்டா, 7 பேருக்க தையல் இயந்திரம், ஒருவருக்கு சலவை பெட்டி, கிராம நிர்வாக அலுவலர்களின் ஐந்து குடும்பங்களுக்கு பணிக்கொடை மற்றும் சிறப்பு சேம நலநிதி, மூவருக்கு தனிநபர் கடன், 29 பேருக்கு விதவை மற்றும் முதியோர் உதவிதொகை என மொத்தம் 18 லட்சம் ரூபாய் மதிப்பில் 89 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  அப்போது அவர் பேசுகையில், கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்தில் வீடு கட்டுவதற்கான கணக்கெடுப்பு மாவட்டத்தில் 29ம் தேதி துவங்குகிறது. அதற் காக பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குறைகேட்பு முகாமையொட்டி ஏற்கனவே வரப்பெற்ற 319 மனுக்களில் 141 மனுக்கள் ஏற்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 64 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. 41 மனுக்கள் தள் ளுபடி செய்யப்பட்டன. இன்று 166 மனுக்கள் வரப் பெற்றது. இந்த மனுக்கள் பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முகாமில், தாசில்தார் காமராஜ், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஜெயக்குமார், பிற்பட் டோர் நல அலுவலர் பாலசுப்ரமணியன், பி.டி.ஓ., பாலசுப்ரமணியன், வட்ட வழங்கல் அலுவலர் மூர்த்தி, டாக்டர் பாரிவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

போலி மருந்து: மாவட்டத்தில் சோதனை

கடலூர்: 

                மாவட்டத்தில் போலி மற்றும் காலாவதியான மருந்து மாத்திரைகள் குறித்த ஆய்வு நடந்தது.
 
                 தமிழகம் முழுவதும் போலி மற்றும் காலாவதியான மருந்து மாத்திரைகள் விற்பதாக வந்த தகவலின் பேரில் மருந்து கட்டுப் பாட்டு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மாவட்டத்தில் மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் மருந்து கட்டு பாட்டு ஆய்வாளர் குருபாரதி தலைமையிலான குழுவினர் கடலூர், விருத்தாசலம், பெண்ணாடம் பகுதிகளில் சில் லரை மற்றும் மொத்த வியாபார மருந்து கடைகளில் ஆய்வு மேற் கொண்டனர். ஆய்வின் போது போலி மற்றும் காலாவதியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதுபற்றி ஆய்வாளர் குருபாரதி கூறுகையில்

                    'கடலூரில் கடந்த 17ம் தேதி 'பெனட்ரில் இருமல் 'சிரப்' பறிமுதல் செய்தோம். அதன் பிறகு மாவட்டத் தின் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை போலி மற்றும் காலாவதியான மருந்துகள் இல்லை என சோதனையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படும்' என்றார்.

Read more »

சமூக விரோதிகள் ஊடுருவல் எதிரொலி : நெய்வேலியில் பலத்த பாதுகாப்பு

நெய்வேலி: 

                நெய்வேலி நகரில் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

                   நெய்வேலி நகர எல்லைக்குள் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை போலீசார் எச்சரித்துள்ளனர். இதன் எதிரொலியாக டி.ஐ.ஜி., மாசானமுத்து, எஸ்.பி., அஷ்வின்கோட்னீஸ் உத்தரவின் பேரில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். நடைப்பயிற்சி செல்லும் பெண்கள் துணையுடன் செல்ல வேண்டும். அதிக நகை அணிய வேண்டாம். இரவு நேர நடை பயிற் சியை தவிர்க்கவும். இரவில் காற்றுக்காக ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து படுக்க வேண்டாம். வெளியூர் செல்லும் போதும், வீட்டை பூட்டி விட்டு காவல் துறைக்கு தெரியப் படுத்தவும். வங்கிகளில் உள்ள பாதுகாப்பு பெட்டக வசதியை பயன்படுத்தவும். தொடர்புக்கு டி.எஸ்.பி., 94454 90340 இன்ஸ்பெக்டர் 94434 90337 நகர காவல்நிலையம் 04142-252051 என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கடந்த ஒருவாரமாக நெய்வேலி நகரில் மக்கள் அதிகளவில் நடமாடும் இடங்கள் மட் டுமின்றி, ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read more »

தமிழ் வளர்ச்சித்துறை ஆட்சி மொழி கருத்தரங்கு

கடலூர்:

                   தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கடலூரில் ஆட்சி மொழிக் கருத்தரங்கு நடந்தது. தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்கம் கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடந்தது. அனைவருக்கும் கல்வித்திட்ட முதன்மை கல்வி அலுவலர் கதிர் வேல் தலைமை தாங்கினார். நாகை, கடலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அருண் ரசீத் வரவேற்றார். கடலூர் தமிழ்ச்சங்க தலைவர் முத்து, கவிஞர் மாசிலாமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராசு உட்பட பலர் பேசினர். அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பி.ஆர்.ஓ., இளங்கோ நன்றி கூறினார்.

Read more »

விரைவு கோர்ட் நீதிபதியாக சரோஜினி தேவி நியமனம்

கடலூர்: 

                    மாவட்ட விரைவு கோர்ட் நீதிபதியாக சரோஜினி தேவி நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் விரைவு கோர்ட் நீதிபதி பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் தாம்பரம் கோர்ட் சப் ஜட்ஜ் சரோஜினி தேவி பதவி உயர்வு பெற்று கடலூர் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏப்ரல் 1ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜாகீர் உசேன் வேலூர் விரைவு கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்றுள் ளதால், கடலூரில் அப்பதவி காலியாக உள்ளது.

Read more »

சமுதாய பராமரிப்பு மையம் திறப்பு விழா


கடலூர்: 

                     கடலூரில் எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கான சமுதாய பராமரிப்பு மைய திறப்பு விழா நடந்தது. லைப் ஹெல்ப் தொண்டு நிறுவனம் மற்றும் அரசு நெஞ்சக மருத்துவமனை சார்பில் எய்ட்ஸ் நோயால் பாதித்தவர்களுக்கு சமுதாய பராமரிப்பு மைய திறப்பு விழா கடலூர் கேப்பர் மலையில் உள்ள காசநோய் மருத்துவமனையில் நடந்தது. இதன் மூலம் மாவட்டத்தில் எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு இலவச மருத்துவம், ஆலோசனை, உணவு மற்றும் தங்குமிடமும் அளிக்கப்படுகிறது. மையத்தை மருத்துவமனை நலப் பணிகள் இணை இயக்குனர் ஜெயவீரகுமார் திறந்து வைத் தார்.
 
                       மாவட்ட காசநோய் துணை இயக்குனர் மனோகரன், கண்காணிப்பாளர் ஸ்ரீ வித்யா சங்கர், எய்ட்ஸ் திட்ட மேலாளர்  கலைமணி, லைப் ஹெல்ப் தொண்டு நிறுவன நிர்வாக அலுவலர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Read more »

சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

பரங்கிப்பேட்டை:

                     பரங்கிப்பேட்டையில் இருந்து அகரம் ரயிலடி வரை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பரங்கிப்பேட்டையில் இருந்து அகரம் ரயிலடி வரை நெடுஞ்சாலை துறை சாலை மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இங்கு சாலையோர ஆக்கிரமிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

                  இதனால்  பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சஞ்சீவிராயர் கோவில் தெரு, சின்னக் கடை, பெரியத்தெரு, சலங்குக்கார தெரு ஆகிய பகுதிகளில் வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அதிகரித்து வருகின்றனர். இந்த இடங்களில் எதிர், எதிரே இரண்டு வாகனங்கள் வந்து விட்டால்  போதும் ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  அவசரமாக செல்பவர்கள் போக்குவரத்து  நெரிசலில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர்.  இதனால் பரங்கிப்பேட்டையில் இருந்து அகரம் ரயிலடி வரை  சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.

Read more »

இந்தியன் வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர்: 

                இந்தியன் வங்கி கடலூர் வட்டார நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
                இந்தியன் பாங்க் ஊழியர் சங்கம் சார்பில் கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க உதவித் தலைவர் தேவநாதன் தலைமை தாங்கினார். தாலுகா அமைப்பு பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், உதவிச் செயலாளர் பழனிக்குமார், மாவட்ட  அமைப்பு தலைவர் ஜோசப், புதுச்சேரி வங்கி ஊழியர் சங்க ரமணி, செயற்குழு உறுப்பினர் மீரா, தாமஸ் ஜெயபிரகாஷ்,  திருமலை உட்பட பலர் பங்கேற்றனர். முருகேசன் நன்றி கூறினார்.

Read more »

பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் ஊழியர்கள் சங்கங்கள் தர்ணா

கடலூர்:

             பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் - ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூரில் தர்ணா நடந்தது.

               ஒரு லட்சம் ஊழியர் களை குறைக்கும் திட் டத்தை உடனே நிறுத்த வேண்டும்.  அவுட் சோர் சிங் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் அலுவலகம் முன் தர்ணா நடந்தது.  இதில் எம்ப்ளாயீஸ் யூனியன் மாவட்ட  செயலாளர் சம்பந்தம், சுந்தரமூர்த்தி, ஜெயராமன், பாண்டுரங்கன், வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior