உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 16, 2011

கடலூர் எம்.சி.சம்பத் மற்றும் புவனகிரி செல்வி ராமஜெயம் அவர்களுக்கு அமைச்சர் பதவி

    மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக திங்கள்கிழமை பொறுப்பேற்க உள்ளார் ஜெயலலிதா. அவருடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 33 பேரும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் ஏற்க உள்ளனர். அவர்களில் கடலூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ., எம்.சி.சம்பத் மற்றும் புவனகிரி சட்டமன்றத் தொகுதி  செல்வி ராமஜெயம் அவர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

எம்.சி.சம்பத்---சிறுதொழில்கள் துறை
 
செல்வி ராமஜெயம்--சமூகநலத் துறை 


Read more »

கடலூர் மாவட்டத்தில் 9 எம்.எல்.ஏ.க்களில் 7 பேர் புதுமுகங்கள்

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில், எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள 7 பேர், சட்டப்பேரவைக்கு புதுமுகங்கள் ஆகும். 

            கடலூர் மாவட்டத்தில் கடலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் (அ.தி.மு.க.), குறிஞ்சிப்பாடி தொகுதியில் சொரத்தூர் ராஜேந்திரன் (அ.தி.மு.க.), நெய்வேலி தொகுதியில் சிவசுப்பிரமணியன் (அ.தி.மு.க.), காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் முருகுமாறன் (அ.தி.மு.க.), புவனகிரி தொகுதியில் செல்வி ராமஜெயம் (அ.தி.மு.க.), சிதம்பரம் தொகுதியில் கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), பண்ருட்டி தொகுதியில் சிவக்கொழுந்து (தே.மு.தி.க.), விருத்தாசலம் தொகுதியில் முத்துக்குமார் (தே.மு.தி.க.), திட்டக்குடி தொகுதியில் தமிழழகன் (தே.மு.தி.க.) ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.

             இவர்களில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான எம்.சி. சம்பத், செல்வி ராமஜெயம் ஆகியோர் மட்டுமே ஏற்கெனவே எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்கள். சொரத்தூர் ராஜேந்திரன், சிவசுப்பிரமணியன், முருகுமாறன், தமிழழகன், முத்துக்குமார், சிவக்கொழுந்து, கே.பாலகிருஷ்ணன், ஆகிய 7 பேரும் முதல் முறையாக எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்து எடுக்கப்பட்டு சட்டப் பேரவைக்குச் செல்கிறார்கள். இவர்களில் நிறைந்த அரசியல் அனுபவம் பெற்றவர்களாக கே.பாலகிருஷ்ணனும், சொரத்தூர் ராஜேந்திரனும் உள்ளனர். 

                தற்போது அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்.மன்றத் துணைத் தலைவராக இருக்கும் சொரத்தூர் ராஜேந்திரன், அ.தி.மு.க. மாவட்டச் செயலராகவும் இருந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவராகவும் இருக்கிறார். இருவரும் சட்டப்பேரவை செல்வது தொகுதி மக்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும் என்பது அவர்களது தொகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. கடலூர் வறட்சி, மழை, வெள்ளம், சேதம் எனப் பல்வேறு பிரச்னைகளைக் கொண்ட, விவசாய மாவட்டமாக இருந்த போதிலும், விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகள் சட்டப் பேரவைக் கூட்டங்களில் பேசப்பட்டது இல்லை என்பது கடலூர் மாவட்ட விவசாயிகளின் மனக்குறை. 

                அந்தக் குறையை பாலகிருஷ்ணன் போக்குவார் என்ற நம்பிக்கை மாவட்ட விவசாயிகளுக்கு தற்போது ஏற்பட்டு உள்ளது. பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து தே.மு.தி.க. கடலூர் மாவட்டச் செயலராக இருக்கிறார். மற்ற 4 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் கட்சிகளில் சிறிய பொறுப்புகளில் இருப்பவர்கள்.புதிய எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளின் பிரச்னைகளை, சட்டப் பேரவையில் எடுத்துரைக்கும், மாண்பை, அத்தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள். கடந்த பல தேர்தல்களில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும், அனைவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள், ஒரே அணியைச் சேர்ந்தவர்கள் என்ற நிலை இருந்தது இல்லை. 

             ஆனால் இந்தத் தேர்தலில் 9 பேரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்களாக இருப்பது, கடலூர் மாவட்ட வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாய் இருக்கும் என்று கடலூர் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்களா 9 எம்.எல்.ஏ. க்களும்.

Read more »

22 ஆண்டுகளுக்குப் பின் வெற்றி பெற்றிருக்கும் அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன்

நெய்வேலி:

          குறிஞ்சிப்பாடித் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும் அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன்  அரசியல் களத்தில் 22 ஆண்டுகால போராட்டத்துக்கு பின் சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையை எட்டியிருப்பதால் அவரது குடும்பம் மட்டுமின்றி அவரது பெயரோடு சேர்ந்திருக்கும் சொரத்தூர் கிராம மக்களும் கட்சி பேதமின்றி மிகுந்த சந்தோஷத்தில் காணப்படுகின்றனர்.

               கடந்த 1989-ம் ஆண்டு முதன்முதலாக குறிஞ்சிப்பாடித் தொகுதியில் அதிமுக ஜெ. அணி சார்பில் களமிறங்கிய சொரத்தூர் ராஜேந்திரன், திமுக வேட்பாளர் கணேசமூர்த்தியிடம் தோல்வியுற்றார். அதைத் தொடர்ந்து 1996-ல் பண்ருட்டியில் போட்டியில் திமுக வேட்பாளர் ராமசாமியிடமும், 2006-ம் ஆண்டு அதே பண்ருட்டியில் பாமக வேட்பாளர் வேல்முருகனிடம் 145 வாக்குகள் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவினார். இதோடு நில்லாமல் 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் வேங்கடபதியிடம் தோல்வியுற்றார். 

              அரசியல் களமிறங்கி சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ ஆகவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்ட ராஜேந்திரனுக்கு தொடர் தோல்வியே. இதனால் கட்சியினர் மட்டுமின்றி மாற்றுக் கட்சியினர் மத்தியிலும் ராஜேந்திரனுக்கு அனுதாபம் நிலவியது.ராஜேந்திரன் போட்டியிடும் போதெல்லாம் அதிமுகவும் தோற்கும், அவரும் தோற்றுப் போவார் என்ற சென்டிமென்டான விஷயம் கடலூர் அரசியல் பிரமுகர்களிடையே பரவலாக பேசப்படும். அதற்கேற்றவாறு அவர் போட்டியிட்ட போதெல்லாம் அதிமுக தோல்வியடைந்தது என்னவோ உண்மை தான். 

              ஆனால் அவரது விசுவாசிகளோ கட்சி ஜெயிக்கும் என்ற நிலை இருக்கும் போது ராஜேந்திரனுக்கு சீட் தரமாட்டார்கள், தோற்கின்ற சமயத்தில் சீட் வழங்குவார்கள் என்று கூறி வந்தனர்.பல்வேறு சென்டிமென்ட் விஷயங்களுக்கு அதிமுக தலைமை முக்கியத்துவம் தரும் என்ற கருத்து நிலவிவரும் வேளையில் அதிமுக தலைமை 5-ம் முறையாக தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை ராஜேந்திரனுக்கும் வழங்கியது. அதுவும் குறிஞ்சிப்பாடியிலேயே வழங்கியது. 

                     குறிஞ்சிப்பாடியில் தொடர்ந்து 3 முறையாக போட்டியிட்டு பல்வேறு நலத் திட்டப் பணிகளை செய்து தொகுதி வாசிகளை வளைத்து வைத்திருக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை, ராஜேந்திரன் வெல்வது கடினம் தான் என பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.இந்நிலையில் சொரத்தூர் ராஜேந்திரன் தன்னை எதிர்த்து போட்டியிட்டு திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை 23 ஆயிரத்து 848 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். 

              அரசியல் களத்தில் முதன்முதலாக குறிஞ்சிப்பாடித் தொகுதியில் சோதனையை தொடங்கி அதில் சறுக்கிய ராஜேந்திரன், தொடர்ந்த போராடி 22 ஆண்டுகளுக்குப் பின் அதே குறிஞ்சிப்பாடியில் வெற்றிக்கனியை பறித்திருப்பது சாதாரணமானது அல்ல என்பதை அவர் உணர்ந்திருக்கக் கூடும்.எனவே தொகுதியை தக்க வைத்துக் கொள்ள இனி தான் அவர் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எதுவாக இருந்தாலும் அதை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துக் கையாண்டால் தான் அவரது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பது தொகுதியில் உள்ள மூத்த வாக்காளர்களின் கருத்து.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சாதிக் கட்சிகள் தோற்க்க காரணம் என்ன?

சிதம்பரம்:

         ட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக்கழகம் ஆகிய மூன்றும் இணைந்து தொண்டர்களின் கருத்துகளுக்கு எதிராக திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் படுதோல்வியை தழுவியதாக தெரியவந்துள்ளது. 
           இந்த 3 கட்சிகளின் தலைவர்களும் பிரசாரக் கூட்டங்களில் ஒரே மேடையில் பேசினர். அப்போது "நாம் இதுநாள் வரை சண்டை போட்டது போதும். இது சமூக நல்லிணக்க கூட்டணி. ஆதலால் அனைவரும் பகைமையை மறந்து ஒற்றுமையாக தேர்தல் பணியாற்றி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். நமது கூட்டணி மிகப்பெரிய கூட்ட ணி. இக் கூட்டணி வெற்றிபெறவில்லை என்றால் பாமகவுக்கும், வி.சி.க.வுக்கும் எதிர்காலம் போய்விடும்' என்றும் முழங்கினர். ஆனால் இத் தேர்தலில் தலைவர்களின் கூட்டணியை அக்கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.
 
            தேர்தலுக்கு முன்பு விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஊழல், ஆளும் அமைச்சர்களின் அதிகார துஷ்பிரயோகம் ஆகிய காரணங்களால் திமுகவுக்கு மக்கள் எதிராக உள்ளனர் என அறிந்த விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் அதிமுகவுடனான கூட்டணியைத்தான் விரும்பினர். பெரும்பான்மையான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களுமே அதிமுகவுடனான கூட்டணியையே விரும்பினர். ஆனால் திமுகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் படுதோல்வியை தழுவியது என்பதை அக்கட்சி தலைவர்களுக்கு இத்தேர்தலில் தொண்டர்கள் தெளிவாக உணர்த்தியுள்ளனர்.
 
          திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணி ஏற்படுத்தியதற்கு துரை.ரவிக்குமார்தான் காரணம் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும், தனது தலைவர் திருமாவளவனையும் திமுகவிடம் அடமானம் வைத்து விட்டார் ரவிக்குமார் என அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வெளிப்படையாகவே தெரிவிக்கின்றனர்.
 
40 தொகுதிகள்: 

          வட மாவட்டங்களில் பா.ம.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு கணிசமான ஆதரவாளர்கள் உள்ளனர். இதனாலேயே இக் கட்சிகளுக்கு திமுக கூட்டணியில் 30, 10 என 40 தொகுதிகள் இந்த மாவட்டங்களில் ஒதுக்கப்பட்டன.
 இதில், பா.ம.க. மட்டும் ஜெயங்கொண்டம், செஞ்சி, அணைக்கட்டு ஆகிய 3 தொகுதிகளில் வென்றது. விடுதலைச் சிறுத்தைகள் அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. கடந்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பா.ம.க. 18 இடங்களில் வென்றது. விடுதலைச் சிறுத்தைகள் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 2 இடங்களை பெற்றிருந்தது .

Read more »

நிறைவுபெறும் நிலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம்

சிதம்பரம்:

             சிதம்பரத்தை அடுத்த குமராட்சி பகுதியில் சுமார் 86 கிராமங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

             சிதம்பரத்தை அடுத்த குமராட்சி, புளியங்குடி, நெய்வாசல் உள்ளிட்ட சுமார் 86 கிராமங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை இருந்து வந்தது. இக்கிராமங்களில் சுனாமியின் போது ஏற்பட்ட மாற்றத்தால் நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மையாக மாறியது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகினர். இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு குடிநீóர் வடிகால் வாரியத்தின் மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கவில்லை.

             இந்நிலையில் தமிழக அரசு ரூ.17 கோடி செலவில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து அத்திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் புளியங்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் நீருற்று கிணறு அமைக்கப்பட்டு வென்னையூர் வழியாக குழாய்கள் புதைக்கப்பட்டது. இத்திட்டத்தில் 35 கி.மீ. ஒரு பிரிவாகவும், 15 கி.மீ. ஒரு பிரிவாகவும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் குழாய்கள் சிதம்பரம் அருகே உள்ள புஞ்சைமகத்து வாழ்க்கை கிராமத்தில் முடிவடைகிறது. 

            இந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் நீரை சேமித்து வைக்க மேற்கண்ட கிராமங்களில் குடிநீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 87 கிராமங்களும், இவையல்லாமல் 121 வழியோர கிராமங்களும் பயன்பெறும். இத்திட்டப் பணிகள் ஒரு பிரிவு மே மாத இறுதியிலும், மற்றொரு பிரிவு ஜூன் மாதம் இறுதிக்குள் முடிவுறும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more »

பொதுமக்களை சந்தித்து குறைகளை தீர்ப்பேன் : திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தமிழ்அழகன்

திட்டக்குடி:
 
          திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழ்அழகன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் திட்டக்குடி வந்திருந்தார்.

திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழ்அழகன்  கூறியது:-

             திட்டக்குடி பகுதி கிராமங்கள் நிறைந்ததாகும் இந்த தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நல்ல குடிநீர் தெரு மின் விளக்கு சாலை வசதி ஆகியவற்றில் முழுகவனம் செலுத்துவேன் அனைத்து கிராமங்களுக்கும் அரசு டவுன் பஸ் இயக்கப்படும், திட்டக்குடியில் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படும், வாரம் இரு முறைகள் என இந்த அலுவலகத்தில் நாள் முழுவதும் இருந்து பொது மக்களை சந்திப்பேன் அவர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பேன்.

                லட்சுமணபுரம் சாலை, தொழுதூர் சாலை, புடையூர் சாலை, சாத்தனத்தம் சாலைகள் உட்பட பல்வேறு சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.   பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையம் கொண்டுவருவேன் வெலிங்டன்ஏரி பாசனப்பகுதி விவசாயிகளின் நலனில் அக்கரைசெலுத்துவேன் வெலிங்டன் ஏரிஉட்பட அனைத்து ஏரிகளும் மராமத்து செய்யப்படும் அனைத்து வாய்க்கால்களும் சீரமைக்கப்படும் 3- 4 மாதங்களுக்கு ஒருமுறை என விவசாயிகளை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அரசின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு செல்வேன், கீல்கல்ப்பூண்டி வெள்ளாற்றில் தரைப்பாலம், திட்டக்குடியில் போலீஸ் நிலைய கட்டிடம், தீயணைப்பு நிலையத்தில் குடியிருப்பு வசதி குறித்து நடவடிக்கை எடுப்பேன்.  இவ்வாறு தமிழ்அழகன் கூறினார்.

Read more »

Post poll, Cuddalore Silver beach offers break from monotony


cool splash: People thronging the Silver Beach in Cuddalore on Sunday.

CUDDALORE: 

         There was an unusually large gathering at the Silver Beach here on Sunday. Of course, summer vacation for educational institutions and sultry weather conditions drove the people to the shores to savour the balmy sea breeze and to virtually cool their heels in the waves.

          But another factor that had induced the people to flock to the sea front was the lifting of the month-long police bandobust at the Periyar Government Arts College on Beach Road that served as one of the counting centres in the district and where the Electronic Voting Machines of the four Assembly constituencies — Cuddalore, Panruti, Neyveli and Kurinjipadi — were kept in safe custody in the strong rooms.

          The police blocked the Beach Road and diverted the traffic through alternative routes. Hence, the round-the-clock presence of security personnel acted both as physical and psychological barriers for the holiday-makers that in turn acted as a disincentive in making a trip to the Silver Beach. Now, with the 30-day long suspense over the outcome of the elections having ended, the people felt relieved and decided to take the well-deserved break from the monotony of the mundane chores and spend some time with family and friends on the beach.

           The mercury too was soaring from 25 degree Celsius (at dawn) to 36 degree Celsius. In the midst of dog days, known for harsh weather, and power cuts lasting three hours at a stretch in a day the people really needed a respite from the unrelenting heat. And, unfailingly, the Silver Beach provided them the much-needed recreational avenue. The police and the fire personnel posted at the beach head had a tough time in keeping the eager visitors from getting deeper into the sea.

          There were a number of whistle-blowers who kept a watch and cautioned the over-enthusiastic persons from venturing into the sea beyond the safe limit. Vendors of eatables made a brisk business. There were the ubiquitous stray dogs that shared the sandy stretch of the beach with the visitors who had to constantly shoo away the intruding quadruples from sniffing their food packets. The visitors feel that particularly on a crowded day as today the officials should keep a strict watch on the snack vendors, particularly, the cooking medium they use and how often they change it. The fish-shaped fountains that greet the visitors to the beach do not spout any water and remain dry.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior