உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 28, 2010

கோவை பாரதியார் பல்கலைக்கழகம்


 
                 பாரதியார் பல்கலைக்கழகம் 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் கோவை மருதமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. கோவையை சுற்றியுள்ள சுமார் 90 கல்லூரிகள் இந்த பலைகலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 
 
பாரதியார் பல்கலைக்கழகத் துறைகளில் உள்ள படிப்புகள்: 
 
                  எம்.ஏ பிரிவில் தமிழியல், சமூகவியல், மக்கள் தொகைக் கல்வி, கம்ப்யூடேஷனல் லிங்க்விஸ்டிக்ஸ் ஆகிய பாடங்கள் போதிக்கப்படுகின்றன.  எம்.எஸ்சி பிரிவில் எலக்ட்ரானிக் மீடியா (கல்வி), செயல்முறை உளவியல், கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவர அறிவியல், விலங்கு அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன்ஸ், பயோ இன்ஃபர்மேடிக்ஸ், அட்வான்ஸ்டு கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ், இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி, பைனான்ஸ் அண்டு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், மெடிக்கல் பிசிக்ஸ் ஆகிய பாடங்கள் உள்ளன.  எம்.எஸ் சாஃப்ட்வேர் சிஸ்டம்ஸ், எம்.பி.எட்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ ஆகிய சிறப்புப் பாடங்களும் இங்கு உள்ளன.   
 
தொடர்புக்கு: 
 
பாரதியார் பல்கலைக்கழகம்,
மருதமலை, 
கோயம்புத்தூர்  - 641 046. 
 
தொலைபேசி:
 
0422: 2428100, 2422223, 2422234. 
 
இணையதளம்:
 
http://www.b-u.ac.in/

Read more »

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்


                 தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழகம் கடந்த 1971ம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்டது. 

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகள்: 

               இங்கு 4 ஆண்டு பி.எஸ்சி படிப்பில் வேளாண்மை, மனையியல், வனவியல், தோட்டக்கலை ஆகிய 4 பாடப்பிரிவுகள் உள்ளன.கோவை, மதுரை, கிள்ளிகுளம் (தூத்துக்குடி) மற்றும் நாவலூர் குட்டப்பட்டு (திருச்சி) ஆகிய இடங்களில் வேளாண்மைப் படிப்பு உள்ளது.பெரியகுளத்தில் தோட்டக்கலைப் படிப்பும் , மேட்டுப்பாளையத்தில் வனவியல் படிப்பும் மதுரையில் மனையியல் படிப்பும் கற்றுத்தரப்படுகின்றன.இப்பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் காரைக்கால் (புதுவை) பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண்மை மற்றும் ஆய்வு மையத்தில் பி.எஸ்சி., வேளாண்மைப் பாடம் போதிக்கப்படுகிறது. கலவை ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரியில் சுயநிதி அடிப்படையின் கீழ் பி.எஸ்சி வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறைப் பாடங்கள் போதிக்கப்படுகின்றன.குமுளூரில் (திருச்சி) பி.டெக் வேளாண் பொறியியல் படிப்பு உள்ளது. மாறி வரும் கல்விச் சூழலுக்கேற்ப சுயநிதிப் பிரிவின் கீழ் 3 பி.டெக் பாடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கோவையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் உணவுப் பதப்படுத்துதல் தொழில்நுட்பம், வேளாண்மை உயிர் தொழில்நுட்பம், தோட்டக்கலைத்துறை ஆகிய பிடெக் பாடப்பிரிவுகள் உள்ளன.ஏப்ரலில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகள் மூலம் இங்குள்ள பிஎஸ்சி, பிடெக் பாடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.வேளாண் பொருளாதாரம், வேளாண் விரிவாக்கம், வேளாண் நுண்ணுயிரியல், உழவியல், வேளாண் பூச்சியியல், பயிர் வினையியல், பயிர் பெருக்கம் மற்றும் மரபியல், பயிர் நூற்புழுவியல், பயிர் நோயியல், விதை அறிவியல் மற்றும் தொழிநுட்பம், மண் வேதியியல், கரும்பு உற்பத்தி, தோட்டக்கலை, பட்டு வளர்ப்பு, உயிர் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அறிவியல், சத்துணவு, வனவியல் ஆகியவற்றில் எம்.எஸ்சி பாடங்கள் உள்ளன.எம்.இ பாடத்தில் பண்ணை இயந்திரவியல், உயிர் சக்தியியல், வேளாண் பொருள்களைப் பதனிடுதல், மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு ஆகிய பிரிவுகள் உள்ளன. எம்.பி.ஏ பாடமும் உண்டு. 

தொடர்புக்கு:  

பதிவாளர்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் - 641003. 

தொலைபேசி: 

0422-6611210, 6611200 

இணையதள முகவரி: 

http://www.tnau.ac.in/

Read more »

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்

 

                      சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா நகரில் அழகப்பா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. கடந்த 1956ம் தொடங்கப்பட்டது. மேலைநாட்டு வேலை வாய்ப்பைக் கருத்தில் கொண்டு பன்னாட்டு வணிக நிர்வாகவியலில் முதுகலைப் பட்டப் படிப்பை வழங்கி வருகிறது காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம். 

அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகள்:

                    மகளிரியல் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் (எம்.டபிள்யூசிஏ.,) வணிகவியல் (எம்.காம்.,), இயற்பியல், கணிதம் பாடங்களில் (எம்.எஸ்சி.,), தமிழ் (எம்.ஏ.,), கணினியியல் (எம்.சிஏ.,) வணிக நிர்வாகவியல் (எம்.பி.ஏ.,), பன்னாட்டு வணிக நிர்வாகவியல் (எம்.ஐ.பி.ஏ.,), வங்கியியல் (எம்.பி.எம்.,), நிர்மசெயலறிவியல் (எம்.சி.எஸ்.,), வேதியியல் ஆய்வக வேதியியல், டெக்ஸ்டைல் மற்றும் எலக்ட்ரோ வேதியியல்.மேலும் (எம்.எஸ்சி.,), கடலியல் மற்றும் கடலோரவியல் (எம்.எஸ்சி.,), உடற் கல்வியியல் (எம்.பி.எட்.,), உயிரித்தொழில் நுட்பவியல் (எம்.எஸ்சி.,). பிஎட், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயன்ஸ் (மாலை நேரப் படிப்பு), எம்பில் தமிழ், கல்வியியல், நிர்ம செயலறிவியல், மகளிரியல், தொழிற்சாலை வேதியியல், கணிதவியல், கணினி அறிவியல், இயற்பியல், வங்கி மேலாண்மை, வணிகவியல் மற்றும் உடற்கல்வியியல், கடலியல் மற்றும் கடலோரவியல். 

முதுநிலைப் படிப்புகள் (வீக்-என்ட் புரோகிராம்): 

            எம்எஸ்சி வேதியியல், எம்.சி.ஏ. டிப்ளமா -ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபி.இதுதவிர, பல்வேறு துறைகளில் பிஎச்டி ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன. 

தொடர்புக்கு: 

 பதிவாளர்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம் - 630 003. 

தொலைபேசி: 

 04565 -228080 முதல் 228095 வரை

இணையதள முகவரி: 
 

Read more »

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்


      
             திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கடந்த 1982 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் தற்போது சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 

பாரதிதாசன் பல்கலைக்கழகத் துறைகளில் உள்ள படிப்புகள்:

 தமிழ்:  

எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி.;  

ஆங்கிலம்: 

எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி.;  

பொருளாதாரம்: 

எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி.;  

வணிகவியல்:  

எம்.பில்., பிஎச்.டி.;  

சமூகவியல்:  

எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி.; 

சமூகப் பணி:  

எம்.எஸ்.டபிள்யு., எம்.பில்., பிஎச்.டி.; 

வரலாறு:  

எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி

கணிதம்:  

எம்.எஸ்சி., பிஎச்.டி.;  

இயற்பியல்:  

எம்.எஸ்சி., எம்.பில்., பிஎச்.டி.;  

வேதியியல்: 

எம்.எஸ்சி., எம்.பில்., பிஎச்.டி.; பிளான்ட் சயன்ஸ்: எம்.எஸ்சி. (லைப் சயன்ஸ்- ஒருங்கிணைந்த 5 ஆண்டுப் படிப்பு), எம்.எஸ்சி. (பிளான்ட் பயோடெக்னாலஜி);  

அனிமல் சயன்ஸ்: 

             எம்.எஸ்சி. (அனிமல் பயோடெக்னாலஜி),  பிஎச்.டி.; பயோடெக்னாலஜி: எம்.எஸ்சி. (பயோடெக்னாலஜி), பிஎச்.டி.;

மைக்ரோபயாலஜி: 

                   எம்.எஸ்சி. (மைக்ரோபயாலஜி), பிஎச்.டி. வயதுவந்தோர், தொடர் மற்றும் விரிவாக்கக் கல்வி மையம்: எம்.ஆர்.டெக். (மாஸ்டர் ஆப் ரூரல் டெக்னாலஜி), எம்.பில். (வயதுவந்தோர்- தொடர்கல்வி), பிஎச்.டி. (வயதுவந்தோர் -விரிவாக்கக் கல்வி). 

உடற்கல்வி: 

                      யோகா மையம்: உடற்கல்வியில் எம்.பில். (பகுதிநேரம், முழுநேரம்), பிஎச்.டி. (பகுதிநேரம், முழுநேரம்), யோகா கல்வியில் டிப்ளமா. கல்வித் தொழில்நுட்பம்: எம்.எட்., எம்.பில்., பிஎச்.டி., விடியோகிராபியில் டிப்ளமா. 

ஸ்கூல் ஆப் எனர்ஜி: 

              எம்.டெக். (எனர்ஜி கன்சர்வேஷன் அன்ட் மேனேஜ்மென்ட்).  

புவியியல்: 

             எம்.எஸ்சி. (அப்ளைடு ஜியாக்ரபி), பிஎச்.டி. ஜியாலஜி: எம்.பில்., பிஎச்.டி., ஜியாக்ரபிகல் இன்பர்மேஷன் சிஸ்டம்-ல் முதுநிலை டிப்ளமா.தொலையுணர்வு மையம்: எம்.டெக். (ஜியாலஜிகல் ரிமோட் சென்சிங்), ரிமோட் சென்சிங் மற்றும் ஜியோஇன்பர்மேட்டிக்ஸ்-ல் அட்வான்ஸ்ட் முதுநிலை டிப்ளமா. 

பொறியியல் தொழில்நுட்பப் பள்ளி: 

             பி.டெக். -இன்பர்மேஷன் டெக்னாலஜி, பயோடெக்னாலஜி, பெட்ரோகெமிகல் டெக்னாலஜி, பார்மசூட்டிகல் பொறியியல் -தொழில்நுட்பம். 

தொலைநிலைக் கல்வி: 

          தொலைநிலைக் கல்வியில் சான்றிதழ் படிப்புகள், முதுநிலை பட்டயப்படிப்புகள், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளன.  

தொடர்புக்கு: 

 பதிவாளர்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சிராப்பள்ளி. 

தொலைபேசி:  

0431 - 2407071, 2407074.

இணையதள முகவரி:

http://www.bdu.ac.in/

Read more »

பாரதியார் பல்கலைக்கழகம்


               
                  பாரதியார் பல்கலைக்கழகம் 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் கோவை மருதமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. கோவையை சுற்றியுள்ள சுமார் 90 கல்லூரிகள் இந்த பலைகலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.  
 
பாரதியார் பல்கலைக்கழகத் துறைகளில் உள்ள படிப்புகள்: 
 
          எம்.ஏ பிரிவில் தமிழியல், சமூகவியல், மக்கள் தொகைக் கல்வி, கம்ப்யூடேஷனல் லிங்க்விஸ்டிக்ஸ் ஆகிய பாடங்கள் போதிக்கப்படுகின்றன.  எம்.எஸ்சி பிரிவில் எலக்ட்ரானிக் மீடியா (கல்வி), செயல்முறை உளவியல், கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவர அறிவியல், விலங்கு அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன்ஸ், பயோ இன்ஃபர்மேடிக்ஸ், அட்வான்ஸ்டு கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ், இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி, பைனான்ஸ் அண்டு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், மெடிக்கல் பிசிக்ஸ் ஆகிய பாடங்கள் உள்ளன.  எம்.எஸ் சாஃப்ட்வேர் சிஸ்டம்ஸ், எம்.பி.எட்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ ஆகிய சிறப்புப் பாடங்களும் இங்கு உள்ளன.  
 
தொடர்புக்கு: 
 
பாரதியார் பல்கலைக்கழகம்,
மருதமலை, 
கோயம்புத்தூர்  - 641 046. 
 
தொலைபேசி:   
 
       0422: 2428100, 2422223, 2422234. 
 
இணையதளம்:  
 

Read more »

தொழிலாளர் நலத்துறை இணையதளம் துவக்கம்


                  தொழிலாளர் நலத்துறை மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களின் செயல்பாடுகளை, மின் ஆளுமை திட்டத்தின் கீழ் செயல்படும் வகையில், புதிய இணையதள துவக்க விழா சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடந்தது. www.labour.tn.gov.in  என்ற புதிய இணைய தளத்தை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார். தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான, "தொழிலாளர் நல்லுறவு மலர்' என்ற காலாண்டு செய்தி மலரையும் அன்பரசன் வெளியிட்டார். பின், தொழிலாளர் நல ஆணையரகத்தின் நான்காவது தளத்தில், புதிதாக சீரமைக்கப்பட்ட பார்வையாளர் அறையையும் திறந்து வைத்தார். புதிய இணையதளம் மூலம் தொழிலாளர் நலத்துறை மற்றும் பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் குறித்த விவரங்களை, பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். நிகழ்ச்சியில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலர் பிரபாகர்ராவ் மற்றும் தொழிலாளர் நல ஆணையர் ஹன்ஸ்ராஜ் வர்மா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Read more »

மின்னணு முத்திரைத் தாள் மூலம் ஆவணங்களை பதிவு செய்வது எப்படி?

             புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்னணு முத்திரைத் தாள் மூலம் ஆவணங்களை பதிவு செய்யும் நடைமுறைகளை பத்திரப் பதிவுத் துறை அறிவித்துள்ளது. இத்திட்டம் அமலில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் வசூல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த வசூல் மையங்களை அணுகி அவர்கள் கொடுக்கும் ஒரு படிவத்தினை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதன் பிறகு, முத்திரைத் தீர்வையை பணமாகவோ, வரைவோலையாகவோ, பண மாற்றம் மூலமாகவோ இந்த மையங்களில் செலுத்தலாம். மாதிரி சான்றிதழ் ஒன்றினை பெற்று தாங்கள் அளித்த விவரங்களை பொதுமக்கள் சரிபார்துக் கொள்ளலாம். அதற்கான வசதிகளும் இம்மையங்களில் உள்ளன. பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த மின்னணு முத்திரைச் சான்றினை பெற்று ஆவணம் தயார் செய்து பதிவு அலுவலரிடம் தாக்கல் செய்யலாம்.

Read more »

ரூ.1,247 கோடி நிகர லாபம்; என்.எல்.சி. சாதனை


          
            கடந்த நிதி ஆண்டில் ரூ. 1,247 கோடி நிகர லாபம் ஈட்டி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.) சாதனை படைத்துள்ளது என்று அந் நிறுவனத்தின் தலைவர் ஏ.ஆர். அன்சாரி தெரிவித்தார். 
 
இதுகுறித்து என்.எல்.சி நிறுவனத்தின் தலைவர் ஏ.ஆர். அன்சாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது: 
 
                 என்.எல்.சி. நிறுவனம் பழுப்பு நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கடந்த 54 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவு சாதனை படைத்துள்ளது.என்.எல்.சி. நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் 2490 மெகாவாட். இதில் 1,153 மெகாவாட் அளவு மின்சாரம் தமிழகத்துக்கு மட்டும் விநியோகிக்கப்படுகிறது. 
 
மின்னுற்பத்தியில் சாதனை: 
 
                      கடந்த நிதி ஆண்டில் (2009-10) மட்டும் ரூ. 4,121 கோடி அளவுக்கு வணிகம் செய்துள்ளது. நிகர லாபமாக ரூ. 1,247 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதி ஆண்டை விட 51.9 சதவீதம் கூடுதலாகும். சிறப்பான திட்டமிடுதல் மூலம் அதிகபட்ச உற்பத்தித் திறனை தொழிலகங்களில் பெற்றதன் மூலம் அதிக லாபம் ஈட்டப்பட்டுள்ளது.என்.எல்.சி. தனது 4 சுரங்கங்கள் மூலம் கடந்த ஆண்டு 223 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. இதே போல அனல் மின் நிலையங்கள் மூலம் கடந்த ஆண்டு 1,765 யூனிட் மின்னுற்பத்தி செய்கிறது. இது நிறுவனத்தின் வரலாற்றில் அதிகபட்ச உற்பத்தி அளவாகும். கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால பங்கு ஈவுத் தொகையாக 10 சதவீதம் அறிவிக்கப்பட்டு,ரூ. 167.77 கோடி ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இறுதி ஈவுத் தொகையாக 10 சதவீதம் வழங்க என்.எல்.சி. இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் பங்கு ஈவுத் தொகைக்காக ரூ. 335.54 கோடி செலவிடப்படும். 
 
கட்டுமான திட்டங்கள்:
 
                  நெய்வேலி இரண்டாம் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டத்தில்  250 மெகாவாட் மின் உற்பத்திப் பிரிவு ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்றொரு 250 மெகாவாட் மின் உற்பத்திப் பிரிவு வரும் ஜூன் மாதத்தில் செயல்படத் தொடங்கும். ராஜஸ்தானில் உள்ள பர்சிங்சர் மின் நிலைய கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் ஜூன் 7-ம் தேதி இது தொடங்கி வைக்கப்படும். மற்றொரு மின்னுற்பத்திப் பிரிவு ஜூலை மாதத்தில் தொடங்கப்படும்.  
 
காற்றாலை மின்னுற்பத்தி: 
 
                   தமிழகத்தில் செங்கோட்டை, கம்பம் ஆகிய இடங்களில் காற்றாலைகளை நிறுவி 50 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டத்துக்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. நெய்வேலி நகரியத்தில் சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி செய்து உள்ளூர் தேவைக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
 
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின்னுற்பத்தி எப்போது? 
 
                        தமிழக மின் வாரியமும், என்.எல்.சி.யும் இணைந்து கூட்டு முயற்சியாக என்.எல்.சி. தமிழ்நாடு மின் நிறுவனத்தை அமைத்துள்ளன. இதன் மூலம் தூத்துக்குடியில் ரூ. 5 ஆயிரம் கோடி (ஆயிரம் மெகாவாட் திறனுள்ள) புதிய அனல் மின் நிலையத்தை அமைக்கும் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்த மின் நிலையத்தில் மின் உற்பத்தியின்போது கொதிகலன்களுக்கு எரிபொருளாக பழுப்பு நிலக்கரிக்கு மாற்றாக நிலக்கரியைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவு வரும் 2012-13-ல் மின் உற்பத்தியைத் தொடங்கும். இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பின் என்.எல்.சி. நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் 4290 மெகாவாட் அளவுக்கு உயரும். 
 
ஜெயங்கொண்டம் மின் திட்டம்: 
 
               தமிழகத்தில் ஜெயங்கொண்டம் பகுதியில் ஆண்டுக்கு 135 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் சுரங்கம் அமைக்கவும், 1,600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்னைகள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. 
 
 புதிய திட்டங்கள்:  
 
                    அதிநவீன மின்னுற்பத்தி திட்டத்தின் கீழ் சென்னை அருகே செய்யூரில் (4,000 மெகாவாட்) ரூ. 20 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய மின் நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுதல், உற்பத்தி, நிர்வகித்தல் திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதுதவிர ரூ. 2 ஆயிரம் கோடியில் தமிழகத்தின் கடலோரப் பகுதியில் மற்றொரு மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இதற்கு 2,000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசிடமும் கோரப்பட்டுள்ளது.  நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு போதிய ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் விதிகளை என்.எல்.சி. மிகவும் கவனத்துடன் பின்பற்றுகிறது என்றார் அன்சாரி. என்.எல்.சி. இயக்குநர்கள் கே. சேகர் (நிதி),ஆர். கந்தசாமி (திட்டங்கள்) உடனிருந்தனர்.

Read more »

என்எல்சி ஊதியமாற்று ஒப்பந்தம்: மீண்டும் இழுபறி


நெய்வேலி:

                  என்எல்சி தொழிலாளர்களின் புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறி நிலையிலேயே உள்ளது.  சென்னையில் உள்ள என்எல்சி இல்லத்தில் நிர்வாகத்துக்கும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படாமல் நீடித்து கொண்டே வருகிறது. என்எல்சி தொழிலாளர்களுக்கு 01-01-2007 முதல் வழங்க வேண்டிய புதிய ஊதிய விகிதத்தின் அடிப்படையிலான ஊதியம் இதுவரை வழங்கப்படாததால், என்எல்சி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் பலச்சுற்று பேச்சுவார்த்தை நடத்தின.  இப்பேச்சில் பல விஷயங்களில் முரண்பாடான நிலை தொடர்ந்து நீடித்துவந்தது. இந்நிலையில் பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நிர்வாகம் சென்னையில் உள்ள என்எல்சி இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்பேச்சுவார்த்தையில் பொது அலவன்ஸ் 40 சதவீதமாகவும், சுரங்கத் தொழிலாளர்களுக்கு கூடுதலாக 12 சதவீதமும், ஹாட்ஷீட் மற்றும் டிராக்ஷிப்டிங் போன்ற அலவன்சுகள் 100 சதவீத உயர்வு அளிக்க முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ஊதிய நிர்ணய அலகீட்டுத் தொகைகுறித்து என்எல்சி தலைவர் அன்சாரியுடன் பேசி தீர்வு காண்பது எனவும், பதவி உயர்வு தொடர்பாக குழு அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டிப்பதாகவும், அதனால் தொழிற்சங்க நிர்வாகக் குழுக் கூட்டத்தைக் கூட்டி அதன் ஒப்புதலைப் பெற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

                        அதன்படி புதன்கிழமை சென்னையில் தொழிற்சங்கங்களின் சிறப்பு நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிர்வாகக் குழுவில் சரியான ஒப்புதல் கிடைக்காததால் மீண்டும் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read more »

Aid for marine ornamental fish breeding

CUDDALORE:

              The Asian Development Bank has sanctioned a sum of Rs. 36.2 lakh for implementing the marine ornamental fish breeding scheme in four coastal villages of Cuddalore district, according to Collector P. Seetharaman.

           In a statement released here, Mr. Seetharaman said that villages such as Velingirayanpettai, Periyakuppam, Parangipettai and Thammanampettai had been identified for the purpose. A memorandum of understanding had been signed with the Annamalai University, Chidambaram, for imparting training. At least 10 persons, either members of self-help groups or others, in each village would be selected for undergoing the training in marine ornamental fish breeding, Mr. Seetharaman said. Fish lings would be obtained from the Marine Fisheries Research Centre located near Mandapam in Rameswaram district. People of these villages had come forward to donate either a building or a vacant site measuring 1,200 sq.ft., for conducting the training programme. Fish breeding would fetch a monthly income of Rs 5,000 per head, the Collector said.

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் ஐகோர்ட் நீதிபதி நாகப்பன் சுவாமி தரிசனம்

விருத்தாசலம் :   

                   கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில் கலெக்டர் சீத்தாராமன், டி.ஐ.ஜி., மாசானமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். நேற்று காலை ஐகோர்ட் நீதிபதி நாகப்பன் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வருகை தந்தார். அவரை கோவில் செயல் அலுவலர் நாகராஜன், டி.எஸ்.பி., ராஜசேகரன், வக்கீல் மெய்கண்டநாதன், விஜயகுமார்  வரவேற்றனர். கொளஞ்சியப்பருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் நீதிபதி நாகப்பன், சுவாமியை வழிபட்டார். கோவிலின் சிறப்புகளை செயல் அலுவலர் எடுத்து கூறினார்.  பின்னர் நீதிபதி நாகப்பன் பிராது கட்ட விருப்பம் தெரிவித்ததையடுத்து  வெள்ளை தாளில் தனது குறைகளை எழுதி முனியப்பர் சுவாமியின் முன்புறம் உள்ள வேலில்   கட்டினார்.

Read more »

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

                      சென்னை எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறுவனத்தில் 2010-2011ம் ஆண்டிற்கு மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் மக்கள் தொடர்பு துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் சென்னை எம்.ஜி. ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் 2010-2011ம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு முழு நேர மூன்று ஆண்டுகளுக்கான பட்டயப் படிப்புகளில் சேர்வதற்கு மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதில் இயக்குதல், திரைக்கதை, வசனம் எழுதுதல் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு பட்டயத்திற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

                      திரைப்பட தொழில் நுட்பம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு பட்டயம் (ஒளிப்பதிவு), திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் தொலைக் காட்சி தயாரிப்பு பட்டயம் (படம் பதனிடுதல்),  திரைப்பட தொழில் நுட்பம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு பட்டயம் (ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல்) சேர்வதற்கு மேல்நிலையில் இயற்பியல், வேதியியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் அல்லது மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியியல் பட்டய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படத்தொகுப்பு மற்றும் தொலைக் காட்சி தயாரிப்பு பட்டயத்தில் சேர்வதற்கு மேல்நிலை கல்வியில் ஏதேனும் ஒரு கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விபரங்களுக்கு 044-22542212 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். இத்தகவலை எம்.ஜி. ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்துள்ளார்.

Read more »

"கள்' இறக்க அனுமதி கோரி சாலை மறியல் 34 பெண்கள் உட்பட 102 பேர் கைது

திட்டக்குடி :

                   திட்டக்குடியில் "கள்' இறக்க அனுமதி வழங்கிட வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 34 பெண்கள் உட்பட 102 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நாடார் பேரவை சார்பில் "கள்' இறக்க அனுமதி வழங்கவும், நீதிபதி சிவசுப்பிரமணியம் கமிட்டியின் அறிக்கையினை உடனடியாக வெளியிட வேண்டும். கடந்த தேர்தலின்போது முதல்வர் கருணாநிதி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும், மதுபான பட்டியலிலிருந்து கள்ளை நீக்கிட வேண்டும். கள் இறக்கும் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியும் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

                   அதன்படி நேற்று காலை 10.20 மணிக்கு மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமையில், துணை தலைவர் அண்ணாத்துரை, நாடார் உறவின்முறை சங்க தலைவர் விருத்தாசலம் குருசாமி, செயலாளர் மாரியப்பன், மகளிரணி மாவட்ட தலைவர் மகாராணி, ஆலோசகர் அலமி முன்னிலையில் பஸ் நிலையத்திலிருந்து நெடுஞ்சாலையில் தாலுகா அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று, ஆர்ப்பாட் டம் நடத்தினர். தொடர்ந்து நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். திட்டக்குடி சப்- இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். முன் அறிவிப்பின்றி சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்து பாதிப்பினை ஏற்படுத்திய பிரிவில் 34 பெண் கள் உட்பட 102 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Read more »

குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளி 90 சதவீதம் தேர்ச்சி

குறிஞ்சிப்பாடி : 

                     குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளி 90 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மெட்ரிக் தேர்வு எழுதிய 545 மாணவ, மாணவிகளில் 489 பேர் தேர்ச்சி பெற்றனர். 90 சதவீதம் தேர்ச்சி ஆகும். மாணவி நிர்மலாதேவி 483 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், சவுமியா 477 மதிப்பெண் பெற்று  இரண்டாமிடத்தையும், மாணவர் நிர்மல் 476 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் மற்றும் தேர்ச்சிக்காக உழைத்த ஆசிரியர்களையும், பள்ளி செயலாளர் செல்வராஜ், தலைமை ஆசிரியர் நமச்சிவாயம் பாராட்டினர்.

Read more »

டி.நெடுஞ்சேரி அரசு பள்ளி 93 சதவீதம் தேர்ச்சி


ஸ்ரீமுஷ்ணம் : 

                 ஸ்ரீமுஷ்ணம் அருகே டி.நெடுஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி 93 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. நடந்த முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த டி.நெடுஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி 93 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் படித்த மாணவர்கள் அதிக அளவில் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில் நாகார்ஜுன் 474 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். கதிரவன் 473 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், 472 மதிப்பெண் பெற்று எழிலரசி மூன்றாமிடமும் பிடித்துள்ளனர். மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் வீரபாண்டியன் பாராட்டினார்.

Read more »

தூய இதய பள்ளியில் மாணவர்கள் சாதனை

சேத்தியாத்தோப்பு : 

               வடக்குப்பாளையம் தூய இதய மேல்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்களை மாணவர்களே பெற்று சாதனை படைத்துள்ளனர். சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்குபாளையம் தூய இதய மேல்நிலைப் பள்ளியில் 287 மாணவர்கள் எஸ்.எஸ். எல்.சி., தேர்வு எழுதினர். இதில் 268 மாணவர்கள் தேர்ச்சி பெற்று பள்ளி 93 சதவீதம் தேர்ச்சி அடைந் துள்ளது. 470 மதிப்பெண் பெற்ற விக்னேஷ் முதலிடத்தையும், 467 மதிப் பெண் பெற்ற சக்திமுருகன் இரண்டாமிடத்தையும், 464 மதிப்பெண் பெற்ற செந்தமிழன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். தேர்வு எழுதிய மாணவர்கள் 48 பேர் 400க்கும் அதிகமான மதிப்பெண் கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.மாணவர்களை தலைமை ஆசிரியர் உலகநாதன் பாராட்டினார்.

Read more »

சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவிக்கு பாராட்டு

கடலூர் :  

                 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலூர் முதுநகர் சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவி அனுப் பிரியா 478 மதிப் பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலூர் முதுநகர் சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் தேர்வு எழுதிய மாணவிகளில் அனுப்பிரியா  478 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்.  443 மதிப்பெண்கள் பெற்ற அபிநயா இரண்டாமிடமும், 441 மதிப் பெண்கள் பெற்ற சாதனா மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், தாளாளர் கஸ்தூரி சொக்கலிங்கம், சேர்மன் சிவக்குமார், நிர்வாக அதிகாரி சிவராஜ் பாராட்டினர்.

Read more »

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் 5000 பேர் பதிவு

கடலூர் : 

                  கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கா நேற்று பிளஸ் 2 மாணவர்கள் ஏராளமானோர் குவிந்தனர். கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில்  25 ஆயிரத்து 272 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 9 ஆயிரத்து 226 மாணவர்களும், 10 ஆயிரத்து 686 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 912 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் நேற்று பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் மூலம் வழங்கப்பட்டன.

                         மதிப்பெண் சான்றிதழ் பெற்ற பெரும் பான்மையான மாணவர்கள் உயர் கல்வி படிப்பில் சேர்வதற்கு முன் வேலை வாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்வது வழக்கம். இதற்காக கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் மாணவ, மாணவிகள் சிரமமின்றி பதிவு செய்ய வசதியாக இந்தாண்டு கடலூர், சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம் என நான்கு மையங்களில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை முதல் நான்கு மையங்களிலும் பதிவு செய்வதற்காக பிளஸ் 2 மாணவ,மாணவிகள் ஏராளமானோர் தங்கள் பெற்றோர்களுடன் பதிவு மையத் தில் குவிந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் தள்ளுமுள்ளு இல்லாமல் இரவு வரை பதிவு செய்யப் பட்டது. நேற்று கடலூர் மாவட்டத்தில் நான்கு பதிவு மையங்களிலும் 5 ஆயிரம் பேர் பதிவு செய்தனர்.

Read more »

போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம்


விருத்தாசலம் : 

                       விருத்தாசலத்தில் போலீசாரை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். வட்டக்குழு உறுப்பினர் சந்திரசேகர், சிவஞானம் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் எம்.எல்.ஏ., லதா கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் பழையப்பட்டினம் கிராமத்தில் அம்பேத்கர் சிலை மீட்பு வழக்கு நடத்தி வெற்றி கண்ட இளைஞர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் திட்டமிட்டு போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி போலீசாரை கண்டித்து பேசினர். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர் தனசேகரன், மூசா, வட்ட செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் திரு அரசு, மாவட்ட குழு அசோகன், ராஜேஷ் கண்ணா உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

விருத்தாசலம் அருகே பட்டா கேட்டு சாலை மறியல்: பொது மக்கள் கல்வீச்சில் இன்ஸ்பெக்டர் படுகாயம்

விருத்தாசலம் : 

                     விருத்தாசலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அகற்ற முயன்ற போது பொதுமக்கள் கல் வீசி தாக்கியதில் இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்தார்.

                          கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பெரிய வடவாடி கிராமத்தில் 50க்கும் மேற் பட்ட காலனி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இலவச பட்டா கேட்டு பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர்.இந்நிலையில் பெரிய வடவாடி குளத்தின் அருகில் இருந்த ஐந்து ஏக்கர் இடத்தை தனி நபர் ஒருவர் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்தார். இதை அறிந்த  காலனி மக்கள், இது புறம்போக்கு இடம், தனி நபர் எப்படி ஆக்கிரமிப்பு செய்யலாம் என கேட்டு விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் நேற்று மதியம் 3.45 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.

                       மங்கலம்பேட்டை இன்ஸ் பெக்டர் திருமால் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகுமாறு கூறினர். வருவாய்த் துறை அதிகாரிகள் வந்து பதில் சொன்னால் தான் கலைந்து செல்வோம் என கூறி, மறியலைத்  தொடர்ந்தனர்.டி.எஸ்.பி., ராஜசேகரன், தாசில்தார் ஜெயராமன் பொதுமக் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சமன் செய்யும் இடத்தில் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

                  தாசில்தார் ஜெயராமன் அதுகுறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். இதற்கிடையில் டி.எஸ்.பி., ராஜசேகரன், இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் மறியல் செய்தவர்களை கலைக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட சிலர், போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டர் திருமாலுக்கு முகத்தில் ரத்தக் காயம் ஏற்பட்டது. சக போலீசார், இன்ஸ்பெக்டர் திருமாலை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்,  டி.எஸ்.பி., ராஜசேகரன் எச்சரிக்கை விடுத்ததையடுத்து பொது மக்கள்  கலைந்து சென்றனர். மறியலால் விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் நேற்று மாலை 3.45 மணி முதல் 5.45 மணி வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Read more »

தீ விபத்து: ரூ.1 லட்சம் சேதம்

திட்டக்குடி :

                     திட்டக்குடி அருகே திடீர் தீ விபத்தில் மூன்று கடைகள் எரிந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது. திட்டக்குடி அடுத்த பெருமுளை முத்தையா சுவாமி கோவிலுக்கு எதிர்புறம் கண்ணன், ஆறுமுகம் ஆகியோர் டீ கடை வைத்திருந்தனர். நேற்று மதியம் 1 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு டீ கடைகளும் எரிந்து சாம்பலானது. காற்று பலமாக வீசியதால் அருகிலிருந்த கருணாநிதி என்பவருக்கு சொந்தமான கடையின் முன்புற கொட்டகையும் சேர்ந்து எரிந்தது.தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, கிராம மக்களுடன் இணைந்து தீயை அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தில் கடையிலிருந்த இரண்டு பிரிட்ஜ் மற்றும் பாத்திரங்கள் உட்பட சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. தீ விபத்திற்கான காரணம் குறித்து திட்டக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Read more »

பண்ருட்டி அருகே ரேஷன் அரிசி, பருப்பு கடத்திய டிரைவர் உட்பட 2 பேர் கைது

பண்ருட்டி : 

                       பண்ருட்டி அருகே ரேஷன் அரிசி, பருப்பு  கடத்திய மினி வேன் டிரைவர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன் தலைமையில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் புரு÷ஷாத்தம்மன்,  வட்ட வழங்கல் அலுவலர் சுப்ரமணியன், சப் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் உள்ளிட்ட குழுவினர் பண்ருட்டி பகுதியில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

                     அப்போது கொக்குப்பாளையம் கிராமத்தில் ரோந்து சென்ற போது தெற்கு தெருவில் டாடா ஏசி டி.என்.31 எச்.8916 எண்ணுள்ள வாகனத்தை சோதனை செய்தனர்.அதில், பொதுவினியோக திட்ட அரிசி 50கிலோ எடை கொண்ட 20 சிப்பம், குண்டு உளுந்து 4 சிப்பம் கடத்தியது தெரியவந்தது.   ரேஷன் பொருட்கள் கடத்திய பண்ருட்டி சென்னை சாலையை சேர்ந்த சக்திவேல்(34),  செக்குமேட்டு தெருவை சேர்ந்த டிரைவர்   ஜெயராஜ்(24) ஆகிய இருவர் மற்றும் ரேஷன் பொருட்கள் டாடா ஏசி வேனையும்  பறிமுதல் செய்தனர். வாகனம் மற்றும் ரேஷன் பொருட்கள் மதிப்பு ஒன்றரை லட்சமாகும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior