உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 12, 2011

கடலூர் மாவட்ட மக்களின் கோரிக்கை: அடுத்தகட்ட வாக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பம்

கடலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள்  கோரிக்கையான   அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஒருவழியாக அனுமதி கிடைத்து விட்டது. நமது வலைப்பூவில் கடலூர் மாவட்ட மக்களின் கோரிக்கை என்ற தலைப்பில் நாம் நடத்திய  வாக்கெடுப்பில் மருத்துவக் கல்லூரி,  மாநகராட்சி, பாதாள சாக்கடை திட்டம்,     என்ற கோரிக்கைகளை முன் வைத்தோம், அதை ஏற்று  வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி. குறிப்பாக மருத்துவக் கல்லூரிக்கு வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி. 

இன்றோடு அந்த வாக்கெடுப்பை முடித்துக்கொள்வோம்.

முடிவுகள்

1 . மருத்துவக் கல்லூரி        - வாக்களித்தவர்கள் 78
2. மாநகராட்சி                        - வாக்களித்தவர்கள் 57
3. பாதாள சாக்கடை              - வாக்களித்தவர்கள் 76


நமது அடுத்தகட்ட வாக்கெடுப்பு இன்று  முதல் ஆரம்பம்  

1. பல்கலைக்கழகம்  
2 . சட்டக் கல்லூரி 
3 . தகவல் தொழிற் நுட்பப் பூங்கா 
மீண்டும் உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள், நம் சிறு முயற்சிக்கு நிச்சயம் பலம் கிடைக்கும்.

Read more »

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு

        டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.  நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 1,089 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை 2009 நவம்பர் 15-ம் தேதி வெளியானது. 

            இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஏப்ரல்11-ம் தேதி நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் பிப்ரவரி 2-ம் தேதி முதல் நேர்முகத் தேர்வில் பங்கேற்க அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படவுள்ளன.


Read more »

மதுரை காமராஜர் பல்கலைக்கழக எம்.எஸ்சி., தேர்வு முடிவு வெளியீடு

      மதுரை காமராஜர் பல்கலையில் நவம்பரில் நடந்த எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி (சி.பி.சி.எஸ்., அல்லாத) பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை, www.mkuniversity  என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள், மதிப்பெண் பட்டியல் வரும் வரை காத்திராமல், இணையதளத்திலேயே அதனையும், விண்ணப்பத்தையும் பெற்று அனுப்பலாம். ஜன., 28க்குள் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இத்தகவலை தேர்வாணையர் ராஜியக்கொடி தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூர் அருகே மீன்பிடி துறைமுகத்திற்கு எதிர்ப்பு

கடலூர் : 

            கடலூர் அருகே புதுச்சேரி மாநில எல்லையில் அமைக்கப்பட்டு வரும் மீன்பிடி துறைமுக திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. 

              புதுச்சேரி மாநிலம் முள்ளோடையில் இருந்து கிழக்கே 4 கி.மீ., தொலைவில் கடலோரத்தில் உள்ளது புதுக்குப்பம் மீனவ கிராமம். இக்கிராமத்திற்கும், கடலூர் மாவட்டம் சுபா உப்பலவாடி கிராமத்திற்கும் இடையில் உப்பனாறு ஓடுகிறது. மழை வெள்ளக் காலங்களில் பெண்ணையாற்றில் பெருகும் வெள்ள நீர் சுபா உப்பலவாடிக்கும், தாழங்குடாவிற்குமிடையே உள்ள முகத்துவாரம் வழியாக கடலில் வடிய வைப்பது வழக்கம். 

               வெள்ளம் வடிந்த சில நாட்களில் கடல் அலையால் இந்த முகத்துவாரம் தாமாகவே தூர்ந்து விடும். வெயில் காலங்களில் கடல்நீர் அதிகளவு உட்புகாமல் தடுக்கப்பட்டு விவசாயத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. தற்போது புதுக்குப்பம் மீனவ கிராமத்தில், புதுச்சேரி அரசு மீன்பிடி துறைமுகம் அமைத்து வருகிறது. இதற்காக இரு மாநில எல்லைக்கு மத்தியில் உள்ள மணல் திட்டுகளை அகற்றி ஆழப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் வழியாக கடல் நீரை உட்புகச் செய்து, அதன் வழியாக விசைப் படகுகள் உப்பனாற்றுக்குள் நுழைந்து மீன் விற்பனை தளத்திற்கு வந்து செல்லும்படி அமைக்கப்படுகிறது. 

                 இதன் காரணமாக உப்பனாற்றின் இரு கரையோரமும் பயிர் செய்து வரும் விவசாய நிலங்கள், கடல் நீரால் பாதிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக சுபாஉப்பலவாடி, நாணமேடு, மூர்த்திக்குப்பம், மதிகிருஷ்ணாவரம், கன்னியக்கோயில் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் முழுவதும் பாதிக்கும். அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கடல் நீர் அதிகளவில் உட்புகுந்து விவசாய நிலங்கள் உவர் நிலமாக மாறும் அபாயம் உள்ளது. இதனால் புதுச்சேரி, கடலூர் மாவட்ட எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மீன் பிடி துறைமுகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

                  விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியை சேர்ந்த நல்லாட்சிக்கான கூட்டமைப்பு சார்பில் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். இருப்பினும் அரசு இதுவரை செவி சாய்க்காததால் 30 கிராம மக்கள் ஒருங்கிணைந்து போராட தயாராகி வருகின்றனர். இது தொடர்பாக வரும் 29ம் தேதி பாகூரில் மாநாடு நடைபெறவுள்ளது. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

                   இதற்கிடையே சுற்றுச்சூழல் அமைப்பை சேர்ந்த ஸ்ரீதரன் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில் மீன்பிடி துறைமுகத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கியுள்ளார். புதுச்சேரி அரசு இப்பிரச்னை மீது முறையான நடவடிக்கை எடுக்காவிடில் விவசாயிகளின் போராட்டம் தவிர்க்க முடியாததாகி விடும்.

Read more »

புற்று நோயை கட்டுப்படுத்த உயிர் வேதியியல் துறை மூலம் மருந்து கண்டுபிடிக்க வேண்டும்; மத்திய மந்திரி நாராயணசாமி பேச்சு

 புற்று நோயை கட்டுப்படுத்த

 

 உயிர் வேதியியல் துறை மூலம் மருந்து கண்டுபிடிக்க வேண்டும்;

 

 மத்திய மந்திரி நாராயணசாமி பேச்சு

 
சிதம்பரம்:

                 சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் மற்றும் உயிர் தொழில் நுட்பவியல் துறை சார்பில் இயற்கை பொருட்கள் மற்றும் உயிர் மருத்துவ தொழில் நுட்பம் என்னும் தலைப்பில் 3 நாட்கள் நடக்கும் சர்வதேச கருத்தரங்கு தொடக்க விழா பல்கலைக்கழக லிப்ரா அரங்கில் நடந்தது.

விழாவுக்கு துணைவேந்தர் டாக்டர் ராமநாதன் தலைமை தாங்கினார். புதுடெல்லி தேசிய மூலிகை கழக ஆலோசகர் லவேக்கர் சிறப்புரையாற்றினார்.உயிர் வேதியியல் துறை தலைவர் புகழேந்தி வரவேற்றார். அறிவியில் துறை முதல்வர் கண்ணப்பன், கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குனர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கருத்தரங்கை மத்திய திட்டமிடல் , கலாசாரம் மற்றும் பாராளுமன்ற விவகார துறை மந்திரி நாராயணசாமி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது
மத்திய திட்டமிடல் , கலாசாரம் மற்றும் பாராளுமன்ற விவகார துறை மந்திரி நாராயணசாமி கூறியதாவது:-

                 உயிர் வேதியியல் தொழில்நுட்ப துறைக்கு 2011-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை ரூ.1222 கோடி தேவைப்படுகிறது. இருப்பினும் நாம் அனைத்து விதமான ஆராய்ச்சிக்கும் பட்ஜெட்டில் ஒரு சதவீதற்கு மேலாக ஒதுக்கீடு செய்கிறோம்.சென்னையில் நடந்த அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன்சிங், அறிவியல் ஆராய்ச்சியில் அதிக அளவில் ஈடுபடுகிறோம். ஆனால் இந்த ஆராய்ச்சியின் பலன்கள் மக்களிடையே சென்றடைவதில் காலதாமதம் ஏற்படுகிறது என்று கூறினார். இதே கருத்தை தான் நானும் கூறுகிறேன். பரிசோதனை கூடங்களில் செய்யப்படும் ஆராய்ச்சியின் பயன்கள் மக்களுக்கு உடனடியாக சேர வேண்டும்.இந்தியாவை பொருத்தவரை 3 விஷயங்களில் நாம் கவனத்தை செலுத்த வேண்டியதுள்ளது. இருதய நோய், புற்றுநோய், நீரிழிவுநோய் ஆகிய நோய்களினால் நாம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறோம்.

                     இந்த நோய்களை கட்டுப்படுத்த உயிர் வேதியியல் துறை மூலம் கூடுதல் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும்.மக்கள் தொகை அடிப்படையில் ஆராய்ச்சிக்கு நோய்கள் சவாலாக உள்ளது. குறிப்பாக மலைவாழ் மக்கள் அவர்களுக்கு கண்கள் தெரியவில்லை என்பது கூட தெரியாமல் உள்ளனர். இவர்களுக்கும் உயிர் வேதியியல் துறை மூலம் இதை சரி செய்ய வேண்டும். இந்திய எம்.பி.க்கள் கமிட்டி குழு விண்வெளி சம்பந்தமான ஆராய்ச்சி அறிக்கையை பிரிட்டீஷ் எம்.பி.க்களிடம் கொடுத்த போது அவர்கள் இந்த அறிக்கைகளை விஞ்ஞான ரீதியில் உள்ளதாக பாராட்டினர். ராமர் பிள்ளை கண்டுபிடித்த மூலிகை பெட்ரோல் கற்பூரம், மண்எண்ணை, சில தழைகளை கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது.

                    இதை தவறு என்பதை நாங்கள் நிரூபித்து உள்ளோம். 6 ஆராய்ச்சி நிறுவனங்கள் விண்வெளி, அணுசக்தி துறையில் நான் உறுப்பினராக உள்ளேன்.இதில் அண்ணா மலை பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மேற்கொள்ள இருந்தால் அதனை நிறைவேற்றி தர ஏற்பாடு செய்வேன்.இந்தியாவில் 6 இடங்களில் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட உள்ளது.உயிர் வேதியியல் துறைக்கு ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சல் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

                  பிற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது நமது நாட்டில் மருந்து விலை குறைவாக உள்ளது. மலேரியா, யானைக்கால் போன்ற நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்துகள் கிராமப்புற அளவில் இன்னும் சென்றடையவில்லை.இதை கிராமப்புறங்களில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மத்திய இணை மந்திரி நாராயணசாமி பேசினார்.

                 ஆய்வு கட்டுரைகள் விழாவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ், மலேசியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து 25-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும், இந்தியாவில் பிற மாநிலங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும் கலந்து கொண்டனர்.இதில் 300-க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. விழாவில் இணை பேராசிரியர் சுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அதிகாரி செல்வம் உள்பட துறை பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Read more »

Free ‘pongal' packages go scarce

CUDDALORE: 

           The free ‘pongal' package announced by the government for ration card-holders has gone scarce, and, so also the free dhotis and saris to be distributed through fair price shops in Cuddalore district.

         For instance, a salesperson at the Manjakuppam fair price shop here claims that for over 1,000 cards attached to the shop, he has received the supply for only 700 cards, and is not sure when the fresh supply would arrive.

        Another fair price shop at Venugopalapuram has denied card-holders free dhotis, which they have received for the past two years. Such complaints are widespread all over the district.

         Even the additional sheets to be attached to ration cards to extend their validity are in short supply and the fair price shops are awaiting official direction in this regard. District Supply Officer S. Kalyanam acknowledged the fact that the number of ‘pongal' packages fell short of the actual number of cards. There are 6,61,189 lakh cards in circulation in Cuddalore district.

Fake cards

            Earlier, during the cent per cent verification, thousands of bogus cards were eliminated. However, in course of time, 17,000 of them had come back into circulation and this could have resulted in the shortage. The package would be distributed to the card-holders in a couple of days, he said. As for non distribution of free dhotis and saris to the beneficiaries of last year, Mr. Kalyanam said that in all 6.38 lakh free dhotis and equal number of saris were supplied for free distribution. This was meant for those living below the povertyline or those having a monthly income of less than Rs. 2,000. Going by that criterion, allotment of dhotis and saris was more than sufficient and if there was any lapse, it should be at the fair price shop level, Mr. Kalyanam said.

            A special tahsildar, in charge of the public distribution system, said on condition of anonymity that there were variations in the “A” register maintained in fair price shops and the actual number of ration cards in circulation. An opinion had gained ground that there existed a nexus between salespersons and those possessing bogus cards to get priority over the supplies and only the remaining stock was being shared with the genuine card-holders. The salespersons were aware that genuine card-holders were meek to protest and hence, they exploited the situation. The demand for the additional sheets would be met soon.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior