உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 24, 2010

படாத பாடுபடும் பண்ருட்டி பாதசாரிகள்


பண்ருட்டி கடலூர் சாலையில் கடைக்காரர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நடைபாதையும், சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களும்.
பண்ருட்டி:
 
                பண்ருட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நான்கு முனை சந்திப்பில் இருந்து பஸ் நிலையம் வரையிலுமான கடலூர் சாலையின் இரு பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளை அப்பகுதியைச் சேர்ந்த கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
 
                        பண்ருட்டியில் அதிக அளவு மக்கள் வசிப்பதாலும்,சுற்றுப் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் தங்கள் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொள்ள பண்ருட்டி வந்து செல்வதாலும் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகளில் பலர் இறந்தும், காயம் அடைந்தும் பாதிக்கப்படுகின்றனர்.
 
                     இதனால் விபத்தில் இருந்து பொது மக்களை காக்க, நான்கு முனை சந்திப்பில் இருந்து பஸ் வெளியில் வரும் வழி வரையிலான கடலூர் சாலையின் இரு பக்கத்திலும் நடைபாதை அமைத்து தர வேண்டும் என, 7 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய நகர்மன்றத் தலைவரான பஞ்சவர்ணமும், நகர்மன்ற உறுப்பினர்களும் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற அப்போதைய மாவட்ட ஆட்சியர் ககன்தீப்சிங்பேடி நடைபாதை அமைக்க ஆட்சியர் நிதியில் இருந்து ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.பாதசாரிகள் விபத்தில் சிக்காமல் நடந்து செல்லவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் அமைக்கப்பட்ட நடைபாதை தற்போது வியாபாரிகளின் பிடியில் சிக்கியுள்ளது.மேலும் கடைக்கு முன்னர் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 
 
                       இதனால் குறுகிப் போன சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே நடந்து செல்லும்பொது மக்கள் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். பொது மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல வேண்டும் என்ற நோக்கில் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நடைபாதை. தற்போது கடைக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் மேற்கண்ட சாலையில் விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதையெல்லாம் அறிந்திருந்தும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டிய அரசு அதிகாரிகளும், போக்குவரத்தை சீர்செய்ய வேண்டிய போக்குவரத்து காவலர்களும் எந்தவித நடவடிக்கையும் எடுக்ககாமல் வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சுட்டெரிக்கும் கோடை வெயில்: மர்ம நோய் தாக்கி ஆடுகள் சாவு


கடலூர்:
 
                   சுட்டெரிக்கும் கோடை வெயில் மனிதனை மட்டுமன்றி, ஆடு மாடுகளையும் தாக்குகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கணிசமான அளவுக்கு ஆடுகள் இறந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.கடலூர் மாவட்டத்தில் சுமார் 32 ஆயிரம் மாடுகள், 80 ஆயிரம் வெள்ளாடுகள், 52 ஆயிரம் செம்மரி ஆடுகள் உள்ளன. ஆடு, மாடுகளுக்கு கோடைக்காலம் வந்துவிட்டால், கோமாரி நோய், அடைப்பான் நோய் மற்றும் குட்டைகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரைக் குடிப்பதால் குடல் புழுக்கள் உருவாகி அதனால் நோய்களும் வருகின்றன. இதற்காக கடந்த 3 ஆண்டுகளாக கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுதடுப்பு ஊசிகள் போடப்பட்டு வருகின்றன. குடல் புழுக்களும் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால் கோமாரி, அடைப்பான் போன்ற நோய்கள் பெருமளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக கால்நடை மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அதிக வெப்பம் காரணமாக ஆடுகளுக்கு தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளும் வருகின்றன. இதனால் ஆடுகள் இறப்பதற்கு அதிக வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கிறார்கள்.இந்த ஆண்டு கோடை வெயில் தொடங்கும் போதே வெப்பம் தகிக்கத் தொடங்கி விட்டது. இதனால் ஆடுகளுக்கு தோல் நோய் வேகமாகப் பரவி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
 
                       இந்த நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆடுகளுக்கு ரோமம் உதிர்ந்து விடுகிறது. வெயில் கடுமை காரணமாக இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆடுகளில் நூற்றுக்கு ஒரு ஆடு வீதம் மேய்ச்சலின்போது சுருண்டு விழுந்து, இறந்து விடுவதாக, கடலூர் மாவட்ட ஆடு வளர்க்கும் விவசாயிகள் கூறுகிறார்கள். வெயிலின் கடுமை அதிகரிக்கும்போது இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்கும் என்றும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் முட்டம், பரங்கிப்பேட்டை, முட்லூர், திட்டக்குடி, வெள்ளப்பாக்கம் பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட ஆடுகள், பெரும்பாலும் குட்டிகள் தோல்நோய் தாக்கி இறந்து இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். தேவை தடுப்பூசி 
 
இதுபற்றி மாவட்ட விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன் கூறுகையில், 
 
                      கோடை வெயில் கடுமையாக இருக்கிறது. மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடு, மாடுகளுக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைக்கவில்லை. வாய்க்கால்களில் தண்ணீர் இல்லை. குளம், குட்டைகளில் சிறிதளவு தேங்கிக் கிடக்கும் பாசிபடர்ந்த நீரைக்குடிக்கும் கால்நடைகளுக்கு பல்வேறு வியாதிகள் வருகின்றன. கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கால்நடைகள் இறந்து இருப்பதாக உழவர் மன்றத் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே கால்நடைகளுக்கு விரைவில் தடுப்பு ஊசிபோட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 
இதுகுறித்து கால்நடைத்துறை இணை இயக்குநர் இளங்கோ கூறுகையில்
 
                  ""வெயில் கடுமை தாங்காமல் இத்தகைய தோல் நோய்கள் ஆடுகளுக்கு வருவது உண்டு. ஆனால், இயற்கையாகவே நோய் குணாகி விடும். இறப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் இதுகுறித்து நோய் புலனாய்வுப் பிரிவு மூலம் ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
 
3 லட்சம் டோஸ் நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர் நடேசன் கூறுகையில், 
 
                   ""கோடை வெயில் அதிகரித்து ஆடு, மாடுகள் குட்டைகளில் தேங்கிக் கிடக்கும் நீரைக் குடிக்க நேரிடுவதால் பல நோய்கள் வருகின்றன. தோல் நோய் பெரும்பாலும் தானாகவே குணமாகிவிடும். கோடைக் காலத்தில் கால்நடைகளுக்கு வரும் நோய்களைக் கட்டுப்படுத்த, கடலூர் மாவட்டத்துக்கு 3 லட்சம் டோஸ் தடுப்பு ஊசி மருந்து வர இருக்கிறது. விரைவில் முகாம்கள் நடத்தி தடுப்பூசி போடப்படும்'' என்றார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ஓடத் துவங்கியது விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில்



விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் வெள்ளிக்கிழமை புதிய ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் நிலைய மேலாளர் பாலகிருஷ்ணன்.
                       4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த விழுப்புரம்-மயிலாடுதுறை இடையேயான ரயில் போக்குவரத்து வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே 122 கி.மீ. தூரத்தில் ரூ.270 கோடியில் அகல ரயில்பாதை அமைக்கும் பணி தொடங்க 2006 டிசம்பர் 1-ம் தேதி முதல் ரயில்கள் நிறுத்தப்பட்டன. பணிகள் 2007-ம் ஆண்டு தொடங்கியது.நீண்ட நாள்களாக இழுபறியில் இருந்த இப்பணிகள் நிறைவடைந்து ஆய்வுப் பணிகள் முடிந்தன. இருப்பினும் ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் வழக்குரைஞர் ராஜேந்திரன் தொடுத்த பொது நல வழக்கில் மார்ச் 23-ம் தேதி 4 வாரங்களில் ரயில்களை இயக்குவதாக ரயில்வே நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த காலக்கெடு வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் ரயில் இயக்கப்படுமா, இயக்கப்படாதா என்ற நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் அதிகாரபூர்வமாக ரயில் இயக்கப்படுவது அறிவிக்கப்பட்டது. இதையொட்டி மாலை 6.20 மணிக்கு தென்னக ரயில்வே கூடுதல் பொமேலாளர் பி.கே. ரெட்டி முன்னிலையில் விழுப்புரம் ரயில்நிலைய அலுவலர் கே. பாலகிருஷ்ணன் கொடியசைத்து ரயிலை தொடங்கி வைத்தார்.

                  விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அகல ரயில் பாதையில், நேற்று மாலை முதல் ரயில் போக்குவரத்து துவங்கியது.  விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ., தூரம் மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி முடிவடைந்து, நேற்று மாலை முதல் ரயில் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே முதல் ரயில் நேற்று மாலை இயக்கப்பட்டது. இந்த ரயில் விழுப்புரத்திலிருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.10 மணிக்கு மயிலாடுதுறை சென்றடைந்தது. இன்று முதல் இப்பாதையில் தினசரி மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே மூன்று பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரத்திற்கு பாசஞ்சர் ரயில் காலை 5.30, மாலை 6 மணிக்கு இயக்கப்படும். விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு காலை 6.10 மணிக்கும், மாலை 6 மணிக்கும் இயக்கப்படும். சென்னை எழும்பூரிலிருந்து நாகூருக்கு மயிலாடுதுறை - தஞ்சை வழியாக இன்று முதல் தினசரி நாகூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (எண்.6175) சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.15 மணிக்கு நாகூர் சென்றடையும். நாகூரிலிருந்து நாளை (25ம் தேதி) முதல் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.6176) இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். 



பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

அரிய வகை நூல்களை பார்த்து வியந்த மாணவர்கள்


General India news in detail

              உலக புத்தக தினத்தை முன்னிட்டு, சென்னை கன்னிமாரா நூலகத்தில் அரிய வகை நூல்களின் இரண்டு நாள் கண்காட்சி நேற்று துவங்கியது. மாணவர்களும், பொதுமக்களும் அரிய வகை நூல்களை ஆர்வமுடன் பார்த்து வியந்தனர். ஆண்டுதோறும் உலக புத்தக தினம் ஏப். 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கன்னிமாரா நூலகத்தில் அரிய வகை நூல்களின், இரண்டு நாள் கண்காட்சி நேற்று துவங்கியது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்காட்சியை துவக்கி வைத்தார்.

                 கன்னிமாரா பொது நூலகம் மற்றும் 31 மாவட்ட மைய நூலகங்களை இணைக்கும் திட்டத்தின், முதல் முயற்சியாக கன்னிமாரா நூலகத்திலுள்ள நூல்களின் பட்டியலை இணையதளம் மூலம் அறியும் வசதியையும் அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.முதன் முதலில் (1608ம் ஆண்டு) ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட 'ஹோலி பைபிள்', தமிழில் முதன் முதலில் அச்சேறிய (1781ம் ஆண்டு) 'ஞானமுறமைகளின் விளக்கம் 1,162 பக்கங்கள் கொண்ட சென்னை மாகாணம் பற்றிய நூல்கள்' என மொத்தம் 116 அரிய வகை நூல்கள் இடம்பெற்றுள்ளன.

                  கண்காட்சியில் இடம் பெற்றிருந்த அரிய நூல்கள், பிரமாண்ட நூல்களையும் கண்டு மாணவர்களும், பொதுமக்களும் வியப்புடன் பார்வையிட்டனர். அரிய நூல்கள், எழுதியவர் பற்றிய விவரங்களை மாணவர்கள் குறிப்பெடுத்துச் சென்றனர்.இரண்டு நாள் கண்காட்சி இன்று நிறைவடைகிறது. இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அரியவகை நூல்களை, பொதுமக்கள் பார்க்கலாம் என கன்னிமாரா நூலகம் தெரிவித்துள்ளது.

Read more »

ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வுநாளை நடக்கிறது

General India news in detail
                என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வு, 86 நகரங்களில் நாளை நடக்கிறது. என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி.எம்., - ஐ.ஐ.ஐ.டி.டி.எம்., மற்றும் சில நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் பி.இ.,- பி.டெக்., - பி.ஆர்க்., மற்றும் பி.பிளான் ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடக்கிறது. நாளை காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் இரண்டு தாள்கள் தேர்வு நடைபெறும். இயற்பியல், வேதியியல், கணிதம், ஆப்டிட்யூட், டிராயிங் ஆகிய பகுதிகளில் கேள்விகள் கேட்கப்படும். தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

                    தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களிலும், வெளிநாடுகளில் துபாய் மற்றும் ரியாத்திலும் இத்தேர்வு நடக்கிறது. மொத்தம் 86 நகரங்களில் ஏ.ஐ.இ.இ.இ., தேர்வு நடக்கிறது. இத்தேர்வு முடிவு, ஜூன் 7ம் தேதி வெளியிடப்படும். கடந்த ஆண்டு 10 லட்சம் மாணவர்கள், இத்தேர்வில் பங்கேற்றனர். இந்த ஆண்டும், அதே அளவு மாணவர்கள் ஏ.ஐ.இ.இ.இ., தேர்வில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

புத்தக தின கண்காட்சி

பண்ருட்டி:

                 உலக புத்தக தினத்தை முன்னிட்டு பண்ருட்டி கிளை நூலகத்தில் வெள்ளிக்கிழமை புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் கே.உமாமகேஸ்வரி தினம் ஒரு திருக்குறள் பலகையை திறந்து வைத்தார். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எஸ்.சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார்.  வாசகர் வட்ட தலைவர் தமிழாசிரியர் ஏ.ஏழுமலை திருக்குறள் எழுதும் பலகையை நன்கொடையாக வழங்கினார். விழாவில் கலந்துகொண்ட நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன், ஆணையர் கே.உமாமகேஸ்வரி ஆகியோர் புரவலராக இணைந்தனர். நூலகர் வெ.செல்வராஜ் மற்றும் நூலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நூலகர் மு.செல்வம் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சிதம்பரத்தில் இன்று தீண்டாமை ஒழிப்பு மாநாடு


சிதம்பரம்:

             அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் சாதி மறுப்பு- தீண்டாமை ஒழிப்பு மாநில சிறப்பு மாநாடு சிதம்பரத்தில் (ஏப்ரல் 24) சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது. அனந்தீஸ்வரன் கோயில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு மேடையில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பங்கேற்று உரையாற்றுகிறார். மதுரை ஆதீனம், முனைவர் இரா.கிருத்துதாசுகாந்தி, முனைவர் வே.வசந்திதேவி, வே.ஆனைமுத்து மற்றும் சிந்தனையாளர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். மாநாட்டு குழுத் தலைவர் டி.மணிவாசகம் வரவேற்கிறார். செயலாளர் எம்.சேகர் நன்றி கூறுகிறார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

27-ம் தேதி பந்த் கடலூரில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை

 கடலூர்:

                   விலைவாசி உயர்வைக் கண்டித்து, 27-ம் தேதி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்த இருக்கும் பொது வேலைநிறுத்தம் தொடர்பாக, அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடந்தது. 

கூட்டத்தின் முடிவில் எதிர்க்கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 

                       விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 27-ம் தேதி நடைபெறுவதையொட்டி, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நடந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து உள்ளன. இதற்குக் கண்டனம் தெரிவித்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத்  திரும்பப்பெற வலியுறுத்தியும், உரவிலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தரப்பையும் பாதிக்கும் மின்வெட்டைக் கண்டித்தும், நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 27-ம் தேதி நடத்த 13 கட்சிகள் முடிவுசெய்து உள்ளன.

                  கடலூர் மாவட்டத்தில் கடையடைப்பு, பொதுவேலைநிறுத்தப் போராட்டம் முழுமையாக வெற்றிபெறச் செய்வது என்று, ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கடையடைப்பு- பொது வேலைநிறுத்தத்தை விளக்கி 24, 25 தேதிகளில் மாவட்டம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தவும், தெருமுனைப் பிரசாரங்கள் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக வர்த்தக சங்கங்கள், வாகன உரிமையாளர்கள் ஓட்டுநர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கும், தோழமைக் கட்சிகள் சார்பில் வேண்டுகோள் கடிதம் அளித்து, ஆதரவு கோருவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.26-ம் தேதி அனைத்து நகரங்களிலும் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் திரளாக பங்கேற்று கடைகள் தோறும் நோட்டீஸ் அளித்து ஆதரவு திரட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. ÷அனைத்து தரப்பினரும் பொதுவேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, முழுமையாகப் பங்கேற்று வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றும் தெரிவித்து உள்ளனர். கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை வகித்தார். கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அருண்மொழித்தேவன், செல்வி ராமஜெயம் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் செ.தனசேகரன், மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், இந்தியக் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் டி.மணிவாசகம், துணைச் செயலாளர் எம்.சேகர், மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மசூதிக்கு முஸ்லிம் பெண் வந்ததால் தகராறு கடலூரில் பதட்டம்: போலீஸ் பாதுகாப்பு


கடலூர்: 

               கடலூர் மஞ்சக்குப்பம் மசூதிக்கு முஸ்லிம் பெண் வந்ததால் ஏற்பட்ட தகராறில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். மோதலைத் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.

                 கடலூர் முதுநகரைச் சேர்ந்தவர் முகமது யூனிஸ். இவர் நேற்று மாலை 6 மணிக்கு மோட்டார் பைக் கில் தனது மனைவி பஷீரியாவுடன் புதுச்சேரிக்கு சென்றார். மஞ்சக்குப்பம் மசூதி அருகே வந்த போது 6.30 மணி தொழுகைக்கான அழைப்பு வெளியானது. யூனிஸ் மனைவியை மசூதியின் வெளியில் நிற்க வைத்து மசூதிக்குள் தொழுகைக்கு சென்றார். அப்போது தொழுகை முடிந்து வெளியே வந்த மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் யூனிஸ் மனைவியை பார்த்து எப்படி மசூதிக்கு வரலாம் எனக்கேட்டு சரமாரியாக திட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த பஷீரியா கணவர் யூனிஸ் வந்ததும் நடந்த விவரங்களை தெரிவித்தார். இதுபற்றி தகவல் அறிந்த முதுநகரைச் சேர்ந்த ஜாபர் உள்ளிட்ட நான்கு பேர் மஞ்சக்குப்பம் மசூதிக்குச் சென்று நியாயம் கேட்டனர். இதில் ஏற்பட்ட தகராறில் மசூதியைச் சேர்ந்தவர்கள், ஜாபர் உள்ளிட்ட நான்கு பேரையும் சரமாரியாக தாக்கினர். இதில் ஜாபர் படுகாயமடைந்தார். கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி., ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர். மேலும் அமானுல்லா உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மஞ்சக்குப்பம் பகுதியில் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மது விலக்கு அமல் பிரிவில் ஏலம்


கடலூர்: 

               மது விலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 60 வாகனங்கள் வரும் 26ம் தேதி கடலூர் மது விலக்கு அமல் பிரிவில் ஏலம் விடப்படுகிறது.
 
இது குறித்து கடலூர் மது விலக்கு அமல் பிரிவு அலுவலக செய்திக்குறிப்பு: 

                   கடலூர் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவில் கைப்பற்றப்பட்ட 60 வாகனங் களை ஏலம் எடுப்பவர்கள் இன்று 24ம் தேதி முதல் அலுவலக நேரத்தில் பார்வையிடலாம். 26ம் தேதி காலை 10 மணிக்கு கடலூர் மது விலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் எஸ்.பி., கலால் பிரிவு உதவி ஆணையர், அரசு தானியங்கி மைய பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் ஏலம் விடப்படுகிறது.

                          இரு சக்கர வாகனத்திற்கு 500ம், நான்கு சக்கர வாகனத்திற்கு 5,000 ரூபாயும், முன் பணமாக 26ம் தேதி காலை 8.30 மணிக்கு மது விலக்கு அமல் பிரிவு ஏ.டி.எஸ்.பி., அலுவலகத்தில் செலுத்த வேண்டும். ஏலம் கேட்க வருபவர்கள் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ்புக் இவற்றில் ஏதேனும் ஒன்றின் அசல் மற்றும் நகலையும், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வரவேண்டும். 

          மேலும், தொடர்புக்கு ஏ.டி.எஸ்.பி., 04142-284353, என்ற தொலைபேசியும், பண்ருட்டி மது விலக்கு பிரிவு 297688 மற்றும் 04144-230477 என்ற எண்ணிற்கும் இன்ஸ்பெக்டர் 98423-14114 என்ற மொபைல் எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

புத்தக தின விழா

திட்டக்குடி: 

                      திட்டக்குடி கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. ஓய்வு பெற்ற தமிழாசிரியர் இளவரசன் தலைமை தாங்கினார். முத்து ஜெயராமன் முன்னிலை வகித்தார். நூலகர் ராஜகோபால் வரவேற்றார். டாக்டர் கொளஞ்சி, முத்து கிருஷ்ணன், தங்கவேல், மணிமாறன் வாழ்த்தி பேசினர். இதில் நூலகர்கள் இறையூர் காமராஜர், வீராசாமி, சங்கர், திருமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

டாடா கார்கள் பரிசோதனை முகாம்

 நெய்வேலி: 

                           நெய்வேலி டி.எம்.பி., மோட்டார்சில் டாடா கார்களுக்கான 2 நாள் சிறப்பு பரிசோதனை முகாம் நடக்கிறது. பெரியாகுறிச்சியில் கடலூர் - விருத்தாசலம் மெயின் ரோட்டில் உள்ள டி.எம்.பி., மோட்டார்ஸ் வளாகத்தில் டாடா கார்களுக்கான பரிசோதனை முகாம் நடக்கிறது. இன் றும், நாளை 25ம் தேதியும் நடைபெறும் சிறப்பு பரிசோதனை முகாமில் வாடிக் கையாளர்களின் கார்களுக்கு இலவச பரிசோதனைகளும், சலுகை விலையில் உதிரி பாகங்களும் வழங்கப்படுகிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பாதாள சாக்கடை திட்ட ஆலோசனைக் கூட்டம்


கடலூர்: 

                       கடலூரில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. கடலூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட் டப் பணி தற்போது போக் குவரத்து மிகுந்த நெடுஞ் சாலையான வண் டிப்பாளையம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் இணைப்பு முதல் பிள்ளையார் கோவில் நான்கு முனை சந்திப்பு வரையிலும், திருப்பாதிரிப்புலியூர் பிள்ளையார் கோவில் நான்கு முனை சந்திப்பு முதல் சுப்புராய செட்டி தெரு, சங்கரநாயுடு தெரு பெருமாள் கோவில் வரை குழாய் பதிக்கும் பணி மற்றும் வீடுகளுக்கு இணைப்பு குழாய் பொருத்தும் பணி மேற் கொள்ளப்பட உள்ளது. இப் பணியை விரைந்து முடிக்க வசதியாக போக்குவரத்தை மாற்று வழியில் இயக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஆர்.டி.ஓ., தலைமையில் கடலூர் டவுன் ஹாலில் நடக்கிறது. கூட்டத்தில் எம்.எல்.ஏ., அய்யப்பன், சேர்மன் தங்கராசு, கமிஷனர் குமார், டி.எஸ்.பி., ஸ்டாலின், குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி துறை அதிகாரிகளும், வர்த்தக சங்க நிர்வாகிகள் மற் றும் பொது நல அமைப்பினர் கலந்து கொள்கின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பண்ருட்டி உழவர் சந்தை செயல்பாடு ஆர்.டி.ஓ., தலைமையில் கூட்டம்

 பண்ருட்டி: 

           உழவர் சந்தை செயல் பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டியில் நடந்தது.
 
                   ஆர்.டி.ஓ.செல்வராஜ் தலைமை தாங்கினார். சேர்மன் பச்சையப்பன், தாசில்தார் பாபு, இன்ஸ் பெக்டர் செல்வம், கமிஷனர் உமா மகேஸ்வரி, தோட்ட கலைத்துறை உதவி இயக்குனர் ராமலிங்கம்,வேளாண் துணை அலுவலர் ரவி சேகர், போக்குவரத்து இன்ஸ் பெக்டர் தணிகாசலம், வட்டார வேளாண் இயக்குனர் தனவேல், மோட்டார் வாகன ஆய்வாளர் சுதாகரன், பண்ருட்டி அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் அய்யாசாமி, காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா, செயலாளர் சேகர், ராஜேந்திரன், கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், வரும் 1ம்தேதி முதல் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் விற்பனை செய்யும் விவசாய விளை பொருட்களை உழவர் சந்தைக்கு கொண்டு செல்ல வியாபாரிகள் ஒத்துழைப்பது. அனைத்து அரசு டவுன் பஸ்களும் உழவர் சந்தை வழியாக இயக்குவது. சாலைகளில் கொய்யா, பலா, காய்கறி ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்யும் விவசாய பொருட்கள் உழவர்சந்தை மூலம் விற்க நடவடிக்கை மேற்கொள்வது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

டில்லியில் உள்ளாட்சி விழா ஊராட்சி தலைவர் பங்கேற்பு


புவனகிரி:

            டில்லியில் நடக்கும் தேசிய உள்ளாட்சிகள் தின விழாவில் ஒரத்தூர் ஊராட்சி தலைவர் பங் கேற்கிறார்.
 
                  கீரப்பாளையம் ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சி தலைவர் செல்வராஜன். ஒருங்கிணைந்த முழு ஊரக சுகாதார திட்டத்தை நன்கு செயல்படுத்தியதற் காக கடந்த 2007ம் ஆண்டு நிர்மல் கிராம் புரஷ்கார் விருது கிடைத்தது. அதனைத்தொடர்ந்து ஒரத் தூர் ஊராட்சியில் செலவினங்களை குறைத்து வருவாய் பெருக்கம் செய்தமைக்ககாகவும், பதிவேடுகள் மற்றும் கணக்குகள் சரியாக பராமரித்தமைக்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நன்கு செயல்படுத்தியமைக்காகவும் மாவட்ட நிர்வாகம் ஒரத்தூர் ஊராட்சியை சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்தனர். அதனையொட்டி திட்ட அலுவலர் ராஜஸ்ரீ பரிந்துரையின் பேரில் கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் டில்லியில் இன்று (24ந் தேதி) நடைபெறும் தேசிய உள்ளாட்சிகள் தின விழாவில் ஊராட்சி தலைவர் செல்வராஜன் பங்கேற்கிறார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

போலி உயில் தயாரித்து மோசடி தந்தை கைது; மகனுக்கு வலை

 கடலூர்: 

                      சிதம்பரத்தில் போலி உயில் தயாரித்து நில மோசடி செய்ய முயன்ற வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டார். மகனை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் பாண்டியன் (60). இவரது மகன் முருகன் (35). பாண்டியன் சகோதரர்கள் செல்வராஜ், லட்சுமணன், குமார் மற்றும் தாய் ஆண் டாள்.

                இவர்கள் அனைவரும், சிதம்பரம் செங்காட்டான் தெருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கிருஷ்ணசாமிக்கு (63) கடந்த 2004ம் ஆண்டு ஏப்.30ம் தேதி இரண்டு ஏக் கர் நிலத்தை 2 லட்சம் ரூபாய்க்கு கிரயம் எழுதிக் கொடுத்தனர். இந்நிலையில் பாண்டியன், முருகன் இருவரும் விற்ற இரண்டு ஏக்கர் நிலத்தை முருகனின் தாத்தா கணேசப்பிள்ளை, முருகன் பெயருக்கு உயில் எழுதி கொடுத்ததாக பொய்யான ஆவணம் தயார் செய் தனர். உயிலில் 1982ம் ஆண்டு வக் கீல் ராஜாமான் சிங் என்பவரின் கையெழுத்தை போட்டு, அவரது முத்திரையும் போலியாக தயாரித்து போலி உயிலை கிருஷ்ணசாமியிடம் கொடுத்து நிலம் தங்களுக்குத்தான் சொந்தம் என தெரிவித்தனர். இதனையடுத்து கிருஷ்ணசாமி, வக்கீல் ராஜாமான் சிங்கிடம் விசாரித்தபோது உயிலில் உள்ள கையெழுத்து மற்றும் முத்திரை தன்னுடையது இல்லை என்று தெரிவித்தார்.

                          இது குறித்து கிருஷ்ணசாமி சிதம் ரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவின் பேரில் போலீசாரிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத் தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்தினவேல், சப் இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், மகேஸ்வரி ஆகியோர் வழக் குப்பதிந்து நேற்று முன்தினம் பாண்டியனை கைது செய்து சிதம்பரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரது மகன் முருகனை தேடி வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்


கடலூர்: 

                    பணி நிரந்தரம் கோரி கடலூர் மாவட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பென்ஷன் வழங்க வேண்டும். பணியின் போது இறந்தவர் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கிலும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

                      கடலூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் நடந்த போராட்டத்தில் அமைப்பாளர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். செயலாளர் குழந்தைவேல், பொருளாளர் நாகராஜ், நிர்வாகிகள் சந்திரபாலன், சேகர் உட்பட பலர் பங்கேற்றனர். 

திட்டக்குடி: 

                    மாவட்ட செயற்குழு உறுப்பினர் கொளஞ்சி தலைமையில் பொருளாளர் சித்திரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். கடலூர் எஸ்.ஆர்.எம்., ராபின்சன், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாற்று சுமை தூக்கும் பணியாளர்களை அழைத்து போலீசார் உதவியுடன் பணிகளை மேற்கொண்டார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

உண்டியல் உடைப்பு ஆசாமிகளுக்கு வலை


பரங்கிப்பேட்டை: 

                 புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள கோவில் உண்டியலை உடைத்து திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

                  சிதம்பரம் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை போலீஸ் சரகத்திற்குட்பட்ட கடைகளை குறிவைத்து தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதுவரை நான்கு இடங்களில் பூட்டிய கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே அமைந்துள்ள ரேணுகாம்பாள் கோவிலில் மர்ம ஆசாமிகள் உண்டியலை உடைத்து 5 ஆயிரம் ரூபாய் திருடிச் சென்றுள்ளனர். கோவில் அருகே உள்ள சக்கரவர்த்தி என்பவரின் ஓட்டல் கடையை உடைக்க முடியாமல் சென்று விட்டனர். போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள கோவிலில் உண்டியல் உடைத்து திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ஐவதுகுடி ரேஷன் கடை சேல்ஸ்மேன் 'சஸ்பெண்ட்'


திட்டக்குடி: 

                   வேப்பூர் அருகே ரேஷன் கடையில் 'பில்' வழங்கி பொருட்கள் வழங்காத 'சேல்ஸ்மேன்' 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். வேப்பூர் அடுத்த ஐவதுகுடி ரேஷன் கடை 'சேல்ஸ்மேன்' பன்னீர்செல்வம். இவர் ரேஷன் கார்டுகளுக்கான பொருட்களை வழங்காமல் 'பில்' மட்டும் கொடுத்து மக்களை அலைகழித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன், வட்ட வழங்கல் அலுவலர் செழியன், தனி வருவாய் ஆய்வாளர் நசீர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற் கொண்டனர். அதில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் இருப்பு குறைவாக இருந்தது. மேலும் 'பில்' வழங்கி பொருட்கள் வழங்காதது தெரியவந்தது. இதனையடுத்து பன்னீர்செல்வத்தை மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன் 'ஸ்பாட் சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior