உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 14, 2010

64வது சுதந்திர தின வாழ்த்துக்கள்



 இந்திய மக்கள் அனைவருக்கும் எமது உளம் கனிந்த 64 வது சுதந்திர தின வாழ்த்துக்கள். 

"இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்" 

Read more »

நெய்வேலி: காவலர் பற்றாக்குறையால் கண்காணிப்புப் பணியில் சுணக்கம்?


 
நெய்வேலி:
 
            நெய்வேலி நகரில் உள்ள காவல் நிலையங்களில் காவலர்கள் பற்றாக்குறை காரணமாக குற்றச்செயல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன.
 
             25 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நெய்வேலியில் 3 போலீஸ் நிலையங்கள், 1 மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவை உள்ளன. இக் காவல் நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், குறைந்த அளவே காவலர்கள் இருப்பதால் சரியான முறையில் கண்காணிப்பு பணியை தொடர முடியாமல் காவலர்கள் திணறுகின்றனர். 
 
           நெய்வேலி நகர் மற்றும் வடக்குத்து, வடக்குமேலூர், தெற்குமேலூர், வாணதிராயபுரம் உள்ளிட்ட கிராமங்கள் வரை எல்லையைக் கொண்ட நெய்வேலி நகர காவல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 49. ஆனால் தற்போது நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் புதிய நகர்கள் உருவாகி அப்பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியிலும் நெய்வேலி நகர காவல் நிலைய போலீஸôர்தான் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. 
 
            இந்நிலையில் இக்காவல் நிலையத்தில் தற்போது இருக்கும் காவலர்களின் எண்ணிக்கை 35 பேர் மட்டுமே. நாளுக்குநாள் அதிகரித்துவரும் மக்கள் தொகையால் கூடுதல் பாதுகாப்பை மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் காவல் துறையினருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்ட காவல்துறை இதுபற்றி அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை. மேலும் இருக்கின்ற காவலர்களையே 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்துவதால் அவர்கள் இந்த போலீஸ் நிலையத்தைவிட்டு எப்போது வெளியே செல்லலாம் என்ற எதிர்பார்ப்புடனேயே பணிபுரிவதாக காவலர்களில் சிலர் வருத்தமுடன் தெரிவிக்கின்றனர்.
 
           இந்நிலையில் நெய்வேலி நகரியத்தில் பழைய குற்றவாளிகளின் கைவரிசைகள் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ளன. கடைக்காரர்களிடம் மாமூல் வசூல், பெண்களின் தாலிச்சங்கிலியைப் பறிப்பது, வங்கியிலிருந்து பணம் எடுத்துவருவோரை ஏமாற்றி பணம் பறிப்பது, சாலை விதிகளுக்கு புறம்பாக வாகனத்தை ஓட்டிச் செல்லுதல், பெண்களை கேலி செய்தல், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
 
இதுகுறித்து காவலர்கள் சிலர் கூறியது: 
 
                24 மணிநேரமும் ஓய்வின்றி பணி செய்தாலும், ஆங்காங்கே எங்களையும் மீறி சில சம்பவங்கள் நடைபெறுகின்றன. மாவட்ட எஸ்பியோ நெய்வேலிக்கு எதற்காக கூடுதல் காவலர் என்கிறார்? வேறு காவல் நிலையங்களில் உள்ள காவலர்களை நெய்வேலி காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்தால், அலறியடித்துக் கொண்டு ஓடுகின்றனர் என்றனர்.
 
காவலர்கள் பற்றாக்குறைக் குறித்து மாவட்ட எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் கூறியது: 
 
                        மாவட்ட அளவில் பண்ருட்டி தவிர்த்து பரவலாக அனைத்துக் காவல் நிலையங்களிலும் காவலர் பற்றாக்குறை உள்ளது. மற்ற காவல் நிலையங்களை ஒப்பிடுகையில் நெய்வேலி நகரில் காவலர் பற்றாக்குறை என்பது சற்று குறைவுதான். இருப்பினும் மாவட்ட அளவில் போலீஸôர் பற்றாக்குறை இருப்பதால், கூடுதல் காவலர் தேவை குறித்து மேலிடத்துக்கு தெரிவித்துள்ளோம். கூடுதல் காவலர்கள் வந்தவுடன் காவல் நிலைய காவலர் பற்றாக்குறை சரிசெய்யப்படும் என்றார் அவர்.

Read more »

விதை நெல்லுக்கு மானியம் இல்லை: கடலூர் மாவட்ட விவசாயிகள் அவதி


சிதம்பரம்:
 
                   தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் விதை நெல்லுக்கு மானியம் வழங்கப்படாததால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
 
               காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண் விரிவாக்க மையங்களில் சம்பா சாகுபடிக்கான விதைநெல் இருப்பு வைக்கப்பட்டு வழங்கப்படுவதாக வேளாண்துறை அறிவித்துள்ளது. விரிவாக்க மையங்களில் மட்டும் விதைநெல் வழங்கப்பட்டபோது தவறுகள் நடைபெற்றதால் தற்போது அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகள் விதை நெல் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
          இந்நிலையில் விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் ஒரு கிலோ விதை |27. இதற்கு அரசு மானியம் கிலோவிற்கு |5 வழங்குகிறது. ஆனால் விவசாயிகள் விதை நெல்லை பெறச் சென்றபோது அரசு வழங்கும் மானியத் தொகை வழங்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் ஞானவிநாயகர் கோயில், எடையூர், செட்டித்தாங்கல், பிள்ளையார்தாங்கல், அதங்குடி, ரெட்டியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் விதை நெல்லுக்கான மானியம் வழங்கப்படுவதில்லை என தெரிவித்துள்ளனர்.
 
            ""உதவி வேளாண் இயக்குநர் எங்களுக்கு உத்தரவு வழங்காததால் மானியத்தை வழங்க முடியவில்லை. உத்தரவு கிடைத்தவுடன் அத்தொகையை கழித்துக்கொள்வோம்'' என கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்கள் தெரிவிக்கின்றனர். ""அதேபோன்று ஒவ்வொரு விவசாயிக்கும் 5 மூட்டை டிஏபி உரம் வழங்க வேண்டும் என உத்தரவு உள்ளது. ஆனால் விவசாயி ஒருவருக்கு ஒரு மூட்டைதான் உரம் வழங்கப்படுகிறது. 
 
               இது தனியார் உர வியாபாரிகளை ஊக்குவிப்பதாகவே இருக்கிறது. எனவே விவசாயிகளுக்கு தாராளமாக உரங்களை வழங்கவும், விதை நெல்லுக்கான மானியத்தை கழித்து பணத்தை பெற்றுக்கொள்ளவும் கடலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் நாரைக்கால் ஏரிப்பாசன விவசாய சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் கேட்டுக் கொண்டார்.

Read more »

சுனாமி பாதித்த கிள்ளை பகுதியில் குறைந்த மின் அழுத்தம்

சிதம்பரம்:

              குறைந்த மின் அழுத்தம் காரணமாக, சுனாமியால் பாதிக்கப்பட்ட கிள்ளை பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

              கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கிள்ளை பேரூராட்சி சுனாமி மற்றும் நிஷா புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாகும். இங்கு உலகப் புகழ் பெற்ற சுற்றுலா மையமான சுரபுண்ணை காடுகள் அடங்கிய பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. பேரூராட்சி பகுதியில் 26-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் பிச்சாவரம் சுற்றுலா மையம் செல்லும் சாலை, தைக்கால், சிங்காரகுப்பம், சி.மானம்பாடி, பொன்னந்திட்டு, கூழையார் மற்றும் முடசல்ஓடை பகுதிகளில் பல ஆண்டுகளாக குறைந்த மின்அழுத்தத்தினால் தெரு விளக்குகள் எரிவதில்லை. வீடுகளில் இரவில் குண்டுபல்புகள்தான் எரியும் நிலை உள்ளது.

இதுகுறித்து கிள்ளை பேரூராட்சித் தலைவர் எஸ்.ரவிச்சந்திரன் கூறியது:

             கிள்ளை பேரூராட்சியில் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுனாமி குடியிருப்புகள் கட்டப்பட்டு மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது. மேலும் 14-க்கும் மேற்பட்ட சமுதாயக் கூடங்கள் உள்ளன. சுயஉதவிக் குழுக்களால் நடத்தப்படும் கைமுறை காகித ஆலை, தனியாரால் நடத்தப்படும் இதர ஆலைகளும் உள்ளன. இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மின்சார ஓயர்கள் மாற்றப்படாமல் உள்ளதால் மின்சாரம் அதிக அளவில் வீணாகிறது. இதனால் குறைந்த மின்அழுத்தமே கிடைக்கிறது. 

                இதனால் தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதுடன் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்படுகிறது. அடிக்கடி மின்மோட்டார் பழுதடைந்து பேரூராட்சிக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. கிள்ளை பேரூராட்சி மூலம் மாதம் |2 லட்சம் மின்கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. எனவே குறைந்த மின் அழுத்தத்தைப் போக்க கிள்ளை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மின்சார ஓயர்களை மாற்றி, புதிய மின்மாற்றி அமைத்து மின்அழுத்தத்தை சீராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் எஸ்.ரவிச்சந்திரன்.

Read more »

"108 ஆம்புலன்ஸ் சேவை: 5.70 லட்சம் பேர் பயன்"

கடலூர்:

              தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள "108' ஆம்புலனஸ் சேவை மூலம் இதுவரை 5.70 லட்சம் பேர் பயன் அடைந்து உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கடலூரை அடுத்த திருவந்திபுரம் மற்றும் காரைக்காடு ஆரம்ப சுகாதார நிலைங்களில் 30 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டடங்களை புதன்கிழமை இரவு திறந்து வைத்து அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியது:

               தமிழ்நாட்டில் தற்போது "108' ஆம்பிலன்ஸ் சேவை வாகனங்கள் 385 செயல்படுகின்றன. மேலும் 200 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வர இருக்கின்றன. இத்திட்டத்தில் இதுவரை 5.70 லட்சம் பேர் பலன் அடைந்து உள்ளனர். இத்திட்டம் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உருவாக்கிய திட்டம் அல்ல. முதல்வர் கலைஞரின் திட்டம் இது.

                  மத்திய அரசு பல்வேறு மருத்துவத் திட்டங்களுக்கு நிதி வழங்குகிறது. அந்த நிதியில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் "108' ஆம்புலனஸ் சேவை திட்டமும் ஒன்று. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு, 1,000 கோடியில் புதிய கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. கடலூர் அரசு மருத்துவமனையில் 1.75 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர்.அமைச்சர் பன்னீர்செல்வம், 

                காரைக்காடு, சஞ்சீவிராயன் கோயில் ஆகிய ஊர்களில் புதிய ரேஷன் கடைகளைத் திறந்து வைத்தார். சி.என்.பாளையத்தில் 1.28 கோடியில் கட்டப்பட்ட பாலத்தையும், அரசு மேல்நிலைப் பள்ளியையும் திறந்து வைத்தார்.  ராமாபுரத்தில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளையும் அமைச்சர் வழங்கினார்.

Read more »

கடலூர் நகரவாசிகளுக்கு கலர் டி.வி. கிடைக்குமா?

கடலூர்:

           தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டை உள்ள அனைவருக்கும், இலவச கலர் டிவிக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

             இந்த நிதி ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் இலவச கலர் டிவிக்கள் வழங்கப்பட்டு விடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை, கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாலம், சிதம்பரம் ஆகிய 5 நகராட்சிப் பகுதிகள் தவிர, கிராமப் புறங்களிலும் பேரூராட்சிப் பகுதிகளிலும், 90 சதவீதம் மக்களுக்கு, இலவச கலர் டிவிக்கள் வழங்கப்பட்டு விட்டன. ஆனால் நகரப் பகுதிகளுக்கு மட்டும் இன்னமும் வழங்கப்படவில்லை. 

            கடலூர் மாவட்டத்தில் 5 கட்டமாக, 666 கிராம ஊராட்சிகளிலும் 6 பேரூராட்சிகளிலும் இதுவரை 4,50,005 இலவச கலர் டிவிக்கள் வழங்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 26,217 கலர் டிவிக்கள் விரைவில் வழங்கப்படும் என்று, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அரசு விழா ஒன்றில் அண்மையில் தெரிவித்தார். ஆனால் நகராட்சி பகுதிகளில் எப்போது வழங்கப்படும் என்று அமைச்சரும் இதுவரை அறிவிக்கவில்லை, மாவட்ட நிர்வாகம் சார்பிலும் எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.

            கிராமப் புறங்களில் ரேஷன் அட்டை வைத்து இருக்கும் அனைவருக்கும் இலவச கலர் டிவிக்கள் வழங்கப்பட்டன. ஆனால் இதேபோல் நகராட்சிப் பகுதிகளிலும் ரேஷன் அட்டை வைத்து இருக்கும் அனைவருக்கும், இலவச கலர் டிவிக்கள் கிடைக்குமா என்பது கேள்விக் குறியாக உள்ளது. கிராமப் புறங்களைப்போல் அல்லாமல், நகர்ப்புறங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும், இலவச கலர் டிவிக்கள் வழங்கப்படும் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. 

              இதுகுறித்து ஐயம் எழுந்ததன் காரணமாக, கடலூர் நகராட்சி உறுப்பினர்கள் அனைவரும், நகரப் பகுதிகளிலும் ரேஷன் அட்டை வைத்து இருக்கும் அனைவருக்கும் கலர் டிவிக்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை, சில மாதங்களுக்குமுன் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துத் தெரிவித்தனர். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் என்ற வரம்பை கடைப்பிடித்தால், கடலூர் மாவட்ட நகரப் பகுதிகளில் ரேஷன் அட்டை உள்ளவர்களில் சுமார் 30 சதவீதம் பேருக்கு மட்டுமே இலவச கலர் டிவிக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

இதுகுறித்து கடலூர் நகராட்சி உறுப்பினர் சர்தார் வெள்ளிக்கிழமை கூறுகையில், 

            நகராட்சிப் பகுதிகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இலவச கலர் டிவிக்கள் வழங்குவது என்று முடிவு எடுத்தால், கடலூரில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே கலர் டிவிக்கள் கிடைக்கும். எனவே மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, கிராமப் புறங்களைப்போல், ரேஷன் அட்டை உள்ள அனைவருக்கும் கலர் டிவிக்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். மேலும் இது தொடர்பாக பட்டியல் ஒன்றையும் தயாரித்து கடலூர் நகராட்சி அணையரிடம் அளித்து இருக்கிறோம் என்றார்.

இதுகுறித்து நகராட்சித் தலைவர் து.தங்கராசு கூறுகையில், 

              ரேஷன் அட்டை உள்ள அனைவருக்கும் கலர் டிவிக்கள் வழங்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். ஆனால் அரசு என்ன முடிவு எடுத்து இருக்கிறது என்று தெரியவில்லை. எனினும் தேர்தல் அறிவிப்புக்குப் முன்னர், நகராட்சிப் பகுதிகளில் கலர் டிவிக்கள் வழங்கப்பட்டுவிடும் என்று நம்புகிறேன் என்றார்.

Read more »

காட்டுமன்னார்கோவில் பள்ளி ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

சிதம்பரம்:

            காட்டுமன்னார்கோவில் பருவதராஜ குருகுல மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.சின்னமணி 2009-10-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
               இவர் 1979-ம் ஆண்டு முதல் பருவதராஜ குருகுருலம் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை கணிதப் பாட ஆசிரியராக பொறுப்பேற்று, 2004-ம் ஆண்டு முதல் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவரது ஆசிரியர் பணியை பாராட்டி தமிழக அரசு 2007-ம் ஆண்டு ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்தது. மேலும் டாக்டர் அம்பேத்கர் விருதையும் இவர் பெற்றுள்ளார். இவரது கல்விப் பணியைப் பாராட்டி தற்போது மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது செப்டம்பர் 5-ம் தேதி புதுதில்லியில் குடியரசுத் தலைவரால் வழங்கப்படவுள்ளது.

Read more »

விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் நியமனம்

விருத்தாசலம்:

             விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலராக பத்ரூ வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். ஈரோட்டில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக (டி.இ.இ.ஓ) பணியாற்றி வந்த பத்ரூ பதவி உயர்வு பெற்று, விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read more »

கடலூர் டெல்டா பகுதிகளில் குறுவை நெல் அறுவடை தொடக்கம்

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில், குறுவை நெல் அறுவடை தொடங்கியது.

             கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரிலும், மற்ற பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரிலும் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. பிபிடி, வெள்ளைப் பொன்னி, ஏடிடி 38 உள்ளிட்ட நடுத்தர கால நெல் ரகங்கள் நடப்பட்டு இருந்தன. டெல்டா பகுதிகள் தவிர மற்ற இடங்களில் ஆழ்குழாய் கிணற்றுப் பாசனம் மூலம் பரவலாகக் குறுவை பயிரிடப்பட்டு இருந்தது.

               கடலூர் மாவட்டக் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தாலுகாக்கள் மற்றும் கடலூர் தாலுகாவில் ஒருசில பகுதிகளில் 1.5 லட்சம் ஏக்கரில், காவிரி நீர் முறையாகக் கிடைப்பதாக இருந்தால், 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை நெல் சாகுபடி செய்யப்படும். ஆனால் காவிரி நதிநீர் பிரச்னை தொடங்கியது முதல், குறுவை நெல் சாகுபடி டெல்டா பாசன விவசாயிகளுக்குக் கானல் நீராகிவிட்டது. 

                  இந்த ஆண்டும் கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளுக்கு காவிரி நீர் கிடைக்க வில்லை. சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் 12 ஆயிரம் ஆழ்குழாய்க் கிணறுகள் உள்ளன. டெல்டா பாசனப் பகுதிகளில் முதலில் மின்வெட்டு அதிகமாக இருந்த போதிலும், பின்னர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 17 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டது.

             இதனால் ஆழ்குழாய் கிணற்றுப் பாசன வசதி உள்ள 20 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. மேலும் இந்த ஆண்டு ஓரளவுக்கு தென்மேற்குப் பருவமழையும் அவ்வப்போது விவசாயிகளுக்குக் கைகொடுத்தது. கொள்ளிடம் கீழணைக்கும் வீராணம் ஏரிக்கும், அவ்வப்போது மழைநீரும் கிடைத்ததால், குறுவை நெல் சாகுபடி தொய்வின்றிக் காப்பாற்றப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

                  டெல்டா பாசனப் பகுதிகளில் வெள்ளிக்கிழமைமுதல் அறுவடை முழுவீச்சில் தொடங்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். எய்யலூர், கீழ்புளியம்பட்டு, மோவூர் மற்றும் வீராணம் ஆயக்கட்டு பகுதிகள், ஓடாக்கநல்லூர், பூதங்குடி, வாக்கூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குறுவை நெல் அறுவடை தொடங்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். டெல்டா பாசனப் பகுதிகள் அல்லாத கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி பகுதிகளில் குறுவை அறுவடை ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 

                     டெல்டா பகுதிகளில் குறுவை அறுவடை தொடங்கிவிட்டது. ஏற்கெனவே மற்ற பகுதிகளில் நெல் கொள்முதல் செய்வதற்காக 20 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. காவிரி டெல்டா பாசனப் பகுதிகளிலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைவில் திறக்க வேண்டும்.÷குறுவை அறுவடையில் விவசாயிகளுக்கு, நெல்லுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது 60 கிலோ மூட்டை பிபிடி நெல் ரகம் |950-க்கும், வெள்ளைப் பொன்னி |900-க்கும், ஏடிடி 38 ரகம் |650 முதல் |700 வரையிலும் கொள்முதல் செய்யப்படுகிறது என்றார்.

Read more »

மாணவ, மாணவிகள் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்: எம்.எல்.ஏ. அய்யப்பன்

கடலூர்:

             மாணவ, மாணவிகள் திட்டமிட்டு படித்து குடும் பத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண் டும் என எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.

               கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பேச் சுக்கலைப் பயிலரங்கம் மற்றும் செம்மொழி தமிழ் இலக்கிய மன்றத் துவக்க விழா நடந்தது. தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் அர்த்தநாரி வரவேற்றார். தமிழ்த் துறைத் தலைவர் தமிழாழி கொற்கை வேந்தன் தலைமை தாங்கினார். கல் லூரி முதல்வர் (பொறுப்பு) ரங்கநாதன் துவக்கி வைத்தார். புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்டமேற் படிப்பு மைய இணைப் பேராசிரியர் இளங்கோ பேச்சுக் கலை பயிற்சி வழங்கினார். 

எம்.எல்.ஏ., அய்யப்பன் செம்மொழி தமிழ் அறக்கட்டளை சார்பில் தொடர் வைப்பு நிதியாக ஒரு லட்சம் ரூபாயை கல் லூரிக்கு வழங்கிப் பேசுகையில், 

                   "உலகத் தமிழர்களின் ஒரே தலைவர் கருணாநிதி. ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயர, வறுமையில்லா தமிழகத்தை உருவாக்க ஓய் வின்றி உழைக்கிறார். துணை முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக இயங்கி எங்களை மக்கள் பணியில் ஈடுபட ஆலோசனை வழங்கி வருகிறார்.

              அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி, விளையாட்டு, அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்க கல்வித் துறை கூடுதல் நிதி ஒதுக்கி மிகுந்த அக்கறையுடன் இரண்டு அமைச்சர்களை நியமித்து பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆரம்பக் கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கி முதல்வர் சாதனை படைத்து வருகிறார்.

            கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தொடர் வைப்பு நிதியிலிருந்து வரும் வட்டி மூலம் தமிழில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். மாணவ, மாணவிகள் திட்டமிட்டு படித்து முன்னேறி பெருமை சேர்க்க வேண்டும்' என பேசினார். இதேப்போன்று செம்மொழி தமிழ் அறக்கட்டளை சார்பில் தொடர் வைப்பு நிதியாக கடலூர் துறைமுகம் புனித பிலோமினாள் உயர் நிலைப் பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தலா ஒரு லட் சம் ரூபாயை எம்.எல்.ஏ., அய்யப்பன் வழங்கியுள்ளார்.

Read more »

கல்வி அதிகாரியை வரவேற்க வெயிலில் காத்திருந்த மாணவியர்

பரங்கிப்பேட்டை,: 

           முதன்மைக் கல்வி அதிகாரியை வரவேற்பதற்காக, மாணவியர் கடும் வெயிலில் காத்திருந்தனர். 

            கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சாமியார்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் 10 மற் றும் பிளஸ் 2 பொதுத் தேர் வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நாகார்ஜுனா பவுண்டேஷன் சார்பில் நேற்று பரிசு வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டுவதற்காக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி அழைக்கப் பட்டிருந்தார். 

             காலை 10 மணிக்கு வருவதாக இருந்த அவரை வரவேற்க மாணவியர், பள்ளி நுழைவாயிலில் வரிசையாக நிறுத்தப்பட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலணி கூட அணியாமல் நிற்க வைக்கப்பட்டிருந்தனர். சுடுமணலில் நிற்க முடியாமல் மாணவியர் அவதிக்குள்ளாயினர்.
              ஒரு வழியாக 11 மணிக்கு வந்த முதன்மைக் கல்வி அதிகாரியை வரவேற்ற பின், "சீட்'டில் உட்காரச் செல்ல முயன்ற மாணவியரிடம், விழா முடியும் வரை நிற்க வேண்டும் என ஆசிரியர்கள் கட்டளையிட்டனர். மர நிழலில் நின்று ஓய்வெடுத்த பின், மீண்டும் 12 மணிக்கு விழா முடியும் வரை நிற்க முடியாமல் அவதியுடன் மாணவியர் நின்றிருந்தது பரிதாபமாக இருந்தது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனைகள் திறப்பதில்லை

கடலூர்:

            மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனைகள் சரிவர திறக்கப்படுவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

                 வேளாண் துறை சார்பில் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நேற்று கடலூர் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் (வணிகம் மற்றும் விற்பனை) தனவேல், தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் அமிர்தலிங்கம், கால்நடைத்துறை இணை இயக்குனர் கணேசன் மற்றும் விவசாயிகள் பங்கேற் றனர்.
 
ராமமூர்த்தி: 

          குணமங்கலம் நேரடி கொள்முதல் நிலையத்தில் இரவு நேரத்தில் மட்டுமே எடை போடுகின்றனர். பகலில் எடை போட நடவடிக்கை எடுக்க வேண்டும். தராசு மற்றும் எடைக்கற்கள் 2007-08ம் ஆண்டில் முத்திரையிடப்பட்டுள்ளது.

இணை இயக்குனர் இளங்கோவன்: 

            புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

வேல்முருகன்: 

               சேத்தியாத்தோப்பில் கால்நடை மருத்தவமனையில் டாக்டர்கள் சரியாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஒரு மணி நேரத்தில் சென்று விடுவதால் மாடுகளுக்கு சினை ஊசி போட முடியவில்லை. கிராமப் பகுதிகளில் இருந்து 8 கி.மீ., தூரத்திற்கு மாடுகளை ஓட்டி வர முடியவில்லை. அதனால் வாரத்திற்கு ஒருநாள் ஒவ்வொரு கிராமத்திலும் சினை ஊசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தட்சணாமூர்த்தி: 

           தூக்கணாம்பாக்கம், சி.என். பாளையம், கண்ணாரப் பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் கால்நடை மருத் துவமனைகள் சரியாக திறப்பதில்லை. டாக்டர்களும் வருவதில்லை. இதனால் கால் நடை வளர்ப்பு குறைகிறது. சமீபத்தில் வீசிய சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்.
 
இளங்கோவன்: 

               65 ஏக்கர் வாழை சேதமடைந் துள்ளது. அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிதி வந்ததும் வழங்கப்படும்.

பஞ்சாட்சரம்: 

             மரவள்ளி, வெண்டை போன்ற தோட்டப் பயிர்களில் சப்பாத்திப் புழு தாக்குதல் உள்ளது. செம்மை நெல் சாகுபடிக்கு 3,000 ரூபாய் மானியத்தை பணமாக வழங்க வேண்டும்.
 
ராமலிங்கம்: 

              கிராமப்புறங்களில் நடமாடும் கால்நடை மருத்துவ மையம் ஏற்படுத்த வேண்டும். வேளாண் பொறியியல் துறை சர்பில் வழங்கப்படும் கருவிகள் குறித்த விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும்.

Read more »

சத்துணவு பணியாளர்களை முழு நேர பணி நிரந்தர அறிவிப்பு வெளியிட முதல்வருக்கு கோரிக்கை

விருத்தாசலம்: 

              சத்துணவு பணியாளர்களை முழு நேர பணி நிரந்தரம் செய்து சுதந்திர தினத்தில் அறிவிக்கக் கோரி முதல்வருக்கு சத்துணவுப் பணியாளர் சங்கம் வேண்டுகோள் விடுத் துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு சத்துணவுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் விஜயபாண்டியன் முதல்வர் கருணாநிதிக்கு விடுத்துள்ள வேண்டுகோள்: 
                   சத்துணவு அமைப்பாளர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 60 ஆயிரம் பேர் உரிய கல்வித் தகுதியுடன் 27 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிகின்றனர். தமிழக அரசின் தினக் கூலி, தொகுப்பூதியம் பெற்று 10 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் ஒரு லட்சம் பேர் கடந்த நான்கு ஆண்டுகளில் பணி வரையறை செய்துள்ளது. எனவே வரும் சுதந்திர தின உரையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை முழு நேர பணி நிரந்தரப்படுத்தி பணி வரையறை செய்து நிலையான காலமுறை ஊதியம் வழங்க அறிவிக்கவேண்டும். சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு சம ஊதியம் வழங்கிடவும், ஓய்வூதிய விதிப்படி அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியமாக வழங்க அறிவிக்க வேண்டும்.

Read more »

குறிஞ்சிப்பாடியில் இலங்கை அகதிகள் காவடி எடுத்து நேர்த்திக்கடன்

குறிஞ்சிப்பாடி: 

              குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவிலில் ஆடி செடல் திருவிழாவில் இலங்கை அகதிகள் ஊஞ்சல் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

              கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் உள்ள புத்துமாரியம்மன் கோவிலில் நேற்று ஆடி வெள்ளியில் செடல் விழா நடந்தது.  கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் சுவாமி  பல் வேறு அலங்காரத்தில் வீதியுலாவும், சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது.  9ம் நாள் திருவிழாவாக செடல் விழா நடந்தது. விழாவில் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் ஊஞ்சல் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத் தினர். இன்று நடைபெறும் தேரோட்டத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் வடம் பிடித்து துவக்கி வைக்கிறார்.

Read more »

கடலூர் பெண்ணையாற்றங்கரையில் கொலை செய்து எரிக்கப்பட்ட நபர் யார்?

கடலூர்: 

           கடலூர் பெண்ணையாற்றங்கரையில் கொலை செய்து முகம் எரிக்கப்பட்ட வாலிபர் யார் என்பது குறித்து துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்
.
             கடலூர் பெண்ணையாற்றங்கரையில் நேற்று முன்தினம்  25 வயது மதிக் கத்தக்க வாலிபரின் உடல் முகம் மற்றும் மார்பு பகுதி எரிந்த நிலையில் கிடந்தது.  இறந்தவரின் தலை மற்றும் உடலில் பல இடங்களில் கத்தி வெட்டுக் காயங்கள் உள்ளன. கொலை செய்யப்பட்ட நபர் அடையாளம் தெரியக்கூடாது என்பதற் காக முகத்தை எரித்துள்ளது தெரியவந்துள்ளது. கொலையான நபர் கைலியும், வெள்ளை நிற சட்டையும் அணித்திருந்தார். 

            தகவலறிந்த கூடுதல் எஸ்.பி., ராமகிருஷ்ணன், டி.எஸ்.பி., மகேஷ்வரன், இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, சுந்தரவடிவேல், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குருநாதன்  மற்றும் போலீசார் சம்பவ இடத்திற் குச் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. 

              இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலை செய்யப்பட்ட நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். கொலை செய்யப்பட்டவரை எவரேனும் கடத்தி வந்து கொலை செய்து ஆற்றங்கரையில் போட்டு எரித்திருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரில் கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் எவரேனும் காணாமல் போயுள்ளனரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இருப்பினும் கொலையான நபர் யார் என்பது குறித்து தெரியாமல் எவ்வித துப்பும் கிடைக்காமல் திணறி வருகின்றனர்.

Read more »

Aid for autorickshaw drivers


Indian Overseas Bank (Puducherry region) Deputy General Manager B.Natarjan handing over the keys of autorickshaws to 17 beneficiaries at Cuddalore on Thursday 
 
CUDDALORE: 

            Indian Overseas Bank has signed a Memorandum of Understanding with TVS Motors and Bajaj Auto Ltd for financing prospective autorickshaw drivers to buy the three-wheelers on easy terms, according to B. Natarajan, Deputy General Manager, IOB, Puducherry regional office. He made this observation at the time of handing over the keys of the newly procured autorickshaws to 17 persons at the Pudupalyam branch of the bank in Cuddalore on Thursday.

           The automotive companies would identify the borrowers who have in their possession driving licence and the required badges for running the autorickshaws. Such persons would be financed to the tune of 85 per cent of the cost of the vehicle with an interest bearing of 12 per cent. They would also be asked to open recurring deposit accounts in their names. So far, 19 bank branches in Cuddalore district had financed 350 autorickshaw drivers and 100 in Puducherry. The repayment of such loan was quite prompt and since the keys were handed over to them in the presence of their family members, the drivers would act in a responsible manner and scrupulously observe traffic rules, Mr Natarajan added. Pudupalayam branch manager D. Gunasekaran and Manjakuppam branch manager S. Kesavan were also present.

Read more »

Computerisation of land records under way

CUDDALORE:

            The National Land Record Modernisation Programme is being implemented at a cost of Rs. 56.98 crore to strengthen revenue administration and computerise land records in Tamil Nadu, according to K. Dhanavel, Revenue Secretary.

          Addressing a press conference here on Thursday, he said that registrar offices and taluk offices were being networked under the programme. Fifty per cent of the funds were coming from the Centre. The programme would soon be extended to firka level. Utilising the programme, “A” and “FMB” (field measurement books) records would be computerised. Of the total number of 61 lakh FMBs, 11 lakh were computerised so far, he said.

               Besides speeding up the Revenue Department function, the system would also enable officials to devote more time to project implementation. The e-governance concept had been introduced in five districts, including Krishnagiri, Coimbatore, Thanjavur, Ariyalur and Perambalur, on a trial basis. Such systems would prepare the State towards fulfilling the requirements of the proposed Land Titling Bill, Mr. Dhanavel said. Though a deadline of 30 days was fixed for clearing the petitions at certain places it was not adhered to owing to vacancies and heavy workload.

             Therefore, steps had been taken to select 3,500 personnel through the Tamil Nadu Public Service Commission and appoint 500 more on compassionate ground. Office assistants, junior assistants and typists would also be recruited within six months. Collectors were authorised to recruit 765 surveyors and 2,300 village staff through employment offices. Wherever there was a high pendency of cases the officials had been directed to clear the backlog by making periodic visits, Mr. Dhanavel said.

               He said that to reduce workload on Village Administrative Officer, the accounting procedures were either simplified or streamlined. 

From the last Fasali, land tax had been cut as follows: 

                     for irrigated land – Rs. 5 an acre from the previous levy of Rs. 50 an acre, and, for rainfed areas Rs. 2 an acre from an earlier rate of Rs. 15 an acre. As part of the disaster management programme, it was proposed to construct 14 more evacuation centres (30 are present now) each at a cost of Rs 1.36 crore; and set up an early warning system in 21 more places (52 are present now) at a cost of Rs. 9.45 lakh in Cuddalore district, Mr. Dhanavel said. Collector P. Seetharaman, and District Revenue Officer S.Natarajan were present.

Read more »

கடலூரில் பெண் சிசு கிணற்றில் வீச்சு

கடலூர்: 
                 பெண் குழந்தையை கிணற்றில் வீசி விட்டுச் சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. புதுப்பேட்டை அடுத்த வண்டிப்பாளையம் கண்ணன் நிலத்தில், பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை யாரோ,  கிணற்றில் வீசியுள்ளனர்.  வி.ஏ.ஓ., ராஜா கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசியவர்களை தேடி வருகின்றனர்.

Read more »

டாஸ்மாக் ஊழியர்கள் இடமாற்றம் அ.தி.மு.க.,வினர் திரண்டதால் பரபரப்பு

கடலூர்: 

             டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினர் திரண்டதால் பரபரப்பு நிலவியது. 

            பணி நிரந்தரம் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் கடந்த 11ம் தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் பணியாற்றி வந்த அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 9 மேற்பார்வையாளர்கள், 15 விற்பனையாளர்கள் நேற்று முன் தினம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் அந்த உத்தரவை ரத்து செய்து, கடலூர் தலைமை அலுவலகத்திற்கு இடமாற் றம் செய்து நேற்று உத்தரவு பிறப்பி க்கப்பட்டது.  

              இதனை அறிந்த அண்ணா தொழிற்சங்க கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ் ணன், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகுமாறன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று மாலை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தேவராஜூலுவைச் சந்தித்து மனு கொடுத்தனர். அதில், விதிப்படி போராட்டத்தில் ஈடுபடும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் அண்ணா தொழிற்சங்கத்தினரை மட்டும் தற்காலிக பணிநீக்கம் செய்ததோடு, அவர்களை தற்போது கடலூரில் உள்ள தலைமையிடத்திற்கு மாற்றம் செய்திருப்பது கோர்ட் உத்தரவை மீறிய செயலாகும்.
 
                     இதனை ரத்து செய்துவிட்டு அவர்கள் ஏற்கனவே பணி செய்த இடத்திலேயே பணியில் அமர்த்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.  மேலும், கோரிக்கையை ஏற்காவிட்டால் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரித்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும், அனைவரையும் கடலூர் தலைமையிடத்தில் பணியில் சேருமாறு மாவட்ட மேலாளர் தேவராஜூலு கூறினார்.  அதனை ஏற்க மறுத்த டாஸ்மாக் பணியாளர்கள் பணியில் சேராமல் வெளியேறினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior