உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 02, 2010

பொது வேலைநிறுத்தம்; வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு


                       அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தத்தின் போது,   யாரேனும் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.  பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 5-ம் தேதி தேசிய  அளவிலான வேலைநிறுத்தத்துக்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகளும் ஈடுபட முடிவு செய்துள்ளன. பொது வேலைநிறுத்தத்தின் போது நிகழும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமைகள் குறித்து விவாதிக்க உள்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

                 இந்தக் கூட்டத்தில் காவல் துறையினருக்கு பல்வேறு ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கப்பட்டன. பொது வேலைநிறுத்தத்தின் போது, மக்களின் அன்றாட வாழ்க்கை, போக்குவரத்து மற்றும் சட்டம், ஒழுங்கு ஆகியன பராமரிக்கப்பட வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், பொது மக்களுக்கோ மற்றும் பொதுச் சொத்துக்கோ பங்கம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையினருக்கு அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளன.  அத்தியாவசியத் தேவைகளான தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு, குடிநீர் வழங்கல், பால் விநியோகம், செய்தித்தாள், மருத்துவமனைகள், தீயணைப்புத்துறை செயல்பாடுகள் தகுந்த பாதுகாப்புடன் பராமரிக்கப்பட வேண்டும்.  முக்கிய கட்டமைப்புகளான மின் நிலையங்கள், துணை மின் நிலையங்கள், அரசுக் கட்டடங்கள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாலங்கள், எண்ணெய் கிடங்குகள், ரயில்வே மேம்பாலங்கள் ஆகியவற்றுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காவல் துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.  

               மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் தங்கு தடையின்றி செயல்படுவதற்கான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், மக்கள் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் தக்க ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.   முக்கிய இடங்களை உள்ளடக்கி விரிவான போலீஸ் ரோந்துப் பணிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், பணிக்குச் செல்பவர்களை தடுப்பவர்கள், சட்ட விரோத மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.  ரயில் நிலையங்கள், பஸ் பணிமனைகள், நீதிமன்றங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு காவல் துறையினர் தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

Read more »

என்எல்சி ஸ்டிரைக்: இன்று பேச்சுவார்த்தை



நெய்வேலி:
 
               என்எல்சி தொழிலாளர்களின் ஊதியமாற்று ஒப்பந்தத்துக்கான நிலுவைத் தொகைகளை 01-01-2007 முதல் வழங்க வலியுறுத்தி என்எல்சி தொழிலாளர்கள் புதன்கிழமை (ஜூன் 30) இரவுப் பணி முதல் மேற்கொண்ட காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமையும் நீடிக்கிறது. வியாழக்கிழமை, மத்திய தொழிலாளர் நல ஆணையர் எம்.எம்.ஜகன்னாதராவ் மற்றும் உதவி ஆணையர் சிவசங்கரன் முன்னிலையில் என்எல்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் டி.லூர்தஸ்,  ஓ.எஸ்.அறிவு, தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்.கோபாலன், வீ.ராமச்சந்திரன், எ.காத்தவராயன், எ.பெருமாள், வீ.திலகர், ஏஞ்சலின் மோனிகா, சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை வியாழக்கிழமை இரவு வரை நீடித்த போதிலும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. இதையடுத்து சென்னையில் வெள்ளிக்கிழமை சமரசப் பேச்சுவார்த்தை தொடரும் என மத்திய தொழிலாளர் நல ஆணையர் தெரிவித்தார். 
 
மின் உற்பத்தில் பாதிப்பில்லை 
 
                   ""சுரங்கங்களில் இருந்து அனல்மின் நிலையங்களுக்கு வழங்கப்படும் 30 ஆயிரம் டன் பழுப்பு நிலக்கரி வழக்கம்போல் தடையின்றி அனுப்பப்படுகிறது. அனல்மின் நிலையங்களில் வழக்கம் போல் மின்னுற்பத்தி நடைபெறுகிறது. என்.எல்.சி.யின் 3 அனல்மின் நிலையங்களில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு 2490 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தற்போது 2200 மெகாவாட்டுக்கு குறையாமல் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. 5 நாள்களுக்குத் தேவையான  பழுப்பு நிலக்கரி கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதைக்கொண்டு அனல்மின் நிலையங்களில் தடையின்றி மின்சார உற்பத்தி செய்ய முடியும்'' என என்.எல்.சி. நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

நெய்வேலி என்எல்சி யில் 90 சதவீத தொழிலாளர்கள் பங்கேற்பு

நெய்வேலி:

             என்எல்சி தொழிலாளர்களின் ஊதியமாற்று ஒப்பந்தத்துக்கான நிலுவைத் தொகைகளை 01-01-2007 முதல் வழங்க வலியுறுத்தி என்எல்சி தொழிலாளர்கள் ஜூன் 30 இரவுப் பணிமுதல் மேற்கொண்ட காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 90 சதவீத தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

             என்எல்சியின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் புதன்கிழமை இரவு (ஜூன் 30) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. இந்நிலையில் சிறப்பு சுரங்க இயந்திரங்களை இயக்கும் தொழிலாளர்கள் அன்று இரவு பணிக்குச் சென்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிக்குச் சென்றனர். ஆனால் நிரந்தரத் தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் பணிக்குச் செல்லவில்லை.

               புதன்கிழமை இரவு, முதல் சுரங்க வாயிலில் நின்றுகொண்டிருந்த தொழிற்சங்க 2-ம் நிலை நிர்வாகிகள், ஒருசில தொழிலாளர்கள் பணிக்குச் சென்றபோது  அவர்களிடம் வேலைநிறுத்துக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அப்போது சிறு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸôர் அனைவரையும் கலைந்து போகச் செய்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை 2-ம் சுரங்கத்தில் முதலாம் பணிக்கு சென்ற ஒப்பந்தத் தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுபோன்று 2-ம் அனல்மின் நிலையத்தில் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

              இருப்பினும் ஒப்பந்தத் தொழிலாளர்களில் சிலர் பணிக்குச் சென்றனர். அலவலகத்தில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் பணியாளர்களில் பெரும்பாலானோர் பணிக்குச் செல்லவில்லை. அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மட்டும் வழக்கம்போல் பணிக்குச் சென்றனர். தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு என்எல்சி சுரங்கங்கங்கள், அனல்மின் நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் போலீஸôர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி வேலைநிறுத்தம் அமைதியாக நடைபெற்றுவருகிறது. அதே நேரத்தில் தொடர்ந்து சமரசப் பேச்சுவார்த்தையும் நடைபெறுகிறது.

Read more »

விருத்தாசலத்தை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள்: தடை வருமா?


விருத்தாசலம் பஸ் நிலைய பின்புறத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் தேங்கிக்கிடக்கும் பிளாஸ்ட்டிக் பொருட்கள்.
 
விருத்தாசலம்:

           விருத்தாசலத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் புழக்கம் அதிகரித்து சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. விருத்தாசலத்தில் சில வார்டுகளில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வெளியேற்றப்படும் கழிவுநீர் மணிமுத்தாற்றில் கலக்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

                இந்த சாக்கடையில் பெருமளவில் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் கொட்டப்படுகின்றன. நாகரீகம் எனக் கருதி திருமண நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டப்பாக்கள் பயன்பாட்டிற்குப் பிறகு கால்வாய்களில்தான் கொட்டப்பட்டுகின்றன. இதேபோல் மதுபானக் கடைகள், தேநீர் கடைகள் போன்றவைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், மருத்துவமனைக் கழிவுகள், பிளாஸ்டிக் பைகள் போன்றவைகளும் கடைசியில் சாக்கடைகளில் தஞ்சமடைகின்றன. இந்த நிலை காரணமாக மணிமுத்தாறும் சாக்கடை போல மாசடைகிறது. பிளாஸ்டிக் பொருட்களின் தேக்கத்தால் சாக்கடைத் தண்ணீர் அடைபட்டு நகர்புறங்களில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

              நெய்வேலி நகரியப் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்திருப்பது போல விருத்தாசலத்திலும் தடைவிதிக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.  இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரான ஓவியர் தமிழரசன் கூறியது: ஊரின் மையப் பகுதியில் உள்ள மணிமுத்தாறு கூவம் நதி போல் ஆகிவிட்டது. கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் புதைகின்ற போது மழை காலங்களில், மண் நீரை உறிஞ்சுவது தடைபடுகிறது என்றார். எனவே விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் மணிமுத்தாறு மற்றும் பல்வேறு சாக்கடைகளில் புதைந்துகிடக்கும் பிளாஸ்டிக் பொருள்களை உடனடியாக அகற்றி, பிளாஸ்டிக் உபகரணங்களுக்கு தடைவிதித்து, பிளாஸ்டிக் இல்லாத முன்மாதிரி நகராட்சியாக விருத்தாசலத்தை மாற்றினால் மட்டுமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்.

Read more »

என்.எல்.சி. தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: கே.வீ. தங்கபாலு



சென்னை:
 
              நெய்வேலி நிலக்கரி நிறுவன தொழிலாளர்களின் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இது குறித்து வியாழக்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு  வெளியிட்ட அறிக்கை:
 
                 நெய்வேலி மின் உற்பத்தி நிறுவன தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் புதன்கிழமை (ஜூன் 30) இரவு முதல் நடைபெற்று வருகிறது. 14 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களுக்கும் பலன் கிடைக்கும் வகையில் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களது கோரிக்கை நியாயமானதுதான். இது தொடர்பாக என்.எல்.சி. நிர்வாகம் மற்றும் தொழிலாளர் ஆணையருடன் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. இதனால், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. 
 
                 மின்பற்றாக்குறை இருந்து வரும் நிலையில் நெய்வேலியில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், பெரும் பாதிப்பு ஏற்படும்.தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல. எனவே, சுமுகத் தீர்வு ஏற்பட்டு தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புவது மிகவும் அவசியமாகும். மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, நிலக்கரித் துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜெய்ஸ்வால், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் நேரடியாக தலையிட்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.இது மத்திய அரசின் கடமையாகும். கோரிக்கையில் நியாயம் இருந்தாலும் அதற்கு வேலைநிறுத்தம் மட்டுமே தீர்வு என்ற பிடிவாதத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர்கள் உடன்பட வேண்டும் என்று தங்கபாலு கட்டுக் கொண்டுள்ளார்.

Read more »

கடலூர் நகராட்சியின் கல்விநிலை: 100 குடும்பங்கள் நிறைந்த பகுதியில் ஒரே ஒரு பட்டதாரி


கடலூர் நகராட்சிப் பகுதியில் கல்வியில் பின்தங்கி இருக்கும் அருந்ததி நகர்.
கடலூர்:

             பொதுவாக தமிழகத்தில் நகர்ப் புறங்களில் கற்றறிந்தோர் கணிசமாக உள்ளனரென்றும், கிராமப் புறங்களில்தான் கல்வி அறிவு இன்னமும் வளர வேண்டியது இருக்கிறது என்றும் புள்ளி விவரங்களைக் கொண்டு அரசு தெரிவித்து வருகிறது.

             ல்வி அறிவு பெற்றோர் தமிழகத்தின் சராசரி 73.45 சதவீதம். கடலூர் மாவட்டத்தின் சராசரி கல்வி நிலை 71.01 சதவீதம் என்று 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது.  கிராமப் புறங்களில் மட்டுமன்றி நகர்ப் புறங்களிலும் கல்வி நிலைமை இன்னமும் கவலைக்கிடமாகத்தான் உள்ளது என்பதை நிரூபித்து இருக்கிறது கடலூர் நகராட்சி.  இந்த நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மஞ்சக்குப்பத்தை அடுத்து உள்ளது அருந்ததி நகர். 100 குடும்பங்களுக்கு மேல் மக்கள் வசிக்கின்றனர். இன்றைய கணக்குப்படி, இங்கு ஒரே ஒரு பட்டதாரிதான் உள்ளார். கல்லூரியில் படிப்போர் ஒரு மாணவி உள்பட 5 பேர்தான். 

                 கடலூர் நகருக்கு கல்வி உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக அரசு பல கோடி செலவிடுகிறது. ஆனால் இங்கு  படிப்பைப் பாதியில் விட்டோர் மீண்டும் படிக்க வாய்ப்பைத் தேடிக்கொடுக்க, எந்த இயக்கமும் கால் பதிக்கவில்லை என்பதை எடுத்துக் காட்டும் சம்பவம் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது.  இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்காக, கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை இந்த நகருக்குச் சென்றனர். அவர்களைக் கண்டதும் ஒரு சிறுவன் ஓடோடி வந்தான். 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் நின்றுவிட்டேன். நான் தொடர்ந்து படிக்க விரும்புகிறேன் உதவுங்கள் என்று கண்ணீர் மல்க கூறினான்.  கமலக்கண்ணன் என்ற அந்தச் சிறுவனின் பெற்றோர், 4 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டனர். கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் ஆரம்பப் பள்ளியில் கற்ற அவனது படிப்பு, 5-வது வகுப்புடன் நின்றது. 75 வயது பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார் அந்த அனாதைச் சிறுவன்.  சமீபத்தில் கமலக்கண்ணனுக்கு மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்ததன் காரணமாக, அப்பள்ளிக்குச் சென்று தனது மாறுதல் சான்றிதழைக் கோரியபோது, மாதா, பிதா ஸ்தானத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கும் தலைமை ஆசிரியரோ, 4 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவரின் சான்றிதழைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். 3 முறை சென்றும் கமலக் கண்ணனால் மாற்றுச் சான்றிதழைப் பெறமுடிய வில்லை. இந்த நிலையில்தான் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பினர் அருந்ததி நகருக்குச் சென்றபோது, அந்த மாணவரின் ஆவல் வெளிப்பட்டது. அந்த மாணவருக்கு மாற்றுச் சான்றிதழைப் பெற்று, மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து படிக்க வைக்க, அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க இருப்பதாக, குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் தெரிவித்தார். 

                     மாணவனின் கல்விச் செலவு மற்றும் வாழ்க்கைச் செலவுகளையும் ஏற்றுக் கொள்ளவும் கூட்டமைப்பு முடிவு செய்து உள்ளது.  அருந்ததி நகரில் மாணவ மாணவியரின் பொறியியல் படிப்பு உள்ளிட்ட மேல் படிப்புக்கு, அனைத்து உதவிகளையும் அளிப்பதாகவும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். 36 ஏழை மாணவ மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்களை கூட்டமைப்பின் தலைவர் அரங்கநாதன் வழங்கினார். இணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர் பட்டியல் வெளியீடு

கடலூர்:

              2010-ம் ஆண்டுக்கான சுருக்கமுறைத் திருத்த புகைப்பட வரைவு வாக்காளர் பட்டியலை கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வியாழக்கிழமை வெளியிட்டார்.

வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் கூறியது: 

               கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. புதிய வாக்காளர் பட்டியல் வாக்காளர் பதிவு அலுவலகங்களிலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், அஞ்சல் அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. 16-ம் தேதி வரை அனைத்து வேலை நாள்களிலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டு இருக்கும். சம்பந்தப்பட்ட குடியிருப்போர் நலச் சங்கங்களிலும் வாக்காளர் பட்டியல் நகல் வைக்கப்பட்டு இருக்கும்.

              எனவே மேற்கண்ட தினங்களில் பொதுமக்கள், இந்த இடங்களில் வைக்கப்பட்டு இருக்கும் வாக்காளர் பட்டியலைப் பார்வையிட்டு, தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம். அவர்களது பெயர் விடுபட்டு இருப்பின், படிவம் 6 ஐ பூர்த்தி செய்து, தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் 10-7-2010 மற்றும் 11-7-2010 ஆகிய இரு தினங்கள் சிறப்பு முகாம்கள் நடத்தி, வாக்காளர் சேர்க்கைக்கான மனுக்களை பெறவும் தேர்தல் அணையம் அறிவுரை வழங்கி உள்ளது. சிறப்பு முகாம் நடைபெறும் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, விண்ணப்பங்களைப் பெறவதற்கு, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

தற்போதைய வாக்காளர் பட்டியிலின்படி சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை:

திட்டக்குடி (தனி): 

           ஆண்கள் 81,064 பெண்கள் 80,087.  மொத்தம் 1,61,151. 

விருத்தாசலம்: 

          ஆண்கள் 90,661 பெண்கள் 86,579 மொத்தம் 1,77,240. 

நெய்வேலி: 

            ஆண்கள் 75,781 பெண்கள் 71,715 மொத்தம் 1,47,496. 

பண்ருட்டி: 

           ஆண்கள் 87,410 பெண்கள் 86,322 மொத்தம் 1,73.732. 

கடலூர்: 

           ஆண்கள் 79,989 பெண்கள் 80,109 மொத்தம் 1,60,098. 

குறிஞ்சிப்பாடி: 

          ஆண்கள் 84,800 பெண்கள் 80,098  மொத்தம் 1,64,898. 

புவனகிரி:  

            ஆண்கள் 97,136 பெண்கள் 92,540 மொத்தம் 1,89,676. 

சிதம்பரம்: 

             ஆண்கள் 84,868. பெண்கள் 83,016 மொத்தம் 1,67,884. 

காட்டுமன்னார்ககோயில் (தனி):

                ண்கள் 86,465 பெண்கள் 80,083 மொத்தம் 1,66,548.
  
கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள்: 

                  15,08,723. ஆண்கள் 7,68,174. பெண்கள் 7,40,549.

Read more »

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் செயற்கையாகப் பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்

கடலூர்:

                குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் ஆய்வு நடத்தி, செயற்கை முறையில் பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்களைப் பறிமுதல் செய்து அழித்தனர். 

                ஒரே நேரத்தில் பழுக்கவும், ஒரே மாதிரியாக நிறம் வருவதற்காகவும், கால்சியம் கார்பைடு ரசாயனக் கற்களை, மாம்பழச் சேமிப்புக் கிடங்குகளில் துணிகளில் கட்டிப்போட்டு பழுக்க வைக்கிறார்கள். செயற்கையாகக் கால்சியம் கார்பைடு கற்களைப் பயன்படுத்தி மாம்பழங்களைப் பழுக்க வைப்பதால், அவற்றை உண்போருக்கு உணவில் நச்சுத் தன்மை ஏற்பட்டு, வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.மீரா உத்தரவின் பேரில், வடலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் லட்சுமி சீனிவாசன் தலைமையிலான அதிகாரிக புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 1 டன் மாம்பழங்களை, கடைகள் மற்றும் சேமிப்புக் கிடங்களில் இருந்து கைப்பற்றி பறிமுதல் செய்து அழித்தனர்.

Read more »

கடலூர் புதுப்பாளையத்தில் இயங்கி வரும் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கிய ஸ்டேட் வங்கி

கடலூர்:

               கடலூர் புதுப்பாளையத்தில் இயங்கி வரும் தயா மன வளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் பாரத ஸ்டேட் வங்கி வியாழக்கிழமை ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளித்தது.

                பாரத ஸ்டேட் வங்கி தினத்தை முன்னிட்டு இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது. உதவித் தொகையை மஞ்சக்குப்பம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் கோவிந்தராஜ் வழங்கினார். தயா மன வளர்ச்சி குன்றியோர் பள்ளிக்குத் தேவையான இருக்கைகள் உள்ளிட்டவை வாங்க இத்தொகை பயன்படுத்தப்படும் என்றார் கோவிந்தராஜ். கடந்த 3 ஆண்டுகளில் கடலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிகள் மூலம் சமூகப் பணிகளுக்காக ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அண்மையில் கடலூரில் நடந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்துக்காக 50 பேருக்கு ரூ. 5 ஆயிரத்தில் பரிசுப் பொருள்கள் வழங்கியதாகவும் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

               வங்கியில் தற்போது 15 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கான கணக்குகள், 8 ஆயிரம் அரசு ஊழியர்களின் சம்பளக் கணக்குகள், மற்ற கணக்குகள் 20 ஆயிரம் உள்ளதாகவும் அவர் கூறினார். இதனால் மாதத்தின் முதல் 3 தேதிகளில் வங்கியில் கூட்டம் நிரம்பி வழிகிறது. நிதி அளிக்கும் நிகழ்ச்சியில் தயா மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி நிர்வாகிகள் ஜி.எஸ்.சந்தரம், ஆர்.கணபதி, மகாவீர்மல் மேத்தா, ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

வேளாண் துறையில் ஆங்கிலத்தில் இருந்த சேவை மையத்தின் பெயர் தமிழாக்கம் செய்யப்பட்டு உள்ளது


கடலூர்:

                தினமணிச் செய்தியின் விளைவாக, வேளாண் துறையில் ஆங்கிலத்தில் இருந்த சேவை மையத்தின் பெயர் தமிழாக்கம் செய்யப்பட்டு உள்ளது. 

               மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு வேளாண் சேவை மையம் வீதம் தொடங்கப்பட்டு வருகிறது. வேளாண் பட்டதாரிகள், ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர்கள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களுக்கு 50 சதம் மானியத்தில் ரூ.6 லட்சம் அரசு நிதி வழங்கி, அதன் மூலம் இந்தச் சேவை மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெற்றுத் தருவது, வேளாண் கருவிகளை வாடகைக்கு வழங்குவது, மண் பரிசோதனை செய்வது, வேளாண் இடுபொருள்களை விற்பனை செய்வது போன்ற பணிகளை இந்தச் சேவை மையங்கள் மேற்கொள்ளும்.

              இந்த வேளாண் சேவை மையங்களுக்கு, "அக்ரி கிளினிக்' என்றும் சிறிய மண் பரிசோதனை நிலையத்துக்கு "மினி மண் பரிசோதனை நிலையம்' என்றும், வேளாண் துறை பெயரிட்டு செயல்படுத்தி வந்தது. நமது படிப்பறிவற்ற பாமர வேளாண் குடிமக்களுக்கான இத்திட்டம், அவர்களுக்குப் புரியம் வகையில், இந்த மையங்களின் பெயர்கள் தமிழில் இருக்கலாமே என்ற ஆலோசனையைத் தெரிவிக்கும் வகையில் 21-6-2010 அன்று தினமணி செய்தி வெளியிட்டு இருந்தது. 

           இதுகுறித்துக் கடலூர் மாவட்ட வேளாண் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, ஆங்கிலத்தில இருந்த பெயர்களைத் தமிழாக்கம் செய்து உள்ளதாக, கடலூர் வேளாண் உதவி இயக்குநர் சீ.இளவரசன் அண்மையில் செய்திக் குறிப்பு வெளியிட்டு இருக்கிறார். அக்ரி கிளினிக் என்பது "வேளாண் ஆலோசனை மையம்' என்றும், மினி சாயில் டெஸ்டிங் லேப் என்பது, "சிறு மண் பரிசோதனை நிலையம்' என்றும் தமிழில் பெயர் மாற்றம் செய்து, பெயர்ப் பலகை சம்பந்தப்பட்ட மையத்தில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் இளவரசன் செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் கூரை வீடுகளைக் கணக்கெடுத்த ஆவணங்களை 15-ம் தேதி வரை அளிக்கலாம்

கடலூர்:

            கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் கூரை வீடுகளைக் கணக்கெடுத்ததில், ஆவணங்களை அளிக்காதவர்கள் அவற்றை அளிக்க 15-ம் தேதி வரை காலஅவகாசம் நீடிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

              கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் நிரந்த வீடுகள் கட்டுவதற்காக, கணக்கெடுப்புக்குழு மூலம் 2,10,291 கூரை வீடுகள் கணக்கெடுப்பு செய்து முடிக்கப்பட்டு உள்ளது. அனைத்து விவரங்களும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. கணக்கெடுப்பின்போது தாற்காலிகமாக வெளியூர் சென்றவர்கள், காலநிலைக்கு ஏற்ப வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் பற்றிய விவரங்கள் கிடைக்காமல், கணக்கெடுப்புப் படிவத்தில் வீடு பூட்டப்பட்டு இருந்தது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்தகைய குடியிருப்பு வாசிகள், தங்கள் வீடுகள் பற்றிய விவரங்களை படிவத்தில் சேர்க்கத் தேவையான ஆவணங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர், அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளிக்க கால அவகாசம் 15-7-2010 வரை நீடிக்கப்பட்டு உள்ளது.

                 எனவே கணக்கெடுப்பின்போது தகவல்களை அளிக்காதவர்கள். தகவல்கள் படிவத்தில் இடம்பெறச் செய்ய, சம்பந்தப்பட்ட ஆவணங்களை 15-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். அதன்பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. கலைஞர் வீட்டுவசதித் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் புதன்கிழமை நடந்தது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Read more »

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. உடனடித் தேர்வு: 15,212 பேர் எழுதினர்

கடலூர்:

             கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு உடனடித் தேர்வு வியாழக்கிழமை தொடங்கியது. இதில் இரு மாவட்டங்களிலும் 15,212 மாணவ மாணவியர் தேர்வு எழுதினர். 

இரு மாவட்டங்களிலும் 36 மையங்களில் தேர்வு நடைபெற்றது. கல்வி மாவட்ட வாரியாக தேர்வு எழுதிய மாணவ மாணவியர் விவரம்: 

கடலூர் 4,188. 
சிதம்பரம் 3,155.  
விழுப்புரம் 4,312. 
திண்டிவனம் 3,557. 

உடனடித் தேர்வு 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Read more »

SBI contributes Rs. 50,000 to special school at Manjakuppam


Helping hand:State Bank of India Assistant General Manager Suresh Johnson handing over a cheque for Rs.50,000 to ‘Dhaya', a special school ,at a function in Cuddalore on Thursday.

CUDDALORE:

          Suresh Johnson, Assistant General Manager of State Bank of India, Puducherry regional office, handed over a cheque for Rs. 50,000 to the Dhaya special school (for mentally challenged children) on the occasion of the Bank Day celebrations held in the Manjakuppam branch here on Thursday.

         Speaking on the occasion, Mr. Johnson said that it was apt to extend the financial support to the special school, run by dedicated personalities, for buying furniture at this juncture. He said the special children were really special in the sense that they were endowed with skills in music and arts. He said that besides rendering financial services to the satisfaction of the customers, the SBI was also spending substantial amount for the cause of the community. For the bank, more than the physical properties, customers were the valuable assets.

          With 17,000 branches spread across the nation, the bank had computerised its operations at a cost of Rs. 1,000 crore. In appreciation of its services, the Bankers' Magazine had adjudged the SBI as the Best Bank in the world for two years in a row, that is, in 2008 and 2009. Senior Branch Manager K. Govindarajan said that under the Girl Child Adoption Programme, the Manjakuppam branch was extending monetary support at the rate of Rs. 5,000 each to four students namely Gitanjali, Divyadarshini, Dakshyayini and Soundarya of the Old Town area.

            Under the programme, the bank was identifying the girl students from the economically weaker sections to support their education up to the college level. The branch was also extending financial assistance for social, educational and communal causes. It had contributed a sum of Rs. 3 lakh towards community services, including Rs. 10,000 to the blind school for the purchase of Braille books, Rs. 20,000 to the HelpAge India and so on. Mr. Govindarajan said that the staff would work extra hours to compensate for the time taken for the function.

Read more »

NLC strike: conciliatory talks on

CUDDALORE: 

            Even while the Neyveli Lignite Corporation employees' strike entered the second day on Thursday conciliatory talks were held with the mediation of Regional Labour Commissioner M.M. Jagannatha Rao on the NLC premises. The conciliatory talks were held to resolve the stalemate between the NLC management and the trade unions over the period of payment for arrears under the new wage revision agreement. There was no immediate impact either in lignite mining or power generation in the NLC. Elaborate security arrangements have been made there.

Read more »

கடலூர் முதுநகர் அருகே படிக்க உதவி செய்தவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் கொலை

கடலூர்:

               மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை, கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர், போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். கடலூர் முதுநகர் அடுத்த பச்சையாங்குப்பம் ஹவுசிங் போர்டு திலக் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(36). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுமதி (30). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சம்பந்தம் மகன் பிரபு (23). இவரது தந்தை இறந்துவிட்டதால். தாய் மற்றும் தங்கை ரேவதியுடன் வசித்து வந்தார். ஏழ்மையில் இருந்த பிரபு படிப்பதற்கு ஆறுமுகம் உதவி செய்து வந்தார்.

               இந்நிலையில், பிரபுவிற்கு சுமதியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. மனைவியை ஆறுமுகம் கண்டித்தார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, சுமதி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.இதனையடுத்து, ஆறுமுகம் தீர்த்தனா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி சுமதியிடம் கள்ளத்தொடர்பு வைத்து, குடும்பத்தை கெடுத்த பிரபு மீது ஆறுமுகம் தீராத ஆத்திரத்தில் இருந்தார். நேற்று மதியம் 1.30 மணியளவில், பிரபு தற்போது குடியிருந்து வரும் ஏணிக்காரன் தோட்டம், புது சுனாமி குடியிருப்புக்கு ஆறுமுகம் சென்றார். உன்னால் தான் என் குடும்பம் குலைந்துவிட்டது என்று பிரபுவிடம் கூறியபோது தகராறு ஏற்பட்டது.

                 ஆத்திரமடைந்த ஆறுமுகம் கையில் வைத்திருந்த கத்தியால், பிரபுவின் நெஞ்சு மற்றும் கழுத்தில் சரமாரியாக குத்தி கொலை செய்தார். தடுக்க வந்த பிரபுவின் தங்கை ரேவதியை(16) கீழே தள்ளினார். ரேவதி சத்தம் போட்டதால், அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதனை பார்த்த ஆறுமுகம் மொபட்டில் தப்பிச்சென்று, கடலூர் முதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். படுகாயமடைந்த ரேவதி கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தகவல் அறிந்த டி.எஸ்.பி., மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அந்தோணிராஜ் மற்றும் போலீசார், ஆறுமுகத்திடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வீட்டு வசதி திட்டத்தில் 2.10 லட்சம்"கான்கிரீட்' வீடுகள்: கலெக்டர் தகவல்

கடலூர்: 

              "கான்கிரீட்' வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில்  2 லட்சத்து 10 ஆயிரம் வீடுகள் கான்கிரீட் வீடுகளாக கட்டித் தரப்படும் என கலெக்டர் சீத்தாராமன் கூறினார்.

               கடலூர் அடுத்த பூச்சிமேடு கிராமத்தில் சிறப்பு மனு நீதிநாள் முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் ராதிகா வரவேற்றார். 

கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி, வருவாய்த்துறை, சமூகநலத் துறை, தோட்டக்கலைத்துறை, உட்பட பல்வேறு துறைகளின் மூலம் 96 பேருக்கு 6.99 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: 

                 பூச்சிமேடு கிராமத்தில் 8.75 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாயக் கூடமும், காயல்பட்டு கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தை 1 லட்சம் ரூபாயில் பழுது நீக்கவும் கலெக்டர் நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்படும். காயல்பட்டு காலனி பகுதியில் 3 லட்சம் மதிப்பில் கழிவு நீர் கால்வாய் வெட்டப்படும். முதல்வர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில்  2 லட்சத்து 10 ஆயிரம் வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 6 ஆண்டுகளில் "கான்கிரீட்' வீடுகளாக கட்டித் தரப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார். 

                      முகாமில் மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கணபதி, மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் கந்தசாமி, ஆர்.டி.ஓ., கேசவமூர்த்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலர் சீனுவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி துணைத் தலைவர் திருநாவுக் கரசு நன்றி கூறினார்.

Read more »

வேப்பூர் அடுத்த கழுதூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு நேர்காணல் முகாம்

சிறுபாக்கம்: 

               வேப்பூர் அடுத்த கழுதூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.வேப்பூர் அடுத்த கழுதூர் வெங்கடேஸ்வரா கல்லூரி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம், சின்னம்மாள் கல்வி அறக்கட்டளை, தி சென்னை சில்க்ஸ் இணைந்து நடத்தியது. தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் கோவை யூகமூர்த்தி, தாசில்தார் கண்ணன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். கல்வி அறக்கட்டளை தாளாளரும், முன்னாள் எம்.பி.,யுமான கணேசன் துவக்கி வைத்து பேசினார்.முகாமில் மங்களூர் தொகுதியை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பிற் கான நேர்காணலில் கலந்து கொண்டனர்.  துயர்துடைப்பு தாசில்தார் சையத்ஜாபர், மண்டல துணை தாசில்தார் பாலு, தேர்தல் பிரிவு அண் ணாத்துரை, எழுத்தாளர் இமயம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலையில் ஓய்வு பெற்ற உறுப்பினர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் வழங்க தொழிலாளர் பென்ஷனர்கள் சங்கம் கோரிக்கை

திட்டக்குடி: 

              பெண்ணாடம் தொழிலாளர் பென்ஷனர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பென்ஷன் தொகையை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த சங்கத் தலைவர் மரியநாயகம் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: 

                இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலையில் ஓய்வு பெற்ற 700 உறுப்பினர்களுடன் மேற்கண்ட சங்கம் இயங்கி வருகின்றது. இ.பி.எப்., பென்ஷன் திட்டம் 1971 மற்றும் 16.11.1995ன் படி குறைந்த பட்ச அளவு பென்ஷனாக ரூ. 300, 400, 500 என பெற்று வாழ்வின் கடைசி நிலையில் உள்ளோம். இதுவும் எங்களது சம்பளத்தில் பிடித்தம் செய்த இ.பி.எப்., பண்டுக்கு செலுத்தி அதன் மூலம் தரப்படுகிறது. இதற்கென அமைக்கப்பட்ட இ.பி.எப்., மத்திய கமிட்டி போர்டு சிபாரிசு செய்தும், ஏப்ரல் 2000 முதல் இது நாள் வரையிலும் வழங்கப்படவில்லை.இது குறித்து மாநில, மத்திய அரசுகளுக்கும், எம்.பி.,- எம்.எல்.ஏ., என பலருக்கும் மனு அனுப்பியும் எந்த நிவாரணமும், பென்ஷனும் உயரவில்லை. மாறாக மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்வு முலம் பென்ஷன் உயர்த்தப்பட்டு வருகிறது. கடுமையான விலையேற்றத்தால் குறைவான பென்ஷன் மூலம் ஜீவனம் செய்ய முடியவில்லை. எனவே குறைந்தபட்ச பென்ஷன் 3,000 ரூபாய்  எனவும், ஏப்ரல் 2000 முதல் இதுநாள் வரையிலான அரியர்ஸ் தொகையை வழங்க நடடிக்கை எடுக்க வேண்டும்.இறவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நெல்லிக்குப்பம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்காலில் கழிவு நீர் செல்லும் வாய்க்கால் தூர்வாரும் பணி துவக்கி வைப்பு

நெல்லிக்குப்பம்: 

                பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்காலில் ஆலை கழிவுநீர் சென்று விவசாய பயிர்களை பாதிப்பதால் ஆலை சார்பில் வாய்க்கால் தூர்வாரும் பணியை டி.ஆர்.ஓ., துவக்கி வைத்தார். பண்ருட்டி திருவதிகை கெடிலம் ஆற்றின் கிளை வாய்க்கால் எய்தனூர், குணமங்கலம், ஓட்டேரி வழியாக செல்கிறது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான  இவ்வாய்க்காலில் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆண்டு முழுவதும் செல்கிறது.

                  பல ஆண்டுகளாக வாய்க்கால் தூர்வாராதால் கழிவுநீர் தடைப்பட்டு விவசாய நிலத்தில் புகுந்து விடுகிறது. மழைக்காலங்களில் கழிவுநீர் நிலத்தில் புகுவதால் பயிர்கள் பாதிக்கப்படுகிறது. வாய்க்காலை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். வாய்க்காலில் கழிவுநீர் செல்வதால் ஆலை நிர்வாகம் சொந்த செலவில் வாய்க்காலை தூர்வார முடிவு செய்தனர். அதற்கான பணியை டி.ஆர்.ஓ. நடராஜன் துவக்கி வைத்தார். கலெக்டரின் விவசாயத்துறை நேர்முக உதவியாளர் மணி தாசில்தார் பன்னீர் செல்வம், தஷ்ணாமூர்த்தி, பொதுப்பணித் துறை பொறியாளர் அன்பு, வேளாண்மை உதவி இயக்குநர் சம்பத்குமார், ஆலை உதவி பொது மேலாளர் சங்கரலிங்கம், மேலாளர் திருஞானம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கழிவுநீர் செல்லும் அனைத்து கிளை வாய்க்கால்களையும் ஆலை நிர்வாகம் தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் இ.எஸ்.ஐ., தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதி


கடலூர்: 

              கடலூர் மாவட்டத்தில் இ.எஸ்.ஐ., சந்தாதார தொழிலாளர்கள்  தனியார் மருத்துவமனைகளில் இ.எஸ்.ஐ., டாக்டர்கள் பரிந்துரையின் பேரில் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இ.எஸ்.ஐ., கிளை அலுவலக மேலாளர் எழிலரசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

                     தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக சட்டத் தின்படி இதுவரை மொத்த மாதச் சம்பளம் 10 ஆயிரம் ரூபாய்  வரை பெற்றவர்களுக்கு இ.எஸ். ஐ., சந்தா பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. தற்போது கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் முதல் தேதி முதல் 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு  அவர்களுக்கும் இ.எஸ்.ஐ., சந்தா பிடிக்கப்படுகிறது. மேலும் தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க  இ.எஸ்.ஐ., சந்தா தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் எந்தவித தொகையும் செலுத்தாமல் கடலூர் இ.எஸ்.ஐ., மருத்தக டாக்டர் துரைராஜ், நெல்லிக்குப்பம் மற்றும் வடலூர் இ.எஸ்.ஐ., டாக்டர் திருநாவுக்கரசு ஆகியோரின் பரிந்துரையின் பேரில் கடலூர் கிருஷ்ணா மருத்துவமனை, வள்ளிவிலாஸ் மருத்துவமனை, அபிராமி மருத்துவமனை (டாக்டர் பாண்டியன் ஆர்த்தோ), வடலூர் சுதா மருத்துவமனை, வடக்குத்து உலகமதி மருத்துவமனை ஆகியற்றில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். 

Read more »

திட்டக்குடி சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி நியமன அலுவலர்கள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

திட்டக்குடி: 

                 திட்டக்குடி சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து ஓட்டுச்சாவடி நியமன அலுவலர்களுடன் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. விருத்தாசலம் ஆர்.டி.ஒ., முருகேசன் தலைமை தாங்கினார். தாசில்தார் கண்ணன் முன்னிலை வகித்தார். உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். தேர்தல் துணை தாசில்தார் அண்ணா துரை விளக்கிப் பேசினார். கூட்டத்தில் வி.ஏ.ஒ.,க்கள்  ஊராட்சி உதவியாளர்கள் உட்பட ஓட்டுச் சாவடி நியமன அலுவலர்கள் பங்கேற்றனர். திட்டக்குடி தனி சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியல் 01.01.10ஐ  தகுதி நாளாகக் கொண்டு அந்தந்த வி.ஏ.ஓ., அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.  இதில் விடுபட்டவர்கள், புதிதாக விண்ணப் பிக்க விரும்புபவர்கள் வரும் 15ம் தேதி வரை அந்தந்த ஓட்டுச்சாவடி நியமன அலுவலர்களை சந்தித்து விண்ணப்பங் கள் வழங்கலாம்.

Read more »

சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்

கிள்ளை: 

                  சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.லுத்ரன் வேர்ல்டு சர்வீஸ் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த முகாமிற்கு திட்ட அலுவலர் பாபு தலைமை தாங்கினார். கிராம தன்னார்வலர் மதிக்குமார் வரவேற்றார். பகுதி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஷீலா, ரஜ்ஜித்கீதா முன்னிலை வகித்தனர். முகாமில் பங்கேற்ற இளைஞர்களுக்கு முன்னெச்சரிக்கை, முதலுதவி, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள், சுகாதாரம் குறித்து திருமுருகன், சிவசுப்ரமணியன் உள்ளிட்ட குழுவினர் பயிற்சி அளித்தனர்.  முகாம் ஏற்பாடுகளை களப்பணியாளர்கள் மகாலட்சுமி, தெய்வநாயகி செய்திருந்தனர்.

Read more »

பழுதடைந்த சாலைகளை சீரமைக்கா விடில் பொது நல வழக்கு

விருத்தாசலம்: 

              பழுதடைந்த சாலைகளை சீரமைக்காவிட்டால் நெடுஞ்சாலை துறை மீது பொதுநல வழக்கு தொடரப்படும் என விருத்தாசலம் நுகர்வோர் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி விழிப்புணர்வு மையம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து விருத்தாசலம் நுகர்வோர் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி விழிப்புணர்வு மைய தலைவர் செந்தமிழ்ச் செல்வன் உதவி கோட்ட பொறியாளருக்கு அனுப்பியுள்ள கடிதம்:

                 விருத்தாசலத்தில் பஸ் நிலையம், ஜங்ஷன் ரோடு, பாலக்கரை, உழவர்சந்தை ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்து விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதே நிலையில் கடந்த நான்கு மாதங்களாக சாலைகள் இருந்தும் நெடுஞ்சாலைத் துறை அலட்சியமாக உள்ளது.தென்கோட்டைவீதி, ஜங்ஷன்ரோடு உள்ளிட்ட இடங்களில் சாலை விரிவாக்கப்பணி முழுமையாக நடைபெறாமல் அரைகுறையாக உள்ளது. எனவே உடனடியாக பழுதடைந்த சாலைகளை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நெடுஞ்சாலைத் துறை முன் கண்டன ஆர்பாட்டமும், பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலை துறை மீது பொது நல வழக்கும் தொடரப்படும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

சிதம்பரம் அருகே ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் திடீர் மறியல்

கிள்ளை: 

               சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதால்  கிள்ளை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை அறியவில் கல்லூரியில் 800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பல்வேறு துறைகளில் இளங்கலை பட்ட வகுப்பு படித்து வருகின்றனர்.  நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள், கால தாமதமாக கல்லூரிக்கு வந்தால்  அபராதம்,  தாமதமாக செலுத்தும் கல்வி கட்டணத்திற்கு  அபராதம், திடீரென கல்லூரி நேரத்தை மாற்றுவது  உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி  வகுப்புகளை புறக்கணித்து காலை 9.50 மணிக்கு கல்லூரி வளாகத்தை முற்றுகையிட்டனர்.

               பின்னர்  மற்ற மாணவர்கள் கல்லூரிக்கு  அதிகளவில் வரத்துவங்கியதும் காலை 11.10 மணிக்கு சிதம்பரம் கிள்ளை சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதியினர் கிள்ளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் ஒரு போலீசார் கூட சம்ப இடத்திற்கு வரவில்லை. நேரம் நெருங்க நெருங்க மாணவர்களின் அராஜகம் அதிகரித்தது. பின்னர் அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் 11.45 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத்தொடர்ந்து சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior